Posted in Articles, Christianity, Sunday School

Skit : எசேக்கியேலுடன் ஒரு பொழுது

எசேக்கியேல் 4

 

Image result for ezekiel 4

 

காட்சி 1:

ந 1 : என்னடா ஒரே யோசனையா இருக்கே ?

ந 2 : இல்லடா… எசேக்கியேல் பற்றி யோசிச்சிட்டிருந்தேன்…

ந 1 : எசேக்கியேலா ? யாருடா ? நம்ம குரூப்ல அப்படி யாரும் இல்லையே

ந 3 : டேய்.. பைபிள்ல இருக்கிற எசேக்கியேல் பற்றி சொல்றான்னு நினைக்கிறேன்.

ந 2 : ஆமாடா.. அவரைப் பற்றி தான் சொல்றேன். த கிரேட் ப்ராஃபட்

ந 4 : அவரைப் பற்றி இப்போ எதுக்கு ரொம்ப யோசிச்சு குழம்பிட்டிருக்கே ?

ந 2 : இல்ல.. செல்லப்பா அங்கிள் எசேக்கியேல் பற்றி படிச்சிட்டு வர சொன்னாருல்ல.. அதான்… 

ந 5 : ஆமாடா.. நானும் போய் வாசிச்சு பாத்தேன். ஒண்ணும் புரியல. கதை மாதிரி இருந்தா தான் புரியும்… இது பாடபுக் மாதிரி கஷ்டமா இருக்கு.

ந 2 : அதான்டா நான் யோசிச்சிட்டு இருக்கேன்.. 

ந 6 : எசேக்கியேலைப் பற்றி தெரிஞ்சுக்க என்ன பண்ணலாம் ? உங்ககிட்ட ஏதாச்சும் ஸ்டோரி புக்ஸ் இருக்கா ? இல்ல ஏதாச்சும் அவரைப் பற்றிய வீடியோ கிடைக்குமா ?

ந 3 : அதெல்லாம் வேலைக்காவாது… அதெல்லாம் பைபிளை விட காம்பிகேட்டட் டா.. 

ந 7 : எசேக்கியேலைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கணும்ன்னா ஒரே ஒரு வழி தான் இருக்கு

ந 1 & 3.. : என்ன வழிடா ? சொல்லு சொல்லு

ந 7 : நாம எசேக்கியேலையே பாத்து கேக்கறது தான் !

ந 4 : அடப்போடா இவனே… இவன் நம்மள பார்சல் பண்ணி பரலோகம் அனுப்பிடுவான் போல. நேரா மேல எசேக்கியேலைப் பாத்துக்கோன்னு..

ந 7 : அதான் இல்ல… எங்க அப்பா ஒரு சயின்டிஸ்ட் ந்னு உங்களுக்கு தெரியும்ல…

ந 5 : தெரியாதே…

ந 7 : ..ஆ.. அது.. இனிமே தெரிய வந்துடும்.

ந 5 : சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

ந 7 : சொல்றேன் கவனமா கேளுங்க. அவரு ஒரு டைம் மெஷின் கண்டு பிடிச்சிருக்காரு. 

ந 6 : அதை வெச்சு பழைய காலத்துக்கு போய் கம்மி விலையில பெட்ரோல் வாங்கிட்டு வராரா ?

ந 7 : கடிக்காதே…. நாம அந்த டைம் மெஷின்ல ஏறி எசேக்கியேல் காலத்துக்கு போனா … 

ந 3 : அப்படியே எசேக்கியேல் கிட்டயே டீட்டெயில்ஸ் கேக்கலாங்கறியா…

ந 7 : யெஸ்.. எஸ்… ரெடியா ?

ந 1 : எனக்கென்னவோ பயமா இருக்கு… 

ந 7 : ஹேய்.. பயப்படாம வாங்க.. ஒரு டிரை.. இல்லேன்னா திரும்பி வந்துடலாம்.

