உயிர்ப்பின் அனுபவம்
உயிர்ப்பிக்கும்
*
காட்சி 1
( அஸ்வின் காலையில் பைபிள் படிக்கிறான் )
அஸ்வின் மனதில் : இன்னிக்கு எப்படியாவது ஒருத்தருக்கு நற்செய்தி அறிவிக்கணும். என்ன பண்ணலாம் ? புதுசா ஐடியா பண்ணணும்.. லேட்டஸ்ட் டிரெண்டுக்கு ஏத்தபடி…
ம்ம்.. என்ன பண்ணலாம்… சரி.. பாப்போம். ஏதாச்சும் ஐடியா கிடைக்கும்….
காட்சி 2
( அஸ்வின் – அலுவலகத்தில் )
( அஸ்வினின் நண்பன் சோகமாக உட்கார்ந்திருக்கிறான் )
அஸ்வின் : ஹாய்…. என்னப்பா.. என்னாச்சு
நண்பன் : இல்லடா.. மனசே சரியில்ல… அப்ரைசல் டைம்ல பாத்து நமக்கு ஏதாச்சும் ஆப்பு வைக்கிறாங்களோன்னு பயமா இருக்கு…
அஸ்வின் : என்ன சொல்றே புரியல
நண்பன் : இல்ல, பெர்ஃபாமன்ஸ் சரியில்ல இன்னும் நீ நல்லா இம்ப்ரூவ் பண்ணணும்ன்னு மேனேஜர் சொல்றாரு.
அஸ்வின் : மேனேஜர்ஸ்னா ஒரு ஃபீட்பேக் குடுக்கத் தான் செய்வாங்க… அதுக்கு போய் டென்ஷன் ஆகறே ? என்ன பிரச்சினைன்னு பாத்து சரி பண்ணிக்கலாம்
நண்பன் : உனக்கு ஆபீஸ் பாலிடிக்ஸ் தெரியல. மார்ச் ஏப்ரல்ல உன் கிட்டே இப்படி சொல்றாங்கன்னா உனக்கு மோசமான ரேட்டிங் குடுக்கப் போறாங்கன்னு அர்த்தம். டார்கெட் பண்ணிட்டாங்களோன்னு பயமா இருக்கு..
அஸ்வின் : அப்படியெல்லாம் ஏன் கவலைப்படறே…. நீ நல்ல சின்சியரா வேலை பாக்கறவன் உனக்கு சரியான ரேட்டிங் தான் கிடைக்கும்.
நண்பன் : இல்லடா, ஒரு மன பாரமாவே இருக்கு.
அஸ்வின் : நான் உனக்காக பிரேயர் பண்றேண்டா…. “சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்” ந்னு இயேசு சொல்றாரு. நீ அவருகிட்டே ப்ரேயர் பண்ணு.. அவரு உனக்கு நிச்சயம் ஒரு மன நிம்மதி தருவார்.
நண்பன் : என்ன இயேசு, அது இதுன்னு பேசறே ?
அஸ்வின் : இல்லடா.. நீ தேடற நிம்மதி கண்டிப்பா இயேசு தருவார்ன்னு பைபிள் சொல்லுது..
நண்பன் : என்ன மதமாற்ற பிரசங்கமா ? நம்ம ஆபீஸ்லயேவா ?
அஸ்வின் : சே…சே ஏன் அப்படி நினைக்கிறே.. நீ சோர்வா இருந்தே அதான்..
நண்பன் : அந்த கேப்ல உன் கடவுளை விக்க பாக்கறியா ?
அஸ்வின் : ஏண்டா இப்படியெல்லாம் பேசறே.. உன் நல்லதுக்கு தானே பேசறேன்
நண்பன் : நான் ஹைச்.ஆர் கிட்டே கம்ப்ளெயின் பண்றேன். இந்த கிறிஸ்டியன்ஸுக்கே இதான் வேலை. ஏதாச்சும் ஒரு சின்ன இடம் கிடைச்சா போதும் உடனே இயேசு, பைபிள்னு தூக்கிட்டு வந்திடுவாங்க.
அஸ்வின் : சரி விடு.. நான் பேசல
நண்பன் : என்ன பேசல.. உன்னை பத்தி கம்ப்ளெயின் பண்ணி உன்னை வேலையை விட்டே தூக்கறேனா இல்லையா பாரு
அஸ்வின் : ஹேய்.. பிளீஸ் பிளீஸ்.. இனிமே அப்படி பேசவே மாட்டேன். இந்த ஆபீஸ்ல இயேசுங்கற பேச்சையே எடுக்க மாட்டேன். கம்ப்ளெயிண்ட் பண்ணி என் வேலையை கெடுக்காதே பிளீஸ்….
