Posted in Articles, Sunday School

SKIT : கிறிஸ்மஸ்னா என்னங்க ?

Image result for small poisonous snake

காட்சி 1

( எக்ஸ்பிஷன் நடக்கிறது. ஒருவர் _ யோசுவா என வைத்துக் கொள்வோம், பரபரப்பாய், டென்ஷனாய் எதையோ தேடுகிறார். கையில் பை ஒன்றை வைத்திருக்கிறார். )

யோசுவா : ( கொஞ்ச நேரம் தரையில் உற்று உற்றுத் தேடுகிறார் ) சார்… கொஞ்சம் தள்றீங்களா சார்.

ந 1 : யோவ்.. என்னய்யா ? எக்ஸிபிஷனை ஒழுங்கா பாக்கவும் விடமாட்டே.. தள்ளு நொள்ளுன்னு சொல்லிகிட்டு..

யோ : சாரி.. சார்… ஒரு முக்கியமான விஷயம் தேடிட்டிருக்கேன்.. அதான்…

ந 1 : இவ்ளோ பெரிய கூட்டத்துல எதைத் தான் அப்படித் தேடறியோ என்னவோ ? கடல் மணல்ல விழுந்த கம்மலைத் தேடற மாதிரி. ( அவர் அந்தப் பக்கம் போகிறார் , இன்னொருவர் மெல்ல மெல்ல வருகிறார் )

யோ : சார் .. பிளீஸ்… கொஞ்சம் இந்தப் பக்கமா வாங்க சார்.. தேடணும்…

ந 2 : என்ன சார் தேடறீங்க ? ரொம்ப டென்ஷனா வேற இருக்கீங்க

யோ : அதொண்ணுமில்லை.. தேங்க்ஸ்… எதுக்கும் உங்க சட்டையை கொஞ்சம் உதறுங்க.. பேண்ட் எல்லாம் கொஞ்சம் உதறுங்க..

ந 2 : என் கிட்டே என்ன இருக்கப் போவுது ? நான் என்ன திருடியா வெச்சிருக்கேன்.

யோ : நோ..நோ.. அப்படியில்லை .. இது திருடுற சமாச்சாரமில்லை… உயிருள்ள ஒரு சமாச்சாரம்..

ந 2 : ஓ.. என்ன பூச்சி கீச்சி இருக்கா ? ஏதாச்சும் சிலந்தி கடிச்சு ஸ்பைடர் மேன் ஆயிடுவேனோ ? ( அவர் சிரித்துக் கொண்டே உதறுகிறார் )

யோ : ஒண்ணுமில்லை.. வெரி குட்.. நீங்க போலாம்…

ந 1 : ( மீண்டும் அந்த வழியாக வருகிறார் ) யோவ்.. என்னய்யா.. இன்னும் நீ தேடறதை நிறுத்தலையா.. ஊர் புல்லா தேடுவே போல

யோ : அப்படியில்லை.. அதைக் கண்டுபிடிக்கிற வரை தேடித் தான் ஆவணும், இல்லேன்னா டேஞ்சர்

ந 1 : டேஞ்சரா ? என்னய்யா சொல்றே ? உனக்கு டேஞ்சரா எனக்கு டேஞ்சரா ? ( டென்ஷனாகிறார் )

யோ : எல்லாருக்குமே டேஞ்சர் தான்

ந 1 : எல்லாருக்குமே டேஞ்சரா ? என்னதான்யா தேடறே ? ஏதாவது வெடிகுண்டு வெச்சிருக்காங்களா ? சொல்லித் தொலை

யோ : மெதுவா பேசு.. எக்ஸ்பிஷன்ல வெச்சிருந்த ஒண்ணு கூண்டுல இருந்து தப்பி வெளியே வந்துடுச்சு. அதை மறுபடியும் புடிச்சு உள்ளே அடைச்சா தான் எனக்கு நிம்மதி.

ந 1 : ஓ.. அப்படியா ? என்னதான் வெளியே வந்துது ? எலியா ? அணிலா

யோ : ஸ்ஸ்ஸ்ஸ்.. மெதுவா பேசு… அது ஒரு பாம்பு..

ந 1 : பா..பாம்பா ( அலறுகிறார் )

யோ : யோவ்… சத்தம் போடாதேய்யா ( அமைதியாய் இருக்க சைகை காட்டுகிறார் )

ந 1 : ( அங்கும் இங்கும் ஓடுகிறார் .. சட்டையை உதறுகிறார்… குதிக்கிறார்… )

( அதற்குள் ஒரு சிலர் அங்கே வருகிறார்கள். அவர்களுக்கும் விஷயம் தெரிய எல்லாரும் பதட்டப்பட்டு அங்கும் இங்கும் ஓடுகிறார்கள் )

ந1 : ( யோசுவா அருகே வந்து ).. சார்… அந்த பா..பாம்பு எவ்ளோ பெருசு.. என்ன கலர்.. எப்படி இருக்கும்.. கொஞ்சம் சொல்றீங்களா ?

