Posted in Mother Teresa

அன்னை 14 : ஏழையோடு ஏழையாய்

 Image result for Young Mother teresa

மருந்தகம். அதுதான் அன்னையின் அடுத்த சிந்தனையாய் இருந்தது. ஒரு அறை பள்ளிக்கூடம், அது சரியாகிவிட்டது.

இப்போது அன்னை இரண்டாவது அறையை மருந்தகமாக்குவதற்குரிய முயற்சிகளில் இறங்கினார்.

மருந்தக கடைகள் வைத்திருப்பவர்களைச் சென்று சந்தித்தாள். சேரிக்குள் ஒரு இலவச மருந்தகம் வைக்கப்போவதைச் சொல்லி உபரியாய் இருக்கும் மருந்துகளைக் கேட்டாள்.

பலர் அன்னையை வினோதமாய் பார்த்தார்கள். என்னென்ன பிச்சை கேட்பது என்று விவஸ்தையில்லாமல் போய்விட்டது என பலர் முணுமுணுத்தனர்.

ஆனால் சிலர் அன்னையின் நல்ல உள்ளத்தைப் புரிந்து கொண்டு உதவினர்.

நிராகரிப்புகளும், அவமானங்களும் தாங்க முடியாதவர்கள் நிச்சயமாய் இறை பணி செய்ய முடியாது என்பது அன்னைக்குத் தெரிந்தே இருந்தது.

அன்னை நோயாளிகளின் நிலமைக்கு ஏற்பவும், மக்களுடைய தேவைக்கு ஏற்பவும் மருத்துவ உதவிகளைச் செய்தாள்.

மருத்துவமனை உதவி தேவைப்படுபவர்களை கேம்பல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாள்.

தன்னால் செய்ய முடிந்த உதவிகளை தானே முன்னின்று நடத்தினார்.

ஒரு இஸ்லாமிய பெண் உடல் வலியினால் துடித்துக் கொண்டிருந்தாள். உதவுவதற்கு யாருமே இல்லை. அழுகின்ற சோகத்தைக் காண பிள்ளைகளும் விரும்பவில்லை. நிராகரிப்பு வலியினால் அவள் துடித்துக் கொண்டிருந்தாள்.

அன்னை அந்த பெண்மணிக்கு சில மருந்துகளைக் கொடுத்தாள். அவளுடைய நோய் சில நாட்களில் குணமாயிற்று. அவள் அன்னையை கையெடுத்துக் கும்பிட்டார்.

“உங்களை அல்லா தான் இங்கே அனுப்பியிருக்கிறார்” அந்த பெண்மணியின் உணர்ச்சிக் குரலை அன்னை புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள்.

இன்னொரு இஸ்லாமிய மூதாட்டியும் இதே போன்ற நிலமையில் இருந்தாள். அவளுக்கும் அன்னை உதவி செய்தாள்.

அந்த மூதாட்டி உணர்ச்சிப் பிரவாகமானார். அவர் அன்னையை நோக்கி மெல்லிய குரலில் சொன்னாள்.

“நான் மரணத்தைச் சந்திக்கும்போது வருவீர்களா, உங்கள் கரங்களில் உயிர்விட ஆசையாய் இருக்கிறது”

அன்னை தனது கண்ணீர் விழிகளைத் துடைத்துக் கொண்டாள். இத்தகைய கதைகளை கடந்த இரண்டு வாரங்களாகக் கேட்டுக் கேட்டு அன்னையின் இதயம் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது.

அன்னை அனைவரையும் அரவணைத்தார். குறிப்பாக தொழுநோய் வந்ததால் குடும்பத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் ஒதுக்கித் தள்ளப்பட்ட குப்பைத் தொட்டி வாசிகளை அன்னை முகம் கோணாமல் அரவணைத்தார்.

இயேசு தொழுநோயாளிகளைத் தொட்டு குணமாக்கியதும், அவர்களை ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என அரவணைத்ததும் அன்னையின் பணிக்கு அடித்தளம் அமைத்திருந்தன.

கைகளெல்லாம் அழுகிய நிலையில் துரத்தப்பட்ட ஒரு பெண்ணின் கதறல் ஒலி அன்னையை ஆழமாய் சிந்திக்க வைத்தது.

தொழுநோய் வருமுன் கண்டறியும் சோதனையை அனைவருக்கும் செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார்.

ஒரு பரிசோதனைக் கருவியை அன்னை வாங்கினார்.

மக்கள் அனைவரும் மிகவும் ஆர்வமுடன் இந்த சோதனைக்கு ஓடி வந்தனர். அவர்களுக்கு தொழுநோய் ஒரு தொற்று நோய் என்னும் தவறான எண்ணம் இருந்தது.

சோதனை பலரை மகிழ்ச்சிக்குள்ளாக்கி அனுப்பியது.

மோத்திஜ் பகுதியைப் போலவே சமூக நிலையில் மிகவும் பின்தங்கிய தில்லாஜா என்னும் பகுதியையும் அன்னை அரவணைக்க விரும்பினாள்.

அங்கும் ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்தார். நான்கு ரூபாய் மாத வாடகை!

அங்கும் ஒரு சிறு கல்வி நிலையம் ஆரம்பமானது.

அன்னையிடமிருந்து ஏழை மக்கள் அதிகம் எதிர்பார்க்கத் துவங்கினார்கள். அன்னையை அவர்கள் குடிசைக்கு வந்த தேவதையாய் பார்த்தார்கள்.

கூடவே எதிர்ப்புகளும் எழுந்தன.

தனியே ஒரு சகோதரி குடிசைகளில் பணிபுரிவது திருச்சபையிலுள்ள சிலருக்குக் கூட பிடிக்காமல் போயிற்று.

பொது மக்களும் அன்னையின் மனித நேயப் பணிக்கு மத அங்கி அணிவித்துப் பார்த்தார்கள்.

கண்முன்னால் நோயாளிகள் அல்லலுற்றபோதும், ஏழைகள் பசியினால் மடிந்த போதும், தொழுநோயாளிகள் குப்பைக்கு எறியப்பட்டபோதும் குரலெழுப்பாத மனிதர்கள் எல்லாம் அன்னையின் பணிக்கு எதிராய் மெல்ல மெல்ல குரலெழுப்பினர்.

அன்னை அந்த விமர்சனங்களையெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. யாராவது அசிங்கமாய் பேசினால் “உன்னை நான் மன்னிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கடந்து போய் விடுவார்.

அன்னை ஒருநாள் லோரேட்டோ கன்னியர் இல்ல தலைவியைச் சந்திக்கச் சென்றாள்.

அவர்கள் அன்னையைக் கட்டியணைத்து கண்ணீர் விட்டார்கள்.

“இங்கே நீ என்ன செய்தாலும் பிறருக்குத் தவறாகவே தெரிகிறது. வந்து விடு. கன்னியர் இல்லத்துக்கு வந்து, வழக்கமான பணி செய்யலாம்.” என தலைவி வற்புறுத்தினார்.

அன்னை உடனே ஒரு முக்கிய முடிவெடுத்தாள்.

இனிமேல் இங்கே வரக்கூடாது !

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s