Posted in Articles, Sunday School

இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

காட்சி
1

( மருத்துவமனையில் டாக்டரை சென்று பார்க்கின்றனர் பீட்டரும், ராபர்ட்டும் )

பீட்டர் : டாக்டர்.. குட் மார்ணிங்

டாக்டர் : வாங்க.. உக்காருங்க…

பீட்டர் : ( ரிப்போர்ட்களை நீட்டுகிறான் ) ரிப்போர்ட் வாங்கிட்டு உங்களை வந்து பாக்க சொன்னீங்க, அதான் காலையிலேயே வந்துட்டேன்.

டாக்டர் : குட்.. குட்… இருங்க பாக்கறேன்…

டாக்டர் : ( ஒவ்வொரு ரிப்போர்ட்டாகப் பார்க்கிறார்.. யோசிக்கிறார்.. முகத்தைச் சுழிக்கிறார் )

பீட்டர் : டாக்டர் ரிப்போர்ட்ல ஏதும் பிரச்சினை இல்லையே.. உங்க முகத்தைப் பாத்தா ஹார்ட்டுக்குள்ள கிரைண்டர் ஓடற சத்தம் கேக்குது.

டாக்டர் : என்னய்யா… ஹார்ட் வெச்சிருக்கே ? அதை ஒழுங்கா பாக்கறதே இல்லையா ? இப்படி கெட்டு குட்டிச் சுவராக் கிடக்கு ( ஒரு ரிப்போர்ட்டைத் தூக்கி மேஜையின் ஓரமாய் போடுகிறார் )

பீட்டர் : ஓ.. ஹார்ட் வீக்கா இருக்கா ? பிளட் ரிப்போர்ட் எப்படி இருக்கு டாக்டர் ?

டாக்டர் : ( அந்த ரிப்போர்ட்டையும் தூரப் போடுகிறார் ) என்னய்யா பிளட் வெச்சிருக்கே… கார்ப்பரேஷன்ல ஓடற தண்ணி மாதிரி…

பீட்டர் : ஐயையோ… டாக்டர்.. தலைக்கு எடுத்த ஸ்கேன்…

டாக்டர் : ஆமா.. அதுல மட்டும் என்ன என்ன இருக்கப் போவுது.. ( ரிப்போர்டைப் பாக்கிறார் ) … அடச்சே… இதென்ன மூளையா இல்லை காஞ்சு போன வாழையா.. ஒண்ணும் ஒழுங்கா இல்லையே..

பீட்டர் : டாக்டர்… என்ன டாக்டர் இப்படி பயமுறுத்தறீங்க… லங்க்ஸ் ஆவது ஹெல்தியா இருக்கா ?

டாக்டர் : லங்க்ஸ் பற்றி பேசாதே.. அடிச்சுபுடுவேன்…

ராபர்ட் : என்ன டாக்டர்… லங்க்ஸ்க்கும் சங்கா ?

டாக்டர் : ஆமா.. இந்த ரைமிங் ரொம்ப முக்கியம். உன் பிரண்ட் தானே இவன்.. கவனிக்க மாட்டீங்களா ?

பீட்டர் : டாக்டர் கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க… என்ன பிரச்சினை ? என்ன டிரீட்மென்ட் எடுக்கணும்.. கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா ?

டாக்டர் : சொல்றேன்.. சொல்றேன்… அதுக்கு முன்னாடி, உடம்பைப் பாதுகாக்க இதுவரைக்கும் என்னென்ன செய்றீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க பாப்போம்.

பீட்டர் : டாக்டர்.. ஈட் ஏன் ஆப்பிள் எ டே.. கீப் டாக்டர் அவே… ந்னு சொன்னாங்க. அதனால டெய்லி ஒரு ஆப்பிள் சாப்பிடறேன். பீட்ரூட் சாப்டா பிளட் நல்லாயிருக்கும்ன்னு சொன்னாங்க, சோ பீட்ரூட் க்கு ரூட் போட்டிருக்கேன். பிரீத்திங் பண்ணினா லங்க்ஸ் ப்யூரா இருக்கும்ன்னு சொன்னாங்க.. சோ டெய்லி காலைல பிரீத்திங் பண்றேன். ஹெல்தியா சாப்டறேன், சரியா தூங்கறேன்… இதை விட என்ன டாக்டர் பண்ணணும்.

