Posted in skit

SKIT : நன்றிக்கடன் 

நன்றி மறப்பது நன்றன்று !

*

காட்சி 1

( தொழிலதிபர் ராபர்ட் போனில் )

ராபர்ட் : (போன் ) விக்கி, லாஸ்ட் மந்த் டேன் ஓவர் கொஞ்சம் கம்மியாயிருக்கே.. என்ன விஷயம் ? 

போன் : டேன் ஓவர் கம்மி ஆகல சார், நாம புது பிராஞ்ச் ஒன்னு ஓப்பன் பண்றதால 5 சி அங்கே இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம் சார், ஓவரால் டேஷ்போர்ட்ல நீங்க அதை பாக்கலாம்.

ராபர்ட் : ஓ.. ஐ சீ…. குட்… குட்… ஐ ஜஸ்ட் ஃபர்காட்…  தேங்க்யூ.. பிளீஸ் லெட் மி நோ எனி சேலஞ்சஸ் அஸ் அண்ட் வென் யூ சீ இட்..

போன் : கண்டிப்பா சார்…

( போனை வைக்கிறார் )

ஒருவர் : சார், பென்ஸ் கார் சர்வீஸ் முடியல.. ஆடி கார் எடுத்துட்டு வரவா ? ரேஞ்ச் ரோவர் எடுத்துட்டு வரவா சார் ?

ராபர்ட் : எனி திங் ஈஸ் ஃபைன்… ஜஸ்ட் எ டிரான்ஸ்போர்ட்… 

( பைபை புரட்டுகிறார் )

( லேப்டாப்பில் வேலை செய்கிறார் )

காட்சி 2

( சர்ச்சில் செபம் )

செபம் : ஆண்டவரே ஒரு நல்ல வளமான, நிம்மதியான வாழ்க்கையைக் குடுத்திருக்கீங்க. எதிரிகளே இல்லேங்கற அளவுக்கு நல்ல வளர்ச்சியை குடுத்திருக்கீங்க. உங்க அன்புக்கு எப்பவுமே நான் கடமைப்பட்டிருப்பேன். 

காட்சி 3

( அம்மா & ராபர்ட் )

ராபர்ட் : அம்மா…. ரொம்ப சந்தோசமா இருக்கும்மா.. வாழ்க்கை நிம்மதியா இருக்கு… இந்த வளர்ச்சிக்கெல்லாம் காரணமான கடவுளுக்கு தான்மா நன்றி சொல்லணும்

அம்மா : கண்டிப்பா.. அதான்… சர்ச்க்கு நிறைய குடுக்கிறியே.. அதுல எனக்கு ரொம்ப சந்தோசம்பா… 

ராபர்ட் : இன்னும் ஏதாச்சும் பண்ணணும்ம்மா.. மேபி ஒரு கிராம சபை சர்ச் பெருசா கட்டி குடுப்போம்.. நம்ம சார்பா

அம்மா : வெரி குட்பா… குப்பையில இருந்த நம்மை கடவுள் இங்கே உயர்த்தியிருக்காரு.. கண்டிப்பா அவருக்கு காலமெல்லாம் நன்றியுள்ளவங்களா இருக்கணும்

ராபர்ட் : கண்டிப்பாம்மா… 

அம்மா : அதே மாதிரி நம்மை சுற்றி இருக்கிறவங்களுக்கும் நாம நல்லது செய்யணும்ப்பா..

ராபர்ட் : நீங்க சொல்லுங்கம்மா… கண்டிப்பா செய்யலாம்..

அம்மா : ம்ம்.. குறிப்பா நாம கஷ்டத்தில இருக்கும்போ கடவுள் மாதிரி வந்து உதவி செஞ்சுட்டு காணாம போயிடுவாங்க சில பேரு.. அவங்களை நாம கண்டிப்பா ஞாபகம் வெச்சு நன்றிக்கடன் செலுத்தணும்ப்பா…அவங்களை நாம பல நேரம் கவனிக்கவே மாட்டோம்… 

ராபர்ட் : அதெப்படிம்மா ஹெல்ப் பண்ணினவங்களை கவனிக்காம இருப்போம்

அம்மா : ஸீ… இப்ப நீயே யோசிச்சு பாரு.. லாசர் உடல்நிலை சரியில்லாம இருக்காரு… சகோதரிகள் அவருக்கு ஆளனுப்பி விஷயத்தை சொல்றாங்க.. அப்புறம் இயேசு நாலு நாளைக்கு அப்புறம் வந்து அவரை உயிரோட எழுப்பறாரு..

ராபர்ட் : எஸ்… கனவுல தட்டி எழுப்பினா கூட இந்த கதையை எல்லா கிறிஸ்டியன்ஸும் சொல்லுவாங்களே… லாசரே வெளியே வா..ந்னு 

அம்மா : இதுல கவனிக்கப்படாத கதாபாத்திரம் உண்டா ?

ராபர்ட் : இல்லையேம்மா… லாசரஸ்… மார்த்தா..மரியா.. ஜீஸஸ்.. கூட்டம்.. சீடர்கள்.. நமக்கு எல்லாரையும் தெரியுமே !

அம்மா : இயேசு கிட்டே செய்தி கொண்டு போன ஆள் உனக்கு ஞாபகம் வரல பாத்தியா ? அவரு தான் லாசருக்கு உடம்பு சரியில்லேங்கற விஷயம் இயேசு வரைக்கும் போகவே காரணம். 

ராபர்ட் : ஓ.. யா… யோசிச்சதே இல்லை. 

அம்மா : நாமானுக்கு தொழுநோய் போச்சு இல்லையா ? அதுல கவனிக்கப்படாத ஆள் இருக்காங்களா ?

ராபர்ட் : ஐ நோ… அந்த சின்னப் பொண்ணை சொல்றீங்க கரெக்டா ?

அம்மா : நோ.. நோ… எலியா சொன்னதும் முடியாதுன்னு சொல்லிட்டு நாமான் போறாருல்லயா.. அப்போ வேலைக்காரங்க சொல்றாங்க, … கஷ்டமான காரியம்ன்னா செஞ்சிருப்பீங்கல்ல.. இதையும் செய்யுங்கன்னு.. அதை கேட்டு தான் நாமான் ஆற்றில இறங்குவாரு… 

ராபர்ட் : ஓ.. ஆமா..

அம்மா :  நாமான் பெரிய படைத் தலைவன்னு எல்லாரும் எல்லாரும் சைலண்டா இருந்திருந்தா ஒருவேளை நாமானுக்கு சுகமே கிடைச்சிருக்காது.. அந்த வேலைக்காரங்க தான் நாமான் வாழ்க்கைல பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவன்.. 

ராபர்ட் : எஸ்மா..உண்மை தான்

அம்மா : அப்படிப்பட்டவங்க நம்ம லைஃப்ல இருந்தா கண்டுபிடிச்சு ஹெல்ப் பண்ணணும்பா… கடவுளுக்கும், மனிதனுக்கும் நன்றியும் அன்பும் உடையவர்களா நாம இருக்கணும்.

ராபர்ட் : சரியா சொன்னீங்கம்மா… எனக்கு தெரிஞ்சு எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணியிருக்கேன்… பட்.. லெட் மி திங்க்

காட்சி 4

( ராபர்ட் யோசிக்கிறான் )

ராபர்ட் : ஒரு தடவை ஒரு ஆக்சிடண்ட் நடக்காம நம்ம டிரைவர் காப்பாத்தினாரு.. அவருக்கு ஹெல்ப் பண்ணிட்டேன்..

ஒருதடவை … ஒரு பிஸினஸ் டீலை ஒருத்தன் முடிச்சு குடுத்தான்… அவனுக்கும் நல்லது பண்ணியாச்சு

வர்க்கர்ஸ்க்கு எல்லாம் தேவையானதை குடுத்தாச்சு…

ப்ரண்ஸ்க்கும் ஹெல்ப் பண்ணியாச்சு…

ஓ..மை..காட்.. ஒரு விஷயத்தை மறந்துட்டேனே !!!!