ந 1 : திரும்பி வர முடியாட்டா ?

ந 7 : பாசிடிவ்… ஆ திங்க் பண்ணுங்க… போலாம்.. யாருக்கெல்லாம் பயம் இல்லையோ.. அவங்க எல்லாம் வாங்க. மத்தவங்க வீட்டுக்கு போய் நாலு டோக்கன் படிங்க.

எல்லோரும் : இல்ல.. நாங்க எல்லாம் வரோம்.

ந 7 : ம்ம்.. டோக்கன் படிக்க சொன்ன மட்டும் எஸ்கேப் ஆயிடுவீங்களே.. சரி வாங்க வாங்க…

*

காட்சி 2 :

ந 7 : நாம எசேக்கியேல் காலத்துக்கு வந்திருக்கோம். உங்க கையில இருக்கிற வாட்ச் ஒரு லேங்குவேஜ் வாய்ஸ் கன்வர்ட்டர். அதுல ஹீப்ரு ந்னு போட்டுக்கோங்க. ரிசீவிங்ல தமிழ் போட்டுக்கோங்க.

ந 3 : அது எதுக்கு ? 

ந 7 : அவங்க ஹீப்ரு ல பேசறது நமக்கு தமிழ்ல கேக்கும். நாம தமிழ்ல பேசறது அவங்களுக்கு ஹீப்ரு ல கேக்கும்.

ந 6 : ஓ.. அவங்க ஹீப்ரு தான் பேசுவாங்கல்ல.. மறந்துட்டேன்.

ந 2 : சரி.. சரி.. அங்கே ஒருத்தர் போறாரு.. அவர் கிட்டே கேப்போம். ஐயா..ஐயா மிஸ்டர் எசேக்கியேல் வீடு எங்க இருக்கு ?

( அவர் பேசாமல் போகிறார். இது ஆடியன்ஸைப் பார்த்து கேக்கறது. )

ந 3 : அதோ தூரத்துல ஒருத்தரு என்னமோ பண்ணிட்டிருக்காரு. அவர் கிட்டே போய் கேப்போம். வாங்க.

( அங்கே எசேக்கியேல் உட்கார்ந்து ஒரு செங்கல்லின் மேல் என்னவோ வரைந்து கொண்டிருக்கிறார் )

ந 3 : டேய்.. இவர்கிட்டே கேக்கணுமா ? பாரு இவ்ளோ வயசாச்சு.. செங்கல்ல கிறுக்கி விளையாடிட்டிருக்காரு..

ந 4 : ஆமா.. இது சரியாப் படலையே… ம்ம்ம்ம் வயசான குழந்தையோ ? 

ந 5 : பரவாயில்ல.. எப்படியோ இருக்கட்டும். அவர் கிட்டே கேட்டுப் பாப்போம். இங்க வேற யாரும் கண்ணுக்கு தட்டுப்படல.

ந 2 : ஐயா.. ஐயா

எசே : ( நிமிர்ந்து பார்க்கிறார் ) ( யாரு நீங்க என்ன வேணும் ?  என சைகையால் கேட்கிறார். )

ந 4 : ( நண்பர்களிடம் ) ஹேய்.. இதைப் பாரு… இவரு செங்கல்மேல எருசலேமோட மேப்பை வரைஞ்சிட்டிருக்காரு.

ந 3 : சோ..வாட்…

ந 4 : சோ வாட்டா ? எசேக்கியேல் நாலாம் அதிகாரத்தை யோசிச்சு பாரு..

ந 3 : அட.. ஆமா.. அப்போ இவரு தான்…

எசேக்கியேல் : ( குழப்பமாக ) சைகையால் – என்ன ? நீங்கல்லாம் யாரு ? என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும் ? 

ந 2 : ஐயா.. நீங்க தான் எசேக்கியேலா ? 

எசே : (சைகை) ஆமா…  நீங்க யாரு..  

