Posted in Sunday School

இறைவனுக்காக ஒளிகொடுப்போம்.

இறைவனுக்காக இரவில் நிலவைப் போல ஒளிகொடுப்போம்.

Image result for skit

 

 

குரல் : நல்மேய்ப்பர் ஆலயத்தின் ஞாயிறு பள்ளி பிள்ளைகளான நாங்கள், “இறைவனுக்காக இரவில் நிலவைப் போல ஒளிகொடுப்போம்.” எனும் ஒரு குறு நாடகத்தை நடித்துக் காட்ட இருக்கிறோம்.

ஒரு நாள் மெர்க்குரி, வீனஸ், பூமி, மார்ஸ், ஜூபிடர், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் எனும் எல்லா கோள்களும் தங்களுக்குள்ளே மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தன‌. பூமியின் நிலவைப் பற்றிய விவாதம் தான் அது.

சரி.. அப்படி என்ன தான் விவாதிக்கிறாங்கன்னு பாப்போம்.

 

 

ஜூபிடர் : நாம எல்லாருமே பூமில இருக்கிற மக்களோட வாழ்க்கைக்காகத் தான் இங்கே சுத்திட்டு இருக்கோம். பெருமைக்காக சொல்றேன்னு நினைக்காதீங்க. நான் தான் இந்த சூரியக் குடும்பத்துலயே பெரிய ஆள்.. ஐ மீன் பெரிய கோள். எனக்கும் நிலவு இருக்கு. ஆனா பூமிக்கு இருக்கிற நிலவு மாதிரி என்னோட நிலவு ராத்திரி வெளிச்சம் தரதில்லை. பொறாமையால சொல்லல, ஆனா சொல்றேன். “பூமிய உள்ள நிலவு மட்டும் எதுக்கு நைட் ல ஒளி குடுக்குது ? அதுக்கு அப்படி என்ன தேவை இருக்கு ?”

மெர்குரி : சூப்பரா சொன்னே ஜூபிடர். நானும் அதையே தான் கேக்கறேன். பகல் புல்லா சூரியன் சுட்டு எரிக்குது. எக்கச்சக்க சோலார் எனர்ஜி கிடைக்குது. மக்கள் அதை சேமிச்சு வைச்சு பயன்படுத்தறாங்க. இன்னைக்கு இருக்கிற டெக்னாலஜி டெவலப்மென்டைப் பாத்தா, இந்த நிலவெல்லாம் தேவையே இல்லை.

மார்ஸ்: கலக்கலா சொல்லிட்டே மெர்குரி. அது மட்டுமா, மக்கள் இப்போ காத்துல இருந்தே கரண்ட் எடுக்கிறாங்க. ஆயில், கேஸ், பெட்ரோல் இப்படி இருக்கிற எக்கச்சக்கமான விஷயங்கள் போதும் வெளிச்சத்துக்கு.

வீனஸ் : எனக்கென்னவோ நிலவு ஒரு முக்கியமான பாடத்தை நமக்கு சொல்லித் தருதுன்னு தோணுது. அதாவது, இயேசு எனும் வெளிச்சம் இல்லாம இருளில் இருக்கிறவங்களுக்கு மக்கள் வெளிச்சம் தரணும். இதை நிலவு சிம்பாலிக்கா சொல்லுதுன்னு நினைக்கிறேன்.

பூமி : பக்காவா சொன்னே வீனஸ். நைட்ல தான் மக்களுக்கு வெளிச்சம் வேணும். இருள் தான் பாவத்தின் நேரம். அப்போ தான் வெளிச்சம் வேணும்.

சனி : ஹலோ..ஹலோ.. கொஞ்சம் நிறுத்துங்க. எனக்கும் தான் நிலவு இருக்கு. நைட்ல அது சைலன்டா தூங்குது. பூமியில இருக்கிற நிலவு மட்டும் எதுக்கு காலைல சூரியன் கிட்டேயிருந்து வெளிச்சத்தை வாங்கி, நைட்ல பூமிக்கு டார்ட் அடிச்சு காட்டணும் ?

நெப்டியூன் : நீங்க என்னென்னவோ சொல்றீங்கப்பா. நான் சூரியன் கிட்டேயிருந்து ரொம்ப ரொம்ப ரொம்ப தூரத்துல இருக்கேன். வெளிச்சம் பத்தியெல்லாம் எனக்கு ஒரு ஐடியா இல்லை. பட், நிலவு எதுக்கு இந்த வேலை பாக்கணும்ன்னு எனக்கும் ஒரு கேள்வி இருக்கு.

