Posted in Articles

மலையைப் புரட்டும் விசுவாசம் -tamil Chriatian skit

மலையைப் புரட்டும் விசுவாசம்

காட்சி 1

( அம்மா…. போனில் )

போன் : நான் தான் ரம்யா பேசறேன்… குழந்தை எப்படி இருக்கா ?

அம்மா : அவளுக்கு அப்படியே தான் இருக்கு… என்ன பண்றதுன்னே தெரியல. கடவுள் தான் காப்பாத்தணும். அவரை தான் மலை போல நம்பியிருக்கோம்…

போன் : டிரீட்மெண்ட் போயிட்டு தானே இருக்கு இல்லையா ?

அம்மா : டிரீட்மெண்ட் ஏதும் சுகமாக்காதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. ஒரு சர்ஜரி பண்ணியாகணுமாம். அதுவும் உடனே பண்ணியாகணுமாம்… அது கொஞ்சம் காம்ப்ளிகேட்டர் சர்ஜரி.. நம்மால நினைச்சுப் பாக்க முடியாத அளவுக்கு காஸ்ட்லி சர்ஜரி

போன் : ஓ.. பணத்துக்கு ஏதாச்சும் ஏற்பாடு பண்ண முடியாதா ? நீங்க சென்னைல தானே இருக்கீங்க.. நல்ல ஹாஸ்பிடல்ஸ் இருக்குமே

அம்மா : இதுவரை டிரீட்மெண்ட் பண்ணினதுக்கே எல்லா பணமும் செலவாயிப் போச்சு. பத்து இலட்சம் ரூபா இது வரை செலவு பண்ணியிருக்கேன். விக்க வேண்டியதை எல்லாம் வித்தாச்சு…

போன் : டாக்டர் கிட்டே நேரடியா பேசி, நம்ம நிலமையை எடுத்துச் சொல்லி ஃபீஸை கம்மி பண்ண சொல்லலாமா ?

அம்மா : அந்த டாக்டர் மும்பைல இருக்காரு.. அப்பாயிண்ட்மெண்ட் இல்லாம அவரை பாக்கவும் முடியாதாம்… பாத்தாலும் அவரு ஃபீஸ் கம்மி பண்ணுவாரா ? குழந்தைக்கு டிரீட்மெண்ட் பண்ணுவாரான்னு தெரியல.

போன் : ம்ம்.. கேக்கவே கஷ்டமா இருக்கு.. இப்போ என்ன பண்றதா பிளான்… ?

அம்மா : எல்லாத்தையும் கடவுள் கிட்டே ஒப்படைச்சுட்டேன். அவரு கண்டிப்பா என் பிள்ளைக்கு ஒரு வழி காட்டுவாரு. அவர் நினைச்சா ஒரு வார்த்தையிலயே என் பிள்ளையை சுகமாக்கிடுவாரு.

போன் : ம்ம் கண்டிப்பா…. எவ்ளோ பெரிய பிரச்சனை எனக்கு இருக்குன்னு பாக்காம, எவ்ளோ பெரிய கடவுள் என் கூட இருக்காருன்னு பாக்கறது தான் சரி. நானும் கண்டிப்பா தொடர்ந்து பிரேயர் பண்றேன்.

காட்சி 2

( அம்மா & தம்பி )

அம்மா : தம்பி நீ சர்ச்சுக்கு போயிட்டு வரும்போ தங்கச்சிக்கு மாத்திரை மருந்தெல்லாம் வாங்கிட்டு வா….

தம்பி : சரிம்மா… தங்கச்சி எப்போ சுகமாகி வருவான்னு ஒரே ஆசையா இருக்கு. அவ கூட விளையாடி ரொம்ப நாள் ஆச்சு. அவ எழும்ப முடியாம கிடக்கறதைப் பாக்கவே கஷ்டமா இருக்கும்மா..

அம்மா : கடவுள் காப்பாத்துவாருப்பா.. அவரு மக்களோட அழுகுரலை கேக்காதவர் இல்லை. நாம நம்புவோம்.. அவரை நம்பினா கண்டிப்பா நடக்கும்பா… சூரியனையே பின்னாடி போக வைக்கிறவரு, இந்த நோயையா ஓட வைக்க மாட்டாரு.

தம்பி : சரிம்மா .. அந்த மைக்கேல் டாக்டர் மட்டும் தங்கச்சிக்கு டிரீட்மெண்ட் குடுக்க ஒத்துகிட்டா சூப்பரா இருக்கும் இல்லையாம்மா ?

