Posted in Story

Kids : Jacob’s Dream

Image result for Jacob's dream

எல்லோருக்கும் அன்பின் வணக்கம்.

எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு கதையை நானும் ஒருதடவை உங்களுக்குச் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன்.

விசுவாசத்தின் தந்தை யாருன்னு கேட்டா ஆபிரகாம்ன்னு டக்குன்னு சொல்லுவீங்க. அவரோட பையன் தான் ஈசாக். ஈராக் ரபேக்காவை கல்யாணம் பண்ணிகிட்டாரு. அவருக்கு இரண்டு பசங்க. மூத்தவன் ஏசா, இளையவன் யாக்கோபு.

யாக்கோபு அம்மாவோட வயிற்றில இருக்கும்போதே அண்ணன் கூட வம்பு பண்ணிட்டிருந்தான். பிறக்கும்போ, அவனோட காலைப் புடிச்சிட்டே பொறந்தான். வளர்ந்தப்போவும் இரண்டு பேருக்கும் நல்ல ஒற்றுமை இல்லை. ஏசா டாடி செல்லம். ஏன்னா நல்லா வேட்டையாடி சமைச்சு கொடுப்பான். யாக்கோபு மம்மி செல்லம். வீட்லயே இருப்பான்.

ஈசாக்குக்கு வயசான காலத்துல மூத்த மகனை கூப்டாரு “ஏசா, நீ போய் வேட்டையாடி அதை எனக்கு சமைச்சு கொடு. அதைச் சாப்டுட்டு உனக்கு ஆசி வழங்குவேன்” ந்னு சொன்னாரு. அவன் ஓகே ந்னு சொல்லிட்டு கிளம்பினான். ஆனா அவனோட அம்மா நைஸா ஆட்டுக்கறி சமைச்சு யாக்கோபு கிட்டே கொடுத்தனுப்பி “நான் ஏசா” ந்னு பொய் சொல்லி ஆசீர்வாதத்தை வாங்கிட்டான்.

ஏசா விஷயத்தைக் கேள்விப்பட்டு ரொம்ப டென்ஷனாயிட்டாரு. அதனால யாக்கோபு அந்த நாட்டை விட்டு ஓடி காரான் ங்கற இடத்துக்கு போனாரு. போற வழியில நைட் ஆனதும் படுத்து தூங்கினாரு. ஒரு கல்லை எடுத்து தலையணை மாதிரி வெச்சுட்டு தூங்கினாரு.

த‌லைய‌ணை சாஃப்டா இல்லேன்னா க‌ல்லு மாதிரி இருக்குன்னு நாம‌ சொல்லுவோம். இவ‌ரு க‌ல்லையே த‌லைய‌ணையா வெச்சு தூங்கியிருக்காரு. தூங்கும்போ ஒரு க‌ன‌வு. ஒரு ஏணி பூமியில‌ நிக்குது. ம‌றுமுனை வான‌த்துல‌ நிக்குது. தூத‌ர்க‌ள் அதுல‌ ஏறி இற‌ங்கிட்டே இருக்காங்க‌. ஆண்ட‌வ‌ர் அத‌ன் மேல‌ நின்னுட்டு யாக்கோபுக்கு ஆசி வ‌ழ‌ங்கினார்.

“இந்த‌ நிலத்தை நான் உன‌க்கு த‌ருவேன். உன் ச‌ந்த‌தி ம‌ண‌ல் போல‌ எண்ண‌ முடியாத‌தா இருக்கும். நீ எங்கே போனாலும் நான் உன‌க்கு காவ‌லா இருப்பேன். க‌டைசில‌ இங்கே கொண்டு வ‌ந்து சேப்பேன்” ந்னு சொன்னாரு.

யாக்கோபு தூங்கம் தெளிஞ்சு எழும்பினாரு. “உண்மையிலேயே க‌ட‌வுள் இங்கே இருக்காரு. என‌க்கு அது தெரியாம‌ போயிடுச்சே. இது தான் க‌ட‌வுளோட‌ வீடு. வான‌த்தின் வாச‌ல்” ந்னு சொல்லி த‌ன்னோட த‌லைய‌ணைக் க‌ல்லை அங்கே நாட்டினாரு. “இந்த‌ இட‌த்தை லூசுன்னு சொல்றாங்க‌, உண்மையில் இனிமே இது பெத்தேல்” ந்னு பேரு போட்டாரு.

