ஆணி பாய்ந்த அன்பு

காட்சி 1
( மூன்று சிறுமிகள் பேசிக்கொண்டிருக்கின்றனர், ஒருவர் உட்கார்ந்து பைபிள் படித்துக் கொண்டிருக்கிறார் )
சிறுமி 1 : ஏய்.. நீ… இந்த தடவை என்ன டிசைட் பண்ணியிருக்கே ?
சிறுமி 2 : எதுக்கு என்ன டிசைட் பண்ணியிருக்கே ? மொட்டையா கேட்டா எப்படி தெரியும். புரியும்படியா சொல்லு…
சிறுமி 1 : அடுத்த வாரம் கிராம ஊழியம் ஒண்ணு இருக்குன்னு சொன்னாங்கல்ல சண்டே கிளாஸ்ல, அங்க உள்ள மக்களுக்கு இயேசுவைப் பற்றி சொல்றதுக்கு.
சிறுமி 2 : ஒ.. அதுவா.. நான் போலாம்ன்னு தான் இருக்கேன். நீ என்ன டிசைட் பண்ணியிருக்கே ?
சிறுமி 1 : எனக்கு தெரியல. லாஸ்ட் டைம் போனது கொஞ்சம் கடியா இருந்துச்சு. அதான் யோசிக்கிறேன்.
சிறுமி 2 : ஏன்.. என்னாச்சு ?
சிறுமி 1 : ம்ஹூம்… தெரியாத மாதிரி கேக்கறே… வசதியே இல்ல… போன வேன்ல ஏசி வர்க் ஆகல. செம வெயில் வேற. வேர்த்து கொட்டினதுல எனக்கு தலைவலியே வந்துச்சு. கிராமமும் வெயில்ல வறுத்துப் போட்ட வடகம் மாதிரி ரொம்ப சூடா இருந்துச்சு.
( பைபிள் படித்துக் கொண்டிருந்தவர் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார் )
சிறுமி 2 : ம்ம்.. அது உண்மை தான். அது ரொம்ப சம்மர் டைம். சம்மர் டைம்ல எல்லாம் இதை பிளான் பண்ண கூடாது.
சிறுமி 3 : அது கூட பரவாயில்ல.. அங்க ஒரு நாள் தங்கினோமே.. ஷப்பா… போதும் போதும்ன்னு ஆயிடுச்சு. கொசு கடிச்ச கடில ஒரு நிமிஷம் கூட தூங்க முடியல.
சிறுமி 1 : ஆமா, அரேஞ்ச் பண்ணினவங்க ஒரு கொசுவர்த்தி கூடவா ஒழுங்கா வைக்க மாட்டாங்க. ஏதாச்சும் நல்ல ரூம் புக் பண்ணியிருந்தா பரவாயில்லை. சாப்பாடும் ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.
சிறுமி 3 : அன்னிக்கு எல்லாமே செம கடி தான். தரையில படுக்க வேண்டியிருந்துச்சு. பாத்ரூமும் சரியா இல்லை. வெயில் வேற… போதும்… இந்த தடவை நானும் வரல.
சிறுமி 1 : ஏந்தான் இந்த வெயில் காலத்துல ஊழியம் எல்லாம் பிளான் பண்றாங்களோ… இதெல்லாம் கொஞ்சம் வின்டர் டைம்ல பிளான் பண்ணினா நல்லா இருக்கும். முதல்ல அதை அவங்க கிட்டே சொல்லணும்.
சிறுமி 3 : அதுவும் இந்த தடவை போற இடத்துல எதிர்ப்பு அதிகம் இருக்கும்ன்னும் சொல்றாங்க. எதுக்கு வம்பை விலை குடுத்து வாங்கணும். சைலண்டா ஜகா வாங்கிக்கலாம்.
நபர் : யம்மா.. நீங்க ஊழியம் ஊழியம்ன்னு சொல்லிட்டிருந்தீங்க… நீங்க எங்கேம்மா ஊழியத்துக்கு போறீங்க ?
