
*
அவையோருக்கு என் அன்பின் வணக்கம். இயேசுவும் சிறு பிள்ளைகளும் எனும் தலைப்பில் உங்களோடு சில வார்த்தைகள் பேசலாம் என நினைக்கிறேன்.
நம்ம வீடுகள்ல எல்லாம் பெரியவங்க பேசும்போ நாம போய் நின்னா, ‘டேய் பொடியா… அந்தப் பக்கமா போய் விளையாடுப்பா.. பெரியவங்க பேசிட்டிருக்கும்போ தொந்தரவு பண்ணாதே’ அப்படி தானே சொல்லுவாங்க ? ஆனா இயேசு என்ன செஞ்சாரு தெரியுமா ?
பெரியவங்க நடுவில சின்ன பிள்ளைகளை பெருமைப்படுத்தினாரு. பெரியவங்க சின்ன பிள்ளைகளை விரட்டினப்போ அவர் பிள்ளைகளை அரவணைச்சுட்டே சொன்னாரு, ‘சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களைத் தடுக்க வேண்டாம். ஏன்னா விண்ணரவு இத்தகையோரதே’ ந்னு சொன்னாரு.
பெரியவங்க எல்லாம் மெரண்டு போயிட்டாங்க. என்னடா, நாம காலம் காலமா சட்டத்தைப் படிச்சு, கோயில்ல செபம் பண்ணி, பலி செலுத்தி, நோன்பு இருந்து கடவுளை மகிமைப்படுத்தறோம். பெரியவங்களா ஆனதுக்கு சந்தோசப்படறோம். இவரு என்னன்னா, விண்ணரசே இப்படிப்பட்டவங்களுக்குன்னு சொல்றாரே ந்னு குழம்பிப் போயிட்டாங்க. அப்போ இயேசு மறுபடியும் சொன்னாரு.
‘விண்ணரைச் சிறு பிள்ளையைப் போல ஏற்றுக் கொள்ளாவிட்டால் இறையாட்சிக்குள்ள வர மாட்டீங்க’ ! இப்போ பெரியவங்களுக்கு இன்னும் பெரிய அதிர்ச்சி. இந்த பிள்ளைங்க இன்னும் தோராவையே கத்துக்கல. கடவுள் யாருன்னு தோராயமாக் கூட தெரியாது. இவங்களைப் போல இயேசுவை ஏற்றுக் கொள்வதா ? ந்னு ரொம்ப குழம்பிட்டாங்க.
சின்னப் பிள்ளைங்க எப்பவுமே எல்லாத்தையும் முழுசா நம்பறவங்க. கடவுளை எல்லாருமே முழுசா நம்பணும். கொஞ்சம் கொஞ்சம் சந்தேகம் வெச்சிட்டு அரைகுறையா நம்பக் கூடாது.
சின்னப் பிள்ளைங்க, அப்பா கிட்டே இருக்கும்போ எல்லாத்தையும் அப்பா பாத்துப்பாருன்னு நம்பிக்கையா இருப்பாங்க. கடவுள் கிட்டே இருக்கும்போதும் கடவுள் எல்லாத்தையும் பாத்துப்பாருன்னு நாம முழுசா நம்பணும்.
சின்னப் பிள்ளைங்க கள்ளம் கபடம் இல்லாம இருப்பாங்க. யாரை எப்படி கெடுக்கலாம்ன்னு யோசிக்க மாட்டாங்க. எல்லாருமே அப்படி கள்ளம் கபடம் இல்லாம இருக்கணும். இதைத் தான் இயேசு விரும்பினாரு.
அதுக்கு ‘சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்’ ந்னு சொன்ன இயேசுவோட வார்த்தையை ஏற்று, சிறுவர்களுக்கு நிலையற்ற உலக அழகை விட்டுட்டு, நிலையான இறைவனோட அழகைக் காட்டிக் கொடுக்கணும்.
இன்னிக்கு சின்னப் பிள்ளைங்க இயேசுவோடு வளர்ரதை விட அதிக நேரம் மொபைலோட தான் வளர்ராங்க.
இயேசுவோட பேசறதை விட நிறைய நேரம் டிவியோட தான் பேசறாங்க. இயேசுவைப் போல மாற வேண்டிய பிள்ளைங்க கார்ட்டூன் கதாபாத்திரங்களா தான் மாறிப் போறாங்க.
அப்படிச் சின்னப் பிள்ளைங்கள தவறா வழி நடத்தக் கூடாது. அப்படி அவர்களுடைய விசுவாச வாழ்க்கைக்கு தடையா இருந்தா அது ரொம்ப ஆபத்து. அவங்க கழுத்துல எந்திரக் கல்லைக் கட்டி கடல்ல போடணும்ன்னு இயேசு ரொம்ப கடுமையா சொல்றாரு.
செல்போன் நம்ம பொழுதை அழிக்கும், பைபிள் தான் நம்ம பொழுதை ஆக்கும் !
அதனால இயேசு சிறு பிள்ளைகளை நேசிச்ச மாதிரி,
சிறு பிள்ளைகளான நாம இயேசுவை நேசிக்கணும்.
இயேசுவிடம் வரணும்
இயேசுவில் வளரணும் !
என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி. வணக்கம்
*