நண்பர் : சரி, நீ என் பிரண்ட் ஆனதால விடறேன்… இனிமே இந்த ஆபீஸ்ல இயேசுங்கற பேச்சை நீ எடுத்தாலே நான் கம்ப்ளையிண்ட் பண்ணிடுவேன். கடுப்படிக்காம போயிடு….
அஸ்வின் : நோ..நோ.. இனிமே பண்ணவே மாட்டேன். பிராமிஸ்
காட்சி 4
(அஸ்வின் தனிமையில் )
சே…. ஆபீஸ்ல நற்செய்தி அறிவிக்கிறதுல ஏகப்பட்ட பிரச்சினை. வேலையை விட்டே தூக்கிடுவாங்க போல… ம்ம்… இனிமே ஆபீஸ்ல இந்த பேச்சையே எடுக்கக் கூடாது. வெளியே பண்ணலாம்…ம்ம் பாப்போம்
ம்ம்ம்.. வெளியே பண்ணினா ஹைச் ஆர் கேள்வி கேக்க முடியாது.. பர்சனல் விஷயம்ன்னு சொல்லிடுவேன்.
காட்சி 5
( TWO PEOPLE NEEDED – Shaun & his brother ? Or John’s son )
( தெருவில் அஸ்வின் )
அஸ்வின் : ஐயா.. இதாங்க ( ஒரு பேப்பர் குடுக்கிறார் )
நபர் 1 : இது என்னது ?
அஸ்வின் : ஐயா.. இது இயேசுவைப் பற்றிய ஒரு பேப்பர்…. இயேசு கேள்விப்பட்டிருக்கீங்களா ? இயேசு நமக்காக இரத்தம் சிந்தி உயிர்விட்ட கடவுள். அவரை நம்பினா நாம நித்திய வாழ்வை பெறலாம்
நபர் : நித்திய வாழ்வுன்னா ?
அஸ்வின் : ஐயா.. இந்த உலகத்துல நாம வாழ்றது கொஞ்ச காலம் தான். அதுவும் இந்த கோவிட் காலத்துல எப்ப மரணம் வரும்னே தெரியல. ஆனா அதுக்கு அப்புறம் நம்ம வாழ்க்கை கடவுளோட நிலையானதா இருக்கணும்.
நபர் : ஓ.. அதுக்கு என்ன பண்ணணும்
அஸ்வின் : இயேசுவை நம்பணும். அவர் நமக்காக மரித்து உயிர்த்தாருங்கறதை நம்பணும். இயேசுவே நான் பாவி, என்னை மன்னிச்சுடுங்க. என்னை உங்க பிள்ளையா ஏத்துக்கங்கன்னு கேக்கணும்
நபர் : அவ்ளோ தானா ?
அஸ்வின் : ஆமா.. அவரை தேடி வரவங்களை அவர் விரட்ட மாட்டாரு அரவணைப்பாரு. அதுக்கு அப்புறம் அவரோட வழியில நடக்கணும்.
நபர் : அவரோட வழின்னா ? அதை எப்படி தெரிஞ்சுக்கறது
அஸ்வின் : அதுக்கு தான் இந்த பைபிள் இருக்கு. இதை படிச்சா இயேசுவோட வழி என்னன்னு தெரியும்
( ஒருவர் வருகிறார் )
( Karen Dad – in Green screen )
( கேமராவை பாத்த மாதிரி பேசணும்… )
நபர் 2 : ஏய். என்ன பண்றே ? என்ன கன்வர்ஷனா ? மதமாற்றமா ? உங்களையெல்லாம் உயிரோடவே விடக்கூடாது
அஸ்வின் : ஐயா.. நான் சும்மா பேசிட்டிருந்தேன்யா,,,
நபர் 2 : சும்மா பேசிட்டிருந்தியா…. நான் கேட்டுட்டு தானே இருந்தேன்.. இயேசுவாம், நித்தியமாம்.. மக்களை குழப்பிட்டே இருப்பீங்களா ? இது எங்க மண்ணு தெரியும்ல….
அஸ்வின் : ஐயா…. அது வந்து..