அம்மா : கடவுளை விட பெரிய டாக்டர் இல்லப்பா, அவரு எல்லாத்தையும் பாத்துப்பாரு.

காட்சி 3

( தம்பி சர்ச்சில் … )

தம்பி : இயேசப்பா.. தங்கச்சிக்காக டெய்லி பிரேயர் பண்றேன்… டெய்லி சர்ச்சுக்கும் வரேன்… எப்படியாவது அந்த மும்பைல இருக்கிற டாக்டர் மைக்கேலை இங்கே கூட்டிட்டு வந்திருங்க பிளீஸ்… உங்களைத் தான் நம்பியிருக்கிறோம் இயேசப்பா…

( சர்ச் வாசலில் ஒரு அம்மா, அவன் பிரேயர் பண்ணுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார் )

பெண் : தம்பி.. என்னப்பா அழுது பிரேயர் பண்ணிட்டிருந்தே.. என்னாச்சு

தம்பி : தங்கச்சிக்கு உடம்பு சரியில்ல. ஏதோ நியூரல் பிராப்ளமாம்.. காம்ப்ளிகேட்டட்டாம்… பிரையின் அஃபக்ட் ஆகி அக்காவால எழும்ப முடியல. ஒரு சர்ஜரி வேணுமாம்… அதுக்கு மும்பைல இருக்கிற ஒரு டாக்டர் தான் ஸ்பெஷலிஸ்டாம்.

பெண் : மும்பைலயா ? இங்கே டாக்டர்ஸ் இல்லையா ?

தம்பி : இங்கே உள்ள ஒரு பெரிய ஹாஸ்பிடல்ல தான் சொன்னாங்க, இதுக்கு மும்பை டாக்டர் தான் பெஸ்ட்.. சக்சஸ் ரேட் அதிகம்ன்னு.. ஆனா அதுக்கு எங்களுக்கு வசதியில்லை. அவரோட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவும் முடியாதாம்.

பெண் : ஓ… ஆமா அந்த டாக்டர் பேரென்ன ?

தம்பி : மைக்கேல்.. மும்பை கெட்வெல் ஹாஸ்பிடல்ல சீஃப் சர்ஜனா இருக்காரு.

பெண் : ம்ம்.. சரிப்பா… நானும் உன் தங்கச்சியைப் பாக்கலாமா ?

தம்பி : நீங்க ஊழியக்காரரா ? செபம் பண்ண போறீங்களா ? எதுன்னாலும் வாங்க… போலாம். தங்கச்சிக்கு சரியானா போதும்

காட்சி 4

( அம்மா, பெண் & தம்பி )

அம்மா : வாங்கம்மா… உக்காருங்க…

பெண் : ம்ம்.. தங்கச்சிக்கு உடம்பு சரியில்லேன்னு சத்தமா பிரேயர் பண்ணிட்டிருந்தான் தம்பி. சரி, பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்.

அம்மா : பாப்பா உள்ளே படுத்திருக்கா… வாங்க

( போய் பார்க்கிறார்கள் )

( ஹாலில் வந்து அமர்கிறார்கள் )

பெண் : பாப்பாவோட ரிப்போர்ட்ஸ் கொண்டு வர முடியுமா ? நான் பாக்கறேன் என்னன்னு

அம்மா : தம்பி அதை எடுத்துட்டு வாப்பா..

( தம்பி கொண்டு வந்து கொடுக்கிறான் )

பெண் : ம்ம்… காம்ப்ளிகேட்டட் தான்.. அதான் இவங்க ரிஸ்க் எடுக்க விரும்பல… எவ்ளோ ஆகும்ன்னு சொன்னாங்க ?

அம்மா : அம்பது இலட்சத்துக்கு மேல ஆகும்ன்னு சொன்னாங்க.. இருபது இலட்சம் அட்வான்ஸா கட்டணும்ன்னும் சொன்னாங்க.

பெண் : ம்ம்.. யா.. இது கொஞ்சம் ரிஸ்கி சர்ஜரி தான்… பட் ஐ கேன் டு…

அம்மா : நீ..நீங்களா ? நீங்க டாக்டரா ?

பெண் : ஆமா…. நான் தான் மைக்கேல்.. மும்பை கெட்வெல் சீஃப் டாக்டர்…

அம்மா : மைக்கேல்.. ஆண் டாக்டர்.. இல்லையா ? நீ..நீங்க தான் அந்த டாக்டரா.. நி நிஜமாவா ?

பெண் : ஆமா, என் பேரு மைக்கேல் நிர்மலா… ஷார்ட்டா மைக்கேல்ன்னு தான் எல்லாரும் சொல்லுவாங்க.

