Posted in Articles

உயர்விலும் தாழ்மை

உயர்விலும் தாழ்மை

*

காட்சி 1

( அதிகாரி வேலை செய்து கொண்டிருக்கிறார் )

அதிகாரி : (போனில் ) ஒரு காபி குடுத்தனுப்பு ….

(சற்று நேரத்தில் பையன் காபியுடன் வருகிறான் )

பையன் : மேம்…. காஃபி ..

அதிகாரி : இங்கே வைப்பா… ஏன்பா.. ஏசுதாஸ் தானே காபி கொண்டு வருவாரு.. அவரு இன்னிக்கு வரலையா… நீ காபி கொண்டு வந்திருக்கே ?

பையன் : அவரு இன்னிக்கு லீவ் மேடம்.. அவரு லீவா இருக்கிற டைம்ல நான் காபி கொண்டு குடுப்பேன்.. இல்லேன்னா மற்ற சின்னச் சின்ன வேலையெல்லாம் செய்வேன் மேடம்.

அதிகாரி : சின்ன பையனா இருக்கே… படிச்சிருக்கலாம்ல.. நல்ல வேலைல சேர்ந்திருக்கலாம்.

பையன் : டிகிரி முடிச்சிருக்கேன் மேடம்…

அதிகாரி : (ஆச்சரியமாய் ) டிகிரி முடிச்சிருக்கியா ? அப்புறம் ஏன்பா இப்படி எடுபுடி வேலை செய்றே

பையன் : கொஞ்சம் கஷ்டப்படற குடும்பம் மேடம்..அம்மாவும் அக்காவும் என் கூட இருக்காங்க.. அம்மாக்கு ஹெல்த் சரியில்லை… அதனால கிடைச்ச வேலைல சேர்ந்துட்டேன் மேம்.

அதிகாரி : ஓ… இங்க வேலை செஞ்சுட்டே… அப்படியே வேற வேலை தேடறதா பிளானா ?

பையன் : அப்படி தான் நினைச்சேன்.. பட்.. அதுக்கெல்லாம் டைம் இல்லாம வருஷங்கள் ஓடுது மேம்.

அதிகாரி : ம்ம்.. சரி… நாளைக்கு நீ உன்னோட ரெஸ்யூமை கொண்டு வந்து என்னை பாரு… காலைல 9.30 க்கு வந்துடு சரியா

பையன் : கண்டிப்பா மேம்.

காட்சி 2

( இன்னொரு மேனேஜர் பையனை அழைக்கிறார் )

மேனேஜர் : ஏன்பா.. ஒரு காபி கொண்டு வா.. எடுத்துட்டு வா….

பையன் : சரி மேம்.. ஹாஃப் சுகரா, புல் சுகரா மேம்

மேனேஜர் : ஹாஃப் போடு இல்ல இல்ல.. ஒரு முக்கால் ஸ்பூன் போடு…

பையன் : சுகர் தனியா எடுத்து வரவா மேம்…

மேனேஜர் : ஏன், பால், பாத்திரம், அடுப்பு எல்லாம் கொண்டு வர வேண்டியது தானே.. நானே காபி போடுவேனே

பையன் : சாரி மேம்… இதோ கொண்டு வரேன்…

( பையன் காபி கொண்டு வருகிறான் )

மேனேஜர் : ( காபி குடித்துவிட்டு ) என்னப்பா… காபி கொண்டு வர சொன்னா பாயாசம் கொண்டு வந்திருக்கே…

பையன் : மேம்.. முக்கால் ஸ்பூன் தான் போட்டேன்…

மேனேஜர் : அவ்ளோ பெரிய ஸ்பூனா கிச்சன்ல வெச்சிருக்கீங்க…. ம்ம்ம் ! புதுசு புதுசா வர பசங்களுக்கு காபி போடவும் தெரியாது..ஒரு எழவும் தெரியாது.. ஆங்…. என் ரூம்ல ரெண்டு பெரிய பேக் இருக்கு.. அதை கொண்டு என் கார்ல வெச்சிடு… இன்னிக்கு அமெரிக்கா டிராவல்….

