( நான்கு மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் )
மாணவர் 1 : மச்சி.. எக்ஸாம்ன்னாலே வயித்துல புளியைக் கரைக்குதுடா..
மாணவர் 2 : ஆமாடா.. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு ! படிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு.. இதையெல்லாம் எப்போ படிச்சு.. எப்போ முடிச்சு.. எப்போ பரீட்சை எழுதின்னு ஒரே டென்ஷனா இருக்கு !
மா 3 : அதென்னமோ தெரியலடா… கடற்கரையில தோண்டத் தோண்ட மண்ணு வந்துட்டே இருக்கிற மாதிரி, படிக்கப் படிக்க பாடம் புதுசு புதுசா வந்துட்டே இருக்குடா…
மா 1 : அதுவும் பத்தாவது பக்கம் படிக்கும்போ எட்டாவது பக்கம் மறந்து போயிடுது. மேக்ஸ் போடும்போ சயின்ஸ் சைலன்டா ஓடிடுது… என்ன பண்றதுன்னே தெரியல…
மா 2 : ஆமா.. வீட்ல வேற மூட்டை மூட்டையா மார்க் கொண்டு போகலேன்னா மூட்டைப் பூச்சி மாதிரி நசுக்கி போட்டுடுவாங்க..
மா 3 : அதுல கம்பேரிசன் வேற பண்ணி சாவடிப்பாங்க…
மா 4 : ஓவரா பில்டப் குடுக்காதீங்கடா… ஏதோ கொலை கேசுக்கு தீர்ப்பு வர மாதிரி பில்டப் குடுக்கறீங்க ! எக்ஸாம் தானேடா ? கூலா இருங்க…
மா 1 : மச்சி.. உனக்கு டென்ஷனா இல்லையா ? இது பப்ளிக் எக்ஸாம்டா !
மா 4 : பப்ளிக் எக்ஸாம்ன்னா என்ன ? போய் பப்ளிக் ல உக்காந்த எழுத போறே..படிச்சதை எழுதப் போறே அவ்ளோ தானே… ரிலாக்ஸா இருடா !
மா 2 : நல்ல மார்க் வரலேன்னா மெடிகல் சீட் எல்லாம் கிடைக்காதுடா.
மா 4 : சோ..வாட். ? எல்லாரும் டாக்டரா இருந்தா எஞ்சினீயருக்கு ஏங்கே போவீங்க ? சயின்டிஸ்ட்க்கு எங்க போவீங்க ? எல்லா மியூசிக் சிஸ்டமும் கீ போர்டா இருந்தா வயலின்க்கு எங்க போவீங்க. ஏழு கலர் இருந்தா தாண்டா வானவில்… ஒரே கலரா இருந்தா அதுக்கு பேரு வானவில்லா ?
மா 3 : நீ மட்டும் எப்படிடா இவ்ளோ கூலா இருக்கே ? ஜாலியா பேசறே ?
மா 4 : முதல்ல நான் கடவுளை நம்பறேன்டா.. அவரு நமக்காக ஒரு வழியை ஆயத்தப்படுத்தி வெச்சிருப்பாரு. நாம நம்ம கடமையை சின்சியரா செய்யணும் அவ்ளோ தான். அவரு நம்மை அவருக்குத் தேவையான ரூட்ல கூட்டிட்டு போவாரு ! தட் வில் பி த பெஸ்ட் !
மா 2 : அதெப்படிடா… ? இவ்ளோ சிம்பிளா சொல்லிட்டே ?
மா 4 : ஆமாடா.. திருவிழாவுக்கு போற குழந்தை அப்பா கையைப் புடிச்சிட்டு போறது மாதிரி தான் இது ! அப்பாவோட கைப் பிடி இருக்கிறவரைக்கும் நமக்கு ஒரு தைரியம் இருக்கும்ல அதே மாதிரி தான். கடவுளோட கையைப் புடிச்சுட்டா அப்புறம் கவலையே இல்லை !
மா 1 : அப்புறம் நாம எதுக்குடா படிக்கணும் ? அவரே நம்மை ஜெயிக்க வைக்க வேண்டியது தானே ?
மா 4 : இங்க தான் ஒரு மேட்டர் இருக்கு ! கடவுள் எதையும் மனுஷனோட பங்களிப்பு இல்லாம செய்றதில்லை. நாம ஒரு அடி எடுத்து வெச்சா, அவரு நம்மை நூறு அடி கூட்டிட்டு போவாரு. ஆனா சோம்பேறியா சுருண்டு கிடக்கிறவனை அவரு கண்டுக்கிறதில்லை.
மா 1 : அதெப்படி அவ்ளோ உறுதியா சொல்றே ? ஏதோ பக்கத்துல இருந்து பாத்தவன் மாதிரி ?
