Posted in Articles

புனிதர்கள்

Image result for catholic saints

புனிதர்கள்
நம்
ஆன்மிக வாழ்வின்
ஆசான்கள்.

புனிதர்கள்
ந‌ம்
பாதைகளைச் சரிபார்க்கும்
மைல்கற்கள்

புனிதர்கள்
நம் பாதைகளை
பரிசீலிக்கும்
பகலவன்கள்.

இவர்களுடைய‌
வாழ்க்கை
நமது நாள்களை
சீர்தூக்க உதவுகிறது
நமது வாள்களை
கூர்தீட்ட உதவுகிறது.

இறையை நிறைத்ததால்
உலகை
வெறுத்தவர்கள் இவர்கள்.

சிற்றின்பத்தின்
சுருக்குப் பைகளில்
ஆன்மீகத்தின்
பேரலைகளை
அடமானம் வைக்காதவர்கள்.

கேளிக்கைகளின்
கோரிக்கைகளினால்
தங்கள்
வழிகளை
குழிகளாக்கிக் கொள்ளாதவர்கள்.

ஆசைகளின்
தேடல்களால்
ஆண்டவனின்
தேவையை
உதாசீனம் செய்யாதவர்கள்.

புனிதத்தின்
பூட்டெடுத்து
சாத்தானின் சன்னல்களை
அறைந்து சாத்தியவர்கள்.

தூய்மையின் தூரிகையால்
தங்கள் உதடுகளையும்
உள்ளங்களையும்
வெள்ளையடித்தவர்கள்.

இவர்கள் தானே,
இறைவார்த்தை விதைகளை
குறையின்றி
விதைத்தவர்கள்.

இவர்கள் தானே
புதுமையின் ஓட்டத்தை
தொடர் ஓட்டமாய்
தொடர்ந்தவர்கள்.

இவர்கள் தானே
சாவுக்கும் சம்மதமென‌
சலிக்காமல்
சொன்னவர்கள்.

ஆம்
என அர்ப்பணிக்க‌
இவர்களே
கற்றுத் தந்தார்கள்.

இரக்கத்தின்
இருப்பிடங்களை
இவர்களே
நிரப்பினார்கள்

மனிதத்தின்
கரங்களை
இவர்களே தரமாக்கினார்கள்.

விசுவாசத்தின்
விளை நிலங்களாய்
இவர்களே
விளங்கினார்கள்.

இவர்கள்
வலிகளைத் தாங்கியும்
இறை
வழிகளைத் தாண்டாதவர்கள்.

இவர்கள்
தடைகளை அடைந்தும்
இறை
தடங்களை அடைக்காதவர்கள்.

இவர்களின் வெற்றி
எதிரிகளை
வீழ்த்துவதில் இருக்கவில்லை
இறைவனை
வாழ்த்துவதில் இருந்தது.

இவர்கள்
இறைவனின் நீட்சியாய்
வாழ்ந்தவர்கள்
இறைவனில் மாட்சியாய்
நிறைந்தவர்கள்.

இவர்கள்
இறை ஒளியை
பிரதிபலித்து வாழ்ந்த‌
நிலவாழ்வின் நிலவுகள்

இவர்கள்
மறை ஒலியை
எதிரொலித்து வாழ்ந்த‌
மண்ணுலகின் மகத்துவங்கள்.

புனிதர்கள்
விழாக்கால விளக்குகளல்ல‌
வாழ்வுக்கான‌
வெளிச்சங்கள்.

புனிதர்களிடமிருந்து
கற்றுக் கொள்வோம்.
ஆன்மீக தத்துவத்தை.
மனிதத்தின்
மகத்துவத்தை !

புனிதம் சுமக்கும்
புனிதராய் ஆவதன்
முதல் படி
மனிதம் சுமக்கும்
மனிதராய் மண்ணில்
நடப்பது தான்.

இறைவனை அடைவதன்
முதல் படி
மனிதனாய் மனிதனை
அடைவது தான்.

*

Posted in கிறிஸ்தவ இலக்கியம், Christianity, Sunday School

ஆணி பாய்ந்த அன்பு

ஆணி பாய்ந்த அன்பு

Image result for gospel kids

 

 

 

 

 

 

 

 

 

 

 

காட்சி 1

( மூன்று சிறுமிகள் பேசிக்கொண்டிருக்கின்றனர், ஒருவர் உட்கார்ந்து பைபிள் படித்துக் கொண்டிருக்கிறார் )

சிறுமி 1 : ஏய்.. நீ… இந்த தடவை என்ன டிசைட் பண்ணியிருக்கே ?

சிறுமி 2 : எதுக்கு என்ன டிசைட் பண்ணியிருக்கே ? மொட்டையா கேட்டா எப்படி தெரியும். புரியும்படியா சொல்லு…

சிறுமி 1 : அடுத்த வாரம் கிராம ஊழியம் ஒண்ணு இருக்குன்னு சொன்னாங்கல்ல சண்டே கிளாஸ்ல, அங்க உள்ள மக்களுக்கு இயேசுவைப் பற்றி சொல்றதுக்கு.

சிறுமி 2 : ஒ.. அதுவா.. நான் போலாம்ன்னு தான் இருக்கேன். நீ என்ன டிசைட் பண்ணியிருக்கே ?

சிறுமி 1 : எனக்கு தெரியல. லாஸ்ட் டைம் போனது கொஞ்சம் கடியா இருந்துச்சு. அதான் யோசிக்கிறேன்.

சிறுமி 2 : ஏன்.. என்னாச்சு ?

சிறுமி 1 : ம்ஹூம்… தெரியாத மாதிரி கேக்கறே… வசதியே இல்ல… போன வேன்ல ஏசி வர்க் ஆகல. செம வெயில் வேற. வேர்த்து கொட்டினதுல எனக்கு தலைவலியே வந்துச்சு. கிராமமும் வெயில்ல வறுத்துப் போட்ட வடகம் மாதிரி ரொம்ப சூடா இருந்துச்சு.

( பைபிள் படித்துக் கொண்டிருந்தவர் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார் )

சிறுமி 2 : ம்ம்.. அது உண்மை தான். அது ரொம்ப சம்மர் டைம். சம்மர் டைம்ல எல்லாம் இதை பிளான் பண்ண கூடாது.

சிறுமி 3 : அது கூட பரவாயில்ல.. அங்க ஒரு நாள் தங்கினோமே.. ஷப்பா… போதும் போதும்ன்னு ஆயிடுச்சு. கொசு கடிச்ச கடில ஒரு நிமிஷம் கூட தூங்க முடியல.

சிறுமி 1 : ஆமா, அரேஞ்ச் பண்ணினவங்க ஒரு கொசுவர்த்தி கூடவா ஒழுங்கா வைக்க மாட்டாங்க. ஏதாச்சும் நல்ல ரூம் புக் பண்ணியிருந்தா பரவாயில்லை. சாப்பாடும் ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.

சிறுமி 3 : அன்னிக்கு எல்லாமே செம கடி தான். தரையில படுக்க வேண்டியிருந்துச்சு. பாத்ரூமும் சரியா இல்லை. வெயில் வேற… போதும்… இந்த தடவை நானும் வரல.

சிறுமி 1 : ஏந்தான் இந்த வெயில் காலத்துல ஊழியம் எல்லாம் பிளான் பண்றாங்களோ… இதெல்லாம் கொஞ்சம் வின்டர் டைம்ல பிளான் பண்ணினா நல்லா இருக்கும். முதல்ல அதை அவங்க கிட்டே சொல்லணும்.

சிறுமி 3 : அதுவும் இந்த தடவை போற இடத்துல எதிர்ப்பு அதிகம் இருக்கும்ன்னும் சொல்றாங்க. எதுக்கு வம்பை விலை குடுத்து வாங்கணும். சைலண்டா ஜகா வாங்கிக்கலாம்.

நபர் : யம்மா.. நீங்க ஊழியம் ஊழியம்ன்னு சொல்லிட்டிருந்தீங்க… நீங்க எங்கேம்மா ஊழியத்துக்கு போறீங்க ?

சிறுமி 2 : அது மங்கலாபுரம் ந்னு ஒரு கிராமங்கய்யா.. வசதியில்லாத மக்கள் வாழற ஒரு மலைவாழ் கிராமம்.

நபர் : என்ன ஊழியம்மா ?

சிறுமி 3 : ம்ஹூம்… எதுவும் தெரியாம தான் கேக்கறீங்களாக்கும். அது இயேசுவைப் பற்றி சொல்ற ஊழியம். மிஷனரி டிரிப்

நபர் : ஓ… இயேசுவைப் பற்றி உங்களுக்கு யாரு சொன்னாங்க ?

சிறுமி 2 : எங்க அப்பா அம்மா

நபர் : அவங்களுக்கு..

சிறுமி : அவங்களோட அப்பா அம்மா.. அதுக்கு முன்னாடி அவங்களோட அப்பா அம்மா.. என்ன கேள்வி ஐயா இது. கடுப்படிக்கிறீங்களே…

நபர் : அப்படியில்லம்மா.. ஒருகாலத்துல நாம எல்லாருமே இயேசுவைப் பற்றி அறியாம இருந்தவங்க தான். எங்கயோ பிறந்து எப்படியெல்லாமோ நல்லா வளர்ந்த மிஷனரி மக்கள் தான் நமக்கு இயேசுவை அறிவிச்சாங்க.

சிறுமி 2 : அது.. வந்து… ஆமா… என்ன சொல்ல வரீங்க ?

நபர் : நாம இயேசு யாருன்னே அறியாம இருந்த காலத்துல தான் நமக்கு நிறைய இறைமனிதர்கள் வந்தாங்க. தோமா முதல்ல வந்தாரு. உயிரைப் பணயம் வெச்சு பயணம் செஞ்சாரு. கிறிஸ்தவத்தோட விதையை போட்டாரு.

சிறுமி 3 : ஓ.. ஆமா அது எங்களுக்குத் தெரியும்.

நபர் : அப்போவும் கிறிஸ்தவம் வளரல.அதுக்கு அப்புறம் நிறைய இறை பணியாளர்கள் வந்தாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சாங்க.மேலை நாட்டில வசதியா வாழ்ந்தவங்க இங்கே வந்து புழுதியில புரண்டாங்க. நோயால பிள்ளைங்க சாகறதை நேரடியா பாத்தாங்க. செத்துப் போன குழந்தைகளை அவங்களே புதைச்சுட்டு மிஷனரியை கண்டின்யூ பண்ணினாங்க…

சிறுமி 2 : ஓ..

நபர் : அவங்க உயிரைப் பணயம் வெச்சு இங்கே வராம இருந்திருந்தா என்ன ஆயிருக்கும் !. , “ஐயோ இங்கே வெயிலா இருக்கு, ஐயோ அங்கே மழையா இருக்கு, ஐயோ இது படிப்பறிவில்லாத இடமா இருக்கே ந்னு” நினைச்சிருந்தா இன்னிக்கு நாம இயேசுவை அறிஞ்சிருக்கவே முடியாது.

சிறுமி 3 : அதெல்லாம் அந்த காலம் அங்கிள்.. நீங்க இன்னும் பழைய காலத்துலயே இருக்கீங்க. இப்பல்லாம் அப்படி போக முடியுமா ? இது டெக்னாலஜி வேர்ல்ட்… இந்த காலத்துல அதெல்லாம் முடியுமா ?

நபர் : ஏன் முடியாது ? இயேசு மீது ரொம்ப அன்பு இருந்தா ? இயேசுவோட அன்பு மக்களுக்குக் கிடைக்கணும்ங்கற தீவிரமான ஆசை இருந்தா எல்லாமே சாத்தியம் தான்.

