Posted in Articles, Christianity, WhatsApp

நிறைவாக்கும் இறைவாக்கு

Image result for school girl sad

“உடனே வாருங்கள், உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை”

மதிய நேரத்தில் ஸ்கூலில் இருந்து வந்த அழைப்பு அலுவலகத்தில் இருந்த என்னை பதட்டத்துக்குள்ளாக்கியது. “என்னாச்சு.. ” என்று கேட்டேன். “நீங்க நேர்ல வாங்க சார்.. பேசிக்கலாம்..வரதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்?” என்று கேட்டார்கள். அது என் பதட்டத்தை இன்னும் அதிகமாக்கியது. “ஒரு அரைமணி நேரம் ஆகும் என்றேன்”. “சரி சீக்கிரம் வாங்க, பயமா இருக்கு என்று சொல்லி போனை கட் பண்ணினார்கள். என் பதட்டமும் பயமும் சட்டென எகிறியது.

காரை எடுத்துக் கொண்டு, பிரார்த்தனைகளின் நீள் பயணத்தில் காரோட்டி பள்ளிக்கூடம் சென்று சேர்ந்தேன். ஆபீஸ் வாசலின் ஒரு இருக்கையில் மகள் சோர்வாய் அமர்ந்திருந்தார். அதைப் பார்த்ததும் என் பதட்டத்தின் பாதி காணாமல் போயிருந்தது. மகளை அழைத்துக் கொண்டு ஸ்கூலில் சொல்லி விட்டு வெளியே வந்தேன்.

காரில் ஏறப் போன நேரத்தில் சட்டென எதிர்பட்டார் அந்த நபர். ஸ்கூல் வாசலில் அமர்ந்திருந்தார்.

“என்னம்மா உடம்பு சரியில்லையா ? எக்ஸாமை நினைச்சு பயந்துட்டியா ?” என்று கேட்டபடி சிரித்தார். மகள் சோர்வாகச் சிரித்தாள். அவர் தொடர்ந்தார். எங்களுடைய பதட்டமும், பரபரப்பும் அவரை அலட்டவில்லை.

“ஒரு மூணு விஷயம் சொல்றேன்.. கேட்டுட்டு போ. உனக்கு பயமும் வராது நோயும் வராது என்றார்” என்றார். நின்றோம்.

முதலாவது, கடவுளுடைய வார்த்தையை ரொம்ப நேசிக்கணும். இரவும் பகலும் தியானிக்கணும் என்றவர் தொடர்ந்தார். கர்த்தருடைய வார்த்தையில் பிரியமாய் இருக்கணும்.பிரியம்னா எப்படின்னா, பிரியாணி சாப்பிடற மாதிரி பிரியமா இருக்கணும். நமக்குப் புடிச்ச பிரியாணின்னா எப்படி சாப்பிடுவோம் ? இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்ன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவோம். ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவோம். அடுத்து எப்படா பிரியாணி கிடைக்கும்ன்னு காத்திருப்போம்.

அப்படித் தான் கடவுளோட வார்த்தையை விரும்பணும். அம்மா சொன்னாங்கன்னு ஒரு அஞ்சு வசனம். கடமைக்கு ஒரு பத்து வசனம் வாசிக்கிறதெல்லாம் யூஸ் இல்லை. ரசிச்சு ருசிச்சு படிக்க கத்துக்கணும். அப்போ நம்ம வாழ்க்கைல கடவுள் நிச்சயமா செயலாற்றுவார். மனசு எப்பவுமே நிம்மதியாவும், மகிழ்ச்சியாவும் இருக்கும்.

இப்போ ரெண்டாவது விஷயம் சொல்றேன். எதுக்கும் பயப்படக் கூடாது. பயம்ங்கற விஷயம் நம்ம கிட்டே இருக்கவே கூடாது. தாவீது கோலியாத்துக்கு முன்னாடி நிக்கும்போ பயப்படல. நீ எவ்ளோ பெரிய ஆளா வேணும்னாலும் இருந்துட்டு போ. என்கிட்டே கடவுள் இருக்காருன்னு போல்டா நின்னாரு. கடவுள் இருந்தா மதில்களைத் தாண்டுவேன்ன்னு தில்லா நின்னாரு. அந்த துணிச்சல் நமக்கு இருக்கணும். அதுக்கு கடவுளை முழுமையா சார்ந்து இருக்கணும்.

மூணாவது, செபம். தானியேலைப் போல ஜெபத்தின் மீது தீராத ஆர்வம் இருக்கணும். எத்தனை மக்கள் எதிரா நின்னாலும் தானியேல் செபிச்சாரு. மன்னனே தடுத்தாலும் கடவுளை நோக்கி செபிக்க அவர் தயங்கினதே இல்லை. துணிச்சலா செபிச்சாரு. ஏன்னா எல்லாரையும் விட பெரியவர் கடவுள்ன்னு அவருக்குத் தெரிஞ்சிருந்துது. அதனால தான் தானியேல் யாரும் நினைச்சுப் பாக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய உயரத்துக்குப் போனாரு. அந்த செபத்தின் ஆர்வம் நமக்கு இருக்கணும்.

இதான்பா அந்த மூணு விஷயம். மறக்காம லைஃப்ல செயல்படுத்து, உன்னை யாரும் அசைச்சுக்க முடியாது. இந்த விஷயத்தை உங்ககிட்டே சொல்லணும்ன்னு கடவுள் என்கிட்டே சொன்னார், நான் சொல்லிட்டேன். என்றார் அவர்.

சார்.. நீங்க யாரு ? என மெல்லக் கேட்டேன். புன்னகைத்துக் கொண்டே அருகிலிருந்த மரத்தில் தொங்க விடப்பட்டிருந்த காக்கி நிற சட்டையை எடுத்து அணிந்து கொண்டே சொன்னார்,

இந்த ஸ்கூல் பிள்ளைங்களுக்கு ஆட்டோ ஓட்டறேன் சார்.மறக்காதீங்க, பிரியாணி..தாவீது… தானியேல்.. என்று சொல்லிக்கொண்டே விடைபெற்றார். அவரது வார்த்தைகள் நீண்ட நேரம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

*

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s