Posted in Articles, Sunday School

SKIT-தாமதம் நல்லது

தாமதம் நல்லது

காட்சி 1

( இரயில்வே நிலையம் ஒன்றில் ரயன் காத்திருக்கிறான் )

ரயன் : அப்பா… மணி அஞ்சு ஆச்சு, இன்னும் கொஞ்ச நேரத்துல டிரெயின் வரும். சீக்கிரம் வீட்டுக்கு போனா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். 

( அங்கும் இங்கும் நடக்கிறான் )

ரயன் : டிரெயினைக் காணோமே …

( அறிவிப்பு : பயணிகளின் கனிவான கவனத்துக்கு. சென்னை செல்லும் இரயில் வண்டியானது ஒரு மணி நேரம் தாமதமாக வரும். தடங்கலுக்கு வருந்துகிறோம் )

ரயன் : வாட்… ஒன் அவர் லேட்டா ! ஓ.. மை.. காட்…

ரயன் : (கோபத்தில் அங்கும் இங்கும் பார்க்கிறான்.. தரையை உதைக்கிறான் ) ! சே… இந்த நம்ம கெட்ட நேரம் இன்னிக்கு பாத்தா இப்டி லேட்டா வரணும். ஏற்கனவே டயர்டா வேற இருக்கு.. இதுல இங்க காக்க வெச்சுட்டாங்க. 

( அங்கும் இங்கும் நடக்கிறான், புலம்புகிறான் , போன் எடுத்து பேசுகிறான் )

ரயன் : ஆமாம்மா… சே… கடுப்பா இருக்கு..ஒன் அவர் லேட்டாம். …. ஆமா என்ன பண்றது ! சரி… ஒன் அவர் ந்னு சொல்லிட்டு மறுபடியும் லேட் பண்ணினாலும் பண்ணுவாங்க. 

( …. ) 

ரயன் : சரிம்மா… ம்ம்ம் ஒரு டீ குடிச்சிட்டு… ஏதாச்சும் பண்ணி டைமை விரட்டறேன். 

( வாட்சைப் பார்க்கிறான் )

ரயன் : ( மனசுக்குள் ) டைமே போக மாட்டேங்குது… கொஞ்ச நேரம் விளையாடலாம்.. ( வீடியோ கேம் விளையாடுகிறான் )… சே.. பேட்டரி வேற கம்மியா இருக்கு.. வீடு போய் சேர்ர வரைக்கும் பேட்டரி இருக்குமா தெரியல. அங்கே ஒரு சார்ஜிங் செண்டர் உண்டு அங்கே போய் போடலாம். 

( போகும் போது வழியில் ஒரு முதியவர் உட்கார்ந்திருக்கிறார். அவரை தெரியாமல் மிதிக்கிறான் )

ரயன் : யோவ்.. பெரியவரே.. கொஞ்சம் தள்ளி உக்காந்திருக்கக் கூடாது ? நடக்கவும் உடமாட்டாரு.. கடுப்பா இருக்கிற நேரத்துல வந்து காலை நீட்டிகிட்டு… ச்ச்ச்சை….

( அப்போது ஒரு அம்மா.. மூச்சு முட்ட இரண்டு பைகளை தூக்கிக் கொண்டு வருகிறார். ) 

ரயன் : ( மனசுக்குள் ) வயசான காலத்துல விட்ல கிடக்க தெரியாது.. பொட்டியைத் தூக்கிட்டு ஏதோ பாரின் போற மாதிரி.. பாத்தா உள்ளே ரேஷன் அரிசி தான் இருக்கும்…. ம்ம்

( அறிவிப்பு : பயணிகளின் கனிவான கவனத்துக்கு. சென்னை செல்லும் இரயில் வண்டியானது மேலும் அரை மணி நேரம் தாமதமாக வரும். தடங்கலுக்கு வருந்துகிறோம் ) 

ரயன் : ( கோபத்தில் கையை குத்துகிறான் )

