Posted in Sunday School, skit

தேவையற்ற ஆணிகள்

டீச்சர் : பிள்ளைகளா, கிறிஸ்மஸுக்காக ஒரு போட்டி. கிறிஸ்மஸ் ந்னு சொன்னதும் உங்களுக்கு ஞாபகத்துல வர பத்து விஷயங்கள் எழுதி குடுங்க. 

( பிள்ளைகள் எழுதுகிறார்கள் )

டீச்சர் : வெரி குட்.

டீச்சர் : ராபர்ட்.. நீ எழுதியிருக்கிறதை எல்லாம் படி 

ராபர்ட் : 

கிறிஸ்மஸ் தாத்தா

கிறிஸ்மஸ் மரம்

நட்சத்திரம் 

மட்டன் பிரியாணி & சிக்கன் ஃப்ரை

கிறிஸ்மஸ் அலங்காரம்

கேரல் ரவுண்ட்ஸ்

சர்ச் சர்வீஸ்

புதிய டிரஸ்

டிவில கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ப்ரோக்ராம்ஸ்

குடில் செட்

டீச்சர் : வெரி குட்.. வெரி குட்.. இன்னிக்கு என்னென்ன இருக்கோ அதை அழகா சொல்லியிருக்கீங்க. 

ராபர்ட் : ஆமா டீச்சர்… கிறிஸ்மஸ்னாலே கலக்கல் தான்..

டீச்சர் : சரி, இப்போ ஒரு சின்ன எக்சர்ஸைஸ்…. சரியா ? எல்லாரும் ரெடியா ?

ராபர்ட் : ரெடி டீச்சர்.

டீச்சர் : இப்போ நீங்க எழுதியிருக்கிற லிஸ்ட்ல ஒவ்வொண்ணா எடுத்து, அதுக்கு பைபிள் ரெஃபரன்ஸ் குடுங்க. உதாரணமா நீங்க ஸ்டார் – ந்னு எழுதியிருந்தா, பைபிள்ல அது எங்க வருதுன்னு எழுதுங்க. ஞானிகள் வந்தப்போ வழிகாட்டிச்சு இல்லையா ? அது மாதிரி.. சரியா

ராபர்ட் : சரி மேம்.

( சற்றி நேரத்துக்குப் பின் )

டீச்சர் : என்ன ராபர்ட்.. நிறைய காலியா கிடக்கு 

ராபர்ட் : பைபிள்ல நிறைய விஷயங்களைக் காணோம் மிஸ்

டீச்சர் : குடு பாப்போம்.. கிறிஸ்மஸ் தாத்தா ! இது பைபிள்ள எங்கயாச்சும் இருக்கா ? யாராச்சும் பாத்தீங்களா

ராபர்ட் : இல்ல மிஸ்.. நோவா தாத்தா இருக்காரு, ஆபிரகாம் தாத்தா இருக்காரு, சாமுவேல் தாத்தா இருக்காரு.. ஆனா கிறிஸ்மஸ் தாத்தா மட்டும் எங்கயுமே இல்ல மிஸ்… 

( பிள்ளைகள் இல்லை என்கிறார்கள் )

டீச்சர் : அப்போ, இது பைபிள்ல இல்லாத விஷயம். யாரோ நுழைச்ச விஷயம். இதை தூக்கி ஓரமா வைக்கலாம். 

பிள்ளைகள் : ஆமா மிஸ்

டீச்சர் : இப்போ கிறிஸ்மஸ் மரம்.. இது எங்கேயாச்சும் இருக்கா 

ராபர்ட் : இல்ல மிஸ்… ஒலிவ மரம் இருக்கு, அத்தி மரம் இருக்கு, கருவாலி மரம் இருக்கு.. ஆனா கிறிஸ்மஸ் மரம் மட்டும் இல்லை மிஸ்…

டீச்சர் : அப்போ அதையும் ஒதுக்கி வைக்கலாமா ?

பிள்ளைகள் : எஸ்.. மிஸ்…

டீச்சர் : கிறிஸ்மஸ் அலங்காரம் .. இருக்கா ?

ராபர்ட் : எருசலேமோட அலங்கார வாசல் மட்டும் தான் இருக்கு.. ஆனா கிறிஸ்மஸ் அலங்காரம் இல்லை.

டீச்சர் : இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பாத்து, எதெல்லாம் கிறிஸ்மஸ்க்கு தேவை இல்லாததோ அதையெல்லாம் தூக்கிடணும்

ராபர்ட் : அதை எப்படி கண்டுபிடிக்கிறது மிஸ் ?

