Posted in skit, Sunday School

ஏலம்

ஏலம் 

நடத்துபவர் : இந்த ஓவியம்… அவ்வளவு தத்ரூபமாய் வரையப்பட்டிருக்கிறது.. இதன் ஆரம்ப விலை 10 இலட்சம்

ந 1 : ஆமா.. இந்த ஓவியத்துல இருக்கிற அந்த உணர்வு, ரொம்பவே மனசை பிசையுது

நட : ஆமா.. உண்மையான ஒரு பையனைப் பாக்கறது போலவே இந்த படம் இருக்கிறது தான் இதோட ஸ்பெஷாலிடி

ந 1 : யா.. அந்த பார்வையே ரொம்ப சூப்பரா இருக்கு

ந 2 : ஆமா… பிக்காசோ ஓவியம் மாதிரி ஒரு தாக்கத்தை இந்த ஓவியமும் உருவாக்குது

ந‌   : உண்மையிலேயே உன்னதமான ஓவியம்.. பத்து இலட்சம்.. ஓவியர் ரொம்ப கஷ்டப்பட்டு வரைஞ்ச ஓவியம்… 

ந 1 : பன்னிரண்டு இலட்சம்

ந 3 : பதிமூன்று இலட்சம்

ந 4 : பதினான்கு இலட்சம்

ஏலம் நிறைவடைகிறது.. இருபது இலட்சம்ம்.. ஒரு தரம்.. இரண்டு தரம்…. மூணு தரம்…

( ஏலம் போய்க்கொண்டிருக்கிறது )

ந 1 : .. ம்ம்… பாரேன்.. ஒரு ஏழையை பாத்து படம் வரைஞ்சவரு கோடீஸ்வரர்…. படம் வரையக் காரணமான ஏழை, இன்னும் அதே பெஞ்ச்ல

ந 2 : யா… அது தான் வருத்தமான விஷயம்

காட்சி 2

ஒரு பார்க் பெஞ்சில் அந்த ஏழை படுத்திருக்கிறான். 

நடத்துனர் : தம்பி.. எழுந்திருப்பா…

பையன் : ஐயா… பசிக்குதுய்யா… ஏதாச்சும் வேலை குடுங்க…  சாப்பாடு மட்டும் போதும்.. என்ன வேலைன்னாலும் செய்றேன்…

நட : எவ்ளோ பெரிய மதிப்பு மிக்க ஆளுப்பா நீ வெறும் சாப்பாடு கேக்கறே…

பையன் : ஐயா… சல்லிக்காசுக்கு பிரயோசனம் இல்லாதவன் நான்..சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு…

நட : சல்லிக்காசா… ஹ்ம்ம்ம்…தம்பி… இதா…உன் பேர்ல ஒரு பேங்க் அக்கவுண்ட்

பையன் : பேங்க் அக்கவுண்டா

நட : அதுல இருபது இலட்சம் ரூபா இருக்கு

பையன் : இருபது இலட்சமா

நட : ஆமா, சல்லிக்காசுக்கு பிரயோசனம் இல்லேன்னு சொன்னியே.. உன்னை பாத்து ஒருத்தர் படம் வரைஞ்சாரு… அவரோட ஓவியம் 20 இலட்சம் ருபாய்க்கு போச்சு

பையன் : ஒரு ஓவியமா

நட : ஏதோ ஒரு ஓவியம் இல்ல.. உன்னை வரைஞ்ச ஓவியம்…

பையன் : என்ன சொல்றீங்க‌

நட : அதனால அந்த பணம் முழுசும் உனக்கே குடுக்கணும்ன்னு அவரு முடிவு பண்ணி இதை பண்ணியிருக்காரு. 

பையன் : நம்மவே முடியல.. எனக்காக ஏன் அவரு.. வரைஞ்சது அவரு தானே…. 

நட : தம்பி…நாம யாருன்னே தெரியாம புழுதில கிடந்தப்போ ஒருத்தர் தூக்கி விடலையா ? சகதில இருந்து எடுக்கலையா ? 

பையன் : அ…யாரது ?

நட : இயேசு ப்பா… நம்மை தூக்கி விட அவரு உயிரையே குடுத்தாரு.. இவரு தன்னோட உழைப்பை குடுத்தாரு

பையன் : நம்பவே முடியல.. என்ன சொல்றதுன்னே தெரியல… பருக்கை தேடினவனுக்கு ஏக்கர் கணக்கில வயலே கிடைச்ச மாதிரி இருக்கு.

நட : அதான் கிறிஸ்மஸ் செய்திப்பா.. தகுதியே இல்லாத நமக்காக இயேசு வந்த கதை

பையன் : ஐயா.. அந்த கதையையும் கொஞ்சம் சொல்றீங்களா

நட : கண்டிப்பா

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s