Posted in Desopakari

Christianity : புத்தாண்டுவாழ்த்துகள்.

Image result for happy face person

ஒரு அதிகாலைத் திருப்பலி. அட்டகாசமான சாப்பாடு, அழகான ஆடைகள், உற்சாகமான மனநிலை, இதைத் தாண்டி புத்தாண்டில் இடம் பெறும் முக்கியமான ஒரு விஷயம் ‘புத்தாண்டுத் தீர்மானங்கள்’. பெரும்பாலும் இத்தகை உறுதி மொழிகள் சில வாரங்களிலேயே உதிரி மொழிகளாகவோ, இறுதி மொழிகளாகவோ ஆகிவிட வாய்ப்பு உண்டு. இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் விடாமல் வாக்குறுதிகளை எடுத்துக் கொண்டே இருக்கிறோம். இந்த ஆண்டு ஆன்மீக செழுமைக்காக என்னென்ன வாக்குறுதிகள் எடுக்கலாம் ? ஒரு டாப் 10 லிஸ்ட்.

1. என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம் ( பிலி 3 : 8 ). இயேசுவைப் பற்றிய அறிவு அவருடைய வார்த்தைகளை ஆழமாய்ப் படிப்பதிலும், அவருடைய வாழ்க்கையை அப்படியே பின்பற்றுவதிலும் இருக்கிறது. ‘கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்’ எனும் பவுலின் வார்த்தைகளை மனதில் கொள்வோம். இந்த ஆண்டு இயேசுவைப் பற்றிய அறிவு எனும் செல்வத்தையே நாடுவேன் என உறுதிமொழி எடுக்கலாம்.

2. இந்த ஆண்டு எந்த முடிவை எடுத்தாலும் அதை இயேசுவின் பாதத்தில் வைத்து, பிரார்த்தனை செய்யாமல் எடுப்பதில்லை. எல்லாவற்றுக்கும் கடவுளின் அனுமதியை நாடுவேன். குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் எல்லோரையும் விட கடவுளின் அனுமதியையே முதன்மையாய் நாடுவேன் என உறுதி மொழி எடுக்கலாம்.

3. எதைச் செய்தாலும் கடவுளுடன் மட்டுமே ஒப்பீடு செய்வேன். அடுத்த மனிதரோடு ஒப்பீடு செய்து எதையும் செய்வதில்லை. நான் செய்யும் ஒவ்வொரு செயலும் கடவுளின் பார்வையில் எப்படி இருக்கிறது ? என் இடத்தில் இயேசு இருந்தால் என்ன செய்வார் என்பதையே அளவு கோலாய்க் கொள்வேன் என உறுதி எடுக்கலாம்.

4. என்னை விட அடுத்தவரை ‘முக்கியமானவராகக்’ கருதுவேன் என உறுதி எடுக்கலாம். முக்கியம் என்பது அவர் ஆன்மீகத்தில் வளர்ந்தவர் என்றோ, வணக்கத்துக்குரியவர் என்றோ பொருள் அல்ல. இயேசு பாதங்களைக் கழுவிய பணிவுடன் சக மனிதரை மரியாதையுடன் நடத்துவதே.

5. என் வார்த்தைகளால் ஒருவரையும் காயப்படுத்த மாட்டேன் என நாவுக்குக் கடிவாளம் இடலாம். பெரும்பாலான உறவுச் சிக்கல்கள் ஆத்திரத்தில் உரைக்கப்படும் வார்த்தைகளால் தான் உருவாகின்றன. பேச்சில் இனிமையும், தாழ்மையும் இருந்தால் வாழ்க்கை வளமாகும்.

6. நான் ஒரு கிறிஸ்தவன் என்பதைச் சொல்லவும், அடையாளப்படுத்தவும், கிறிஸ்துவைப் பற்றிப் பேசவும் வெட்கப்பட மாட்டேன் என உறுதி எடுக்கலாம். கிறிஸ்தவ அடையாளங்கள் நமது உலக வாழ்க்கையின் அங்கீகாரங்களுக்கோ, செல்வங்களுக்கோ தடையாய் இருக்கலாம். ஆனால் அவை விண்ணக வாழ்வில் செல்வங்களைச் சேர்க்க உதவும் என்பதை  மறவாதிருப்போம்.

7. மன்னிக்காதவன் விண்ணரசில் நுழைவதில்லை. இந்த ஆண்டு, நமது மனதில் இருக்கும் கோபம், எரிச்சல், பகை உணர்வுகளை விலக்குவோம். ஈகோவை கொஞ்சம் ஓரமாய் வைத்துவிட்டு மனம் திறந்த மன்னிப்பை மற்றவர்களிடம் கேட்போம். உங்கள் சகோதரனை மன்னிக்காதவரை உங்கள் காணிக்கைப் பொருட்களெல்லாம் பலிபீடத்திலேயே காத்திருக்கும் எனும் இயேசுவின் வார்த்தைகளை மறவாதிருப்போம்.

8. குடும்ப உறவுகளை வலுப்படுத்த முடிவெடுப்போம். பலவீனமான குடும்பங்கள் பலவீனமற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும். நாம் அனைவரும் கிறிஸ்து எனும் கொடியின் கிளைகள். கிளைகள் தங்களுக்குள்ளே தாக்குதல் நடத்துவது கொடியைக் காயப்படுத்தும். விட்டுக் கொடுத்தலும், தாழ்மை பழகுதலும் குடும்ப உறவுகளை விரைவில் வலுவடையச் செய்யும்.

9. எதைச் செய்தாலும் கடவுளின் மகிமைக்காகவே செய்ய முடிவெடுப்போம். சுய பெருமைக்காக செய்யும் எதுவும் வீணானவைகளே. நல்ல செயல்களை  மட்டுமே செய்வோம், அந்த செயல்களை கடவுளின் மகிமைக்காக மட்டுமே செய்வோம். பிறர் பார்வைக்கு நம்மை மறைத்து இறை பார்வைக்கு மட்டுமே நம்மை வெளிப்படுத்துவோம்.

10. பாவம் என்பது கான்சரை விடக் கொடியது என உணர்வோம். நோய்கள் நம்மை மரணத்துக்குள் தள்ளலாம், ஆனால் பாவம் மட்டுமே நம்மை நரகத்தில் தள்ளும். மரணம் தர்காலிகம், நரகம் நிரந்தரம். பாவத்தை விட்டு விலகுவேன் எனும் ஒற்றை உறுதிமொழி போதும் இயேசுவைப் பிரியப்படுத்த.

உலகையும், உடலையும் மையப்படுத்தி உறுதிமொழிகள் எடுப்பது தான் நமது காலம் காலமான வழக்கம். இந்த முறை இயேசுவையும் விண்ணக வாழ்வையும் மையப்படுத்தி உறுதி மொழிகள் எடுப்போம். அப்போது மற்றவை நமக்குக் கூடக் கொடுக்கப்படும்.

வரும் நாட்களெல்லாம் இறைமகன் வரமாய்த் தரும் நாட்களே.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s