டாக்டர் : ம்ம்ம்… இதெல்லாம் நல்லது தான். ஆனா இதெல்லாம் பண்ணினா மட்டும் பத்தாதுப்பா..

பீட்டர் : வேற என்ன சாப்பிடணும் டாக்டர்.. சொல்லுங்க, உடனே போய் சாப்பிடறேன்.

டாக்டர் : இது சாப்பிடறதில்லை. சொல்றதை கவனமா கேளு. உன் ஹார்ட் புல்லா ஹேட்ரட் நிறஞ்சிருக்கு. உன் பிளட் ஃபுல்லா வெஞ்சன்ஸ் நிறைஞ்சிருக்கு. லங்க்ஸ் புல்லா ஆங்கர் நிறைஞ்சிருக்கு.. இதையெல்லாம் வெளியேற்றினா தான் உடம்பும் மனசும் நல்லா இருக்கும்.

பீட்டர் : ஐயையோ.. என்ன டாக்டர் சொல்றீங்க ? அதெல்லாமா தெரியுது.

டாக்டர் : ஆமாமா… கோபம், எரிச்சல், பழிவாங்கும் சிந்தனை, வெறுப்பு எல்லாமே உடம்புல நிறைய பாதிப்புகளை உருவாக்கும்ன்னு தெரியாதா ? இட்ஸ் நாட் ஒன்லி ஸ்பிரிச்சுவல்..இட்ஸ்… சயின்ஸ்…

ராபர்ட்: அது உண்மை தான் டாக்டர். இவனுக்கு கோபம் வந்தா இவனை புடிக்கவே முடியாது. ஒருத்தருக்கு ஸ்கெட்ச் போட்டான்னா அவங்களை எப்படியாவது பழிவாங்கிடுவான்.

டாக்டர் : சீ.. திஸ் ஈஸ் த பிராப்ளம். இதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு.

ராபர்ட் : என்ன வழி டாக்டர்… சொல்லுங்க…

டாக்டர் : பர்கிவ்னஸ்… மன்னிப்பு. மனப்பூர்வமா எல்லாரையும் மன்னிக்கப் பழகணும். எல்லாருக்கும் எல்லா நேரத்துலயும் மன்னிப்பைக் கொடுக்க தயாரா இருக்கணும். மன்னிப்பு தான் இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் சர்வ ரோக நிவாரணி.

பீட்டர்: அதெப்படி டாக்டர் முடியும் ? இந்த காலத்துல எல்லாரையும் மன்னிச்சிட்டெல்லாம் இருக்க முடியாது. நம்மளை ஏறி மிதிச்சு போயிட்டே இருப்பாங்க. அப்படி யாரு தான் மன்னிப்பாங்க ? இதெல்லாம் வெறும் தியரி தான்.. பிராக்டிக்கலா நாட் பாசிபிள்

டாக்டர் : ஏன் முடியாது ? இயேசு உன்னோட பாவங்களை மன்னிக்கலையா ? எத்தனை தடவை தப்பு பண்ணினாலும் அவரு மன்னிக்கலையா ? ஏன், சிலுவைக்கு மேல இருந்து கூட அவரு மன்னிப்பைத் தானேப்பா போதிச்சாரு. வேற என்ன எக்ஸாம்பிள் வேணும் உனக்கு. பீட்டர்ன்னு பேரை வெச்சிட்டு இப்படி ஹீட்டர் மாதிரி பேசலாமா ?

பீட்டர் : ஹா..ஹா.. டாக்டர்.. நீங்க பைபிள் ரூட்ல போறீங்களா ? அப்போ நானும் உங்க ரூட்லயே வரேன். கடவுள் மட்டும் என்ன எப்பவும் மன்னிச்சாரா ? லூசிபரைப் புடிச்சு பாதாளத்துல எறியலையா ? ஆதாம் ஏவாளை அடிச்சு துரத்தலையா ? மன்னிச்சா விட்டாரு ? இல்லையே.

டாக்டர் : பீட்டர். ஒண்ணு சொல்றேன். உனக்கு என்ன நோய் இருந்தாலும் என் கிட்டே வந்து சொன்னா தான் மருந்து தர முடியும். அதே மாதிரி தப்பு பண்ணினா ஆண்டவர் கிட்டே போய் வேண்டினா தான் மன்னிப்பு கிடைக்கும். நீ சொல்ற ரெண்டு பேருமே கடவுள் கிட்டே மன்னிப்பு கேக்கல. அதனால தான் துரத்தப்பட்டாங்க. தப்பான எக்ஸாம்பிளை வெச்சுட்டு, சரியான வாழ்க்கையை வீணாக்காதே.