“நாம் போற‌ வ‌ழியில‌ க‌ட‌வுள் என்னைப் பாதுகாத்து, சாப்பாடெல்லாம் த‌ந்து ப‌த்திர‌மா வீடு திரும்ப‌ வ‌ழி செஞ்சாருன்னா அவ‌ர் தான் என் கட‌வுள். நான் ப‌த்துல‌ ஒரு பாக‌ம் காணிக்கை அவ‌ருக்குக் கொடுப்பேன்” ந்னு யாக்கோபு உறுதி செஞ்சாரு.

த‌ன்னோட‌ அப்பாவையும், ச‌கோத‌ர‌னையும் ஏமாத்திட்டு வ‌ர‌ யாக்கோபை க‌ட‌வுள் திட்ட‌லை. சாப‌ம் கொடுக்க‌ல‌. த‌ன்னோட‌ அன்பும், ஆசீர்வாத‌மும் இருக்கும்ன்னு உறுதி மொழி கொடுத்தாரு. யாக்கோபு செஞ்ச‌ த‌ப்புக்கு பல‌ன் அவ‌ரோட‌ மாமா லாபான் வீட்ல‌ அனுப‌விக்க‌ப் போறாருன்னும் க‌ட‌வுளுக்குத் தெரியும். அந்த‌ க‌ஷ்ட‌த்துக்கு முன்னாடியே த‌ன்னோட‌ முடிவைக் க‌ட‌வுள் யாக்கோபிட‌ம் சொல்லி அவ‌ரை உறுதிப்ப‌டுத்த‌றாரு.

அன்னிக்கு அந்த‌ ஏணியோட‌ மீனிங் என்னான்னு யாக்கோபுக்கு தெரிய‌ல‌. இன்னிக்கு ந‌ம‌க்குத் தெரியும். அந்த‌ ஏணி தான் இயேசு. வான‌த்துக்கும் பூமிக்கும் பால‌ம் போட்ட‌வ‌ர் அவ‌ர் தான். “வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” ந்னு இயேசு, யோவான் 1 ‍ 51 ல‌ இதுக்கு விள‌க்க‌ம் சொல்லியிருக்காரு.

அது ம‌ட்டும் இல்லாம‌, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” ந்னும் இயேசு தெளிவா சொல்லியிருக்காரு. வானத்துல இருந்து மனுஷனா இயேசு கீழே இறங்கி வந்தாரு. பூமியில இருந்து நாம அவர் மூலமா வானத்துக்கு ஏறிப் போக முடியும்.

யாக்கோபு க‌ண்ட‌ க‌ன‌வு ந‌ம‌க்கு சொல்ற‌து என்ன‌ன்னா ? இயேசு கிறிஸ்துவாகிய‌ ஏணியை ந‌ம்பி, அவரை அன்பு செய்து ந‌ம்முடைய‌ வாழ்க்கையை வாழ‌ணும். அப்போ ஏஞ்ச‌ல்ஸ் க‌ட‌வுளோட‌ ஆசீர்வாத‌த்தை ந‌ம‌க்கு கொண்டு வ‌ருவாங்க‌. க‌ட‌வுள் கிட்டே போற‌துக்கு ந‌ம‌க்கு வேற‌ ஏணியே கிடையாது.

யாக்கோபு நிறைய‌ வ‌ருஷ‌ம் உல‌க‌ செல்வ‌த்துக்காக‌ ஓடி ஓடி, க‌டைசில‌ இறைவ‌ன் போதும்ன்னு வ‌ந்து நின்னாரு. அப்போ தான் அவ‌ர் பேரு இஸ்ரேல் ஆச்சு.

ச‌ண்டே ஸ்கூல் ஸ்டுட‌ன்ஸ் ஆகிய‌ நாமும் இயேசுவையே ப‌ற்றியிருக்க‌ணும், யாக்கோபு க‌டைசில‌ எல்லாத்தையும் விட்டு க‌ட‌வுளை தேடினாரு. நாம‌ க‌டைசி வ‌ரைக்கும் வெயிட் ப‌ண்ணாம‌ முத‌ல்ல‌யே க‌ட‌வுளைத் தேட‌ணும்.