காட்சி 2

( அதே ரயில்வே நிலையத்தில் இன்னொரு இடத்தில் ரெய்னா நிற்கிறார் )

( அறிவிப்பு : பயணிகளின் கனிவான கவனத்துக்கு. சென்னை செல்லும் இரயில் வண்டியானது ஒரு மணி நேரம் தாமதமாக வரும். தடங்கலுக்கு வருந்துகிறோம் )

ரெய்னா : ஓ.. இன்னிக்கு ஒன் அவர் டிலேவா… ம்ம்.. சரி, என்ன பண்ண.. நாம பைபிள் படிப்போம். கைல சின்னதா ஒரு பைபிள் இருக்கிறது எவ்ளோ நல்ல விஷயமா இருக்கு )

( ரெய்னா பைபிள் படித்துக் கொண்டிருக்கிறார்.. சுவாரஸ்யமாக… ) 

( அப்போது ஒரு அம்மா … பையைத் தூக்கியபடி கஷ்டப்பட்டு நடந்து வந்து கொண்டிருக்கிறார் )

(ரெய்னா.. ஓடிப் போகிறாள். )

ரெய்னா : அம்மா.. இங்க குடுங்கம்மா.. எங்க போறீங்க.. ஆட்டோ புடிக்கவா..

அம்மா : வெளியே போணும்.. அங்க போனா பஸ்ஸைப் புடிச்சு போயிடுவேன்.. இந்த ஸ்டெப்ஸ் ஏற தான் கஷ்டமா இருக்கு

ரெய்னா : நோ.. பிராப்ளம்ம்மா.. எனக்கு ஒரு மணி நேரம் லேட் தான் ட் ரெயின். ஜீசஸ் தான் எனக்கு இந்த டைம் குடுத்திருக்காரு, உங்களுக்கு ஹெல்ப் பண்ண..

அம்மா : ஜீசஸா.. அது யாரும்மா.. 

ரெய்னா : வாங்கம்மா.. நான் நடந்துட்டே சொல்றேன்.. அது ஒரு அற்புதமான கதை..

அம்மா : ம்ம்.. நீ ரொம்ப நல்ல புள்ளையா இருக்கேம்ம்மா

ரெய்னா : இயேசப்பா அப்படி இருக்கச் சொல்லியிருக்காரும்மா.. அதான்

அம்மா : அதாரும்மா இயேசப்பா… 

ரெய்னா : ஓ.. ஜீசஸ் தான் இயேசப்பா.. நான் உங்களுக்கு அவரைப் பற்றி எல்லாம் சொல்றேன்.. வாங்க… 

அம்மா : ம்ம்.. சொல்லும்மா.. கேட்டுட்டே நடக்கறேன்… 

ரெய்னா : நம்மளோட பாவத்தையெல்லாம் நீக்கி சொர்க்கத்துல சேக்கிறதுக்காக வந்தவர் தான் இயேசு. அவர் கடவுளோட மகன். இந்த உலகத்தையே படைச்சது அவர் தான். ( அப்படியே இசை )

( அந்த அம்மாவைக் கொண்டு விட்டு விட்டு திரும்ப வருகிறார். அப்போது அந்த முதியவர் வழியில் அமர்ந்திருக்கிறார். )

ரெய்னா : தாத்தா.. என்ன இங்கே உக்காந்திருக்கீங்க.. இப்படி ஓரமா உக்காருங்க. ( பையைத் திறந்து சாப்பிட எதையோ கொடுக்கிறாள் ) இதா.. சாப்பிடுங்க. எங்க போணும் ?

தாத்தா : ம்ம்.. தெரியலம்மா… எங்க போணும்ன்னு தெரியல… 

ரெய்னா : ஓ.. உங்க வீட்ல யாரும் இல்லையா ? 

தாத்தா : வீடு.. வீடு.. பசங்க இருக்காங்க.. அவங்க தான் இங்கே கொண்டு போட்டாங்க.. அவங்க இப்போ எங்கே இருக்காங்கன்னு தெரியல… ம்ம்..