நபர் 2 : போன் போட்டு எல்லாரையும் வரவழைக்கிறேன்.. வந்தேறி மதத்தோட தெனாவெட்டைப் பாரு…. இன்னிக்கு உனக்கு சங்கு தான். எங்கே வந்து என்ன பண்றே நீ…
அஸ்வின் : ஐயா.. என்னை விட்டுடுங்க பிளீஸ்.. இனிமே நான் இப்படி பண்ணவே மாட்டேன் பிளீஸ்… பிளீஸ்…
நபர் 2 : இப்படியெல்லாம் நடிச்சா விட்டுடுவோமா…
அஸ்வின் : இனிமே கண்டிப்பா இப்படி பண்ண மாட்டேன்.. பிளீஸ்…
நபர் 2 : சரி சரி… எத்தனை பேரை கொளுத்தினாலும் , எத்தனை சர்ச் இடிச்சாலும் நீங்கல்லாம் திருந்த மாட்டீங்களா…. ஓடு… ஓடு… இனிமே ஒரு தடவை உன்னை எங்கேயாச்சும் பாத்தேன்.. காலி பண்ணிடுவேன்..
அஸ்வின் : (பயத்துடன் ஓடுகிறான் )
காட்சி 6
( ONE PERSON – Sweetlyn Son )
( அஸ்வின் நண்பனுக்கு போன் பண்ணுகிறான் )
அஸ்வின் : ஹாய்.. எப்படிடா இருக்கே
நண்பன் 2 : நல்லா இருக்கேண்டா.. என்ன மேட்டர் ?
அஸ்வின் : இல்லடா… எப்படியாவது நற்செய்தி அறிவிக்கணும்ன்னு பாக்கறேன்.. ஆனா முடிய மாட்டேங்குது
நண்பன் 2 : என்னாச்சு
அஸ்வின் : மிரட்டறாங்க.. துரத்தறாங்க…. ஒரு காலத்துல சுதந்திரமா பேசிட்டிருந்தோம்.. இப்போ பேசவே பயமா இருக்கு. எல்லா இடங்கள்லயும் மிஷனரி பணிக்கு எதிர்ப்பு தான்.
நண்பன் 2 : ம்ம்.. அதுக்கு ஒரு வழி இருக்கு
அஸ்வின் : என்ன வழி ?
நண்பன் 2 : ஒரு ஆன்லைன் சானல் ஆரம்பிச்சு, நற்செய்தி அறிவி.. நானும் ஒரு குக்கிங் சேனல் ஆரம்பிச்சேன்…. அது இன்னிக்கு செம பாப்புலர்டா….
அஸ்வின் : சமையல் சேனலா ?
நண்பன் : ஆமாடா எனக்கு சமையல் பாத்திரங்களோட பழக்கம், உனக்கு கதாபாத்திரங்களோட பழக்கம். நான் இதை பண்றேன், நீ அதை பண்ணு. இண்டர்நெட் மிஷனரில ரிஸ்க் இல்லை.
அஸ்வின் : ஓக்கே….ஓக்கேடா…. தட்ஸ் எ குட் ஐடியா.. பாப்போம்.
காட்சி 7
( ஒரு சேனல் வழியாக நற்செய்தி அறிவிக்கிறான் )
அஸ்வின் : இன்னிக்கு நாம இயேசு சொன்ன இரண்டு கட்டளைகள் பற்றி பேசப் போறோம். இயேசு , கிறிஸ்தவத்தின் போதனைகளை எல்லாம் சுருக்கி இரண்டு கட்டளையா குடுத்தாரு. எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசி, தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசி. இது தான் அந்த இரண்டு கட்டளைகள்……
நிறைய கமெண்ட் வந்திருக்கு, பரவாயில்லை.. குட் குட்
( சில நாட்களுக்குப் பின் )
என்ன ஒரு மிரட்டல் கடிதம் வந்திருக்கு.
‘உன் சானலை சைபர் கிரைமுக்கு குடுத்து டிராக் பண்ணப் போறேன். பாரின் மணி உனக்கு வருது. மதமாற்றத்துக்கும், மத கலவரத்துக்கும் தூண்டற மாதிரி நீ போஸ்ட் போடறே. இன்னும் கொஞ்ச நாள்ல உன் குடும்பத்தையே ஜெயில்ல தள்ளலேன்னா பாத்துக்கோ
அஸ்வின் : ஓ.. மை காட்.. இதுலயும் பிரச்சினையா… இதையும் மூடி வைக்க வேண்டியது தான்.
( சானலை குளோஸ் பண்ணுகிறான் )
காட்சி 8
( அம்மா & அஸ்வின் )
அஸ்வின் : அம்மா…. சுவிசேஷத்தை அறிவிக்கிறது எவ்ளோ பெரிய சவால் இல்ல ? எப்படி தான் பழைய காலத்துல மிஷனரிகள் வந்து வேலை பாத்தாங்களோ
அம்மா : அது எல்லாம் ஒரு பெரிய அர்ப்பணம்பா… கடவுளோட அழைப்பு. அந்த அழைப்பு இருந்தா எப்படிப்பட்ட சவாலையும் தாண்டிடுவாங்க.