ந 3 : ஐயா.. நாங்க ரொம்ப தூரத்துலேருந்து வரோம்.. உங்களைப் பாக்க தான் வந்தோம்.

எசே : என்னைப் பாக்கவா ? நீங்க மன்னனோட ஒற்றர்களா ? இல்லை எதிரிகளோட வீரர்களா ?

ந 1 : ( நண்பரிடம் ) ஏண்டா.. இவரு பேசமாட்டாரா ? பெரிய இறைவாக்கினர்ன்னு சொன்னாங்க..

ந 4 : எனக்கு இப்போ தான் ஞாபகத்துக்கு வருது… 

ந 1 : என்னது ? வீட்ல ஏதாச்சும் மறந்து வெச்சுட்டு வந்துட்டியா ?

ந 4 : அதில்லடா…. எசேக்கியேல் 3ம் அதிகாரத்துல கடைசில ஒரு வசனம் வரும். “நான் உன் நாவை உன் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளச் செய்வேன். நீயும் ஊமையாகி, அவர்களைக் கடிந்துகொள்ள முடியாதவன் ஆகிவிடுவாய்” ந்னு கடவுள் எசேக்கியேல் கிட்டே சொல்வாரு.

ந 1 : ஓ.. ஓ.. அதான் விஷயமா ? 

ந 2 : ( சைகையில் ) ஐயா… நாங்க வீரர்கள் இல்ல…

ந 4 : டேய் அவரால பேச மட்டும் தாண்டா முடியாது.. காதெல்லாம் நல்லா கேக்கும்.. நீ பேசு.

ந 2 : ஓ.. ஐயா… எங்களை பாத்தா வீரர்களாவா தெரியுது ? நாங்க வீரர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. உங்களைப் பாக்க சென்னைல இருந்து வந்த சாதாரண அப்பாவிங்க. 

எசே : ( ஒரே குழப்பமாய்…. ) என்னென்னமோ சொல்றீங்க ஒண்ணூம் புரியல.. உக்காருங்க.

ந 1 : செல்லப்பா அங்கிள் தான்… ( சொல்லி நிறுத்துகிறான் ) சரி.. அதை விடுங்க.. அவரை உங்களுக்கு தெரியாது. உங்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்.

எசே : (சைகை ) மன்னிக்கணும். நான் ரொம்ப முக்கியமான ஒரு வேலையா இருக்கேன். இப்போதைக்கு நேரம் இல்லை.

ந 5 : ம்ம்ம்.. முக்கியமான வேலைய இருக்கீங்க… பேசறதுக்கு நேரம் இல்ல.. அப்படி தானே…. தெரியுமே….. 

செங்கல் மேல எருசலேம் படம் வரைய கடவுள் சொன்னாரு அப்படி தானே 

எசே : (அதிர்ச்சியாய்)  (சைகை )  ஆமா.. அதெப்படி உங்களுக்கு தெரியும் ?

ந 4 : அப்புறம் அதைச் சுற்றி நீங்க முற்றுகையிடுறது மாதிரி கொத்தளங்கள் கட்டணும். ஒரு மணல் மேடு வைக்கணும்.

ந 5 : அதுக்கு எதிரே போர்ப்பாசறை கட்டணும். அரண் சுவர் பொறி வைக்கணும். 

ந 3 : அப்புறம் ஒரு இரும்பு தகடு ஒண்ணை எடுத்து சுவர் மாதிரி உங்களுக்கும் அதுக்கும் இடையே வைக்கணும். 

எசே : ( சைகை ) அட.. ஆமா.. உங்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும் ? அப்போ நீங்க கடவுளோட தூதர்கள் தான். ( பணிகிறார் ) 

ந 4 : இல்லை.. இல்லை.. இதெல்லாம் நீங்க எழுதின புக்ல படிச்சு தெரிஞ்சுகிட்டோம்.

