Posted in Articles, Lent days

தவக்காலம் – தாய்மையின் காலம்

தவக்காலம்
தாய்மையின் காலம்

தவக்காலம்
தாய்மையின் காலம்.

இயேசு
மரியின்
மகனாய்ப் பிறந்த‌
தாய் !

குளிரில் பதறும்
குஞ்சுகளை
இறக்கைகளின் அடியில்
கதகதப்பாய்
காத்துக்கொள்ள
தவிக்கும் தாய்.

தந்தையின் கோபம்
அனலாய்த் தகிக்கையில்
தாயின் நேசம்
பனியாய் அணைக்கும்.

இயேசு
பரிவின் நாயகன்,
பரிந்து பேசும் தாயவன்.

தவக்காலம்
தாய்மையின் காலம்.

தூதனின் வார்த்தைகள்
நாதனின் வரவை
ஒரு
பதின்வயதுப் பெண்ணிடம்
பரிமாறிவிட்டுச் சென்றது.

குழப்பமும்
அவமானமும்
இளவயது மரியாவை
நெட்டித் தள்ளியிருக்கலாம்.

நிராகரிப்புகள்
அவரை
வாழ்க்கை முழுவதும்
தொடந்து விரட்டியிருக்கலாம்.

எனினும்
கல்வாரிப் பயணத்தின்
குருதித் துளிகளின்
கடைசி ஈரம்
காயும் வரை
உடனிருந்தது தாய்மை !

வாள் ஊடுருவும்
என்ற இதயத்தில்
ஓராயிரம் வாள்கள் துளைத்தன.
எனினும்
தாய்மை ஓடிவிடவில்லை.

மடிந்தபின்னும்
மடியில் தாங்கி
துடியாய்த் துடித்தது
தாய்மை.

தவக்காலம்
தாய்மையின் காலம்.

இயேசுவுக்காய் அழுத‌
மகளிரின் விழிகளில்
தாய்மை
தளும்பத் தளும்ப‌
நிரம்பியிருந்தது.

பிள்ளைகளுக்காய் அழுங்கள்
என‌
இயேசுவின்
தாய்மை உள்ளம்
தாய்மார்களைப் பார்த்து
கசிந்தது.

பிள்ளைகள்
பிலாத்துகளாகவும்
யூதாஸ்களாகவும்
உருமாறிவிடக் கூடாதெனும்
பதட்டம்
அதில் தெரிந்தது.

தவக்காலம்
தாய்மையின் காலம்.

தாய்மையைப் போல‌
ஈர இதயத்தை
உருவாக்கும் காலம்.

தாய்மையைப் போல‌
தன்னலம் மறுத்து
வாழ்கின்ற காலம்.

தாய்மையைப் போல‌
உறுதியில் உறையும்
காலம்

தாய்மையைப் போல‌
திருச்சபையைத்
தாங்கும் காலம்

தவக்காலம்
தாய்மையின் காலம்.

தாய்மை
வெறும் உறவல்ல,
இறை உணர்வு.

*

சேவியர்

One thought on “தவக்காலம் – தாய்மையின் காலம்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s