மா 4 : டேய் நான் இயேசுவை நம்பறவன். அவரோட புதுமைகளை எல்லாம் எடுத்து பாத்தாலே இது தெரியும். உதாரணமா மனுஷன் ஊத்துன தண்ணீரை இயேசு திராட்சை ரசமா மாத்தினாரு, மனுஷன் கொடுத்த ரெண்டு அப்பத்தை ஐயாயிரம் பேருக்கு தேவையான அளவா மாத்தினாரு இப்படி நம்ம பாகத்தை நாம செஞ்சா அவர் நம்மை ஜெயிக்க வெச்சிடுவாடு.
( மாணவர் 2 திடீரென நெஞ்சு வலி வந்தது போல பாவனை காட்டுகிறார். )
மா 1 : டேய்… என்னடா ஆச்சு திடீர்ன்னு ?
மா 2 : நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குடா…
மா 3 : ஓ.. மை காட்… உடனே டாக்டருக்கு போன் பண்ணுடா…
மா 2 : நோ.. கால் மை டாட்.. ஹீ ஈஸ் எ டாக்டர்..
மா 1 : யா.. மறந்துட்டேன்.. உடனே உன் அப்பாவுக்கு போன் பண்றேன்.
***
காட்சி 2
( ஹாஸ்பிடல் வரண்டா )
மா 1 : என்னடா இப்படி ஆயிடுச்சு ? பயமா இருக்கு
மா 4 : பயப்படாதீங்கடா ? எதுக்கெடுத்தாலும் ஏன் பயப்படறீங்க ? நாம கடவுளோட கண்மணிகள், அவர் நம்மை நல்லா பாத்துப்பாரு.. டோன்ட் வரி
மா 3 : இப்போ எக்ஸாம் டென்ஷன் போயி, இவனோட ஹெல்த் பத்தி டென்ஷன் ஆயிடுச்சு.
மா 1 : நல்ல வேளை அவனோட அப்பாவே டாக்டரானதால நமக்கு ரிலாக்ஸா இருக்கு !
மா 4 : அதுல என்னடா ரிலாக்ஸ் ?
மா1 : டேய்.. அது அவன் அப்பாடா.. அவனை அவரை விட நல்லா யாரு கவனிக்க முடியும் ? டிரீட் பண்ண முடியும் ?
மா 4 : அப்போ நீ அவரை நம்பறே ?
மா 1 : லூசாடா நீ… ஹிஸ் டாடி….. ஹி ஈஸ் இன் சேஃப் ஹேன்ட்ஸ் !
மா 4 : ஹா..ஹா.. அதைத் தாண்டா நான் உங்க கிட்டே படிச்சுப் படிச்சு சொல்லிட்டிருக்கேன். நாம கடவுளோட கைல இருக்கும்போ, வி ஆர் இன் சேஃப் ஹேன்ட்ஸ். அதை நம்ம புரிஞ்சுக்கணும் அவ்ளோ தான்.
மா 1 : கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுடா…
மா 4 : அவனுக்கு நெஞ்சு வலி வந்ததும் ஏன் அவன் அப்பாவை கூப்பிட சொன்னான் ?
மா 1 : ஏன்னா அப்பா மேல நம்பிக்கை, பாசம், அவரு என்ன பண்ணியாச்சும் அவனைக் காப்பாத்துவாருன்னு அவனுக்கு கண்டிப்பா தெரியும்
மா 4 : அதே தான். அதே நம்பிக்கையை நாம கடவுள் கிட்டே வெச்சா போதும். நமக்கு நாளைக்கு என்ன நடக்கும்ன்னு தெரியாது ? ஆனா நாம பிறக்கிறதுக்கு முன்னே எங்கே இருந்தோம், இறந்தப்புறம் எங்கே போவோம், வாழும்போ என்ன ஆவோம் எல்லாம் தெரிஞ்சவர் கடவுள் ஒருத்தர் தான். அவரை நம்பினா என்ன கவலை ?
மா 3 : நீ சொல்றதும் சரிதான்டா ! பைலட்டை நம்பி பிளைட்ல போறோம். அதே மாதிரி கடவுளை நம்பி வாழ்க்கைல போணும்ன்னு சொல்றே ! அப்படி தானே !
மா 4 : கரெக்ட் ! பைலட்டை நம்பாம வீட்லயே இருந்தா போக வேண்டிய இடத்துக்கு போக முடியாது ! நம்பி போனா, போக வேண்டிய இடத்துக்கு போய் சேரலாம். தண்ணிக்கு பயந்து தரையில நிக்கிறவன் என்னிக்குமே நீச்சல் கத்துக்க முடியாது. பயத்தை விட்டுடணும், கடவுளை நம்பி போணும் அவ்ளோ தான்.
மா 3 : உண்மை தான்டா… எக்ஸாம் எல்லாம் லைஃப்ல ஒரு சின்ன பாகம். நம்ம முழு எனர்ஜியை குடுத்து படிக்கணும். அவ்வளவு தான் நாம செய்ய வேண்டியது. மிச்சத்தை கடவுள் கிட்டே விட்டுடணும். அவரு பாத்துப்பாரு.
