ந 1 : என்னடா… இந்த வருஷம் கிறிஸ்மஸுக்கு சர்க்கு வரமுடியாது.. வேலை அது இதுன்னு கதை விடறே ?
ந 2 : ஆமா, என் வேலை அப்படிடா…. லீவ் அது இதுன்னு போட்டா வேலை அம்போ தான்.. ஐ.டி சப்போர்ட் வேலை ரொம்ப கஷ்டம் டா
ந 1 : என்ன தான் இருந்தாலும் … நீ பண்றது சரியில்லை… சர்ச்சை ஸ்கிப் பண்ண முடியாதுன்னு நீ சொல்லிடு
( போன் வருகிறது, ந 2 கட் பண்ணுகிறார் )
ந 1 : பேசுடா. நோ பிராப்ளம்
ந 2 : இல்லை பிரண்ட் தான்… கூட வேலை பாக்கறவன்.. அப்புறம் பேசிக்கிறேன்.
ந 1 : நான் என்ன சொல்ல வந்தேன்னா… நாம கடவுளை விட்டு விலகி வேலை வேலைன்னு போக ஆரம்பிச்சா அப்புறம் அதுக்கு தான் நேரம் இருக்கும்
ந 2 : என்ன பண்ண ? ஃபிரீயா இருக்கும்போ ஒரு தடவை சர்ச் வந்து பிரேயர் பண்ணிக்கிறேன்
ந 1 : எதுக்கு கில்டி ஃபீலிங்கை போக்கவா ?
( போன் அடிக்கிறது , ந 2 கட் பண்ணுகிறார் )
ந 2 : என் பாஸ் கூப்பிடறாரு.. என்னன்னு தெரியல.. அப்புறம் பேசறேன்
ந 1 : ஏதாச்சும் முக்கியமான விஷயமா இருக்கப் போவுது
ந 2 : தெரியல… தலை போற அவசரம் எல்லாம் இருக்காது டோண்ட் வரி.. ஆங் என்ன சொல்லிட்டிருந்தே ?
ந 1 : கிறிஸ்மஸுக்கு சர்ச்ச்க்கு வரது பற்றி
ந 2 : ஆஹ்.. இயேசுவே சொல்லியிருக்காரு இந்த மலையிலும் அல்ல, எருசலேமிலும் அல்ல இதயங்களில் தொழுது கொள்வீர்கள்ன்னு
ந 1 : வசனத்துக்கு பதில் வசனம் நிறைய இருக்கு.. நீ சாக்கு போக்கு தேடாதே
( போன் அடிக்கிறது ந 2 கட் பண்ணுகிறான்.. பட் கன்சர்ண்ட் )
ந 2 : பாஸோட பாஸ் கால் பண்றாரே… என்னவா இருக்கும்…
ந 1 : பாஸோட பாஸ்ன்னா முக்கியமா தான் இருக்கும்.. பேசு
ந 2 : இல்ல.. என்ன ந்னு தெரியல… அதான் திங்கின்.. போன் எடுக்கலாமா வேண்டாமான்னு…
( போன் வருகிறது ந 2 எடுக்கிறார்.. எழும்புகிறார் )
ந 2 : சார்.
ந 2 : இல்ல சார் போன் சைலண்ட்ல இருந்துச்சு, ஐ வாஸ் அவுட்
ந 2 : இதோ உடனே ஆபீஸ் போய் என்னன்னு பாக்கறேன் சார்..
ந 2 : சார், வில் ஃபிக்ஸ் இட்.. டோண்ட் வரி
( போனை வைக்கிறான் )
ந 1 : யாருடா அது
ந 2 : டேய் கம்பெனி சி.இ.ஓ டா… அவரு கூப்பிட்டா போன் எடுக்காம இருக்க முடியது, சொல்றதை கேக்காம இருக்க முடியாது.. இல்லேன்னா வெளியே தள்ளிடுவாரு.. உடனடியா..
ந 1 : ஒரு கம்பெனி சி.இ.ஓக்கே இப்படி அலற்றே.. ஆனா எல்லா கம்பெனிக்கும் சி.இ.ஓ. அதுக்கும் மேல மேல.. உலகத்துக்கே ராஜாதி ராஜா.. அவர் கூப்பிட்டா போக மாட்டேங்கறே..
ந 2 : டேய்.. என்னடா…அ..அது வந்து
ந 1 : இயேசுவை விட பெரிய தலைவர் யாரு ? அவரு உனக்கு அலட்சியம் – சம்பளம் போடறவ்னுக்கு சேவை செய்றதே உன் இலட்சியம்… அப்படி தானே
ந 2 : அது.. அது வந்து
ந 1 : நீயே முடிவு பண்ணிக்கோ.. சி.இ.ஓ ஒரு கம்பெனில இருந்து தான் வெளியே தள்ளுவாரு. கடவுள் நினைச்சா சொர்க்கத்துக்கு வெள்யே நரகத்துல தள்ளுவாரு.. கவனம்.
ந 2 ; டேய்.. நீ இப்படி சொல்லும்போ எனக்கு கொஞ்சம் உறைக்குது..
ந 1 : நல்லா யோசி.. ஆபீஸ் வேண்டாம்ன்னு சொல்லல, கடவுளை எங்கே வைக்கணும்ன்னு நீ டிசைட் பண்ணுன்னு சொல்றேன்.. ஹேப்பி கிறிஸ்மஸ்
ந 2 : கண்டிப்பா நான் ஜீசஸை இனிமே பஸ்ட் பிளேஸ்ல வைப்பேண்டா.. ஹெப்பி கிறிஸ்மஸ்