Posted in Songs

தீர்ப்புகள் இடுவது

Image result for praying

தீர்ப்புகள் இடுவது
உன் பணியா
நீ தீர்ப்பிடப் படுவாய்
தெரியாதா ?

தீர்வுகள் தருவது
திரு வார்த்தை
அந்த வார்த்தையின்
வடிவத்தை அறியாயா ?

1

ஒரு கல்வாரி மலை சிலுவை மரத்தை
தன் தலை மேலே நாட்டியதே,
இரு ஆணிக் கரங்கள் குருதித் துளியை
பாவம் தீர்க்க நீட்டியதே.

இன்னொரு ஜனனம் இயேசுவில் என்று
விவிலியம் உனக்குக் காட்டியதே – நீ
அவரை விடுத்து இருளின் வழியில்
பயணம் செய்து வாடுவதேன் ?

2

ஒரு முறை உனக்கு கேள்விகள் இன்றி
மன்னிப்பு வந்ததை மறவாதே,
இரண்டாம் வருகை வருகையிலே
அவர் தண்டனை தரலாம் தவறாதே.

உயிரின் ஆழம் வரையினிலே நீ
நேசரை நேசி விலகாதே – அவர்
சொல்லிய சொல்லின் உள்ளே சென்று
சாயம் பூச நினைக்காதே.

3

கண்ணீர் துடைக்கும் விரல்கள் உனக்கு
தந்தது அவர்தான் தெரியாதா – நீ
பயணம் செய்யும் பாதம் இரண்டும்
பரமன் வரம் தான் புரியாதா ?

செந்தீர் விட்டு உன்னைத் தொட்ட
இறைவன் அருளை மறப்பாயோ – நீ
இதயம் விற்றுக் கவலை பெற்று
அருளைப் பெறாமல் மரிப்பாயோ ?

0

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s