பையன் : ஓ.. சூப்பர் மேம்.. ஆல் தி பெஸ்ட்…

மேனேஜர் : ஆமா. உன் விஷ் தான் ரொம்ப முக்கியம். பொட்டியை பத்திரமா கொண்டு வை- ந்னு சொல்ல வந்தேன்

பையன் ( சோகமாய் ) : சாரி மேம்.. ஷுவர்

காட்சி 3

( எம்.டி & மேனேஜர் )

எம்.டி : ஹேவ் எ சேஃப் டிரிப் … அங்கே ஒரு 4- 5 வருஷம் இருக்க வேண்டியிருக்கும். இட்ஸ் கஸ்டமர் சைட்.. சோ ஃபுல்லா அவங்களோட சிஸ்டத்துல தான் வர்க் பண்ணுவீங்க… கிட்டத்தட்ட ஒரு புது கம்பெனில வர்க் பண்ற மாதிரி

மேனேஜர் : யா.. ஐ அண்டர்ஸ்டேண்ட் சார்.

எம்.டி : டு வெல் அண்ட் கீப் அவர் flag high

மேனேஜர் : கண்டிப்பா சார்.

காட்சி 4

( பையன் & அதிகாரி )

பையன் : மேம்.. புரஃபைல் கேட்டீங்க.. ( கொடுக்கிறான் )

அதிகாரி : ஆங்… குடு…. சவுல்…. ம்ம்ம்ம் சவுல் தான் உன் பேரா

பையன் : ஆமா மேம்…

அதிகாரி : யூ நோ..இட்ஸ் எ நேம் ஆஃப் எ கிங்…

பையன் : எஸ் மேம்…. பைபிள்ல படிச்சிருக்கேன்…. ஆல்சோ ரோட் டு டமாஸ்கஸ் எக்ஸ்பீரியன்ஸ்ல பவுலா மாறினவரும் சவுல் தான்…. மேம்…

அதிகாரி : யா…. வெரி குட்… ஆங்… உனக்கு நம்ம கம்பெனில ஒரு சின்ன வேலை போட்டு குடுத்திருக்கேன்…மேபி இட்ஸ் யுவர் லைஃப் சேஞ்சிங்… ரோட் டு டமாஸ்கஸ் எக்ஸ்பீரியன்ஸ்…

பையன் : ( மகிழ்ச்சியாய் ) ரொம்ப நன்றி மேம்.. இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்.

அதிகாரி.. இருக்கட்டும்… மிஸ்டர்… குருநாதன் தெரியும்ல…. சர்டிபிகேஷன் டீம்ல.. அவர் டீம்ல தான் வேலை. அவர் கிட்டே ஏற்கனவே எல்லாம் சொல்லியிருக்கேன்.. சோ, இன்னிக்கே யூ கேன் கோ அண்ட் மீட் ஹிம். ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சதும் வேலை ஆரம்பிக்கலாம்.

பையன் : ரொம்ப நன்றி மேம்.

அதிகாரி : ஆறு மாசம் புரபேஷன் பீரியட்.. இதுல நீ எப்படி வேலை பாக்கறேங்கறதை வெச்சு தான் உன்னை கன்ஃபம் பண்றதா இல்லையான்னு முடிவு பண்ணுவேன் ஓக்கே ?

பையன் : கண்டிப்பா மேம்… வித் த ஹெல்ப் ஆஃப் காட், ஐ வில் டூ வெல் மேம்.

காட்சி 5

( ஆறு மாதங்களுக்குப் பிறகு )

( அதிகாரி & குரு )

அதிகாரி : குரு.. அந்த ஆபீஸ்பாய் பையனை டெஸ்டரா கன்வர்ட் பண்ணினோமே.. எப்படி இருக்கான்

குரு : சவுல் தானே மேம்..

அதிகாரி : யெஸ்…சவுல்….

குரு : எக்ஸ்டலண்ட் மேம்… எக்ஸ்றாட்டினரி

அதிகாரி : வெரி குட்… அப்போ அவனை கன்ஃபர்ம் பண்ணிடலாமா ?

குரு : மேம்.. புரமோஷன் குடுங்கன்னு கேக்க நினைச்சேன், நீங்க கன்ஃபர்ம் பண்ணலாமான்னு கேக்கறீங்க.. கண்டிப்பா… நோ டவுட் அட் ஆல்

அதிகாரி : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்காத ஒருத்தருக்கு வாய்ப்பு தேடி வரும்போ அவங்க அதை இறுக்கமா புடிச்சுக்கறாங்க. அதனால அதுல சக்சஸும் ஆயிடறாங்க.. வெரி குட்… ஐ வில் மீட் ஹிம்.

