Posted in Desopakari

Christianity : அச்சம் களைவோம்

 Image result for dont be afraid jesus says

நள்ளிரவு நேரம். முழு நிலா இரவு. அந்த அடர்காட்டின் ஒற்றையடிப்பாதையில் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தான் சிறுவன். எந்த ஆபத்து எப்போது வருமோ எனும் பயம் உள்ளுக்குள் உருள, நடந்து கொண்டிருந்தார் தந்தை. மகனோ அந்த இரவை ரொம்பவே ரசித்து, துள்ளிக் குதித்து நடந்து கொண்டிருந்தான்.

‘நைட்ல நடக்க உனக்குப் பயமா இல்லையா ?” தந்தை கேட்டார்.

“நீங்க இருக்கீங்கல்ல டாடி, அப்புறம் எனக்கென்ன பயம்” துளியும் தயக்கமின்றி சட்டென வந்தது பதில்.

தந்தை மீதான அவனுடைய நம்பிக்கை, அவனுடைய பயங்களையெல்லாம் அறவே நீக்கி விட்டிருந்தது. ஒருவேளை அவன் தனியே நடக்க வேண்டியிருந்தால் பயம் வந்து சூழ்ந்து கொள்ளலாம். விசுவாசம் விலகி விடலாம். ஆனால் த‌ந்தையோடு ந‌ட‌க்கும் வ‌ரை அவ‌னைப் ப‌ய‌ம் வ‌ந்து சூழ்ந்து கொள்ள‌ப் போவ‌தில்லை.

ப‌யம். ந‌ம்பிக்கையின்மையின் வெளிப்பாடு.

ப‌ல‌ வேளைக‌ளில் நாம் இந்த‌ உண்மையை ஒத்துக் கொள்ள‌வே அட‌ம் பிடிப்போம். ப‌ய‌ம் என்ப‌து ஒரு சின்ன‌ ப‌ல‌வீன‌ம் என்றே நாம் சொல்லிக் கொள்வோம். சில‌ பாவ‌ங்க‌ள் ந‌ம்மை விடாம‌ல் சுற்றிக் கொண்டிருக்க‌க் கார‌ண‌ம் இது தான். அவ‌ற்றை பாவ‌ம் என‌ புரிந்து கொள்ளாம‌ல், ப‌ல‌வீன‌ம் என‌ அழைத்துக் கொள்வ‌து தான்.

“ட‌க்குன்னு டென்ஷ‌னாயிடுவேங்க‌. என் சுபாவ‌ம் அப்ப‌டி”

‘நான் கொஞ்ச‌ம் கோவ‌க்கார‌ன். அது என்னோட‌ வீக்னெஸ்”

“பேயைப் பாத்தாலும், நோயைப் பாத்தாலும் நான் ப‌ய‌ந்து ந‌டுங்குவேன். அது என்னோட‌ ப‌ல‌வீன‌ம்”. இப்ப‌டி நாம் கேட்கும் உரையாட‌ல்க‌ளில் புதைந்து கிட‌ப்ப‌வை உண்மையில் ப‌ல‌வீன‌ங்க‌ள் அல்ல‌. இறைவ‌ன் மீது விசுவாச‌ம் இன்மையே.

பாவ‌ங்க‌ளிலேயே நாம் க‌டைசி இட‌த்தில் போட்டு புதைத்து விடும் விஷ‌ய‌ம் இந்த‌ ப‌ய‌ம் தான். “ப‌ய‌ப்ப‌டுற‌துல‌ என்ன‌ பிர‌த‌ர் த‌ப்பு. ம‌னுஷ‌ன்னா ஆயிர‌ம் ப‌ய‌ம் இருக்க‌த் தான் செய்யும்” என‌ சொல்வ‌தில் நாம் வெட்க‌ப்ப‌டுவ‌தில்லை.