சிறுமி 1 : அப்படிப்பட்ட அன்பெல்லாம் இப்போ சாத்தியமா அங்கிள் ? பேசறதுக்கு வேணும்ன்னா நல்லா இருக்கும். நடைமுறைக்கு ஒத்து வராது.

நபர் : ஏன் ஒத்து வராது ? எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும். ஏன் சமீபத்துல அந்தமான் சென்டினல் தீவுக்கு போன ஜானோட வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய சவாலான உதாரணம் தானே

சிறுமி 1 : அது யாரு ஜாண் ? எனக்கு தெரியலையே.. கொஞ்சம் சொல்லுங்களேன்.

நபர் : அவர் பேரு ஜான் ஆலன் ச்சாவ்…

Image result for john allan chau

காட்சி 2

( ஜான் மூன்று மீனவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார் )

ஜான் : என் பேரு ஜான் ஆலன் ச்சாவ் !

ந 1 : சொல்லுங்கய்யா.. இந்த அழகான அந்தமானுக்கு வந்திருக்கீங்க… ஊர் சுத்திப் பாக்கலாமா ?

ஜான் : அந்தமான் ரொம்ப அழகா இருக்கு.. ரொம்ப புடிச்சிருக்கு… கடவுளோட படைப்பே அற்புதமானது தான். மனுஷன் தான் அதோட புனிதத்தைக் கெடுத்துடறான்.

ந 2 : உண்மைதான்யா… கடவுள் படைக்கும்போ எல்லாமே அற்புதம் தான்.. நம்ம மனசை பாவம் அழிக்கிற மாதிரி… இயற்கையை அசுத்தம் அழிக்குது…

ஜான் : பாவம்ன்னு எல்லாம் சொல்றீங்க ? ஜீசஸ் பற்றி தெரியுமா ?

ந 3 : ஆமாங்கய்யா.. நாங்க கிறிஸ்டியன்ஸ் தான்…

ஜான் : ஓ.. ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு ஒரு இடத்துக்கு போணும்.. உங்க உதவி வேணும்.

ந 1 : சொல்லுங்கய்யா.. எங்க போணுமோ போயிடலாம். அழகான தீவுகள் நிறைய இருக்கு இங்கே. ஹேவ்லாக் தீவு ஒன்னு இருக்கு, நார்த் பே இருக்கு, பராடாங் ஐலன்ட் இருக்கு.. எல்லாமே சூப்பரா இருக்கும்.

ஜான் : இல்ல.. நான் போகவேண்டிய இடம் அது இல்ல..

ந 2 : ஓ..எங்க போறதுன்னு ஆல்ரெடி டிசைட் பண்ணிட்டீங்களா ? அதுவும் நல்லது தான். இப்போ தான் ஆன்லைன் ல எல்லா விஷயமும் கிடைக்குதே… அப்போ சொல்லுங்க.. நம்ம கிட்டே மோட்டார் போட் இருக்கு, போயிட்டு வந்துடலாம்.

ஜான் : நார்த் சென்டினல் தீவுக்கு போணும்.

ந 1 : ( அதிர்ச்சியில் ) நார்த் சென்டினல் தீவுக்கா ? நீங்க விஷயம் தெரியாம சொல்றீங்க .. அங்கே எல்லாம் போக முடியாது. அது தடைசெய்யப்பட்ட தீவு.

ஜான் : அது தெரியும்… ஆனாலும் அங்கே தான் போகணும்.

ந 2 : ஐயா.. நாங்க இங்கயே பொறந்து வளந்தவங்க… அந்த தீவு எப்படிப்பட்டதுன்னு எங்களுக்கு தெரியும்… உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. நீங்க நினைக்கிற மாதிரி அது சுற்றுலாத் தலம் இல்ல… போய் செல்பி எடுத்து சந்தோசப்பட முடியாது.

ஜான் : தெரியும். அங்கே பழங்குடி மக்கள் வாழ்றாங்க. உலகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாம பல்லாயிரம் ஆண்டுகளா அங்க வாழ்றாங்க.

ந 3 : அது மட்டும் தான் தெரியுமா ? அவங்க தீவுக்குள்ள யாரு காலடி எடுத்து வெச்சாலும் காலி பண்ணிடுவாங்க. அது தெரியுமா ?

ஜான் : அது எனக்கு பத்து வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். அப்பவே முடிவு பண்ணிட்டேன் அங்கே தான் போகணும்ன்னு.

ந 2 : ஐயா அது சட்ட விரோதம்…

ஜான் : ம்ம்.. அதுவும் தெரியும். சட்ட ரீதியா போக ஏதாச்சும் ஒரு சின்ன வழி இருந்தா கூட அதைத் தான் நான் ஃபாலோ பண்ணியிருப்பேன். ஆனா அதுக்கு எந்த வழியும் இல்லை. அதனால தான் உங்க கிட்டே கேக்கறேன்.

ந 1 : ஐயா.. அந்த தீவுக்குள்ளயே போக முடியாது. போனா உயிரோட திரும்ப முடியாது. அங்கே ஏன் போகணும்ன்னு அடம் புடிக்கிறீங்க ?

ஜான் : அங்கே இருக்கிற மக்கள் இயேசுவை அறியாதவங்க. அவங்களுக்கு இயேசுவைப் பற்றி சொல்லப் போறேன். அவங்களும் இயேசுவோட அன்பை புரிஞ்சுக்கணும்.

ந 1 : ஐயா.. அவங்க நம்ம பாஷையையே புரிஞ்சுக்க மாட்டாங்க. அப்புறம் எப்படி நீங்க இயேசுவைப் பற்றி சொல்றதைப் புரிஞ்சுப்பாங்க. கொஞ்சம் யோசிச்சு பேசுங்க.

ஜான் : என்னப்பா இப்படி சொல்றீங்க. நாம எல்லாம் ஒரு நாள் கடவுளுக்கு முன்னாடி சொர்க்கத்துல இருக்கும்போ அவங்க அங்கே இருக்க வேண்டாமா ? நமக்கெல்லாம் புரியாத அவர்களோட மொழி சொர்க்கத்துல புகழ் பாடலா எதிரொலிக்க வேண்டாமா ? ஏன் இப்படி சொல்றீங்க.

ந 1 : ஐயா பல வருஷங்களுக்கு முன்னாடி அங்கிருந்து சில மக்களை நாட்டுக்கு கொண்டு வந்தாங்க. ஆனா அவங்களால நம்ம பூமியில வாழ முடியல. ஒரு சின்ன காய்ச்சலையோ, ஜலதோஷத்தையோ தாங்கற அளவுக்கு கூட அவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. அதனால அரசு அதை அவங்களுக்கே விட்டுக் கொடுத்துச்சு. அங்கே யாரும் போகக் கூடாதுன்னு சட்டமும் போட்டுச்சு.

ஜான் : அரசோட சட்டம் இருக்கட்டும்பா.. இயேசுவைப் பற்றி உலக ஜனங்கள் எல்லாருக்கும் சொல்லணும்ன்னு கடவுளோட சட்டம் இருக்கே.. தெரியாதா ?

ந 2 : அது தெரியும்யா.. ஆனா அதை அந்த தீவுல செயல்படுத்த முடியாது.

ஜான் : சரி.. நீங்க யாரும் வரவேண்டாம்.. என்னை மட்டும் கரையில இறக்கி விடுங்க போதும்.

ந 1 : அந்த தீவு மக்களோட கண்ணுக்கெட்டின தூரத்துல எங்க நின்னாலும் அம்பு எய்து கொன்னுடுவாங்க. கடலுக்குள்ள ஒரு கிலோ மீட்டர் தூர கூட அவங்க அம்பு பாஞ்சு வரும். அதனால நாங்க அங்க வரல.

ஜான் : சரி.. என்னை கரைக்கு கொண்டு போக வேண்டாம். கடல்ல ஒண்ணோ ரெண்டோ கிலோ மீட்டர் தூரத்துல இறக்கி விடுங்க.. நான் நீந்தி போயிடறேன். எப்படியாச்சும் நான் அவங்களை சந்திக்கணும்.

ந 2 : என்னாச்சு உங்களுக்கு ? இது ஒன்வே.. திரும்ப முடியாது. ஏன் பிடிவாதம் புடிக்கிறீங்க ?

ஜான் : நான் அவங்களுக்கு இயேசுவை சொல்லி, அவங்க கூடவே தங்கி வாழப் போறேன்.

ந 1 : சரி.. அப்போ வேற ஆளைப் பாருங்க… எங்களுக்கு வேற வேலை இருக்கு

ஜான் : நீங்க கேக்கற பணத்தை தரேன்.

ந 2 : நீங்க பத்தாயிரம் ரூபா குடுத்தாலும் வேணாம்.. ஆளை விடுங்க.

ஜான் : இருபத்தையாயிரம் ரூபா தரேன்.. என்னை கடலுக்குள்ள இறக்கி விடுங்க

( மூவரும் ஒருவருக்கொருவர் பார்க்கின்றனர் )

ந 1 : பணம்.. இருக்கட்டும்.. இது ரொம்ப ரிஸ்க்.. உங்க உயிருக்கு படு பயங்கர ஆபத்து.

ஜான் : அந்த தீவுல இயேசு அறிவிக்கப்படணும். அதான் என்னோட ஒரே இலட்சியம். பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க. இதுக்காகத் தான் நான் அமெரிக்கால இருந்து வந்திருக்கேன்.

ந 3 : ம்ம்ம்.. நாங்க பக்கத்துல இருந்து செய்ய வேண்டிய வேலைய, நீங்க மேல் நாட்டில இருந்து வந்து செய்ய நினைக்கிறீங்க.. சரி, உங்களுக்கு ஹெல்ப் பண்றோம். ஆனா விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது. எங்களை காட்டிக் கொடுக்கக் கூடாது. கடல்ல தூரமா தான் நிப்போம். ஓக்கேவா

ஜான் : டபுள் ஓகே.. ரொம்ப நன்றி…

Image result for john allan chau

காட்சி 3

ந 1 : ஐயா.. அதோ தூரத்துல தெரியுதே.. அது தான் அந்த தீவு. நாங்க போட்லயே இருக்கோம். நீங்க போயிட்டு வாங்க.

ந 2 : கேர்ஃபுல்.. ஏதாச்சும் ஆபத்துன்னா தாமதிக்காம உடனே நீந்தி வாங்க.

ஜான் : கண்டிப்பா.. அந்த பையை எடுங்க..

ந 3 : அதுல என்ன இருக்கு.. ?

ஜான் : மீன்… இன்னும் கொஞ்சம் பரிசு பொருட்கள். அவங்களுக்குக் கொடுக்க.

ந 2 : ம்ம்.. சரி.. அது நல்ல ஐடியாவான்னு தெரியல..

ஜான் : கடவுள் நம்ம கூட இருப்பார்.. ( பைபிளை காட்டுகிறார் ) இது காப்பாற்றும்.

( கடலில் நீந்தி கரையருகே வரும் போது மக்கள் கையில் அம்புகளுடன் நிற்கிறார்கள். )

ஜான் : என் பேரு ஜான்… இயேசு நேசிக்கிறார். அவர் என்னை நேசிக்கிறார். உங்களையும் நேசிக்கிறார்.

