Posted in Articles

மார்த்தா மரியா & 10 சிந்தனைகள்

மார்த்தா மரியா கதை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும்.

Image result for martha maria bible

லூக்கா 10 : 38-42

இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. 39அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். 40ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார். 41ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 42ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்

****

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நாம் மார்த்தா செய்தது தப்பு, மரியாள் செய்தது சரி என சொல்வோம். காரணம் இயேசுவே சொல்லிவிட்டார் “மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள்” என்று.

மார்த்தாள் மரியாள் – எனும் இரண்டு கதாபாத்திரங்களும் நமக்கு கிறிஸ்தவத்தைப் பற்றிய பல்வேறு சிந்தனைகளை உருவாக்குகின்றன.

மார்த்தாள் மரியாள் எனும் இரண்டு கதாபாத்திரங்கள் மூலமாக கடவுள் எத்தகைய நபராக நாம் உருமாற வேண்டும் என்பதைப் போதிக்கிறார். இன்று நான் ஒரு பத்து சிந்தனைகளை முன் வைக்க விரும்புகிறேன்.

1. முக்கியத்துவம் !

மார்த்தாள் – உலகப் பிரகாரமான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு பெண்.

மரியாள் – கடவுளுக்கு அடுத்த காரியங்களில் ஈடுபட்டிருக்கக் கூடிய ஒரு பெண். “கடவுளுக்குரியதைத் தேடினால், மற்ற செல்வங்கள் எல்லாம் தானே வந்து சேரும்” எனும் கிறிஸ்தவ சிந்தனையின் வெளிப்பாடு மரியாள்.

2. நம்பிக்கை !

இயேசு வீட்டில் இருந்தபோது மார்த்தாளுடைய சிந்தனைகள் சப்பாத்தி தயாரிப்பதில் தான் இருந்தது. அவள் ஒரு சாதாரண பெண் போல அந்த இடத்தில் செயல்பட்டாள். அவள் செய்த தப்பு என்ன ? இயேசுவுக்கும், கூட பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் ( அப்படி இருந்தாங்களான்னு தெரியாது ) அப்பம் தயாரிப்பது தப்பா ?

– சட்டுன்னு கேட்டா “இல்லை” ன்னு சொல்லுவீங்க. அதையே கொஞ்சம் மாத்திக் கேக்கறேன்.

“ஐந்து அப்பத்தை ஐயாயிரம் பேருக்குக் கொடுக்கக் கூடிய வல்லமை படைத்த இயேசு இருக்கும்போ அவருடைய பேச்சைக் கேட்காமல் அப்பம் சுட்டுக் கொண்டிருந்தது சரியா தப்பா ?” – இப்போ கொஞ்சம் சிந்திக்கிறோம் இல்லையா ?

கடவுள் அருகிலேயே இருக்கும் போது கடவுளின் கால்களைப் பற்றிக் கொண்டிருப்பது தானே முக்கியம் ? அதை விட்டு விட்டு கடவுள் எளிதாய் தீர்க்கக் கூடிய பிரச்சினையைத் தன் தோள் மேல் தூக்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன ?

கடவுள் அருகே இருக்கும் போது “ஐயோ சப்பாத்தி இல்லையே”, “ஐயோ.. மூழ்கிப் போகிறோமே” என்று கத்தினால், கடவுள் “அற்ப விசுவாசியே” என்று தான் சொல்லுவார்.

3. குறை சொல்லுதல்

கடவுளுக்குப் பிடிக்காத ஒரு விஷயம் குறை சொல்லுதல். பழி போடுதல். ஆதாம் கனியைத் தின்றுவிட்டு பழியைத் தூக்கி ஏவாள் மேல் போட்டான், ஏவாள் பாம்பின் மேல் போட்டாள் ! அடுத்தவர் மீது பழிசொல்தலும், குறை சொல்வதும் அங்கே ஆரம்பமாச்சு !

பைபிளின் பக்கங்கள் முழுதும் குறை சொல்வதற்கு எதிரான விஷயங்களே இருக்கின்றன. இவன் பாவம் செய்தான், இவள் பாவம் செய்தாள், இவர்கள் ஓய்வு நாளில் இதைச் செய்தார்கள், அதைச் செய்தார்கள். என பழி போட்ட பரிசேயர்கள் கடவுளின் பார்வைக்கு எதிரானவர்கள்.

மார்த்தாள் இங்கே மரியாள் மீது குறை சொல்கிறாள். “எனக்கு உதவியே செய்யாம வெட்டியா உக்காந்திருக்காளே… அவளை வரச் சொல்லுங்க” என்கிறாள்.