ம‌னித‌ர்க‌ளை ஆட்டிப்ப‌டைக்கும் முக்கிய‌மான‌ ப‌ன்னிர‌ண்டு ப‌ய‌ங்க‌ள் உண்டு என்கின்ற‌ன‌ர் ம‌ருத்துவ‌ர்க‌ள். டோப்போ ஃபோபியா என்றால் ஒரு கூட்ட‌த்தின் முன்னால் நின்று பேசுவ‌த‌ற்கு உத‌ற‌லெடுக்கும் ப‌ய‌ம். உய‌ர‌மான‌ க‌ட்டிட‌த்திலிருந்து கீழே பார்க்கும் போது குலை ந‌டுங்கினால் அது ஆக்ரோஃபோபியா. க‌ர‌ப்பான் பூச்சி, ப‌ல்லி இவ‌ற்றைக் க‌ண்டு ப‌ய‌ந்து சாவ‌து என்டோமோஃபோபியா. பொருளாதார‌த்தை நினைத்துப் ப‌ய‌ப்ப‌டுவ‌து ஏட்ஃபோபியா த‌ண்ணீரைக்க‌ண்டு ப‌ய‌ப்ப‌டுவ‌து பாத்தோ ஃபோபியா. நோயைக் க‌ண்டு ப‌ய‌ப்ப‌டுவ‌து பேத்தோ ஃபோபியா.

ம‌ர‌ண‌த்தைக் க‌ண்டு ந‌டுங்குவ‌து த‌ன‌டோஃபோபியா. விமான‌த்தில் ஏற‌ப் ப‌ய‌ப்ப‌டுவ‌து ஏரோஃபோபியா. த‌னிமையைக் க‌ண்டு ப‌ய‌ப்ப‌டுவ‌து மோனோஃபோபியா. நாயைக் க‌ண்டு ந‌டுங்குவ‌து சைனோஃபோபியா. வ‌ண்டி ஓட்ட‌ப் ப‌ய‌ப்ப‌டுவ‌து ஓச்சோஃபோபியா. இருட்டைக் க‌ண்டால் கிலி பிடிப்ப‌து நைக்டோஃபோபியா.

நீங்க‌ள் எந்த‌ ஃபோபியாவுக்குள்ளே இருக்கிறீர்க‌ள் என்ப‌தை நீங்க‌ளே க‌ண்டுபிடிக்க‌ முடியும். ம‌ர‌ண‌த்தைக் க‌ண்டு ப‌ய‌ப்ப‌டுப‌வ‌ன் வாழ்வை ர‌சிப்ப‌தில்லை என்கிற‌து ஸ்பெயின் நாட்டுப் ப‌ழ‌மொழி ஒன்று.

உல‌க‌ம் ப‌ய‌த்தை எப்ப‌டி வேண்டுமானாலும் பார்க்க‌லாம். கிறிஸ்த‌வ‌த்தைப் பொறுத்த‌வ‌ரை ப‌ய‌ங்க‌ளின் அடிப்ப‌டைக் கார‌ண‌ம் விசுவாச‌க் குறைபாடே. இது ஒரு முக்கிய‌மான‌ப் பாவ‌ம் என்கிறார் ச‌கோத‌ர‌ர் ச‌க‌ரியா பூன‌ன். எப்ப‌டி இருட்டும் வெளிச்ச‌மும் ஒரே இட‌த்தில் இருக்க‌ முடியாதோ, அதே போல‌ ப‌ய‌மும் விசுவாச‌மும் ஒரே இட‌த்தில் இருக்க‌ முடியாது.