ரெய்னா : கவலைப்படாதீங்கய்யா.. தண்ணி வேணுமா ? வேற யாராச்சும் இருக்காங்களா உங்களுக்கு ?

தாத்தா : எனக்கு .. எனக்கு யாருமே இல்லை… இல்லை

ரெய்னா : ஏன் யாருமே இல்லேன்னு நினைக்கிறீங்க. உங்களை தன்னோட உயிரா நேசிக்கிற ஒருத்தரு இருக்காரு தெரியுமா ?

தாத்தா : ஹி..ஹி.. என்னையா.. நேசிக்கவா…

ரெய்னா : உண்மை தான் தாத்தா.. அவரு பேரு இயேசு..

தாத்தா : அவரு ஏன் என்னை நேசிக்கணும் ? அவருக்கு என்னை தெரியுமா ? 

ரெய்னா : அவருக்கு எல்லாரையும் தெரியும். நீங்க பிறக்கிறதுக்கு முன்னாடியே உங்க பெயரை தெரிஞ்சு வெச்சிருக்கிறவரு அவரு.. .உங்களை தன்னோட கண்ணின் மணியா பாத்துக்கிறவரு…

தாத்தா : ம்ம்ம்.. சொல்லு சொல்லு.. இப்படி யாரும் சொன்னதே இல்லையே.. நீ என் பொண்ணு மாதிரிம்மா.. சொல்லு சொல்லு..

ரெய்னா :  சொல்றேன் தாத்தா அது ஒரு அற்புதமான கதை. நம்ம தலைமுடியை எல்லாம் எண்ணி வெச்சிருக்கிற கடவுள் அவரு. நம்மளை ரொம்ப ரொம்ப நேசிக்கிற கடவுள் அவரு. நாம எல்லாம் பாவத்துல அழிஞ்சிடக் கூடாதுன்னு தன்னோட ஒரே மகனை அவரு இந்த பூமிக்கு அனுப்பினாரு.. அவரு நமக்காக இங்கே வந்து.. சிலுவையில உயிர் விட்டாரு. அவரை யாரெல்லாம் நம்பறாங்களோ அவங்களையெல்லாம் அவரு சுவர்க்கத்துல கூட்டிட்டு போவாரு. ஏன்னா, அவரு எல்லாரையும் நேசிக்கிறாரு.. அவரை நம்புங்க சரியா… எனக்கு டிரெயினுக்கு டைம் ஆச்சு…..… 

( அறிவிப்பு : பயணிகளின் கனிவான கவனத்துக்கு. சென்னை செல்லும் இரயில் வண்டியானது மேலும் அரை மணி நேரம் தாமதமாக வரும். தடங்கலுக்கு வருந்துகிறோம் ) 

ரெய்னா : இன்னும் அரைமணி நேரம் லேட்டாம்.. ரொம்ப நல்லது.. அப்போ எல்லா கதையும் சொல்றேன்ன்…. முதல்ல நான் உங்களுக்கு டீ வாங்கிட்டு வரேன்.. குடிச்சிட்டே பேசலாம்.. சரியா… 

காட்சி  3

( ரெய்னாவும், ரயனும் வீட்டில் வருகின்றனர் )

அம்மா : வாங்கப்பா.. ஏன் இன்னிக்கு ரொம்ப லேட்டா 

ரயன் : சே..சே..சே.. செம கடுப்பாயிடுச்சு.. ரெஸ்ட் எடுக்க வேண்டிய டைம் எல்லாம் ஸ்றெஸ் ஆ போச்சு… என்ன பண்ண.. இந்த ரயில்வேயும்… ம்ம்ம்ம்.. வாயில பேட் வேர்ட்ஸ் வருது.

அம்மா : ஏண்டா… கொஞ்ச நேரம் லேட்டானதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷனாகிறே… ரெய்னா.. நீ எந்த டிரெயின்ல வந்தே.. கூலா இருக்கே

ரெய்னா : அதே டிரெயின் தாம்மா.. எனக்கு டைம் போனதே தெரியல.. 

