Posted in Articles

கடுகு விதைகள் -Good Prayer

காட்சி 1

( நபர் 1 செபிக்கிறார் )

இயேசுவே எல்லா இடங்களிலும் நடந்து நடந்து ஊழியம் செய்ய என்னால முடியல.. ஒரு சைக்கிள் குடுங்கன்னு கேட்டுட்டே இருக்கேன். எப்படியாச்சும் ஒரு சைக்கிள் குடுங்க கடவுளே…

காட்சி 2

(நபர் 2 சந்திக்கிறார் )

நபர் 1 : வாங்கம்மா.. என்ன இந்த பக்கம்.. ஐயா நல்லா இருக்காரா ? உங்க ஊழியம் எல்லாம் எப்படி போவுது

நபர் 2 : கடவுள் கிருபைல நல்லா போவுது…. உங்களுக்கு எப்படி போவுது ?

நபர் 1 : ம்ம்.. என்ன சொல்ல, நடந்து நடந்து போறது ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஒரு சைக்கிள் கிடச்சா நல்லா இருக்கும்.

நபர் 2 : ஓ.. ஓக்கே.. கடவுள் தருவாரு.. கவலைப்படாதீங்க..

காட்சி 3

( நபர் 2 )

கடவுளே.. அந்த ஊழியக்காரர் ரொம்ப கஷ்டப்படறாரு.. அவருக்கு ஒரு நல்ல சைக்கிள் குடுங்க ஆண்டவரே..

காட்சி 4

( இருவரும் சந்திக்கிறார்கள் )

நபர் 1 : ஹேய்.. ஒரு சந்தோசமான விஷயம்.. எனக்கு கடவுள் ஒரு சைக்கிள் குடுத்தாரு. ஒருத்தரு நேரடியா வீட்டுக்கே வந்து நான் பைக் வாங்கிட்டேன், எனக்கு இந்த சைக்கிள் தேவையில்லை, நீங்க நடந்து போறதைப் பாக்க கஷ்டமா இருந்துச்சுன்னு சொல்லி குடுத்தாரு.

நபர் 2 : வாவ்.. பிரைஸ் த லார்ட்

நபர் 1 : ஆமா.. பிரைஸ் த லார்ட்.. என்னோட செபத்துக்கு பதில் கிடைச்சிருக்கு. ஆமா உங்க வாழ்க்கை எப்படி போவுது

நபர் 2 : ஆங்.. அது ரொம்ப சர்ப்ரைஸ்… ஒரு நாள் ஒருத்தரோட வீட்ல போய் செபம் பண்ணினோம். நானும் என் ஹஸ்பென்டும் நடந்து வரதைப் பாத்து எங்களுக்கு ரெண்டு சைக்கிள் அவரு குடுத்தாரு. அவரு சைக்கிள் கம்பெனி வச்சிருக்காராம்.

நபர் 1 : ஓ… ரெ..ரெண்டு சைக்கிளா… ம்ம்ம்.. லக் தான்…

நபர் 2 : எல்லாம் கடவுள் கிருபை.

காட்சி 5

( சில மாதங்களுக்குப் பின் )

நபர் 1 : சைக்கிள் மிதிச்சு மலையில ஏற முடியல, ஒரு பைக் இருந்தா நல்லா இருக்கும்.. நான் பிரேயர் பண்ணிட்டே இருக்கேன்

நபர் 2 : கண்டிப்பா கடவுள் தருவாரு

காட்சி 5 ஆ

நபர் 2 : கடவுளே அந்த ஊழியருக்கு ஒரு பைக் குடுங்க.. பாவம்… அவரு சைக்கிள் ஓட்டி கஷ்டப்படறாரு

காட்சி 6

( சில வாரங்களுக்குப் பின் )

நபர் 1 & நபர் 2

நபர் 1 : ஹேய்.. விஷயம் தெரியுமா .. கடவுள் எனக்கு ஒரு பைக் குடுத்தாரு.. ஸ்கூட்டி…. செம.. காட் ஈஸ் க்ரேட். பிரைஸ் த லார்ட்

நபர் 2 : யா… கார் ஈஸ் ரியலி க்ரேட். ஒரு கதை தெரியுமா ? ஒரு நாள் நாங்க சைக்கிள்ல போயிட்டிருக்கும்போ ஒரு கார் மோதிடுச்சு… பெரிய லக்சுரி கார். நல்ல வேளை எதுவும் ஆகல. பாத்தா அவரு எங்க சர்ச் மெம்பரோட பிரண்ட்… அவரு எங்க நிலமையைப் பாத்துட்டு ரெண்டு ஸ்கூட்டி வாங்கி குடுத்தாரு..

நபர் 1 : ரெ..ரெண்டு ஸ்கூட்டியா.. செம லக்கி தான்.

நபர் 2 : யா.. பிரைஸ் த லார்ட்.

காட்சி 7

நபர் 1 : கடவுளே.. நான் உபவாசம் இருந்து, ராப்பகலா கேட்டுக் கேட்டு ஒரு விஷயம் தரீங்க.. ஆனா அவங்களுக்கு கேக்காமலேயே டபுள் டபுளா குடுக்கறீங்க…

இது நியாயமே இல்லை..

( கடவுளின் குரல் )

பக்தனே… உனக்கு சைக்கிள் வேண்டும் என அவர்கள் செபம் செய்ததால் தான் உனக்கு சைக்கிள் கொடுத்தேன். பிறருக்காக செபித்த அவர்களுடைய அன்புக்காக அவர்களுக்கும் ஆளுக்கொரு சைக்கிள் கொடுத்தேன்.

உனக்கு பைக் வேண்டுமென்றும் அவர்கள் உருக்கமாக செபித்தார்கள். அது உன்மீது கொண்ட அன்பு. உனக்காக செபிக்கிறேன் என்று உன்னிடம் கூட அவர்கள் சொல்லவில்லை. ரகசியமாகச் செய்தார்கள். அந்த அன்பினால் தான் உனக்கு பைக் கொடுத்தேன். இத்தகைய அன்பு வைத்திருக்கும் அவர்களுக்குக் கொடுக்காமல் இருக்க முடியுமா அதனால் அவர்களுக்கும் ஒவ்வொன்று கொடுத்தேன்.

( நபர் 1 )

கடவுளே.. என்னை மன்னியுங்கள். பிறருக்காக செபிக்க வேண்டும் என்பதை புரிய வைத்தீர்கள். நான் சுயநலமாக செபித்துக் கொண்டிருந்தேன்.. என்னை மன்னியுங்கள் இயேசுவே….

பின் குறிப்பு

நமது செபங்கள் சுயநலச் சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கக் கூடாது. பிறருக்காக உண்மையான அன்பு, கரிசனை. மன உருக்கம் கொண்டு செபிக்க வேண்டும். அப்படிப்பட்ட செபங்களுக்குக் கடவுள் மகிழ்வுடன் பதிலளிக்கிறார். அப்படிப்பட்ட இறைவேண்டல்கள் செய்யும் மக்களை இறைவன் நேசத்துடன் அரவணைக்கிறார். இந்த உண்மையை உணர்வோம், தேவையில் இருக்கும் ஒவ்வொருவரையும் நம் சகோதரராய்க் கருதி அவர்களுக்காய் செபிப்போம். நன்றி

Posted in Articles

அடிமைக்கு அன்பு

அடிமைக்கு அன்பு

காட்சி 1

( ஆப்பிரிக்க நாட்டில் ஒரு கிராமம். ஊழியர் பெல்லார்மின் அமர்ந்திருக்கிறார். அவருடன் இன்னொரு நபர் பேசிக்கொண்டிருக்கிறார் )

நபர் 1 : ரொம்ப நாளா உங்க கிட்டே ஒன்ணு கேக்கணும்ன்னு நினைச்சுட்டே இருந்தேன் கேக்கலாமா ?

பெல்லார்மின் : கேளுங்க.. இதில என்ன தயக்கம் ?

ந 1 : இந்தியாவில நல்ல வசதியான வாழ்க்கை வாழ்ந்திட்டிருந்தீங்க ? இப்போ குடும்பத்தோட இந்த ஆப்பிரிக்க கிராமத்துல வந்திருக்கீங்க. இங்கே பிள்ளைங்க படிக்க நல்ல ஸ்கூல் கிடையாது. நல்ல வருமானம் கிடையாது. இருந்தாலும் ஏன் ?

பெல் : ஐயா… நான் இங்கே வந்திருக்கிறது பிள்ளைங்களை படிக்க வெச்சு டாக்டராக்கவோ, இல்லை பெரிய வேலைல சேர்ந்து பணம் சம்பாதிக்கவோ இல்லை. அது உங்களுக்கே தெரியும்…

ந1 : ஐயா… அதெல்லாம் தெரியும். எவ்ளோ நாளா உங்க கூடவே இருக்கேன். நீங்க இயேசுவைப் பற்றி இங்குள்ள மக்களுக்கு சொல்றதுக்காகத் தான் வந்திருக்கீங்க. ஆனா இந்த வாழ்க்கை கஷ்டமா இல்லையா ?