சிறுமி 2 : அது மங்கலாபுரம் ந்னு ஒரு கிராமங்கய்யா.. வசதியில்லாத மக்கள் வாழற ஒரு மலைவாழ் கிராமம்.
நபர் : என்ன ஊழியம்மா ?
சிறுமி 3 : ம்ஹூம்… எதுவும் தெரியாம தான் கேக்கறீங்களாக்கும். அது இயேசுவைப் பற்றி சொல்ற ஊழியம். மிஷனரி டிரிப்
நபர் : ஓ… இயேசுவைப் பற்றி உங்களுக்கு யாரு சொன்னாங்க ?
சிறுமி 2 : எங்க அப்பா அம்மா
நபர் : அவங்களுக்கு..
சிறுமி : அவங்களோட அப்பா அம்மா.. அதுக்கு முன்னாடி அவங்களோட அப்பா அம்மா.. என்ன கேள்வி ஐயா இது. கடுப்படிக்கிறீங்களே…
நபர் : அப்படியில்லம்மா.. ஒருகாலத்துல நாம எல்லாருமே இயேசுவைப் பற்றி அறியாம இருந்தவங்க தான். எங்கயோ பிறந்து எப்படியெல்லாமோ நல்லா வளர்ந்த மிஷனரி மக்கள் தான் நமக்கு இயேசுவை அறிவிச்சாங்க.
சிறுமி 2 : அது.. வந்து… ஆமா… என்ன சொல்ல வரீங்க ?
நபர் : நாம இயேசு யாருன்னே அறியாம இருந்த காலத்துல தான் நமக்கு நிறைய இறைமனிதர்கள் வந்தாங்க. தோமா முதல்ல வந்தாரு. உயிரைப் பணயம் வெச்சு பயணம் செஞ்சாரு. கிறிஸ்தவத்தோட விதையை போட்டாரு.
சிறுமி 3 : ஓ.. ஆமா அது எங்களுக்குத் தெரியும்.
நபர் : அப்போவும் கிறிஸ்தவம் வளரல.அதுக்கு அப்புறம் நிறைய இறை பணியாளர்கள் வந்தாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சாங்க.மேலை நாட்டில வசதியா வாழ்ந்தவங்க இங்கே வந்து புழுதியில புரண்டாங்க. நோயால பிள்ளைங்க சாகறதை நேரடியா பாத்தாங்க. செத்துப் போன குழந்தைகளை அவங்களே புதைச்சுட்டு மிஷனரியை கண்டின்யூ பண்ணினாங்க…
சிறுமி 2 : ஓ..
நபர் : அவங்க உயிரைப் பணயம் வெச்சு இங்கே வராம இருந்திருந்தா என்ன ஆயிருக்கும் !. , “ஐயோ இங்கே வெயிலா இருக்கு, ஐயோ அங்கே மழையா இருக்கு, ஐயோ இது படிப்பறிவில்லாத இடமா இருக்கே ந்னு” நினைச்சிருந்தா இன்னிக்கு நாம இயேசுவை அறிஞ்சிருக்கவே முடியாது.
சிறுமி 3 : அதெல்லாம் அந்த காலம் அங்கிள்.. நீங்க இன்னும் பழைய காலத்துலயே இருக்கீங்க. இப்பல்லாம் அப்படி போக முடியுமா ? இது டெக்னாலஜி வேர்ல்ட்… இந்த காலத்துல அதெல்லாம் முடியுமா ?
நபர் : ஏன் முடியாது ? இயேசு மீது ரொம்ப அன்பு இருந்தா ? இயேசுவோட அன்பு மக்களுக்குக் கிடைக்கணும்ங்கற தீவிரமான ஆசை இருந்தா எல்லாமே சாத்தியம் தான்.
சிறுமி 1 : அப்படிப்பட்ட அன்பெல்லாம் இப்போ சாத்தியமா அங்கிள் ? பேசறதுக்கு வேணும்ன்னா நல்லா இருக்கும். நடைமுறைக்கு ஒத்து வராது.