யுரேனஸ் : கரெக்ட்… பேசாம அதுவும் நைட்ல நம்மள மாதிரி தூங்க வேண்டியது தானே. அதிகப்பிரசிங்கித் தனம் பண்ணாம…

ஜூபிடர் :  நான் ஒரு கேஸ் ஃபைல் பண்ண போறேன் சுப்ரீம் கோர்ட்ல. நிலாவை சும்மா விடப் போறதில்லை. அது நைட்ல ஒளி குடுக்க கூடாது. நானா மூனா ந்னு பாத்துடறேன்.

 

குரல் : கோள்களெல்லாம் இப்போ ரெண்டு குரூப் ஆயிடுச்சு. நிலா நைட்ல ஒளிகுடுக்கலாம் ங்கறது ஒரு குரூப். குடுக்கவே கூடாது ந்னு சொல்றது இன்னொரு குரூப். மெர்குரி, மார்ஸ், ஜூபிடர், யுரேனஸ், நெப்டியூன், சனி .. இந்த கோள்களெல்லாம் நிலா ஒளிகொடுப்பதை எதிர்க்கும் கூட்டம். பூமியும் வீனஸும் நிலவுக்கு சப்போர்ட். கேஸ் ஜூன் 26ம் தியதி பைல் பண்ணியாச்சு. ஜூபிடர் தன்னோட கேஸை விளக்கமா பதிவு செய்திருக்கு.

“சூரியக் குடும்பத்துல பாகுபாடு இருக்கக் கூடாது. எல்லாரும் ஒண்ணு தான். நிலவுக்காக மட்டும் சட்டத்தைத் திருத்தக் கூடாது. பூமியோட நிலவும் மற்ற கோள்களிலுள்ள நிலவைப் போல நைட்ல இருட்டாவே இருக்கணும். இல்லாவிட்டால் சூரியக் குடும்பத்திலுள்ள ஒற்றுமை பாதிக்கப்படும்”.

சூரியன் தான் ஜட்ஜ். அவரு என்ன சொல்லப் போறாரோ அது தான் ஃபைனல். சரி.. சரி.. என்ன நடக்குது பாப்போம்.

 

ஜூபிடர் : யுவர் ஆனர், ஒரு விஷயத்தை நான் கிளியரா சொல்ல விரும்பறேன். இந்த நிலா நைட்ல ஒளி கொடுக்குது. அது உங்களுக்கும் தெரியும். மற்ற கோள்களிலுள்ள நிலாவைப் போல அது இருக்கவில்லை. அது மட்டுமில்ல, இந்த நிலவோட ஒளி யாருக்கும் தேவையில்லை. மக்களுக்கு லைட் எல்லாம் ரொம்ப லைட்டான மேட்டர் ஆயிடுச்சு. ஆயிரத்தெட்டு வழி இருக்கு அவங்களுக்கு வெளிச்சத்தை உண்டாக்க. சோ, இந்த நிலவை ஒளிகொடுக்கக் கூடாதுன்னு சொல்லி உத்தரவிடுங்கள். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.

சன் : மிஸ்டர் பூமி.. நீங்க இதுக்கு என்ன சொல்றீங்க ?

பூமி : யுவர் ஆனர். ஜூபிடர் சொல்றதுல கொஞ்சம் சரி தான். நிலவு இல்லாமலேயே பூமில வெளிச்சம் இருக்கு. ஆனால் உண்மையான ஒளிக்கான தேவை பூமில இருக்கு. மக்கள் இருளில வாழ்ந்திட்டிருக்காங்க. உலகமே இருளில் இருக்கு. உண்மையான ஒளி எதுன்னு மக்கள் தேடிட்டே இருக்காங்க. நீங்க இயேசு எனும் மெய்யான ஒளியா இருக்கீங்க. பகல்ல நீங்க ஒளி தரீங்க. பூமியை எக்கச் சக்க வளங்களால நிரப்பியிருக்கீங்க. பூமியில உயிர்கள் வாழவே நீங்கதானே ஐயா காரணம். இயேசு எனும் மெய்யான ஒளியை குறிப்பிடும் நீங்க இல்லேன்னா பூமியே இன்னிக்கு செத்துப் போயிருக்கும்.

ஜூபிடர் : மை அப்ஜக்ஷன் யுவர் ஆனர். சொல்ல வேண்டியதைச் சொல்லாமல், உங்களைப் புகழ்ந்து பாடிப் பாடி கேசை திசை திருப்ப முயல்கிறார் மிஸ்டர் பூமி. பேசி ஜெயிக்க முடியாதவங்க, ஜால்ரா வீசி ஜெயிக்கப் பாக்கறாங்க…

சன் : அப்ஜக்ஷன் ஓவர் ரூல்ட்… பூமி, நீங்க பேசுங்க..