டீச்சர் : நம்மையும் கடவுளையும் பிரிக்கிற எல்லாமே சாத்தான் கொண்டு வரது தான். கிறிஸ்மஸுக்கு முக்கியமான நபர் இயேசு. ஆனா அது உன் லிஸ்ட்லயே இல்லை. உனக்கும் இயேசுவுக்கும் இடையே தாத்தாவும், மரமும், ஸ்டாரும், குடிலும் எல்லாம் வந்து நிக்குது. 

ராபர்ட் : ஓ… 

டீச்சர் : எது நம்மை கடவுள் கிட்டே கொண்டு போற பாலமா இருக்கோ அதை கண்டின்யூ பண்ணலாம். எது இரண்டு பேருக்கும் இடையில பள்ளம் தோண்டுதோ அதை விட்டுடலாம்..

ராபர்ட் : இப்போ புரியுது மிஸ்

டீச்சர் : வெரி குட்.. மத்த எல்லாமே சுயநலத்துக்காக சிலர் பண்ற கமர்ஷியல் பிஸினஸ்.. சரியா.. நாட் காட்லி பிஸினஸ்.

பிள்ளைகள் : புரியுது மிஸ்..

டீச்சர் : ஓக்கே.. இனிமே ஒரு லிஸ்ட் போடுங்க.. முதல்ல இயேசு இருக்கட்டும். அப்புறம் நீங்க போடற விஷயங்கள் எல்லாம் பைபிள்ல இருக்கட்டும், அது உங்களையும் இயேசுவையும் பிரிக்காததா இருக்கட்டும்.. ஓக்கே வா..

பிள்ளைகள் : கண்டிப்பா மிஸ்

ராபர்ட் : எழுதுகிறான்

இயேசு கிறிஸ்து

அன்னை மரியாள்

ஞானிகள்

இடையர்கள்..

Posted in Sunday School, skit

சிங்கள் டீ

ஒருகுவளைதேநீர்

தெருவில் ஒருவர் இருக்கிறார். 

இளைஞன் ஒருவர் அவருக்கு தேனீர் கொண்டு கொடுக்கிறான். 

நபர் : என்னப்பா விசேஷம்

இளை : விசேஷம் ஒண்ணும் இல்லை.. எங்க வீடு அது தான். வீட்ல டீ குடிச்சிட்டு இருந்தேன். நீங்க இங்க நிக்கறதை பாத்தேன். அதான் ஒரு டீ குடுக்கலாமேன்னு நினைச்சேன்

நபர் : ஏன்பா.. யாருக்குமே தோணாதது உனக்கெப்படி தோணிச்சு ?

இளை : எங்கப்பாவும் இப்படி ஒரு வேலை பாத்தவரு தான்… இந்த கஷ்டம் என்னன்னு எனக்கு தெரியும்.. 

நபர் : அப்படியா… ஆனா….பெரிய வீட்ல இருக்கீங்க ?

இளை : அப்பா என்னை நல்லா படிக்க வெச்சாரு… . பை காட்ஸ் கிரேஸ்…நான் நல்லா இருக்கேன்… 

நபர் : உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லா அமையும்பா.. பெரிய இடத்துல இருந்தாலும், உன் கண்ணுக்கு சிறியவங்க தெரியறாங்க…. 

இளை : எங்க அப்பா சொல்லுவாரு… குப்பை பொறுக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கும்பா.. அந்த டைம்ல…. யாராச்சும் ஒரு வாய் டீ தந்தா நல்லா இருக்கும்ன்னு .. ஆனா யாரும் நெருங்கினது கூட இல்லை.. மூக்கை பொத்திட்டு போயிடுவாங்க…

நபர் : உண்மை தான்பா..

இளை : ஒரு தடவையாச்சும் அடுத்தவங்க பக்கத்துல நின்னு பாத்தா தான்.. இந்த கஷ்டம் புரியும். அதான் நான் இப்படி யாரையாச்சும் பாத்தா.. ஓடிப் போய் ஒரு டீயோ, தண்ணியோ ஏதாச்சும் குடுப்பேன். 

நபர் : ரொம்ப சந்தோசப்பா.. யாருன்னே தெரியாத எனக்கு நீ டீ குடுத்தது ரொம்ப சந்தோசம்பா…

இளை : இப்போ தான் தெரிஞ்சிடுச்சே.. இனிமே நாம தெரியாதவங்க இல்லை.. தெரிஞ்சவங்க.