யாக்கோபின் க‌ன‌வு, ந‌ம‌க்கு விழிப்பைத் த‌ர‌ட்டும்ன்னு சொல்லி விடை பெறுகிறேன், ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.

Posted in Story

மீட்பின் பயணம்

Image result for deliverance from egypt

அவையோருக்கு அன்பின் வணக்கம். உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒரு கதையை மறுபடியும் ஒருதடவை உங்களுக்கெல்லாம் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன்.

உலக அதிசயத்துல ஒண்ணு தான் எகிப்திய பிரமிடு. ஆனா அதைவிடப் பெரிய அதிசயத்தைக் கடவுள் எகிப்தில் நடத்தினார். இது நடந்தப்போ பார்வோன் மன்னன் எகிப்தோட அரசரா இருந்தார். இஸ்ரயேல் மக்கள் அந்த நாட்டில் சுமார் ஆறு இலட்சம் பேர் இருந்தார்கள்.

எகிப்தியர்கள் இவர்களை அடிமைகளாக நடத்தினார்கள். பெரிய பெரிய கட்டிடங்கள் கட்றது, நகர்களை உருவாக்கறது எல்லாம் தான் இவங்க வேலை. ஒரு காலத்துல நல்ல மரியாதையோடு இருந்தவங்க பிறகு அடிமைகளா மாறிப் போனாங்க.

இஸ்ரவேல் மக்கள் கடவுளை நோக்கி மன்றாடினாங்க. அப்போ கடவுள் ஒரு ஹீரோவை க‌ண்டுபிடிச்சு அவ‌ர்க‌ளை மீட்க‌ அனுப்பினார். அவ‌ர் தான் மோசே. மோசே எதையும் த‌னியா செய்ய‌ல‌. க‌ட‌வுள் மோசே மூல‌மா எல்லா அதிச‌ய‌ங்க‌ளையும் செய்தார்.

ப‌த்து வித‌மான‌ வாதைக‌ள் பார‌வோனுடைய‌ நாட்டை மிர‌ட்டிச்சு. வேற‌ வ‌ழியில்லாம‌ பார்வோன் ம‌ன்ன‌ன் இஸ்ர‌யேல் ம‌க்க‌ளை நாட்டை விட்டு அனுப்பி வெச்சான். ம‌க்க‌ள் எகிப்தை விட்டு சுத‌ந்திர‌மா வெளியே வ‌ந்தாங்க‌.

போற‌ வ‌ழியில‌ க‌ட‌ல் குறுக்கே வ‌ந்துச்சு. அங்கே அவ‌ர்க‌ள் ரெஸ்ட் எடுத்தாங்க‌. அப்போ பார்வோன் ம‌ன்ன‌னுடைய‌ அர‌ண்ம‌னையில‌ விவாத‌ம்.

“ஏன் நாம‌ இந்த‌ அடிமைக‌ளை அனுப்பி வெச்சோம் ? இனிமே இந்த‌ வேலைக‌ளையெல்லாம் யாரு செய்ற‌து ?” பார்வோன் ம‌ன்ன‌ன் கேட்டான்

“ஆமா ம‌ன்ன‌ரே.. த‌ப்பு ப‌ண்ணிட்டோம், அவ‌ங்க‌ளை த‌ப்ப‌ விட‌க் கூடாது ” கூட‌ இருந்த‌வ‌ர்க‌ள் மூட்டி விட்டார்க‌ள்.

“என் தேரைப் பூட்டுங்க‌, எல்லா தேர்க‌ளையும் ரெடி ப‌ண்ணுங்க‌. நாம‌ போய் அந்த‌ அடிமைக‌ளை திரும்ப‌ இழுத்துக் கொண்டு வ‌ருவோம்” என்றான் ம‌ன்ன‌ன்.