காட்டுவாசிகள் : ஹய்யாகூய்ங்க்க்க்…

ஜான் : ஹய்யாகூய்ங்க்க்க்…

( காட்டுவாசிகள் சிரிக்கின்றனர் , அம்பை குறிவைக்கின்றனர் )

ஜான் : இதோ மீன்… ( ஒரு பெரிய மீனை தூக்கிப் போடுகிறார் )

( ஒரு பதின் வயதுப் பையன் அம்பை எடுத்து குறிபார்க்கிறான். கோபமாய் )

ஜான் : நோ.. இயேசு நேசிக்கிறார். இதோ நானும் உன்னை மாதிரி மனிதன் தான்… எனக்கும் இரண்டு கை இருக்கு, இரண்டு கால் இருக்கு ( சைகைகள் காட்டுகிறார் )

காட்டு : ஹய்யாகூய்ங்க்க்க்… ( ஒரு அம்பை எய்கிறான் அது ஜானின் நெஞ்சுக்கு வருகிறது. அங்கிருந்த பைபிளில் பதிகிறது. ஜான் பயந்து நீந்துகிறான்.

காட்சி 4

Image result for john allan chau

(ஜான் நீந்தி வந்து மீனவர்களுடன் இணைகிறான் )

ந 1 : என்னாச்சு என்னாச்சு..

ஜான் : ( பைபிளைக் காட்டுகிறார் பைபிளில் அம்பு தைத்திருக்கிறது. ) இந்த பைபிள் என்னை காப்பாத்திடுச்சு.. கடவுள் என்னை காப்பாத்திட்டாரு.

ந 2 : நல்ல வேளை.. பயந்துட்டே இருந்தோம். இனிமே இங்கே நிக்க வேண்டாம். அவங்க நீந்தி வந்தா, நாம காலி. சட்டுபுட்டுன்னு கிளம்பிடுவோம்…

ஜான் : நோ..நோ… நாம கொஞ்சம் தள்ளி நிப்போம். நாளைக்கு மறுபடியும் போய் பாக்கறேன்.

ந 3 : வாட்.. நாளைக்கா ? என்ன உங்களுக்கு புத்தி பேதலிச்சு போச்சா. மரணத்தோட வாயில இருந்து வெளியே வந்திருக்கீங்க. மறுபடியும் உள்ளே போய் மாட்ட போறீங்களா ?

ஜான் : நண்பா. ஒரு சின்ன எதிர்ப்புக்கே பயந்து போய் பின்வாங்கினா, இயேசுவைப் பற்றி யாருக்கும் சொல்ல முடியாது. ஸ்தேவானை கல்லால எறிஞ்சு கொன்னாங்க.. சாகும்போ கூட சிரிச்சுகிட்டே செத்தாரு.

ந 1 : ஐயா.. இங்கே நிலமை கொஞ்சம் வித்தியாசம். நாம என்ன பேசறோம், நல்லது பேசறோமா கெட்டது பேசறோமான்னே அவங்களுக்கு தெரியாது. இந்த நிலமைல மறுபடியும் போறது சாவுக்கு நாமளே சொல்லி அனுப்பற மாதிரி. வலையில நாமளே போய் விழற மாதிரி. தூண்டில்ல வேணும்ன்னே போய் சிக்கற மாதிரி.

ஜான் : நீங்க நல்லா பேசறீங்க.. ஆனா உலகெங்கும் போய் நற்செய்தியைச் சொல்லச் சொன்னாரு இயேசு. மொழியை படைச்சவரும் அவர் தான், பிரிச்சவரும் அவர் தான். அவரோட அன்பு மொழிகளைக் கடந்தது. நாளைக்கும் போவேன்.

ந 2 : ஐயா.. பயமா இருக்கு… இது ரொம்ப ரிஸ்க்.

ஜான் : உண்மை தான். சிலுவையை சுமந்து கிட்டு தான் இயேசுவை பின்பற்ற முடியும். சிலுவையை விட்டுட்டு மீட்பர் இயேசுவை அறிவிக்க முடியாது. என்னால முடிஞ்ச அளவுக்கு சுமக்கறேன். ஆனா சாகக் கூடாதுன்னு நினைக்கிறேன்.

ந 1 : ஆமா. நீங்க சாகக்கூடாது.. வாங்க போலாம்.. நீங்க வந்திருக்கிற விஷயம் இப்போ அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு. இனிமேலும் போனா சாவு தான்

ஜான் : அதில்லை.. நான் சாகாம இருந்தா இயேசுவுக்கு பயனுள்ளவனா இருப்பேன். செத்துட்டா அதுக்கு மேல எதுவும் என்னால பண்ண முடியாதுல்ல. ஆனா அவரோட அன்பை சொல்லப் போகும்போ ஒரு அம்பு தான் என்னை கொல்லும்ன்னா அதுக்கும் நான் தயார் தான்…

ந 2 : ஐயா.. நீங்க ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கறீங்க. வீட்ல ரொம்ப வருத்தப்படுவாங்க.

ஜான் : நான் ஒரு லெட்டர் எழுதி வெச்சுடுவேன். நான் வரலேன்னா அவங்க கிட்டே அது சேரணும். நான் செத்தாலும் என்னைக் கொன்னவங்க மேல வீட்டுக்காரங்க கோபப்பபடக் கூடாது. கடவுள் மேல கோபப்படக் கூடாது. இயேசுவோட அன்பை விட்டு அவங்க என்னிக்குமே விலகக் கூடாது. இதையெல்லாம் எழுதி வெச்சிருக்கேன்.

ந 3 : ஐயா நீங்க ரொம்ப ரொம்ப தீவிரமான ஆளா இருக்கீங்க.

ஜான் : இயேசுவோட அன்பை ருசிபார்த்தவனால அதை பிறருக்குக் கொடுக்காம இருக்க முடியாது பிரதர். அவ்வளவு அதி அற்புதமானது அது. அந்த தீவுக்குள்ள இயேசுவோட பெயரை உரக்கச் சொன்னப்போ எனக்கே சிலிர்த்துடுச்சு. அந்த வார்த்தை வீணா திரும்பாது. கடவுளுடைய வார்த்தை நிறைவேற்ற வேண்டியதை நிறைவேற்றும்.

ந 1 : நீங்க சொல்றதையெல்லாம் கேக்கும்போ எனக்கே அங்கே வரணும்ன்னு தோணுது. ஆனா பயமா இருக்கு.

ஜான் : இல்ல.. நான் போயிட்டு வரேன். அந்த தீவு முழுக்க கிறிஸ்துவின் பெயர் பரவணும். அவங்க இறைவனைப் புகழணும். அதுக்கு ஒரு விதையா நான் அங்கே மடிந்தாலும் பரவாயில்லை.

ந 3 : எப்படி உங்களுக்கு இந்த ஊக்கம் வந்தது ? ஆச்சரியமா இருக்கு.

ஜான் : நான் பிறக்கறதுக்கு முன்னாடியே, ஏன் கருவாக உருவாகும் முன்னாடியே என்னை இந்த பணிக்காக கடவுள் தேர்ந்தெடுத்திருக்காரு. இறைவா உமக்கே புகழ். இந்த பணியை நான் வெற்றிகரமா செய்யணும். நாலு நாள்ல இந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய அறிமுகத்தை கொடுப்பேன்.

ந 2 : உங்களுக்காக செபிக்கிறோம் ஜாண்..

ஜான் : நன்றி சகோதரா. திருவெளிப்பாடு நூல் சொல்லுது, “யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக் குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது.” என்று பாடினார்கள். அந்த கூட்டத்துல இந்த மக்களை நான் பாக்கணும். இயேசுவின் பெயர் நுழையாத நாடே இருக்கக் கூடாது.

ந 3 : ஆல் தி பெஸ்ட் சகோதரா…

*

தொடர் காட்சி

*

ஜான் : எனக்கு என்ன நடந்தாலும் நீங்க கோபப்படாம, அமைதியா இறைவனுக்குக் கீழ்ப்படிந்த ஒரு வாழ்க்கையை வாழுங்க. நான் நீந்தப் போறேன்.

( ஜான் அந்த தீவுக்கு செல்கிறார் )

ஜான் : மக்களே.. என் பெயர் ஜான். நான் மீண்டும் உங்க கிட்டே வந்திருக்கேன். இயேசு அன்பு செய்கிறார். உங்களை நேசிக்கிறார். அவரால் தான் மீட்பு உண்டு.

( காட்டு வாசிகள் சூழ்கின்றனர், புரியாத மொழியில் பேசுகின்றனர் )

ஜான் : இயேசு.. பைபிள் .. இதோ இது தான் பைபிள். இது தான் கடவுளின் வார்த்தை. சொல்லுங்க.. இயேசு அன்பு செய்கிறார்.

( ஒருவன் அவரை குறிவைக்கிறான். அம்பு அவரை நோக்கி நீள்கிறது )

ஜான் : நோ.. வேண்டாம். நான் இயேசுவை அன்பு செய்கிறேன். நீங்களும் அன்பு செய்யணும்.

( அம்பு பாய்கிறது )

ஜான் : ( விழுகிறார் ) நான் உங்களை மன்னிச்சுட்டேன். இயேசுவே இவர்களை மன்னியும். இயேசு உங்களையும், என்னையும் அன்பு செய்கிறார். இயேசு. அ…அன்…அன்பு செய்கிறார்……..Soli deo glorஇஅ ( உரக்கக் கத்தி இறந்து விடுகிறார் )

( ஆதிவாசிகள் கூடி அவரை இழுத்துச் செல்கின்றனர் )

காட்சி 5

Image result for john allan chau

( சிறுமிகளும் அந்த நபரும் )

சி 1 : ஐயோ.. கேட்கவே படு பயங்கரமா இருக்கே … அப்புறம் ஜானுக்கு என்ன ஆச்சு ?

நபர் : ஜானை அவங்க கொன்னுட்டாங்க. சாவு வரும்ன்னு தெரிஞ்சே அவர் போனாரு. வெறும் 26 வயசான இளைஞன் அவர். சாகும்போ கூட கவலைப்படல. மக்கள் மீட்கப்படணும்னு தான் ஆசைப்பட்டாரு. அவரோட உடலைக் கூட நம்மால மீட்க முடியல.

சி 2 : ரொம்ப அதிர்ச்சியான கதை ஐயா… எவ்ளோ பெரிய மன உறுதி

நபர் : ஊழியம்ங்கறது அது தான்மா… அது டூர் கிடையாது. அது ஒரு பணி. இறைவன் நமக்கு இட்ட பணி. தூர இடத்துக்கு போய் செய்றது மட்டும் ஊழியம் கிடையாது. உங்க பக்கத்துல இருக்கிற தோழிக்கு இயேசுவைப் பற்றி சொல்றது இறைபணி தான்.

சி 3 : ரொம்ப வெட்கமா இருக்கு அங்கிள். அவரோட ஒப்பிடும்போ ஆயிரத்துல ஒரு பங்கு கூட நாங்க கஷ்டப்படல. ஆனா எவ்வளவு குற்றம் சொல்லியிருக்கோம். ஜீசஸ் பிளீஸ் ஃபார்கிவ்.. எங்களை மன்னிச்சிடுங்க.

நபர் : கடவுள் கிட்டே உங்களை ஒப்படைச்சீங்கன்னா, அவரு உங்களை சரியான வகையில பயன்படுத்துவார். அந்த பாதையில என்ன கஷ்டம் வந்தாலும் அதை கடவுள் கிட்டே சொல்லிடுங்க. தூய ஆவியானவரோட பலம் உங்களை நிரப்பும்.

சி 1 : ரொம்ப நன்றி அங்கிள்.