அஸ்வின் : ம்ம்… நானும் எப்படியாவது நாலுபேருக்கு இயேசுவைப் பத்தி சொல்லணும்ன்னு பாத்தேன். ஆபீஸ்ல சொன்னா வேலையை காலி பண்ணிடுவேன்னு சொல்றாங்க, ரோட்ல சொன்னா ஆளையே காலி பண்ணிடுவேன்னு சொல்றாங்க, டிஜிடல்ல சொன்னா குடும்பத்தையே காலி பண்ணிடுவேன்னு சொல்றாங்க…
அம்மா : பயமுறுத்துறவங்க பயமுறுத்த தான் செய்வாங்க.. அதைக் கண்டு பயப்படாம பணி செய்யணும். அதுக்கு ஒரு விஷயம் ரொம்ப முக்கியம்
அஸ்வின் : என்னம்மா ?
அம்மா : நீ போற வழியில ஒரு நரி உன்னை பாத்து ஆக்ரோஷமா முறைச்சா நீ பயப்படுவியா ?
அஸ்வின் : கண்டிப்பா… பயந்து நடுங்கிடுவேன்
அம்மா : ஒருவேளை நீ ஒரு சிங்கத்தைக் கூட்டிட்டு போனா , அந்த நரியைப் பாத்து பயப்படுவியா ?
அஸ்வின் : எதுக்கு பயப்படணும் ? சிங்கம் இருக்கும்போ என்ன கவலை
அம்மா : அது தான் விஷயம். நீ நற்செய்தி அறிவிக்க போகும்போ சிங்கத்தைக் கூட்டிட்டு போணும்….
அஸ்வின் : சிங்கத்தையா… ? சிங்கத்துக்கு நான் எங்க போவேன்… சிங்கமே என்னை காலி பண்ணிடுமே..
அம்மா : நம்மளை காலி பண்ணாம பாதுகாக்கற சிங்கத்தோட தான் நீ போணும்…
அஸ்வின் : அதென்ன சிங்கம் ? சர்க்கஸ் சிங்கமா
அம்மா : இல்லை, யூதாவின் சிங்கம்… அதான் இயேசு ! நீ இயேசுவோட போனேன்னா எல்லா எதிர்ப்பையும் சமாளிக்கிற தைரியம் கிடைக்கும்.
அஸ்வின் : அது எப்படிம்மா.
அம்மா : இயேசுவே சொன்னாரு, இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன். அதனால போய் நற்செய்தியை அறிவியுங்கள்ன்னு…
அஸ்வின் : ம்ம்…
அம்மா : விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது – அதனால போய் நற்செய்தியை அறிவியுங்கள் ந்னு சொன்னாரு. எல்லா அதிகாரமும் இயேசுவிடம் இருக்கு. அதனால இயேசுவோட போனா நமக்கு எந்த கவலையும் இல்லை
அஸ்வின் : ம்ம்.. புரியுதும்மா.. நானும் பிரேயர் பண்ணிட்டு தான் போரேன்.. பட்.. அந்த பயம் போக மாட்டேங்குது.
அம்மா : நல்லா பிரேயர் பண்ணுப்பா… உயிர்த்த இயேசுவின் அனுபவம் உனக்கு கிடைக்கும்… கடவுள் வழி காட்டுவார்.. அவரு உன் கூட பேசுவாரு , நேரடியாவோ, ஒரு செய்தி மூலமாவோ, ஒரு கனவு மூலமாவோ உன் கிட்டே அவரு பேசுவாரு
காட்சி 9
( அஸ்வின் ப்ரேயர், பைபிள் ரீடிங் )
காட்சி 10
( ONE PASTOR – Xavier )
( அஸ்வின் ஈஸ்டர் சர்வீஸ் அட்டண்ட் பண்ணுகிறான் )
பாஸ்டர் : இன்னிக்கு நமக்கு ஈஸ்டர் விழா. மகிழ்ச்சியின் விழா.
சிலுவை இயேசுவின் அன்பின் அடையாளம்.
உயிர்ப்பு, விண்ணக திறப்பின் அடையாளம்.
சிலுவை அர்ப்பணிப்பின் அடையாளம்
உயிர்ப்பு நம்பிக்கையின் அடையாளம்.
ஆதாமின் வாழ்வின் மூலமாக வந்தது சாவு. இயேசுவின் சாவின் மூலமாக வந்தது வாழ்வு.