காட்சி 6

( அதிகாரி & பையன் )

அதிகாரி : கன்கிராட்ஸ் சவுல் ! உன்னோட பெர்ஃபாமன்ஸ் நல்லா இருக்குன்னு ஃபீட் பேக்ஸ் வந்திருக்கு..

பையன் : நான் ரொம்ப சாதாரணமானவன் மேம்… ஒரு குடிசை வீட்டுக்காரன்.. நீங்க தான் எனக்கு வேலை குடுத்து வாழ்க்கை குடுத்தீங்க… இதுல நான் பெருமைப்பட ஒண்ணுமே இல்லை…

அதிகாரி : இந்த பணிவு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு… உன்னை கன்ஃபர்ம் பண்றேன்.. அதுவும் சீனியர் அனலிஸ்ட்ங்ற புரமோஷனோட…

பையன் : ரொம்ப நன்றி மேம்… காட் ஈஸ் கிரேட்….

காட்சி 7

இரண்டு வருடங்களுக்குப் பின்

அதிகாரி : சவுல்.. கன்கிராட்ஸ்பா… உன்னோட திறமை நாளுக்கு நாள் வளர்ந்துட்டே இருக்கு…. உனக்கு டீம் லீடர் புரமோஷன் கிடைச்சிருக்கு… கன்க்ராட்ஸ் …

பையன் : ரொம்ப சந்தோசம் மேம்.. காட்ஸ் கிரேஸ் அண்ட் உங்க சப்போர்ட் தான் எல்லாத்துக்கும் காரணம்.

அதிகாரி : சண்டே கம்பெனியோட கெட் டுகதர் ஒண்ணு ஏற்பாடு பண்ணியிருக்கோம்… யூ கேன் ஜாயின்

பையன் : சாரி மேம்.. சண்டே நான் சர்ச் போவேன்…

அதிகாரி : ஐ நோ.. சர்ச் காலைல தானே…. இட்ஸ் இன் த ஈவ்னிங்

பையன் : ஈவ்னிங் நான் எழில் நகர் முதியோர் இல்லம் போய் அந்த இல்லத்தோட சுற்றுப் புறத்தையெல்லாம் சுத்தம் பண்ணுவேன் மேம்.. அவங்க கூட தான் ஈவ்னிங் ஸ்பெண்ட் பண்ணுவேன்…. பத்து வருஷமா பண்ணிட்டிருக்கேன் மேம்.. ஒரு வாரம் போகலேன்னா கூட அவங்க வருத்தப்படுவாங்க..

அதிகாரி : ம்ம்..ஓக்கே.. இட்ஸ் an opportunity to meet all the leaders… அதான் சொன்னேன்..

பையன் : தட்ஸ் ஓக்கே மேம்…

அதிகாரி : எனிவே.. ஓக்கே. கன்க்ராட்ஸ் ஆன் யுவர் ப்ரமோஷன்

பையன் : தேங்க்யூ மேம்…

காட்சி 8

( மேலும் 3 வருடங்கள் கடந்த பின் )

அதிகாரி : சவுல்… கிரேட் கிரேட்.. லாஸ்ட் 3 இயர்ஸா டாப் பெர்ஃபார்மர்… டிஃபால்டா நீங்க fast phased promotion kku eligible ஆயிட்டீங்க… இனிமே நீங்க மேனேஜர்….

பையன் : ரொம்ப நன்றி மேம்… ரொம்ப சந்தோசமா இருக்கு…

அதிகாரி : நான் தான் நன்றி சொல்லணும்.. உன்னோட கான்றிபியூஷன் ஈஸ் கிரேட்… டு வெல்.

பையன் : கண்டிப்பா மேம்.

அதிகாரி : உங்களுக்கு ஒரு மேனேஜர் கேபின் அரேஞ்ச் பண்ண சொல்லியிருக்கேன்.. யூ கேன் மூவ்.

பையன் : வேண்டாம் மேம்.. நான் டீம் கூடவே இருக்கேன். அது தான் நல்லா இருக்கும். அப்போ தான் மக்கள் ஈஸியா வந்து பேசுவாங்க… ஐ டோண்ட் வாண்ட் டு சேஞ்ச்

அதிகாரி : ஓக்கே..இட்ஸ் அப் டு யூ. எல்லாரும் மேனேஜர் ஆகறதே கேபின்ல போலாம்ன்னு தான். ஒரு நாள் டிலே ஆனா கூட சண்டை போடுவாங்க.. பட்.. யூ ஆர் டிஃபரண்ட்.. குட்…

பையன் : தேங்க்யூ மே…

அதிகாரி : ஆங்…. மேனேஜர் ஆயாச்சு… இன்னும் அந்த முதியோர் இல்லம் எல்லாம் போக போறீங்களா ? இல்ல, லைஃப் ஸ்டைலை மாத்த போறீங்களா ?