பீட்டர் : எனக்கென்னவோ.. கடவுள் பாரபட்சம் காட்டறவருன்னு தான் தோணுது. பழைய ஏற்பாட்டில ஒரு மாதிரி, புதிய ஏற்பாட்டில ஒரு மாதிரி.. இந்த காலத்துல ஒரு மாதிரி, அந்த காலத்துல ஒரு மாதிரி.

டாக்டர் : இல்லப்பா.. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அதுல சந்தேகமே வேண்டாம். நாம புரிஞ்சுக்கற விதத்துல வேணும்ன்னா தப்பு இருக்கலாம், ஆனா அவர் செயல்படற விதத்துல தப்பே இல்லை.

பீட்டர் : இறைவாக்கினர்கள் சொல்லியிருக்காங்க.. ஆனா நேர்ல போய் பாத்தா தான் தெரியும்.

டாக்டர் : சரி.. அப்போ நேர்ல போய் பாத்துட்டு வாங்க, நீங்க ரெண்டு பேரும்.

பீட்டர் : என்ன டாக்டர் சொல்றீங்க ? ஜோக் அடிக்கிறீங்களா ? அதெல்லாம் பழைய காலம்.

டாக்டர் : என்கிட்டே… ஒரு டைம் மெஷின் இருக்கு. எங்களோட ஆர்&டி டெவலப்மென்ட் சென்டர்ல ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் வெச்சு உருவாக்கியிருக்கோம். யாருக்கும் தெரியாது. வேணும்ன்னா உங்களை நான் அதுல அனுப்பறேன். நீங்க போய் இயேசு காலத்துல என்ன நடக்குதுன்னு பாத்துட்டு வாங்க.

ராபர்ட் : என்ன டாக்டர்.. டைம் மிஷினை ஏதோ வாஷிங் மெஷின் மாதிரி சொல்றீங்க.

டாக்டர் : ஹா..ஹா.. இப்போ டைம் மெஷினெல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி கார் மாதிரி எல்லாம் கிடையாது. அது ஒரு கிளவுஸ் மாதிரி தான் இருக்கும். இன்னிக்கு நைட் நீங்க வாங்க. யார் கிட்டயும் இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம். உங்களை நேரா நான் இயேசுவோட காலத்துக்கே அனுப்பறேன். பாத்துட்டு வந்து சொல்லுங்க.

ராபர்ட் : ஏதோ கத விடறீங்கன்னு நினைக்கிறேன். எதுக்கும் நைட் வரோம் டாக்டர்..

டாக்டர் : கண்டிப்பா.. பை ..பை.

காட்சி
2

( ராபட்டும், பீட்டரும் பழைய காலத்துக்கு வந்திருக்கின்றனர் )

பீட்டர் : டேய்… இப்போ எங்கடா வந்திருக்கோம்.

ராபர்ட் : தெரியலையேடா.. ஏதோ நான் ஜிபிஎஸ் யூஸ் பண்ணி, உன்னை இங்கே கூட்டிட்டு வந்தது மாதிரி என்கிட்டே கேக்கறே. அந்த டாக்டர் தான் ஏதோ பண்ணிட்டிருக்காரு.

பீட்டர் : ஆமாடா… டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் மாதிரி நம்மை எங்கயோ பார்சல் பண்ணி அனுப்பிட்டாரு போல.

பீட்டர் : ஆமா நம்ம கையில அவர் ஏதோ ஒரு கிளவுஸ் போட்டு விட்டாரே… தானோஸ் மாதிரி.. அது எங்கே போச்சு ?

ராபர்ட் : அது டைம் சேஞ்ச் ஆனா இன்விசிபிள் ஆயிடும்ன்னு சொன்னாருல்ல. லேங்குவேஜ் கூட நாம போற இடத்துக்கு தக்கபடி மாறிடும் ந்னு சொன்னாரு. டெஸ்ட் பண்ணி பாக்கணும்.

ராபர்ட் : வெயிட் பண்ணுடா.. யாரோ வராங்க.. யாருன்னு பாப்போம்.

( மூன்று பேர் வருகிறார்கள் )

ந 1 : டேய் சீக்கிரம் போய் கோணி தயார் பண்ணணும். இந்த நேரத்துல கோணி கிடைக்குமா தெரியல.