ம‌ன்ன‌னோட‌ க‌ட்ட‌ளைப்ப‌டியே செய்தார்க‌ள். ப‌டை சீறிப்பாய்ந்த‌து. இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் க‌ட‌ற்க‌ரையில் கூடார‌ம‌டித்திருந்தார்க‌ள். ம‌ன்ன‌னோட‌ ப‌டை வேக‌மா வ‌ர‌தைப் பார்த்த‌தும் அவ‌ர்க‌ள் மிர‌ண்டு போனாங்க‌. மோசேயைப் பார்த்து திட்ட‌ ஆர‌ம்பிச்சாங்க‌.

“யோவ்.. என்ன‌ய்யா ? எகிப்ல‌ க‌ல்ல‌றைத் தோட்ட‌ம் இல்லேன்னா எங்க‌ளை இங்கே கூட்டிட்டு வ‌ந்தீங்க‌ ? என்ன‌ப்பா இப்ப‌டிச் செய்திட்டீங்க‌ளேப்பா” என்று ம‌க்க‌ளெல்லாம் க‌த்த‌ ஆர‌ம்பிச்சாங்க‌.

“நீங்க‌ ஏன் க‌வ‌லைப்ப‌ட‌றீங்க‌. க‌ட‌வுள் உங்க‌ளுக்காக‌ போரிடுவார். டென்ஷ‌ன் ஆகாதீங்க‌” என்றார் மோசே. க‌ட‌வுளின் தூத‌ர் இஸ்ர‌வேல‌ருக்கும், எகிப்திய‌ருக்கும் இடையே காவ‌லாய் நின்றார்.

அப்போ க‌ட‌வுள் மோசேயிட‌ம் பேசினார். “உன் கோலை க‌ட‌லின் மீது நீட்டு, கடலும் வ‌ழிவிடும்” என்றார்.

க‌ப்ப‌ல் இருந்தா க‌ட‌ல்ல‌ போலாம், காலால‌ எப்ப‌டி க‌ட‌ல்ல‌ போற‌து ? நீந்திப் போக இதென்ன‌ நீச்ச‌ல் குள‌மா ? என்றெல்லாம் மோசே யோசிக்க‌வில்லை. கையை நீட்டினார். காற்று வ‌ந்த‌து, என்ன‌ ஆச்ச‌ரிய‌ம் ! ஒரு க‌ட‌ல் இர‌ண்டாக‌ப் பிரிந்த‌து. க‌த்தியை வெச்சு த‌ண்ணியை ரெண்டா வெட்ட‌ முடியுமா ? காற்றை வெச்சே க‌ட‌வுள் வெட்டிட்டாரு.

இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் ரோட்ல‌ போற‌து மாதிரி க‌ட‌ல் ந‌டுவில‌ ந‌ட‌ந்து போனாங்க‌. பின்னாடியே எகிப்திய‌ர்க‌ள் இதைப் பார்த்து அச‌ந்து போனாங்க‌. ஆனாலும் வில‌கிப் போக‌ல‌. முட்டாள்த‌ன‌மா க‌ட‌லுக்குள்ளே தேர்க‌ளோடு பாய்ந்தாங்க‌. இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் ம‌றுக‌ரை அடையும் வ‌ரை க‌ட‌வுள் அமைதியா இருந்தாரு. ம‌று க‌ரையில‌ போய் சேர்ந்த‌தும், மோசே ம‌றுப‌டியும் கோலை க‌ட‌ல்ல‌ நீட்டினார்.

ஒதுங்கி நின்ன‌ த‌ண்ணீர் ம‌தில் உடைஞ்சு பாஞ்ச‌து. சுனாமி மாதிரி சீறி வ‌ந்த‌ த‌ண்ணியைப் பாத்த‌ எகிப்திய‌ர்க‌ள் த‌ப்பிச்சு ஓட‌ டிரை ப‌ண்ணினாங்க‌. ஆனா டூ லேட்.. த‌ண்ணி அவ‌ர்க‌ளை மூழ்க‌டிச்சுடுச்சு, எல்லாரும் செத்துப் போனாங்க‌. ஒருத்த‌ன் கூட‌ த‌ப்ப‌ல

இஸ்ர‌வேல் ம‌க்க‌ள் இதைப் பார்த்து விய‌ந்து போனாங்க‌. க‌ட‌வுளிட‌மும் மோசேயிட‌மும் அவ‌ர்க‌ள் ந‌ம்பிக்கை வெச்சாங்க‌.

