எனது கிறிஸ்தவம் சார்ந்த எழுத்துகளுக்கான தளம் இது. கவிதைகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள் என கிறிஸ்தவம் சார்ந்தவற்றை நீங்கள் இங்கே வாசிக்கலாம்.
வாழ்க்கை என்பது ஒரு யாத்ரீகனின் பயணத்தைப் போன்றது. இதில் கவனிப்புகளே பிரதானம். பயணத்தின் நீளங்களையோ, அகலங்களையோ, ஆழங்களையோ, உயரங்களையோ நிர்ணயம் செய்து விடமுடியாத சாலை நமக்கு முன்னால் நீண்டு கிடக்கிறது.
இடுக்கமான நெரிசல் நிறைந்த சந்து ஒன்றில் காரோட்டும் கவனம் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை ஆக்கிரமிக்கிறது. யாரையும் காயப்படுத்தாமலும், காயப்படுத்துபவர்களுக்கு எதிராய் குரல் எழுப்பத் தயங்காமலும், உடன் பயணிப்போருடன் அளவளாவி சிரிக்க முரண்டு பிடிக்காமலும் தொடர்கிறது எனது பயணம்.
இந்தத் தளத்தில் நீங்கள் கம்பனின் கவிதைக் கூறுகளையோ, சேக்ஸ்பியரின் ரசனைக் கூறுகளையோ சந்திக்காமல் போகலாம், ஆனால் நீங்கள் நினைக்கும் சிலவற்றைச் சொல்லியிருப்பேன். காரணம் நான் வானத்திலிருந்து பூமியைப் பார்க்கும் வல்லூறல்ல, பூமியிலிருந்து பூமியைப் பார்க்கும் சிறு மண்புழு.
வாழ்க்கையும் எழுத்துகளும் அன்பை மட்டும் முன்னிறுத்துகையில் வணக்கத்துக்குரியவை ஆகி விடுகின்றன. வெறுப்பையோ, பிரிவினைகளையோ உருவாக்காமல் நட்பையும், அன்பையும், தகவல்களையும் பகிரவேண்டும் என்பதே என் எழுத்துகளின் நோக்கம். காலத்தின் பாதையில் பல எழுத்துகள் தவறிழைத்திருக்கலாம், காயப்படுத்தியிருக்கலாம், பாதை விலகியிருக்கலாம். நண்பர்களாகிய உங்களிடம் அதற்காகப் பணிவான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்னமாய் மாறி அல்லன விடுத்து நல்லன எடுத்து நட்புடன் தொடர்க என அன்புடன் வேண்டுகிறேன்.
நூல்கள்
இதுவரை 37 நூல்கள் வெளியாகியுள்ளன. இதில் 9 கவிதைத் தொகுதிகள், 11 கட்டுரை நூல்கள், 3 சிறுகதை நூல்கள், 10 வரலாற்று நூல்கள், 4 வழிகாட்டும் நூல்கள் அடங்கும் தொடர்கள் தினத்தந்தி – சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம், கம்ப்யூட்டர் ஜாலம், பைபிள் மாந்தர்கள் வெற்றிமணி ஜெர்மனி – சேவியர் பக்கம் : கட்டுரைகள் தேசோபகாரி – வேர்களை விசாரிப்போம் பெண்ணே நீ, தமிழோசை : கட்டுரைத் தொடர் படைப்புகள் வெளியான இதழ்கள் தினத்தந்தி, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், பசுமை விகடன், சக்தி விகடன், மனோரமா இயர் புக், ஹெல்த்கேர், மனோரமா ஹையர் எட்ஜுகேஷன், புதிய தலைமுறை கல்வி, தமிழ் இந்து நாளிதழ், கல்கி, குமுதம், மங்கையர் மலர், நம்ம அடையாளம், குங்குமச் சிமிழ் கல்வி, தை, புதிய பார்வை, த சண்டே இந்தியன், பெண்ணே நீ, தேவதை, தென்றல் (அமெரிக்கா), சிவத் தமிழ் ( ஜெர்மனி ), வெற்றிமணி ( லண்டன்/ஜெர்மனி), சிங்கை நாளிதழ், இலங்கை நாளிதழ் ஆடியோ/வீடியோ ஆல்பம்(பாடல்கள்) ஒன்வே. பைரவன் , மன்மதன், யூகே 2 மதுரை , காதல் வேகம், யாரிவன், தை விருதுகள் / அங்கீகாரங்கள் 1. கௌரவ டாக்டர் பட்டம் ( ஜெருசலேம் பல்கலைக்கழகம் : கிறிஸ்தவ இலக்கியம் ) 2. வைரத்தின் நிழல்கள் : சன் குழு கவிதைப்போட்டி முதல்பரிசு 3. பாரதிதாசன் : சர்வதேச கவிதைப்போட்டி : இரண்டாம் பரிசு 4. பரம எழுத்தோவியர் : ( எருசலேம் பல்கலைக்கழக பட்டம் ) 5. சிறந்த நூல் விருது : கவிதை உறவு, இயேசு என்றொரு மனிதர் இருந்தார், அன்னை தெரசா 6. சர்வதேச அறிவியல் புனைக்கதைப் போட்டியில் முதல் பரிசு 7. கிறிஸ்தவ தமிழ் இலக்கியப் பேரவை விருது தொலைக்காட்சி: 1. ஜெயா தொலைக்காட்சி – காலை மலர் 2. மக்கள் தொலைக்காட்சி – சன்னலுக்கு வெளியே, தன்னம்பிக்கை உரைகள், வேலைக்கான வழிகாட்டுதல். குறும்படங்கள்: 1. என்னவளும் சீதையே ( பாடல்கள் ) 2. இன்கமிங் ( வசனம் ) |