இயேசு எவ்வளவோ பெரிய செயல்கள் எல்லாம் செய்தாலும், இயேசுவின் மரணம் அவர்களை நிலை குலைய வைத்தது. ஓடி ஒளிஞ்சாங்க. இயேசுவோட உயிர்ப்பைக் கண்டபிறகு தான் உற்சாகம் அடைஞ்சாங்க. இருந்தாலும் கல்லறை திறக்கப்பட்ட பிறகு கூட, கதவை அடைச்சிட்டு இருந்தாங்க. அவர்களை இயேசு சந்தித்தார். உயிர்ப்பின் அனுபவம்.
கோழைத்தனத்திலிருந்து துணிச்சலுக்கு
இருளிலிருந்து வெளிச்சத்துக்கு
பயத்திலிருந்து தைரியத்துக்கு
குழப்பத்திலிருந்து தெளிவுக்கு
நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு
இயேசு நம்மோடு இருக்கிறார் என நம்புவதும்,
தூய ஆவி நம் உள்ளத்தில் இருக்கிறார் என்பதை நம்புவதும் தான் மிக முக்கியம்.
அது இல்லையேல் நமக்கு துணிச்சல் பிறக்காது. அது தான் நம்மை நற்செய்தியாளர்களாக மாற்றும்.
காட்சி 11 அ
( அஸ்வின் சிந்திக்கிறான் )
நான் தனியா போய் இயேசுவை அறிவிக்க முடியாது, இயேசுவோட போய் தான் இயேசுவை அறிவிக்கணும். ம்ம்ம்ம்
இயேசுவே.. நான் என்ன பண்ணணும்ன்னு எனக்கு சொல்லுங்க.. உமது உயிர்ப்பின் அனுபவத்தை எனக்கும் தாருங்க.
காட்சி 12
( கனவு )
நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்… நான் உன்னை விட்டு விலகுவதில்லை.
( எழும்புகிறான் )
இயேசுவே… நீர்… நீர் என்னோடு பேசினீர்… நன்றி இயேசுவே… இனி நீர் என்ன சொல்கிறீரோ அப்படியே செய்கிறேன்.
காட்சி 12 ஆ
( அஸ்வின் & அம்மா )
அஸ்வின் : அம்மா, என் கூட கடவுள் பேசினாரும்மா. ஒரு செய்தி மூலமா பேசினாரு, அப்புறம் அதை உறுதிப் படுத்தற மாதிரி கனவுலயும் பேசினாரும்மா…. எனக்கு இப்போ ஒரு உற்சாகம் வந்திருக்கு
அம்மா : ரொம்ப சந்தோசம் தம்பி. ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ, கடவுள் நம்ம கூட இருக்கும்போ பிரச்சினைகள் வராதுன்னு நினைக்காதே. வரும், நிறையவே வரும். ஆனா அதையெல்லாம் சமாளிக்கிற வல்லமையை கடவுள் தருவாரு.
அஸ்வின் : அது தான் மிகப்பெரிய பலம் மா…
அம்மா : நல்லா பிரேயர் பண்ணிக்கோப்பா…
அம்மா :
காட்சி 13
( அலுவலகம், அதே பழைய நண்பர் )
நண்பர் : என்னப்பா… அஸ்வின் எப்படி இருக்கே ?
அஸ்வின் : இயேசுவோட கிருபையால நல்லா இருக்கேண்டா.. நீ எப்படி இருக்கே ?
நண்பர் : மறுபடியும் இயேசுவா ?
அஸ்வின் : என் வாழ்க்கைல எல்லாத்துக்குமே அவர் தான் காரணம். அதை சொல்ல எனக்கு தயக்கம் இல்லை.
நண்பர் : (நக்கலாக ) புரமோஷன் வருதா உனக்கு இந்த தடவை
அஸ்வின் : இயேசுவுக்கு விருப்பம் இருந்தா தருவாரு, இல்லேன்னா தரமாட்டாரு. எது நமக்கு நல்லதுன்னு அவருக்கு தெரியும்.
நண்பர் : ஓ..அப்படியா ? மேனேஜ்மெண்ட் க்கு விருப்பம் இருந்துச்சு.. ஆனா, நீ இயேசு இயேசுன்னு சொன்னதால அதை இல்லாம பண்ணிடறேன்.
அஸ்வின் : வாட் டு யூ மீன்
நண்பர் : நான் இன்னிக்கே ஹைச்.ஆர் கிட்டே கம்ப்ளெயிண்ட் பன்ணுவேன். நீ டூ மச்சா போறே. இந்த பேச்சே செம கடுப்பா இருக்கு. இயேசுவாம்.. இயேசு…
அஸ்வின் : நான் எந்த தப்பும் பண்ணல, பட்.. உனக்கு என்மேல அவளோ கோபம்ன்னா.. இயேசுவுக்காக அதை ஏத்துக்க எனக்கு சந்தோசம் தான்.