நபர் : ஆமா ஏதோ ஊழியம் பற்றி சொல்லிட்டிருந்தீங்க.. போறீங்களா ?

சி 3 : என்ன இப்படி கேட்டுட்டீங்க… கண்டிப்பா போவோம். எவ்வளவு பேருக்கு இயேசுவைச் சொல்ல முடியுமோ அவ்வளவு பேருக்கு சொல்லுவோம்.

நபர் : மகிழ்ச்சிம்மா.. அதே போல, உங்க வார்த்தையில மட்டுமில்ல, வாழ்க்கையிலயும் இயேசுவைப் பிரதிபலிக்கணும். அவருக்கு புடிக்காத எந்த செயலையும் செய்யாதீங்க ,சரியா..

சி 2 : சரி அங்கிள்.. நன்றி.

*

Posted in Articles, கிறிஸ்தவ இலக்கியம், Christianity, Sunday School

SKIT : இயேசுவைப் போல அன்பு செய்

Image result for Jesus and people

காட்சி 1 :

நபர் 1 : ( சோகமாக, ஏதோ யோசனையில் உலவிக் கொண்டிருக்கிறார் )

நபர் 2 : ஹேய்என்னப்பா என்ன யோசனை ? நோவா கப்பல் செய்றதுக்கு கூட இப்படி யோசிச்சிருக்க மாட்டாரு போல. என்ன விஷயம் ?

1 : நோவாக்கு கடவுள் எல்லாத்தையும் சொல்லிட்டாருப்பா. சோ, அவருக்கு யோசிக்க வேண்டிய தேவை இல்லை. பட்எனக்கு ஒரு குழப்பம்..

2 : என்ன குழப்பம்ன்னு சொல்லுஎனக்கு தெரியுமான்னு பாக்கறேன்.

1 : மேட்டர் வேற ஒண்ணும் இல்லை. “இயேசுவைப் போல அன்பு செய்ங்கற தலைப்பில எனக்கு ஒரு பேச்சுப் போட்டி. இயேசுவைப் போல அன்பு செய்னா ? என்னன்னு யோசிக்கிறேன். 

2 : இதுல என்னடா குழப்பம் ? இயேசு நமக்காக சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்டாரு. அதே மாதிரி….

1 : அதே மாதிரி.. சிலுவைல அறையப்படணுமா ? என்னடா சொல்றே ?

2 : இல்ல.. அன்புங்கறது அவ்ளோ டீப்பா இருக்கணும்ந்னு சொல்ல வரேன்.

1 : நீ என்னை ஓவரா குழப்பறேநீ பேசாம இருந்தாலே போதும்ன்னு நினைக்கிறேன்.

( அப்போது மூன்று ண்பர்கள் ருகிறார்கள் ) 

‌ 4 : ஹேய்.. என்னப்பா ? ரோட் சைட்லசுத்திட்டிருக்கீங்க‌ ? என்னவிஷம் ?

‌ 2 : வாங்கடா.. இவனுக்கு ஒரு வுட்டு 

‌ 5 : ம்ம்.. பாத்தாலே தெரியுது. என்னவுட்டு.

‌ 1 : இயேசுவைப் போலஅன்பு செய்றதுங்கது எப்படிடா ? சொல்லு பாப்போம்.

‌ 3 : இதுவா.. சிம்பிள். அவர் எல்லார் கிட்டேயும் அன்பா இருந்தாரு. அன்பா கினாரு. அன்பா பேசினாரு.

‌ 1 : அதான் எப்படின்னு கேக்கறேன். 

‌ 3 : எப்படின்னா.. அப்படித் தான்

‌ 2 : இவனோடகுழப்பத்தைத் தீக்கணும்ன்னா நாமஇயேசுவை போய் பாத்தா தான்டா முடியும்ஓவரா குழம்பறான்.. ம்மையும் குழப்பறான். 

‌ 5 : போய் பாத்துடுவோமா ?

‌ 2 : உட்டா.. இவன் ம்மளை போட்டுத் ள்ளிடுவான் போல‌. 

‌ 5 : இல்லடா.. நாமடைம் மிஷின்லஇயேசுவோடகாலத்துக்கே போய் பாத்துட்டு ந்தா என்ன‌ ? 

‌ 1 : என்னசினிமாலஎல்லாம் ருமே.. பெரியபொட்டிக்குள்ளபோய் அப்படியே ழையகாலத்துக்கு போறது.. அதுவா ? காமெடி ண்றான்டா..

‌ 5 : காமெடி இல்லை. இதோ பாரு நான் கைலட்டியிருக்கிறவாட்ச். இது வாட்ச் இல்லை. டைம் மிஷின். என் அப்பா உருவாக்கினது. 

‌ 2 : வாட்.. ? வாட்ச் டைம் மெஷினா ?

( எல்லோடும் அருகில் ந்து உற்றுப் பார்க்கிறார்கள் )

‌ 3 : பெரியண்டி மாதிரி தானேடா இருக்கும் அது ?

‌ 5 : அதெல்லாம் விஷம் தெரியாதங்கசொல்றது. இப்பபாரு.. இந்தவாட்ச்லஒரு டேட் அன்ட் டைம் செட் ண்ணணும். அப்பம் நாமஎல்லாரும் கைகளை இப்படி சேத்துப் புடிக்கணும். தென், இந்தட்டனை அமுக்கணும். அவ்ளோ தான். 

‌ 4 : சூப்பர் டா. இதுவரை நான் கேட்டதுலயே சூப்பர் ஜோக் இது தான். 

‌ 5 : டேய்.. லாய்க்காதீங்க‌. வாங்கஉங்களுக்கு நானே செஞ்சு காமிக்கிறேன்.

( எல்லோரும் கைகளை டித்து ஒருவருக்கொருவர் பிடித்துக் கொள்கிறார்கள் )

காட்சி 2

( 5 பேரும் சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள் )

‌ 5 : நாமஇயேசு பிறந்தகாலத்துல‌, அவரோடஊருக்கு ந்திருக்கோம்.

‌ 1: நிஜமாவா சொல்றே.. வாவ்..

‌ 3 : மா இருக்கு.. வாட்ச் பேட்டரி இருக்கா ? திரும்பி போக‌ ?

‌ 4 : ப்படாதே  முதல்லஇயேசுவைப் பாப்போம்.

‌ 1 : இயேசுவை நேரடியா பாக்கபோறோமா .. ( ஆச்சரியமாய் துள்ளுகிறான் )

 ( அப்போது ஒருவர் உற்சாகமாய் ஓடிக்கொண்டே இருக்கிறார். 

6 : வாவ்வானம் எவ்ளோ அழகா இருக்கு.. ( குதித்து அந்தப் பக்கம் போகிறார் )….. 

வாவ்மரங்களெல்லாம் எவ்ளோ.. அழகு

( 1 முதல் 5 தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்இவன் லூசு போல.. முதல் முதல்ல பாக்கறவனே லூசாவா இருக்கணும் கடவுளே )

வாவ்பூ எவ்ளோ அழகா இருக்கு.

1 : ஹலோசார்ஹலோஒரு நிமிசம்

( ர் நின்று திரும்பிப் பார்க்கிறார் )

‌ 6 : ஷாலோம் அலைக் கும்

‌ 1 : என்னடா.. முஸ்லிம் நாட்டுலந்துட்டியா ? 

‌ 5 : நோ..நோ.. லோம் அலைக்கும் ந்னா உங்களுக்கு மாதானம் உண்டாகட்டும் ந்னு சொல்றஹீப்ரூ வார்த்தை. ஒரு நிமிஷம்என்னோடவாட்ச் லேங்குவேஜ் சிங்க்ரனைசிங் ஆன் ண்றேன். அப்போ அவரு பேசது க்கு புரியும், நாமபேசது அவருக்குபுரியும்.

‌ 1 : என்னென்னவோ சொல்றே டா. அதைப் ண்ணு.

( வாட்சை பார்த்து ஏதோ செய்கிறான் )

‌ 2 : சார் க்கம்.. ல்லா இருக்கீங்களா ?

‌ 6 : ல்லா இருக்கேன். நீங்கயாரு ? உங்களை நான் பாத்ததே இல்லையே ( சிரிக்கிறார் ) ஆமாமா.. நான் தான் யாரையுமே பாத்ததில்லையே.. இப்போ பாக்கிறேனே.. ( மீண்டும் குதிக்கிறார் )

‌ 1 : சார் பிளீஸ்ஒரு ஹெல்ப்.

‌ 6 : ஹெல்ப் ? என் கிட்டேயா ? எனக்கே இப்போ தான் ஹெல்ப் கிடைச்சிருக்கு.. ஹேப்பி.. ஐம்..ஹேப்பி

‌ 2 : சார்.. உங்களுக்கு ஜீஸஸ் தெரியுமா ? அவரை எங்கே பாக்கலாம் ந்னு சொல்றீங்களா ?

‌ 6 : ஜீஸஸ் ?? அது யாரு ?? தெரியாதே

‌ 3 : அதான்.. சிலுவைலஎல்லாம் அறைஞ்சு 

‌ 4 : டேய்.. அதெல்லாம் இன்னும் க்க‌… இயேசு இப்போ இங்கே னுஷனா வாழ்ந்திட்டிருக்காரு.. வாயை மூடு..

‌ 3 : ..யா. ந்துட்டேன்.. சாரி..

‌ 1 : சார்.. ஜீஸஸ் தெரியாதா ? ரொம்பபாப்புலரா ஒருத்தர்மேரியோடபையன்ஜோசப்அவரோடஅப்பா ?

‌ 6 : என்னசொல்றீங்கபுரியலையே

‌ 2 : நிறையஅற்புதமெல்லாம் செய்வாரேமுடனை க்கவைப்பாருகுருடனை பாக்கவைப்பாரு.. இப்படிஜீசஸ்ஜீசஸ்

‌ 6 : அப்படி ஒரு ஆளை தெரியும் அவர் பேரு ஜீசஸ் இல்லைஈஸோஅவரா ?

‌ 2 : எஸ் எஸ்அவரே தான்.. ஈஸோஈஸோ 

‌ 6 : அவரு தான் எனக்கு பார்வை குடுத்தாரு.. நான் பாக்கறேன்.. ஜாலி ஜாலி ( குதிக்கிறான் )

‌ 2 : .. அப்படியா. .உங்கபேரு பார்த்திமேயு வா ?

‌ 6 : ட்டெனநிற்கிறார். என் பேரு எப்படி உங்களுக்குத் தெரியும் ? நீங்கயாரு ? அன்னாவோடஆட்களா ? பிளீஸ் விட்டுடுங்க‌… ( ப்படுகிறார் )’

‌ 4 : இல்ல‌.. இல்ல‌.. நாங்கஈஸோ எப்படிப்பட்டருன்னு பாக்கபிற்காலத்துலஇருந்து…. ..மீன்.. தொலை தூரத்துலஇருந்து ந்திருக்கோம்

‌ 6 : அப்படியா வாங்க‌.. வாங்க.. அவரு மாதிரி ஒருத்தரை பாக்கவே முடியாது. அவரோடண்ணைப் பாத்தா போதும்.. அவ்ளோ சாந்தம். அவரோடபேச்சைக் கேட்டா அவ்ளோ அமைதி. அவர் க்கத்துலநின்னா அவ்வளோ ந்தோசம்வாவ்..வாவ்.. ஈஸோ.. ஈஸோ.. ரையில் விழுந்து ங்குகிறான்.

‌ 3 : அவரை நாங்கபாக்கமுடியுமா ?