பெல் : இல்லவே இல்லை. எத்தனையோ பேருக்கு கிடைக்காத அழைப்பு எனக்கு கிடைச்சிருக்குன்னு டெய்லி நான் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டே இருக்கேன்.

ந1 : இருந்தாலும் பிள்ளைகளையாவது இந்தியாவில படிக்க வெச்சிருக்கலாம். அவங்களாவது நல்ல வசதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.

பெல் : ஐயா.. எல்லாருக்குமே கடவுள் கொடுக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை தான். அதை அப்படியே கடவுள் கிட்டே குடுக்கிறதில இருக்கிற சந்தோசமே தனி. நான் தான் ரொம்ப லேட்டா, பெரியவன் ஆனப்புறம் என் வாழ்க்கையை கடவுள் கிட்டே குடுத்தேன். என் பிள்ளைகளுக்கு சின்ன வயசிலயே அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. இது எவ்ளோ பெரிய சந்தோசமான விஷயம்.

ந 1 : நீங்க சொல்றதும் சரிதான்.. இருந்தாலும் பிள்ளைங்க இந்த உலகத்துல இருக்கிற எந்த ஜாலியான விஷயங்களையும் அனுபவிக்காம இங்கே இருக்காங்களேன்னு கேட்டேன்.

பெல் : ஐயா.. தற்காலிக சுகம், நிரந்தர நரகத்துக்கு தான் கொண்டு போகும். உங்க கிட்டே ஒரே ஒரு பாட்டில் தண்ணி தான் இருக்குன்னு வெச்சுக்கோங்க‌ ! பாலைவனத்துல நாலு நாள் நடக்கணும். வேறு தண்ணியே கிடைக்காது. அந்த ஒரு பாட்டில் தண்ணீரை எவ்ளோ கவனமா பாதுகாப்பீங்க. ஒவ்வொரு சொட்டு செலவழிக்கும்போதும் எவ்வளவோ எச்சரிக்கையா இருப்போம் இல்லையா ?

ந 1 : ஆமாங்கய்யா…

பெல் : உங்க கிட்டே தீப்பெட்டியும் ஒரே ஒரு தீக் குச்சியும் தான் இருக்கு. வேற எங்கயும் தீப்பெட்டி இல்லை. நள்ளிரவுல விளக்கு கொளுத்த வேண்டியிருக்கு. எவ்ளோ கவனமா அதை உரசுவீங்க இல்லையா ?

ந 1 : ஆமாங்கய்யா.. அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் ?

பெல் : அதே மாதிரி தான் நமக்கும் ஒரே ஒரு வாழ்க்கை. ஒரே ஒரு பாட்டில் தண்ணி மாதிரி எண்ணப்பட்ட நாட்கள். அதை எவ்வளவோ கவனமா செலவிடணும். எவ்வளவோ பயனுள்ள வகையில அதை செலவிடணும். அதுல கொஞ்சம் கூட வேஸ்ட் பண்ணக் கூடாது இல்லையா ? ஒரே ஒரு தீக்குச்சி தான் நம்ம வாழ்க்கைன்னா அதை எவ்வளவு கவனமா உரசணும் இல்லையா ? அப்படித் தான் இதுவும். அந்த வாழ்க்கையை கடவுளுக்காகவே கொடுக்கிறது தான் உண்மையான மகிழ்ச்சி.

( அப்போது ஒரு நபர் ஓடி வருகிறார் )

ந 2 : ஐயா… நம்ம ரிவர் சைட் மார்க்கெட்ல அடிமை ஏலம் நடக்குதுங்கய்யா…

ந 1 : ம்ம்ம்… நம்ம நாடு எப்ப தான் உருப்படுமோ ! இந்த அடிமை ஏலத்தை இன்னும் நிறுத்த முடியல. வாழ்க்கையை

ஓட்டறதுக்கு மனுஷன் என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு.

பெல் : இப்படித் தான் பாவத்தைச் செய்திட்டு இருக்கிறவன் பாவத்துக்கு அடிமையா இருக்கிறான்னு இயேசு சொல்லியிருக்காரு.

ந 2 : இருந்தாலும் பாவம்யா.. இன்னிக்கு ஏதோ ஒரு இளம்பெண்ணை ஏலம் போடறாங்க.

பெல் : ஓ.. அப்படியா…. எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு.. சரி… வாங்க அங்கே போலாம்.

காட்சி 2

( ஒரு பெண் மேடையில் நிற்கிறார். தலைகுனிந்து சோகமாக நிற்கிறாள். ஏலம் நடக்கிறது )

ஏலம் நடத்துபவர் : ( சிரித்துக் கொண்டே ) இந்த பெண்.. .. இதுக்கு முன்னாடி பெல்ஷா மாளிகைல அடிமையா இருந்தார். கடின உழைப்பாளி. அங்கிருந்த முதலாளி இப்போ இவளை ஏலத்துல வித்துட்டு வேற ஆட்களை வாங்க போறாரு. அதனால தான் இந்த ஏலம். ஏலத்தை ஆரம்பிக்க போறேன்.

ஏலம் வாங்குபவர் : ஒரு அடிமைப்பெண்ணை வாங்கணும்ன்னு தான் காத்திருந்தேன்…. பெல்ஷா மாளிகைல இருந்த அடிமைன்னா ரொம்ப நல்லது ! , எவ்ளோ பணமானாலும் நான் வாங்கப் போறேன்.

ந4 : எவ்ளோ பணம்ன்னாலுமா ?

வாங்குபவர் : பொதுவா ஒரு பத்தாயிரம் பணத்துக்கு வாங்கிடலாம். கொஞ்சம் அப்டி இப்டி ஆனா கூட பரவாயில்லை. ஏலத்துல எடுத்துர வேண்டியது தான். இது மாதிரி ஸ்பெஷல் ஏலம் எப்பவும் நடக்காது.

( அப்போது பெல்லார்மின் & ந 1 வருகின்றனர் )

பெல் : அந்த ஆளை நான் ஏலத்துல எடுக்க போறேன்.

ந 1 : ( ஆச்சரியத்துடன் ) ஐயா.. நீங்களா ?

பெல் : ஆமா.. கடவுள் அந்த அடிமையை ஏலத்துல எடுக்க மனசுக்குள்ள சொல்றாரு.

ந 1 : சரிங்கய்யா.. ஆனா இருக்கிற பணத்தை ஏலத்துல விட்டீங்கன்னா ?

பெல் : உங்களுக்கு தெரியாதது இல்லை. என்கிட்டே மொத்த சேமிப்பா ஒரு ஐம்பதாயிரம் பணம் இருக்கு. அதுல கொஞ்சத்தை பயன்படுத்தி வாங்கிடலாம். மத்ததையெல்லாம் கடவுள் பாத்துப்பாரு.

ந1 : சரிங்கய்யா.. உங்க விருப்பம்.

( ஏலம் தொடங்குகிறது )

ஏலம் நடத்துபவர் : ஏலம் ஆரம்பிக்க போறேன். ஆரம்ப விலை ஆயிரம் பணம் !

ஏலம் வாங்குபவர் : இரண்டாயிரம் பணம்

பெல் : மூவாயிரம்

ஏ. வா : ஐயாயிரம்

பெல் : ஆறாயிரம்

ஏ. வா : ஏழாயிரம்

பெல் : எட்டாயிரம்

ஏ. வா : பத்தாயிரம்

ந 1 ( பெல்லார்மினிடம் ) : ஐயா.. வேண்டாம்.. இதுக்கு மேல செலவு செய்ய வேண்டாம்.

பெல் : பதினையாயிரம்

ஏ. வா : இருபதாயிரம்

பெல் : முப்பதாயிரம்

ஏ. வா : ( கொஞ்சம் யோசிக்கிறார். தலையைச் சொறிகிறார் பின் கேட்கிறார் ) நாற்பத்து ஐயாயிரம்.

ஏ.வா வின் நண்பர்.. ந 4 : ஐயா.. என்ன உங்களுக்கு புத்தி கித்தி கெட்டு போச்சா.. இந்த பணத்துக்கு இதே மாதிரி பத்து ஆட்களை வாங்கலாம். இப்போ அவரு பேசாம போனா நமக்கு பெரிய நஷ்டம்.. தப்பு பண்ணிட்டீங்களே. என்ன ஆளு நீங்க… ?