நபர் : ஏன் ஒத்து வராது ? எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும். ஏன் சமீபத்துல அந்தமான் சென்டினல் தீவுக்கு போன ஜானோட வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய சவாலான உதாரணம் தானே
சிறுமி 1 : அது யாரு ஜாண் ? எனக்கு தெரியலையே.. கொஞ்சம் சொல்லுங்களேன்.
நபர் : அவர் பேரு ஜான் ஆலன் ச்சாவ்…

காட்சி 2
( ஜான் மூன்று மீனவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார் )
ஜான் : என் பேரு ஜான் ஆலன் ச்சாவ் !
ந 1 : சொல்லுங்கய்யா.. இந்த அழகான அந்தமானுக்கு வந்திருக்கீங்க… ஊர் சுத்திப் பாக்கலாமா ?
ஜான் : அந்தமான் ரொம்ப அழகா இருக்கு.. ரொம்ப புடிச்சிருக்கு… கடவுளோட படைப்பே அற்புதமானது தான். மனுஷன் தான் அதோட புனிதத்தைக் கெடுத்துடறான்.
ந 2 : உண்மைதான்யா… கடவுள் படைக்கும்போ எல்லாமே அற்புதம் தான்.. நம்ம மனசை பாவம் அழிக்கிற மாதிரி… இயற்கையை அசுத்தம் அழிக்குது…
ஜான் : பாவம்ன்னு எல்லாம் சொல்றீங்க ? ஜீசஸ் பற்றி தெரியுமா ?
ந 3 : ஆமாங்கய்யா.. நாங்க கிறிஸ்டியன்ஸ் தான்…
ஜான் : ஓ.. ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு ஒரு இடத்துக்கு போணும்.. உங்க உதவி வேணும்.
ந 1 : சொல்லுங்கய்யா.. எங்க போணுமோ போயிடலாம். அழகான தீவுகள் நிறைய இருக்கு இங்கே. ஹேவ்லாக் தீவு ஒன்னு இருக்கு, நார்த் பே இருக்கு, பராடாங் ஐலன்ட் இருக்கு.. எல்லாமே சூப்பரா இருக்கும்.
ஜான் : இல்ல.. நான் போகவேண்டிய இடம் அது இல்ல..
ந 2 : ஓ..எங்க போறதுன்னு ஆல்ரெடி டிசைட் பண்ணிட்டீங்களா ? அதுவும் நல்லது தான். இப்போ தான் ஆன்லைன் ல எல்லா விஷயமும் கிடைக்குதே… அப்போ சொல்லுங்க.. நம்ம கிட்டே மோட்டார் போட் இருக்கு, போயிட்டு வந்துடலாம்.
ஜான் : நார்த் சென்டினல் தீவுக்கு போணும்.
ந 1 : ( அதிர்ச்சியில் ) நார்த் சென்டினல் தீவுக்கா ? நீங்க விஷயம் தெரியாம சொல்றீங்க .. அங்கே எல்லாம் போக முடியாது. அது தடைசெய்யப்பட்ட தீவு.
ஜான் : அது தெரியும்… ஆனாலும் அங்கே தான் போகணும்.
ந 2 : ஐயா.. நாங்க இங்கயே பொறந்து வளந்தவங்க… அந்த தீவு எப்படிப்பட்டதுன்னு எங்களுக்கு தெரியும்… உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. நீங்க நினைக்கிற மாதிரி அது சுற்றுலாத் தலம் இல்ல… போய் செல்பி எடுத்து சந்தோசப்பட முடியாது.
ஜான் : தெரியும். அங்கே பழங்குடி மக்கள் வாழ்றாங்க. உலகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாம பல்லாயிரம் ஆண்டுகளா அங்க வாழ்றாங்க.
ந 3 : அது மட்டும் தான் தெரியுமா ? அவங்க தீவுக்குள்ள யாரு காலடி எடுத்து வெச்சாலும் காலி பண்ணிடுவாங்க. அது தெரியுமா ?