நபர் : ம்ம்.. அப்பா பிள்ளையை ரொம்ப நல்லா வளர்த்திருக்காரு

இளை : பரம பிதா, அவரோட பிள்ளையை நமக்காக சாவடிச்சாரு.. அதோட ஒப்பிடும்போ நாம பண்றதெல்லாம் ஒண்ணூமே இல்லையே சார்

நபர் : அதென்னப்பா கதை

இளை : உக்காருங்க சார்.. நான் சொல்றேன். ஸ்டோரி ஆஃப் கிறிஸ்மஸ்.. அது ஒரு பெரிய பெயின்ஃபுல் ஸ்டோரி… 

Posted in skit, Sunday School

ஏலம்

ஏலம் 

நடத்துபவர் : இந்த ஓவியம்… அவ்வளவு தத்ரூபமாய் வரையப்பட்டிருக்கிறது.. இதன் ஆரம்ப விலை 10 இலட்சம்

ந 1 : ஆமா.. இந்த ஓவியத்துல இருக்கிற அந்த உணர்வு, ரொம்பவே மனசை பிசையுது

நட : ஆமா.. உண்மையான ஒரு பையனைப் பாக்கறது போலவே இந்த படம் இருக்கிறது தான் இதோட ஸ்பெஷாலிடி

ந 1 : யா.. அந்த பார்வையே ரொம்ப சூப்பரா இருக்கு

ந 2 : ஆமா… பிக்காசோ ஓவியம் மாதிரி ஒரு தாக்கத்தை இந்த ஓவியமும் உருவாக்குது

ந‌   : உண்மையிலேயே உன்னதமான ஓவியம்.. பத்து இலட்சம்.. ஓவியர் ரொம்ப கஷ்டப்பட்டு வரைஞ்ச ஓவியம்… 

ந 1 : பன்னிரண்டு இலட்சம்

ந 3 : பதிமூன்று இலட்சம்

ந 4 : பதினான்கு இலட்சம்

ஏலம் நிறைவடைகிறது.. இருபது இலட்சம்ம்.. ஒரு தரம்.. இரண்டு தரம்…. மூணு தரம்…

( ஏலம் போய்க்கொண்டிருக்கிறது )

ந 1 : .. ம்ம்… பாரேன்.. ஒரு ஏழையை பாத்து படம் வரைஞ்சவரு கோடீஸ்வரர்…. படம் வரையக் காரணமான ஏழை, இன்னும் அதே பெஞ்ச்ல

ந 2 : யா… அது தான் வருத்தமான விஷயம்

காட்சி 2

ஒரு பார்க் பெஞ்சில் அந்த ஏழை படுத்திருக்கிறான். 

நடத்துனர் : தம்பி.. எழுந்திருப்பா…

பையன் : ஐயா… பசிக்குதுய்யா… ஏதாச்சும் வேலை குடுங்க…  சாப்பாடு மட்டும் போதும்.. என்ன வேலைன்னாலும் செய்றேன்…

நட : எவ்ளோ பெரிய மதிப்பு மிக்க ஆளுப்பா நீ வெறும் சாப்பாடு கேக்கறே…

பையன் : ஐயா… சல்லிக்காசுக்கு பிரயோசனம் இல்லாதவன் நான்..சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு…

நட : சல்லிக்காசா… ஹ்ம்ம்ம்…தம்பி… இதா…உன் பேர்ல ஒரு பேங்க் அக்கவுண்ட்

பையன் : பேங்க் அக்கவுண்டா

நட : அதுல இருபது இலட்சம் ரூபா இருக்கு

பையன் : இருபது இலட்சமா

நட : ஆமா, சல்லிக்காசுக்கு பிரயோசனம் இல்லேன்னு சொன்னியே.. உன்னை பாத்து ஒருத்தர் படம் வரைஞ்சாரு… அவரோட ஓவியம் 20 இலட்சம் ருபாய்க்கு போச்சு

பையன் : ஒரு ஓவியமா

நட : ஏதோ ஒரு ஓவியம் இல்ல.. உன்னை வரைஞ்ச ஓவியம்…

பையன் : என்ன சொல்றீங்க‌

நட : அதனால அந்த பணம் முழுசும் உனக்கே குடுக்கணும்ன்னு அவரு முடிவு பண்ணி இதை பண்ணியிருக்காரு. 

பையன் : நம்மவே முடியல.. எனக்காக ஏன் அவரு.. வரைஞ்சது அவரு தானே…. 