ந 2 : ஆமாமா.. அதையெல்லாம் தூக்கிக் கடாசிட்டு, நல்ல நல்ல ஆடைகள் தானே போட்டுட்டு திரிஞ்சோம். இப்போ நமக்கு வந்த சோதனையைப் பாரு….

ந 3 : இப்போ சாம்பல் வேற தேடணுமே… அதெல்லாம் இந்த ஊர்ல இப்போ இருக்கான்னே தெரியல…

ந 1 : ஆமாடா.. ஊர்ல நாம ரொம்ப தான் ஆட்டம் போட்டுட்டு திரிஞ்சோம். இல்லாத பாவம் எல்லாம் செஞ்சிட்டு திரிஞ்சோம்.

ந 2 : இப்போவாச்சும் நமக்கு புத்தி வந்துச்சே… அதுக்கு அந்த மனுஷனுக்கு தான் நன்றி சொல்லணும். கொஞ்சம் திருந்த வேண்டிய காலம் வந்துச்சு.

ந 3 : ஆமா…செல்வம் , சந்தோசம், சாப்பாடு, கேளிக்கைன்னு ஜாலியா இருந்துட்டோம். இனிமே கொஞ்சம் கடவுளை பாத்து பாவமன்னிப்பு கேக்கணும்.

ந 1 : இந்த பாவ மன்னிப்பு கேக்க கோணி உடுத்தி, சாம்பல்ல உக்கார்றதை யாரு கண்டு பிடிச்சாங்களோ… அவங்களை முதல்ல கண்டு பிடிக்கணும்.

ந 2 : ஆமா… கோணி உடுத்தினா தான் வேண்டுதலா, சாம்பலை உடம்புல பூசினா தான் தாழ்மையா ?

ந 3 : யப்பா.. கடவுளுக்கு எதிரா பேசாதீங்கப்பா.. உங்களோட நிலமையை நீங்க புழுதிக்கு சமமா கீழே இறக்கறீங்கங்கறது தான் அதோட அர்த்தம்.

பீட்டர் : வெயிட் வெயிட்.. எங்க வேகமா போயிட்டிருக்கீங்க ? என்னாச்சு ?

ந 1 : என்னாச்சா ? அப்போ உனக்கு ஒண்ணும் தெரியலையா ? நீ இந்த ஊர் காரன் இல்லையோ ? கோணியாச்சும் இருக்கா ? இல்லை அதுவும் இல்லையா ?

ராபர்ட் : இல்லப்பா புதுசா வந்திருக்கேன்.. வாட் ஈஸ் கோணி…. விஷயத்தைச் சொல்லு…

ந 3 : இப்போ நிக்க நேரமில்லை, பின்னாடி ஒருத்தர் வராரு.. அவர் கிட்டே கேளுங்க.

( அவர்கள் போகின்றனர் )

( யோனா வருகிறார் )

யோனா : ( யோனா என்பது முதலில் தெரியாது ) இவருக்கு இதே வேலையாப் போச்சு… இதெல்லாம் எனக்குத் தெரியும்…

பீட்டர் : ஐயா வணக்கம்.

யோனா : ( கோபத்தில் ) ஏன்பா.. உனக்கு சாம்பல் கிடைக்கலையா ? உனக்கு சாக்கு கிடைக்கலையா ? ஷோக்கா டிரஸ் போட்டுட்டு நிக்கறே

பீட்டர் : ஐயா.. ஏன் கோபப்படறீங்க ? நீங்க யாரு ? இது எந்த இடம் ?

யோனா : ஓ.. நீங்க யாரு வியாபாரிகளா ? இல்ல ஊரைச் சுத்திப் பாக்க வந்திருக்கீங்களா ? பாத்தா யூதர்கள் மாதிரி தெரியலையே… எப்படியோ போங்க …

பீட்டர் : ஐயா.. கூல் டவுன்.. ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க.

யோனா : பின்னே.. என்ன பண்ண சொல்றீங்க ? சொல்ற பேச்சைக் காப்பாத்தறதே இல்லை. கடைசில நமக்கு தான் அவமானம்.

ராபர்ட் : என்ன பேச்சு ? யாரு காப்பாத்தல ?