காட்சி 5

( பிளாஷ்பேக் )

சின்ன வயதில் ராபர்ட் குப்பை தொட்டியிலிருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்துக் கொண்டிருக்கிறான். 

நபர் : என்னப்பா.. காலையிலயே பாட்டில் பொறுக்கிட்டிருக்கே..

ராபர்ட் : டெய்லி இதை வித்தா தான் சார் அஞ்சோ பத்தோ கிடைக்கும்… ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி நான் இப்படி பண்ணுவேன் சார்..

நபர் : அப்பா என்ன பண்றாருப்பா..

ராபர்ட் : அப்பாவாலை வேலை செய்ய முடியாது சார். உடம்பு சரியில்லை… .. அம்மா ஒரு கடையில சேல்ஸ் உமனா இருக்காங்க…. அங்கேயும் ஒழுங்கா சம்பளம் கிடைக்கிறதில்லை… வீட்ல ஒரு தங்கச்சி உண்டு… 

நபர் : ம்ம்..அம்மாவோட சம்பளத்தை மட்டும் வெச்சு குடும்பத்தை ஓட்டறது கஷ்டம் தான்.

ராபர்ட் : ஆமா சார், நான் படிக்கணும்ன்னா… கொஞ்சமாச்சும் காசு வேணும் சார்.. அதான் இப்படி…

நபர் : சரிப்பா.. கவலைப்படாதே… நான் ஒரு வர்க்‌ஷாப்ல உன்னை சேத்து விடறேன். நம்ம பிரண்டோட வர்க்‌ ஷாப் தான். நீ ஸ்கூல் முடிஞ்சப்புறம் அங்கே போய் வேலை செய். மாசா மாசம் சம்பளமும் கிடைக்கும், டே டைம்ல ஸ்கூலுக்கும் போலாம் சரியா… 

ராபர்ட் : ஓ..அப்படியா… ரொம்ப நன்றி சார்..

நபர் : இருக்கட்டும்பா… நானும் வர்க்‌ஷாப்ல தான் வேலை செய்றேன்… எழில் நகர் வர்க்‌ஷாப்ல… அதனால வர்க்‌ஷாப்ஸ் காண்டாக்ட் உண்டு… 

ராபர்ட் : ரொம்ப நன்றி சார்.. இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன் சார். 

நபர் : நல்ல பொறுப்பான பையம்பா நீ.. நிச்சயம் பெரிய ஆளா வருவே.. உன் பேரு என்னப்பா ? 

ராபர்ட் : ராபர்ட் சார்.

நபர் : அட.. என் பேரும் ராபர்ட் தான்… ராபர்ட் பெனடிக்ட்…. இதா இந்த காசை கைல வெச்சுக்கோ, பீஸ் கட்டவோ, டிரஸ் வாங்கவோ யூஸ் பண்ணிக்கோ…. 

ராபர்ட் :  வே..வேணாமே சார்…. சா…சார்… ரொம்ப நன்றி சார்… 

காட்சி 6

( ராபர்ட் சிந்திக்கிறான் )

ராபர்ட் : அம்மா..அம்மா… ஒரு ஆளை நாம் மறந்தே போயிட்டேன்மா….

அம்மா : எதுக்குப்பா… 

ராபர்ட் : கவனிக்கப்படாத கதாபாத்திரம்மா..

அம்மா : ஓ.. யாருப்பா அது ?

ராபர்ட் : அம்மா.. என்னை முத முதல்ல குப்பை பொறுக்கிற வேலையில இருந்து காப்பாற்றி ஒரு வர்க்‌ஷாப்ல சேத்து விட்டாரே அவரும்மா..

அம்மா : ஓ.. ஆமா.. நீ சொல்லியிருக்கே.. நானும் மறந்துட்டேன்.. நிறைய வருஷம் ஆச்சுல்ல

ராபர்ட் : அவரை எப்படியாவது கண்டுபிடிச்சு அவருக்கு ஹெல்ப் பண்ணணும்மா…

அம்மா : அவரை எப்படிப்பா கண்டுபிடிப்பே..

ராபர்ட் : அம்மா.. அந்த காலத்துல அவரு எழில் நகர் வர்க்‌ஷாப்ல வேலை செஞ்சாரும்மா…. அவரு பேரு கூட..ம்ம்.. ராபர்ட் பெனடிக்ட் மா…

அம்மா : ஓ..

ராபர்ட் : லெட் மி ஃபைண்ட் அவுட்

காட்சி 7

( ராபர்ட் அந்த வர்க்‌ஷாப்பைத் தேடுகிறான் )

ராபர்ட் ( ஒரு கடையில் ) ஐயா.. இங்கே நிறைய வர்க்‌ஷாப் இருக்கு.. இதுல ஒரு 20 வருஷத்துக்கு முன்னாடியே இருக்கிற கடை எதுன்னு தெரியுமா ?

நபர் : அப்படி ஒரே ஒரு வர்க்‌ஷாப் தான் இருக்கு தம்பி..… மூணாவது தெருவில இருக்கு… அதுவும் மூடிடுவாங்கன்னு நினைக்கிறேன்… புதிய கடைகளும், புதிய டெக்னாலஜியும் எல்லா இடத்துலயும் வந்துச்சு இல்லையா ?

ராபர்ட் : ம்ம்.. நன்றி சார்.. வரேன்.

காட்சி 8

( அந்த வர்க் ஷாப் )

ராபர்ட் : ஐயா… இந்த வர்க்‌ஷாப் தான் ரொம்ப வருஷமா இருக்கிற கடையா ?

நபர் : ஆமா.. என்ன வேணும்.. வண்டிக்கு ஏதாச்சும் பிரச்சினையா ?

ராபர்ட் : இல்ல.. நான் ஒருத்தரை தேடி வந்தேன்… 

நபர் : ஆளை தேடி வந்தீங்களா ? .. இங்கே இப்போ நானும் ரெண்டு பசங்களும் தான் இருக்கோம்… பெரிய அளவில வேலையும் இல்லை… 

ராபர்ட் : இங்கே.. ராபர்ட்ன்னு ஒருத்தர் வேலை பாத்தாருல்லயா ?

நபர் : ராபர்ட்டா ?

ராபர்ட் : ஆமா… ரொம்ப முன்னாடி.. முழு பேரு கூட ராபர்ட் பெனடிக்ட் ந்னு நினைக்கிறேன்..

நபர் : ஓ.. பெனடி.. ஆமா தம்பி.. ரொம்ப வருஷமா இங்க தான் வேலை பாத்தாரு…. நல்ல மனுஷன்.. எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணூவாரு… பாவம்..

ராபர்ட் : பாவமா… அவரு இப்ப எங்க இருக்காரு ?… 

நபர் : என்னப்பா இப்போ வந்து கேக்கறே… அவரு தான் பாவம் ஒரு பாழாப்போன நோய் வந்து ரொம்ப நாள் கஷ்டப்பட்டாரு.. அப்புறம்..

ராபர்ட் : அப்புறம் என்னாச்சு சார்.. காப்பாத்திட்டாங்களா ? 

நபர் : எங்கே தம்பி.. காப்பாத்தற  அளவுக்கு யாருக்கு வசதி இருக்கு… அவரும் பொண்ணு தன்யாவும் மட்டும் தான் தனியா இருந்தாங்க…. எனக்கும் அவ்ளோ வசதி இல்லப்பா…. அவரை காப்பாத்தமுடியல.. நாலு வருஷம் ஓடிப் போச்சு.