இயேசு க‌ட‌ல்மீது ந‌ட‌ந்த‌போது சீட‌ர்க‌ள் பேய் என்று அஞ்சி ந‌டுங்கினார்க‌ள். இயேசு ப‌ய‌ப்ப‌டாதீர்க‌ள் என்றார். ப‌ய‌த்தை உத‌றிய‌ பேதுரு க‌ட‌லில் ந‌ட‌ந்தார். அப்போது பெருங்காற்று வீச‌ மீன்டும் ப‌யந்தார் பேதுரு. ப‌ய‌ம் சூழ்ந்த‌போது விசுவாச‌ம் வில‌கிவிட்ட‌து. இயேசுவை விட்டுப் பார்வையை வில‌க்கிய‌போது அவ‌ரை ப‌ய‌ம் சூழ்ந்து கொண்ட‌து. விசுவாசித்த‌போது காலுக்குக் கீழே இருந்த‌ த‌ண்ணீர், ப‌ய‌ந்த‌ போது க‌ழுத்துக்கு மேலே வ‌ந்து விட்ட‌து. அவ‌னைக் காப்பாற்றிய‌ இயேசு “அற்ப‌ விசுவாசியே” என‌ க‌டிந்துகொள்கிறார்.

விசுவாச‌ம் வில‌கிப் போகும்போது ந‌ம்மிட‌ம் ப‌ய‌ம் வ‌ந்து குடியேறுகிற‌து. க‌ட‌வுள் ந‌ம்மைக் காக்கிறார், எல்லா நிலைக‌ளிலும் காக்கிறார் எனும் விசுவாச‌ம் ந‌ம்முடைய‌ அச்ச‌த்தை வில‌க்குகிற‌து. தூய‌ ஆவியான‌வ‌ர் ந‌ம்முடைய‌ ம‌ன‌ங்க‌ளில் குடியேறும்போது ப‌ய‌ம் விடைபெறுகிற‌து.

இயேசு பிடிப‌ட்ட‌ இர‌வில் ஒரு ப‌ணிப்பெண்ணைக் க‌ண்டு ப‌ய‌ந்து ந‌டுங்கினார் பேதுரு. “இவ‌ரு யாருன்னே என‌க்குத் தெரியாது” என‌ இயேசுவை ம‌றுத‌லிக்க‌வும் ச‌பிக்க‌வும் துவ‌ங்கினார். இயேசு பிடிப‌ட்ட‌பின் அவ‌ருடைய‌ விசுவாச‌த்தில் விரிச‌ல் விழுந்து விட்ட‌து. இயேசு உயிர்த்த‌ பிற‌கும் கூட‌ அவ‌ருடைய‌ ப‌ய‌ம் போய்விட‌வில்லை. “யூத‌ர்க‌ளுக்கு அஞ்சி” பூட்டிய‌ வீட்டுக்குள் அவ‌ர்க‌ள் அடைப‌ட்டுக் கிட‌ந்தார்.

அவ‌ர்க‌ள் தூய‌ ஆவியைப் பெற்றுக் கொண்ட‌பின், ப‌ய‌ங்க‌ளை விர‌ட்டினார்க‌ள். ஒரு ப‌ணிப்பெண்ணுக்கு முன்னால் ந‌டுங்கிய‌ பேதுரு, த‌லைவ‌ர்க‌ளுக்குப் பின்னால் க‌ர்ஜித்துப் பேச‌ க‌வ‌லைப்ப‌ட‌வில்லை. “இயேசுவைப் போல‌ என்னையும் சிலுவையில் அறைவ‌தா ? என‌க்கு அந்த‌த் த‌குதியில்லை. என்னை சிலுவையில் த‌லைகீழாய் அறையுங்க‌ள்” என‌ தைரிய‌த்தின் எல்லைக்கே போனார்.

ஆழ‌மான‌ விசுவாச‌ம் ப‌ய‌ங்க‌ளை ப‌ய‌ந்து ஓட‌ச் செய்கிற‌து.