( பெல் ஏலம் கேட்க போகும் போது நண்பர் தடுக்கிறார் )

ந1 : ஐயா வேணாம். உங்க வாழ்நாள் சொத்தே ஐம்பதாயிரம் பணம் தான். உங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. மனைவி இருக்காங்க. ஏதாச்சும் மருத்துவ தேவை வந்தா கூட கைல காசு இருக்காது. இந்த அடிமை நமக்கு எவ்வளவு தான் சம்பாதிச்சு தர முடியும் ? வேணாம்யா விட்டுடுங்க.

பெல் : ஐம்பதாயிரம் !

( ஏலம் கேட்ட மற்ற நபரும், நண்பர்களும்.. “அப்பாடா தப்பிச்சோம்” என போய் விடுகின்றனர். )

ஏலம் இடுபவர் : ஐம்பதாயிரம் பணம் ஒரு தரம். வேற யாராவது ஏலம் கேட்கிறீங்களா ?

( மக்கள் ஒவ்வொருவராகப் போகின்றனர் )

ஏலம் இடுபவர் : ஐம்பதாயிரம் பணம் இரண்டு தரம் …. ஐம்பதாயிரம் பணம் மூணு தரம்.

( பெல்லார்மின் ஒரு செக் எழுதி அவரிடம் கொடுக்கிறார். அந்தப் அடிமை குனிந்த தலையுடன் அவரது அருகே வந்து நிற்கிறார் )

காட்சி 3

பெல் நண்பரிடம் : வாங்க போலாம்

( பெண் பின்னாடியே வருகிறார் )

பெல் : தம்பி .. நீங்க போலாம். என் கூட வரவேண்டிய அவசியம் இல்லை. இப்போ நீங்க அடிமையில்லை உங்களுக்கான விலையைக் கொடுத்து உங்களை விடுதலையாக்கியாச்சு.

( ந 1 புரியாமல் பார்க்கிறார் )

அடிமை : ஐயா.. என்ன சொல்றீங்க ? புரியல.

பெல்லார்மின்: தம்பி.. உங்களை அடிமைத்தனத்தில இருந்து மீட்கத் தான் நான் ஏலம் எடுத்தேன். உங்களுக்கு விடுதலை வாங்கி தர. உங்களை மீண்டும் அடிமையா மாத்துறதுக்கு இல்லை.

அடிமை : ( அழுகைக் குரலில் ) ஐயா.. ஏன் ? இவ்ளோ பணம் குடுத்து என்னை ஏலத்துல எடுத்து சும்மா விடுறீங்களா ? நம்பவே முடியலையே..என்னை உங்களுக்கு தெரியுமா ?

பெல் : நீ யாருன்னு எனக்கு தெரியாது . ஆனா இயேசு யாருன்னு எனக்கு தெரியும். நாம பாவ அடிமைத்தனத்துல இருந்தப்போ அவரோட உயிரையே கொடுத்து நம்மையெல்லாம் மீட்டவர். நாம சுதந்திர வாழ்க்கை வாழணும்ன்னு மண்ணுக்கு மனுஷனா வந்தவர். வந்து சிலுவையில அறையப்பட்டு உயிர்விட்டு நமக்காக இறந்தவர்.

அடிமை : ஐயா என்ன சொல்றீங்க ? அப்படி ஒரு நபரைப் பற்றி எனக்கு தெரியாதே.

பெல் : உண்மைதாம்பா.. அவரைப் பற்றி சொல்ல தான் நான் இந்த நாட்டுக்கே வந்தேன். உன்னை மீட்க நான் இழந்தது என் சொத்து மட்டும் தான். அவரோ தன்னோட சொந்த ஜீவனையே இழந்தார்.

அடிமை : ஏன் ஐயா அவர் அப்படி இறக்கணும் ?

பெல் : அது தான் நாம கடவுளுடைய மீட்பில் இணைய ஒரே வழி. அது தான் நாம சொர்க்கம் செல்ல ஒரே வழி. அது தான் நம்முடைய பாவங்களைக் கழுவ ஒரே வழி. அவருக்கு ஒரே ஒரு மனித வாழ்க்கை தான் தரப்பட்டது, அதை பிறருக்காக கொடுத்தார். அதே மாதிரி எனக்கு ஒரே வாழ்க்கை தான் தரப்பட்டிருக்கு. இந்த ஒரே ஒரு வாழ்க்கையை நான் அவருக்காக கொடுக்கிறேன்.

அடிமை : ஐயா.. ( கண்ணீருடன் ) நான் மறுபடியும் அடிமையாவே போயிடறேன்.

பெல் : ( அதிர்ச்சியுடன் ) என்னம்மா சொல்றே..

அடிமை : ஆமாங்கய்யா.. .இந்த தடவை நான் இயேசுவுக்கு அடிமையா போக போறேன். எனக்கு இந்த விடுதலை வாழ்க்கை உங்களால கிடைச்சுது. இயேசு உங்க மூலமா அதை எனக்கு தந்திருக்காரு. இந்த சுதந்திர வாழ்க்கையை அவருக்கு அடிமையா வாழ்றதுல செலவிட போறேன். எனக்கு கிடைச்சிருக்கிற இந்த ஒரே ஒரு வாழ்க்கையை இனிமே நான் அவருக்காகவே கொடுக்க போறேன்.

பெல் : ரொம்ப மகிழ்ச்சிப்பா.. ஒரு நபரை மீட்பதை விட பெரிய சொத்து எதுவுமே இல்லை. எனக்கு இப்போ ரொம்ப மன நிறைவா இருக்கு.

அடிமை : ஐயா.. எனக்கு என் எஜமானர் இயேசுவைப் பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க. என் வாழ்க்கைல நான் அவருக்காக வாழணும். நீங்க எனக்கு சொல்லப்போற உண்மையை எல்லாம் நாம் எங்க ஊர் மக்களுக்குச் சொல்லணும்.

பெல் : ரொம்ப மகிழ்ச்சி தம்பி.. வாங்க.. நாம அப்படி ஓரமா அமர்ந்து பேசுவோம். அவரைப் பற்றி பேசறதை விட பெரிய மகிழ்ச்சி ஏதும் இல்லை.

பின் குரல்

இது மிஷனரி ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வின் சிந்தனையை எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டது. நமது வாழ்க்கையை இறைவன் தனது ஒரே மகனின், ஒரே மனித பிறவியின், ஒரே ஜீவனைக் கொண்டு மீட்டார். நமக்குத் தரப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. ஒரே ஒரு பிறவி. நாம் அதை முழுமையாய் இறைவனுக்காய் அற்பணித்திருக்கிறோமா ? இல்லையேல் இதோ இந்த கணமே.. அதைச் செய்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

( நன்றி )

Posted in Articles

சரியான பாதை

சரியான பாதை

*

காட்சி 1

( அலுவலகம் ஒன்றில் … )

நபர் 1 : (போனில் ) ஜான்… நம்ம பிளான் படி எல்லா மருந்தையும் பிளாக் பண்ணியாச்சி.. சிட்டில எங்கயும் மருந்து கிடைக்கறதில்லை. பட், நம்ம கிட்டே ஹெவியான ஸ்டாக் இருக்கு.

ஜான் : ( போனில் ) அப்படியா… ரொம்ப சந்தோசம்.. எல்லா இடத்திலயும் டிமாண்ட் அதிகமாகணும் அப்போ தான் நம்ம பிஸினஸ் ஜோரா இருக்கும்.

நபர் 1 : ஆமாமா.. சின்ன சின்ன டிஸ்றிபூட்டர்ஸை எல்லாம் ஸ்டாப் பண்ணி, அவங்க ஸ்டாக்கையும் வாங்கி நாம ஸ்டோர் பண்ணியாச்சு.. இனிமே யாரானாலும் நம்ம கிட்டே தான் வந்தாகணும்.

ஜான் : வெரி குட்.. வெரி குட்… டிமாண்டுக்கு தக்கபடி பிரைஸ் பிக்ஸ் பண்ணலாம். நாம மருந்து விக்கற விஷயத்தை நாசூக்கா நாலு பேருக்கு தெரியப்படுத்தணும்.

நபர் 1 : என்ன ஜான்.. இதெல்லாம் ஒரு மேட்டரா ? மருந்துக்காக டோக்கன் வாங்கி மெடிக்கல் காலேஜ் வாசல்ல நாள் கணக்கா நிக்கறாங்க மக்கள். சப்ளை புல்லா ஸ்டாப் ஆச்சு.. நோயாளிங்க எல்லாம் ஐசியூ ல செத்திட்டிருக்காங்க.. பீப்பிள் ஹேவ் நோ அதர் கோ… நம்ம கிட்டே தான் வந்தாகணும்

ஜான் : வெரிகுட் ..வெரி குட்… ரெண்டு நாள் போகட்டும்.. அப்புறம் ஒப்பன் பண்ணலாம்

நபர் 1 : ரெண்டு நாள்னா, டெத் ரேட் அதிகமாயிடும்.. சிட்டில மட்டும் எப்படியும் நானூறு ஐநூறு பேரு இறந்துட சான்ஸ் இருக்கு.