குறை சொல்லும் பழக்கம் மிகவும் மோசமானது. பிறரை கரிச்சுக் கொட்டிட்டே இருக்கும் மக்கள் நிறைய பேர் உண்டு. அவர்களெல்லாம் மார்த்தா கேஸ். அவர்களைப் போல நாம இருக்கக் கூடாது.

4. கோபம் !

மரியாளின் மீது முதலில் மார்த்தாவுக்குக் கோபம் வருகிறது. பின் அந்தக் கோபம் இயேசுவின் மீது கூட பாய்கிறது ! நான் கஷ்டப் படறேன் எனக்கு அவ ஹெல்ப் பண்ணவே இல்லை எனும் கோபம் ஒன்று. அப்படி இருக்கிற மரியாளை இயேசு கண்டிச்சு என்கிட்டே அனுப்பலே எனும் கோபம் இரண்டாவது.

“உமக்கு அக்கறையே இல்லையா ?” எனும் கேள்வி மார்த்தாவுக்கு உரியது. கடவுள் பிரார்த்தனைக்கு செவி கொடுக்கலையா, சுகம் கிடைக்கலையா, பொருளாதாரம் கிடைக்கலையா, வரங்கள் கிடைக்கலையா.. நாம “கடவுளே உமக்கு அக்கறையில்லையா ? ” எனக் கேட்டால் நாம் மார்த்தாவின் குணாதிசயத்தைக் கொண்டிருக்கிறோம்.

5. தேவையற்ற கவலை.

“எதை உண்போம், எதைக் குடிப்போம்” என கவலைப்படாதீர்கள். என்கிறார் இயேசு. எனவே அந்தக் கவலைகளை விட முக்கியமான கவலை கடவுளோடு ஒன்றித்து இருத்தல் தான். அந்த உண்மையை உணரவேண்டும்.

“மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள்,அது அவளிடமிருந்து எடுக்கப் படாது” என்கிறார் இயேசு. தேவையற்ற கவலைகள் நமக்கு நல்ல விஷயங்கள் கிடைப்பதைத் தடுக்கிறது.

6. பாதம் பணிதல்

மரியாள் இயேசுவின் பாதப் படிகளில் பணிந்து இருப்பதையே விரும்பியவள்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் இயேசுவின் பாதங்களில் பணிந்து விலையுயர்ந்த தைலத்தால் அவருடைய பாதங்களைக் கழுவுகிறாள்.

லாசர் இறந்தபின் இயேசு வருகிறார். “லாசர் உயிர்த்தெழுவான்” என இயேசு சொல்லும் போது “இறுதி நாளில் எல்லோரும் உயிர்த்தெழும் போது அவனும் உயிர்த்தெழுவான்” என்று எனக்கும் தெரியும் என்கிறாள். மார்த்தாளின் மனநிலை “பிராக்டிகல்” மனநிலை. எழுதப்பட்டவை நடக்கும் என நம்புவது. கணித சூத்திரம் போல. அதைத் தாண்டிய நம்பிக்கை இயல்பின் இல்லை.

மரியாளோ, இயேசுவைக் கண்டதும் முதலில் காலில் தான் விழுகிறாள். ! பணிதலும், பணிவும் மரியாள் குணாதிசயங்கள் என்பதை அங்கும் காண்கிறோம்.
7. சராசரிப் பெண் மார்த்தாள்.

மார்த்தாள் ஒரு சராசரிப் பெண்ணாக இருந்தாள். அந்தக் காலகட்டத்தில் பொது இடத்தில் ஆண்களோடு அமர்வதும், தோரா எனும் கடவுள் வார்த்தையைக் கேட்பதும் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது என்கின்றனர் விவிலிய வல்லுனர்கள். அதைத் தாண்டி மன வலிமையும், அதீத நம்பிக்கையும் உடையவர்களே அத்தகைய செயல்களையெல்லாம் செய்தார்கள்.

மரியாள் அப்படி வித்தியாசப்படுகிறாள். அவள் இயேசுவின் பாதத்தருகே அமர்கிறாள். ஆர்வமாய் சொல்வதையெல்லாம் கேட்கிறாள்.

மார்த்தாள் ஒரு சராசரிப் பெண்ணாக உலவுகிறாள். அடுப்படியில் அடங்கி விட முயல்கிறாள். அத்துடன் நிற்காமல் தனது சகோதரியையும், பழைய கலாச்சாரத்துக்குள் அடங்கி விடுவதற்காக பலவந்தப் படுத்துகிறாள்

8 அற்புதங்களில் நம்பிக்கையற்ற மனநிலை.