பையன் : அதெல்லாம் மாறாது மேம்… நான் யாருங்கறது, நான் என்ன வேலைல இருக்கேங்கறதை வெச்சு மாறாது மேம். காஸ்டியூம் மாறினா கேரக்டர் மாறுமா ? என் கிட்டே இருக்கிறது எல்லாமே கடவுள் தந்தது… அதுல நான் பெருமைப்பட என்ன இருக்கு

அதிகாரி : யூ ஆர் எ ரியல் சவுல் ( சிரிக்கிறார் ) … கீப் இட் அப்

காட்சி 9 ஆ

( முதியோர் இல்லத்தில் பையன் வேலை செய்கிறான் )

நடக்கிறான்,

பொருட்களை சுமக்கிறான்,

துடைக்கிறான்…

நபர் : தம்பி… ரொம்ப நன்றி. .. நீஙக் எல்லா சண்டேவும் வந்து ஹெல்ப் பண்றது ரொம்ப உதவியா இருக்கு….

பையன் : அதுல என்ன இருக்கு அங்கிள்… இது எனக்கு சந்தோசமான விஷயமாச்சே… எல்லா தாத்தா பாட்டிகளையும் பாத்து பேசும்போ மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு..

நபர் : இன்னிக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சு…. வாங்க, நான் என்னோட டூ வீலர்ல டிராப் பண்றேன்

பையன் : வேணாம் அங்கிள் நான் கார்ல தான் வந்தேன்

நபர் : காரா ?

பையன் : ஆமா அங்கிள் ஒரு கம்பெனில மேனேஜர் ஆயிட்டேன்… கார் ஸ்கீம் இருந்துச்சு, ஒண்ணு வாங்கிட்டேன்…

நபர் : நீங்க, ஒரு கம்பெனில மேனேஜரா ?

பையன் : பை காட்ஸ் கிரேஸ்.. ஆமா அங்கிள்…

நபர் : தம்பி, அப்படிப்பட்ட நீங்களா இவ்ளோ எளிமையா வந்து யாரும் செய்ய தயங்கற வேலை எல்லாம் முகம் சுளிக்காம செய்றீங்க ?

பையன் : அதுல என்ன இருக்கு அங்கிள்… எப்பவும் செய்றது தானே, ஐம் ஹேப்பி டூயிங்.

நபர் : நீங்க கிரேட் தம்பி

காட்சி 9

( அமெரிக்க மானேஜர் திரும்ப வருகிறார் )

( அவருக்கு சவுல் வேலையில் சேர்ந்ததெல்லாம் தெரியவில்லை )

மேனேஜர் : யப்பா சவுல்.. ஆளே மாறிட்டே.. சரி, ஒரு காபி எடுத்துட்டு வா… என் ரூம்ல இருப்பேன்….

சவுல் : கண்டிப்பா மேம்… எப்போ வந்தீங்க மேம்.. ஹவ் வாஸ் த டிராவல் & ஸ்டே

மேனேஜர் : சொன்ன வேலையை மட்டும் செய்ப்பா…. அதெல்லாம் கேட்டு தெரிஞ்சுட்டு என்ன பண்ண போறே

சவுல் : சாரி மேம்..

மேனேஜர் : பைத வே… நோ சுகர்… ஓக்கே.. ஆஃப், முக்கால்ன்னா நீ கன்ஃபியூஸ் ஆகாதே…..

சவுல் : ஓக்கே மேம்..

மேனேஜர் : ஈவ்னிங்.. என்னோட லக்கேஜஸை எல்லாம் கார்ல வெச்சுடு… ஹெவியா இருக்கு..