யோ : அது ரொம்ப சின்னதா இருக்கும். ஈசியா கண்டுபிடிக்க முடியாது. பச்சோந்தி மாதிரி எந்த இடத்துல இருக்குதோ அந்த கலர்ல இருக்கும். அதாவது உங்க கைல இருக்குன்னு வெச்சுக்கோங்க.. கையோட கலர்ல தான் இருக்கும்.

ந 1 : ( பயத்தில் குதிக்கிறார். கையை தடவுகிறார். தட்டுகிறார் )

ந 2 ; அது விஷப்பாம்பா ? இல்லை சாதாரண பாம்பா ?

யோ : ரொம்ப பயங்கர விஷம் உண்டு. கடிச்சா சாவு நிச்சயம். சிக்கல் என்னன்னா, அதோட உடம்பு பூரா விஷம். அது கடிக்கணும்ன்னு இல்லை, சும்மா தொட்டாலே ஆள் காலி தான். அதனால தான் அதை எப்படியாவது புடிக்கச் சொல்லி அப்பா என்னை அனுப்பியிருக்காரு. நானும் ரொம்ப கேர்புல்லா தேடிட்டே இருக்கேன்.

ந 2 : ஓ.. மை… காட்.. ( தலையில கையை வைக்கிறார் ) நூற்றுக்கணக்கான மக்கள் எக்ஸ்பிஷன்ல இருக்காங்க.. எல்லாரையும் உடனே வெளியே போக சொல்லலாம்ல..

யோ : நோ..நோ… அது யாரோட துணியிலயோ, பையிலயோ ஏறி வெளியே போச்சுன்னா புடிக்கவே முடியாது. அது எத்தனை பேரை கொல்லும்னும் சொல்ல முடியாது. அதான் ரிஸ்க். நீங்களும் தேடுங்க.. பாத்தா என்கிட்டே சொல்லுங்க. ஆனா.. தொடாதீங்க.. கிட்டே கூட நெருங்காதீங்க….

ந 1 : ஏன்யா.. டெர்ரரா பேசறே…. ஐயோ.. நடுக்கமா இருக்கே… என்ன செய்வேன்.. ஏன்யா இதையெல்லாம் இங்கே வெச்சு தொலைக்கறீங்க..

யோ : மக்கள் பாத்துட்டு போகட்டும்ன்னு நினைச்சோம்.. அது எல்லை தாண்டி வந்துடுச்சு.

ந 2 : டேன்சரான விஷயத்தை பக்கத்துலயே வெச்சிருக்கக் கூடாதுன்னு தெரியாதா ? என்ன நடத்தறீங்களோ

யோ : ஸ்…ஸ்… அமைதியா இருங்க.. பாத்துட்டேன்..பாத்துட்டேன்பாத்துட்டேன். அதோட வாலு அதோ தெரியுது… ஓ.. அது ஒளிஞ்சிருக்கு… வாலைப் புடிச்சு தான் இழுக்கணும்…ம்ம்.. என்ன பண்ண.. டேஞ்சராச்சே… ( மெதுவாக உட்கார்ந்து பாம்பின் வாலைப் பிடித்து இழுக்கிறார் )… ஆ… ( பாம்பை பையில் போடுகிறார். பையைக் கட்டுகிறார் ) …

ந 2 : வாவ்.. நல்ல வேளை புடிச்சீங்க…

யோ : எ..எனக்கு மயக்கமா வருது… அப்படியே தலைசுற்றி கீழே விழுகிறார்

ந 1 : சார்.. சார்… ( உலுக்கிப் பார்க்கிறார் , மூக்கில் கை வைத்துப் பார்க்கிறார் )… ஓ.. நோ.. இறந்து போயிட்டாரு போலயே.. ( அதிர்ச்சியுடன் ) ஐயயோ… இப்போ என்ன பண்ண ?

ந 2 : நம்பவே முடியல.. இப்போ தான் பேசிட்டிருந்தாரு, அதுக்குள்ள செத்துப் போயிட்டாரா ? மக்கள் வந்து கூடுகிறார்கள். ( அவரை தூக்கிக் கொண்டு போகிறார்கள் )

( புதிதாக ஒரு நபர் அங்கே வருகிறார்…. )

ந 3 : என்னாச்சு.. என்ன ஒரே கூட்டம் ? ஒருத்தரை தூக்கிட்டு போறாங்க ?

ந 1 : ஓ.. ரொம்ப சோகம்பா.. ஒருத்தரு இறந்து போயிட்டாரு…

ந 2 : ரொம்ப ரிஸ்க்ன்னு தெரிஞ்சும் ஒரு வேலையை செஞ்சாரு.. ஆள் அவுட்.

ந 1 : பாம்பை தொட்டா செத்துடுவோம்ன்னு தெரிஞ்சும் தொட்டாருப்பா.. என்னால நம்பவே முடியல. இந்த எக்ஸ்பிஷன்ல இருக்கிற மக்களையெல்லாம் காப்பாத்தணும்ன்னு சொல்லி அவரு செத்து போயிட்டாரு

ந 2 : இப்படி யாராவது இருப்பாங்களா என்ன ? யாருன்னே தெரியாத மக்களுக்காக தன்னோட உயிரை கொடுக்கிறது. நம்பவே முடியல.