லாசர் இறந்து விடுகிறார். அந்தக் கதை எல்லோருக்கும் தெரியும். இயேசு “கல்லை அகற்றிவிடுங்கள்” என்று சொல்லும் போது, மார்த்தாள் என்ன சொல்கிறாள். “நாலு நாள் ஆச்சே நாற்றம் அடிக்குமே” என்கிறாள்.

இத்தனைக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு தான், “உயிர்ப்பும் உயிரும் நானே” என்று இயேசு சொன்னார். அதற்கு மார்த்தா ‘நீரே மெசியா” என்று பதிலும் சொன்னாள். ஆனால் அதெல்லாம் வெறும் வார்த்தைகள். உண்மையில் அவள் நம்பவில்லை. ஒரு அற்புதம் நடக்கும் என்பதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை.

அதே நேரம் மரியாளைப் பாருங்கள். இயேசுவின் காலடியில் விழுகிறாள். இயேசு நெகிழ்கிறாள். “நீர் இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்கிறாள். மிச்சத்தை இயேசுவிடமே விட்டு விடுகிறாள். !

9. அழைத்தலுக்காக காத்திருத்தல்

கொஞ்சம் அழகான சிந்தனை இது. இலாசர் இறந்த போது இயேசு வந்தார். இயேசுவின் வருகையை அறிந்ததும் மார்த்தாள் ஓடுகிறாள். பதறுகிறாள். மரியாளோ வீட்டில் இருக்கிறாள். உள்ளத்தில் செபத்தோடு இருந்திருக்க வேண்டும்.

“இயேசு அழைக்கிறாள்” என்று சொன்னபின்பு தான் ஓடுகிறாள். இயேசுவின் பாதம் பணிகிறாள். அதாவது இயேசுவின் அழைத்தலுக்காக பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்கிறாள் மரியாள். அழைத்தல் வந்தபின் அவள் நம்பிக்கையில் நிலைத்திருக்கிறாள்.

பயம், அச்சம், பதட்டம் இவையெல்லாம் இல்லை மரியாளிடம். கவலையும், நம்பிக்கையும் இருந்தது.
மார்த்தாளும், மரியாளும் இருவருமே இறைவனை நேசித்தார்கள். அவரை நம்பினார்கள். ஆனால் இரண்டு பேரிடமும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். மார்த்தா ஒரு சாதாரண உறுப்பினர் – இயேசுவின் சீடர்களில். ஆனால் மரியாளோ ஆழமான விசுவாசம் கொண்டவள் !

நாம் இயேசுவின் அழைப்புக்காகக் காத்திருக்க வேண்டும். அழைப்பை உறுதி செய்தபின் அவரில் நிலைத்திருக்கவேண்டும் எனும் பாடமும் இதனுள் ஒளிந்திருக்கிறது ! இல்லையா ? அழைப்பைக் கேட்டதும் விரைவாகச் செயல்படுகிறாள் மரியாள். ஓடிச் சென்று இயேசுவின் பாதத்தில் விழுகிறாள். !

10. வேறுபாடு, முன்னுரிமை இயேசுவிடம் இல்லை.

மார்த்தா மரியாள் – இருவரில் மூத்தவர் மார்த்தா என்கின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். காரணம் அவர் தான் ஒரு முறை இயேசுவை வரவேற்கிறார். எல்லாவற்றையும் முன் நின்று செய்கிறார். அதிகாரத் தோரணை இருக்கிறது.

லாசரைப் பற்றிய பேச்சே அதிகம் பைபிளில் இல்லை ! அவர் உயிர்த்தபின் கூட என்ன பேசினார் என்பதெல்லாம் இல்லை. அவர் இயேசுவின் மீதான விசுவாசத்தில் இருந்தாரா என்பதும் தெரியாது.

மரியாள் இளையவள். ஆனால் முழுக்க முழுக்க இயேசுவில் சரணடைகிறார். எனவே இயேசுவின் பிரியத்துக்குரியவர் ஆகிறார்.

நான் ஆண் என்பதாலோ, நான் சபையின் மூத்தவர் என்பதாலோ நமக்கு இயேசு முன்னுரிமை தருவதில்லை. தனிநபர் எப்படி இறைவனில் இணைகிறார் என்பதே முக்கியம். இதை இந்த நிகழ்வுகள் நமக்கு சொல்லித் தருகின்றன.
இப்போது நாம் கொஞ்சம் சிந்திப்போம் !

மார்த்தா, மரியா – எந்த கதாபாத்திரத்தை நம்மிடமிருந்து இயேசு எதிர்பார்க்கிறார். சிந்திப்போம்… நல்ல பங்கைத் தேர்ந்து கொள்வோம்

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s