ஜான் : இட்ஸ் எ கொலட் ரல் டேமேஜ் மேன்… பிஸினஸ் ஹேஸ் நோ எத்திக்ஸ்… சாகறவங்க சாகட்டும்…. அதுக்கு அப்புறம் நாம மத்தவங்களைக் காப்பாத்தலாம்.

நபர் 1 : ம்ம்.. ஓக்கே… நமக்கு ஒரு இன்ஞக்ஷன் 1200 க்கு கிடைக்குது… எவ்ளோக்கு குடுக்கலாம் ?

ஜான் : நார்த் ல 70 தவுசண்ட் வரை போவுது, நாம ஒரு 40-50 ஆயிரம் பிக்ஸ் பண்ணுவோம்.

நபர் : ஓக்கே… ஜான்.. வில் டூ.

காட்சி 2

( ஒரு வயதான அம்மா வருகிறார் )

அம்மா : தம்பி.. தம்பி…. என் பையன் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்கான்பா.. இந்த டேவிட்டோ கோவிட்டோ ந்னு சொல்றாங்க. அதுக்கு ஊசி மருந்து இங்கே கிடைக்கும்ன்னு சொன்னாங்க… இருக்காப்பா

ஜான் : இருக்கு இருக்கு…. ஆனா செலவாகுமே பரவாயில்லையா ? இருக்கா ?

அம்மா : இருக்குப்பா…. அஞ்சு மருந்த வேணும்… 20 ஆயிரம் இருக்குப்பா… சேத்து வெச்ச பணம் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன்.

ஜான் : என்னம்மா.. இருபதாயிரம்.. பத்தாயிரம்ன்னு.. ஒரு ஊசியே அம்பதாயிரம்.. ஐஞ்சுன்னா ரெண்டரை இலட்சம்… உங்களை பாத்தா பாவமா இருக்கு… சோ, ஒரு அம்பதாயிரம் நான் கழிச்சுக்கறேன்.. ரெண்டு இலட்சம் கட்டிட்டு வாங்கிட்டு போங்க

அம்மா : ரெண்டு இலட்சமா…… மருந்து இரண்டாயிரம் மூவாயிரம்ன்னு தானே சொன்னாங்க…

ஜான் : அம்மா,சீசன்ல தக்காளி ஒரு ரூபாய்க்கும் கிடைக்கும். சீசன் இல்லேன்னா நூறு ரூபாய்க்கும் கிடைக்கும்…. அது மாதிரி தான் இதுவும்…. போயிட்டு வாங்க

அம்மா : யப்பா.. பிளீஸ்பா.. ஹெல்ப் பண்ணுப்பா… வேற எங்கயும் மருந்து இல்லையாம்பா.. பிளீஸ்பா..பையனை காப்பாத்தணும்ப்பா.

ஜான் : அம்மா, ஹெவி இன்வெஸ்ட்மெண்ட்.. என்னால ஒண்ணும் பண்ண முடியாது.

அம்மா : பிளீஸ்பா… என்னை உன் அம்மாவா நினைச்சு பாருப்பா.. பிளீஸ்..

ஜான் : போம்மா.. போ…. எல்லாரையும் அம்மாவா நினைச்சு இரக்கம் காட்டிட்டு இருந்தா பிஸினஸ் பண்ண முடியாது… எனக்கு வேலை இருக்கு

( ஜான் போகிறான் )

காட்சி 3

( இன்னொரு அலுவலகத்தில் ஒரு பெண் ஊழியர். போன் மூலமாக ஏமாற்றுகிறார் )

பெண் : ( போன் ) ஹலோ… மாரிமுத்து தானே…. நான் வெற்றி பேங்க்ல இருந்து பேசறேன்..

நபர் : சொல்லுங்கம்மா…

பெண் : உங்களுக்கு கோவிட் நிவரண நிதி 4500 ரூபா போட சொல்லி கவர்மெண்ட் ஆர்டர் வந்திருக்கு…

நபர் : ஓ.. சந்தோசம்மா..

பெண் : உங்க ஏடிஎம் கார்ட்ல இருக்கிற அந்த 16 டிஜிட் நம்பர் சொல்லுங்க

நபர் : ஒரு நிமிஷம்மா.. நான் கார்ட் எடுத்துட்டு வரேன்.

பெண் : கண்டிப்பா… ( மெதுவாக தனக்குள் – வாவ்.. இந்த மீன் ஈசியா மாட்டிகிட்டு.. ஓவர் இளிச்ச வாயன் போல )

நபர் : அம்மா.. சொல்லட்டுமா ?

பெண் : எஸ் சொல்லுங்க..

நபர் : ( சொல்கிறார் )

பெண் : அப்படியே பின்னாடி இருக்கிற மூணு டிஜிட் நம்பரையும் சொல்லுங்க… ( மௌனம் ) ஆங்.. ஆமா. அது தான்…

நபர் : ( சொல்கிறார் )

பெண் : வெரி குட்.. தேங்க்யூ

நபர் : எப்போம்மா பணம் போடுவீங்க..

( பெண் – கட் பண்ணுகிறார் )

பெண் : ( கம்ப்யூட்டரை நோண்டுகிறார்.) . வாவ்… .வயசான காலத்துலயும் நாப்பதாயிரம் சேத்து வெச்சிருக்காரு.. .மனுஷன்…. இன்னிக்கு பஸ்ட் போனி நாப்பதாயிரம்… முதல்ல.. டெம்பரரி அக்கவுண்ட் க்கு மாத்துவோம், அப்புறம் நம்ம டீமுக்கு இன்ஃபார்ம் பண்ணுவோம்.. மிச்சத்தை அவங்க பாத்துப்பாங்க…

காட்சி 4

( பெண் போனில் … பிராடு )

பெண் : ( ஆங்கிலத்தில் ) ஹாய்…. ஐம் காலிங் ஃப்ரம் வெர்டிகல் பேங்க்…. வி ஆர் இஷ்யூயிங் எ நியூ கிரடிட் கார்ட்.. டு எலிமினேட் ஃப்ராட்.. இட்ஸ் சிப் கார்ட்…. Hi…..im calling from vertical bank ……v are issuing a new credit card ….to eliminate fraud ……..its chip card

More awcured

நபர் : ஓக்கே… சோ வாட்..

பெண் : ஜஸ்ட் வாண்டட் டு வெரி ஃபை ஃப்யூ திங்க்ஸ்…. யூ.. ஆர்.. வெங்க்ட ராமன்ம்..

just wanted to verify few things

Are you mr Venkatraman ?….

நபர் : எஸ்…

பெண் : கேன் யூ.. கன்ஃபர்ம் யுவர் டேட் ஆஃப் பர்த் …. Can u confirm your date of births

( உரையாடல் தொடர்கிறது )

( மகிழ்ச்சியாய் போனை வைக்கிறார் )

காட்சி 5

( பெண் பிராடு .. சில கால்கள், சிலர் திட்டுகிறார்கள் )

காட்சி 5 அ

( ஜான் ஒரு நாள் காலையில் டீ குடித்தபடி மொபைல் நோண்டுகிறான் )

( ஒருவருடைய ஸ்டேட்டசில் ஒரு RIP செய்தி. அதில் அவனுடைய ஆசிரியர் ஒருவர் )

ஜான் : வாட்…. மதுரபாய் டீச்சர் !!! என்னாச்சு ? ஓ மை காட்…. நல்லா தானே இருந்தாங்க..

( போன் அடிக்கிறார் )

ஜான் : ஹலோ.. நான் சென்னைல இருந்து ஜான் பேசறேன்.. மதுரபாய் டீச்சர் போன் தானே இது… ஸ்டேட்டஸ் பாத்தேன்…

நபர் : ( சோகமாக ) ஆமா… அவங்க.. அவங்க இறந்துட்டாங்க… நேத்தைக்கு…. நீங்க யாரு ?

ஜான் : இ..இறந்துட்டாங்களா ? நான்.. அவங்களோட ஸ்டுடண்ட்.. ஸ்டுடண்ட் ந்னு சொல்றதை விட எனக்கு ஒரு அம்மா மாதிரி அவங்க… சின்ன வயசில நான் பசியில கஷ்டப்பட்ட காலத்துல அவங்க சாப்பாடை எனக்கு தந்திருக்காங்க… எனக்கு புக், பென், பென்சில் எல்லாம் வாங்கி தந்து படிக்க வச்சவங்க… சுருக்கமா நான் இன்னிக்கு இந்த நிலமைல இருக்க ஒரே காரணம் அவங்க தான்… என்னாச்சு அவங்களுக்கு..

