Posted in Sunday School

Sunday School Skit : நோவாவின் பிள்ளைகள்

Image result for noah and his sons

கடவுள் : நோவா… நோவா…

நோவா : யாருப்பா அது.. புதுக் குரலா இருக்கு.. கேட்டது மாதிரி இல்லையே.

( அமைதி )

 

ம்ம்.. வயசாகுதுல்ல… 480 ஆகப் போவுது… இந்த வயசுல அப்பப்போ இப்படி ஏதாச்சும் குரல் கேட்டுட்டே தான் இருக்கு.

கடவுள் : நோவா.. நோவா

நோவா : அட….. ரொம்ப கிளியரா கேக்குதே ! யாரது…

கடவுள் ; நான் தான் கடவுள்.

நோவா : கடவுளா… க…கடவுளா…. ஐயோ கடவுளே… சொல்லுங்கள்.

கடவுள் : நீ ஒரு பேழை செய்யணும்.

நோவா : பேழையா ? தண்ணில போகுமே அதுவா ?

கடவுள் : ஆமா,, அதே தான்.

நோவா : இங்கே தான் கடலே பல மைல் தூரத்துக்கு இல்லையே கடவுளே. தண்ணி இல்லாத இடத்துல படகு எதுக்கு ?

கடவுள் : தண்ணி இல்லாத இடத்துல படகைச் செய். படகைத் தேடி தண்ணி வரும். இந்த மக்கள் ரொம்ப பாவம் செய்துட்டாங்க, இவங்களை நான் தண்ணியால அழிக்கப் போறேன்.

நோவா : ஐயோ.. கடல் வந்து மூழ்கடிச்சுடுமா..

கடவுள் : இல்லை, இல்லை… மழையால அழிக்கப் போறேன்.

நோவா : மழைன்னா ?

கடவுள் : இதுவரை நீங்க மூடுபனியைத் தான் பாத்தீங்க. மழைங்கறது வானத்துக்கு மேல இருந்து தண்ணியா கீழ கொட்டுற விஷயம்.

நோவா : சரி கடவுளே.. நான் இன்னிக்கே ஒரு படகு செய்றேன். ரெண்டு நாளைல முடிச்சுடலாம்.

கடவுள் : நோவா…. அது அவ்ளோ சிம்பிள் கிடையாது. நான் சொல்ற அளவுல செய்யணும். அதான் முக்கியம். நோட் பண்ணிக்கோ

நோவா : சொல்லுங்க கடவுளே.

கடவுள் : சொல்கிறார் நோவா அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து முழிக்கிறார்.

ஓ.. .ஓகே… சரி சரி… முழுசும் கீல்.. ஓகே.. அப்புறம்… என கேட்கிறார். கடைசியில்

நோவா : சரி கடவுளே செய்றேன்.

 

2

டேய் சேம், காம் , யாப்பேத் வாங்கடா இங்கே. யாரெல்லாம் இருக்கீங்க எல்லாரும் ஓடி வாங்க. வாங்க வாங்க, ரொம்ப அவசரம்.

என்ன டாடி

கடவுள் ரொம்ப கோபமா இருக்காரு…

கடவுளா ? அதெப்படி உங்களுக்குத் தெரியும்.

அவரே தான் சொன்னாரு, மக்கள் எல்லாரையும் தண்ணில அழிக்கப் போறாராம்.

தண்ணியா ?

ஆமா பெரிய வெள்ளப் பெருக்கு வருமாம்

ஐயோ.. இதுக்கு தான் ஸ்விம்மிங் கத்துக்கணும்ம்னு சொன்னது.. எனக்கு தெரியாதே.

அதில்லை, கடவுள் எங்கிட்டே ஒரு பேழை செய்யச் சொல்லியிருக்காரு.

செய்யலாம்பா…

இது பெரிய பேழைப்பா.. கடவுள் சொல்லியிருக்கிறது மாதிரி அப்படியே செய்யணும்.

அப்படியேன்னா ?

ஒரு இஞ்ச் கூட கூடவோ குறையவோ செய்யக் கூடாது. 437 அடி நீளம் 73 அடி அகலம், 44 அடி உயரம்.

சரிப்பா…

சரி நீங்க போய் நிறைய கோப்பேர் மரம் எடுத்துட்டு வாங்க.