காட்சி 14
( ONE PERSON – May be we can show back side )
( தெருவில் ஒரு ஏழைக்கு உதவுகிறான் )
ஏழை : நீங்க நல்லா இருக்கணும் தம்பி.
அஸ்வின் : இயேசு எல்லாரையும் நேசிக்கிறார். உங்களையும் நேசிக்கிறார். உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்றார். அதான் பண்றேன். எல்லா புகழும் அவருக்கே சேரட்டும்.
காட்சி 14 அ
( சில நாட்களுக்குப் பின் )
( ONE PERSON – Sudakar )
அஸ்வின் : குட் மார்ணிங் சார்…
மேலதிகாரி : மார்ணிங் எல்லாம் இருக்கட்டும்பா… என்ன நடக்குது ? ஏகப்பட்ட கம்ப்ளெயிண்ட்ஸ் உன் மேல
அஸ்வின் : என்ன கம்ப்ளெயிண்ட் சார்
மேலதிகாரி : பாலிசி வயலேஷன் கம்ப்ளெயிண்ட்.. உனக்கு இந்த வருஷம் புரமோஷன் வரவேண்டியது, இதனால ஸ்டாப் ஆச்சு….
அஸ்வின் : என்ன பாலிசி வயலேஷன் சார் ?
மேலதிகாரி : இயேசு இயேசுன்னு பேசி நீ மக்களை மதம் மாத்த முயற்சி பண்றியாமே, இட்ஸ் எ மல்டி நேஷனல் கம்பெனி. 2 பில்லியன் டாலர் புராஜக்ட்ல நீ இருக்கே… யோசிக்க மாட்டியா ?
அஸ்வின் : சார், அது தப்பான குற்றச்சாட்டு. நான் என்னோட வாழ்க்கைக்குக் காரணம் இயேசுன்னு தான் சொன்னேன். அடுத்தவங்க இயேசுவை ஏத்துக்கணும்ன்னு கட்டாயப்படுத்தல.
மேலதிகாரி : வாட்டெவர்.. ஹைச் ஆர் க்கு கம்ப்ளெயின்ட் போயிருக்கு.. சோ, ஐம் சாரி… இந்த வருஷம் உங்களை பிளாக் லிஸ்ட் பண்ணிட்டாங்க..
அஸ்வின் : தட்ஸ் ஓக்கே சார். எனக்கு புரமோஷன் தரது இயேசு தான், அதை உங்க மூலமா தராருன்னு நான் நம்பறேன். அவரு தரலேன்னா, அது எனக்கு தேவையில்லாததுன்னு நான் புரிஞ்சுக்கறேன்.
மேலதிகாரி : இத பாரு.. நீ நல்லா வளர்ந்து வர பையன். இந்த மாதிரி பேசறதை நிப்பாட்டிட்டு வேலையை பாத்தா கேரியர்ல எங்கயோ போலாம். லுக் அட் மி.. நானும் கிறிஸ்டியன் தான். ஆனா யாருக்குமே தெரியாது. என் ஆபீஸ்ல கூட ஒரு ஜீஸஸ் படம் கிடையாது. பி எ ரோமன் வென் யூ ஆர் இன் ரோம். ஜீசஸையெல்லாம் ஹாலிடேஸ்ல பாத்துக்கோ, அல்லது ஆஃப் ஆபீஸ் அவர்ஸ்ல பாத்துக்கோ…
அஸ்வின் : சாரி… சார்.. இயேசுவை இன்ஸ்டால்மெண்ட்ல நேசிக்க என்னால முடியாது. எனக்கு ஆபீஸ்ல வளர்றதை விட, ஆண்டவர்ல வளர்ரது தான் சார் முக்கியம்.
மேலதிகாரி : இப்படியெல்லாம் பேசினா.. ஐ காண்ட் ஹெல்ப்.. யூ மே கோ…
காட்சி 15
( மறுபடியும் சேனல் ஆரம்பிக்கிறான் )
அஸ்வின் : பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்தார். இயேசுவை தெரியாதுன்னு சொன்னார். ஆனா இயேசுவை விட்டு விட்டு ஓடிவிடவில்லை. மனம் கசிந்து அழுதார் மீண்டும் இயேசுவிடமே வந்தார். மூன்று முறை மறுதலித்தவர், மூன்று முறை ‘இயேசுவே உம்மை அன்பு செய்கிறேன்’ என்றார்.