நபர் : அவங்களுக்கு கோவிட்….

ஜான் : ஓ.. மை காட்.. பெங்களூர்ல தான் இருக்கீங்களா ?

நபர் : இல்லை.. பெங்களூர்ல ஹாஸ்பிடல்ஸ் எல்லாம் புல் அதனால சென்னை வந்தோம், இங்க தான் இருக்கோம்… பட் காப்பாத்த முடியல.

ஜான் : சென்னைலயா…

நபர் : ஆமா… அந்த ஆண்டி வைரல் இன்ஜக்‌ஷன் கிடைக்கல. எல்லா இடத்துலயும் தட்டுப்பாடு.. ரெண்டு நாளு மருந்து எங்கயுமே கிடைக்கல, அப்புறம் ஒரு இடத்துல இருக்குன்னு சொல்லி டிரை பண்ணினோம்.. பட் பிளாக்ல மூணு இலட்சம் கேஷா கேட்டாங்க.. அதை புரட்ட முடியாம போயிடுச்சு.. கஷ்டப்பட்டு பணத்தை ரெடி பண்ணிட்டு வரதுக்குள்ள லேட் ஆயிடுச்சு….

ஜான் : ( அதிர்ச்சியடைகிறான் ) .. ஓ.. மை.. காட்…

( போனை வைக்கிறான் )

நபர் : ஹலோ.. ஹலோ.. ஹலோ…

( ஜான் போனைப் பார்க்கிறான். அந்த புகைப்படத்தில் டீச்சர் பேசுவது போல தோன்று கிறது. )

குரல் : நான் உன்னை காப்பாத்தினேன், நீ என்னை சாகடிச்சிட்டியே ஜான்….

( ஜான் தலையில் கை வைத்து அமர்கிறான் )

காட்சி 6

( சர்ச் ஜான் & பெண் )

( செபிக்கிறார்கள் )

மூப்பர் / பாஸ்டர் : என்ன ஜான்… எப்படி இருக்கீங்க…

ஜான் : நல்லா இருக்கேன் ப்ரதர்… நீங்க.. எப்படி இருக்கீங்க.

மூப்பர் : நல்லா இருக்கேன்.. பட் உங்க முகத்துல ஒரு சோகம் இருக்கே.. என்னாச்சு ?

ஜான் : ம்ம்.. மனசே சரியில்லை பாஸ்டர்… சில விஷயங்கள் மனசை அலட்டிட்டே இருக்கு…

( ஜெனி கேட்டுக் கொண்டிருக்கிறார் )

மூப்பர் : என்னாச்சு …. பிஸினஸ் டல்லா…

ஜான் : டல் எல்லாம் இல்லை…. நூறு மடங்கு அதிகமா பிஸினஸ் நடக்குது.. பட்.. மனசு சரியில்லை.

மூப்பர் : விளக்கமா சொல்லுங்க….… வாட்ஸ் த ப்ராப்ளம் ?

ஜான் : சில இன்சிடண்ட் ரொம்ப உறுத்தலா இருக்கு.. வினை விதைத்தவன் வினையறுப்பான்.. என்னோட நிம்மதியை நான் இழந்துட்டேன்….

மூப்பர் : அமைதியா இருங்க… ஒரு இன்சிடண்ட் சொல்லுங்க

ஜான் ( முதல் காட்சியை விளக்குகிறான் )

மூப்பர் : நீங்க ஓப்பனா சொன்னதுல சந்தோசம். இத பாருங்க, கடவுளுக்கு புடிக்காத எதை செஞ்சாலும் நமக்கு மனசுல நிம்மதியே இருக்காது. மனசுல நிம்மதி இல்லாத ஒரு செயல் செய்றீங்கன்னா அதை பற்றி கடவுள் கிட்டே பேசி மன்னிப்பு கேக்கணும்.

ஜான் : ம்ம்.. …

மூப்பர் : கடவுளை நம்ம லீடரா , தலைவரா, அரசரா வெச்சுக்கணும். எதுலயுமே. அவரோட கட்டளைப்படி வாழ்ந்தா நமக்கு நிச்சயம் மன நிம்மதி கிடைக்கும்.

ஜான் : அதை எப்படி கன்ஃபர்ம் பண்றது பாஸ்டர்

மூப்பர் : உங்க மனசை அலட்டற அதே நிகழ்ச்சியை, நீங்க பாசிடிவ் வா, கடவுளுக்கு புடிச்ச மாதிரி நினைச்சுப் பாருங்க.

( ஒரு பிளாஷ் பேக் வித் …. பாசிடிவ் அப்ரோச் )

————

காட்சி பிளாஷ்பேக் ( காட்சி 2 )

( ஒரு வயதான அம்மா வருகிறார் )

அம்மா : தம்பி.. தம்பி…. என் பையன் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்கான்பா.. இந்த டேவிட்டோ கோவிட்டோ ந்னு சொல்றாங்க. அதுக்கு ஊசி மருந்து இங்கே கிடைக்கும்ன்னு சொன்னாங்க… இருக்காப்பா

ஜான் : அப்படியாம்மா..என்னாச்சு, எங்க இருக்காரு ? எவ்ளோ நாளா இருக்காரு ?

அம்மா : ஒரு வாரமா கார்த்தியாணி ஹாஸ்பிட்டல்ல இருக்கான். ஐ சியூ ல… இந்த ஊசி போடணுமாம், நாங்க வாங்கி குடுக்கணுமாம்.

ஜான் : பணம் செலவாகுமே இருக்கா ?

அம்மா : இருக்குப்பா…. அஞ்சு வேணும்… 20 ஆயிரம் இருக்குப்பா… சேத்து வெச்ச பணம் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன்.

ஜான் : சேத்து வெச்ச பணம் எல்லாமா ?

அம்மா : ஆமாப்பா.. நாங்க அன்றாடம் காய்ச்சிங்கப்பா.. எங்களுக்கு இதெல்லாம் பெரிய பெரிய பணம்.

ஜான் : சரிம்மா… நான் அஞ்சு மருந்து தரேன்.. நீங்க எடுத்துட்டு போங்க… பையனுக்கு சரியாகட்டும். அப்புறம் பணம் கிடைச்சப்புறம் குடுங்க போதும்.

அம்மா : என்னப்பா சொல்றே

ஜான் : ஆமாம்மா… எனக்கு பிஸினஸ் நல்லா தான் போவுது. ஐஞ்சு மருந்து பிரீயா தரதால ஒண்ணும் இழக்க போறதில்லை. நீங்க இந்த பணத்தை ஹாஸ்பிடல் செலவுக்கு வெச்சுக்கோங்க.

அம்மா : ரொம்ப நன்றி தம்பி.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. கடவுள் தான் உங்களை ஆசீர்வதிக்கணும். நீங்க நல்லா இருப்பீங்க தம்பி.. நல்லா இருப்பீங்க.

ஜான் : புன்னகைக்கிறான்

ஜான் போட்டோ பார்ப்பது போலவும், அதில் டீச்சர் “ சின்ன வயசில நான் செஞ்ச சின்ன உதவிக்கு கைமாறா நீ என் உயிரையே காப்பாதிட்டப்பா – என சொல்வது போலவும் தெரிய நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான்.

————

நிகழ்கால காட்சி

ஜான் : ( புன்னகைக்கிறான் ) ஆமா பாஸ்டர்.. உண்மையிலேயே இட்ஸ் எ கம்ஃபர்டிங் ஃபீல்.

பாஸ்டர் : இது தான் எவிடன்ஸ்.. இந்த நிம்மதி, இந்த கம்ஃபர்ட் தான் … நீங்க நினைச்சுப் பாத்தது கடவுளுக்குப் பிரியமானது, மனசாட்சிக்கு விரோதம் இல்லாததுன்னு இதனால புரிஞ்சுக்கலாம்.

ஜான் : தேங்க்யூ பாஸ்டர்

பாஸ்டர் : நம்ம மன சஞ்சலம், குடும்பத்துல இருக்கிற பிளவு சண்டை இப்படி பல விஷயங்களுக்கு நாம கடவுளை விட்டு விலகிப் போறதுதான்பா காரணம். சரி, நடந்ததைப் பற்றி கவலைப்படாம, இனி நடக்க வேண்டியதை நினைச்சுப் பாருங்க. இனி இருக்கிற வாழ்க்கையை கடவுளுக்கு பிரியமா வாழுங்க.

ஜான் : ம்ம்ம் புரியுது பாஸ்டர்

பாஸ்டர் : தற்காலிக லாபத்தை தேடினா, நிரந்தரமான விஷயங்கள் நஷ்டமாயிடும். சோ, கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கை வாழுங்க. கோடி கோடி பணம் சம்பாதிச்சா கூட நரகத்துல ஒரு துளி தண்ணீர் கூட வாங்க முடியாது..