அப்பா.. கோப்பேர் மரம் வெட்ட காட்டுக்குள்ள ரொம்ப தூரம் போணும். பக்கத்துலயே மாமரம், பலா மரம் எல்லாம் இருக்கு இதை வெட்டலாமா ?

இல்லை.. கோப்பேர் மரம் தான் வேணும்,

சரிப்பா…

அவர்கள் மரம் கொண்டு வருகிறார்கள். மரத்தை மலை போல குவிக்கிறார்கள். நோவா பேழை செய்யத் தொடங்குகிறார்.

 

 

3

 

ஒருவர் : என்ன நோவா.. என்ன செய்றீங்க… மரங்களை வெட்டி மலை மாதிரி குவிச்சு வெச்சிருக்கீங்க, பசங்க என்னன்னா இன்னும் மரத்தை வெட்டோ வெட்டுன்னு வெட்டறாங்க.

பேழை ஒண்ணு செய்யறேன் கடவுள் சொல்லியிருக்காரு..

பேழையா ? எதுக்கு

பெரிய மழை வருமாம்.. அதாவது வெள்ளப்பெருக்கு வருமாம். விலங்குகளையும் மனுஷங்களையும் காப்பாத்த..

ஓ.. நீங்க தான் காப்பாத்தப் போறீங்களா ?

இல்லை, கடவுள் தான் காப்பாத்துவார், பேழை மூலமா..

ஓ.. ஓகே…ஒகே.. நல்லா செய்ங்க…

(கொஞ்சம் அந்தப் பக்கம் போய்… )

கெழவனுக்கு வயசாகுதுல்ல, கொஞ்சம் புத்தி பேதலிச்சுது போல… விடுங்க பாவம்.
காட்சி 3 :

ஒருவர் : பத்து வருஷமா இந்த மனுஷன் இந்த வேலையையே பண்ணிட்டிருக்காரு பாரேன்.. பரவாயில்லை ரொம்ப நல்லா தான் பண்றாரு.. ஆனா என்ன தண்ணியில்லாத இடத்துல யாருக்குடா போட் செய்றேன்னு கேக்க ஆள் இல்லை.

நபர் 2. ஆமா.. பாவம்.. வீட்ல பசங்களும் ஒண்ணும் சொல்றதில்லை… பொண்டாட்டிகளும் ஒண்ணும் சொல்றதில்லே போல… அவங்க கெழவனுக்கு சப்போர்ட் பண்றாங்க. இந்த நேரத்துல சூப்பரா நாலு வீடு கட்டியிருக்கலாம்.

ந 1 : யாப்பேத்.. யாப்பேத்

யாப்பேத் : சொல்லுங்கய்யா

ந 2 : என்னடா பண்றாரு உங்க அப்பா ? ஒரே லொட்டு லொட்டு ன்னு சத்தமா… எதையோ பண்றாரு அப்புறம் அளந்து பாக்கறாரு… வைத்தியர் கிட்டே கூட்டிட்டு போனீங்களா ?

யாப்பேத் : அவர் கடவுளுக்கான பேழை செய்றாரு… கிண்டல் பண்ணாதீங்க..

ந 2 : ஓ.. கடவுள் வந்து எடுத்துட்டு போயிடுவாரா.. அப்ப சரி…

யாப்பேத் : எனக்கு மரம் வெட்டற வேலை இருக்கு, நான் கெளம்பறேன்.

 

4

 

நபர் 1 : ஏண்டா சேம்… உன் அப்பா கிட்டே சொல்ல மாட்டியா ? பாவம் இந்த வயசுல என்னவோ வேண்டாத வேலையெல்லாம் செய்றாரு… நீங்களும் அவருக்கு மரம் வெட்டறேன், கீல் செய்யறேன்னு திரியறீங்க…

சேம் : கடவுள் சொல்றதைத் தான் அப்பா செய்றாரு. அவரை ஒண்ணும் சொல்லாதீங்க. வானத்துலயிருந்து தண்ணி கொட்டும் அதுக்கு மழைன்னு பேரு. அதனால வெள்ளப்பெருக்கு வரும். அப்போ அப்பா செய்ற பேழை தான் காப்பாத்தும்.

