Posted in Articles, Songs

வருகைப்பாடல்

( ஆல்பம் : தங்கத்தாமரையே
இசை : ஆனந்த கீதன்
பாடல் : சேவியர் )

Related image
பல்லவி

ஆலய வாசல் நுழைவோமா
ஆண்டவரை நாம் அழைப்போமா ?

திருச்சபையாய் நாம் வருவோமா
திருப்பலி தனிலே இணைவோமா ?

ஆலய பீடம் வருவோமே
ஆண்டவர் பாதம் அமர்வோமே ?

இறைவன் திருமுன் வருவோமே ?
நிறைவின் பயனை அடைவோமே ?

அனுபல்லவி

ஆதவன் தரிசனம் பெறுவதற்கு
தாமதம் இனியேன் வருவதற்கு !

சரணம் 1

உலகின் போக்கில் வாழ்பவற்கு
வழிகள் எங்கும் இருளிருக்கும்
உந்தன் வாக்கில் வாழ்பவர்க்கு
பாதை முழுதும் ஒளியிருக்கும்

தாகம் கொண்ட மானாக
வருவேன் உம்மிடம் தானாக !
உந்தன் கண்ணின் மணியாக
காப்பாய் இறைவா இனிதாக

சரணம் 2

நித்திரை பொழுதும் நீங்காமல்
பத்திரமாகக் காப்பவர் நீர்
தீயின் செடியிலும் இருப்பவர் நீர்
நீரின் தோளிலும் நடப்பவர் நீர்.

தவறிப் போன ஆடாக
அலைந்தேன் வாழ்வில் வீணாக
வருவாய் இறைவா வரமாக
அணைக்கும் அன்னைக் கரமாக

*

பாவம் எதையும் பாராமல்
பரிவாய் எம்மைக் காப்பவர் நீர்
தூரம் சென்றே ஒளிந்தாலும்
துயராய் தேடி வருபவர் நீர் !

திரிந்தேன் உலகில் தனியாக
திரும்பினேன் திருந்திய மகனாக
வாழ்ந்தேன் உலகில் களையாக
ஏற்பாய் உந்தன் கிளையாக

*

Posted in Songs

பே ரா னந்தமே

Image result for girl jumping with joy

பே ரா னந்தமே
நா னே அடைந்தேன்

சிறு விண்மீனைப் போல்
வானில் மிதந்தேன்

மென் தென்றலைப் போல்
பூவைத் திறந்தேன்

என் புலன் ஐந்திலும்
சோகம் மறந்தேன்

என் இயேசு என் பெயர் சொல்லி அழைத்தார்
என் பாவத்தைக் கொன்று மீட்பளித்தார்

தாகம் கொண்ட மா னானேன்
நீர் நிலையில் என்னைச் சேர்த்தார்
நெஞ்சில் ஜீவ ஊற்றும் காட்டினார்

பாவம் கொண்ட தீ ஆனேன்
தூய கையால் என்னைக் காத்தார்
விண்ணகத்தின் வாழ்வைக் காட்டினார்

வீணானவள் நானே
வீணையாய் மாற்றினார்
அன்பாலே என்னை மீட்டி தேவ கானம் கேட்கிறார்

Posted in Songs

நெஞ்சமே

Image result for christmas shepherd

நெஞ்சமே
நீ புகழ்ந் திடு
தேவனை இ டைவிடாமலே

இது
தேவ கானம் கேட்கும் நேரமே
இனி காலை மாலை எப் போதுமே

நெஞ்சமே
நீ மகிழ்ந் திடு
தேவனை ம றந்திடாமலே

இது
தேவன் தந்த வாழ்க்கை மண்ணிலே
நாம் நாளை செல்வோம் விண் மீதிலே

என் பாதையின் வெளிச்சம்
நான் தங்கிடும் விருட்சம்
என் பாவத்தின் ரட்சிப்பும் நீரே ..

நீர் காட்டிடும் இரக்கம்
என் நெஞ்சினில் இருக்கும்
உ னைச்சேர விருப்பம் என்றும்..

தேவனே
கண் நோக்கிப் பாரும்
பாவங்கள் ப றந்து-ஓடிடும்

நீ ரோடை ஓடும் மானாய் ஆவேனே
உம் மேய்ச்சல் ஆடாய் மாறு வேனே

தந்தையே
உம் கைகள் நீட்டும்
மழலையாய் மார்போடு சேர்வேனே

நான் பற்றிக் கொள்ளக் கரமும் தருவீரே
நான் கேட்கும் வரமும் தருவீர் நீரே

நான் பட்ட மரம் ஆனேன்
வேர் கெட்ட மரம் ஆனேன்
பேர் சொல்லி என்னை அழைத் தீரே

உம் வாக்கினை மறந்தேன்
என் போக்கிலே அலைந்தேன்
நீர் தேடி வந்து இரட்சித் தீரே


வானமே
வ ணங்கிப் பாடு
பூமியே பணிந்து பாடிடு

வான் பூமி தந்த தேவன் தந்தையே
மூ வொரு தேவன் நம் தேவனே

கானமே
க ரைந்து பாடு
ஜீவனே இணைந்து பாடிடு

தா லந்து தந்த தேவன் கர்த்தரே
தாழ் பணியும் நெஞ்சம் நித்த முமே

உம் கண்ணின் மணி ஆவேன்
உம் திராட்சைச் செடி ஆவேன்
உம் பாதம் பற்றிக் கொள்ளுவேனே

யோர் தானைப் போலப் பாய்வேன்
யோ வானைப் போலச் சாய்வேன்
உம் நெஞ்சில் தூக்கம் கொள்ளுவேனே


காலையில்
கண் விழித் திடு
தந்தையைப் புகழ்ந்து பாடிடு

இக் காலை நேரம் தேவன் கருணை
இந் நாளில் செய்வோம் நன்மை நன்மை.