பூமி : பூமிக்கு வெளிச்சத்தின் தேவை இருக்கு. இருளில் கூட்டம் கூட்டமா அழிந்து கொண்டு பாதை தவறி போகும் மக்களுக்கு வழிகாட்ட இந்த ஒளி அவசியம். ஒளியை வாங்கிட்டு ஒளிச்சிருக்காம, அந்த ஒளியை மத்தவங்களுக்கு நிலவு கொடுக்குது. இயேசுவோட அன்பை ருசி பாத்தவங்க மத்தவங்களுக்கும் அதைக் கொடுக்கணும் ங்கறது தான் இதோட பொருள்

ஜூபிடர் : யுவர் ஆனர். பூமி பேசறதைப் பாத்தா காமெடியா இருக்கு. ஒளியை வாங்கறாராம், அதை கொடுக்கிறாராம். எதுக்கு இந்த வேலை. சொந்தமா ஒளி இருந்தா கொடுக்கலாம் பரவாயில்லை. இரவல் வாங்குவாராம்.. இரவில் கொடுப்பாராம்…

பூமி : யுவர் ஆனர். நீங்க இயேசுவை குறிப்பிடும் ஒளி. எல்லாருமே இயேசுவுக்காக ஒளி கொடுக்கணும்ன்னு விரும்பறவங்க. “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது” ந்னு யோவான் 15:5 ல படிக்கலாம். நிலவுக்கு வெளிச்சம் இல்லை. அது வெளிச்சத்தை வாங்கி மத்தவங்களுக்கு கொடுக்குது. இது என்ன சொல்லுதுன்னா, பூமியிலுள்ள மக்கள் எல்லோருமே இயேசுவின் ஒளியை வாங்கி மனிதருக்கு ஒளியாய் மாறணும். இருளில் இருக்கும் மக்களுக்கு முன்னாடி ஒளிர வேண்டியது சொந்த ஒளியல்ல, பூமிக்கு வ‌ந்த ஒளி. இயேசுவின் ஒளி.  உங்களுக்கே தெரியும் இயேசு தன்னோட ஒளியில் எல்லோரும் வரணும்ன்னு தான் விரும்பறாரு.

ஜூபிடர் : யுவர் ஆனர். அதுவும் இதுவும் பேசி பூமி உங்களை கன்ஃபியூஸ் பண்ணுது. ஒரு உதாரணம் சொல்றேன். நீங்க காலைல ஈஸ்ட் ல உதிக்கிறீங்க, நைட்ல  வெஸ்ட்ல போய் ரெஸ்ட்ல இருக்கீங்க. பட் மூனைப் பாருங்க. ஒருநாள் இங்கே, ஒரு நாள் அங்கே, ஒரு நாள் நார்த், ஒரு நாள் சவுத்.. உங்களை மாதிரி அது இல்லையே …

பூமி : யுவர் ஆனர். நீங்க கிழக்கில உதிச்சா கூட பூமி முழுசும் ஒளி கொடுக்கறீங்க. நல்லவங்களோ, தீயவங்களோ நீங்க பாகுபாடு காட்டறதில்லை. எல்லா மக்களும் இயேசுவைப் பற்றி அறியணுங்கறது உங்களோட ஆசை. ஆனா நிலவோட வேலை வேற. யாருக்கெல்லாம் இயேசுவோட அன்பின் தேவை இருக்கோ, அவங்க முன்னாடி மட்டும் ஒளிர்வது.

ஜூபிடர் : யுவர் ஆனர். பூமி சொல்றதெல்லாம் ஒத்துக்கும் படியா இல்லை. வேணும்ன்னா நீங்க பூமில போய் கேட்டுப் பாருங்க. யாருக்கும் நிலவைப் புடிக்கிறதே இல்லை. பாதி பேர் டிவி பாக்கிற அவசரத்துல நிலவை எட்டிக் கூட பாக்கறதில்லை. முழு நிலா வரும்போ கடவுளோட தீர்ப்பு நாள் வரும்ன்னு பூமில உள்ள மக்கள் பயப்படறாங்க.

பூமி : ஜூபிடர் சொன்னது சரி தான். மக்களுக்கு நிலா தீர்ப்பு நாளை ஞாபகப்படுத்துது. அது தான் மக்கள் இயேசுவைப் பின்பற்றணும் என்கிற உணர்வை தருது.

ஜூபிடர் : சரி அப்படின்னா டெய்லி ஜாபகப் படுத்த வேண்டியது தானே. டெய்லி புல் மூனா இருக்க வேண்டியது தானே. ஒரு நாள் முழுசா இருக்கு, கொஞ்ச நாள் தேஞ்சு தேஞ்சு காணாம போயிடுது, கொஞ்ச நாள் வளந்து வளந்து கன்ஃப்யூஸ் பண்ணுது. எதுக்கு இதெல்லாம் ?