ஜான் : அது எனக்கு பத்து வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். அப்பவே முடிவு பண்ணிட்டேன் அங்கே தான் போகணும்ன்னு.
ந 2 : ஐயா அது சட்ட விரோதம்…
ஜான் : ம்ம்.. அதுவும் தெரியும். சட்ட ரீதியா போக ஏதாச்சும் ஒரு சின்ன வழி இருந்தா கூட அதைத் தான் நான் ஃபாலோ பண்ணியிருப்பேன். ஆனா அதுக்கு எந்த வழியும் இல்லை. அதனால தான் உங்க கிட்டே கேக்கறேன்.
ந 1 : ஐயா.. அந்த தீவுக்குள்ளயே போக முடியாது. போனா உயிரோட திரும்ப முடியாது. அங்கே ஏன் போகணும்ன்னு அடம் புடிக்கிறீங்க ?
ஜான் : அங்கே இருக்கிற மக்கள் இயேசுவை அறியாதவங்க. அவங்களுக்கு இயேசுவைப் பற்றி சொல்லப் போறேன். அவங்களும் இயேசுவோட அன்பை புரிஞ்சுக்கணும்.
ந 1 : ஐயா.. அவங்க நம்ம பாஷையையே புரிஞ்சுக்க மாட்டாங்க. அப்புறம் எப்படி நீங்க இயேசுவைப் பற்றி சொல்றதைப் புரிஞ்சுப்பாங்க. கொஞ்சம் யோசிச்சு பேசுங்க.
ஜான் : என்னப்பா இப்படி சொல்றீங்க. நாம எல்லாம் ஒரு நாள் கடவுளுக்கு முன்னாடி சொர்க்கத்துல இருக்கும்போ அவங்க அங்கே இருக்க வேண்டாமா ? நமக்கெல்லாம் புரியாத அவர்களோட மொழி சொர்க்கத்துல புகழ் பாடலா எதிரொலிக்க வேண்டாமா ? ஏன் இப்படி சொல்றீங்க.
ந 1 : ஐயா பல வருஷங்களுக்கு முன்னாடி அங்கிருந்து சில மக்களை நாட்டுக்கு கொண்டு வந்தாங்க. ஆனா அவங்களால நம்ம பூமியில வாழ முடியல. ஒரு சின்ன காய்ச்சலையோ, ஜலதோஷத்தையோ தாங்கற அளவுக்கு கூட அவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. அதனால அரசு அதை அவங்களுக்கே விட்டுக் கொடுத்துச்சு. அங்கே யாரும் போகக் கூடாதுன்னு சட்டமும் போட்டுச்சு.
ஜான் : அரசோட சட்டம் இருக்கட்டும்பா.. இயேசுவைப் பற்றி உலக ஜனங்கள் எல்லாருக்கும் சொல்லணும்ன்னு கடவுளோட சட்டம் இருக்கே.. தெரியாதா ?
ந 2 : அது தெரியும்யா.. ஆனா அதை அந்த தீவுல செயல்படுத்த முடியாது.
ஜான் : சரி.. நீங்க யாரும் வரவேண்டாம்.. என்னை மட்டும் கரையில இறக்கி விடுங்க போதும்.
ந 1 : அந்த தீவு மக்களோட கண்ணுக்கெட்டின தூரத்துல எங்க நின்னாலும் அம்பு எய்து கொன்னுடுவாங்க. கடலுக்குள்ள ஒரு கிலோ மீட்டர் தூர கூட அவங்க அம்பு பாஞ்சு வரும். அதனால நாங்க அங்க வரல.
ஜான் : சரி.. என்னை கரைக்கு கொண்டு போக வேண்டாம். கடல்ல ஒண்ணோ ரெண்டோ கிலோ மீட்டர் தூரத்துல இறக்கி விடுங்க.. நான் நீந்தி போயிடறேன். எப்படியாச்சும் நான் அவங்களை சந்திக்கணும்.