ஜான் : ஆமா பாஸ்டர்.. பைபிளே அதை சொல்லுது. ஐ ரியலைஸ்.

( ஜெனி மனம் வருந்துகிறாள் )

ஜெனி : என் மனசு சஞ்சலத்துக்கும்.. வீட்டு பிரச்சினைகளுக்கும் இதான் காரணம்… ம்ம்… ஐ நீட் டு சேஞ்ச்.

காட்சி 7

( ஜெனி போன் பண்ணுகிறாள் )

ஜெனி : ஐயா… நீங்க மாரிமுத்து தானே….

நபர் : ஆமாம்மா…. நீங்க…

ஜெனி : ஐயா… நான் தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்களுக்கு போன் பண்ணி கார்ட் நம்பர் எல்லாம் கேட்டேன்.

நபர் : அம்மா.. என்னம்மா.. நீங்களா ? 4500 போடறேன்னு சொல்லி 40 ஆயிரத்தையும் எடுத்துட்டு போயிட்டீங்களேம்மா… என் குடும்பமே ஆடிப் போயிடுச்சுமா…

ஜெனி : சாரி.. என்னை மன்னிச்சுடுங்க. உங்க அக்கவுண்ட்ல 45 ஆயிரம் போட்டிருக்கேன்….

நபர் : நிஜமாவா சொல்றீங்க.. 45 ஆயிரமா ? நீங்க நல்லா இருக்கணும்மா… இப்போ தான் போன உசிரு திரும்ப வருது. இந்த பணம் இல்லேன்னா விவசாயமும் பண்ண முடியாது, தற்கொலை பண்ணலாமான்னு கூட யோசிச்சேன்..

ஜெனி : ஐம்.. சாரி… மன்னிச்சுடுங்க ( கண்களைத் துடைத்துக் கொள்கிறார் )

போனை வைக்கிறார்

நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்

பின் குரல்

கடவுளை நமது அரசராக, தலைவராகக் கொண்டு அவர் வழியில் நடப்பதே சிறப்பான, மகிழ்வான, நிம்மதியான வாழ்க்கை. நாமே நமது வாழ்க்கையைக் கையில் எடுத்து, சுயநலமாய் சிந்திக்கும் போது அழிவுகளும் இழப்புகளுமே நேர்கின்றன. தவறான வழியில் வாழும் வாழ்க்கையை இறைவன் நிராகரிக்கிறார், சரியான பாதைக்கு வரும்போது அவர் அவரவணைக்கிறார். நாமும் நமது வாழ்க்கையின் செயல்களை இறைவனின் வழியில் அமைப்போம். நன்றி.

Posted in Articles

செபம்

செபம்

*

காட்சி 1

( ஒரு பெண் செபித்துக் கொண்டிருக்கிறார் )

பெண் : அன்பான ஆண்டவரே, நீண்ட நாட்களா உங்க கிட்டே கேட்டுட்டே இருக்கேன் இயேசப்பா… ஒரு லேண்ட் வேண்டும்.. அதுல ஒரு வீடு வேணும்… வெளியே சுற்றிலும் கொஞ்சம் இடம் இருந்தா நல்லா இருக்கும்…. அப்படி ஒண்ணு நீங்க தான் எனக்கு தரணும். .. என்னோட ஆசை என்னன்னா…….

பெண் செபிக்கிறார் : என்னோட ஆசை என்னன்னா…….

நீங்க எனக்கு இந்த எடத்தையும் ஒரு வீடு கட்ட ஸ்பான்சரையும் குடுத்தீங்கன்னா, நான் ஏழை அனாதை பிள்ளைகளுக்காக ஒரு இல்லம் கட்டி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன்… இது என் மனசுல எரியற தாகம் இயேசுவே. ஆனாலும் என் விருப்பம் அல்ல, உங்க விருப்பமே நிறைவேறட்டும் இயேசப்பா…

காட்சி 2

( ஒரு பையன் செபித்துக் கொண்டிருக்கிறான் )

பையன் : ஆண்டவரே, என்னோட புரமோஷனுக்காக உங்க கிட்டே கேட்டிருக்கேன் இயேசப்பா.. இந்த வருஷம் எனக்கு புரமோஷன் தாங்க, கம்பெனில நான் பெரிய ஆளாகணும்… நீங்க எப்படியாச்சும் இதை எனக்கு தரணும்…

காட்சி 3

( ஒரு அம்மா செபித்துக் கொண்டிருக்கிறார் )

அம்மா : இயேசப்பா, என் அம்மாவுக்கு நல்ல சுகம் தாங்க.. கோவிட்டினால ரொம்ப கஷ்டப்படறாங்க….

காட்சி 4

(பெண் & பையன் )

பையன் : ரொம்ப உருக்கமா வேண்டிட்டிருந்ததை பாத்தேன்.. அப்படி என்ன தான் வேண்டுதல் ?

பெண் : ஒரு பெரிய லேண்ட் வேணும்.. ஒரு பெரிய வீடு வேணும், அதுக்காக தான் ப்ரேயர்..

பையன் ! : ஏன் சின்னதா ஒரு வீடு பத்தாதா ? ஏன் கடவுளுக்கு பிரஷர் குடுத்துட்டே இருக்கீங்க ? அவரு அதை நாலு பேருக்கா பிரிச்சு குடுத்திருப்பாரே…

பெண் : எனக்கு பெரிய வீடு, பெரிய இடம், பெரிய முற்றம் தான் வேணும்.. கடவுள் தருவாரு, ஐ வில் வெயிட்

பையன் : பேராசை பெருநஷ்டம்.. சொல்லிட்டேன்.

காட்சி 5

( சில மாதங்களுக்குப் பின் )

( பெண் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் . பையன் … வருகிறான் )

பையன் : வாவ்.. நீங்க ப்ரேயர் பண்ணினதை விட பல மடங்கு பெருசா ஒரு பெரிய இடமும் வீடும் கிடைச்சிருக்கே ! சூப்பர்.. ம்ம்.. கடவுள் உங்க செபத்தை தான் கேட்டிருக்காரு.

பெண் : கடவுள் எல்லாரோட செபத்தையும் கேப்பாரு…

பையன் : ஊஹூம்… எனக்கு ஒரு ப்ரமோஷனுக்காக நான் எவ்வளவோ கேட்டேன்.. அவரு தரவே இல்லை…

பெண் : ம்ம்ம்… நானும் பல வருஷமா கேட்டுட்டே இருந்தேன் இப்போ கடவுள் தந்திருக்காரு…. இதான் காட்ஸ் டைம்…

பையன் : வித்தியாசமா கட்ற மாதிரி இருக்கே… ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட போறீங்களா ?

பெண் : இல்லை…

பையன் : ஓ.. வீடு கட்டி வாடகைக்கு விடப் போறீங்களா

பெண் : இல்லை இல்லை. நான் கேட்டதே வேற….

——————

பிளாஷ் பேக் காட்சி

பெண் செபிக்கிறார் : என்னோட ஆசை என்னன்னா…….

நீங்க எனக்கு இந்த எடத்தையும் ஒரு வீடு கட்ட ஸ்பான்சரையும் குடுத்தீங்கன்னா, நான் ஏழை அனாதை பிள்ளைகளுக்காக ஒரு இல்லம் கட்டி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன்… இது என் மனசுல எரியற தாகம் இயேசுவே. ஆனாலும் என் விருப்பம் அல்ல, உங்க விருப்பமே நிறைவேறட்டும் இயேசப்பா…

—————

பையன் : ஓ.. அநாதை இல்லமா !!!

பெண் : ஆமா, ஏழைகளுக்கு இரங்குபவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறார். கடவுள் தந்த இந்த வாழ்க்கையை கடவுளுக்காக கொடுக்கணும்ங்கறது தான் என்னோட ஆசை, விருப்பம், செபம் எல்லாமே.

பையன் : ஆச்சரியமா இருக்கு…

பெண் : இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு. அன்னாவோட செபத்தை பற்றி தெரியாதா ? பையனை தாங்க, அவனை உங்களுக்கே தரேன்னு சொன்னாங்க. அதே மாதிரி நானும் செபம் பண்ணினேன். கொடுத்தாரு, அதை அவரு விருப்பத்துக்கு ஒப்புக்கொடுத்தேன்.

பசியாய் இருந்தேன் உண்ணக் கொடுத்தாய் ந்னு கடவுள் என்னை பாத்து சிரிச்சுட்டே சொல்லணும் அதான் என் ஆசை

பையன் : ஒண்டர்புல்.. எப்படி இது சாத்தியமாச்சு… ஹெவி இன்வெஸ்ட்மெண்ட் ? எப்படி ?