பூமி : எதிர்தரப்பில பேசும் சகோதரன் ஜூபிடர் சரியா சொன்னாரு. அதுக்கு காரணம் இருக்கு. பூமில இருக்கிற மக்களோட தேவை பல வகை. சிலருக்கு முழு நிலவு மாதிரி நிறைய வெளிச்சம் வேணும், சிலருக்கு மின்னல் மாதிரி ஒரு சின்ன கீற்று போதும். அதான் ஒளியில மாற்றம் வர காரணம்.

ஜூபிடர் : யுவர் ஆனர். பூமி எப்பவுமே சுத்தி வளச்சு மூக்கைத் தொட பாக்குது. குண்டுச் சட்டில குதிரை ஓட்டுது. என்னோட கேள்விக்கு பதில் வரல. ஏன் நிலா அப்படியே இருக்கக் கூடாது ? வளந்து, தேஞ்சு எதுக்கு வித்தை காட்டணும் ?

சன் : இது ரொம்ப முக்கியமான கேள்வி. அதனால நிலாவே இதுக்கு பதில் சொல்லட்டும்.

நிலா : உண்மை தான். வளரும்போ, எல்லோரும் இயேசுவின் அன்பை மத்தவங்க கூட பகிர்ந்து கொள்ளணும் எனும் பாடத்தை சொல்லித் தரேன். தேயும்போ, இயேசுவுக்காகப் பாடுகள் படணும் என்பதை மக்களுக்கு புரிய வைக்கிறேன். என்னைப் பின்பற்ற விரும்புகிறவன், தன்னையே வெறுத்து தன் சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றட்டும் என்பதை வாழ்ந்து காட்டறேன்.

ஜூபிடர் : என்னோட கடைசி கேள்வி யுவர் ஆனர். அப்படி நிலா ஒளி கொடுக்கணும்ன்னு நினைச்சா எப்பவும் ஒளி கொடுக்குமா ? கருமேகம் வந்து மறைக்கும்போ காணாம போயிடுதே !

பூமி : இது மிக முக்கியமான விஷயத்தைச் சொல்லுது. இயேசுவோட அன்பையும் மீட்பின் செய்தியையும் நாம பிறரோடு பகிர்ந்து கொள்ளும்போ தடைகள் மேகம் போல வரும். அது விலகிய பிறகு நிலவு மீண்டும் ஒளிதரும். மேகம் நிலவை மறைக்குமே தவிர அழிக்காது. இது தற்காலிகத் தடை, நிரந்தரப் பிரிவல்ல. இந்தத் தடைகளையெல்லாம் இயேசு மாற்றும்போது நிலவு மீண்டும் ஒளிரும்.

சன் : வாதங்கள் முடிவு பெறுகிறது. தீர்ப்பு வருகின்ற மூன்றாம் தியதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

 

குரல் : இன்று ஜூலை 3. இதோ தீர்ப்பு வாசிக்கப்படுகிறது. கேட்போம்.

சன் :

இருதரப்பு வாதங்களையும் கேட்டபின்பு தனது முடிவை அறிவிக்க இந்த சபை இங்கே கூடியிருக்கிறது. நிலவு ஒளி கொடுக்கக் கூடாது என ஜூபிடர் தொடர்ந்த வழக்கு தவறானதும், அடிப்படை ஆதாரமற்றதும், உள்நோக்கு கொண்டதுமாகும். நிலவு ஒளிரவேண்டியதன் தேவையை பூமியும் நிலவும் அழகாக எடுத்துரைத்தன. தன்னிடம் ஒளி இல்லாமல் இயேசுவின் ஒளியைப் பெற்று பிரதிபலிக்கும் நிலவு பாராட்டுக்கும், ஊக்குவித்தலுக்கும் உரியதாகும். அது மற்ற விண்மீன்களோடு சேர்ந்து ஒளியாற்றுவது இயேசுவின் பணியாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. இயேசுவின் ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக இருப்பதே சிறப்பானது.

எனவே நிலவு குற்றமற்றது. அது மிகச் சிறப்பான, மிகத் தேவையான பணியையே செய்து வருகிறது. இருளில் இருப்பவர்களுக்கு நிலவைப் போல ஒளிதருவதே தேவையானது. எனவே நிலா குற்றமற்றது என தீர்ப்பளிக்கிறேன். இப்படிப்பட்ட உள்நோக்கம் கொண்ட புகார்கள் அளிப்பதை ஜூபிடர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த மன்றம் அறிவுறுத்துகிறது. கோர்ட் டிஸ்மிஸ்ட்.

 

குரல் :

நிலவைப் போல தன்னை மறைத்து, இயேசுவின் அன்பின் ஒளியை மட்டுமே பிரதிபலித்து வாழ நீங்கள் தயாரா ?

( Adopted from an English Skit )

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s