இந்த‌ க‌தையில் நாம‌ க‌த்துக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் என்ன‌ன்னா ?

ந‌ம‌க்கு முன்னாடி க‌ட‌ல் போல‌ பிர‌ச்சினை வ‌ந்தாலும் ச‌ரி, ப‌டை போல‌ பிர‌ச்சினை வ‌ந்தாலும் ச‌ரி, தேர் போல‌ பிர‌ச்சினை விர‌ட்டி வ‌ந்தாலும் ச‌ரி க‌ட‌வுளை முழுமையா ந‌ம்பினால் அதிச‌ய‌மான‌ விடுத‌லை நிச்ச‌ய‌ம் கிடைக்கும். ந‌ம் ப‌ல‌த்தை அல்ல‌, இறைவ‌னின் ப‌ல‌த்தை ந‌ம்புவோம்.

என‌ கூறி விடை பெறுகிறேன் ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்

Posted in Story

சியர்ஸ் !!! ( லாசரும், பணக்காரனும் )

Image result for lazarus and rich manஐந்தாறு கோப்பைகள் செல்லமாய் மோதிக் கொள்ள உயர் ரக வைன் கோப்பைகளின் விளிம்பைத் தாண்டி வழிந்தது. மேஜை முழுதும் கமகமக்கும் உணவுப் பதார்த்தங்கள் நிரம்பியிருந்தன. தங்கள் மெல்லிய தொப்பைகளையும், பணக்காரத் தனம் புரளும் ஆடைகளையும் தட்டி விட்டுக் கொண்டு சிரித்தார்கள்.

‘லைஃப் ரொம்ப ஜாலியா இருக்கு… நீங்க எல்லாம் இங்கே வந்து டைம் ஸ்பென்ட் பண்றதுல எனக்கு ரொம்ப சந்தோசம்’

இப்படி அடிக்கடி விருந்து கொடுக்கிற உனக்கு தாண்டா நாங்க நன்றி சொல்லணும்.

வாழ்க்கை அனுபவிக்கறதுக்காக கடவுள் கொடுத்ததுடா… அதை நாம அனுபவிப்போம். நீங்க எல்லாம் என்னோட சகோதரர்கள், நண்பர்கள் உங்களுக்காக என் சொத்து முழுசையுமே செலவழிப்பேன்…கடவுள் தந்துட்டே இருப்பாரு.

ஆமா… இது தான் கடவுளோட ஆசீர்வாதம். உனக்கு அது நிறையவே இருக்கு.

யா..யா.. செல்வம் இருக்கிறது கடவுளோட ஆசீர்வாதத்தின் அடையாளம் தானே…

உண்மை தான்.. அதே போல தான், பிச்சைக்காரனா இருக்கிறது கடவுளோட சாபம்.

பிச்சைக்காரன்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது, உன்னோட வீட்டு கேட் பக்கத்துல ஒரு பிச்சைக்காரன் இருக்கிறதைப் பாத்தேன்.

வெளிகேட்டை தானே சொல்றே…

ஆமா..

அது தான் லாசர்.

ஆமா. அவனை எனக்கும் தெரியும். எப்போ வந்தாலும் அவனை அங்கே பாக்கறேன். அடிச்சு தொரத்த வேண்டியது தானே…

நோ..நோ.. அதெல்லாம் பண்ணக் கூடாது. அவன் பாட்டுக்கு அங்கே கெடப்பான். நாம பாட்டுக்கு இங்கே இருப்போம்.

இருந்தாலும்…

உங்க கிட்டே அவன் ஏதும் தொந்தரவு செஞ்சானா ? ஏதாச்சும் கேட்டானா ?

இல்லை..

அப்ப என்ன ? நானும் அவனுக்கு எதுவும் கொடுத்ததில்லை. அவன் அப்படி இருக்கிறது அவனோட சாபம். நாம இப்படி இருக்கிறது வரம். அவ்ளோ தான்.