‌ 6 : அவரை யாரு வேணும்ன்னாலும், எப்போ வேணும்ன்னாலும் பாக்கலாம்இப்போ ப்பர் கூம் க்கத்துலஇருப்பாருன்னு நினைக்கிறேன்.

‌ 2 : அவரைப் ற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்

‌ 6 : போய் பாருங்க‌.. அவரைப் ற்றி சொல்றது, கேக்கதெல்லாம் ஒண்ணுமே இல்லை.. ஒருவாட்டி பாருங்க‌.. அப்போ தான் தெரியும்.

( சொல்லிக் கொண்டே ஆனந்தமாய்ப் போகிறார் 

காட்சி 3 :

( 1 – ‍ 5 போகும் வழியில் சிலர் வருகிறார்கள் )

7 : வாவ்.. என்னா பேச்சு.. கேட்டுட்டே இருக்கலாம் போல இருந்துச்சு.

8 : ஆமா..ஆமா.. இப்படி ஒரு பேச்சை நான் கேட்டதே இல்லை.

9 : இதுவரைக்கும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டா பயமா இருக்கும். இப்போதான் கடவுளோட வார்த்தையை கேட்கும்போ ஆனந்தமா இருக்கு. சிலிர்ப்பா இருக்கு. கடவுள் அவ்ளோ அன்பானவரா ?

10 : நமக்கு இந்த பாக்கியம் கிடைச்சது எவ்ளோ பெரிய விஷயம்.

8 : ஆமா..ஆமாஆனா, என்னா கூட்டம். பசியே தெரியல 

7 : பசி தெரியாட்டா கூட நல்லா சாப்டோமே 

( 1 முதல் 5 வருகிறார்கள் )

1 : நீங்க பேசினதை கேட்டிட்டு இருந்தோம். நீங்க ஈஸோ பத்தி தான் பேசறீங்களா ?

7 : ஆமா.. ஆமா.. உங்களுக்கு அவரை தெரியுமா ? நீங்க வந்திருந்தீங்களா ?

2 : இல்லை.. வரலை.. அவர பாக்க தான் போனோம்.

9 : .. அவர் பத்தி உங்களுக்கு தெரியுமா ? ஒரு ஆட்டுக்குட்டி தை சொன்னாரு.. ரொம்ப அற்புதம்..

‌ 5 : காணாமபோனஆடா ? நூறு ஆடுகள் கிட்டேயிருந்து.

8 : ஆமா..ஆமா.. உங்களுக்கு எப்படி தெரியும். 

‌ 2 : நாங்கபைபிள்லடிச்சிருக்கோம்..

‌ 9 : பைபிள்லயா ? அதென்னபைபிள் ?

‌ 1 : அதை விடுங்க‌.. அவன் ஏதோ ஒளர்றான்இயேசு எப்படி ? அன்பானரா ?

‌ 8 : என்னஇப்படி கேட்டுட்டேஅவரை மாதிரி அன்பானரை பாக்கவே முடியாது அவரைப் பாத்தா நாமளும் அவரை மாதிரியே மாறணும்ன்னு தோணும். அவர் பேசறதெல்லாம் செயல்படுத்தணும்ன்னு தோணும். சந்தோசமா இருக்கும். போதனையும் செஞ்சிட்டு.. சாப்பாடும் குடுத்தாரு.. அதுவும்.. ஆயிரக்கக்கானக்களுக்கு

‌ 2 : .. 5 அப்பம், 2 மீனா ?

‌ 9 : உங்களுக்கு எல்லா விஷமும் தெரிஞ்சிருக்கு ? எப்படி ? நீங்கஉளவாளிகளா ? ரோமஅரசு உளவாளிகளா ? சின்ன பிள்ளைங்களா இருக்கீங்க.. ஆனா எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு.

‌ 3 : இல்லை..இல்ல‌… இன்னொருத்தர் சொன்னாரு.. அதான் நாங்கஇயேசுவைப் பாக்கபோலாம்ன்னு கிளம்பினோம்.. அவரு எங்கே இருப்பாரு ?  

‌ 9 : இயேசு.. ??

‌ 2 : ஈஸோ.. ஈஸோ..

‌ 7 : போங்க‌.. அவரு பேசிட்டு நைட் லைக்கு மேலஏறி போனாரு எங்கே இருப்பாருன்னு தெரிய‌.

‌ 3 : ன்றிங்க

( போகிறார்கள் )

அவர்கள் தொடர்ந்து நடக்கிறார்கள்.. 

2: ஹேய்.. அங்க பாரு.. பெரிய கூட்டம். கண்டிப்பா இயேசுவா தான் இருக்கும். வா.. ஓடிப் போய் பாப்போம்.

காட்சி 4

( இயேசு போதித்துக் கொண்டிருக்கிறார் , சிலர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இயேசுவைப் பார்த்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள் )

1 : ஹேய்.. இயேசு இயேசு.. 

2 : ஆமா..இயேசப்பா எவ்ளோ சிம்ளா இருக்காரு

3 : என்னால மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியல..

( அவர்கள் சிரித்து மகிழ்ச்சியாய் குதிக்கிறார்கள் )

அப்போது சிலர் வந்து.

11 : ஏய்.. நீங்கல்லாம் யாரு.. பேசாம இருக்க மாட்டீங்க ? பெரியவங்க பேசிட்டிருக்காங்கல்ல..

12 : ஈஸோ பேசறாரு.. அமைதியா இருங்க. 

11 : அவரோட பேச்சைக் கேக்கறதுக்கு எல்லாரும் காத்திட்டிருக்காங்க.. நீங்க வந்து இடைஞ்சல் பண்ணாதீங்க

12 : இனிமே ஒரு சின்ன சத்தம் கூட வரக்கூடாது.. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..

( இயேசு பேசுகிறார் )

இயேசு : குழந்தைகளை த்தம் போடாதீங்க‌. நீங்கவாங்க‌.. ( குழந்தையை அழைக்கிறார் )

ஒரு குழந்தையைப் போலநாமமாறணும். அது தான் விண்ணவாழ்வுக்கு போறதுக்கானஒரே ழி. ள்ளம் மில்லாம‌, எப்போதும் ந்தையையே சார்ந்திருக்கும் குழந்தையைப் போல‌, நாமவுளையே சார்ந்து இருக்கணும்.

ஆனா இப்படிப் பட்ட ஒரு சின்ன பிள்ளையை தீய வழியில ஒருத்தன் கூட்டிட்டு போறான்னா அவன் கழுத்துல பாறாங்கல்லைக் கட்டி கடல்ல போடுங்க. அது தான் அவனுக்கு நல்லது. அவ்ளோ பெரிய தவறு அது.

‌ 2 : இயேசப்பா.. ஒரே ஒரு கேள்வி.. கேக்கலாமா பிளீஸ் ?.

இயேசு : புன்னகைக்கிறார்

‌ 2 : உங்களைப் போல‌,அன்பு செய்றது எப்படி ?

இயேசு : நீங்கஅன்பாவே இருக்கணும். உள்ளத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும். உள்ளத்தில் உள்ளவையே செயல்களாய் வெளியே ரும். எப்படி அன்பு செய்றதுன்னு யோசிச்சா நீங்கசெயல்களை பாக்கறீங்க‌. அன்பாவே இருக்ககுங்க‌. அதுக்கு விண்ணத் ந்தை உதவுவார். அன்பாவே இருந்தா, எப்படி அன்பு செய்றதுன்னு நீங்கயோசிக்கதேவையில்லை. நீங்கசெய்றது எல்லாமே அன்பா தான் ரும்.

‌ 2 : ன்றி இயேசப்பா.. வேறஎன்னண்ணணும் இயேசப்பா

இயேசு : பைபிளை டி.. அதுலஎல்லாமே இருக்கு. வுளோடவார்த்தைகள் உன்கிட்டே டெய்லி பேசும். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வழிகாட்ட இருக்கார். இவ்ளோ தூரம் ந்து தான் பாக்கணும்ன்னு இல்லை.

‌ 11 : ஈஸோ.. பைபிளா ? அதென்ன‌ ? இவங்களை உங்களுக்கு தெரியுமா ? யாரந்தரிசுத்தஆவி ?

இயேசு : புன்னகைக்கிறார். நான் சொல்வது இன்னதென்று உங்களுக்கு இப்போ புரியாது. ஆனா இவங்களுக்கு புரியும். போயிட்டு வாங்க‌. அன்பாவே இருக்கிறதைப் போலஅழகானவிஷம் வேறஇல்லை. 

( ன்றி இயேசப்பா ) 

அவர்கள் விடைபெறுகிறார்கள்.

1 : இயேசப்பாவைப் பாத்தது ரொம்ப சூப்பர்டாஆனா அதை யாருமே நம்ப மாட்டாங்க.

2 : இயேசப்பா சொன்னது ரொம்ப சரிடா. நம்ம கைல பைபிள் இருக்கு. கைல வெண்ணையை வெச்சுட்டு நெய்க்கு அலையற முட்டாளா நாம இருக்கோம்.

3 : இனிமே நான் டோரேமான் பாக்கற நேரத்துல, பைபிள் தான் படிக்க போறேன். அன்பா இருக்கிறதைப் பற்றி நெறைய கத்துக்கப் போறேன்.

4 ; நானும் அப்படித் தான். கடவுளோட வார்த்தையைக் கைல வெச்சுட்டு கடவுளைத் தேடி அலையறது மிகப்பெரிய முட்டாள் தனம் தான்டா

  5 : ஒண்ணு மட்டும் புரிஞ்சுதுடா எனக்கு. இயேசுவைப் போல அன்பு செய்றதுங்கறது அன்பாகவே இருக்கிறது தான். ஏமிகார்மைக்கேல் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது. ஒரு டம்ளர் நிறைய சர்க்கரைத் தண்ணி இருந்தா சிந்தறதெல்லாம் இனிப்பு நீரா தான் இருக்கும். அதே போல தான், நாம அன்பாகவே இருந்தா செய்றதெல்லாம் அன்பா தான் இருக்கும். நாம கனிகளில் கவனம் செலுத்தறதை விட, மரத்துல கவனம் செலுத்துவோம்.

3 : சூப்பர் டா.. சீக்கிரம் வீட்டுக்கு போலாம் டா..மம்மி தேடுவாங்க. 

( மீண்டும் வாட்ச் மூலம் நிகழ்காலத்துக்கு ருகிறார்கள் )

காட்சி 5 :

( தூங்கிக் கொண்டிருக்கும் 1 எழுப்புறார் அம்மா )

அம்மா : டேய் .. எழும்புடா.. விடிஞ்சப்புறம் என்ன தூக்கம் உனக்கு.

1 : அம்மாநான்..( சுற்றும் முற்றும் பார்க்கிறான் )

அம்மா : என்னடா பாக்கறே ?

1 : கையிலிருக்கும் வாட்சைப் பார்க்கிறான்

அம்மா : வாட்சை ஏண்டா பாக்கறே.. அதான் ஓடாத ஓட்ட வாச்சாச்சே. கிளாக்கைப் பாரு மணி ஏழு ஆச்சு.

1 : சாரிம்மா.. தூங்கிட்டேன். 

அம்மா : சரி சரி.. வா.. டீ குடி.

1 : அம்மா. என் பைபிள் எங்கேம்மா ? 

அம்மா ; என்னடா.. அதிசயமா இருக்கு ? பைபிள் எல்லாம் கேக்கறே.

1 : இனிமே நான் பைபிளை ரொம்ப நேரம் படிக்க போறேன்மா.. இவ்ளோ நாள் அதை மிஸ் பண்ணிட்டேன். 