பெண் : எல்லாமே கடவுள் கிருபையால தான் சாத்தியமாச்சு. ஒரு பெரிய தொழிலதிபர் கோவிட்டினால் இறந்து போயிட்டாரு. அவரோட கடைசி ஆசை ஒரு அனாதை இல்லம் கட்டறதாம். அவங்க மனைவி என்னை தேடி வந்தாங்க. இட்ஸ் எ மிரக்கிள். அன் பிலீவபிள் மிராக்கிள்….

பையன் : வாவ்.. ரொம்ப ஆச்சரியமா இருக்கு

பெண் : ஆமா, அதனால கோவிட்னால பெற்றோரை இழந்த பிள்ளைங்களை தத்தெடுத்து வளக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம். ஆயிரக்கணக்கான பிள்ளைங்க அனாதைகளா மாறிட்டாங்க இந்தக் காலத்துல.. அவங்களை கவனிக்க தான்… கடவுள் இவ்ளோ வருஷம் வெயிட் பண்ணி இப்போ குடுத்த்திருக்காருன்னு நினைக்கிறேன்….

பையன் : நீங்க சொல்றது ரொம்ப டச்சிங்கா இருக்கு… ஐ ஃபீல் லைக் ப்ரேயிங்…. நான் சர்ச்க்கு போறேன்.. வரீங்களா….

பெண் : போலாமே.. வாங்க..

காட்சி 6

( பெண், பையன் & அம்மா )

பெண் : அம்மா, உங்க அம்மா நல்லா இருக்காங்களா ?

அம்மா : ஆமா, நல்லா இருக்காங்க…. உங்களுக்கு எப்படி தெரியும் ?

பெண் : நாம எல்லாம் ஒரே சர்ச் தானே.. ஒரு நாள் நீங்க ப்ரேயர் பண்ணிட்டிருக்கிறதைப் பாத்தேன்.

பெண் : ம்ம்ம்.. அது ரொம்ப நாளாச்சு, கோவிட் வந்துச்சு.. பிரேயர் பண்ணினேன். கடவுள் வீட்ல குவாரண்டைன் பண்ணி டிரீட்மெண்ட் பண்ண வெச்சு சரி பண்ணிட்டாரு.. உடனே வந்து கடவுளுக்கு நன்றி சொன்னேன்….

பெண் : ம்ம்.. என்னோட வேண்டுதலையும் கடவுள் நிறைவேற்றினாரும்மா… நானும் ஒரு ரிக்கவஸ்ட் பல வருஷமா வெச்சிட்டிருந்தேன். கடவுள் அற்புதமா நிறைவேற்றினாரு… ஒரு ஆதரவற்றோர் இல்லம் கட்டிட்டிருக்கேன்…. நானும் நன்றி சொன்னேன். எவ்ளோ நன்றி சொன்னாலும் தீராதுல்ல..

பையன் : என்னோட வேண்டுதலை தான் கடவுள் கேக்கவே இல்லை.. இந்த வருஷமும் ப்ரமோஷன் போச்சு. என்ன விட சின்ன பசங்க எல்லாம் எங்கயோ போயிட்டாங்க. ஐடோண்ட் நோ. Why…God did not answer my prayer

பெண் : அப்படி இல்லப்பா.. கடவுள் எல்லா செபத்துக்கும் பதில் குடுப்பாரு. சிலருக்கு யெஸ் ந்னு சொல்லுவாரு.. எனக்கு சொன்ன மாதிரி.. சிலருக்கு இவங்களுக்கு சொன்ன மாதிரி வெயிட் ந்னு சொல்லுவாரு. வெயிட் பண்ணினா கடவுள் தருவாரு, அவரோட டைம்ல. சிலருக்கு நோ ந்னு சொல்லுவாரு, உங்களுக்கு சொன்னமாதிரி.. ஏன்னா அது உங்களுக்கு தேவையில்லாததுன்னு அவருக்கு தெரியும்.

பையன் : ம்ம் அப்படியா சொல்றீங்க ?

பெண் : ஆமா.. எப்படின்னாலும் நாம கடவுளுக்கு நன்றி சொல்லணும். சின்ன பிள்ளைங்க கத்தி வேணும்ன்னு கேட்டா பேரண்ட்ஸ் உடனே வாங்கி குடுப்பாங்களா என்ன ? அவங்களுக்கு அது ஆபத்தாயிடும்ன்னு அப்பாக்கு தெரியாதா ? அதான் குடுக்கிறதில்லை. உலக அப்பாக்களே அப்படி இருந்தா, உலகத்துக்கே அப்பா எப்படி இருப்பாரு ?

பையன் : ம்ம்ம்.. ஆமா, ஒருவேளை அந்த புரமோஷன் என்னோட பீஸ் ஆஃப் மைண்டை கெடுத்திடும்..

பெண் : எஸ்.. தேட்ஸ் இட்… எதுன்னாலும் லெட்ஸ் தேங்க் காட்.. வாங்க சேந்து போய் கடவுளுக்கு நன்றி சொல்வோம்

பையன் : கண்டிப்பா

*

Posted in Articles

பொருத்தனை

பொருத்தனை

*

காட்சி 0

( டிவைன் ஹீலிங் மினிஸ்ட் ரீஸ் )

ஊழியக்காரர் : இயேசுவே…. உங்க பெயர் தான் எனக்கு சாப்பாடு போடுது, உங்க பெயர் தான் எனக்கு மரியாதை தருது. ஊழியத்துக்கு டிவைன் ஹீலிங்ன்னு பேரு வெச்சிருக்கேன்.. அந்த பவரை மட்டும் எனக்கு குடுத்துட்டீங்கன்னா… இந்த ஊரையே ஒரு கலக்கு கலக்குவேன்… உங்களுக்கு தான் பெயர் புகழ் எல்லாம் வந்து சேரும்…

காட்சி 1

( அம்மா & மகள் + ஊழியக்காரர் )

அம்மா : ( போனில் ) ஆமா ஐயா…. நேற்றைக்கு ஹாஸ்பிட்டல்ல சேத்தோம். ரொம்ப முடியல. சிடி ஸ்கேன்ல 50 பர்செண்ட் இம்பாக்ட்டாம்.

ஊழியக்காரர்: பயப்படாதீங்க.. நல்லா பிரேயர் பண்ணுங்க.. நானும் பையனுக்காக பிரேயர் பண்றேன்.. சரியாயிடுவான். எங்கே அட்மிட் பண்ணினீங்க ?

அம்மா : அவன் கல்யாணி ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கான்.. நீங்க போய் பிரேயர் பண்ண முடியுமா ஐயா

ஊழியக்காரர் : அ.அது.. வந்து.. இன்னிக்கு வேற ரெண்டு பிரேயர் மீட்டிங் இருக்கு… பட் வீட்ல இருந்து ப்ரேயர் பண்றேன்.

அம்மா : சரி ஐயா… ஸ்பெஷலா பிரேயர் பண்ணுங்க… … பயமா இருக்கு.

ஊழியக்காரர் :.. கவலையே படாதீங்க.. நான் எத்தனையோ பேருக்கு ப்ரேயர் பண்ணி கொரோனாவை ஓட ஓட விரட்டியிருக்கேன்.

அம்மா : தேங்க்யூ ஐயா..நீங்க சொல்றது தான் எனக்கு ஆறுதலா இருக்கு.

ஊழியக்காரர் : ஆமா.. நீங்க டெஸ்ட் எடுத்துட்டீங்களா ?

அம்மா : ஆமா ஐயா.. எங்களுக்கு நெகட்டிவ் தான்… பையனுக்கு மட்டும் தான் பாசிட்டிவ்…

ஊழியக்காரர் : பிரைஸ் த..லார்ட்.. பிரைஸ் த லார்ட். ( மனதில்… அப்பாடா.. அப்போ வீட்டுக்கு போனா பிரச்சினை இல்லை )

( போனை வைக்கிறார் )

ஊழியக்காரர் : ( போனை வைத்துவிட்டு ) ஆமா… ஹாஸ்பிடல்ல கொரோனா வார்டுக்கு போய் நம்மளையும் காலி பண்ண பிளான் பண்றாங்க… ஓ காட்…. எனக்கு கொரோனா வராம பாத்துக்கோங்க.. உங்க வேலையை என்னை மாதிரி செய்ய ஆள் இல்லை. ஞாபகம் வெச்சுக்கோங்க.

காட்சி 2

( அம்மா & மகள் செபம் செய்கிறார்கள் )

காட்சி 3

( அம்மா , மகள் & ஐயா )

அம்மா : வாங்க ஐயா.. வாங்க வாங்க..

ஊழியக்காரர் : எப்படி இருக்கீங்க .. நல்லா இருக்கீங்களா ? பையன் எப்படி இருக்கான்.