ராபர்ட் : ஐயோ… சே… ஐம் வெரி லேட்.. ஆமா, அந்த பொண்ணு இப்போ எங்கே இருக்காங்க… 

நபர் : தனியா அவங்களை பாதுகாக்க ஆள் இல்லேன்னு, அன்னை அனாதை இல்லத்துல சேத்து விட்டாங்க தம்பி.. அங்கே தான் இருப்பா… நான் எப்பவாச்சும் போய் பாத்துட்டு வருவேன். பாவம், நல்லா இருந்த குடும்பம் இப்படி ஆயிடுச்சு…

ராபர்ட் : ( சோகமாக ) ஓ.. ஜீஸஸ்… சரிங்க.. நன்றி,… நான் போய் அவரோட பொண்ணை பாக்கறேன்.. 

காட்சி 9 

( அனாதை இல்லம் )

ராபர்ட் :  ஹாய்… இங்கே தன்யான்னு ஒரு பொண்ணு இருக்காங்களா ? 

அ.இ : நீங்க யாரு சார் ?

ராபர்ட் : அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சவங்க, என் பேரு ராபர்ட். 

அ.இ : வெயிட் பண்ணுங்க சார், நான் வர சொல்றேன்… 

( சற்று நேரத்துக்குப் பின் )

( உடல் ஊனமுற்ற ஒரு பெண் வருகிறார் )

பெண் : சார்.. வணக்கம் நீங்க… 

ராபர்ட் : நீ.. நீ… ராபர்ட் பெனடிக்ட் பொண்ணா ?

பெண் : ஆமா சார்.. அப்பா இருந்தவரைக்கும் அப்பா கூட இருந்தேன்… இப்போ அப்பாவோட நினைவோட இருக்கேன்.. 

ராபர்ட் : உ. உன் கை… 

பெண் : சின்ன வயசுலயே போனது சார்… அதனால என்னால எந்த வேலைக்கும் போக முடியல.. யாரும் வேலைக்கு சேத்துக்கவும் இல்லை.. அப்படியே போகுது சார் லைஃப்.

ராபர்ட் : நான் உன் அப்பாவுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்.. நான் சின்ன வயசுல ஒண்ணுமே இல்லாம இருந்தப்போ உங்க அப்பா தான் கை குடுத்தாரு.. 

பெண் : என் அப்பாவா ? அப்பாவைப் பற்றி கேக்கவே சந்தோசமா இருக்கு…

ராபர்ட் : அதுக்கு கைமாறா நான் ஏதாவது பண்ணணும்ன்னு நினைக்கிறேன்.

பெண் : சார், நீங்க ஏதாச்சும் பண்ண நினைச்சா இந்த அனாதை இல்லத்துக்கு பண்ணுங்க. எங்களை மாதிரி ஆட்களை அன்பாவும், கனிவாகவும் வளத்தறது அவங்க தான். எனக்கு உதவின அவங்களுக்கு நன்றியுடையவளா இருக்கணும்னு நினைக்கிறேன்…

ராபர்ட் : உங்க அப்பாவை மாதிரியே உனக்கும் இளகிய மனசும்மா… அடுத்தவங்களுக்கு உதவற மனம் தான் கடவுள் இருக்கிற மனம். நான் கண்டிப்பா உதவறேன்.

பெண் : ரொம்ப நன்றி சார்… 

ராபர்ட் : அப்படியே உன்னை நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகப் போறேன்… அம்மா இருக்காங்க உன்னை நல்லா பாத்துப்பாங்க, என் கம்பெனில உனக்கு ஒரு நல்ல வேலையும் தரேன்…  

பெண் : சார்.. என்ன சொல்றீங்க… அந்த அளவுக்கு நான் தகுதி இல்லாதவ சார்…

ராபர்ட் : அப்படி இல்லம்மா… நான் உங்க அப்பாவால வளர்ந்தவன் .. அவரு இல்லேன்னா  இன்னிக்கு நான் இல்ல… இன்னிக்கு நான் வசதியா இருக்கேன்… உங்க அப்பாவுக்கு நன்றிக்கடன் செலுத்த ஒரு வாய்ப்பா இதை நினைக்கிறேன்…. அதான் உன்னை தத்தெடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்..

பெண் : தத்தா… சார், கை கூட இல்லாத பொண்ணு சார் நான்… என்னால உங்களுக்கு ஒரு சின்ன ஹெல்ப் கூட பண்ண முடியாது…. 

ராபர்ட் : நல்லது செய்யணுங்கற மனசு இருந்தா போதும், வழியை கடவுள் காட்டுவாரு. 

பெண் : நன்றி சார்… எனக்கு.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. இதுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்னே தெரியல.. கையே இல்லை.. அப்புறம் என்ன கைமாறு…

ராபர்ட் : அப்படியெல்லாம் பேசாதீங்க, கடவுள் உங்களை சிறகில வைச்சு பாதுகாப்பாரு… ஐம் ரியலி பிரவுட் ஆஃப் யுவர் ஃபாதர்… அண்ட் ,, அவர் உயிரோட இருக்கும்போ அவரை பாக்க முடியலையேன்னு தான் வருத்தமா இருக்கு… பட்… பெட்டர் லேட் தேன் நெவர்…. 

பெண் : ஆமா சார்… காட்ஸ் பிளான்… தேங்க்யூ சார். 

*

Posted in Articles, skit

வெற்றி தரும் கடவுள்

காட்சி 1

( இரவு நேரம், )

பையன் செபிக்கிறார்

பிறகு படிக்கிறான் 

அம்மா : தம்பி டைம் ஆகுதுப்பா… படுத்து தூங்கு.. 

பையன் : இன்னும் கொஞ்சம் நேரம்மா.. வரேன்…

அம்மா : காலைல கனகு வீட்டுக்கு போணும்ல… சீக்கிரம் தூங்கினா தான் நல்லா இருக்கும்..

பையன் : ஒரு ஃபைவ் மினிட்ஸ்மா வரேன்.. நாளைக்கு ஒரு டெஸ்ட் இருக்கு..

அம்மா : ஓக்கேப்பா… 

காட்சி 2

( மறு நாள், கனகு வீடு )

பையன் கார் கிளீன் பண்ணிக் கொண்டிருக்கிறான். 

கனகு : என்னப்பா…. இன்னிக்கு இவ்ளோ லேட்டாயிடுச்சு… 30 மினிட்ஸ் லேட்… எனக்கு ஆபீஸ் போகணும்ல்ல. இனிமே காலைல ஆறுமணிக்கெல்லாம் வந்துடு.. இல்லேன்னா வரவேண்டாம்.

பையன் : சாரி சார்.. நைட் படிச்சிட்டிருந்தேன்… அதான் தூங்க லேட்டாயிடுச்சு.. 

கனகு : படிச்சிட்டிருந்தியா ? என்ன படிச்சிட்டிருந்தே… கத புக்கா ?

பையன் : இல்ல சார், நான் ஸ்கூல்ல படிக்கிறேன்… 

கனகு : ஸ்கூலுக்கு போறியா  ? நீயெல்லாம் படிச்சு என்னத்த சாதிக்கப் போறே.. பேசாம வேலைக்கு போனா நாலு காசு சம்பாதிக்கலாம்.

பையன் : படிக்காம வேலைக்கு போனா நாலு காசு, படிச்சு வேலைக்கு போனா நிறைய காசு சம்பாதிக்கலாம் சார் 

கனகு : பேச்சுலயே தெரியுது படிக்கிற திமிரு… ஒவ்வொருத்தனும் எங்க இருக்கணுமோ அங்க இருக்கணும்… 

பையன் : ( அமைதி )

கனகு : எவன் எவன் படிக்கணும், எவன் எவன் வேலை பாக்கணுங்கற வெவஸ்தையே இல்லாம போச்சு… இந்த படிப்பு கிடிப்புன்னு சொல்லிட்டு லேட்டா வரதா இருந்தா இனிமே வரவேண்டாம்… சரியா

பையன் : நான்… சீக்கிரமாவே வந்துடறேன் சார். 