எசே : (சைகை ) புக்கா.. நான் புக் ஏதும் எழுதலையே

ந 2 : இது வரை எழுதல… ஆனா ஆனா இனிமே எழுதுவீங்க.

எசே : ( தலையில் அடித்துக் கொள்கிறார் ) என்ன உளறறீங்க ? என்னை டிஸ்டர்ப் பண்ணாம போயிடுங்க. இது காட்ஸ் வர்க்.

ந 3 : ஐயா.. மன்னியுங்க… நாங்க உளறல… இது கடவுளோட வேலைன்னு தெரியும்… இதையெல்லாம் 

இதெல்லாம் ஏன் பண்றீங்க ? இதுக்கு என்ன அர்த்தம். அதை தெரிஞ்சுக்க தான் நாங்க வந்திருக்கோம்.

எசே : ( சைகையில் ) இப்படி பண்ணினா இஸ்ரேல் நகரை நான் முற்றுகையிடுவதாய் அடையாளம். 

ந 3 : ஓ… இப்படி பண்ணினா நகரை நான் முற்றுகையிடுவதாய் அடையாளம். எந்த நகர் ? இஸ்ரேலா ?

எசே : ஆமா ( மகிழ்ச்சியாய் )

எசே : (சைகை ) அப்புறம் நான் இடப்பக்கம் பாத்து படுக்கணும். 

ந 4 : ஓ.. இடப்பக்கமா திரும்பி படுக்கணுமா ? ஏன் ? 

எசே : (சைகை ) மக்களோட 

ந4 : மக்களோட…

எசே ( சைகை ) பாவத்தை…

ந 4 : புரியலையே… கடவுளுக்கு விரோதமானதா..

எசே ( சைகை ) ஆமாமா… பாவம்..

ந 4 : ஓ.. பாவத்தை…  மக்களோட பாவத்தை சுமக்கணுமா… ஓக்கே ஓக்கே 

ந 4 : ஓ..பாவத்தை சுமக்கறது அவ்வளவு சிம்ப்ளா இருக்கே ? இடப்பக்கமா படுத்தா பாவத்தை சுமக்கிறதா அர்த்தமா ?

எசே : ( சைகை ) விளையாடறீங்களா ? 390 ( சைகை செய்கிறார் )

ந 4 : 390 என்னது ? 

எசே : (சைகை ) நாள்…. ( இன்னிக்கு நாளைக்கு … அப்படி சைகை ) 

ந 4 : ஓ.. எஸ்… 390 டேஸ்… இடப்பக்கமா படுக்கணும்…. மக்களோட ஒரு வருஷ பாவத்துக்கு ஒரு நாளுன்னு கணக்கு சரி தானே… 

எசே : ஆமா…ஆமா.. ( சைகை )  

ந 5 : ஐயோ.. இது ரொம்ப கஷ்டமாச்சே.. அடிக்கடி கைகாலை அசைச்சுக்கோங்க.. இல்லேன்னா ஒரு பக்கமா மரத்துப் போயிடும்.

எசே : ( சைகை ) அதுவும் முடியாது. நான் அசையாதபடி கடவுள் என்னை கட்டி போட்டுடுவாரு. 

ந 1: ஓ.. கடவுள் உங்களை கட்டி போடுவாரா…  

எசே : ஆமா… ( சைகை )  

ந 1 : அப்புறம் நீங்க யூதாவோட பாவத்தை வேற சுமக்கணும்ல…. ஏதோ படிச்ச ஞாபகம்..

எசே : ( ஆமா…ஆமா )

ந 1 : அடக்கடவுளே..அது ஒரு 390 நாளா ?

எசே : (சைகை )  இல்லை.. அது நாப்பது நாட்கள்தான். 