நட : தம்பி…நாம யாருன்னே தெரியாம புழுதில கிடந்தப்போ ஒருத்தர் தூக்கி விடலையா ? சகதில இருந்து எடுக்கலையா ? 

பையன் : அ…யாரது ?

நட : இயேசு ப்பா… நம்மை தூக்கி விட அவரு உயிரையே குடுத்தாரு.. இவரு தன்னோட உழைப்பை குடுத்தாரு

பையன் : நம்பவே முடியல.. என்ன சொல்றதுன்னே தெரியல… பருக்கை தேடினவனுக்கு ஏக்கர் கணக்கில வயலே கிடைச்ச மாதிரி இருக்கு.

நட : அதான் கிறிஸ்மஸ் செய்திப்பா.. தகுதியே இல்லாத நமக்காக இயேசு வந்த கதை

பையன் : ஐயா.. அந்த கதையையும் கொஞ்சம் சொல்றீங்களா

நட : கண்டிப்பா

Posted in skit, Sunday School

டைம் இல்லை

ந 1 : என்னடா… இந்த வருஷம் கிறிஸ்மஸுக்கு சர்க்கு வரமுடியாது.. வேலை அது இதுன்னு கதை விடறே ?

ந 2 : ஆமா, என் வேலை அப்படிடா…. லீவ் அது இதுன்னு போட்டா வேலை அம்போ தான்.. ஐ.டி சப்போர்ட் வேலை ரொம்ப கஷ்டம் டா

ந 1 : என்ன தான் இருந்தாலும் … நீ பண்றது சரியில்லை… சர்ச்சை ஸ்கிப் பண்ண முடியாதுன்னு நீ சொல்லிடு 

( போன் வருகிறது, ந 2 கட் பண்ணுகிறார் )

ந 1 : பேசுடா. நோ பிராப்ளம்

ந 2 : இல்லை பிரண்ட் தான்… கூட வேலை பாக்கறவன்.. அப்புறம் பேசிக்கிறேன்.

ந 1 : நான் என்ன சொல்ல வந்தேன்னா… நாம கடவுளை விட்டு விலகி வேலை வேலைன்னு போக ஆரம்பிச்சா அப்புறம் அதுக்கு தான் நேரம் இருக்கும்

ந 2 : என்ன பண்ண ? ஃபிரீயா இருக்கும்போ ஒரு தடவை சர்ச் வந்து பிரேயர் பண்ணிக்கிறேன்

ந 1 : எதுக்கு கில்டி ஃபீலிங்கை போக்கவா ? 

( போன் அடிக்கிறது , ந 2 கட் பண்ணுகிறார் )

ந 2 : என் பாஸ் கூப்பிடறாரு.. என்னன்னு தெரியல.. அப்புறம் பேசறேன்

ந 1 : ஏதாச்சும் முக்கியமான விஷயமா இருக்கப் போவுது

ந 2 : தெரியல… தலை போற அவசரம் எல்லாம் இருக்காது டோண்ட் வரி.. ஆங் என்ன சொல்லிட்டிருந்தே ?

ந 1 : கிறிஸ்மஸுக்கு சர்ச்ச்க்கு வரது பற்றி

ந 2 : ஆஹ்.. இயேசுவே சொல்லியிருக்காரு இந்த மலையிலும் அல்ல, எருசலேமிலும் அல்ல இதயங்களில் தொழுது கொள்வீர்கள்ன்னு

ந 1 : வசனத்துக்கு பதில் வசனம் நிறைய இருக்கு.. நீ சாக்கு போக்கு தேடாதே

( போன் அடிக்கிறது ந 2 கட் பண்ணுகிறான்.. பட் கன்சர்ண்ட் )

ந 2 : பாஸோட பாஸ் கால் பண்றாரே… என்னவா இருக்கும்… 

ந 1 : பாஸோட பாஸ்ன்னா முக்கியமா தான் இருக்கும்.. பேசு

ந 2 : இல்ல.. என்ன ந்னு தெரியல… அதான் திங்கின்.. போன் எடுக்கலாமா வேண்டாமான்னு… 

( போன் வருகிறது ந 2 எடுக்கிறார்.. எழும்புகிறார் )

ந 2 : சார்.

ந 2 : இல்ல சார் போன் சைலண்ட்ல இருந்துச்சு, ஐ வாஸ் அவுட்

ந 2 : இதோ உடனே ஆபீஸ் போய் என்னன்னு பாக்கறேன் சார்.. 