காட்சி 3

( பையன் & நண்பன் )

நண்பன் : என்னடா எப்ப பாத்தாலும் விழுந்து விழுந்து படிச்சிட்டிருக்கே.. அப்படி படிச்சு உனக்கென்ன நோபல் பரிசா தரப் போறாங்க ?

பையன் : நல்லா படிச்சா தாண்டா நல்ல மார்க் வாங்க முடியும்…

நண்பன் : நல்ல மார்க் வாங்கறதுக்கு படிக்கணும்ன்னு எவன் சொன்னான்.. 

பையன் : பின்னே ?

நண்பன் : ஊர்ல எல்லாரும் படிச்சா மார்க் வாங்கறாங்க… அதுக்கு நிறைய வழி இருக்கு மேன்..

பையன் : என்ன வழி ?

நண்பன் : பிட்டடிக்கலாம்.. பக்கத்துல இருக்கிறவனை உஷார் பண்ணி அவன் பேப்பரை வாங்கி எழுதலாம்… வாத்தியாரை புடிச்சா பேப்பரையே மாத்தலாம்

பையன் : ஓ.. குறுக்கு வழியில போய் முறுக்கு திங்க பாக்கறே.. எனக்கு நேர் வழி போதும்.

நண்பன் : நேர்வழின்னா விழுந்து விழுந்து படிக்கணும், குறுக்கு வழின்னா ஜஸ்ட் லைக் தேட் ஜெயிச்சு போயிட்டே இருக்கலாம்.

பையன் : அது தப்பு… கடவுளுக்குப் புடிக்காத விஷயம். நேர்மை தான் நிலைக்கும். படிப்பு வெறும் மார்க்குக்கு மட்டுமில்லை, அறிவுக்கும் சேத்து தான்.. சோ, நான் படிச்சு மார்க் வாங்கிக்கறேன்…

நண்பன் : ஸீ… நான் மாலுக்கு போறேன்.. படம் பாக்க போறேன்.. மைண்ட் ரிலாக்ஸா இருக்கணும். கழுதை மாதிரி பேப்பரை தின்னுட்டே இருக்காம, நீயும் குதிரை மாதிரி கிளம்பி வா…

பையன் : நீயும் உன் படமும்.. எனக்கு அதுக்கெல்லாம் டைம் இல்லை… குதிரைன்னு சொன்னப்போ தான் ஞாபகம் வருது, குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும், ஜெயமோ கர்த்தரால் வரும் ந்னு ஒரு வசனம் உண்டு.

நண்பன் : பாட புக்ல இருக்கிறதையே நான் படிக்கல, வேத புக்கில இருக்கிறது எப்படிடா படிப்பேன்… 

பையன் : கடவுள் வெற்றி தருவாரு.. நீ படி

நண்பன் : கடவுள் வெற்றி தருவாருன்னா, எதுக்கு நீ படிக்கிறே….

பையன் : நான் குதிரையை ஆயத்தமாக்கறேன்.. ஆயத்தமாக்கற வேலை என்னுது தானே…

நண்பன் : நீ நல்லா ஆயத்தமாக்கு.. எனக்கு படம் ஆரம்பமாகப் போவுது.. சீ யூ லேட்டர்…

காட்சி 4

( பையன் & கனகு )

கனகு : என்னப்பா.. தோட்டத்துல தண்ணி ஊத்தியிருக்கே நாலஞ்சு செடி சாஞ்சிருக்கு..

பையன் : சார்.. நான் மெதுவா தான் சார் ஊத்தினேன்.. ஒருவேளை பூனை ஏதாச்சும்

கனகு : ஆமா, பூனை போய் பூ பறிக்குது.. எல்லாம் படிக்கிற திமிரு…. 

பையன் : சாரி சார்.. நான் கவனமா ஊத்தறேன் சார்..

கனகு : சரி..சரி.. போ…  ஏதோ கடமைக்கு இங்கே வந்திட்டிருக்காதே… நாளைக்கு படிட்டு கலெக்டர் ஆக போற நினைப்புல திரியாதே…

பையன் : ( அமைதியாய். நிற்கிறான் ) 

காட்சி 5

(அம்மா & பையன் )

பையன் : அம்மா… நாம படிக்கிறது தப்பாம்மா ?

அம்மா : படிக்காம இருக்கிறது தான்பா தப்பு.. ஏன் கேக்கறே ?

பையன் : இல்ல.. ஓனர் சார் எப்பவுமே என்னை திட்டிட்டே இருக்காரு.. ஏன் படிக்கிறே.. படிச்சு என்ன கிழிக்க போறே… கலெக்டர் ஆவ போறியன்னு திட்டிட்டே இருக்காரு

அம்மா : எல்லாம் நாம முன்னேறிடக் கூடாதுங்கற கெட்ட எண்ணம்பா.. நாம அதையெல்லாம் கண்டுக்கக் கூடாது. 

பையன் : நாமளும் நல்லா படிச்சு சம்பாதிச்சா என்ன தப்பும்மா..

அம்மா : நாம எல்லாம் ஏழையா இருந்தா தான் அவங்களுக்கு அடிமையா இருப்போம். எதுத்து கேள்வி கேக்க மாட்டோம். எப்பவுமே அவங்களை சார்ந்து இருப்போம்.. அதான்..

பையன் : நம்ம நிலமைல அவங்க இருந்தா அவங்களுக்கு படிக்க தோணாதா ?

அம்மா : கண்டிப்பா தோணும்.. ஆனா அப்படியெல்லா யோசிக்க மாட்டாங்க… நம்மளை அவமானப்படுத்தி இலட்சியத்தை விட்டு விலக வைக்க நிறைய பேரு டிரை பண்ணுவாங்க.. அதையெல்லாம் காதுல வாங்கிக்கக் கூடாது.

பையன் : சரிம்மா…

அம்மா : கவனமா இருக்கணும்… நமக்கு அட்வைஸ் பண்ற மாதிரி பண்ணுவாங்க, அப்புறம் தப்பான வழியில கூட்டிட்டு போக பாப்பாங்க, தப்பா குற்றம் சாட்டுவாங்க, அவமானப் படுத்த பாப்பாங்க, மிரட்ட பாப்பாங்க… எதையுமே கண்டுக்கக் கூடாது.. கடவுள் நமக்கு வெற்றி தருவாருன்னு உறுதியா இருக்கணும்.

பையன் : கண்டிப்பாம்மா.. நான் அமைதியா தான்மா இருப்பேன். பட் அப்பப்போ மனசுக்கு கஷ்டமா இருக்கும் அதான்..

அம்மா : அவமானங்களை தாங்கி அமைதியாவும், நேர்மையாவும் இருந்தவங்க தான்பா வரலாற்றில பெரிய ஆட்களா மாறியிருக்காங்க. நீ நல்லா பிரேயர் பண்ணு. நேர்வழியில நட.. அது போதும். மத்ததெல்லாம் கடவுள் பாத்துப்பாரு.

பையன் : சரிம்மா

காட்சி 6

( பையன் & நண்பன் )

பையன் : என்ன ஸ்டீபன்… நல்லா படிச்சியா ?

ஸ்டீபன் : படிப்பா.. டோண்ட் இன்சல்ட் மி… நான் இன்ஸ்டாகிராம்ல படிச்சு, ஃபேஸ்புக்ல பொழைச்சு, வாட்சப்ல வாழ்றவன்… எக்ஸாம் எல்லாம் எனக்கு காப்பி அடிக்கிற களம் தான்.

