Posted in Desopakari

Christianity : கர்வம்

Image result for pride man

இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்: தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும் – நீதிமொழிகள் 29 : 23

கர்வம் தான் உலகின் முதல் பாவம். ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளையை மீறி விலக்கப்பட்ட கனியைத் தின்றது இரண்டாவது பாவம் தான் !

கடவுளின் தூதர்களின் தலைவனாக இருந்தவன் லூசிஃபர். அழகிலும் அறிவிலும் நிரம்பியவன். அவனுடைய அழகும், அறிவும் அவனுக்குள்ளே கர்வத்தை மெல்ல மெல்ல துளிரச் செய்தது ! தன்னிலை மறந்தான். தன்னைப் படைத்த கடவுளை மறந்தான். தனது இலக்கு கடவுளைப் போலாகவேண்டும் என கர்வத்தில் திரிந்தான்.

கடவுள் கடும் கோபம் கொண்டார். அவனையும் அவனுடைய கூட்டாளிகளையும் விண்ணிலிருந்து வெளியே தள்ளி விட்டார். தேவ தூதர்களின் தலைவனாக இருந்தவன் சாத்தானின் சக்கரவர்த்தியாக மாறினான். கர்வம் ஒரு மனிதனை தலைகீழாய்ப் புரட்டிப் போடும் என்பதை இந்த முதல் பாவம் நமக்குச் சொல்கிறது ! இது கடவுள் ஆதாமைப் படைப்பதற்கு முன்பே நிகழ்ந்தது !

ஆதியில் உலகம் முழுவதிலும் ஒரே மொழி தான் இருந்தது. அவர்களுக்கு தங்கள் திறமையின் மீது கர்வம் உருவானது. சினயார் சமவெளிப் பகுதியில் ஒன்று கூடிய மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு மாபெரும் கோபுரத்தைக் கட்ட முடிவெடுத்தார்கள். நாம் கட்டும் இந்தக் கோபுரம் சுவர்க்கத்தைத் தட்ட வேண்டும், நமது பெயரைச் சொல்ல வேண்டும் என கர்வத்துடன் பேசிக் கொண்டார்கள். விளைவு ? கடவுள் அவர்களுடைய கர்வத்தை முறியடிக்க, அவர்களுடைய மொழியை உடைக்கிறார். பல்வேறு மொழிகள் அவர்களிடையே தோன்றின. அவர்களுடைய கர்வத் திட்டம் உடைந்து போகிறது.

எங்கெல்லாம் கர்வம் தலை தூக்குகிறதோ அங்கே கடவுளின் கோபம் எழுகிறது. காரணம், கடவுள் தாழ்மையையும், பணிவையும் போதிக்கிறார். தாழ்மையுடைய மனிதனே ஆன்மீகவாதியாய் வளரமுடியும். கர்வம் முளைக்கும் இடத்தில் ஆன்மீகம் விளைவதில்லை.

பைபிளில் இன்னொரு கதை வருகிறது (லூக்கா 18 ). இரண்டு பேர் ஆலயத்திற்கு செபிக்கச் செல்கின்றனர். ஒருவர் பரிசேயர். ஒருவர்  வரிதண்டுபவர். பரிசேயர்கள் என்பவர்கள் மதவாதிகளின் அடையாளம். சட்டங்களை ஒழுங்காகக் கடைபிடிப்பவர்கள். சட்டங்களைக் கடைபிடிப்பதால் தாங்கள் மிகப்பெரிய ஆன்மீகவாதிகள் எனும் “கர்வத்தில்” இருப்பவர்கள். வரி வசூலிப்பவர்களோ பாவிகளென ஒதுக்கப்பட்டவர்கள்.

பரிசேயர் ஆலயத்தில் நிமிர்ந்து நின்று. “கடவுளே நான் இந்த பாவியைப் போல இல்லாததற்கு நன்றி. நான் காணிக்கை கொடுக்கிறேன், நோன்பு இருக்கிறேன். கொள்ளையர்க்கள், நேர்மையற்றோர், விபச்சாரர் போன்ற வாழ்க்கை நடத்தவில்லை” எனும் தொனியில் வேண்டிக் கொண்டிருந்தார். வரிதண்டுபவரோ நிமிர்ந்து பார்க்கவும் துணியாமல் மார்பில் அடித்துக் கொண்டு “கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்” என்று மட்டும் சொன்னார்.

இந்தக் கதையைச் சொல்லி முடித்த இயேசு சொன்னார். இந்த பாவியே கடவுளுக்கு ஏற்புடையவன். “ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்” என்றார்.

பரிசேயன் நல்ல செயல்களைத் தான் செய்து வந்தான். ஆனால் தான் நல்லவன் எனும் கர்வம் அவனுக்குள் நுழைந்து விட்டது. அது தான் அவனை ஆன்மீகத்தில் வீழ்ச்சியடையச் செய்தது. நமது செயல்கள் நல்லனவாய் இருந்தால் போதாது. அந்த செயல்களுக்குப் பின்னால் இருக்கும் நோக்கமும் நல்லதாகவே இருக்க வேண்டும்.

நான் ரொம்ப தாழ்மையானவர் என ஒருவர் நினைப்பதே கர்வத்தின் அடையாளம் தான். தான் தாழ்மையாய் இருப்பதைக் குறித்த பிரக்ஜையற்று இறையில் நிலைத்திருப்பவனே உண்மையான தாழ்மை மனிதர்.

இயேசு வெறும் போதனைகளினால் பணிவைச் சொல்லவில்லை. தனது வாழ்க்கையினால் அதை வாழ்ந்து காட்டினார். தனது மரணத்துக்கு முன் சீடர்களுடன் இரவு உணவு அருந்தினார் இயேசு. அப்போது தனது சீடர்களின் கால்களைக் கழுவி, துண்டால் துடைத்தார். பணி வாழ்வு என்பது பணிவான வாழ்வு என்பதையே இயேசு சொன்னார்.

செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்: தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார் ( பேதுரு 5 : 5 )

நான் அழகாக இருக்கிறேன், எனக்கு நிறைய திறமைகள் இருக்கிறது, நான் நல்ல ஒரு போதகர், நான் யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டேன் என கர்வம் பல விதங்களில் நீட்டுகிறது. அழகாய் இருப்பதில் தவறில்லை, அது இறைவனின் கொடை. ஆனால் அதைக் குறித்து பெருமை பாராட்டுவது பாவமாகிறது !  இப்படியே ஒவ்வொரு விஷயமும் !

என்னால் முடியும் என நினைப்பது கர்வத்தில் விளைவு, நான் ஒன்றுக்கும் உதவாதவன் இறைவனின் பலத்தினால் தான் என்னால் எதையும் செய்ய முடியும் என அவரில் சரணடைவது கிறிஸ்தவம்  சொல்லும் ஆன்மீகப் பணிவு.

கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்: அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார் ( பேதுரு 5 : 6 )

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s