Posted in Articles, Christmas Special

கிறிஸ்மஸ் என்பது ஈகை

கிறிஸ்மஸ் என்பது
ஈகை

கிறிஸ்மஸ்
ஈகையின் விழா !

தனக்கு மிஞ்சித்தான் தானம்
என்பது
உலக வழக்கு.
தானே உலகுக்குத் தானம்
என்பது தான்
பரமனின் கணக்கு.

கிறிஸ்மஸ்
ஈகைப் பொருளாக‌
ஈசனே
இறங்கி வந்த தினம்.

ஆபிரகாமின் கத்தி
ஈசாக்கைக் கிழிக்கவில்லை
இறைவன் தடுத்தார்.
அந்த ஆடாய்த்
தானே இறங்கி வந்தார்.

இருளில் வாழ்ந்த
ஜனங்களுக்கு
வெளிச்சம்
வினியோகிக்கப் பட்டது.

சோகத்தில்
சுற்றப்பட்ட மக்களுக்கு
மகிழ்ச்சி
பரிமாறப்பட்டது.

அடிமையாய் இருந்த‌
மக்களுக்கு
விடுதலை
வினியோகிக்கப் பட்டது

கிறிஸ்மஸ்
ஈகையின் தினம் !

மீட்பெனும் பரிசு
இலவசமாய்
வழங்கப்பட்ட தினம்.

வானிலிருந்து வந்த‌
வேந்தனிடம்
வானியல் ஞானியர் வந்தனர்.

பரிசாய் வந்த
பரமனுக்கே
பரிசுகளும் தந்தனர்.

கிறிஸ்மஸ்
கொடுத்தலின் தினம்

விரிக்கப்பட்ட விரல்களோடும்
திறக்கப்பட்ட‌
இதயத்தோடும்
நாம்
ஈகையை ஈன்றெடுக்க வேண்டிய
தினம்.

தகுதியற்ற மக்களுக்கும்
இருப்பதைப்
பகிர்ந்தளிக்க வேண்டிய‌
தினம்

எதிரிகளின் கூரைகளிலும்
தேவைகளை
தீர்க்கும் தினம்.

புறக்கணிக்கப் பட்டோருக்கு
பொருட்களை
பகிர்ந்தளிக்கும் தினம்

ஏழைகளின் உதடுகளில்
புன்னகையை
ஏற்றி வைக்கும் தினம்.

அன்பை
மகிழ்ச்சியை
ஆறுதலை
சமாதானத்தை
மன்னிப்பை பிறருக்குப்
பரிசளிக்கும் தினம்.

எல்லாவற்றுக்கும் மேலாய்
இயேசுவுக்கு
பரிசளிக்கும் தினம்.

நம்மை
நமது வாழ்வை

*

சேவியர்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s