Posted in Songs

பாரமான சிலுவை

Image result for jesus walking with cross

பல்லவி

பாரமான சிலுவை மரம் தோளிலேந்தி
வழிநெடுக குருதிமழை அருவிசிந்தி
முள்முடியை முதல்வனவர் தலையிலேந்தி
போவதுபார் பாவம் போக்க மரணம் தேடி…

அனுபல்லவி

தன்னுயிரைத் தருவது போல்
நேசமுண்டா உலகிலே
உன்னுயிரைக் காத்திடத்தார்
உயிரீந்தார் மரத்திலே.

இன்னுமென்ன பாவ வழி
வாழுகிறாய் இகத்திலே
தெய்வஒளி கொண்டு மன
இருள்விரட்டு அகத்திலே.

1

கசையடியைத் தாங்கியது யாருக்காக ?
பரமனடி வாடியது யாருக்காக ?
அவமானம் ஏந்தியது யாருக்காக ?
ஆணிகளில் தொங்கியது யாருக்காக ?

மலைபோன்ற உன்பாவம்
அழித்திடத்தானே
மலைமீது கடவுளவர்
விழுந்து நடந்தார்.

கடல்போன்ற உன்பாவம்
கழுவிடத்தானே
உடல்முழுதும் இரத்தமதைத்
தழுவிக் கொண்டார்.

அறிவாய் நீ மானிடனே
வாழ்வுக்கு வழி ஒன்றே !
அறிவுக்குள் ஒளியேற்றி
இயேசுவுக்குள் வா இன்றே.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...