ந 2 : என்னாச்சு உங்களுக்கு ? இது ஒன்வே.. திரும்ப முடியாது. ஏன் பிடிவாதம் புடிக்கிறீங்க ?
ஜான் : நான் அவங்களுக்கு இயேசுவை சொல்லி, அவங்க கூடவே தங்கி வாழப் போறேன்.
ந 1 : சரி.. அப்போ வேற ஆளைப் பாருங்க… எங்களுக்கு வேற வேலை இருக்கு
ஜான் : நீங்க கேக்கற பணத்தை தரேன்.
ந 2 : நீங்க பத்தாயிரம் ரூபா குடுத்தாலும் வேணாம்.. ஆளை விடுங்க.
ஜான் : இருபத்தையாயிரம் ரூபா தரேன்.. என்னை கடலுக்குள்ள இறக்கி விடுங்க
( மூவரும் ஒருவருக்கொருவர் பார்க்கின்றனர் )
ந 1 : பணம்.. இருக்கட்டும்.. இது ரொம்ப ரிஸ்க்.. உங்க உயிருக்கு படு பயங்கர ஆபத்து.
ஜான் : அந்த தீவுல இயேசு அறிவிக்கப்படணும். அதான் என்னோட ஒரே இலட்சியம். பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க. இதுக்காகத் தான் நான் அமெரிக்கால இருந்து வந்திருக்கேன்.
ந 3 : ம்ம்ம்.. நாங்க பக்கத்துல இருந்து செய்ய வேண்டிய வேலைய, நீங்க மேல் நாட்டில இருந்து வந்து செய்ய நினைக்கிறீங்க.. சரி, உங்களுக்கு ஹெல்ப் பண்றோம். ஆனா விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது. எங்களை காட்டிக் கொடுக்கக் கூடாது. கடல்ல தூரமா தான் நிப்போம். ஓக்கேவா
ஜான் : டபுள் ஓகே.. ரொம்ப நன்றி…
/arc-anglerfish-syd-prod-nzme.s3.amazonaws.com/public/75DMJLUNBZANZLNOPL7QZPUOKA.jpg)
காட்சி 3
ந 1 : ஐயா.. அதோ தூரத்துல தெரியுதே.. அது தான் அந்த தீவு. நாங்க போட்லயே இருக்கோம். நீங்க போயிட்டு வாங்க.
ந 2 : கேர்ஃபுல்.. ஏதாச்சும் ஆபத்துன்னா தாமதிக்காம உடனே நீந்தி வாங்க.
ஜான் : கண்டிப்பா.. அந்த பையை எடுங்க..
ந 3 : அதுல என்ன இருக்கு.. ?
ஜான் : மீன்… இன்னும் கொஞ்சம் பரிசு பொருட்கள். அவங்களுக்குக் கொடுக்க.
ந 2 : ம்ம்.. சரி.. அது நல்ல ஐடியாவான்னு தெரியல..
ஜான் : கடவுள் நம்ம கூட இருப்பார்.. ( பைபிளை காட்டுகிறார் ) இது காப்பாற்றும்.
( கடலில் நீந்தி கரையருகே வரும் போது மக்கள் கையில் அம்புகளுடன் நிற்கிறார்கள். )
ஜான் : என் பேரு ஜான்… இயேசு நேசிக்கிறார். அவர் என்னை நேசிக்கிறார். உங்களையும் நேசிக்கிறார்.
காட்டுவாசிகள் : ஹய்யாகூய்ங்க்க்க்…
ஜான் : ஹய்யாகூய்ங்க்க்க்…
( காட்டுவாசிகள் சிரிக்கின்றனர் , அம்பை குறிவைக்கின்றனர் )
ஜான் : இதோ மீன்… ( ஒரு பெரிய மீனை தூக்கிப் போடுகிறார் )
( ஒரு பதின் வயதுப் பையன் அம்பை எடுத்து குறிபார்க்கிறான். கோபமாய் )
ஜான் : நோ.. இயேசு நேசிக்கிறார். இதோ நானும் உன்னை மாதிரி மனிதன் தான்… எனக்கும் இரண்டு கை இருக்கு, இரண்டு கால் இருக்கு ( சைகைகள் காட்டுகிறார் )
காட்டு : ஹய்யாகூய்ங்க்க்க்… ( ஒரு அம்பை எய்கிறான் அது ஜானின் நெஞ்சுக்கு வருகிறது. அங்கிருந்த பைபிளில் பதிகிறது. ஜான் பயந்து நீந்துகிறான்.