அம்மா : புன்னகைக்கிறான். நன்றி இயேசப்பா.. இப்பவாச்சும் இந்த பையனுக்கு நல்ல புத்தியைக் குடுத்தீங்களே..

1 : தோட்டத்துல ஏதோ பண்ணணும்ன்னு சொன்னீங்களேம்மா.. நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன். பண்ணிடலாம்.

( அம்மா புரியாமல் பார்க்கிறாள். )

பின்குரல் : 

அன்பு செய்வது முதல் நிலை

அன்பாகவே இருப்பது உயர் நிலை.

அன்பாகவே இருக்ககுவோம். இறைவார்த்தையும், தூயஆவியானரும் க்கு துணையாய் இருப்பார்கள்.

Posted in Articles, Sunday School

நவீன கருவிகள் ஆன்மீகத்தை வளர்க்கின்றன ?

நவீன கருவிகள்

ஆன்மீகத்தை வளர்க்கின்றன 

( பட்டிமன்றம் ஒன்றிப் பகிரப்பட்ட கருத்துகள் )

Image result for gadgets bible

  • ஒவ்வொரு காலகட்டத்திலும் எது அதிகமாய் பயன்பாட்டில் இருக்கிறதோ அதை நற்செய்தி அறிவித்தலுக்குப் பயன்படுத்தலாம். உதாரணமாக இயேசு வாழ்ந்த காலத்தில் விவசாயம், ஆடு மேய்த்தல், மீன்பிடித்தல் போன்றவற்றைக் கொண்டு உவமைகள், போதனைகள் செய்தார். இன்று நம்மிடம் இருக்கின்ற கேட்ஜெட்களை வைத்து நாம் நற்செய்தி அறிவித்தலைச் செய்யலாம். 
  • உலகெங்கும் நற்செய்திதை அறிவிப்பதை – கேட்ஜெட்கள் நிஜமாக்கித் தரும். ஒரு சின்ன படம் வரைந்து அதில் ஒரு நற்செய்தி வாசகத்தைப் போட்டு வாட்ஸப்பிலே போட்டு விட்டால் அது பல நூறு மக்களை சட்டென சென்று சேரும். அது வைரல் ஆகிவிட்டால் பல இலட்சம் மக்களை ஒரே நாளில் சென்றடைந்து விடும். உலகெங்கும் நற்செய்தி பரவ நம்மிடம் இருக்கு ஒரே வழி இந்த இணையமும், காட்ஜெட்களும் தான்.
  • செய்தியை மாற்றாமல் தருவதும் தொழில்நுட்பம் தான். உதாரணமாக பழைய காலத்தில் ஒருவர் நற்செய்தி அறிவிக்கிறார் என வைத்துக் கொள்வோம். ‘இயேசு மட்டுமே நம்மை மீட்க முடியும்’ என ஒருவர் பிரசங்கிப்பார். கேட்பவர் இன்னொருவரிடம் ‘இயேசு நம்மை மீட்க முடியும்’ என்பார். மட்டுமே என்பதை விட்டு விடுவார். அவர் இன்னொருவரிடம் சென்று ‘டேய்… இயேசுவும் நம்மை மீட்க முடியாம்டா’ என்பார். இயேசுவை ஒரு கூட்டத்தோடு சேர்த்து விடுவார். அவர் இன்னொருவரிடம் போய், ‘கேட்டியா.. இயேசு கூட நம்மை மீட்பாரு போல’ என்பார். இயேசு மட்டுமே நம்மை மீட்பார் என்பது, இயேசு கூட நம்மை மீட்க முடியும் போல என முடியும். ஆனால் இன்றைக்கு அப்படியல்ல. ஒரு வீடியோ எடுத்து அப்படியே ஃபேஸ் புக்ல போட்டா யாரு கேட்டாலும் ‘இயேசு மட்டுமே நம்மை மீட்க முடியும்’ எனும் செய்தி தான் வரும். இறைவனுடைய வார்த்தையை அப்படியே சிதைக்காமல் பகிர கேட்ஜெட்கள் பயன்படுகின்றன.
  • இறை வார்த்தையை எப்போது வேண்டுமானாலும் படிக்க கேட்ஜெட்கள் பயன்படுகின்றன. எல்லா போனிலும் பைபிள் ஆப்ஸ் இருக்கின்றன. எங்கே இருந்தாலும், எங்கே சென்றாலும், கிடைக்கின்ற நேரத்தில் சட்டென பைபிளை எடுத்து வாசிக்க முடியும். தமிழ் வசனத்தை பல மொழிபெயர்ப்புகளில் படித்து முழு உண்மையைப் புரிந்து கொள்ளலாம். அல்லது அப்படியே ஆங்கில பைபிளை புரட்டி இன்னும் தெளிவு படுத்திக் கொள்ளலாம். கேட்ஜெட் இல்லையேல் இதெல்லாம் சாத்தியமில்லை. ஒருவர் எங்கே போனாலும் பத்து பைபிளை தூக்கிக் கொண்டு போவதும், விளக்க உரை நூலை சுமந்து செல்வதும் சாத்தியமில்லை.
  • பைபிளிலுள்ள ஒரு வார்த்தையை தேடி எடுப்பது இன்றைக்கு வினாடி நேர வேலை. அதை கேட்ஜெட்கள் தான் சாத்தியமாக்கித் தந்திருக்கின்றன. பழைய காலத்தில் நாலு  நாள் தேட வேண்டிய விஷயத்தை இன்று நாலே வினாடிகளில் தொழில்நுட்பம் தந்து விடுகிறது. இது நமது ஆன்மீக அறிவையும், புரிதலையும் ஆழமாக்க உதவுகிறது.
  • மிஷனரிகள், ஆன்மீக தலைவர்கள் பல காலகட்டங்களில் சொன்ன செய்திகள், தகவல்கள், உரைகள், எழுதிய நூல்கள் எல்லாம் இன்றைக்கு நமக்கு விரல் நுனியில் கிடைக்கிறது. வாட்சமன் நீ இதைப்பற்றி இப்படி சொல்லியிருக்கிறாரே, சேக் பூனன் இபப்டி சொல்கிறாரே ! என ஒரு தெளிவைப் பெற்றுக் கொள்ளவும் கேட்ஜெட்கள் துணை செய்கின்றன. 
  • இன்றைக்கு வாட்சப்பிலும், ஃபேஸ்புக்கிலும் ஏகப்பட்ட ‘தினம் ஒரு வசனம்’ தினம் ஒரு செய்தி என இறைவார்த்தைப் பகிர்வுகள் வருகின்றன. அதில் பல செய்திகள் நமது தினத்தை அர்த்தமுள்ளதாக்குகின்றன. ஆன்மீக ஆழத்தை அதிகரிக்கின்றன. கிறிஸ்தவ போதனையை நமக்கு விளக்கிச் சொல்கின்றன. 
  • ஏன் நம்ம சர்ச்ல கூட ‘லைவ்’ சர்வீஸ் நடந்துது. சர்ச்க்கு வர முடியாதவங்க கூட வீட்ல இருந்து மொபைல்லயோ, டிவிலயோ அதைப் பாக்க முடிஞ்சுது ! கேட்ஜெட் இல்லேன்னா இதெல்லாம் சாத்தியமா ? லெந்த் நாட்கள்ல வெள்ளிக்கிழமை நம்ம சர்ச்ல நடந்த மெசேஜ் எல்லாம் இப்போ யூடூப்ல இருக்கு. போய் கேட்டுக்கலாம். இதெல்லாம் காட்ஜெட்களோட பயன் தானே !
  • இப்போ ஆடியோ பைபிள் நிறைய வந்திருக்கு. கார்ல போகும்போ, இல்லேன்னா ஓய்வா இருக்கும்போ அப்படியே பிளே பண்ணி கவனமா கேட்டா பைபிள் நம்ம செவி வழியா மனசுக்குள்ள போகும். ஏன் கண் ஆபரேஷன் பண்ணிட்டு வீட்ல படுத்திருக்கிறவங்க கூட பைபிள் வாசிக்க முடியலேயேங்கற குறை இல்லை. பைபிளே தன்னை வாசித்துக் காட்டும். இதெல்லாம் கேட்ஜெட்டோட பயன் தான்
  • எப்பவும் இல்லாத அளவுக்கு இன்னிக்கு  இபுக்ஸ்,பிளாக்ஸ், சமூக வலைத்தளம் எல்லாம் ஆன்மீக செய்தியை மக்களுக்கு பகிர்ந்து குடுக்குது. ஆன்மீக தாகத்தை மக்களுக்கு அதிகரிக்குது. ஆன்மீக தேடலை உருவாக்குது. ஆன்லைன் டிவி இன்னிக்கு நிறைய இருக்கு. கிறிஸ்தவ ஆன்லைன் சேனல்கள் பல இலட்சம் மக்களை சென்றடையுது. இதெல்லாம் கேட்ஜெட் செய்யும் பயன்கள் தானே
  • இன்னிக்கு கேட்ஜெட்ஸ்ல இருக்கிற நிறைய பைபிள் கேம்ஸ், பைபிள் குறுக்கெழுத்துப் புதிர்கள், போட்டிகள், விளையாட்டுகள் எல்லாமே  ஆன்மீக அறிவை வளர்க்கின்றன. குழந்தைகளுக்கு விளையாட்டுப் போக்கில் நற்செய்தியை அறிவிக்க இவையெல்லாம் உதவுகின்றன.
  • நம்ம சர்ச்க்கே பேஜ் இருக்கு, ஃபேஸ் புக் குரூப் இருக்கு, வாட்ஸப் குரூப் இருக்கு, யூடியூப் இருக்கு, ஆன்மீகத்தை வளர்க்காதுன்னா இதெல்லாம் எதுக்கு வெச்சிருக்கணும் ? இதுல இருந்தே தெரியலையா கேட்ஜெட்ஸ் ஆன்மீகத்தை வளர்க்குதுன்னு 
  • ப்ரேயர் மேட் – என ஒரு ஆப் இருக்கிறது, ப்ரேயர் பாயிண்ட்களையெல்லாம் எழுதி வைத்தால் நம்மை அது ஞாபகமூட்டும்.வேலை நெருக்கடியில் நமக்கு ‘டேய்.. பிரேயர் டைம்’ என அலாரம் கொடுத்து அழைக்கும். 
  • கடவுள் ஒரு படைப்பாளி. அவர் சாயலாக படைக்கப்பட்ட மனிதனும் படைப்பாளியே. ஆனால் படைக்கின்றவற்றை இறைவனின் புகழுக்காகவும், மனுக்குல நன்மைக்காகவும் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ள இயலாதவர்கள் ஒட்டு மொத்தமாக கேட்ஜெட்களின் மேல் பழி போடக் கூடாது என கூறி முடிக்கிறேன்

நன்றி

Posted in Articles, Sunday School

SKIT : இயேசு பிறக்கப் போகிறார்

இயேசு பிறக்கப் போகிறார்

 

Image result for heaven

காட்சி 1

( விண்ணகத்தில் தந்தை அவசர கூட்டம் அழைக்கிறார். எல்லோரும் அந்த மீட்டிங்கிற்கு செல்கின்றனர். விண்ணகம் பரபரப்பாகிறது)

தூதர் 1 : எங்கே அவசரமா ஓடிட்டிருக்கீங்க…

கபிரியேல் : ரொம்ப அவசரம்.. நிக்க நேரமில்லை… யஹோவா கூப்பிட்டிருக்காரு. ஏதோ அவசர மீட்டிங்காம்.