பையன் : டேய்… ஒழுங்கா படிக்கலாம்ல… டைமை வேஸ்ட் பண்ற நேரத்துக்கு

ஸ்டீபன் : ஹே..ஹே.. யாரு டைமை வேஸ்ட் பண்றது ? நீ தான் வேலை பாக்கறே , படிக்கறே, சர்ச்சு அது இதுன்னு சுத்தறே.. டைமை வேஸ்ட் பண்றே… என்னை பாரு… ஜாலியோ ஜிம்கானா…

பையன் : ம்ம்.. நாளைக்கு பப்ளிக் எக்ஸாம்.. பப்ளிக் எக்சாமாச்சும் ஒழுங்கா படி.. ஐ வில் ப்ரே பார் யூ

ஸ்டீபன் : காப்பி அடிக்கும்போ மாட்டக் கூடாதுன்னு ப்ரேயர் பண்ணு.. அது போதும்

பையன் : டேய்.. கடவுள் பாகம் பிரிக்கிறதுக்கோ, உனக்கு காப்பி அடிக்கிறதுக்கோ கூட நிக்கிறவரில்ல… நேர்மையின் பக்கம் நிக்கிறவங்களுக்கு வலிமை குடுக்கிறவரு..

ஸ்டீபன் : ஸ்டாப் பிரீச்சிங்.. ஐம் கோயிங்… 

காட்சி 7

( கனகு போனில் )

கனகு : சொன்னதெல்லாம் கவனமா கேட்டியா இல்லையா ?

போன் : கேட்டேன் சார்… உங்க வீட்ல வேலை பாக்கிற அந்த பையன் தானே ?

கனகு : எஸ்… மைல்டா ஆக்சிடண்ட் பண்ணிடு.. கை உடையணும்.. ரெண்டு வாரமாச்சும் அவன் ஆஸ்பிடல்ல கிடக்கணும்… இந்த பப்ளிக் எக்ஸாம் அட்டண்ட் பண்ணலேன்னா.. ஹி வில் பி அவுட்… ஒழுங்கா பொத்திகிட்டு வேலைக்கு வருவான்.

போன் : சரிங்கய்யா.. இவங்க ஆட்டத்தை வளர விடக் கூடாது.

கனகு : எஸ்… எஸ்… யாரு பேரும் வெளியே வராம பாத்துக்கோ… 

போன் : அதெல்லாம் வராது சார்…

கனகு : ஹா..ஹா. நீ அவனை ஹாஸ்பிடலுக்கு அனுப்பு.. நான் ஹாஸ்பிடல்ல போய் ஒரு கிலோ ஆப்பிள் குடுத்து நலம் விசாரிச்சுட்டு வரேன்… படிக்கிறாங்களாம் படிப்பு… இதுல கிறிஸ்டியன் வேற.. சே…. 

போன் : நீங்க நிம்மதியா தூங்குங்க, அவனை நான் தட்டி தூக்கறேன்.

காட்சி 8

( ஸ்கூலில் )

பையன் இடது கையில் கட்டுடனும், தலையில் கட்டுடனும் வருகிறான் 

ஸ்டீபன் : என்னாச்சுடா..

பையன் : ஒரு டெம்போ வந்து தட்டிட்டு போச்சுடா… நான் தெறிச்சு போய் ஒரு குழியில விழுந்துட்டேன்… 

ஸ்டீபன் : ஐயையோ… எந்த டெம்போ

பையன் : அதெல்லாம் தெரியல.. நான் விழுந்த இடத்துல ரெண்டு பேரு உக்காந்திருந்தாங்க.. அவங்க தான் ஓடி வந்து என்னை தூக்கிட்டு போய் ஃபஸ்ட் எய்ட் குடுத்தாங்க..

ஸ்டீபன் : நல்ல அடியா

பையன் : யா.. லெஃப்ட் ஹேண்ட் கை எலும்பு உடைஞ்சிருக்கு.. தலையிலயும் அடி… பட்… காட் ஈஸ் கிரேட்…

ஸ்டீபன் : டெம்போ அடிச்சதுக்கு கடவுளுக்கு பாராட்டாடா ?

பையன் : டேய்.. வலது கை எவ்ளோ நீட்டா இருக்கு.. ஐ கேன் ரைட் எக்ஸாம்டா… என்ன கொஞ்சம் வலி இருக்கு லெஃப்ட் சைட்.. பட் ஓக்கே..

ஸ்டீபன் : டேய்… உன்னை நினைச்சா எனக்கு கில்ட்டியா இருக்குடா

பையன் : ஏண்டா ?

ஸ்டீபன் : இவ்ளோ கஷ்டத்துலயும் நீ எக்ஸாமை சீரியஸா எடுத்து எழுத வந்திருக்கே.. பட்.. நான் எப்படி இருக்கேன்… 

பையன் : கடவுளை நம்பியிருந்தா.. நடக்கிறதெல்லாம் நல்லதுக்கா தான் முடியும்டா… 

ஸ்டீபன் : பட்.. எனக்கு ஒரு ஐடியாடா..

பையன் : சொல்லுடா

ஸ்டீபன் : உன்னோட கைல இருக்கிற கட்டுக்கு இடையில கொஞ்சம் பிட்டு ஒளிச்சு வைக்கட்டுமா.. நீ அப்புறம் எனக்கு எடுத்து குடு..

பையன் : உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா…

காட்சி 9

( ஸ்டீபன்  காப்பி அடிக்கும்போது பிடிபடுகிறான் )

ஆசிரியர் : திஸ் ஈஸ் யுவர் லாஸ்ட் வார்ணிங்.. ஏற்கனவே உன்கிட்டே இருந்த பிட்டை எல்லாம் எடுத்தாச்சு… அப்பவே உனக்கு வார்ணிங் குடுத்தேன்.. இனிமே ஏதாச்சும் பண்றதை பாத்தா.. இந்த வருஷம் எந்த எக்ஸாமும் எழுத விடமாட்டேன்..

ஸ்டீபன் : சாரி சார்.. நான்.. இனிமே காப்பி அடிக்க மாட்டேன் சார்

ஆசிரியர் : படிச்சதை எழுதறது தான் எக்ஸாம். நல்ல குணாதிசயங்களை கத்துக்கறது தான் கல்வி. ரெண்டுமே இல்லேன்னா எப்படி ? பிகேவ் யுவர் செல்ஃப்.. படிச்ச படிப்புக்கு ஒரு அர்த்தம் வேண்டாமா ? 

ஸ்டீபன் : சாரி சார்… 

காட்சி 10 

( ஸ்டீபன் & பையன் )

ஸ்டீபன் : டேய்.. ஐ ஃபீல் அஷேம்ட்… தப்பு பண்ணிட்டே இருக்கும்போ ஒரு கெத்து மாதிரி இருந்துச்சு.. பட்.. இன்னொருத்தர் கிட்டே பிடிபட்டு திட்டு வாங்கும்போ .. அவமானமா இருக்கு

பையன் : பாவம் எப்பவும் அப்படித் தாண்டா… சுகமா தெரியும், ஆனா அது நம்மளை அழிச்சுடும்..

ஸ்டீபன் : ஐ.. ஐ ஃபீல் வெரி கில்ட்டி… 

பையன் : நீ பண்றது தப்புன்னு உணர்ந்து கடவுள் கிட்டே மன்னிப்பு கேளு. அந்த தப்பை மறுபடியும் பண்ணாதே. ஒரு எக்ஸாம் போனா இன்னொரு எக்ஸாம் வரும். ஆனா, பாவம் செஞ்சு சொர்க்கத்தை இழந்தா… 

ஸ்டீபன் : தேங்க்ஸ்டா.. பிரே பார் மி.. இனிமே நான் என்ன தெரியுமோ அதை மட்டும் தான் எழுத போறேன்..

பையன் : டோண்ட் வரி.. நமக்கு நிறைய டைம் இருக்கு.. ஸ்டடி ஹாலிடேஸ்ல, ஐ கேன் ஹெல்ப் யூ… 

ஸ்டீபன் : தேங்க்ஸ்டா..