அம்மா : இயேசப்பா… இதென்ன அதிசயம்… டாக்டர்.. நீ நீங்க இங்கே எப்படி ?

பெண் : ஒரு கான்ஃபரன்ஸ்க்காக வந்தேன். கான்பரன்ஸ் முடிஞ்சு இன்னிக்கு மும்பை பிளைட் புடிக்க வேண்டியது. கொரோனான்னு சடன்னா பிளைட்டை கேன்சல் பண்ணிட்டாங்க.. சோ, ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி மும்பை டிராவல் பிளான் பண்ணணும். தட் வில் டேக் ஃபியூ டேஸ்.

( அம்மாவும் தம்பியும் வியப்பாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் )

பெண் : பக்கத்து ஹோட்டல்ல தான் தங்கியிருக்கேன்… நெட்ல நியர் பை சர்ச் செர்ச் பண்ணினேன்.. மைக்கேல் சர்ச் ந்னு வந்துச்சு, சோ விசிட் பண்ணலாம்ன்னு வந்தேன். அப்போ தான் தம்பி செபம் பண்ணிட்டிருக்கிறதை பாத்தேன்.

தம்பி : டாக்டர்.. நம்பவே முடியல.. இப்படியெல்லாம் கூட அதிசயம் நடக்குமான்னு பிரமிப்பா இருக்கு…

பெண் : விசுவாசித்தால் எல்லாம் கூடும்ங்கறதுக்கு இது உதாரணம்பா..

தம்பி : டாக்டர்… த… தங்கச்சியை காப்பாத்திடுவீங்கல்ல..

பெண் : கடவுள் கைல தான்பா எல்லாம் இருக்கு.. ஐ வில் டூ த பெஸ்ட்..

அம்மா : டாக்டர்…. ப..பண.. பணம் அம்பது இலட்சம் ஆகும்ன்னா… இப்போ…

பெண் : டோண்ட் வரி.. ஐ வில் டு த சர்ஜரி ஃபார் பிரீ…. நானே நல்ல டீமை அரேஞ்ச் பண்ணி, இங்கே சென்னையிலயே பண்றேன்…. விசுவாசத்தோட பரிசா இது இருக்கட்டும்….

அம்மா : நீங்க நல்லா இருக்கணும்மா… கடவுள் உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பாரும்மா…

பெண் : லெட்ஸ் பிரைஸ் த லார்ட்…

( பெண் போன் பேசுகிறார் )

பெண் : ஐம்.. டாக்டர் மைக்கேல் ஸ்பீக்கிங்…

போன் : டாக்டர்.. மைக்கேல் ?

பெண் : சீஃப் டாக்டர் கெட்வெல் மும்பை …

போன் : ஓ…டாக்டர்.. நீங்களா… வாட் எ சர்ப்ரைஸ்.. சொல்லுங்க டாக்டர்… என்ன விஷயம் ?

பெண் : நீட் எ ஹெல்ப். ஒரு சர்ஜரி பண்ணணும்.. கேன் யூ டு த அரெஞ்ச்மெண்ட்… ஐ வில் கிவ் யூ த டீட்டெயில்ஸ்.

போன் : என்ன இப்படி கேட்டுட்டீங்க.. எனி டைம் ஃபார் யூ.. நீங்க எங்க ஹாஸ்பிடல்ல சர்ஜரி பண்ண வரது எங்களுக்கே பெருமை

பெண் : தேங்க்யூ.. ஐ வில் மெயில் யூ த டீட்டெயில்ஸ்.. நாளைக்கு சர்ஜரி வெச்சுக்கலாம்

போன் : ஷுயர் டாக்டர்.

காட்சி 5

( அம்மா சர்ச்சில் சாட்சி சொல்கிறார் )

விசுவாசித்தால் மலை பெயரும், மரம் கடலில் நடப்படும் என்றெல்லாம் படித்திருக்கிறேன். விசுவாசத்தோடு கேட்டவர்களில் நோய்கள் குணமானதை படித்திருக்கிறேன். ஆனா அப்படி ஒரு விஷயம் என் லைஃப்ல நடந்ததுன்னு நினைக்கும்போ என்னால அழுகை கட்டுப்படுத்தவே முடியல. ஏறக்குறைய கைவிடப்பட்ட நிலையில இருந்த என் பொண்ணை கடவுள் ஒரு தூதரை அனுப்பிக் காப்பாற்றினாரு. அந்த தூதர் பேரு மைக்கேல்….

நான் தொடக்கத்துல இருந்தே சொல்றேன்.. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.. போன வருஷம்….

( முடிவு )

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s