தூதர் : ஓ.. அப்படியா.. அப்போ நானும் வரேன்.. நானும் வரேன்.

கபிரியேல் : உன்னை கூப்பிட்டாரா ? கூப்டாத இடத்துக்கெல்லாம் வரவேண்டாம்..

தூதர் : கூப்பிடாமலேயே நான் வருவேன்… நானும் தூதர் தான் .. நீயும் தூதர் தான்…. அவரு என்னை ஒண்ணும் சொல்ல மாட்டாரு.. ஆமா.. என்ன விஷயம் ?

கபிரியேல் : தெரியல.. ஆனா. ஏதோ ஒரு முக்கியமான விஷயம்ன்னு மட்டும் தெரியும்.

தூதர் : முக்கியமான விஷயம்ன்னா என்னைக் கூப்பிடாம இருக்க மாட்டாரே… ம்ம்.. ஜீசஸ் கிட்டே கேட்டு பாக்கறேன்.

கபிரியேல் : அவரும் மீட்டிங்ல தான் இருப்பாரு. தந்தை, மகன் தூய ஆவி மூணுபேருமே சேர்ந்து தான் மீட்டிங் வைக்கிறாங்க.

தூதர் : ஓ… மை காட்….அப்படியா. அப்போ கண்டிப்பா வந்தே ஆகணும்…

( அப்போது சில வான தூதர்கள் வருகின்றனர் )

வானதூதர் : என்ன கபிரியேல்.. இங்கே நிக்கறீங்க.. டைம் ஆச்சு.. சீக்கிரம் வாங்க.

தூதர் : நீங்க எங்க போறீங்க ?

வா : நாங்க மீட்டிங் போறோம்.. கபிரியேலும் அங்க தான் போறாரு.. நீங்க எங்க போறீங்க ?

தூதர் : நானும் மீட்டிங் தான் போறேன்.

வா : உங்களை கூப்பிட்ட மாதிரி தெரியலையே.

தூதர் : எல்லாருக்கும் என்னை பாத்தா இளக்காரமா தெரியுதா ? அழைப்பு இல்லாமலேயே நான் வரலாம்.. எனக்கு ஸ்பெஷல் பர்மிஷன் உண்டு.

வா : அழைப்பு இருந்தா வாங்க.. இல்லேன்னா எதுக்கு ? உங்களோட வேலையை செஞ்சிட்டு அமைதியா இருங்க.

தூதர் : அவசரத்துல என்னை கூப்பிட மறந்திருப்பாங்க.. ஒரே வீட்ல இருக்கோம்.. நான் அழைப்பு இல்லேன்னெல்லாம் கோச்சுக்க மாட்டேன்… நான் இல்லேன்னா மீட்டிங்ல ரொம்ப கஷ்டப்படுவீங்க. சோ.. நான் வரேன்.

( அப்போது கனவு தூதர் வருகிறார் )

தூதர் : ஹே.. கனவு தூதர்.. எப்படி இருக்கீங்க ? நல்லா தூங்கறீங்களா ?

கதூ : தூங்கறதா ? எல்லாரும் தூங்கற நேரத்துல கனவு கொடுத்து கொடுத்து, என்னோட தூக்கமே போயிடுச்சு. பகல்ல தூங்கி தூங்கி வழியறேன்

தூதர் : ம்ம்..ம்ம் எனக்கு கொஞ்ச நாளா கனவு சுவாரஸ்யமாவே இல்லை.. என்னன்னு கொஞ்சம் பாருங்க. நல்ல சுவாரஸ்யமான கனவுகளை கொஞ்சம் அனுப்பி வைங்க. பயமுறுத்தற கனவெல்லாம் அனுப்பாதீங்க…

க.தூ : நான் சும்மா சும்மா அனுப்பமாட்டேன். தந்தை சொல்லணும்.. அப்போ தான் நல்ல கனவா பாத்து அனுப்பி வைப்பேன்.

தூதர் : கனவுல ஐஸ்கிரீம் குடுத்துட்டு சாப்டற நேரத்துல கனவை கட் பண்ணிடாதீங்க…

க.தூ : உனக்கு கனவுல கூட ஐஸ்கிரீம் கிடையாது….

தூதர் : யஹோவா கூப்பிட்டாருன்னு சொன்னதும் கிண்டலைப் பாருங்க… போங்க.. போங்க.. உங்களுக்கு தான் இன்னிக்கு பஞ்சாயத்து

க.தூ : நீங்களும் வாங்க… எல்லாருமே தந்தை முன்னாடி ஒண்ணு தானே.. அவரை உங்களுக்கு தெரியாதா.. வாங்க..

( அப்போது ஏசாயா வருகிறார் )

தூதர் : என்ன ஏசாயா ? தந்தை மீட்டிங் கூப்பிட்டிருக்காரா ?

ஏசாயா : அட.. உனக்கெப்படி தெரியும்…. என்னை விட பெரிய இறைவாக்கினரா இருப்பே போல

தூதர் : கிண்டல் பண்ணாதீங்க ? என்ன விஷயமாம் ?

ஏசாயா : எனக்கு தெரியல. பழைய இறைவாக்குகளோட லிஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வர சொன்னாரு. ஏதோ ரிவியூ பண்ண போறாருன்னு நினைக்கிறேன்.

தூதர் : ம்ம்ம்.. போயிட்டு வாங்க… வேற யாரையும் கூப்பிடலயா … எலிசா , ஆமோஸ், எரேமியா, எசேக்கியேல்… யாரையும் காணோம் ?

எசாயா : எனக்கு தெரியலை, என்னை கூப்பிட்டு உடனே வரச் சொன்னாரு. அதான் போயிட்டிருக்கேன்.

தூதர் : ம்ம்.. சரி..சரி.. என்ன தான் நடக்குதுன்னு பாப்போம். போலாம்

காட்சி 2

Image result for heaven

( தந்தை பேசுகிறார் )

தந்தை : இன்னிக்கு மிக முக்கியமான ஒரு அறிவிப்பைச் சொல்ல போறேன். அதுக்காக தான் உங்களையெல்லாம் கூப்பிட்டிருக்கேன். மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த செய்தி இது…. ஜீசஸை கொஞ்ச நாளைக்கு நாம பிரிஞ்சிருக்கப் போறோம்.

எல்லோரும் : வாட்…. ஜீசசை பிரிஞ்சா ? என்ன சொல்றீங்க ! அவரு இல்லாம சொர்க்கம் சொர்க்கமா இருக்காதே….

தந்தை : ஆமா. உண்மை தான்…. ஆனாலும்….

தூதர்கள் : இதுவரைக்கும் சொர்க்கம் இயேசு இல்லாம இருந்ததே இல்லையே…. நினைச்சுப் பாக்கவே முடியலையே…

தந்தை : ஆமா.. ஆனா… இது ஒரு முக்கியமான முடிவு.

தூதர் : இயேசு எங்கே போறாரு ? பிரபஞ்சத்துல டூருக்கு போறாரா ? இல்லை சாத்தானோட வாருக்கு போறாரா ?

தந்தை : ரெண்டும் இல்லை.. பூமிக்கு போறாரு

கபிரியேல் : பூமிக்கா… பூமில அப்படி என்ன தான் இருக்கு ? அங்கே ஒரு செகண்ட்ல போய்ட்டு வரலாமே… ஏன் கொஞ்ச நாள் பிரிஞ்சிருக்கணும் ?

தந்தை : மீட்பின் திட்டத்தை செயல்படுத்த இயேசுவை பூமிக்கு அனுப்பப் போறேன். என்ன இயேசு.. ஓகே வா

இயேசு : தந்தையே உம் விருப்பமே நடக்கட்டும். என் சித்தமல்ல.. உம் சித்தமே முக்கியம்.

தந்தை : பூமியில பாவங்கள் நிறைஞ்சு போச்சு. இதோ எசாயா மாதிரி நிறைய பேரை பூமிக்கு அனுப்பி மக்களுக்கு இறைவாக்கு சொல்லிப் பாத்தாச்சு. மக்கள் திருந்தற மாதிரி இல்லை. தண்டிச்சும் பாத்தாச்சு மக்கள் மேலும் மேலும் பாவம் செஞ்சி அழிவுக்கு ஆயத்தமாயிட்டாங்க

தூதன் : அதனால இயேசு போய் எல்லாரையும் அழிக்க போறாரா….

தந்தை : இல்லை.. மீட்க போறாரு…. ஒருவனும் கெட்டுப் போவது நமது விருப்பமில்லையே…. மீட்கப்படுவது தானே நம்ம விருப்பம். எல்லாரோட விருப்பமும் அது தானே.

இயேசு : மனம் திரும்பும் ஒவ்வொரு பாவியைக் குறித்தும் நாம சந்தோசப்படறதும், தூதர்கள் ஆடிப் பாடறதும் வழக்கம் தானே…

தந்தை : ஒரு பாவிக்கே அப்படின்னா.. ஒட்டு மொத்த மனுக்குலத்துக்கும் ஒரு மீட்பின் அனுபவம் கிடைச்சா எப்படி இருக்கும்.

தூதர்கள் : ஐயோ.. நினைச்சாலே சந்தோசத்துல சிறகெல்லாம் படபடங்குதே….

தூதன் : அப்போ சீக்கிரம் போய் மீட்டுட்டு வாங்க ஜீசஸ்.. வெள்ளைக் குதிரைல தானே போறீங்க ?

தந்தை : இல்லை அவரு மன்னனா போகல.. மனிதனா போறாரு…

க.தூதன் : வாட்.. மனிதனாவா ? நான் ஏதும் கனவு காணலையே ?

தந்தை : இல்லை. கனவு இல்லை. இயேசு மனிதனா போய் பூமியில வாழ்வாரு.

தூதர்கள் : வாட்…. ? வாழ்வாரா ? ஏன் ? அதுல என்ன பயன் ? ஏன் மனிதனா போய் வாழணும் ?

தந்தை : ஒரு மனிதன் எப்படி வாழணும்ங்கறதை ஆதாம் மூலமா நான் செயல்படுத்த நினைச்சேன். அது பிளாப் ஆயிடுச்சி. அதனால இப்போ என் பையன் மூலமாகவே அதை உலகத்துக்கு சொல்லப் போறேன்.

ஏசாயா : ஏன் மனிதனா வாழ்ந்து தான் சொல்லணுமா ? யாராவது அட்வைஸ் பண்ணினா போதுமே…

தந்தை : என்ன ஏசாயா… நீங்களே இப்படி சொல்றீங்க ?.. நீங்க சொல்லாத அட்வைஸா ? “பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என்முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன்’ ந்னு கூட நீங்க மக்களை அட்வைஸ் பண்ணினீங்களே.. மக்கள் கேட்டாங்களா என்ன ?

ஏசாயா : ம்ம்ம்.. இருந்தாலும் .. இயேசுவே மனிதனா போறது…..

தூதன் : ஆமா.. இப்போ ஏதும் தெரியாத மாதிரி நடிக்க வேண்டியது.. உங்களுக்கு தெரியாதா ஏசாயா ?

ஏசாயா : ஏய்.. கூப்பிடாத கூட்டத்துக்கு வந்து குற்றம் சொல்லக் கூடாது….

தூதன் : நானா குற்றம் சொல்றேன் ? “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” ந்னு நானா சொன்னேன்.. “ நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.” ந்னு நானா சொன்னேன். நீங்களே எல்லாம் தீர்க்கத் தரிசனமா சொல்ல வேண்டியது.. அப்புறம் நடிக்க வேண்டியது..

