Posted in Articles

Christianity : சரியான பாதை

two cross

உங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது வாழ்த்துக்கள் !

என்று சமீபத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏற்கனவே என்னுடைய நண்பர்கள் என்னை எச்சரித்திருந்ததனால் அது போலியான அழைப்பு என்று எனக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும் அந்த நபருடன் பேசினேன். நானும், மனைவியும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் எனக்கு ஒரு இலட்ச ரூபாய் எப்படித் தரப்படும் என்பதை விளக்குவார்கள் என்றும் கூறினார். ‘உங்களுக்கு எத்தனை ரூபாய் மாத ஊதியம் கிடைக்கிறது ‘என்று அந்த நபரிடம் கேட்டேன். ‘மூவாயிரம் ரூபாய்’ என்றார். சரி சுமார் மூன்று வருடத்துக்கான ஊதியத்தை நான் உங்களுக்கு இனாமாகத் தருவதாகக் கருதிக் கொள்ளுங்கள். எனக்குப் பதிலாக அந்த ஒரு இலட்ச ரூபாயை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி தொலைபேசி அழைப்பைத் துண்டித்தேன்.

ஒன்றல்ல இரண்டல்ல பல விதமான அழைப்புகள். பரிசு விழுந்திருக்கிறது. லைப் இன்சூரன்ஸ் இனாமாகத் தருகிறோம். வெளிநாடு செல்ல இலவசப் பயணச்சீட்டு என்றெல்லாம் பல விதமான அழைப்புகள். இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவில் இருந்தபோதும் இதே தொல்லை தான். கவர்ச்சிகரமான அழைப்புகள். சபல புத்தியுடன் அவர்கள் அழைக்கும் இடத்துக்குச் சென்றுவிட்டால் அவ்வளவு தான். தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அந்த அளவுக்கு அவர்களுடைய வியாபாரப் பொருட்களைப் பற்றியும், அவர்களுடைய தொழிலைப்பற்றியும் பேசிப் பேசிக் கொன்று விடுவார்கள். கடைசியில் நம்மிடம் மிஞ்சுவது மன உளைச்சலும், ஏமாற்றமும் தான். ஐந்து ரூபாய் கூட கிடைக்கப் போவதில்லை.

இதேபோல தான் பல கவர்ந்திழுக்கும் விளம்பரங்களை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். தொலைக்காட்சியிலும், ரேடியோவிலும் இன்னும் மற்ற தகவல் தொடர்பு சாதனங்களிலும். அதை நம்பி ஏமாந்தால் அவ்வளவு தான். பணம் வீண். உண்மையிலேயே தரமான பொருட்கள் அதிகமாக சத்தம் போடுவதில்லை. நிறைகுடம் தளும்பாது. நல்ல இலக்கியமும், நல்ல பொருட்களும் தன்னைத் தானே விளம்பரப் படுத்திக் கொள்ளும். சரியானவற்றைக் கண்டு கொள்வதற்கு தெளிவான பார்வையும், கவர்ச்சியில் மயங்காத உறுதியும் வேண்டும்.

சில பாதைகள் இருபக்கங்களிலும் பூச்செடிகளோடும், அழகிய நிழல்தரும் மரங்களோடும் அழகாக அமைந்திருக்கும். ஆனால் அது நம்மை நமக்குத் தேவையில்லாத இடத்துக்கு இட்டுச் செல்லக் கூடும். பல பாதைகள் கரடு முரடாக ஒற்றையடிப்பாதையாக புதற்கள் அடர்ந்தனவாக இருக்கும். ஆனால் அதன் இறுதியில் நமக்குத் தேவையான அபூர்வ பழமரங்கள் கிடைக்கக் கூடும்.

சில சிறைச்சாலைகளில் அழகான பாதைகள் உண்டு.
பல ஆலய முற்றங்களோ செடிகள் ஏதுமின்றி வெறிச்சோடிக் கிடக்கும்.

தான்தோன்றித் தனமான வாழ்க்கை. அல்லது தனக்குத் தானே சில சட்டங்களைப் போட்டுக் கொண்டு வாழும் வாழ்க்கையானது பூக்களடர்ந்த பாதையைப் போல. பிடிக்காத பாதைகளில் நடக்கவேண்டாம். பிடித்தமான பாதையை உருவாக்கிக் கொள்ளலாம். சிற்றின்ப மோகமா ? தவறில்லை என்று தனக்குத் தானே புதிய ஒப்பந்தம் இட்டுக் கொள்ளலாம். மது தவறில்லை என்று மனதுக்குச் சொல்லிக் கொள்ளலாம். அடுத்தவனை விட்டுவிட்டு தன்னை மட்டுமே சிந்தித்துத் திரியலாம்.
அந்தப் பாதையின் துவக்கமும் முடிவும் மண்ணுலகில் தான்.

ஒடுக்கமான பாதை ஒன்று உண்டு. அதன் முடிவு விண்ணகம்.

அந்தப் பாதையில் பூக்கள் அதிகம் இல்லை. கல்லும், முள்ளும், புதர்களும் உண்டு. ஆனால் அந்தப் பாதையிலும் மிகவும் மன மகிழ்ச்சியுடன் பயணிக்க முடியும். இயேசு அந்தப் பாதையைத் தான் நமக்குக் காட்டுகிறார். சுயநல எண்ணங்களைச் சுட்டெரிக்கவேண்டும், உள்ளதை அடுத்தவனுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். ஒரு கன்னத்தில் அடிப்பவனைத் திருப்பி அடிக்காமல் அவனுக்கு மறுகன்னத்தையும் காட்ட வேண்டும். என்பவையெல்லாம் அந்த கடினமான பாதையின் சில உதாரணங்கள். அந்தப் பாதையில் பயணித்தால் முடிவு விண்ணக வாழ்வு !

நமக்குள் சில கேள்விகளை முளைப்பிப்போம்.

ஆடம்பரமான இவ்வுலக வாழ்வா
அழிவில்லாத அவ்வுலக வாழ்வா

எது வேண்டும் ?

ஒடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள்.
அழிவுக்குச் செல்லும் பாதை அகன்றது, வழி பரந்தது. அதன் வழியே செல்பவர் பலர். ஆனால் வாழ்வுக்கான ஒடுக்கமான பாதையைக் கண்டுபிடிப்பவர்கள் சிலரே.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s