மாலையில்
தாழ் பணிந் திடு
நன்றியால் துதித்துப் பாடிடு

நித் திரை நேரம் கூட ஏந்துவார்
பத் திரமாகத் தாங் கிடுவார்.

முள் முடியாலே மீட்டார்
கை மூடிடாமல் காத்தார்
ஓ டோடி வந்து தூக்கிக் கொண்டார்

என் நெஞ்சமதைக் கேட்டார்
நீ அஞ்சிடாதே என்றார்
கண் துஞ்சிடாமல் காத்துக் கொண்டார்.

Praise the Lord
நா வில் எப் போதும்
நெஞ்சமே நீ சொல்ல வேண்டுமே

இவ் வாழ்வு தேவன் நேசம் சொல்லத்தான்
நாம் தேவன் அண்டைச் சென் றிடத் தான்

Praise the Lord
சொ ல்லு எப்போதும்
நெஞ்சமே நீ மகிழ வேண்டுமே

இவ் வாழ்வு அன்பை எங்கும் காட்டத் தான்
கனி நல்கும் அத்தி மரமாகத் தான்.

நீ மண்ணில் வந்த தெய்வம்
தீ செடியில் வந்த வடிவம்
நீ ங்காத கருணை உருவம் தானே..

நீ பணிவைச் சொன்ன இறைவன்
நீ துணிவைத் தந்த தலைவன்
மீட் பான விண்ணின் ஒளியும் நீயே

Posted in Songs

கிறிஸ்மஸ் பாடல்

Image result for baby jesus

பூமி மீதில் பூவாய் வந்த பாலகனே
பாவ நெஞ்சம் மீட்க வந்த மாபரனே

தூக்கச் சொல்லித் தாலாட்டு
உனக்குச் சொல்லல் விரும்பாய் நீ
விழிக்கச் சொல்லி எங்களுக்கு
விளக்கம் சொன்ன அன்பன் நீ.

0

தொட்டில் மீது தவழாமல் – புல்
கொட்டில் மீதில் தவழ்ந்தது ஏன்
ஏழை நெஞ்சம் எப்போதும் – வர
வேற்கும் என்பதைச் சொல்லிடவோ ?

நாட்டுத் தலைவரை நாடாமல் – சிறு
ஆட்டின் இடையரைப் பார்த்தது ஏன்
மதிப்பு என்பது மாளிகையால் – வர
முடியாதென்பதைச் சொல்லிடவோ ?

இந்த ஏழை நெஞ்சம் பாராய் நீ – உடன்
உள்ளே தரிசனம் தாராய் நீ.
இந்த சின்ன மனதைக் காண்பாய் நீ – சில
தூதர் செய்திகள் சொல்வாய் நீ

வா வென்னும் வார்த்தை மட்டும்
எந்தன் நெஞ்சம் பாடுமே
வா வென்ற உந்தன் குரலில்
பாதம் தொடந்து ஓடுமே

0

உந்தன் பிறப்பால் வானத்தின் – விண்
மீனுக்கும் தான் வால் வந்ததேன்
வானத்துக்கும் மண்ணுக்கும் – ஓர்
வெளிச்சப் பாலம் போட்டிடவோ ?

வானில் இருந்து ஆளாமல் – புவி
மீதில் வந்து பிறந்தது ஏன் ?
வெறும் வார்த்தை மீட்பைத் தாராது – நல்
வாழ்வே தருமென சொல்லிடவோ ?

இந்த பாவ நெஞ்சம் பாராய் நீ – உன்
ஒளியால் என்னை நிறைப்பாய் நீ
இந்த பாறை மனதைக் காண்பாய் நீ – நல்
சிலையாய் என்னைச் செய்வாய் நீ.

வா வென்னும் வார்த்தை மட்டும்
எந்தன் நெஞ்சம் பாடுமே
வா வென்ற உந்தன் குரலில்
பாதம் தொடந்து ஓடுமே

0

Posted in Songs

கிறிஸ்தவப் பாடல்

Image result for pray to Jesus

இடைவிடாமல் துதி செய்
இடைவிடாமல் துதி செய்
இடைவிடாமல் துதி செய்


உன்னை என்னை படைத்தவர் அவர்
உள்ளங் கையில் வைத்தவர் அவர்
கண்ணின் மணியாய்க் காத்தவர் அவர்
இடைவிடாமல் துதி செய்

காலை மாலை இருப்பவர் அவர்
காலம் தோறும் வசிப்பவர் அவர்
பாவம் தன்னை வெறுப்பவர் அவர்
இடைவிடாமல் துதி செய்

காய்க்க மறுக்கும் அத்தி மரத்தையும்
காக்கும் மென்மை மனதுண்டு
தாய்க்கும் மேலாய் அன்பை நெஞ்சில்
தேக்கும் தேவ குணமுண்டு

கொடிய பாவம் செய்கிற போதும்
மன்னிக்கும் கருணை மனமுண்டு
அடிக்கடி நழுவி விழுகிற போதும்
தூக்கிடும் கைகள் அவர்க்குண்டு

இடைவிடாமல் துதி செய்