ந‌ம‌து ப‌ல‌மும், தைரிய‌மும் இறைவ‌ன் ந‌ம்மோடு இருக்கிறார். அவ‌ர் ந‌ம்மைக் காப்பார் எனும் ந‌ம்பிக்கையின் மீதே வ‌ள‌ர‌ முடியும் !. ப‌ல‌ம் கொண்டு திட‌ம‌ன‌தாயிருங்க‌ள், அவ‌ர்க‌ளுக்குப் ப‌ய‌ப்ப‌ட‌வும் திகைக்க‌வும் வேண்டாம். உன் தேவ‌னாகிய‌ க‌ர்த்த‌ர் தாமே உன்னோடு கூட‌ வ‌ருகிறார்.( உபா 31:6 ) என்ப‌து நாம் அறியாத‌ வ‌ச‌ன‌ம் அல்ல‌.

இயேசு ந‌ம்மிட‌ம் பாவ‌ம் செய்யாதீர்க‌ள் என்று சொன்ன‌தைப் போல‌வே, ப‌ய‌ப்ப‌டாதீர்க‌ள், அஞ்சாதீர்க‌ள் என்றெல்லாம் ப‌ல‌முறை எச்ச‌ரிக்கிறார். ப‌ய‌ம் விசுவாச‌த்தை வ‌லுவிழ‌க்க‌ச் செய்யும் என்ப‌தை இயேசு அறிந்திருந்தார். விசுவாச‌ம் வ‌லுவிழ‌க்கும் போது சாத்தான் மிக‌ எளிதாக‌ ந‌ம்மை அடிமைப்ப‌டுத்தி விடுகிறான்.

ப‌ய‌ம் ந‌ம்மை பாவ‌த்தை நோக்கி இழுத்துச் செல்கிற‌து. த‌ண்ட‌னையைக் குறித்த‌ ப‌ய‌ம் பொய் சொல்ல‌த் தூண்டுகிற‌து. த‌னிமையைக் குறித்த‌ ப‌ய‌ம் த‌ற்கொலை செய்து கொள்ள‌த் தூண்டுகிற‌து. தோல்வியைக் குறித்த‌ ப‌ய‌ம் குறுக்கு வ‌ழியைக் காண்பிக்கிற‌து. நோயைக் குறித்த‌ ப‌ய‌ம் த‌ப்பான‌, மாந்திரீக‌ வ‌ழிக‌ளைக் காண்பிக்கிற‌து.

ப‌ய‌ம் என்ப‌து ஒரு உண‌ர்வு நிலையைத் தாண்டி ந‌ம‌து விசுவாச‌த்தை அசைத்துப் பார்க்கும் நிலையில் மைய‌ம் கொள்கிற‌து. அத‌னால் தான் இயேசு ஒவ்வொரு ச‌ந்த‌ர்ப்ப‌த்திலும் சீட‌ர்க‌ளை நோக்கி அஞ்சாதீர்க‌ள் என்கிறார்.

இயேசு கூட‌வே இருந்த‌போதும் ப‌ல‌ முறை சீட‌ர்க‌ள் அஞ்சி ந‌டுங்கினார்க‌ள். ப‌ட‌கில் ப‌ய‌ணிக்கையில், க‌ட‌ல் கொந்த‌ளித்த‌ போது அவ‌ர்க‌ள் ப‌ய‌ந்து ந‌டுங்கினார்க‌ள். (ம‌த் 8 :26 ) இயேசு சூழ‌லை அமைதியாக்கிவிட்டு, சீட‌ர்க‌ளைக் க‌டிந்து கொள்கிறார்.

ஒருவேளை ந‌ம்மோடு காரில் இயேசு ப‌ய‌ணித்தால் நாம் ப‌ய‌ந்து ந‌டுங்குவோமா ? கேட்டால் இல்லை என்று த‌லையாட்டுவோம். பின் ஏன் இத‌ய‌த்தில் இயேசு அம‌ர்ந்து ப‌ய‌ணிக்கும் போது ந‌ம்மைப் ப‌ய‌ம் கொத்தித் தின்கிற‌து ?

ஒன்று, இயேசு ந‌ம்மோடு ப‌ய‌ணிப்ப‌தை நாம் ந‌ம்ப‌வில்லை.