ந 1 : ஓ.. நாலு நாள் தானா

எசே : நோ.. நோ … 40 நாள்…

ந 1 : ம்ம்ம்ம்.. நல்ல வேளை கடவுள் ஒரு ஆண்டுக்கு ஒரு நாள் தான் தந்திருக்காரு. ஒருவருஷத்துக்கு ஒரு மாசமோ, ஒரு வாரமோ தந்திருந்தா உங்க நிலமை என்ன ஆயிருக்கும் ?

எசே : (சைகை) ஆமா.. ஆமா…

ந 2 : ஆமா.. உண்மை தான். இருந்தாலும் நீங்க இந்த மக்களுக்காக இவ்வளவு பாடுபட‌றீங்களே ?

ந 5 : இறைவாக்கினர்கள் இதை பாடுன்னு நினைக்கிறதில்லை….  . இறைவன் தான் மக்கள் பாவம் செய்யும் போ பாடு படறார். பாவம் செய்யாத மக்களினம் வேணும்ன்னு தான் அவர் ஏங்கறார்.  

ந 4 : உண்மை தான்… ( எசேக்கியேல் பக்கம் திரும்பி ) சரிங்கய்யா… அதோட  முடிஞ்சுடுமா ?

எசே : (சைகை ) அப்புறம் நான் திறந்த புயத்தோடு எருசலேமுக்கு எதிரா இறைவாக்குரைக்கணும். 

ந 3 : இறைவாக்கு உரைக்கணுமா ?

எசே : (சைகை ) எதிரா… திறந்த புயம்…

ந 3 : ஓ திறந்த புயத்தோடு …. இஸ்ரேலுக்கு எதிரா இறைவாக்குரைக்கணும்… சரியா ?  ம்ம்ம்.. அது தான் உங்களுக்கு நல்ல பழக்கமான வேலையாச்சே. இறைவாக்கு உரைக்கிறது. 

ந 1 : நாங்க போய் சாப்பிட ஏதாச்சும் கொண்டு வரட்டுமா ? உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்

எசே : நான் அப்படியெல்லாம் சாப்பிடவும் முடியாது  (சைகை )

ந 2 : ஏங்க உடம்பு சரியில்லையா ?

எசே : (சைகை ) அப்படியில்லை. என்ன சாப்பிடணும்ன்னு கடவுள் சொல்லியிருக்கார். அதைத் தான் சாப்பிடணும்.

ந 3 : ஓ… என்ன சாப்பிடணுன்னு கடவுள் சொல்லியிருக்காரா…. ?  

ந 4  : எஸ் எஸ்.. அது எனக்கு தெரியும். ….. கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு, சிறுபயறு, தினை, சாமை இதெல்லாம் வெச்சு அப்பம் சுட்டு தான் சாப்பிடணும். 390 நாளும். அதுவும் ஒரு நாள் இருபது செக்கேல் அளவு தான் சாப்பிடணும்.  சரியா…. 

எசே : ஆமா.. ஆமா (சைகை ) 

ந 2 : அப்பம்ன்னு சொன்னதும் இயேசு ஐஞ்சு அப்பத்தைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு சாப்பாடு கொடுத்தது தான் ஞாபகத்துக்கு வருது.

எசே : ( சைகை ) அது யாரு இயேசு ? அதென்ன அஞ்சு அப்பம் ஐயாயிரம் பேரு ?  

ந 5 : அதெல்லாம் இப்போ சொன்னாலும் உங்களுக்கு புரியாதுங்கய்யா… நிறைய தண்ணியாச்சும் குடிங்க.. இல்லேன்னா டிஹைட்ரேட் ஆயிடும். சூடாயிருக்குல்ல…

ந 4  : தண்ணியும் ஒரு கலயம் தண்ணில ஆறுல ஒரு பாகம் தான் குடிக்கணும். அதுவும். அதுவும் குறிப்பிட்ட நேரத்துல தான் குடிக்கணும்.. கரக்டா ?

எசே : ஆமா.. ஆமா…. 

