Posted in Songs

பனிப்பூக்கள்

Image result for birth of jesus

பல்லவி

பனிப்பூக்கள் குளிர்காற்றில்
பறக்கின்ற வேளை
இடையர்களும் இமைசாய்த்து
துயில்கின்ற மாலை

விண்ணிலே மீனொன்று
வால் நீட்டக் கண்டு
மென்மனசு இடையர்கள்
போனார்கள் மிரண்டு

இது வானம் ஒன்று பூமிக்கு வருகின்ற தேதி
வானதூதர் வந்தங்கு சொன்னார் அச் சேதி.

அனுபல்லவி

நீர் வந்தால் தொழுவமும் தொழுகை பெறும். .. என்
நெஞ்சோரம் ஆனந்த அழுகை வரும்.

1

மன்னர் குல மெத்தைகள்
பலநூறு உண்டு
தூதர் சேதி சொன்னதுவோ
ஆயர்களைக் கண்டு.
ஆவின் குடில் ஆலயமாய்
மாறியதை வியந்து
அரசர் குல ஆணிவேரும்
ஆடியது பயந்து.

வென்று விட வந்தவரைக் கொன்றுவிடக் கட்டளை – அது
மீனொன்று கடல்குடிக்க ஆசைப்பட்ட கற்பனை

2

சாந்தமுகம் சாய்ந்து கொள்ள
சிரித்தது பசுக்கொட்டில்
காந்தமுகம் பாய்ந்து வந்து
அமர்ந்தது மனக் கட்டில்.
ஞானியரின் கைகளிலே
மூன்று வகைப் பரிசு
மூவொரு தேவனவர்
பிறப்பே மிகப் பெருசு.

வென்று விட வந்தவரைக் கொன்றுவிடக் கட்டளை – அது
கதிரவனைத் தின்றுவிட குயில் கொண்ட கற்பனை

0

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s