ந 2 : சார், வில் ஃபிக்ஸ் இட்.. டோண்ட் வரி

( போனை வைக்கிறான் )

ந 1 : யாருடா அது

ந 2 : டேய் கம்பெனி சி.இ.ஓ டா… அவரு கூப்பிட்டா  போன் எடுக்காம இருக்க முடியது, சொல்றதை கேக்காம இருக்க முடியாது.. இல்லேன்னா வெளியே தள்ளிடுவாரு.. உடனடியா..

ந 1 :  ஒரு கம்பெனி சி.இ.ஓக்கே இப்படி அலற்றே.. ஆனா எல்லா கம்பெனிக்கும் சி.இ.ஓ. அதுக்கும் மேல மேல.. உலகத்துக்கே ராஜாதி ராஜா.. அவர் கூப்பிட்டா போக மாட்டேங்கறே..

ந 2 : டேய்.. என்னடா…அ..அது வந்து

ந 1 : இயேசுவை விட பெரிய தலைவர் யாரு ? அவரு உனக்கு அலட்சியம் – சம்பளம் போடறவ்னுக்கு சேவை செய்றதே உன் இலட்சியம்… அப்படி தானே

ந 2 : அது.. அது வந்து

ந 1 : நீயே முடிவு பண்ணிக்கோ.. சி.இ.ஓ ஒரு கம்பெனில இருந்து தான் வெளியே தள்ளுவாரு. கடவுள் நினைச்சா சொர்க்கத்துக்கு வெள்யே நரகத்துல தள்ளுவாரு.. கவனம்.

ந 2 ; டேய்.. நீ இப்படி சொல்லும்போ எனக்கு கொஞ்சம் உறைக்குது..

ந 1 : நல்லா யோசி.. ஆபீஸ் வேண்டாம்ன்னு சொல்லல, கடவுளை எங்கே வைக்கணும்ன்னு நீ டிசைட் பண்ணுன்னு சொல்றேன்.. ஹேப்பி கிறிஸ்மஸ்

ந 2 : கண்டிப்பா நான் ஜீசஸை இனிமே பஸ்ட் பிளேஸ்ல வைப்பேண்டா.. ஹெப்பி கிறிஸ்மஸ்

Posted in skit, Sunday School

இன்சூரன்ஸ்

ந 1 : ரொம்ப நாளா கேக்கணும்ன்னு நினைச்சேன்.. பிள்ளைகளுக்கு எதிர்காலத்துல எந்த பிரச்சினையும் வரக் கூடாது அதுக்காக ஏதாச்சும் இன்வெஸ்ட்மென்ட் பண்ணியிருக்கியா ?

ந 2 : இதுவரை பண்ணல… நீ பண்ணியிருக்கியா ?

ந 1 : கொஞ்சம் ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணியிருக்கேன்… பட்.. ஷேர் எப்ப வேணும்ன்னாலும் க்ராஷ் ஆகலாம்ல.. 

ந 2 : சோ… 

ந 1 : சோ… கொஞ்சம் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ல போட்டிருக்கேன். 

ந 2 : ஓ.. ஒரு பேக்கப் மாதிரி… 

ந1 : எஸ்..எஸ்… மியூச்சுவல் ஃபண்ட் கூட ஒருவகையில ஷேர்ஸ் தானே.. அதனால கொஞ்சம் பணத்தை ஃபிக்ஸட் டெப்பாசிட்ல போட்டிருக்கேன்.

ந 2 : பிக்ஸட் டெபாசிட்டா.. அது நல்லது தான். பேங்க்ல பத்திரமா இருக்கும்

ந 1 : எங்க.. ? இப்போ எந்த பேங்க் திவாலாகுது, எது எப்போ யார் கூட சேருதுன்னு தெரியல. அதனால கொஞ்சம் இன்சூரன்ஸ் பாலிஸி போட்டிருக்கேன்..

ந 2 : பாலிசி ஈஸ் குட்.. ஆனா இப்போ இன்சூரன்ஸ் கம்பெனி கூட கொஞ்சம் சிக்கல் தான் இல்லையா ?

ந 1 : எஸ்..எஸ் அதனால தான் கொஞ்சம் லேண்ட்ல இன்வெஸ்ட் பண்ணியிருக்கேன்.

