Posted in Articles, Vettimani

ஏழைக்கு இரங்கலாமா ?

ஏழைகளுக்குச் செவிசாய்;
அவர்களுக்கு அமைதியாக,
கனிவோடு பதில் சொல்

சீராக் 4 : 8

Image result for Help poor

ஞாயிற்றுக்கிழமை ஆலயம் விட்டு வெளியே வரும்போதெல்லாம் அந்தப் பாட்டியை சந்திப்பேன். கனிந்த இதயங்கள் தரும் காசுக்காக கையேந்தி நிற்பார் அவர். கடந்த ஓரிரு வாரங்களாக அவரைக் காணவில்லை. மீண்டும் சந்தித்தபோது கேட்டேன்.

“என்னாச்சு… ரெண்டு மூணு வாரமா ஆளைக் காணோமே… எங்க போயிருந்தீங்க ?” என கேட்டேன்.

“என் பேரப்புள்ளையை வாரிக்குடுத்துட்டு வந்திருக்கேன்பா..” என்றவர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். அதிர்ச்சியாக இருந்தது. அமைதியாக கையேந்தி நின்ற அவருக்குள் இப்படி அணை உடையக் காத்திருக்கும் ஒரு பெரும்சோகம் இருக்கும் என்பதை நான் கணித்திருக்கவில்லை.

சற்று நேரம் நிகழ்ந்ததையெல்லாம் சொன்னார். எதிர்பாராத அந்த விபத்து எப்படி அந்த சின்னக் குடிசையை சின்னாபின்னமாக்கியது எனும் கதை மனதுக்குள் பாரமாய் வந்தமர்ந்தது.

நம்மைச் சுற்றிலும் இருக்கின்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பரிதாபத்துக்குரியது. அவர்களுக்கு நாம் பல நேரங்களில் பணம் கொடுக்கிறோம். சில உதவிகளைச் செய்கிறோம். கரிசனை காட்டுகிறோம். ஆனால் எந்த அளவுக்கு அவர்களை கனிவுடன் நடத்துகிறோம். எந்த அளவுக்கு அவர்களுடைய வலிகளுக்குச் செவி கொடுக்கிறோம் ? இது மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

இறுக்கமான முகத்தோடு கொடுக்கின்ற நூறு ரூபாயை விடை, புன்னகையோடு கொடுக்கும் பத்து ரூபாய் பெரியது. அது விண்ணகத்தில் எழுதப்படும். வாங்கும் நபருடைய இதயத்திலும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பிறருக்கு உதவுதல் என்பது நமது பெருந்தன்மையல்ல, நமக்குக் கடவுள் தரும் வாய்ப்பு. பிறருக்கு கொடுப்பது என்பது நமது பெருமையல்ல, இறைவனுக்கு நாம் மகிமை செலுத்தக் கிடைக்கும் வாய்ப்பு.

நம் முன்னால் ஒரு போதகர் வந்தால் நமது புன்னகை சினிமாஸ்கோப் அளவுக்கு விரிகிறது. அழுக்கடைந்த ஒரு ஏழையக் கண்டால் அது வெற்றிலைக் கிழவியின் சுருக்குப் பைபோல சுருங்கி விடுகிறது. இருவரிடமும் இருப்பது இறைவனின் பிம்பம் எனும் உண்மை நமக்கு உறைப்பதில்லை. ஏழையை உதாசீனப்படுத்தும் கணத்தில் நாம் இறைவனை உதாசீனப்படுத்துகிறோம்.

“ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கினவரையே இகழுகிறார்; பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்” என்கிறது நீதிமொழிகள் 17:5.

இறுதித் தீர்வை நாளில் இறைவன் நம்மிடம் கேட்கும் கேள்வியின் சாரம்சம் ஒன்றே ஒன்று தான், “ஏழையை நிராகரித்ததன் மூலம் நீ என்னை நிராகரித்துவிட்டாய். எனவே உனக்கு விண்ணகத்தில் அனுமதி இல்லை”

ஏழைகளை நேசிப்போம், சக மனிதனாக, உறவாக. அதுவே இறைவனை பிரியப்படுத்தும்.

*

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s