காட்சி 4

(ஜான் நீந்தி வந்து மீனவர்களுடன் இணைகிறான் )
ந 1 : என்னாச்சு என்னாச்சு..
ஜான் : ( பைபிளைக் காட்டுகிறார் பைபிளில் அம்பு தைத்திருக்கிறது. ) இந்த பைபிள் என்னை காப்பாத்திடுச்சு.. கடவுள் என்னை காப்பாத்திட்டாரு.
ந 2 : நல்ல வேளை.. பயந்துட்டே இருந்தோம். இனிமே இங்கே நிக்க வேண்டாம். அவங்க நீந்தி வந்தா, நாம காலி. சட்டுபுட்டுன்னு கிளம்பிடுவோம்…
ஜான் : நோ..நோ… நாம கொஞ்சம் தள்ளி நிப்போம். நாளைக்கு மறுபடியும் போய் பாக்கறேன்.
ந 3 : வாட்.. நாளைக்கா ? என்ன உங்களுக்கு புத்தி பேதலிச்சு போச்சா. மரணத்தோட வாயில இருந்து வெளியே வந்திருக்கீங்க. மறுபடியும் உள்ளே போய் மாட்ட போறீங்களா ?
ஜான் : நண்பா. ஒரு சின்ன எதிர்ப்புக்கே பயந்து போய் பின்வாங்கினா, இயேசுவைப் பற்றி யாருக்கும் சொல்ல முடியாது. ஸ்தேவானை கல்லால எறிஞ்சு கொன்னாங்க.. சாகும்போ கூட சிரிச்சுகிட்டே செத்தாரு.
ந 1 : ஐயா.. இங்கே நிலமை கொஞ்சம் வித்தியாசம். நாம என்ன பேசறோம், நல்லது பேசறோமா கெட்டது பேசறோமான்னே அவங்களுக்கு தெரியாது. இந்த நிலமைல மறுபடியும் போறது சாவுக்கு நாமளே சொல்லி அனுப்பற மாதிரி. வலையில நாமளே போய் விழற மாதிரி. தூண்டில்ல வேணும்ன்னே போய் சிக்கற மாதிரி.
ஜான் : நீங்க நல்லா பேசறீங்க.. ஆனா உலகெங்கும் போய் நற்செய்தியைச் சொல்லச் சொன்னாரு இயேசு. மொழியை படைச்சவரும் அவர் தான், பிரிச்சவரும் அவர் தான். அவரோட அன்பு மொழிகளைக் கடந்தது. நாளைக்கும் போவேன்.
ந 2 : ஐயா.. பயமா இருக்கு… இது ரொம்ப ரிஸ்க்.
ஜான் : உண்மை தான். சிலுவையை சுமந்து கிட்டு தான் இயேசுவை பின்பற்ற முடியும். சிலுவையை விட்டுட்டு மீட்பர் இயேசுவை அறிவிக்க முடியாது. என்னால முடிஞ்ச அளவுக்கு சுமக்கறேன். ஆனா சாகக் கூடாதுன்னு நினைக்கிறேன்.
ந 1 : ஆமா. நீங்க சாகக்கூடாது.. வாங்க போலாம்.. நீங்க வந்திருக்கிற விஷயம் இப்போ அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு. இனிமேலும் போனா சாவு தான்
ஜான் : அதில்லை.. நான் சாகாம இருந்தா இயேசுவுக்கு பயனுள்ளவனா இருப்பேன். செத்துட்டா அதுக்கு மேல எதுவும் என்னால பண்ண முடியாதுல்ல. ஆனா அவரோட அன்பை சொல்லப் போகும்போ ஒரு அம்பு தான் என்னை கொல்லும்ன்னா அதுக்கும் நான் தயார் தான்…
ந 2 : ஐயா.. நீங்க ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கறீங்க. வீட்ல ரொம்ப வருத்தப்படுவாங்க.
