Posted in Vettimani

கேளுங்கள் தரப்படும்

Image result for mary the mother of jesus at the cross

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் பாரதி. அன்னையராய்ப் பிறப்பதற்கு அதை விடப் பெரிய மாதவம் செய்திட வேண்டும். அதுவும் இறைவனின் அன்னையாய்ப் பிறப்பதென்றால் எத்தனை பெரிய மாதவம் செய்ய வேண்டுமோ?

அன்னை மரியாள், இயேசுவின் அன்னை. இயேசு பூமியில் மனிதனாக வந்த போது கருவில் சுமந்து, உருவில் வளர்த்து, உலகிற்கு அளித்த உன்னத அன்னை ! ஒரு ஆன்மீகத் தாய் என்பதைத் தாண்டி, அன்னை மரியாளின் வாழ்க்கை பெண்களுக்கு ஊக்கமூட்டும் ஒரு வாழ்க்கையாக இருந்தது. இந்த மங்கையர் தினத்தின் அன்னையைப் பற்றிய சில சிந்தனைகளைப் பார்ப்போம்

துணிச்சலின் மொத்த உருவமாக அன்னை இருந்தார். திருமணத்திற்கு முன்பே தூய ஆவியினால் இயேசுவைக் கருத்தாங்க வேண்டும் என்பது இறைவனின் அழைப்பு. அதை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா ? மிகப்பெரிய குழப்பம். ஏற்றுக்கொள்ள‌ மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். உலகத்தினர் ஏளனமாய்ப் பேசுவார்கள். “கல்யாணத்துக்கு முன்பே கர்பமாம், இது கடவுளின் செயலாம்” என கேலிப் பேச்சுகள் ஒலிக்கும். என்கேஜ்மென்ட் வேற முடிஞ்சிருக்கு, கல்யாணம் நின்று போகலாம். என்ன செய்வது, ‘சாரி.. வேற ஒரு பொண்ணை பாருங்களேன்’ என தூதரை அனுப்பலாமா ? “சே.. ஆறு மாசத்துக்கு முன்னாடி வந்திருக்கலாமே.. எனக்கு அப்போ என்கேஜ்மென்ட் ஆகல’ என சொல்லலாமா ?

குழப்பத்தின் முடிவில், வென்றது அன்னை மரியாளின் ஆன்மீக மனம். துணிச்சலின் மனம் வென்றது. “நான் தாயாராகத் தயார்” என்றார். கருத்தாங்கிய ஒரே கன்னியாய் அவர் மாறினார். உலகத்தின் பேச்சுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நாம் செய்கின்ற செயல் நேர்மையானதா ? தவறு இல்லாததா ? ஆன்மீக ஆழம் சார்ந்ததா ? அப்படியெனில் தயக்கமே வேண்டாம். துணிச்சல் கொள்ளுங்கள் என்கிறது அன்னை மரியாளின் வாழ்க்கை.

அன்னை கடின உழைப்பாளியாய் இருந்தார். தச்சுத் தொழிலைச் செய்யும் கணவருக்குப் பணிவிடை செய்தார். தாய்மை நிலையில் இருக்கும் போதே, பல மைல் தொலைவு நடந்து தனது உறவினரைச் சந்தித்தார். அவரும் தாய்மை நிலையில் இருந்தார். எனவே அங்கேயே மூன்று மாத காலங்கள் தங்கி அவருக்குத் தேவையான உதவிகள் செய்தார். அன்னை, இளகிய மனமும், கடின உழைப்பும், உறவுகளை உதறாத தன்மையும் கொண்டிருந்தார் என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய சான்று !

மரியாள் புரட்சிப் பெண்ணாய் இருந்தார். அவர் ஒரு புரட்சிப் பாடலையும் பாடினார். இறைவனைப் புகழும் பாடலில் கூட, “”உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்” என புரட்சிச் சிந்தனைகளைப் பாடியவர் அன்னை மரியாள். மங்கையரின் சிந்தனைகளில் புரட்சிகர சிந்தனைகள் இருக்க வேண்டும் என்பதை மரியாளின் வாழ்க்கை ஊக்குவிக்கிறது.

இறுதிவரை இயேசுவோடு இருந்தவர் அன்னை மரியாள். சிறுவனாக இருந்த போது ‘அறிவிலும், உடல் வளர்ச்சியிலும்’ இயேசுவை வளர்த்தியவர். இயேசுவின் புதுமை வாழ்வை தொடங்கி வைத்தவர். பின் இயேசுவின் பணி தீவிரமடைந்தபோது மகனை தூரத்திலிருந்து பார்த்து வாழ்ந்தவர். மகன் அடித்துக் கொல்லப்பட்ட போது அருகில் இருந்து கலங்கியவர் என அன்னை மரியாள் மகனோடு பின்னிப் பிணைந்து ஒரு பாசத் தாயாக பரிமளிக்கிறார். ஒரு தாய்க்கும், மகனுக்கும் இடையேயான அற்புத பந்தத்தின் பிரமிப்புப் பயணமாக அன்னையின் வாழ்க்கை இருந்தது.

மங்கையர் தினம் கொண்டாடும் இந்த  மாதத்தில், அன்னை மரியாளின் இத்தகைய உயரிய குணாதிசயங்களை சிந்திப்போம். நமது வாழ்வை வளமாக்குவோம்

*

 

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s