ஆனா யூதாஸ் “இயேசுவை எனக்குத் தெரியும்” ந்னு சொன்னான். ஆனா இயேசுவை விட்டு விலகிப் போனான். நாம யாராக இருக்கிறோம் ? முத்தத்தால் காட்டிக் கொடுத்து மொத்தமும் விலகிய யூதாசாகவா ? முற்றத்தில் விட்டுக் கொடுத்து, மீண்டும் அன்புக்குள் வந்து சேர்ந்த பேதுருவாகவா ?
( அஸ்வின் மகிழ்ச்சியாய் புன்னகைக்கிறான் )
காட்சி 17
(* ஒரு போன் வருகிறது )
அஸ்வின் : ஓ…. கோவிட்டா ? வாட்… அவங்க அப்பாவா ? ஐயையோ…. எப்போ ? எனக்கு தெரியவே தெரியாதே… சரி.. நான் போய் பாக்கறேன்… பரவாயில்லை… இந்த டைம்ல போய் பாக்காம எப்ப பாக்கறது ?
காட்சி 18
( அஸ்வின் & அலுவலக நண்பர் )
அஸ்வின் : ஹாய்… எப்படி இருக்கீங்க
நண்பர் : ஹேய்… நீ.. நீங்க என்ன இந்தப் பக்கம்.. உக்காருங்க…
அஸ்வின் : நான் இங்கயே உக்காந்துக்கறேன்.. சோசியல் டிஸ்டன்சிங் வேணும்ல்லயா…. ஐம் வெரி சாரி டு ஹியர் எபவுட் யுவர் பாதர்… எனக்கு தெரியவே தெரியாது.. எப்போ எப்படி ?
நண்பர் : ஒருவாரம் ஆச்சு… அப்பா ஆம்புலன்ஸ் டிரைவரா இருந்தாரு. கொரோனா வேகமா பரவுது போக வேண்டாம்ன்னு சொன்னோம். அவரு தான், இந்த நேரத்துல நிறைய பேரு வேலைக்கு வரதில்லை. மக்களுக்கு ஹெல்ப் பண்ணாம எப்படி இருக்கிறதுன்னு போயிட்டிருந்தாரு.. அப்படி தான்.. அவருக்கு கோவிட் வந்துச்சு… இருந்த பணம் எல்லாத்தையும் செலவு பண்ணி டிரீட்மெண்ட் எடுத்தோம்.. பட் காப்பாத்த முடியல.
அஸ்வின் : ம்ம்ம் ஹி ஈஸ் எ கைண்ட் ஹார்ட்டட் மேன்.. ஐ ரியலி ரெஸ்பெக்ட் ஹிம்… அம்மா எப்படி இருக்காங்க ?
நண்பர் : அம்மாக்கு வீட்ல தான் டிரீட்மெண்ட் குடுக்கிறேன். ஹாஸ்பிடல்ஸ் ல இடம் இல்லை.. அண்ட்.. ஃபைனான்சியலாவும் கொஞ்சம் ஸ்றகிள் ஆயிடுச்சு… அப்பாக்கு எல்லாத்தையும் செலவழிச்சிட்டோம்… நானும் வீட்ல தான் டிரீட்மெண்ட் எடுக்கறேன்.
அஸ்வின் : ஃபீல் பண்ணாதீங்க.. நான் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் கிட்டே பேசியிருக்கேன்.. அவரு இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாரு…. ரெண்டு பேரையும் செக் பண்ணுவாரு. அம்மாக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டா ஹி வில் அரேஞ்ச். ஐ வில் டேக் கேர் ஆஃப் ஆல் த எக்ஸ்பென்சஸ்….
நண்பர் : ரொம்ப நன்றி.. நான் உங்க கிட்டே சொல்லக் கூட இல்லை…. குளோஸ் பிரண்ட்ஸ் ந்னு நினைச்ச யாருமே இந்தப் பக்கம் வரவே பயப்படறாங்க. கம்பெனியும் கை விட்டுச்சு…. வீட்ல போஸ்டர் ஒட்டினதால, இந்த தெருவுலயே மக்கள் அதிகம் வரதில்லை.
அஸ்வின் : கவலைப்படாதீங்க, உங்களுக்கு என்னென்ன தேவையோ அதை நான் பண்றேன். உங்க கூகிள் பே அக்கவுண்ட்ல ஏற்கனவே பணம் அனுப்பியிருக்கேன்
( நண்பர் ஆச்சரியமாய் நிமிர்ந்து பார்க்கிறார் )
அஸ்வின் : அதை வெச்சு தேவையான பொருட்களையெல்லாம் ஆன்லைன்ல ஆர்டர் பன்ணுங்க. இஃப் யூ நீட் மை ஹெல்ப், ஐ கேன் ஆர்டர் பார் யூ..