அதுவும் சரிதான். இந்த கிராண்ட் பார்ட்டில அவனைப் பத்தி எதுக்கு நினைக்கணும்..

யா..ம்ம்ம்.. நல்லா சாப்பிடுங்க…

விருந்து தடபுடலாய் நடந்தது. வேலைக்காரர்கள் மது ஊற்றியும், சுடச் சுட உணவுகளைப் பரிமாறியும் களைத்துப் போனார்கள்.

‘ஹே… எனக்கு லைட்டா நெஞ்சு வலிக்குது’ செல்வந்தன் திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தான்.

ஏய்.. என்னாச்சுடா…

சீக்கிரம் அவனைப் பிடி…

ஓடிப் போய் நம்ம வைத்தியரை கூட்டி வா…

அந்த இடம் சட்டென பதட்டமானது.

ஒருவர் ஓடிப் போய் தனது ஒட்டகத்தின் மீதேறி மருத்துவரின் வீட்டை நோக்கி விரைந்தார். வாசலைக் கடக்கும் போது தான் கவனித்தார், வாசலில் லாசர்  விழுந்து கிடந்தான்.  அவனைச் சுற்றி நின்ற நாலைந்து நாய்கள் அவனது புண்களை நக்கிக் கொண்டிருந்தன. சில வினாடிகள் உற்றுப் பார்த்தவருக்கு விளங்கி விட்டது, லாசர் இறந்து போய்விட்டான். அவருக்கு குமட்டிக் கொண்டு வந்தது, ஒட்டகத்தை விரட்டினார்.

மருத்துவர் வந்தார். நாடித்துடிப்பைப் பிடித்துப் பார்த்தார். உதட்டைப் பிதுக்கினார்.

“சாரி… ரொம்ப லேட்.. உங்க நண்பர் இறந்துட்டாரு”

மருத்துவர் சொல்ல எல்லோரும் அதிர்ந்து போனார்கள். விஷயம் வெளியே கசிந்தது. உறவினர்கள் விரைந்து வர ஆரம்பித்தனர். அந்த இடம் பரபரப்பாகத் துவங்கியது.

“ஏய்.. இங்கே வா… நிறைய பேர் இங்கே வருவாங்க. அந்த கேட் பக்கத்துல லாசர்ன்னு ஒருத்தன் செத்து கெடக்கான் பாடியை தூக்கி தூரமா வீசிடுங்க. அந்த ஏரியாவைக் கிளியர் பண்ணிடுங்க‌” ஒருவர் சொல்ல பணியாளர்கள் விரைந்தனர்.

செல்வரின் வீடு அமளிதுமளியானது.

“வீட்டுக்கு வரவங்களுக்கு வயிறு நிறைய விருந்து போடாம அனுப்பினதே இல்லை. ரொம்ப நல்ல மனுஷன்”

“அவன் சகோதரர்கள் மேல அவ்வளவு பாசம். ரொம்ப நெருக்கமா இருந்தாங்க. இப்படி ஒரு குடும்பம் கிடைக்கிறது கடவுளோட அருள் தான். வெரி நைஸ் ஃபேமிலி மேன்”

“தவறாம ஓய்வு நாள் அனுசரிப்பாரு, ஆலயத்துக்கு கொடுக்க வேண்டியதுல‌ குறை வெச்சதே கிடையாது. மறை நூல் பற்றியெல்லாம் நல்லா தெரியும். ஆபிரகாமோட விசுவாசத்தை அடிக்கடி வியந்து பேசுவாரு. வெரி காட்லி மேன்”

“யார் கிட்டேயும் சண்டைக்கு போறதில்லை. யாரையும் பகைச்சுக்கிறதில்லை. ஒரு ரோல் மாடல் அவரு”

செல்வந்தரின் அறையில் அவரைப் பற்றிய பெருமைகளை சகோதரர்களும், நண்பர்களும் உறவினர்களும் சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

அதே நேரம்..

