Posted in Articles

கிறிஸ்மஸ் என்பது மன்னிப்பு  

கிறிஸ்மஸ் என்பது மன்னிப்பு

*

இயேசுவின்
மண்வருகை,
மன்னிப்பின் வருகை.

தேவைப்படுவோர்
தேடிச் செல்வதே உலக வழக்கம்,
தேவைப்படுவோரை
தேடிச் செல்வதே
இறைவன் விருப்பம்.

பாவத்தின்
கோரைப் பற்களால்
கொடூரமாய்க் கிழிந்த‌
நம் வாழ்க்கையை
மன்னிக்க வந்தார்.

துரோகத்தின்
துடுப்பெடுத்துப் பயணித்த‌
ந‌ம்
பாதைகளை
மன்னிக்க வந்தார்.

வெறுப்பின்
வாளெடுத்துக் களம்புகுந்த‌
ந‌ம்
வல்லூறுச் சிந்தனைகளை
மன்னிக்க வந்தார்.

மண்ணக வளங்களுக்காய்
மன்னவன் மனதை
மறுதலித்துத் திரிந்த‌
மதியீனத்தை
மன்னிக்க வந்தார்

செல்வத்தின் சுருக்குப் பையில்
சுயமாய்
முடிச்சிட்டுக் கிடந்த‌
முட்டாள் தனத்தை
மன்னிக்க வந்தார்.

கர்வத்தின் சிகரங்களில்

கதவடைத்துக் கிடந்த‌
அழுக்கடைந்த சிந்தனைகளை
மன்னிக்க வந்தார்.

கிறிஸ்மஸ்
மன்னிப்பின் விழா.

மன்னிப்பின் சேதியை
இயேசு
தூதரிடம் கொடுத்தனுப்பவில்லை.
தானே
உயிர் சுமந்து வந்தார்.

சகதியின் மடியில்
அகதியாய் இருந்தவரை மீட்க‌
சகதிக்கு
இறங்கி வந்தார்

கிறிஸ்மஸ்
மன்னிப்பின் விழா.

நாம் பெற்ற மன்னிப்பை
பிறருக்குப்
பகிர்ந்தளிக்கும் விழா.

மன்னிப்பு
நமது தேர்வல்ல,
கடமை !

மன்னிப்பு
வெளிப்படை உணர்வல்ல,
ஆத்மார்த்தம் !

கொடுப்பதால்
பெறுவது
மன்னிப்பு மட்டுமே !

இயேசு சொல்கிறார்
மன்னித்தால்
மட்டுமே
மன்னிக்கப்படுவாய்.

மன்னிப்பு இல்லாமல்
விண்ணகக் கதவு
திறப்பதில்லை !

கிறிஸ்மஸ்
மன்னிப்பின் விழா !
மன்னிப்போம்,
மன்னிப்பைப் பெறுவோம்
மன்னவனை தரிசிப்போம்.

*

சேவியர்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s