ந 1 : இதுவரைக்கும் இங்கே மழை பெஞ்சதேயில்லை. ஏதோ புதுசா கதை உடறீங்க. உங்கப்பா பேழை செய்ய ஆரம்பிச்சப்புறம் பொறந்த கொழந்தைகளுக்கே இப்போ வயசாயிடுச்சு
நீங்க இன்னும் அவருக்கு சப்போர்ட் பண்றீங்க.

சேம் : சரி.. எனக்கு வேலை இருக்கு கெளம்பறேன், உங்க கிட்டே பேசி பிரயோஜனம் இல்லை.

5

நோவா : பிள்ளைகளை அழைக்கிறார். நூறு வருஷமா நீங்க என் கூட இருந்து எனக்கு ரொம்ப உதவி செஞ்சிருக்கீங்க. பேழை நல்லபடியா முடிஞ்சுது. உங்களைப் போல நல்ல கீழ்ப்படிதல் உள்ள பிள்ளைகளைத் தந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்றேன்.

பிள்ளைகள் : என்னப்பா… அப்பாவுக்குக் கீழ்ப்படிவது கடவுளோட விருப்பம். அதை எப்படி மீற முடியும். இது வேற கடவுளோட கட்டளை.

நோவா : சரி, இன்னும் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கு…

பிள்ளைகள் : நெனச்சேம்பா.. ஒரே ஒரு கதவு தான் இருக்கு.. இன்னும் ஒரு நாலஞ்சு கதவு வெச்சுடலாம் அப்படித் தானே ?

நோவா : நோ..நோ.. ஒரே ஒரு கதவு தான் கடவுள் சொல்லியிருக்காரு.

பிள்ளைகள் : அப்போ கொஞ்சம் நிறைய சன்னலாச்சும் வைக்கலாமா ? உள்ளே ஒரே இருட்டா இருக்கும், வென்டிலேஷன் பிராள்பம் வந்துடும்.

நோவா : நோ..நோ.. ஒரே ஒரு சன்னல் தான் கடவுள் சொல்லியிருக்காரு.

பிள்ளைகள் : அப்பா ஒரு ஸ்டியரிங் வீல் கூட இல்லையேப்பா

நோவா : கடவுள் அதெல்லாம் சொல்லலப்பா.

பிள்ளைகள் : இது ஒரு பாக்ஸ் மாதிரி இல்லா இருக்கு, போட் மாதிரி இல்லையே.

நோவா : கடவுள் சொன்னது இப்படித் தான்பா…

பிள்ளைகள் : சரிப்பா.. நீங்க என்ன சொல்றீங்களோ அதைக் கேட்டுக்கறோம். வேற என்னப்பா.பாக்கியிருக்கு. ஓ… .. அனிமலஸ் எல்லாம் கூப்பிடணும், நாம உள்ளே போணும்.. நம்ம குடும்பம் உள்ளே போணும்..

நோவா : ஆமா. அதான். அனிமல்ஸை எல்லாம் கடவுளே கொண்டு வந்து சேர்ப்பார்.

பிள்ளைகள் : சரிப்பா…

நோவா : அவற்றையெல்லாம் உள்ளே போக வைக்கிறதும், அப்புறம் குடும்பத்தை உள்ளே கொண்டு போறதும் எல்லாம் நீங்க பண்ணணும்.

சரிப்பா

பின் குரல் :

நூறு வருடகாலம் நோவாவின் பிள்ளைகள் அவரோடு இருந்திருப்பார்கள் என்கின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். தந்தையின் இறை விசுவாசத்தைக் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்காமல் இருந்ததால் தான் அவர்கள் மீட்கப்பட்டார்கள். அதனால் தான் இறைவன் அவர்களை உலகம் முழுவதும் பரவச் செய்தார். சேமின் வழித்தோன்றல்கள் உலகின் மையப்பகுதியையும் , காமின் வழித்தோன்றல்கள் உலகின் கீழ்ப்பகுதியையும் , யாப்பேத்தின் வழித்தோன்றல்கள் உலகின் மேற்பகுதியையும் நிரப்பியிருக்கிறார்கள் என்கிறது வரலாறு. பெற்றோருக்குக் கீழ்ப்படிவோம், அதன் மூலம் தந்தையாம் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிபவர்கள் ஆவோம்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...