யோனா : கடவுளைத் தான்யா சொல்றேன்.சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணு. அவரை நம்பி போய் இப்போ நான் பொய் சொன்னவனாயிட்டேன்.

ராபர்ட் : ஐயா.. நீங்க புள்ளி தான் போட்டுட்டிருக்கீங்க. இன்னும் கோலம் போடல. விஷயத்துக்கு வாங்க.

யோனா : நாப்பது நாள்ல இந்த நாட்டை அழிப்பேன்னு சொன்னாரு கடவுள். ஆனா அவரு அப்படி செய்ய மாட்டாருன்னு தெரியும். அதனால எஸ்கேப் ஆகி தர்ஷீஸ் போற கப்பல்ல ஏறினேன். அவரு என்னை இங்கே நினிவேல கொண்டு வந்து விட்டாரு.

பீட்ட்ர் : ஓ… வாவ்.. நீங்க மிஸ்டர் யோனா ! ஹாய்.. ஹௌ ஆர் யூ. ( கை கொடுக்கிறான் )

யோனா : என்னயா சொல்றீங்க ? ஆமா, நான் தான் யோனா ? முதல்ல யாருன்னு கேட்டீங்க, இப்போ பேரைச் சொல்றீங்க ? நீங்க அசீரிய உளவாளிகளா ?

பீட்டர் : வாவ்..வாவ்..வாவ்.. உங்களை சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி. உலகத்துலயே முதல் முதல்ல சப்மெரைன்ல அதாவது நீர்மூழ்கிக் கப்பல்ல போனது நீங்க தான்.

யோனா : என்னது ? கப்பல்ல நீர் மூழ்கிடுச்சா ? இல்லையே, அதுக்கு முன்னாடி என்னைத் தூக்கி கடல்ல போட்டாங்க.

ராபர்ட் : ஆமா. அது தெரியும். அப்புறம் மீன் வந்து முழுங்கிடுச்சு. மீனோட வயிற்றுக்கு உள்ளே மூணு நாள் இருந்தீங்க.

யோனா : அதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ? புரியலையே

பீட்டர் : அது மட்டுமா ? நீங்க மீனோட வயிற்றில இருந்து “என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.” ந்னு தானே செபம் பண்ணினீங்க

யோனா : (தலைவணங்கி ) ஐயா.. நீங்க கண்டிப்பா தீர்க்கத் தரிசி தான். நீங்க இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டே ஆகணும். நாப்பது நாள்ல அழிப்பேன்னு சொல்லிட்டு இப்போ அழிக்க மாட்டாராம்.

பீட்டர் : ஏன் ? ஏன் கடவுள் அப்படி பண்றாரு ? வாக்கு மாறாதவராச்சே அவர்.

யோனா : ஆமா.. கோபப்படுவாரு. அப்புறம் மக்கள் மனம் திருந்தி அவர் கிட்டே வந்தா மனம் மாறி மன்னிச்சுடுவாரு. அவருக்கு இளகிய மனசு. அது எனக்குத் தெரியும். எப்படியும் அசீரியர்கள் அழியணும்ன்னு தான் நான் நினிவேக்கு வராம ஓடினேன்.

பீட்டர் : ஐயா.. கடவுள் அவ்ளோ இளகிய மனசுக்காரரா ? அவரு எல்லாரையும் மன்னிக்கிறவரா ?

யோனா : ஏன்பா ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கறே. அவரு மக்கள் மேல ரொம்ப அன்பு காட்டறவரு. அவரை விட்டு விலகிப் போனா கோச்சுப்பாரு, அவரை நோக்கி ஓடிப்போனா பழசை எல்லாம் மறந்துட்டு அரவணைப்பாரு.

ராபர்ட் : ஊதாரி மைந்தன் உவமைல இயேசு இதைத் தான் சொல்லுவாரு, இல்லையா பீட்டர் ?

யோனா : அது யாரு ஊதாரி ? அது யாரு இயேசு ? குழப்பாதீங்க.. என்னை தடுக்காதீங்க. நான் ஊருக்கு வெளியே போய் உக்கார போறேன். அவரு நாட்டை அழிப்பாரா இல்லையான்னு பாக்கணும்.

பீட்டர் : ஆமா.. நீங்க அங்க போய் ஒரு பந்தல் போட்டு உக்காருவீங்க.

ராபர்ட் : ஒரு ஆமணக்கு செடி முளைக்கும், ஒரே நாள்ல அது வளரும்.