சவுல் : கண்டிப்பா மேம்…

காட்சி 10

( மேனேஜர் & எம்டி )

எம்.டி : வெரி நைஸ் டு சீ யூ.. எப்படி இருந்துச்சு டிராவல். ஐம் ஹேப்பி தேட் கஸ்டமர் ஈஸ் ஹேப்பி

மேனேஜர் : எல்லாம் நல்லா இருந்துச்சு சார்.. ஆனா நம்ம கம்பெனி கூட தான் கம்யூனிகேஷன புல்லா கட் ஆயிடுச்சு.. ஹேப்பி டு பி பேக்

( அப்போது சவுல் வருகிறான் )

சவுல் : மே.. ஐ கம் இன் சார்

எம் . டி : வாப்பா சவுல்

சவுல் : கூப்டீங்களாமே சார்…

எம்டி : எஸ்… நாளைக்கு கம்பெனியோட எக்ஸிகியூட்டிவ் மீட்டிங் நடக்க போவுது… அந்த பிரசண்டேஷன் முடிச்சிடுங்க….ஆருஸ் கம்பெனி எம்டி இளன் கூட ஒரு மீட்டிங் செட் பண்ணுங்க, நெக்ஸ்ட் வீக்ல.. அண்ட் லெட் மி நோ த டைமிங்

சவுல் : ஷுவர் சார்… எக்ஸிகூட்டிவ் டெக் டிராஃப்ட் வெர்ஷன் ஆல்ரெடி அனுப்பியிருக்கேன் சார்.. பாத்து சொல்லுங்க..

எம்.டி : ஓ..கிரேட்…. தட்ஸ் வெரி க்விக்.. ஐ வில் சீ

( சவுல் வெளியேறுகிறான் )

மேனேஜர் : சார்.. சவுல்…. ஆபீஸ் பாய்… அவன் கிட்டே பிரசண்டேஷன், கம்பெனி, என்னென்னவோ பேசறீங்க

எம்.டி : ஓ.. யூ மே நாட் பி அவேர்.. அவரு இப்போ இங்கே மேனேஜர்.. வெரி சக்சஸ்புல் அண்ட் 24/7 பிஸி மேன்… செம டேலண்டட்

மேனேஜர் : சார்.. என்ன சொல்றீங்க.. நம்பவே முடியல.. பாத்தா தெரியவே இல்ல.. அவனும் .. ஐ மீன்.. அவரும் ஒண்ணும் சொல்லல…

எம்.டி : எஸ்.. நோ சேஞ்ச் இன் ஹிஸ் பிகேவியர்.. சச் எ ஹம்பிள் மேன்…

மேனேஜர் : சார்… நான் காபி கேட்டேன்..… ஹி ப்ராட் மி எ காஃபி…

எம்.டி : ஹா… ஹா… அவரு எல்லாம் பண்ணுவாரு, முழு மனசா பண்ணுவாரு… டோண்ட் வரி… ஹி வோண்ட் ஃபீல் பேட்

காட்சி 11

( மேனேஜர் & சவுல் )

மேனேஜர் : சவுல், ஐம் சாரி.. நீங்க மேனேஜர் ஆன விஷயம் தெரியாம உங்க கிட்டே…. காபி கொண்டு வான்னு, லக்கேஜை தூக்கு அப்படி இப்படி சொல்லிட்டேன்.

சவுல் : மேம்..அதுக்கு என்ன மேம்.. காபி கேட்டீங்க குடுத்தேன்.. அதுக்கும் மேனேஜர் ஆனதுக்கும் என்ன மேம் சம்பந்தம். எனி டைம் மேம்…

மேனேஜர் : இல்ல… அது ஆபீஸ் பாய் பண்ண வேண்டிய வேலை…

சவுல் : நோ பிராப்ளம் மேம்… அதெல்லாம் நீங்க யோசிக்காதீங்க, உங்களுக்கு என்ன ஹெல்ப்ன்னாலும் சொல்லுங்க மேம்.. ஐ வில் பி தேர்..

மேனேஜர் : ஐம் ரியலி டச்ட் பை யுவர் ஹம்பிள்னெஸ்… எவ்ளோ பெரிய ஆளானாலும் நீங்க அதே எளிமையா இருக்கீங்க, தாழ்மையா இருக்கீங்க.

சவுல் : மேம்.. பட்டம் எவ்ளோ உயரமா பறந்தாலும் நூல் தரையில தான் இருக்கும் மேம். மரம் எவ்ளோ உயரமா வளர்ந்தாலும் வேரு பூமில தான் இருக்கும் மேம்…. என்னோட இயல்பு அது மேம்..

மேனேஜர் : சவுல்…. உன்னை மாதிரி எல்லாருமே இருந்துட்டா, உலகமே அழகாயிடும்பா… நான் எவ்ளோ மாறணுங்கறதை எனக்கு வெளிப்படுத்திய கண்ணாடியா நீ இருக்கே ! தேங்க்யூ

*

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s