அல்ல‌து, இயேசுவையே ந‌ம்ப‌வில்லை. இந்த‌ இர‌ண்டில் ஒன்று தான் உண்மையான‌ கார‌ண‌மாய் இருக்க‌ முடியும்.

ப‌ல‌ வேளைக‌ளில், “பிற‌ர் என்ன‌ நினைப்பார்க‌ள்” என்ப‌து ந‌ம‌க்கு மிக‌வும் முக்கியமான‌ ஒன்றாகிவிடுகிற‌து. அத‌னால் தான் ந‌ம்மைச் சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் இயேசுவை அறிவிக்க‌வே ரொம்ப‌ ப‌ய‌ப்ப‌டுகிறோம். ஒரு கிறிஸ்த‌வ‌னாக‌ அறிய‌ப்ப‌ட‌ த‌ய‌ங்குகிறோம். கிறிஸ்த‌வ‌ வாழ்க்கை வாழ‌ த‌வ‌றிவிடுகிறோம்.

ப‌ய‌ம் ந‌ம்மை அடிமைப்ப‌டுத்தும் விஷ‌ய‌ம். அது உண்மையை அறியாத‌த‌ன் விளைவு. “உண்மை உங்க‌ளை விடுத‌லையாக்கும்” ( யோவான் 8:32) ம‌ற்றும், “யோவான் உண்மைக்குச் சான்று ப‌க‌ர்ந்தார்” ( யோ 5:33 ) எனும் வ‌ச‌ன‌ங்க‌ள் “உண்மை” என்ப‌து இயேசு. அவ‌ரை அறிவ‌து ப‌யத்திலிருந்து விடுத‌லையாவ‌த‌ன் அடிப்ப‌டைத் தேவை என்ப‌தை விள‌க்குகிற‌து.

ப‌ய‌ம் என்ப‌தையும், அச‌ட்டுத்த‌ன‌ம் என்ப‌தையும் பிரித்த‌றியும் திற‌ன் வேண்டும். ப‌ய‌ம் என்ப‌தையும் எச்ச‌ரிக்கை உண‌ர்வையும் போட்டுக் குழ‌ப்பிக் கொள்ளாம‌ல் இருக்க‌வும் வேண்டும்.

காரில் போகும்போது சீட்பெல்ட் போடுவ‌து எச்ச‌ரிக்கை உண‌ர்வு. நோய் வ‌ருகையில் ம‌ருத்து சாப்பிடுவ‌து பாதுகாப்பு உண‌ர்வு. ப‌டிக‌ள் இருக்கையில் ஆல‌ய‌ உச்சியிலிருந்து குதிக்காம‌ல் இருப்ப‌து இயேசு க‌ற்றுத் த‌ந்த‌ பாட‌ம்.

ஆனால் எதுவுமே ந‌ம‌து விசுவாச‌த்தை மீறிய‌ செய‌ல் அல்ல‌ என்ப‌தையும், எல்லாவ‌ற்றையும் தாண்டி இயேசுவின் அன்பும் பாதுகாப்புமே ந‌ம்மை வ‌ழிந‌ட‌த்துகிற‌து எனும் ஆழ‌மான‌ ந‌ம்பிக்கை ந‌ம‌க்கு இருக்க‌ வேண்டும்.

ப‌ய‌ங்க‌ளில் ந‌ல்ல‌ ப‌ய‌ம் ஒன்றும் உண்டு. அது ஆண்ட‌வ‌ருக்குப் ப‌ய‌ப்ப‌டுத‌ல். “க‌ர்த்த‌ருக்குப் ப‌ய‌ப்ப‌டுத‌லே ஞான‌த்தின் ஆர‌ம்ப‌ம்”. இயேசு இந்த‌ ப‌ய‌த்தை ஆத‌ரித்தார். “உட‌லை ம‌ட்டும் கொல்ப‌வ‌ர்க‌ளுக்கு அஞ்ச‌ வேண்டாம். உட‌லையும் ஆன்மாவையும், ந‌ர‌க‌த்தில் அழிக்க‌ வ‌ல்ல‌வ‌ருக்கே அஞ்சுங்க‌ள்” ( ம‌த் 10:28) என்கிறார்.

