Posted in Articles

குடும்பம் என்பது இறை திட்டம்

 Image result for godly family

குடும்பம் என்பது இறைவனின் திட்டத்தில் முதலிலேயே உருவான ஒன்று. ஆதியில் இறைவன் ஆதாமையும் ஏவாளையும் படைத்தபோதே அந்த திட்டம் இறைவனின் சிந்தையில் இருந்தது. “பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்” என்கிறது விவிலியம். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, குடும்பம் என்பது இறைமகன் இயேசுவின் திட்டங்களில் ஒன்று என்பது விளங்குகிறது.

குடும்பத்தை இறைவன் முன்னிலைப்படுத்தியதால் தான், இந்த உலகில் வந்த போதும் ஒரு குடும்பத்தில் பிறந்தார். மானிடராக திருக்குடும்பத்தின் அங்கமாக வாழ்ந்தார்.

குழந்தைகள் இறைவனால் நமக்குத் தரப்பட்டிருக்கும் கொடை. அவர்களை நல்ல முறையில் வளர்த்தும் பொறுப்பு நமக்கு தரப்பட்டிருக்கிறது. அவர்களை நல்லமுறையில் வளர்த்தாத போது நாம் கடவுளின் விருப்பத்துக்கு மாறாக நடக்கிறோம் என்று பொருள்.

பிள்ளைகள் நாம் சொல்வதைக் கேட்பதில்லை.
நாம் செய்வதைக் கவனிக்கிறார்கள்.

ஆயிரம் அறிவுரைகள் சொல்வதை விட
ஒரு செயலைச் செய்து காட்டுவதே குழந்தைகள் மனதில் தங்கும்.

வீட்டுக்கு வருகின்ற ஏழைகளை எல்லாம் அடித்து விரட்டி விட்டு, ஈகையைப் பற்றிப் போதித்தால் அவர்கள் அதைக் கற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பெற்றோரையும், பெரியோரையும், முதியோரையும் நாம் சகட்டு மேனிக்கு திட்டி விட்டு
பெரியோரை மதிக்க வேண்டுமென பாடம் எடுத்தால் அது குழந்தைகளுக்குப் புரியாது.

எனவே முதலில் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். பிறகு பேசிக் காட்ட வேண்டும். நமது பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தம் இல்லையேல் நம்மால் அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாய்க் கட்டியெழுப்ப முடியாது.

குழந்தைகளை ஆரோக்கியமாய்க் கட்டியெழுப்பும் வேலையைப் பெற்றோர் செய்யும் போது,
ஆன்மீகத்தில் கட்டியெழுப்பும் வேலையை மறைக்கல்வி ஆசிரியர்கள் செய்கின்றனர்.

வாழ்க்கையில் எது தேவை, எது தேவையில்லை, எதைத் தேட வேண்டும், எதைத் தேடக் கூடாது என்பதை இறைமகன் இயேசுவின் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்த பணியைத் தான் மறைக்கல்வி ஆசிரியர்கள் செய்கின்றனர்.

நல்ல குடும்பங்களைக் கட்டியெழுப்புவது பெற்றோரின் பணி
நல்ல இறைப் பிள்ளைகளைக் கட்டியெழுப்ப வேண்டியது மறைக்கல்வி ஆசிரியர்களின் பணி.

இந்த நேரத்தில் குழந்தைகளை இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வளர்த்துவதில் பெற்றோர் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1. விவிலியம் வாசியுங்கள் !!

கொஞ்சம் இன்னிக்கு என்னென்ன பண்ணினோம்ன்னு யோசிச்சு பாருங்க ? வீட்டில இந்தியா பாகிஸ்தான் மேட்ச் இன்னிக்கு. அதனால இங்க கூட கூட்டம் கம்மி. எட்டு மணி நேரம் உக்காந்து பாக்கிறோம் ! டிவி சீரியல் குறைஞ்சது ஒரு மணி நேரம் ! அரட்டை, தூக்கம், பேப்பர் வாசிக்கிறது இப்படி எவ்வளவோ விஷயம்.