ந 2 : ஓ.. லேண்ட்.. குட்.. நல்ல ஐடியா

ந 1 : பட் அது கூட சம்டைம்ஸ் பிரச்சினை ஆகும்.. விற்க முடியாம போயிடும்.. சோ கொஞ்சம் நகையாவும் இன்வெஸ்ட் பண்ணியிருக்கேன். இம்மீடியட் லிக்யூடிடி மாதிரி.. சட்டுன்னு காசாக்கிடலாம்

ந 2 : ஓ.. அப்போ பிரச்சினை இல்லை..அடுக்கடுக்கா பேக் அப் இருக்கே..

ந 1 : இனி கொஞ்சம் கிரிப்டோல இன்வெஸ்ட் பண்ணலாமான்னு யோசிக்கிறேன்.. பட் அது ரிஸ்கி..

ந 2 : ம்ம்ம்.. சரி, உலகப் பாதுகாப்புக்கு இவ்ளோ பண்ணியாச்சு.. ஸ்பிரிச்சுவல் பாதுகாப்புக்கு ஏதாச்சும் பண்ணியிருக்கியா ?

ந 1 : என்ன ஸ்பிரிச்சுவல் பாதுகாப்பு..

ந 2 : இன்வெஸ்டிங் இன் காட்லி மேட்டர்ஸ்.. கடவுளுக்காக அவருக்கு பிரிமனானவற்றில் இன்வெஸ்ட் பண்றது 

ந 1 : ஐ.. மீன்.. ஹி ஈஸ் எ கிறிஸ்டியன்.. நான் வேற ஏதும் யோசிச்சதில்லை.

ந 2 : அதையும் யோசிக்கணும்பா… நம்ம பிள்ளைங்க கிறிஸ்துவுக்குள்ள இருக்கணும். இங்கே பேக்கப் எல்லாம் இல்லை. இயேசு இல்லேன்னா, இன்னொருத்தர், அவரும் இல்லேன்னா இன்னொருத்தர் அப்படி ஏதும் இல்லை

ந 1 : யா.. தட்ஸ் ட்ரூ.. டிரினிடி கூட ஒரே கடவுள் தான்

ந 2 : சோ… எதிர்காலத்தை விட முக்கியம் ? எதிர் நோக்கியிருக்கிற காலம் முக்கியம் இலையா ?

ந 1 : ம்ம்… ஆமா

ந 2 : அந்த நிலைவாழ்வுக்கான இன்வெஸ்ட்மென்ட் பத்தி யோசி.. அதுக்காக டைம் ஸ்பென்ட் பண்ணு

ந 1 : அதெப்படிப்பா… டெல் மி

ந 2 : இயேசு நமக்காக பிறந்தார்.. தட்ஸ் கிறிஸ்மஸ். நாம அவருக்காக வாழணும்.. தட்ஸ் ஹோலினெஸ்… நாம அவரோட வாழணும்.. அதான் எட்டர்னிடி.. அதுக்கு நம்ம சொல், செயல் எல்லாத்தையும் கடவுளுக்கேற்ற விஷயங்கள்ல இன்வெஸ்ட் பண்ணணும்

ந 1 : ம்ம்ம் யூ மீன் சர்ச் போணும்.. பைபிள் வாசிக்கணும்.. பாட்டு பாடணும்…லைக் தேட்..

ந 2 : இயேசுவைப் போல வாழணும். கனி கொடுக்கும் வாழ்க்கை வாழணும். மனித நேயம் நிரம்பிய ஒரு வாழ்க்கை வாழணூம்.கடவுளை விட பெரிய இன்சூரன்ஸ் நமக்குக் கிடைக்காது. அவர் கிட்டே நம்ம முழுசா டெப்பாசிட் பண்ணினா அவரு பாத்துப்பாரு

ந 1 : என்ன சொல்ல வரே

ந 2 : உலகத்தோட சில வருடங்களுக்கு இவ்ளோ யோசிக்கிற நாம, உலகைத் தாண்டிய நிலை வாழ்வுக்கு யோசிக்கணும்ன்னு சொல்றேன்

ந 1 : ஓ.. ஆமாப்பா.. உண்மை தான்

ந 2 : தட்ஸ் த மெசேஜ் ஆஃப் கிறிஸ்மஸ்… இயேசு வந்தது நம்மை மீட்க, அதை விட பெரிய‌  டெபாசிட் தேவையில்லை.

ந 1 : நல்லா சொன்னேப்பா… களஞ்சியங்களை பெருசாக்கி, ஆன்மாவை அழிய விடக் கூடாது. கோபுரத்தை பாக்கறதை நிறுத்திட்டு குடிசையை பாப்போம். 

ந 2 : ஹேப்பி கிறிஸ்மஸ்

ந1 : ஹேப்பி கிறிஸ்மஸ்