ந 1 : ஐயோ பாவம்.. உங்களை நினைச்சா கஷ்டமாவும் இருக்கு..  பெருமையாவும் இருக்கு. கடவுளோட மனிதர்களோட அர்ப்பண உணர்வு ஆச்சரியமா இருக்கு.

ந 2 : நாம போய் கொஞ்சம் விறகாச்சும் கொண்டு கொடுப்போம். அந்த ஹெல்ப் ஆவது பண்ணுவோம்.

எசே : ( சைகை ) நோ..நோ… விறகா ? அதெல்லாம் கடவுள் அனுமதிக்கல. மாட்டுச் சாணத்துல வறட்டி செஞ்சு அதை எரிச்சு, அதுல தான் அப்பம் சுடணும்.

ந 3 : புரியலையே… 

ந 4 : நான் சொல்றேன்.. நான் சொல்றேன்…. கடவுள் மாட்டுச் சாணில வறட்டி செஞ்சு அதை விறகா மாற்றி அப்பம் சுட சொல்லியிருக்காரு… 

ந 3 : ஐயையோ.. மாட்டுச் சாணியிலயா

ந 4  : யப்பா…. முதல்ல மனுஷ சாணில தான் வறட்டி பண்ணி, நெருப்பு மூட்ட சொன்னாரு. அப்புறம், நான் தீட்டான எதையும் சாப்பிட்டதில்லைன்னு கடவுள் கிட்டே இவர் மன்றாடினார். அப்புறம் தான் மாட்டுச்சாணியை கடவுள்.. அனுமதிச்சாரு.

ந 4 : கடவுள் உண்மையிலேயே ரொம்ப ஸ்ட்றிக்ட் ஆ தான் இருந்திருக்காரு… ( எசேக்கியேலிடம் ) உண்மையிலேயே உங்களுடைய அர்ப்பணிப்பும், உங்களுடைய கீழ்ப்படிதலும் ரொம்பவே சிலிர்ப்பா இருக்கு எங்களுக்கு.

நா 3 : ஆனாலும் சாப்பிடறதுல கூட ஏன் கடவுள் இவ்ளோ கணக்கு பாக்கறாரு ?

ந 1  : கடவுள் செய்ற ஒவ்வொரு விஷயத்துலயும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். எருசலேமில உணவுப் பஞ்சம் வரும். மக்கள் சாப்பாடை அளந்து அளந்து சாப்பிடுவாங்க‌. தண்ணி பஞ்சமும் வரும், மக்கள் பயந்து பயந்து கொஞ்சம் கொஞ்சமா குடிப்பாங்க. அதை தான் கடவுள் குறிப்பா உணர்த்தறாரு

எசே : ஆமா.. ஆமா…

ந 3 : ரொம்ப மகிழ்ச்சி ஐயா… எவ்வளவு தான் பைபிள்ள படிச்சாலும் புரியாத விஷயங்களையெல்லாம் நேரடியா வந்து பேசும்போ வியப்பாவும் இருக்கு, ரொம்ப புரியவும் செய்யுது. 

எசே : பைபிளா ? அப்படின்னா ? ( சைகை ) 

ந 1 : அதைப்பற்றி பேச ஆரம்பிச்சா பேசிகிட்டே இருக்கலாம். ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். இந்த உலகம் அழியும் காலம் வரைக்கும் உங்க பெயரும் நிலைக்கும். நாங்க கிளம்பறோம்.

எசே : கிளம்பறீங்களா ? எங்கே ? (சைகை )

ந 1 : எங்க காலத்துக்கு, கிபி 2018

எசே : உங்க காலமா ? கிபி ந்னா என்ன ? (சைகை ) 

ந 3 : எங்க காலம்.. கிபி.. இதெல்லாம் உங்களுக்கு புரியாது…. அதை இன்னொரு தடவை வந்து விளக்கமா சொல்றோம்.. இப்போ டைம் இல்லைங்கய்யா.. பாப்போமா .. பை பை.

*

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s