ந 3 : எனக்கு இந்த நிகழ்ச்சியை நீங்க சொல்றதைக் கேக்கும்போ கிறிஸ்மஸ் தான் ஞாபகத்துக்கு வருது.

ந 1 : கிறிஸ்மஸா ? என்னய்யா… கிறிஸ்மசுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவே போல

ந 2 : அதானே.. கிறிஸ்மஸ் ந்னா ஜாலியான டே… ஸ்டார், டிரீ, சர்ச், பிரியாணின்னு சந்தோசமா இருக்கிற நாள். அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது. உங்களுக்கு கிறிஸ்மசுன்னா என்னன்னு தெரியுமா தெரியாதா ?

ந 3 : சரி..சரி.. டென்ஷனாவாதீங்க. கிறிஸ்மஸ் ஏன் கொண்டாடறோம் ?

ந 1 :..அது.. இயேசு வோட பர்த் டே…

ந 2 : ஒரு மாட்டுத் தொழுவத்துல பொறந்தாரு, ஞானிகள் இடையர்கள் வந்து பாத்தாங்க… அதெல்லாம் பைபிள்ல இருக்கு.

ந 3 : கரெக்ட்.. அவரு ஏன் பொறந்தாரு ? அதைச் சொல்லுங்க

ந 1 : அது.. வந்து.. ஏதோ.. பாவத்தின் பலி. அப்படி ஏதோ கேள்விப்பட்டிருக்கேன்.

ந 3 : நான் சொல்றேன். உலகத்துல இருக்கிற மக்களோட பாவங்களையெல்லாம் கழுவி, அவர்களை மீட்கிறதுக்காக தான் இயேசு பூமியில மனுஷனா வந்தார். அவரு சொர்க்கத்துல கடவுளா இருந்தவரு.

ந 2 : யா… இப்படி ஏதோ கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.

ந 3 : இருக்கு. இயேசு மக்களுக்காக சாகணும்ன்னு முடிவெடுத்து பூமிக்கு வந்தாரு. இந்த மனுஷனும், நாம செத்துடுவோம்ன்னு தெரிஞ்சும் மக்களைக் காப்பாத்த அந்த பாம்பை புடிக்கிற வேலையை செஞ்சாரு.

ந 1 : ஓ.. அப்படி சொல்றீங்க.. அதுவும் பாயின்ட் தான்.

ந 3 : ஆதியில பாம்பு மூலமா தான் பாவம் பூமியில வந்துது… அதனால தான் சாவும் வந்துது. கடைசியில அந்த சாத்தானாகிய பாம்பை கொன்று ஜெயிக்கிறது இயேசு தான். இங்கேயும் மக்களை அழிக்கிற பாம்பை அவரு புடிச்சாரு.

ந 2 : அட.. ஆமா.. கொஞ்சம் கொஞ்சம் சம்பந்தமான கதையா தான் இருக்கு.

ந 3 : ம்ம்ம்… பாவம்ங்கறது பாம்பு மாதிரி. அது கூண்டுல இருந்தாலும் எப்போ வேணும்ன்னாலும் குதிக்கும். அதை நாம தொட்டா சாவு நிச்சயம். பாவத்தைக் கண்டா விலகி ஓடணும். அது இருக்கிற திசையில வேடிக்கை கூட பாக்கக் கூடாது. அந்த பாம்பு மட்டும் இங்கே இல்லேன்னா அனாவசியமா ஒரு உயிர் போயிருக்காதுல்ல.

ந 1 : ஆமா… நீங்க சொல்றதெல்லாம் இப்போ தான் எனக்குப் புரியுது. நம்முடைய பாவங்களை மீட்டு நம்மை இரட்சிக்கத் தான் இயேசு மனிதனா பிறந்தாரு. அதான் கிறிஸ்மஸ். சாகறதுக்காகவே பொறந்த ஒரே மனிதர் அவர் தான்.

ந 3 : வெரி குட்… கிறிஸ்மஸ் நாள்ல கிறிஸ்துவை நினையுங்க… அவரை நம்புங்க. அவர் கிட்டே உங்களை ஒப்படையுங்க. மீட்பு நிச்சயம். சொர்க்கம் நிச்சயம். நான் வரட்டுமா ?

ந 2; சரிங்கய்யா..

ந3 : கேர்புல்.. பாவங்கற பாம்பை தொடாதீங்க.. மீட்பர்ங்கிற இயேசுவை விடாதீங்க.. பை பை ( சொல்லிக் கொண்டே போகிறார் )

பின்குரல்

நமக்காக மரிக்க, இந்த பூமியில் பாலனாக இயேசு பிறந்த நாள் தான் கிறிஸ்மஸ். அந்த நாளை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். ஏனென்றால் அவரை நம்பும்போது நமக்கு சொர்க்கம் கிடைக்கிறது. அவர் வராமல் இருந்திருந்தால் நமக்கு சொர்க்க வாழ்க்கை கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

ஹேப்பி கிறிஸ்மஸ்

*

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s