காட்சி 10 

( தேர்வில் பையன் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுகிறான் )

( ஸ்டீபனும் வெற்றி பெறுகிறான் )

காட்சி 11

( பள்ளி விழாவிற்கு கனகு விற்கு அழைப்பு வருகிறது )

போன் : சார், எங்க ஸ்கூல் பங்ஷன் ஒன்னு நடத்தப் போறோம் சார். ஊர்ல பெரிய மனுஷன் நீங்க, நீங்க வந்து மாணவர்களை ஊக்கமூட்டற மாதிரி நாலு வார்த்தை பேசினீங்கன்னா எங்களுக்குப் பெருமையா இருக்கும்.

கனகு : கண்டிப்பா வரேன்… 

காட்சி 12

( ஸ்கூல் விழா )

கனகு : மாணவர்கள் முன்னால் நிற்பதற்கு எனக்கு எப்போதுமே மிகவும் மகிழ்ச்சி உண்டு. மாணவர்கள் தான் எதிர்கால தலைவர்கள். கல்வி தான் நம்மை உயர்த்தும். எத்தனை சவால்கள் வந்தாலும் கல்வி கற்க வேண்டும். இப்படி ஒரு ஸ்கூல்ல படிச்சதால தான் நான் இன்னிக்கு இப்படிப்பட்ட ஸ்கூல்ல பேச வந்திருக்கேன். இதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. எதை விட்டாலும் அன்பை விடக் கூடாது, எதை விட்டாலும் மனித நேயத்தை விடக் கூடாது, அதே போல எதை விட்டாலும் கல்வியை விடவே கூடாது ! கல்வியைத் தடுப்பவன் ஒரு எதிர்காலத்தையே தடுக்கிறான். ஒரு எதிர்காலத்தை அழிக்க நினைப்பவன் கல்வியை அழிக்கிறான்.. சோ, எல்லாரும் நல்லா படிங்க.. நன்றி

அறிவிப்பாளர் : இப்போது பள்ளியின் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விழாத் தலைவர் பரிசு வழங்குவார். 

அறிவிப்பாளர் : பள்ளி முதல் மாணவன், விக்டர்.

( பையன் வருகிறான்.. தலைவர் அதிர்ச்சியடைகிறார் )

( பையனுக்கு கேடயம் கொடுக்கிறார், பையன் நன்றி சொல்கிறான் )

பையன் : எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனுக்கும், என் பெற்றோருக்கும், என் மேல் அதிக பாசம் கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், என் அன்பு நண்பர்களுக்கும நன்றி. தலைவர் கையால் விருது வாங்குவதில் எனக்கு இரட்டை மகிழ்ச்சி. அவர் தான் எங்களுக்குத் தேவையான பல உதவிகளைச் செய்பவர். நான் அடிபட்டு கிடந்தபோது கூட அவர் தான் உதவியும் கொடுத்து, ஊக்கமும் கொடுத்தார்…. அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(  கனகு அதிர்ச்சியாய் நிற்கிறார் )

காட்சி 13 

( கனகு பையன் வீட்டுக்கு வருகிறார் ) 

பையன் : சார்.. என்ன சார், இந்த பக்கம் வாங்க சார்.. வாங்க சார்… 

கனகு : தம்பி..க்ரேட் பா… இன்னும் நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்பா… 

பையன் : எல்லாம் உங்க ஆசீர்வாதம் சார்

கனகு : இல்ல தம்பி, . நீ படிக்கிறதையே விரும்பாம என்னென்னவோ சொல்லிட்டேன் செஞ்சுட்டேன்…என்னை மன்னிச்சிடு

பையன் : என்ன சார், பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க

கனகு : இல்லப்பா… பெரிய பெரிய கதவை சின்ன சாவி திறக்கிற மாதிரி, பெரிய பெரிய முரட்டுத்தனங்களை ஒரு சின்ன அன்பின் செயல் உடைச்சிடும்பா…. 

பையன் : என்ன சார் சொல்றீங்க

கனகு : நீ எதையுமே மனசுல வெக்காம மேடையிலயே என்னை பாராட்டிப் பேசினது, ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு… இனிமே உன் படிப்பு செலவு என்னுதுப்பா..

பையன் : சார்.. ரொம்ப நன்றி சார்…. 

கனகு : ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுப்பா…

பையன் : சொல்லுங்க சார்… 

கனகு : என் பையனுக்கு படிப்பே ஏற மாட்டேங்குதுப்பா.. எப்பவும் மொபைல்.. லேப்டாட்.. மியூசிக்குன்னு கெடக்கான்.. அவனுக்கு டியூஷன் டீச்சரா இருந்து டெய்லி கொஞ்சம் பாடம் சொல்லி குடுப்பா.. இனிமே, நீயுன் என் பையன் மாதிரி தான்…

பையன் : சார்…. கண்டிப்பா சார்…. ரொம்ப சந்தோசம் சார்…. 

காட்சி 11 

பையன் & ஸ்டீபன் : ( சர்ச் ) இயேசுவே, எப்பவுமே வெற்றியைத் தருவது நீங்க தான். எப்பவுமே, எந்த செயலிலயுமே உம்மை மட்டும் நம்பி வாழ எங்களுக்கு உறுதி தாருங்க… நேர்மையான வழியில, உறுதியா நடக்க உதவி செய்யுங்க. ஆமென்.

மறைக்கப்பட்ட தானியேனில் வரலாறு கற்றுத் தரும் பாடங்கள் வலிமையானவை. தானியேலுக்கு இறைவன் வழங்கிய ஞானத்தை சில கதைகள் பிரமிப்புடன் பதிவு செய்கின்றன

பாருங்கள், பகிருங்கள், பயனடையுங்கள்.

clickscandy@gamail.com

Posted in Articles, Desopakari

மண்வளம் காப்போம்

*

இன்றைய சமூகம் உள்ளங்களிலும், ஊரிலும் அழுக்குகளால் நிரம்பியதாய் மாறிக் கொண்டிருக்கிறது. நெகிழிகள் முதல், உதாசீனப்படுத்துதல் வரை நிலம் பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அன்பும், மனித நேயமும் நிறைந்த மனிதர்கள் அருகி வரும் உயிரினம் போல எங்கேனும் தான் தட்டுப்படுகிறார்கள். மனிதர் மீது அன்பு பாராட்டாதவர்கள் நிலத்தின் மீது எப்படி நேசம் காட்டுவார்கள் ? சுயநலத்தின் சாலைகளில் தான் பொதுநலத்தின் சிந்தனைகளும் புதைக்கப்படுகின்றன. 

பொதுவில் கிடந்த வளங்கள் வரங்களாய் இருந்தன. அவை சுரண்டப்பட்டு அதிகாரத்தின் பைகளில் பதுங்கியபோது சாபமாக மாறிவிட்டது. மண் வளமே பிற வளங்களைத் தாங்கிப் பிடிக்கிறது. உயிர்களின் இருப்பிடமாகவும், பயிர்களின் பிறப்பிடமாகும், வாழ்வின் மகிழ்விடமாகவும் இருப்பது நிலமே. 

நிலம் என்னுடையது என்கிறார் கடவுள் லேவியர் ஆகமத்தில் ! நிலத்தை மனிதன் வெட்டிக் கூறுபோட்டு, பூர்வ குடிகளை விரட்டியடிக்கும்போது கடவுளின் சினம் நிலத்தின் மீது விழுகிறது. 

இந்த மண் வளத்தை ஏன் நாம் காப்பாற்ற வேண்டும் ?

  1. நாம் மண்ணின் பாகமாய் இருக்கிறோம்.

கடவுள் நம்மைப் படைத்தபோது மண்ணிலிருந்து தான் உருவாக்கினார். நமக்குள் மண் இருக்கிறது. மண் தான் மனிதனின் முதல் மூலக்கூறு. கடவுளின் உயிர் மூச்சு நமக்குள் உலவுகிறது, மண்ணின் உடல் வடிவம் தான் நமக்குள் நிலவுகிறது. எனவே அடிப்படையிலேயே நாம் மண்ணோடு உறவாய் இருக்கிறோம். அந்த உறவைப் பேணவேண்டியது நமது கடமை !