ஜான் : நான் ஒரு லெட்டர் எழுதி வெச்சுடுவேன். நான் வரலேன்னா அவங்க கிட்டே அது சேரணும். நான் செத்தாலும் என்னைக் கொன்னவங்க மேல வீட்டுக்காரங்க கோபப்பபடக் கூடாது. கடவுள் மேல கோபப்படக் கூடாது. இயேசுவோட அன்பை விட்டு அவங்க என்னிக்குமே விலகக் கூடாது. இதையெல்லாம் எழுதி வெச்சிருக்கேன்.
ந 3 : ஐயா நீங்க ரொம்ப ரொம்ப தீவிரமான ஆளா இருக்கீங்க.
ஜான் : இயேசுவோட அன்பை ருசிபார்த்தவனால அதை பிறருக்குக் கொடுக்காம இருக்க முடியாது பிரதர். அவ்வளவு அதி அற்புதமானது அது. அந்த தீவுக்குள்ள இயேசுவோட பெயரை உரக்கச் சொன்னப்போ எனக்கே சிலிர்த்துடுச்சு. அந்த வார்த்தை வீணா திரும்பாது. கடவுளுடைய வார்த்தை நிறைவேற்ற வேண்டியதை நிறைவேற்றும்.
ந 1 : நீங்க சொல்றதையெல்லாம் கேக்கும்போ எனக்கே அங்கே வரணும்ன்னு தோணுது. ஆனா பயமா இருக்கு.
ஜான் : இல்ல.. நான் போயிட்டு வரேன். அந்த தீவு முழுக்க கிறிஸ்துவின் பெயர் பரவணும். அவங்க இறைவனைப் புகழணும். அதுக்கு ஒரு விதையா நான் அங்கே மடிந்தாலும் பரவாயில்லை.
ந 3 : எப்படி உங்களுக்கு இந்த ஊக்கம் வந்தது ? ஆச்சரியமா இருக்கு.
ஜான் : நான் பிறக்கறதுக்கு முன்னாடியே, ஏன் கருவாக உருவாகும் முன்னாடியே என்னை இந்த பணிக்காக கடவுள் தேர்ந்தெடுத்திருக்காரு. இறைவா உமக்கே புகழ். இந்த பணியை நான் வெற்றிகரமா செய்யணும். நாலு நாள்ல இந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய அறிமுகத்தை கொடுப்பேன்.
ந 2 : உங்களுக்காக செபிக்கிறோம் ஜாண்..
ஜான் : நன்றி சகோதரா. திருவெளிப்பாடு நூல் சொல்லுது, “யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக் குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது.” என்று பாடினார்கள். அந்த கூட்டத்துல இந்த மக்களை நான் பாக்கணும். இயேசுவின் பெயர் நுழையாத நாடே இருக்கக் கூடாது.
ந 3 : ஆல் தி பெஸ்ட் சகோதரா…
*
தொடர் காட்சி
*
ஜான் : எனக்கு என்ன நடந்தாலும் நீங்க கோபப்படாம, அமைதியா இறைவனுக்குக் கீழ்ப்படிந்த ஒரு வாழ்க்கையை வாழுங்க. நான் நீந்தப் போறேன்.
( ஜான் அந்த தீவுக்கு செல்கிறார் )
ஜான் : மக்களே.. என் பெயர் ஜான். நான் மீண்டும் உங்க கிட்டே வந்திருக்கேன். இயேசு அன்பு செய்கிறார். உங்களை நேசிக்கிறார். அவரால் தான் மீட்பு உண்டு.