அந்த செல்வந்தர் நரகத்தின் நெருப்புக்குள் புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தார். நெருப்பு நாக்குகள் அவரைப் பொசுக்கின. ஆனால் உடல் கருகவில்லை. கண்களில் தீப்பிடித்தது அனால் பார்வை மங்கவில்லை. கால்களில் நெருப்பை மிதித்தபடி கோரமான புழுக்கள் ஊர்ந்து ஏறின, தங்களது கொடிய கொடுக்குகளால் கடித்தன, கொடூரமான வலி.. ஆனால் இரத்தம் இல்லை.

செல்வந்தர் செய்வதறியாது திகைத்தார். தவித்தார். பதறினார். புலம்பினார். அவரது நாக்கு வறண்டது. ஒரு துளி தண்ணீர் கிடைக்காதா என திகைத்தார். மழையே நீ ஒரு சொட்டு தண்ணீரைத் தரமாட்டாயா என வானத்தைப் பார்த்தார்.

அதிர்ந்தார்.

தூரத்தில், வானத்தில் ஒரு முகம்.

யாரது ? ஓ.. தந்தை ஆபிரகாம் !!!. அவரது முகத்தில் ஒரு சின்ன நம்பிக்கை கீற்று. அவரது மடியில் யார் ? இந்த முகம்.. இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறேனே…

செல்வந்தர் மூளையைக் கசக்க, சட்டென அந்த முகம் அவரது கண்களில் மின்னலடித்தது.

அது.. லாசர். ஏழை லாசர்.

‘தந்தையே.. ஆபிரகாமே.. பிளீஸ் ஹெல்ப் மீ.. கொஞ்சம் தண்ணீ வேணும். லாசரோட விரல் நுனில கொஞ்சம் தண்ணியை கொடுத்து அனுப்பினா கூட போதும்… ”

‘லாசரையா ? அவரை உனக்கு தெரியுமா ?’

‘ஆமா.. ரொம்ப நல்லா தெரியும். என் சகோதரர்களுக்கு கூட அவரைத் தெரியும். எங்க வீட்ல தான் இருந்தாரு’

‘உங்க வீட்லயா ?’

‘ஐ..மீன்.. வீட்லன்னா வீட்ல இல்ல… கேட்ல.. வீட்டு கேட்ல.. நான் அவரை அங்கேயிருந்து தொரத்தினதே கிடையாது’

‘அவருக்கு ஏதாச்சும் கொடுத்திருக்கியா ?’

‘கொடுத்ததுன்னா… அவருக்கு.. இல்லை… ‘

‘ஏன் ?’

‘அவரு கேட்டதே இல்லை…’

‘அவருக்கு பசிக்காதா ? அவருக்கு ஏதாச்சும் கொடுக்கணும்ன்னு தோணினதே இல்லையா ?’

‘அவரு எப்படியாவது பொழச்சுப்பாருன்னு நெனச்சேன்…’

‘வீட்ல டெய்லி விருந்து நடந்துதே.. இந்த லாசருக்கு மிச்சம் மீதி வந்ததையாச்சும் கொடுத்திருக்கலாமா இல்லையா ?’

‘நடந்து போனதைப் பத்தி பேசி என்ன பிரயோசனம் தந்தை ஆபிரகாமே. எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும் பிளீஸ்…கருணை காட்டுங்க. நீங்க சொன்னா லாசர் கேப்பான்… ‘

‘இல்லை… இங்கேயிருந்து யாரும் அங்கே வர முடியாது.. ஒரு பெரிய பிளவு இருக்கு… லாசருடைய மனசுல உங்களுக்கு உதவ வேண்டும் என ஆசை நிறைய இருக்கு.. ஆனா முடியாது’

‘அப்போ எப்படியாச்சும் என்னை அங்கே எடுத்துக்கோங்க பிளீஸ். இந்த வேதனை தாங்க முடியாததா இருக்கு..’

‘சாரி.. அங்கேயிருந்து யாரும் இங்கே வரவும் முடியாது’

‘எனக்கு ஏன் இந்த கொடுமை? காப்பாத்துங்க பிளீஸ்…’

‘நீ லைஃப்ல எல்லா நலன்களையும் பெற்றாய். இலாசர் பாவம், கஷ்டங்களையும் துயரங்களையும் நிராகரிப்பையும் தான் பெற்றான். இப்போ உனக்கு லாசரோட நிலமை, அவருக்கு உன்னோட நிலமை’

அப்போ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க. அட்லீஸ்ட் லாசரை என்னோட சகோதரர்கள் கிட்டே அனுப்பி இந்த விஷயத்தைச் சொல்லுங்க. அந்த அஞ்சு பேருமாச்சும் எச்சரிக்கையா இருப்பாங்க.