பைபிள் வாசிச்சீங்களா ? எவ்வளவு நேரம் வாசிச்சீங்க ? அதெப்படியோ தெரியல. பைபிள் வாசிக்கும்போ மட்டும் ஒரு அதிகாரம் வாசிக்கிறதே பெரிய வேலையா தோணும். அதுக்கு தேவை பத்து நிமிஷம் தான்.

கிறிஸ்தவத்தின் அடிப்படை, இறை வார்த்தைகள். நம்ம பிள்ளைகளும், நாமும் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது இறை வார்த்தைகளைப் படித்து தியானிக்க வேண்டும். தினமும் ஒரு வசனமாவது குழந்தைகள் மனப்பாடம் செய்யச் சொல்லுங்கள். ஒரு வருடத்திற்கு அவர்கள் 365 வசனங்கள் படித்திருப்பார்கள்.

2. நல்வழி பழக்குங்கள்.

நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார்.என்கிறது நீதிமொழிகள் 22:6. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். அதை நீதி மொழிகள் நமக்கு இன்னும் விளக்கமாகச் சொல்கிறது.

நல்ல வழிகளில் பிள்ளைகளைப் பழக்குவது என்பது என்ன ? நல்லா படிக்க வெச்சு, பெரிய வேலையில் சேர்த்து விடுவதல்ல. அவர்களை இறைமகன் இயேசு சொன்ன போதனைகளின் படி வாழப் பழக்குவது.

மன்னிக்கும் மனதோடு குழந்தைகளை வளர்ப்பது.
ஈகைக் குணத்தோடு பிள்ளைகளை வளர்ப்பது
மனித நேயத்தோடு பிள்ளைகளை வளர்ப்பது.

இப்படி இறைவனின் படிப்பினைகளின் அடிப்படையில் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

3. எரிச்சல் மூட்டாதீர்கள், கண்டியுங்கள் !

“தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள். ( எபேசியர் 6:4 ).

பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு இந்த வசனம் ஒரு மிகப்பெரிய வழிகாட்டி. பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டக் கூடாது. கோபம் மூட்டக் கூடாது என்கிறது பைபிள். அதே நேரத்தில் அவர்களை கண்டிக்க வேண்டும், அறிவு புகட்ட வேண்டும் என்கிறது.

பிள்ளைகளை கண்டிக்கும் போது அது அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் அமைய வேண்டும். டீயை கொட்டிட்டான், கண்ணாடியை உடச்சுட்டான், நிம்மதியா இருக்க விடமாட்டேங்கறான் என்று தான் பெரும்பாலும் நாம் பிள்ளைகளை அடிக்கிறோம். அது தவறு

பிள்ளைகளை இறைவழியில் நடத்துவதற்காக அவர்களைக் கண்டிப்பதே சரியானது. கடமைகளைச் செய்வதும் இறைவனின் பாடம் என்பதைப் புரிந்து கொள்வோம்

4. ஆனந்தமான குடும்ப வாழ்க்கை !

நல்ல ஒற்றுமையான குடும்பத்தில் வளர்கின்ற குழந்தைகள் நல்ல சிந்தனைகளோடு வளரும். அவை உறவின் வலிமையைப் புரிந்து கொண்ட பிள்ளைகளாக வளரும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தலில் வளரும். அன்பு என்றால் என்ன என்பதைப் புரிந்து வளரும்.

சாராயம் குடித்து அடிப்பதும், கணவன் மனைவி கத்துவதும், தொட்டதுக்கெல்லாம் கெட்ட வார்த்தைகள் பேசுவதுமான குடும்பத்தில் வளரும் குழந்தைகள் வாழ்வில் அப்படிப்பட்ட சிந்தனைகளோடு தான் வளரும்.

எனவே குழந்தைகள் ஆரோக்கியமாய் வளர, இறையில் ஆழமாய் ஜொலிக்க அவர்கள் நல்ல குடும்ப சூழலைக் கண்டு வளர வேண்டியது மிக மிக அவசியம்.

எனவே உங்கள் குடும்பங்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒரு குட்டித் திருச்சபையாய் நடத்துங்கள்.

இந்த நான்கு சிந்தனைகளையும் மனதில் கொள்ளுங்கள்
நாளைய சமூகத்தைக் கட்டியெழுப்ப உறுதி கொள்ளுங்கள்.

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s