( காட்டு வாசிகள் சூழ்கின்றனர், புரியாத மொழியில் பேசுகின்றனர் )
ஜான் : இயேசு.. பைபிள் .. இதோ இது தான் பைபிள். இது தான் கடவுளின் வார்த்தை. சொல்லுங்க.. இயேசு அன்பு செய்கிறார்.
( ஒருவன் அவரை குறிவைக்கிறான். அம்பு அவரை நோக்கி நீள்கிறது )
ஜான் : நோ.. வேண்டாம். நான் இயேசுவை அன்பு செய்கிறேன். நீங்களும் அன்பு செய்யணும்.
( அம்பு பாய்கிறது )
ஜான் : ( விழுகிறார் ) நான் உங்களை மன்னிச்சுட்டேன். இயேசுவே இவர்களை மன்னியும். இயேசு உங்களையும், என்னையும் அன்பு செய்கிறார். இயேசு. அ…அன்…அன்பு செய்கிறார்……..Soli deo glorஇஅ ( உரக்கக் கத்தி இறந்து விடுகிறார் )
( ஆதிவாசிகள் கூடி அவரை இழுத்துச் செல்கின்றனர் )
காட்சி 5

( சிறுமிகளும் அந்த நபரும் )
சி 1 : ஐயோ.. கேட்கவே படு பயங்கரமா இருக்கே … அப்புறம் ஜானுக்கு என்ன ஆச்சு ?
நபர் : ஜானை அவங்க கொன்னுட்டாங்க. சாவு வரும்ன்னு தெரிஞ்சே அவர் போனாரு. வெறும் 26 வயசான இளைஞன் அவர். சாகும்போ கூட கவலைப்படல. மக்கள் மீட்கப்படணும்னு தான் ஆசைப்பட்டாரு. அவரோட உடலைக் கூட நம்மால மீட்க முடியல.
சி 2 : ரொம்ப அதிர்ச்சியான கதை ஐயா… எவ்ளோ பெரிய மன உறுதி
நபர் : ஊழியம்ங்கறது அது தான்மா… அது டூர் கிடையாது. அது ஒரு பணி. இறைவன் நமக்கு இட்ட பணி. தூர இடத்துக்கு போய் செய்றது மட்டும் ஊழியம் கிடையாது. உங்க பக்கத்துல இருக்கிற தோழிக்கு இயேசுவைப் பற்றி சொல்றது இறைபணி தான்.
சி 3 : ரொம்ப வெட்கமா இருக்கு அங்கிள். அவரோட ஒப்பிடும்போ ஆயிரத்துல ஒரு பங்கு கூட நாங்க கஷ்டப்படல. ஆனா எவ்வளவு குற்றம் சொல்லியிருக்கோம். ஜீசஸ் பிளீஸ் ஃபார்கிவ்.. எங்களை மன்னிச்சிடுங்க.
நபர் : கடவுள் கிட்டே உங்களை ஒப்படைச்சீங்கன்னா, அவரு உங்களை சரியான வகையில பயன்படுத்துவார். அந்த பாதையில என்ன கஷ்டம் வந்தாலும் அதை கடவுள் கிட்டே சொல்லிடுங்க. தூய ஆவியானவரோட பலம் உங்களை நிரப்பும்.
சி 1 : ரொம்ப நன்றி அங்கிள்.
நபர் : ஆமா ஏதோ ஊழியம் பற்றி சொல்லிட்டிருந்தீங்க.. போறீங்களா ?
சி 3 : என்ன இப்படி கேட்டுட்டீங்க… கண்டிப்பா போவோம். எவ்வளவு பேருக்கு இயேசுவைச் சொல்ல முடியுமோ அவ்வளவு பேருக்கு சொல்லுவோம்.
நபர் : மகிழ்ச்சிம்மா.. அதே போல, உங்க வார்த்தையில மட்டுமில்ல, வாழ்க்கையிலயும் இயேசுவைப் பிரதிபலிக்கணும். அவருக்கு புடிக்காத எந்த செயலையும் செய்யாதீங்க ,சரியா..
சி 2 : சரி அங்கிள்.. நன்றி.
*
Like this:
Like Loading...