உருவாகும்போது எப்படி மண் மனிதனாய் மாறியதோ, அதே போல விடை பெறுகையில் மனிதன் மண்ணாகிறான். மண்ணோடு உறவாடுகிறான். மண்ணோடு கலந்து விடுகிறான். மனிதன் மண்ணின் பாகமாய் மாறிவிடுகிறான். சுழற்சி நிறைவு பெறுகிறது. மண்ணினால் துவங்கி, மண்ணுடன் அடங்கிவிடும் வாழ்க்கை முறையையே இறைவன் நமக்குத் தந்திருக்கிறார். எனவே மண் வளம் காக்க வேண்டியது நம் கடமையாகும்.

  1. மண் வளம் காத்தல் நமக்கு இறைவன் அளித்த பணி

கடவுள் மனிதனுக்கு இட்ட முதல் பணியே நிலத்தைப் பண்படுத்துவதும், பாதுகாப்பதும் தான். “ ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார் “ ! அது தான் கடவுள் மனிதனுக்குக் கொடுத்த முதல் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர். 

மண்ணைப் பண்படுத்த மறுக்கும் போது நாம் கடவுளின் விருப்பத்தை நிராகரிக்கிறோம். மண்ணை புண்படுத்தும் போது நாம் கடவுளையே நிராகரிக்கிறோம்.

நிலத்தைப் பாதுகாப்பது என்பது நிலத்தின் மாண்பினைப் பாதுகாப்பதும், வளத்தினைப் பாதுகாப்பதுமாகும். எப்படி நிலம் மாசுகளால் மலட்டுத் தன்மை ஆகாமல் தடுக்க வேண்டுமோ, அதே போல நிலம் சாத்தானின் ஊடுருவல் இல்லாமலும் தடுக்க வேண்டும். ஆதாம் செய்த பிழைகளையே நாமும் செய்யாமல் கவனமாய் இருக்க வேண்டும். 

  1. மண், கடவுள் பிரித்து வைத்த இடம்.

கடவுள் மனிதனுக்குக் கொடுத்த பணியை மனிதன் செய்யத் தவறியிருக்கலாம். ஆனால் இயற்கைக்குக் கொடுத்த பணியை அவை செவ்வனே செயல்படுத்துகின்றன. கரையைத் தாண்டி வராதே எனும் கட்டளையை ஏற்று கடல் அங்கேயே நிற்கிறது. நிலத்தைத் தனியே பிரித்த இறைவன் அதற்குத் தேவையான வளம் தரும் நதிகளையும் தருகிறார். 

நிலத்தைப் பண்படுத்துவதும், பாதுகாப்பதுமே நம்மால் செய்ய இயன்ற பணிகள். ஒரு விதையை முளைக்க வைப்பது இறைவனே. விதைப்பதால் ஒரு விதை முளைப்பதில்லை, அதற்குத் தேவையான வளங்களைக் கொடுப்பதால் முளை வருவதில்லை.  எல்லாவற்றுக்கும் மேல் இறைவனின் அருள் தேவைப்படுகிறது. நமது பணி ஐந்து அப்பம் கொடுத்த சிறுவனைப் போன்றது. அதை ஐயாயிரம் பேருக்கு அளிப்பது இறைவனின் பணி.

கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது அதைத் தான். நிலத்துக்காக நாம் வானத்தை இழுத்து வந்து வாய்க்காலில் போடவேண்டுமென அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் தந்ததை காயப்படாமல் காப்பாற்ற வேண்டுமென விரும்புகிறார். மண் கடவுளின் கட்டளையைக் கேட்கிறது, நாம் கடவுளின் கட்டளைக்குச் செவி சாய்க்கிறோமா ?

  1. மண் கடவுளை மகிமைப்படுத்துகிறது !

படைப்புகள் இறைவனைப் புகழ்கின்றன. நிலத்தில் முளைக்கும் செடிகளும் கொடிகளும் பூக்களும் கனிகளும் இறைவனின் மாட்சியைப் பறைசாற்றுகின்றன. இறைவனைப் புகழும் நாவினை நாம் நறுக்கிவிடக் கூடாது. இறைவனை நேசிக்கும் இயற்கையை நாம் சிதைத்து விடக் கூடாது. ஒருவரை நாம் நேசிக்கிறோம் என்பதன் அடையாளம் இரண்டு. ஒன்று அவர் சொல்வதைச் செய்கிறோம், இரண்டு அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாய் செயல்படுகிறோம்.  

இறைவன் சொல்வதை நாம் செய்கிறோமா ? இறைவனுக்குப் புகழ் சேரும் வகையில் செயல்படுகிறோமா ? இயேசு வாழ்ந்த காலத்தில் நிலத்தைத் தன் போதனைகளில் பயன்படுத்தினார். கடவுளின் ஆசீர்வாதத்தின் அடையாளமாக பழைய ஏற்பாடு விளைச்சலைப் பேசியது !  

இயேசு நல்ல நிலமாய் வாழ நமக்கு அழைப்பு விடுத்தார். நாம் நல்ல நிலமாய் இருக்கிறோமா ? நம்மிடம் இருக்கும் நல்ல நிலத்தைக் கெட்ட நிலமாய் மாற்றுகிறோமா ? இயற்கையை அழகுபடுத்தி, அதன் மூலம் இறைவனை மகிமைப்படுத்துவோம். எல்லாவற்றுக்கும் மேலாய், இயேசு மீண்டும் மண்ணில் வரப் போகிறார். அவரை வரவேற்க மண் புனிதமாய் இருப்பதல்லவா சிறப்பானது !

5 மண்வளம் காத்தல், நம் கடமை !

கிறிஸ்தவர்களின் கடமை என்பது கனிகொடுக்கும் வாழ்க்கை தான். வெறுமனே வாயால் பாடுதலோ, புகழ்தலோ, பேசுதலோ அல்ல ! நமது அன்பின் செயல்கள் எப்படி வெளிப்படுகின்றன என்பதை வைத்துத் தான் நமது வாழ்க்கை அளவிடப்படுகிறது. 

சக மனித கரிசனையையும், மனித நேயத்தையும் இயேசு தனது அத்தனை போதனைகளிலும் முன்னிறுத்தினார். நாம் வாழும் சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தார்மீகக் கடமையை அவரது போதனைகள் அடிநாதமாய்க் கொண்டிருக்கின்றன. சக மனிதன் வாழ்வதற்கான ஒரு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுப்பது நம் கடமை. 

சக மனிதனின் மேம்பாட்டுக்கானவற்றைச் செய்வது நம் கடமை. சக மனிதனை நம்மைப் போல நேசிப்பது நம் கடமை ! அதற்கு நிலத்தை நேசிப்பது மிக முக்கியம் ! வளத்தை மேம்படுத்துவது மிக மிக அவசியம். 

*

சேவியர்

Posted in Articles

ஒளியாய் இரு, ஒளியாதிரு

ஒளியாய் இரு, ஒளியாதிரு

*

இயேசுவின் போதனைகள் பெரும்பாலும் சாதாரண மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையாக இருக்கும். ஒரு முறை அவர் சொன்னார், 

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். யாரும் விளக்கைக் கொளுத்தி மரக்காலின் கீழ் ஒளித்து வைக்க மாட்டார்கள். மாறாக வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரவேண்டுமென அதை விளக்குத் தண்டின் மீது தான் வைப்பார்கள். இவ்வாறு, உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிரட்டும். அப்போது உங்கள் நற்செயல்களைக் கண்டு மக்கள் உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். என்றார். 

ஒரு பையன் நல்லவனாக இருந்தால், நல்ல செயல்களைச் செய்தால், ‘இவனை நல்லா வளத்திருக்காங்க. வளத்தவங்களைப் பாராட்டணும். ‘ என்பார்கள். ஒரு பையனுடைய செயல் தான் அவனுடைய பெற்றோருக்கு புகழைக் கொண்டு வருகிறது. அவன் தறுதலையாக வளர்ந்தால், ‘பெத்து வளத்திருக்காங்க பாரு..’ என நேரடி சாபத்தை பெற்றோரை நோக்கித் தான் வீசுவார்கள். 

