( சிறுவர் கதை )
*

எல்லாருக்கும் வணக்கம். நான் இன்னிக்கு ஒரு கதை சொல்லப் போறேன். அது ஒரு ஆக்ஷன் கதை.
எருசலேம்ல இருந்து எரிகோவுக்கு வியாபாரி ஒருத்தர் போயிட்டிருந்தாரு. அந்த ரூட்டு ரொம்ப டேஞ்சரான ரூட். அடிக்கடி திருடங்க வந்து டிராவலர்ஸை எல்லாம் புடிச்சு, அடிச்சு, இருக்கிறதை எல்லாம் புடுங்கிட்டு கொன்னுடுவாங்க. இந்த மனுஷனுக்கு வேற வழி இல்ல. அதனால அந்த ரூட் வழியா போயிட்டிருந்தாரு. கையில வேற பணம் இருக்கு.
அவரோட போதாத காலம், ஒரு திருட்டு கும்பல் கிட்டே மாட்டிகிட்டாரு. அவங்க நிறைய பேரு இருந்தாங்க. இவரை அடிச்சு தொவைச்சு காய போட்டுட்டு, இருந்ததை எல்லாம் அள்ளிட்டு போயிட்டாங்க. ஐயோ யாராச்சும் வந்து காப்பாத்துவாங்களான்னு இவரு குற்றுயிரும் குலை உயிருமா அங்கே கிடந்தாரு.
அப்போ அந்தப் பக்கமா ஒரு குரு வந்தாரு. அப்பாடா நம்ம பிரச்சினை தீந்துது வரது ஒரு குருன்னு இவரு நினைச்சிருக்கலாம், தெரியல. ஆனா குரு சைடு வாங்கி ஓடியே போயிட்டாரு. ஏன்னா இரத்தத்தை தொட்டா அது தீட்டாயிடும், அப்புறம் அவங்க உடனே கோயிலுக்கு போக முடியாது.
அடடா குரு போயிட்டாரான்னு நினைச்சுட்டே கிடந்திருப்பாரு அந்த அடிபட்ட யூத மனுஷன். அப்போ வந்தாரு லேவியர் ஒருத்தார். அப்பாடா குரு தான் குடு குடுன்னு ஓடிட்டாரு இவர் கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாருன்னு அடிபட்டவர் நினைச்சிருக்கலாம். பட்… பேட் லக். லேவியும் தாவித் தவி ஓரமா ஓடியே போயிடாரு.
அப்புறம் வந்தாரு ஒரு சமாரியன். நல்லா இருக்கிற காலத்திலயே நெருங்கி வரமாட்டாங்க. சாகக் கிடக்கும்போ இவனெல்லாம் எப்படி என் பக்கத்துல வருவான்னு அவரு நினைச்சிருக்கலாம். ஆனா நடந்ததே வேற. அந்த சமாரியன் ஓடிப் போய் அந்த மனுஷனை தூக்கி, அவனுக்கு ஃபஸ்ட் எய்ட் எல்லாம் குடுத்து, தன்னோட அனிமல் மேல ஏத்தி சத்திரத்துக்கு கூட்டிட்டு போனாரு. அதோட விடல, சத்திரக் காரனுக்கு பணமும் குடுத்து, இனி தேவைப்பட்டாலும் தருவேன்னு சொல்லிட்டு போனாரு.
அந்த யூதன் ஷாக் ஆயிட்டான். என்னடா நடக்குது இங்கே ? நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்கன்னு நினைச்சவங்க ஓடியே போக, ஓடிப் போவான்னு நினைச்சவன் ஹெல்ப் பண்றானே அப்படின்னு நினைச்சாரு.
நம்ம அயலான் யாருன்னா அந்த ஹெல்ப் பண்ணினவன் தான். அப்படின்னு இயேசு சொல்றாரு.
இதுல இயேசு என்ன சொல்ல வராருன்னா, நாம சாதி மதம் தீட்டு அது இது லொட்டு லொசுக்கு எல்லாம் பாக்காம எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணணும். சர்ச்சுக்கு போறேன், கன்வென்ஷனுக்கு போறேன்னு ஓடறதை விட, தேவைப்படற ஒருத்தனுக்கு ஹெல்ப் பண்ண போறது தான் உசத்தின்னு சொல்றாரு.
புரிஞ்சுதா ? நாமும் அப்படியே செய்வோமா ?
நன்றி
*