அவங்களுக்கு தான் மோசே, இறைவாக்கினர்கள் எல்லாரும் உண்டே. அவங்க சொன்ன போதனைகள் நிறைய இருக்கே..

அதையெல்லாம் நிறைய பேரு நம்ப மாட்டாங்க. ஆனா, லாசர் மாதிரி செத்துப் போன ஒருத்தர் நேர்ல போய் சொன்னா நம்புவாங்க.

‘மகனே.. கடவுள் அனுப்பின இறைவாக்கினர்களுக்கு நம்பாதவங்க, லாசர் போய் சொன்னாலும் நம்ப மாட்டாங்க’

அப்போ என்னதான் வழி ?

வழிகளும், வாய்ப்புகளும் பூமியில வாழும்போது மட்டும் தான். மரணம் தான் உங்களோட முடிவெடுக்கும் உரிமைக்கான முடிவுரை. அதற்குப் பிறகு உங்க கையில எதுவுமே கிடையாது. எல்லாம் கடவுளின் தீர்ப்பு தான். இரக்கம் என்பது நீங்கள் இறக்கும் வரை தான். இறந்தபிறகு தீர்ப்பு தான். மனம் திருந்தவும், வருந்தவும் அதற்குப் பிறகு வாய்ப்பு இல்லை. இல்லவே இல்லை.

“ஓ…நோ.. பிளீஸ்..ஹெல்ப் மீ…” செல்வந்தர் கதறிக் கொண்டிருக்கும் போதே வானத்தின் காட்சி மறைந்தது. இருள் சூழ்ந்தது. மிகப்பெரிய நெருப்பு வந்து அவரது முகத்தில் மோதியது.

ஓ…ஐயோ….. கதறிய செல்வந்தர் திடுக்கிட்டு விழித்தார். மாலை நேரம். வீடு அமைதியாய் இருந்தது.

கண்டதெல்லாம் கனவா ? அவருக்கு வியர்த்துக் கொட்டியது. இதயத் துடிப்பு தாறு மாறாக எகிறியது. நரகத்தின் நெருப்பு உடலில் எரிவது போல ஒரு தோன்றல். உடலில் நரகப் புழுக்கள் ஊர்வது போல ஒரு பதட்டம்.

டொக்..டொக்… கதவு தட்டப்பட்டது.

வெளிறிப்போன முகத்துடன் கதவைத் திறந்தார். வெளியே அவருடைய சகோதரர்கள் சிரித்துக் கொண்டே நின்றிருந்தனர்.

‘என்னடா.. பேய் முழி முழிக்கிறே… ‘

‘இ..இல்ல‌… மனசு சரியில்ல.. இன்னிக்கி பார்ட்டி கேன்சல்…’ அவருக்கு மூச்சு வாங்கியது.

‘என்னது பார்ட்டி கேன்சலா ?’

‘ஆமா… கெளம்புங்க… நான் ஒருத்தரைப் பாக்கப் போறேன். ரொம்ப அவசரம். செல்வந்தர் சட்டென வெளியே தாவினார்.’

‘யாரைடா பாக்க போறே… தலைமைக் குருவையா ? இல்ல பிஸினஸ் பார்ட்னரையா…’ பின்னாலேயே ஓடிய சகோதரர்கள் கேட்டார்கள்.

இல்லே..இல்லே… லாசரை…

யாரு? எந்த லாசர்…

வாசல்ல படுத்திருப்பான் ஒருத்தன், அவரைத் தான். சொல்லிக் கொண்டே ஓடிய தனது சகோதரனைப் பார்த்து சகோதரர்கள் தங்களுக்குள் குழம்பினார்கள். “சம்திங் ராங் ?”

அது தான் ‘சம்திங் ரைட்’ என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை

*

( நிஜமும், புனைவும் கலந்த ஒரு கதை )