நண்பர் : அஸ்வின்… உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல… இந்த குவாரண்டைன் வீட்ல கூட தைரியமா வந்திருக்கீங்க.. கேக்காமலேயே என்ன தேவைன்னு அறிஞ்சு ஹெல்ப் பண்றீங்க…. ரொம்ப கம்ஃபர்ட்டிங்கா இருக்கு..
அஸ்வின் : லவ் ஈஸ் கிரேட்டர் தேன் லா – இல்லையா ? சோசியல் டிஸ்டன்சிங் மனசுக்கு இருக்கக் கூடாதுல்ல. முகத்துக்கு மாஸ்க் போடலாம் அகத்துக்கு போடக் கூடாதுல்ல . ஒரு நண்பருக்கு கஷ்டம்ன்னா எப்படி என்னால வீட்ல இருக்க முடியும்.
நண்பர் : ஐம் ரியலி டச்ட்.. இப்படி யாருமே இருக்க மாட்டாங்க.
அஸ்வின் : அப்படி இல்லை. நிறைய பேரு இருக்காங்க. ஃபாதர் டேமியன் ந்னு ஒருத்தரு, ஹவாய் தீவுல தொழுநோயாளிகள் மத்தியில அவங்களுக்கு உதவி செய்யப் போனாரு. 18ம் நூற்றாண்டில தொழுநோயாளிகளை எல்லோரும் ஒதுக்கி வெச்சிருந்தாங்க. ஆனா இவரு துணிச்சலா போனாரு. தன் உயிரையே துச்சமா மதிச்சு போனாரு. கடைசியில அவருக்கும் தொழுநோய் வந்து இறந்து போனாரு.
நண்பர் : ஹௌ.. ஹௌ ஈஸ் திஸ் பாசிபிள்
அஸ்வின் : காட்ஸ் லவ். த லவ் ஆஃப் ஜீசஸ். கடவுளோட அன்பை பிறரோட பகிர்ந்து கொள்ளணும்னு நினைச்சா போதும். இயேசு இந்த சூழல்ல நிச்சயமா இப்படித் தான் செய்வாரு. அவரை ஃபாலோ பண்ற என்னையும், அவரோட அன்பு நெருக்கி ஏவுகிறது. அதான் என்னை இயக்குது.
நண்பன் : சாரிடா… என்ன சொல்றதுன்னே தெரியல. … நான் தான் உன்னோட புரமோஷனையே கெடுத்தேன். உன்னோட கடவுளையே வெறுத்தேன். ஆனா நீ, என்னை தேடி வந்து அன்பு செய்யறே….
அஸ்வின் : அதுக்கெல்லாம் ஏன் ஃபீல் பண்றே…. லா ஆஃப் த லேண்டை நாம பாலோ பண்றோம். லா ஆஃப் த லார்டை பாலோ பண்ண வேண்டாமா ? ஜீசஸோட அன்பின் சட்டம் நம்மை சும்மா இருக்க விடாது. ஐம் சாரி…. ஐ நோ யூ டோண்ட் லைக் டு ஹியர் த நேம் ஜீசஸ்.. பட்… ஐ ஏம் நாட் ஏபிள் டு கீப் த குட் நியூஸ் வித் மி.
நண்பன் : நோ..நோ… ஐம் ரியலி இம்ப்ரஸ்ட்…. ஐ வாண்ட் டு நோ தட் ஜீசஸ்… எல்லாரும் வார்த்தையில அன்பைக் காட்டுவாங்க, நீங்க வாழ்க்கைல காட்டறீங்க…. அன்புக்கு மேலா என்ன இருக்கு. பிளீஸ்.. எனக்கு அவரைப் பற்றி சொல்லுங்க. ஐம் ரியலி டச்ட். ஐ ஃபீல் கம்ஃபர்டட்…. இப்படி அன்பே உருவான ஆண்டவரைப் பற்றி அறியாம இருக்கிறது எனக்கு அவமானம்.. பிளீஸ்..
அஸ்வின் : கண்டிப்பா ..எல்லாம் சொல்றேன்… lபிரைஸ் த லார்ட்…
பின் குரல்
தந்தையின் கரத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் குழந்தை எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அதே போல தான் நற்செய்தி அறிவித்தலுக்குச் செல்லும் போது இயேசுவின் கரத்தைப் பற்றிக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது. அதற்கு, நாம் உயிர்த்த இயேசுவின் அனுபவத்தைப் பெறவேண்டும். அர்ப்பணிப்போடும், தாழ்மையோடும், தாழ்பணிந்து வேண்டினால் – இயேசு நம்மை வாழ்வினால் நிரப்புவார். நன்றி