பீட்டர் : அடுத்த நாளே ஒரு புழு அதை அரிக்கும்…

ராபர்ட் : அனல் காற்று பயங்கரமா அடிக்கும்.

பீட்டர் : நீங்க .. ஐயோ நான் சாகணும்ன்னு நினைப்பீங்க.

ராபர்ட் : அப்போ கடவுள் வந்து நீ நடாத ஆமணக்கு செடிக்காக இப்படி வாதாடறியே.. என்னோட இலட்சக்கணக்கான பிள்ளைகளுக்காக நான் இரங்க மாட்டேனான்னு சொல்வாரு.

பீட்டர் : நீங்களும் ஓக்கே ந்னு சைலன்ட் ஆயிடுவீங்க

யோனா : நில்லுங்க..நில்லுங்க.. நீங்க என்ன சொல்றீங்க ?

பீட்டர் : நாங்க நடக்கப் போறதைப் பற்றி பேசறோம்.

யோனா : புரியலையே

ராபர்ட் : அதை விடுங்க.. இந்த மீனோட வயிற்றில இருந்தீங்களே ? நல்ல வசதியா இருந்துச்சா ? குளிரா இருந்துதா ? சூடா இருந்துதா ?

யோனா : ம்ம்ம்..அட போங்கப்பா… நானே கோபத்துல இருக்கேன்.. விளையாடறீங்களா ( கோபத்தில் போகிறார் )

பீட்டர் : ஏண்டா இப்படியெல்லாம் கேக்கறே .. உட்டா உள்ளே அட்டாச்ட் பாத்ரூம் இருந்துதான்னு கூட கேப்பே போல இருக்கு. பாரு பெரிய தீர்க்கத்தரிசி, அவரே கோச்சுகிட்டு போயிட்டாரு..

பீட்டர் : சார்.. யோனா சார்.. ஐயா… ஐயா ( அழைக்கிறான் )

*

காட்சி
3

( பீட்டர் தூங்கிக் கொண்டிருக்கிறான் )

பீட்டர் : ( தூக்கத்தில் ) யோனா… மிஸ்டர் யோனா.. நீங்க போனா.. வேணா… வாங்க… மீனை நாம சாப்பிட்டா டேஸ்டா இருக்கும்… மீனு நம்மளை சாப்டா எப்டி இருக்கும்…

ராபர்ட் : டேய்.. டேய்.. டேய் பீட்டர்.. டேய்.. என்ன தூக்கம்டா இது.. பகல்ல…

பீட்டர் : ஏய்.. வாடா ராபர்ட்… யோனா…… போனா… ( கொட்டாவி விடுகிறான் )

ராபர்ட் : யோனாவா ? என்னடா உளற்றே.. கண்ண தொறடா முதல்ல… மெடிக்கல் டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் வந்துச்சுன்னு சொன்னே… டாக்டரை பாக்க போணும்ன்னு சொன்னே… போன் பண்ணினா எடுக்கல, வீட்டுக்கு வந்தா கொறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கே.

பீட்டர் : ( சட்டென எழுந்து ) ஓ.. கடவுளே.. எல்லாம் கனவா

ராபர்ட் : என்னடா கனவு..

பீட்டர் : மறுபடியும் முதல்ல இருந்து சொல்ல முடியாது. போற வழியில சொல்றேன். செம கனவுடா

ராபர்ட் : அப்படி என்னடா கனவு ?

பீட்டர் : கடவுள் கனவு மூலமா நிறைய தெளிவு குடுப்பாருன்னு பைபிள்ல படிக்கிறோம்ல.

ராபர்ட் : ஆமா..அதுக்கென்ன இப்போ… கனவுல தான் கடவுள் நிறைய கருத்து சொல்லியிருக்காரு, எச்சரிக்கை சொல்லியிருக்காரு, விளக்கம் சொல்லியிருக்காரு..

பீட்டர் : இன்னிக்கு எனக்கு கனவு மூலமா ஒரு பதில் தந்திருக்காருடா. ஹி ஈஸ் அன் சேஞ்ச்ட்… நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் டா…

ராபர்ட் : என்ன சொல்றியோ… போய் முதல்ல முகம் கழுவிட்டு வா… டாக்டரை போய் பாப்போம்… அப்புறம் பேசுவோம்.

பீட்டர் : யா.. கிவ் மி டூ மினின்ட்ஸ்..

( முற்றும் )

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s