ஏசாயா : ஓ… தந்தையே… இதெல்லாம்…. நான் சொன்னது இயேசுவைப் பற்றியா ?

தந்தை : புன்னகையுடன்…ஆமா ஏசாயா.. உனக்கே அது தெரியாது. நீ என்னோட இறைவார்த்தையைச் சொன்னவன்…

ஏசாயா : அப்போ.. இயேசு.. குழந்தையாவா பிறப்பாரு ?

தந்தை : ஆமா… ஒரு பெண்ணோட வயிற்றில கருவாகி, உருவாகி, மனுவாகி பிறப்பார்.

கபிரியேல் : ஐயோ.. பாவம்.. அந்த பாக்கிவதி யாரோ…

தந்தை : மரியா… யூதேயாவில இருக்கிற மரியா… கன்னியான அவர்களோட மகனா தூய ஆவியால் பிறக்கப் போகிறார் இயேசு. ஏன்னா அவர் மனிதனா பிறந்தாலும் கடவுளால பிறக்கணும். அப்போ தான் ஒட்டு மொத்த மனுக்குலத்தையும் மீட்க முடியும்.

தூதர் : ம்ம்ம்… ஓகே… தந்தையே…மரியா யாரு ? அரசியா ? இளவரசியா ? தீர்க்கதரிசியா ?

இயேசு : எதுவுமே இல்லை… அவள் ஒரு ஏழைப் பொண்ணு

தூதர் : என்ன ??? இயேசுவே நீங்க.. ஒரு ஏழைப் பொண்ணோட பையனாவா பொறக்கப் போறீங்க ? இங்கே இப்படி இருக்கிற நீங்க, அப்படி ஆக போறீங்களா ?

இயேசு : ஏழையோடும், பாவியோடும் வாழ்ந்தா தான் அவங்க வாழ்க்கையை மாற்ற முடியும். நான் போறது மாளிகையில துயில இல்லை, மனுக்குலத்தை மீட்க.

வா.தூ : ஒரு நல்ல மாளிகைலயாவது பிறந்து வளருங்க இயேசுவே.. இல்லேன்னா…

தந்தை : மாளிகையா ? வீடு கூட கிடையாது…

வா.தூ : அப்படின்னா…

தந்தை : ஒரு கால்நடைத் தொழுவத்துல தான் இயேசு பிறக்க போறாரு. எளிமையின் உச்சம் தான் இயேசுவோட பிறப்பா இருக்கப் போவுது. தாழ்மையின் உச்சம் தான் அவரோட வாழ்க்கையா இருக்கப் போவுது.

கபிரியேல் : ஓ… அப்படியா…. மரியா கிட்டே சொல்லியாச்சா ?

இயேசு : இல்லை… அதை நீங்க தான் சொல்ல போறீங்க..

கபிரியேல் : நானா.. உண்மையாவா.. அந்த பாக்கியம் எனக்கா ?

தந்தை : ஆமா.. அந்த ஏழைப் பெண்ணிடம் போய் நீங்க விஷயத்தைச் சொல்லுங்க. குழந்தைக்கு இம்மானுவேல் ந்னு பெயர் போட சொல்லுங்க. பரிசுத்த ஆவியால் தான் கருத்தரிப்பார்ன்னும் சொல்லிடுங்க.

கபிரியேல் : அருள் மிகப் பெற்றவர் அவர்.. அதை அவரிடம் சொல்வது என் பாக்கியம். அவங்க கணவன் கூடவே இருப்பாரா ?

தந்தை : அவருக்கு கல்யாணம் ஆகல.. கன்னிப்பெண். இப்போ தான் என்கேஜ்மெண்ட் ஆயிருக்கு…

தூதர் : போச்சுடா… கல்யாணம் ஆகாம தாயாக யார் தான் சம்மதிப்பாங்க ?

தந்தை : மரியா சம்மதிப்பாங்க.. அவங்க இறை திட்டத்துல உலக துவக்கத்துக்கு முன்னாடியே இருக்காங்க

க தூதர் : இருந்தாலும் மண ஒப்பந்தம் ஆகியிருக்காங்கல்ல.. அவங்க கணவன் தப்பா நினைக்க மாட்டாரா ?

தந்தை : அவர் கிட்டே நீங்க தான் சொல்ல போறீங்க.. இறை திட்டத்தை…

க.தூ : ஓ.. சூப்பர்.. நானே சொல்றேன்.. நானே சொல்றேன்… சூப்பர் கனவு ஒண்ணு குடுத்துடலாம்.

தந்தை : ரொம்ப குழப்பமான கனவெல்லாம் வேண்டாம். அப்புறம் சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்லாம விடுவீங்க. “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” ந்னு நீங்க தெளிவா சொல்லிடுங்க.

க.தூ : ஓகே.. கண்டிப்பா.. கலக்கிடலாம்… , “ என்ன சொன்னீங்க… தாவீதின் மகனே.. உம் மனைவி…” (சொல்லிப் பார்க்கிறார்.)

இயேசு : நல்லா படிச்சுக்கோங்க.. என்னோட மண்ணக தந்தை அவரு.. தாவீதோட பரம்பரையில வந்தவரு. ஏழை கார்ப்பெண்டர்….

க.தூ : அதெல்லாம் நான் நல்லா படிச்சுப்பேன்.. ஹெவன் சாங்ஸ் எல்லாம் எனக்கு அத்துபடி….

தூதர்கள் : இயேசு பொறந்தாருங்கற விஷயம் கேட்டா மக்கள் எல்லாம் வந்து கூடிடுவாங்களே… பிரபஞ்சத்தோட தலைவர்.. சர்வத்துக்கும் ஆண்டவர்.. பூமியில பிறக்கிறது எவ்ளோ பெரிய விஷயம்… மக்களுக்கு யாரு சொல்றது.

தந்தை : நீங்க சொல்லுங்க…

தூதர்கள் : கண்டிப்பா.. கண்டிப்பா.. நாங்க போய் அரண்மனையில சொல்லி எல்லாருக்கும் அறிவிக்க சொல்லவா ?

தந்தை : நோ..நோ.. வெறும் கொஞ்சம் ஆட்டிடையர்களுக்கு மட்டும் நீங்க சொன்னா போதும். “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” ந்னு தெளிவா சொல்லிடுங்க.

தூதர்கள் : கண்டிப்பா தந்தையே… அப்படியே நாங்க ஒரு பாட்டு பாடலாமா ?

தந்தை : என்ன பாட்டு பாட போறீங்க..

தூதர்கள் : “உன்னதத்தில் கடவுளுக்கு
மாட்சி உரித்தாகுக!
உலகில் அவருக்கு உகந்தோருக்கு
அமைதி உண்டாகுக!” ந்னு பாடலாமா ?

தந்தை : பாடலாம்.. பாடலாம்…

இயேசு : குட்…குட்…. அப்போ எல்லாம் தயாரா… ?

தந்தை : நட்சத்திரம் எங்கே போச்சு… ஸ்டார்.. ஸ்டார்..

ஸ்டார் : தந்தையே…

தந்தை : இயேசு பிறக்கும்போ உன்னோட வெளிச்சம் அந்த குடிசையை தொடணும்.

ஸ்டார் : கண்டிப்பா.. ஓளிக்கே ஒளி காட்டறது எவ்வளவு மகிழ்ச்சி

தந்தை : மூணு வானியல் ஞானிகள் வருவாங்க. அவர்களுக்கு வழிகாட்டணும்.

ஸ்டார் : பண்ணிடலாம் கடவுளே..

தந்தை : வெரிகுட்… இந்த மீட்பின் திட்டத்தில் .. உங்க எல்லாருக்கும் என்னென்ன பங்கு, என்ன ரோல் ந்னு சொல்லிட்டேன். யாருக்காச்சும் ஏதாவது சந்தேகம் இருக்கா ?

தூதர் : எனக்கு இருக்கு தந்தையே

தந்தை : கேளுங்க

தூதர் : எவ்ளோ நாள் இயேசு பூமில இருப்பாரு ? எப்போ வருவாரு திரும்ப ?

தந்தை : அவரு 33 வருஷம் பூமில இருப்பாரு… கொல்லப்படும் வரை

க.தூ : வாட்.. கொல்லப்படும் வரையா ? என்ன சொல்றீங்க ?

தந்தை : ஆமா. இயேசு பூமியில மக்களால் கொல்லப்படுவார். சிலுவையில் அறையப்படுவார். எள்ளி நகைக்கப்படுவார். பழி சுமப்பார். பாவம் சுமப்பார்… பாவியாகவே உருமாறி சிலுவையில் தொங்குவார்.

( எல்லோரும் அதிர்ச்சியில் ஒருவருக்கொருவர் பார்க்கின்றனர் )

இயேசு : ஏன் எல்லோரும் அமைதியாயிட்டீங்க. இது தந்தையோட மீட்பின் திட்டம். அதுல நாமெல்லாம் பங்குபெற்றிருப்பது மகிழ்ச்சி. ஆனா.. எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்

தந்தை : என்ன வருத்தம்.

இயேசு : பாவத்தை சுமந்து, பாவியாகவே சிலுவையில் தொங்கும் அந்த மூணு மணி நேரம் அப்பா உங்க அன்பை விட்டு விலகி.. நரக வேதனை அனுபவிப்பேனே. உங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் நான் தொங்குவேனே.. அதான் என்னோட கவலை.

தந்தை : பாவத்தை சுமக்காமல் மக்களுக்கு மீட்பு இல்லை. பாவத்தை நீ சுமக்கும்போ என்னோடு உறவாட முடியாது. பாவமும் பரிசுத்தமும் ஒரே இடத்தில் வாழ முடியாது. அந்த மூன்று மணி நேர பிரிவு உன்னை விட அதிகம் எனக்கு வலி தரக் கூடியது. உனக்கு விருப்பமில்லையேல் இங்கேயே இருக்கலாம். எப்போதும் என் அருகிலேயே இருக்கலாம். ஆனால்…

இயேசு : ஆனால் ?

தந்தை : பூலோக மக்கள் எல்லாம் பாவத்தில் அழிவார்கள். அவர்களுக்கு மீட்பு கிடைக்காது.

இயேசு : தந்தையே.. மக்களின் மீட்பே முக்கியம். நான் போகிறேன். வலிகள் எதுவரினும் தாங்குவேன்.

தந்தை : நீ சென்றபின் என்னோடு உரையாடவேண்டுமெனில் செபம் மட்டுமே உண்டு.

இயேசு : நான் தனிமை கண்டுபிடித்து உங்களோடு உரையாடுவேன்

தந்தை : பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதும், மரணம் வரை அவர்களே உன் பெற்றோர் என்பதும் உனக்குத் தெரியும் என நினைக்கிறேன்.

இயேசு : தெரியும் தந்தையே… நான் மக்கள் மீது கொண்ட அன்பு மிகப்பெரிது. மீட்புப் பணிக்காக காத்திருக்கிறேன்.

தந்தை : அப்போ எல்லோரும் ரெடியா ? மீட்பின் திட்டத்துக்கு மீட்பரை பூமிக்கு அனுப்ப எல்லாரும் ரெடியா ?

தூதர்கள் : ரெடி தந்தையே…

தந்தை : கபிரியேல் நீங்க.. முதல்ல போங்க… சரியா…

கபிரியேல் : இதோ….

காட்சி 3

 

Image result for gabriel and mary

( பின்குரல் )

கபிரியேல் : அருள் மிகப்பெற்றவரே.. வாழ்க

மரியா : ஐயோ.. யார் நீங்க… என்ன நடக்குது இங்கே…

( முற்றும் )