மா 4 : சூப்பர்டா.. இப்போ தான் நீ கரெக்டான லைனுக்கு வரே. ஒரே ஒரு விஷயம் மட்டும் மிஸ்ஸிங்… எது செய்றதுக்கு முன்னாடியும் அப்பா கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்றது தானே நல்ல பிள்ளைக்கு அடையாளம். அதே மாதிரி நாமளும் படிக்கிறதுக்கு முன்னாடி, “ஏசப்பா.. படிக்க போறேன்..நல்ல கான்சன்ட்ரேஷன் குடுங்க.. புரிய வையுங்க” ந்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு படிக்க ஆரம்பிச்சா எல்லாம் சூப்பரா புரியும் ! இதை தான் நாங்க ஜெபம் ந்னு சொல்லுவோம். கடவுள் கிட்டே பேசறது.
மா 1 : ம்ம்.. இன்ட்ரஸ்டிங்…. வேற என்னடா பண்ணணும் ?
மா 4 : நேர்மையா இருக்கணும்டா… கடவுள் நேர்மையை மட்டுமே விரும்பறவரு. மார்க்குக்கு ஆசைப்பட்டு எந்த தப்பான வழியில போனாலும் அது நமக்கு நல்லது கிடையாது. அப்புறம் கடவுள் நம்மளை கை விட்டுடுவாரு. நூலு கையில இருக்கிற வரைக்கும் தான் பட்டம் சரியான வகையில பறக்கும். நாம நூல விட்டுட்டோம்ன்னா முதல்ல பட்டம் வேகமா போற மாதிரி தெரியும். ஆனா கொஞ்ச நேரத்துலயே தலை கீழா விழுந்து கிழியும், அழியும். நேர்மையா இல்லேன்னா, கடவுளுக்கு பிடிக்காது. அவ்ளோ தான்.
மா 1 : ரொம்ப நன்றிடா.. தேவையில்லாம பயப்படறதை விட்டுட்டு, நம்ம வேலையை கரெக்டா பண்ணிட்டு, கடவுள் கிட்டே நம்மை சரண்டர் பண்ணினா எல்லாம் நிம்மதியா இருக்கும்ன்னு சொல்ல வரே.. சரி தானே ?.
மா 4 : பக்காவா சொன்னே.. நம்ம சக்தியில எல்லாத்தையும் செய்யணும்ன்னு நினைக்கிறது எலி வால்ல சிங்கத்தை கட்டி இழுக்கிற மாதிரியான விஷயம். ஆனா கடவுள் சக்தியால எல்லாத்தையும் செய்ய நினைக்கிறது, சிங்கத்து வால்ல எலியைக் கட்டி இழுக்கிற மாதிரி. எது ஈசியா நடக்கும்ன்னு உனக்கே தெரியும்
மா 3 : ஹா..ஹா.. ஏதாச்சும் எக்ஸாம்பிள் சொல்லிட்டே இருக்கேடா நீ… ஆனா மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸா இருக்கு.
( அப்போது மா 2 வருகிறார் .. எல்லோரும் ஓடிப் போய் அவனை பார்க்கின்றனர் )
மா 1 : டேய் மச்சி.. ஒண்ணும் பிரச்சினை இல்லையே ?
மா 2 : நத்திங் டா.. எல்லா டெஸ்டும் எடுத்துட்டாங்க… நோ இஸ்யூஸ்…
மா 1 : சூப்பர் டா… தேங்க் காட்…
மா 2 : ஹாஸ்பிடல் ரூம்ல ஒரு பழமொழி பாத்தேன் “வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்” ந்னு இருந்துச்சு.. அது எனக்கு செம தைரியம் குடுத்துச்சு டா
மா 4 : அது பழமொழி இல்லடா.. பைபிள் வசனம். யோசுவா 1:9 ல இருக்கு. சரியான இடத்துல தான் மாட்டி வெச்சிருக்காங்க.
மா 2 : அதை படிச்சதும் எனக்கு செம தைரியம் வந்துச்சு. எக்ஸாம் கூட எனக்கு இப்போ பயமில்ல டா… காட் ஈஸ் வித் மி.
மா 4 : நாங்க அதைப் பத்தி தான் பேசிட்டிருந்தோம். உனக்கும் நல்ல கான்பிடன்ட்ஸ் வந்ததுல சந்தோசம் டா. விதைக்கிறது தான்டா நம்ம வேலை, அதை சரியா பண்ணுவோம். அதை முளைக்கச் செய்றது கடவுளோட வேலை. அவர் மேல நம்பிக்கை வைப்போம். அவ்ளோ தான்.
மா 3 : சுருக்கமா சொல்லணும்ன்னா… கடமையைச் செய், கடவுளோடு செய் ! அவ்ளோ தான்டா லைஃப் !
( எல்லோரும் சிரிக்கிறார்கள் )
*