Posted in Sunday School

Sunday’s School Skit : Solomon

Image result for King Solomon

சாலமோன் : கடவுளுக்குப் பலி செலுத்தணும், போலாம் வாங்க.
மக்கள் : எங்கே போகிறோம் அரசே
சாலமோன் : கிபியோனுக்குப் போலாம் வாங்க
மக்கள் : ஏன் மன்னரே கிபியோன் ? இங்கேயே நிறைய தொழுகை செய்யக் கூடிய இடங்கள் இருக்கிறதே !
சாலமோன் : ம்ம்.. ஆனாலும் கிபியோன் தான் எனக்கு ரொம்பவும் பிடித்தமான இடம்.
மக்கள் : ஏன் அப்படி ?
சாலமோன் : இது தான் ரொம்பப் பெரிய மேடை. தகன பலிக்கு சரியா இருக்கும்.
மக்கள் : எல்லா இடத்துலயும் தகன பலி செலுத்தலாமே.
சாலமோன் : செலுத்தலாம். ஆனா நான் ஆயிரம் சர்வாங்க பலி செலுத்தப் போறேன். அதுக்கு கிபியோன் தான் பெஸ்ட் !
மக்கள் : ஆயிரமா ? அப்போ சரி..
சாலமோன் : கடவுளுக்காக ஒரு நல்ல ஆலயம் கட்டணும், அதுவரை மேடைகளில் தான் பலியிடவேண்டியிருக்கு !

பின் குரல் : சாலமோன் கிபியோனில் ஆயிரம் சர்வாங்க பலிகளைச் செலுத்தினான். அன்று இரவு அவனுக்கு ஒரு கனவு.

Image result for King Solomon dream

கடவுள் : சாலமோன்… சாலமோன்….
சா : யாரது…
க : நான் தான் கடவுள்.
சா : கடவுளா ?

க : ஆம்.. நானே தான். என் மீது ரொம்பவே அன்பு வெச்சிருக்கே. ரொம்ப சந்தோசம். என்ன வேணும் கேள் தரேன்.
சா : எனக்கு எல்லாமே தந்திருக்கிறீரே கடவுளே ! என் தந்தை தாவீதை மிகப்பெரிய அரசராக்கினீர். அவருக்கு எல்லா ஆசீர்வாதங்களையும் கொடுத்தீர். அவருடைய அரியணையில் என்னையும் உட்கார வைத்து அழகு பார்த்தீர். இப்போது நீங்கள் என்னை அரசனாக்கியிருக்கிறீர். நான் என்ன கேட்கப் போகிறேன்.

க : நீ, நீடிய ஆயுளைக் கேட்கலாம். நீண்டகாலம் உயிர் வாழலாமே !
சா : வேண்டாம் கடவுளே. நீங்கள் எனக்கென எவ்வளவு ஆயுள் தரீங்களோ அது போதும் !

க : அப்போ நிறைய செல்வம் ?
சா : வேண்டாம் கடவுளே : எனக்கு நீங்கள் தந்திருக்கும் செல்வமே போதும்.

க : சரி, அப்படின்னா எதிரிகள் எல்லாரும் உன் முன்னால் மண்டியிட்டுத் தோற்றுப் போகும் வரம் கேட்கலாமே !
சா : அதுவும் வேண்டாம் ஆண்டவரே !

க : அப்போ என்ன தான் வேணும் ?
சா : கடவுளே நான் ஒண்ணுமே தெரியாத சின்னப் பையன். போக்கு வரவே தெரியாது. ஏகப்பட்ட ஜனங்களுக்கு மத்தியிலே என்னை வைத்திருக்கீங்க. இவங்களுக்கு நீதி வழங்கறது ஒரு பெரிய வேலை. அதுல தப்பு நடந்தா பெரிய பாவம். அதனால சிறப்பா நீதி வழங்கக் கூடிய இதயத்தை எனக்குத் தாருங்க. எது நன்மை எது தீமை, எது சரி, எது தப்பு ன்னு எனக்குத் தெரியற வரம் குடுங்க.

க : சாலமோன். ரொம்ப சந்தோஷம். நீ ரொம்ப நல்ல விஷயம் கேட்டிருக்கே.
சா : நன்றி கடவுளே.

க : நீ கேட்டது படியே உனக்கு வரம் தரேன். அது மட்டுமல்ல, இதுக்கு முன்னாடியோ, உனக்குப் பின்னாடியோ இப்படி ஒரு ஞானவான் இருக்கவே மாட்டான். நீ அந்த அளவுக்கு ஞானத்தில சிறந்து விளங்குவாய்.
சா : நன்றி கடவுளே. நீர் மிகவும் இரக்கமுடையவர்.

க : அது மட்டுமல்ல. நீ சரியான விஷயத்தைக் கேட்டிருக்கிறாய். அதனால செல்வமும், புகழும் உனக்கு கூடவே தரேன் ! நீ செல்வத்திலும், புகழிலும் நிரம்புவாய்.
சா : கடவுளே நீர் கருணை மிக்கவர்.

க : உன் அப்பா தாவீது போல நீ என் வழியில் நடந்தால் உனக்கு நீடிய ஆயுளும் தருவேன்.
சா : நன்றி கடவுளே.. நன்றி நன்றி.

( திடுக்கிட்டு விழிக்கிறான் )

Image result for King Solomon dream

சாலமோன் : ஆ.. இவ்வளவு நேரம் கண்டது கனவா ! கடவுள் தான் கனவில வந்து எனக்கு ஆசி வழங்கியிருக்காரு. உடனே எருசலேம் போணும். உடன்படிக்கைப் பேழை முன்னாடி போய் பலி செலுத்தணும் !
பின் குரல் : கடவுளின் அருளால், சாலமோன் ஞானத்தில் சிறந்து விளங்கினான்

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s