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் என்கிறது திருக்குறள். ஒரு மகனை ஈன்ற பொழுது அன்னை சொல்லொண்ணா மகிழ்வை அடைகிறாள். அது தான் அவள் அன்னையான கணம். அது தான் அவள் ஒரு உயிரை உலகிற்கு அளிக்கின்ற கணம். அந்த மகிழ்வை விட அவள் அதிகம் ஆனந்தம் அடைவது அந்த மகன் சான்றோன் என மக்கள் கூறும் போது தான் என்கிறது அந்தக் குறள். 

அப்படித் தான் கடவுளும். அவர எப்போது மகிழ்கிறார் என்றால், நமது நல்ல செயல்களைப் பார்த்து மக்கள் ,’அட.. இவன் கும்பிடற தெய்வம் சூப்பர்பா… ‘ என கடவுளைப் புகழும் போது தான்.  சும்மா வாயால், ‘கடவுளே உம்மைப் புகழ்கிறேன், கடவுளே உம்மைப் புகழ்கிறேன்’ என சொல்லிக் கொண்டிருப்பதால் உண்மையில் கடவுள் மகிழ்ச்சி அடைவதே இல்லை. நமது செயல்களைப் பார்த்து வியக்கும் பிற மக்கள், அதற்காக கடவுளைப் புகழும் போது தான் அவர் உண்மையான மகிழ்ச்சியை அடைகிறார். 

நாம் விளக்காக இருக்க வேண்டும். விளக்கின் பணி இருளை அகற்றுவது தான். இருள் என்பது மனிதர்களைச் சூழ்ந்திருக்கும் கவலைகள் எனலாம். அந்த கவலை இருளை, இயலாமையின் இருளை, தேவையின் இருளை நமது வெளிச்சம் துடைத்தெறிய வேண்டும். 

என்னிடம் இருக்கின்ற பணமோ, கலையோ, நேரமோ ஏதோ ஒன்று வெளிச்சமாய் இருக்கிறது. அதை நான் ஒளித்து வைக்கும் போது பயனற்றவனாய்ப் போகிறேன். பிறர் முன்னால் ஒளிரும் போது தான் பயன் கொடுக்கிறேன்.

ஒளியாய் இருப்போம், ஒளியாதிருப்போம். மனிதத்தால் இறைவனை மகிமைப்படுத்துவோம்

*

Posted in Articles

இயேசுவும் சிறுபிள்ளைகளும் (பேச்சு )

*

அவையோருக்கு என் அன்பின் வணக்கம். இயேசுவும் சிறு பிள்ளைகளும் எனும் தலைப்பில் உங்களோடு சில வார்த்தைகள் பேசலாம் என நினைக்கிறேன். 

நம்ம வீடுகள்ல எல்லாம் பெரியவங்க பேசும்போ நாம போய் நின்னா, ‘டேய் பொடியா… அந்தப் பக்கமா போய் விளையாடுப்பா.. பெரியவங்க பேசிட்டிருக்கும்போ தொந்தரவு பண்ணாதே’ அப்படி தானே சொல்லுவாங்க ? ஆனா இயேசு என்ன செஞ்சாரு தெரியுமா ?

பெரியவங்க நடுவில சின்ன பிள்ளைகளை பெருமைப்படுத்தினாரு. பெரியவங்க சின்ன பிள்ளைகளை விரட்டினப்போ அவர் பிள்ளைகளை அரவணைச்சுட்டே சொன்னாரு, ‘சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களைத் தடுக்க வேண்டாம். ஏன்னா விண்ணரவு இத்தகையோரதே’ ந்னு சொன்னாரு. 

பெரியவங்க எல்லாம் மெரண்டு போயிட்டாங்க. என்னடா, நாம காலம் காலமா சட்டத்தைப் படிச்சு, கோயில்ல செபம் பண்ணி, பலி செலுத்தி, நோன்பு இருந்து கடவுளை மகிமைப்படுத்தறோம். பெரியவங்களா ஆனதுக்கு சந்தோசப்படறோம். இவரு என்னன்னா, விண்ணரசே இப்படிப்பட்டவங்களுக்குன்னு சொல்றாரே ந்னு குழம்பிப் போயிட்டாங்க. அப்போ இயேசு மறுபடியும் சொன்னாரு.

‘விண்ணரைச் சிறு பிள்ளையைப் போல ஏற்றுக் கொள்ளாவிட்டால் இறையாட்சிக்குள்ள வர மாட்டீங்க’ ! இப்போ பெரியவங்களுக்கு இன்னும் பெரிய அதிர்ச்சி. இந்த பிள்ளைங்க இன்னும் தோராவையே கத்துக்கல. கடவுள் யாருன்னு தோராயமாக் கூட தெரியாது. இவங்களைப் போல இயேசுவை ஏற்றுக் கொள்வதா ? ந்னு ரொம்ப குழம்பிட்டாங்க. 

சின்னப் பிள்ளைங்க எப்பவுமே எல்லாத்தையும் முழுசா நம்பறவங்க. கடவுளை எல்லாருமே முழுசா நம்பணும். கொஞ்சம் கொஞ்சம் சந்தேகம் வெச்சிட்டு அரைகுறையா நம்பக் கூடாது.

சின்னப் பிள்ளைங்க, அப்பா கிட்டே இருக்கும்போ எல்லாத்தையும் அப்பா பாத்துப்பாருன்னு நம்பிக்கையா இருப்பாங்க. கடவுள் கிட்டே இருக்கும்போதும் கடவுள் எல்லாத்தையும் பாத்துப்பாருன்னு நாம முழுசா நம்பணும்.

சின்னப் பிள்ளைங்க கள்ளம் கபடம் இல்லாம இருப்பாங்க. யாரை எப்படி கெடுக்கலாம்ன்னு யோசிக்க மாட்டாங்க. எல்லாருமே அப்படி கள்ளம் கபடம் இல்லாம இருக்கணும். இதைத் தான் இயேசு விரும்பினாரு. 

அதுக்கு ‘சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்’ ந்னு சொன்ன இயேசுவோட வார்த்தையை ஏற்று,  சிறுவர்களுக்கு நிலையற்ற உலக அழகை விட்டுட்டு, நிலையான இறைவனோட அழகைக் காட்டிக் கொடுக்கணும். 

இன்னிக்கு சின்னப் பிள்ளைங்க இயேசுவோடு வளர்ரதை விட அதிக நேரம் மொபைலோட தான் வளர்ராங்க. 

இயேசுவோட பேசறதை விட நிறைய நேரம் டிவியோட தான் பேசறாங்க.  இயேசுவைப் போல மாற வேண்டிய பிள்ளைங்க கார்ட்டூன் கதாபாத்திரங்களா தான் மாறிப் போறாங்க. 

அப்படிச் சின்னப் பிள்ளைங்கள தவறா வழி நடத்தக் கூடாது. அப்படி அவர்களுடைய விசுவாச வாழ்க்கைக்கு தடையா இருந்தா அது ரொம்ப ஆபத்து. அவங்க கழுத்துல எந்திரக் கல்லைக் கட்டி கடல்ல போடணும்ன்னு இயேசு ரொம்ப கடுமையா சொல்றாரு. 

செல்போன் நம்ம பொழுதை அழிக்கும், பைபிள் தான் நம்ம பொழுதை ஆக்கும் !

அதனால இயேசு சிறு பிள்ளைகளை நேசிச்ச மாதிரி, 

சிறு பிள்ளைகளான நாம இயேசுவை நேசிக்கணும்.

இயேசுவிடம் வரணும்

இயேசுவில் வளரணும் !

என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி. வணக்கம்

*