Posted in Articles, Lent days

தவக்காலம் – கைவிடுதலின் காலம்

தவக்காலம்
கைவிடுதலின் காலம்

 

 

தவக்காலம்
கை விடுதலின் காலம்.

தந்தையே
ஏன் என்னைக் கைவிட்டீர்
எனும்
இயேசுவின் கதறல்
கல்வாரியின் அதிகபட்ச துயரம் !

நீர்
விரும்பினால்
இந்தத் துன்பக் கிண்ணம் அகலட்டும்
எனும்
இயேசுவின் விண்ணப்பம்
மீட்பின் அதிகபட்ச வலி !

எனினும்
கலப்பையில் வைத்த கையை
உதறிவிட்டு
ஒதுங்கிச் செல்பவர்
இயேசு அல்ல.

கடைசி வரை
தொடரச் சொன்னவர்
இடைவேளையில்
இறங்கிச் செல்பவர் அல்ல.

தவக்காலம்
கை விடுதலின் கலம்.

நீதியை
அளிக்க வேண்டிய அரசு
நிரபராதியை
அழித்தது !
இயேசு கைவிடப்பட்டார்.

உயிருக்குள்
உயிராய் இருக்க வேண்டிய
உறவு
கரைந்து மறைந்தது.
இயேசு கைவிடப்பட்டார்.

உம்மோடு இருப்போம்
உம்மோடு இறப்போம் என்ற
நட்பு
ஓடி ஒளிந்தது.
இயேசு கைவிடப்பட்டார்.

கணநேரமும்
கைடாத திரித்துவ உறவு
மீட்பின்
பயணத்துக்காய் ஒதுங்கியது
இயேசு கைவிடப்பட்டார்.

தவக்காலம்
கை விடுதலின் காலம்.

நீதியின் மேல்
பசிதாகம் கொண்டவராய்
இருக்கச் சொன்னார்
இயேசு
போதனை கைவிட்டது !
நீதிக்கான பசி தாகம்
பட்டினியின் படுக்கையில் கிடக்கிறது.

எத்தனையோ
புதுமைகளின் பேரணியை
நடத்திக் காட்டிய
இயேசுவை
பயனாளிகளும் புறக்கணித்தனர்.

எருசலேமின் மேல்
தாகம் கொண்ட
இயேசுவை
எருசலேமே உதறித் தள்ளியது.

தவக்காலம்
கைவிடப்படுதலின் காலம்.

இயேசு
கைவிடுதலைக் கற்றுத் தந்தார்.

கை
உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால்
கை விடுவதல்ல,
கையையே விடுதல் சிறந்தது
என்றார்.

நாமும்
கைவிடக் கற்றுக் கொள்வோம்.

இயேசு
கை கொடுக்காத எதையும்,
கைவிடக் கற்றுக் கொள்வோம்.

*

சேவியர்

2 thoughts on “தவக்காலம் – கைவிடுதலின் காலம்

  1. அன்று
    கடல் கடந்து வந்து
    மறைப்பணி செய்த பிரான்சிஸ் சேவியர் பெயர் தாங்கி

    இன்று கருத்து களஞ்சியமாய்

    மறை நூலின் உண்மைகளை
    மக்கள் எங்கள் மனங்களில் மட்டுமல்ல
    இதயத்திலும் விதைத்து வரும்
    உங்களை ரசிக்கும் ஏராளமான
    ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
    வாழ்க நீ!
    வளர்க நின் பணி!
    தனம் செபாஸ்டின் மதுரை

    Like

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s