ரயன் : ஆமா.. இவ வழக்கம் போல யாருக்காவது ஹெல்ப் பண்றேன்னு சுத்திட்டு திரிஞ்சிருப்பா… அவளுக்கென்ன ..

ரெய்னா : உண்மை தான்.. ரெண்டு பேருக்கு நற்செய்தியை அறிவிக்க கடவுள் எனக்கு ஹெல்ப் பண்ணினாரு. அதுக்காகத் தான் ஒன்னரை மணி நேரம் டிரெயினை லேட்டாக்கினாரு.

ரயன் : நீ ..சுவிசேஷம் சொல்ல என்னை வெயிட் பண்ண வெச்சாராக்கும்

ரெய்னா : அப்படியில்லை.. நற்செய்தி அறிவிக்க முடியலேன்னா. பைபிள் படிச்சிட்டிருப்பேன். நற்செய்தியை அறி.. நற்செய்தியை அறிவி.. அதான் என்னோட காத்திருத்தல் நேரத்தோட மோட்டோ..

ரயன் : ஆமா. பெரிய மோட்டோ… சோட்டோ

அம்மா : அவ சொன்னதுல என்னப்பா தப்பு.. கரெக்டா சொல்லியிருக்கா…

ரயன் : அம்மா இவளை மாதிரி யாராச்சும் இருப்பாங்களா ?

அம்மா : அக்கா மாதிரி நிறைய பேரு இருக்காங்க. உண்மையிலேயே கடவுளைப் பற்றி பிறருக்கு அறிவிக்கணும்ன்னு ஆசை இருக்கிறவங்க எல்லாம் அதைத் தான் பண்ணுவாங்க. 

ரயன் : ஒரு ஆளை சொல்லுங்க பாப்போம்..

அம்மா : உதாரணமா பவுலை எடுத்துக்கோ. ஒரு கடற் பயணம் போறாரு. போற வழியிலயும் நற்செய்தி அறிவிக்கிறாரு. ஒரு தீவுல கொஞ்ச நாள் தங்க வேண்டி வருது. அங்கயும் நற்செய்தி அறிவிக்கிறாரு. ரோம்ல போய் வீட்டுச் சிறையில அடைக்கப்படறாரு. அங்கயும் நற்செய்தி அறிவிக்கிறாரு. ஒரு தடவை ஜெயிலுக்குள்ள வேற யாரும் இல்லாதப்போ ஜெயிலருக்கே நற்செய்தி அறிவிக்கிறாரு.

ரயன் : ஓ..  பவுல் வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும்மா

அம்மா : நற்செய்தி அறிவித்தல் நம்மேல் விழுந்த கடமை. அதை செய்யலேன்னா பாவம். அதை எப்பல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ அப்பல்லாம் செய்யணும்பா.. ஓய்வு நேரம், காத்திருத்தல் நேரமெல்லாம் டென்ஷனாகி உடம்பைக் கெடுத்துக்கிறதுக்கு பதிலா, கடவுளை பிறருக்கு கொடுத்துட்டு வரலாமே…

ரயன் : ம்ம்…. சரிம்மா..

அம்மா : கையில எப்பவும் ஒரு சின்ன பைபிளை வெச்சுக்கோ.. அப்போ உனக்கு எப்பல்லாம் டைம் கிடைக்குதோ அப்பல்லாம் படிக்கலாம். அப்படி தொடர்ந்து படிச்சுட்டே இருந்தேன்னா, உனக்கும் கடவுளைப் பற்றி பேசணும்ன்னு ஆர்வம் வரும்.

ரயன் : சரிம்மா.. இனி நான் அப்படியே பண்றேம்மா… 

அம்மா : சரி, சரி.. டயர்டா இருப்பீங்க.. கை கால் கழுவிட்டு வாங்க காபி போட்டு தரேன்.

*

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s