ப‌ய‌த்தை விட்டொழிப்ப‌தில் உல‌க‌மும், கிறிஸ்த‌வ‌மும் இர‌ண்டு முர‌ண்ப‌ட்ட‌ வ‌ழிக‌ளைக் கையாளுகின்ற‌ன‌. த‌ன்ன‌ம்பிக்கையின் மூல‌மாக‌வும், உள‌விய‌லின் மூல‌மாக‌வும் ப‌ய‌த்தை விட்டொழிக்க‌ நினைக்கிற‌து உல‌க‌ம். இறைவ‌னில் ச‌ர‌ண‌டைத‌லின் மூல‌ம் ப‌ய‌த்தை விட்டொழிக்க‌ நினைக்கிற‌து கிறிஸ்த‌வ‌ம்.

அத‌னால் தான் கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் ப‌ய‌ம் ப‌க‌ல‌வ‌னைக் க‌ண்ட‌ ப‌னிபோல‌ ச‌ட்டென‌ வில‌கிவிடுகிற‌து.

ந‌ம‌து ஆன்மீக‌ வாழ்வு ஆழ‌ப்ப‌ட‌வும், அர்த்த‌ப்ப‌ட‌வும் பய‌ம் ந‌ம்மை விட்டு அக‌ன்று போக‌வேண்டிய‌து அவ‌சிய‌மாகிற‌து. நாம் மீட்க‌ப்ப‌ட்டோம் என்று அறிந்து ம‌கிழ‌வும், புதிய‌ ம‌னித‌னில் இய‌ல்புக‌ளுக்கேற்ப‌ வாழ‌வும், இயேசுவை த‌ய‌ங்காம‌ல் அறிக்கையிட‌வும், ந‌ல்ல‌ விசுவாச‌  வாழ்க்கை வாழ‌வும், ப‌ய‌ம் ந‌ம்மை விட்டு வில‌க‌ வேண்டிய‌து மிக‌ அவ‌சிய‌ம்.

“நாம் இறைவ‌னின் பிள்ளைக‌ள். இறைவ‌னின் பிள்ளைக‌ள் அச்ச‌ப்ப‌ட‌க் கூடாது. தேவ‌ன் ந‌ம‌க்குப் ப‌ய‌முள்ள‌ ஆவியைக் கொடாம‌ல் ப‌ல‌மும், அன்பும் தெளிந்த‌ புத்தியுமுள்ள‌ ஆவியையே கொடுத்திருக்கிறார் ( 1 திமோ 1:7 ) என்கிற‌து திரும‌றை.

ந‌ம‌து தைரிய‌ம், நாம் இறைவ‌னின் க‌ண்ணின் க‌ருவிழி என‌ ந‌ம்புவ‌தில் இருக்கிற‌து. அப்போது ம‌ர‌ண‌ இருளின் ப‌ள்ள‌த்தாக்கு ப‌ய‌முறுத்தாது. அவ‌ர் ந‌ம்மை விட்டு வில‌குவ‌தில்லை, அவ‌ர் ந‌ம்மைக் கைவிடுவ‌தில்லை.

அச்ச‌த்துக்கு உள்ளாக்கும் ம‌ன‌நிலையை நீங்க‌ள் பெற்றுக் கொள்ள‌வில்லை. மாறாக‌க் க‌ட‌வுளின் பிள்ளைக‌ளுக்குரிய‌ ம‌ன‌ப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்க‌ள் ( ரோ 8:15 ).

ப‌ய‌ம் க‌ளைவோம், ப‌ல‌ன் அடைவோம்

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s