அம்மா : நாலு நாளாச்சு ஐயா.. இன்னும் சரியாகல…

ஊழியக்காரர் : ம்ம்.. அதான் உங்களை நேர்ல பாக்க வந்தேன். நைட்ல உங்க வீட்ல ஏதோ கருப்பா ஓடற மாதிரி தெரியுதா ?

மகள் : நைட்டுன்னா கருப்பா தெரியும் தானே ஐயா…

ஊழியக்காரர் : அப்படி இல்லை.. ஏதோ ஒரு தொந்தரவு உங்க வீட்ல இருக்கு.. அதை விரட்டணும்ன்னா வெறும் செபம் பத்தாது.

அம்மா : அப்போ என்ன பண்ணணும் ஐயா ?

ஊழியக்காரர் : ஃபாஸ்டிங் அண்ட் பிரேயர்… அப்போ தான் இதெல்லாம் ஓடும். இதை நான் சொல்லல, இயேசுவே சொல்லியிருக்காரு, “இத்தகைய பேய்கள் செபத்தினாலும், உபவாசத்தினாலும் தான் ஓடும்ன்னு”. அது மட்டும் ஓடுச்சுன்னா உங்க தம்பி ஹாஸ்பிட்டல்ல இருந்து இங்க ஓடியே வந்துடுவான்.

அம்மா : சரி ஐயா.. அப்படியே பண்ணிடலாம் ஐயா.. நாளைக்கே ஒரு புல் டே பாஸ்டிங் பிரேயர் போட்டுடலாம்.

ஊழியக்காரர் : வெரி குட்.. நேற்றைக்கு உங்களுக்காக நான் பாஸ்டிங் ப்ரேயர் இருந்தேன். அப்போ தான் எனக்கு இது வெளிப்பட்டுது. அதான் சொல்ல நினைச்சேன்.

மகள் : ரொம்ப நன்றி ஐயா.

ஊழியக்காரர் : அப்போ நான் வரேம்மா..

மகள் : ஐயா .. இருங்க ஒரு நிமிஷம்.. காணிக்கை எடுத்துட்டு வரேன்.

ஊழியக்காரர் : ( புன்னகை ) இந்த கொரோனா காலத்துல எதுக்கும்மா உங்களுக்கு கஷ்டம்.. காணிக்கையெல்லாம் வேண்டாம்மா

மகள் : சரி ஐயா.

ஊழியக்காரர் : சரி.. நீ மன வருத்தபப்டுவே.. காணிக்கை குடு.. கர்த்தருக்கு தானே… வருத்தத்தோட வாங்கிக்கறேன்.

காட்சி 4

( அம்மா & மகள் : பாஸ்டிங் ப்ரேயர் )

அம்மா : நல்லா ஃபாஸ்டிங் ப்ரேயர் பண்ணியிருக்கோம். கண்டிப்பா கடவுள் நம்ம வேண்டுதலை கேப்பாரு.. சீக்கிரம் பையனுக்கு சுகம் குடுத்துடுவாரு

மகள் : கண்டிப்பாம்மா..

காட்சி 5

( இரண்டு நாட்களுக்குப் பின் )

( அம்மா, மகள் & ஐயா )

மகள் : வாங்கய்யா.. வணக்கம். நல்லா இருக்கீங்களா?

ஊழியக்காரர் : நல்லா இருக்கேம்மா… தம்பி எப்படி இருக்கான் ?

மகள் : என்னன்னே தெரியல ஐயா…. அவனுக்கு ஒ2 லெவல் ஃப்ளக்சுவேட் ஆகுது… ரிக்கவரி டைம் நிறைய ஆகுது. மருந்து வேற சரியா இல்ல.. ஆக்சிஜன் வேற கிடைக்கல.

ஊழியக்காரர் : ம்ம்ம் ஒண்ணுக்கு மேல ஒண்ணா வந்துட்டே இருக்கு.

மகள் : ஆமா ஐயா.. என்ன பண்றதுன்னே தெரியல.

ஊழியக்காரர் : நான் காலைல உங்களுக்காக செபம் பண்ணிட்டிருக்கும்போ ஒரு விஷயம் மனசுல வந்துச்சு.. கடவுளோட ரிவலேஷனா தான் இருக்கணும்.

மகள் : சொல்லுங்க ஐயா.

ஊழியக்காரர் : நல்ல பொருத்தனை ஒண்ணு நீங்க பண்ணணும்.

மகள் : பொருத்தனையா ?

ஊழியக்காரர் : ஆமா.. நேர்ச்சை. நேர்த்திக்கடன்னு சொல்லுவாங்களே அது தான்…

மகள் : அது தெரியும் ஐயா.. நேர்ச்சை தான் பிரச்சினையா

ஊழியக்காரர் : எஸ்..எஸ்.. நல்ல நேர்ச்சை செய்யுங்க, அப்புறம் ப்ரே பண்ணுங்க.. எல்லாம் சரியாயிடும்.

மகள் : ஓ..ஓக்கே ஐயா

ஊழியக்காரர் : என்னம்மா சந்தேகமா பேசற மாதிரி இருக்கு… சங்கீதக்காரன் என்ன சொல்றான் ? “உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்து” ! பொருத்தனை தான் நமக்கு விடுதலை தரும்.

மகள் : சரி ஐயா.. நான் நம்ம கோயிலுக்கு ஏதாச்சும் வாங்கி குடுக்கிற மாதிரி பொருத்தனை பண்றேன்.

ஊழியக்காரர் : என்ன இது.. தம்பி எவ்ளோ பெரிய ஆபத்துல இருக்கான்.. பெருசா பொருத்தனை பண்ணணும்

மகள் : அப்போ… பக்கத்துல ஏதாவது ஒரு சர்ச்சுக்கு போய் கடவுளுக்கு நன்றி சொல்லலாம். கூடவே கொஞ்சம் ஏழைகளுக்கு உதவியும் செய்யலாம்.

ஊழியக்காரர் : இன்னும் லோக்கல்லயே இருக்கிறீங்க.. பெரிய லெவல்ல பொருத்தனை பண்ணுங்க. கணக்கு பாக்காம குடுக்கிறவங்களுக்கு கடவுளும் கணக்கு பாக்காம குடுப்பாரு.

மகள் : அப்போ நான் எருசலேம் போய் காணிக்கை குடுக்கறேன்.. அம்மாவோட ஒரு புனிதப் பயணம் பண்றேன்… எப்படி ? ஓக்கே தானே

ஊழியக்காரர் : இது சூப்பர்.. இப்போ பாருங்க, தம்பி ரெண்டே நாள்ல… துள்ளி குதிச்சு வந்துடுவான்.

மகள் : சரி ஐயா.. நான் அப்படியே பொருத்தனை பண்றேன்

காட்சி 6

( அம்மா & மகள் – பிரேயர், பைபிள் )

காட்சி 7

அம்மா & மகள்

அம்மா : ( போன் பேசிக்கொண்டே, மகிழ்ச்சியாய் போனை வைக்கிறார் )

அம்மா : பிரைஸ் த லார்ட்.. இன்னிக்கு தம்பியை டிஸ்சார்ஜ் பண்ணிடலாமாம்.

மகள் : சூப்பர்ம்மா.. சூப்பர். பாத்தீங்களா .. நான் பொருத்தனை பண்ணினேன்.. தம்பி சரியாயிட்டான்.

அம்மா : பொருத்தனையா

மகள் : ஆமாம்மா.. அதை நிறைவேத்தணும்.

அம்மா : கண்டிப்பா.. பொருத்தனை பண்ணினா உடனே நிறைவேற்றணும். இந்த வாரமே அதை நிறைவேத்திடலாம்… ஆமா என்ன பொருத்தனை பண்ணினே

மகள் : சர்ச்க்கு போயி காணிக்கை போடறதும்மா…

அம்மா : சரி, சரி.. போவோம்.. நாளைக்கு…

மகள் : அம்மா.. அது வந்து.. எருசலேம்ல உள்ள சர்ச்சுக்கும்மா..

அம்மா : என்னது ? எருசலேம் சர்ச்சா ? என்ன சொல்றே

மகள் : ஆமாம்மா… ஐயா தான் சொன்னாரு… தம்பிக்கு பெரிய நோய் ஆனதால பெருசா பொருத்தனை பண்ணணும்ன்னு

அம்மா : என் கிட்டே ஒரு வார்த்தை கேக்க மாட்டியா ? இப்போ எப்படி அங்க எல்லாம் போறது ?

மகள் : அம்மா… அது வந்து.. பாஸ்டருக்கு ஒரு ஏஜண்டை தெரியுமாம்.. அவரு ஏற்பாடு பண்ணி தருவாராம். டிஸ்கவுண்டும் தருவாராம்.

அம்மா : அதெல்லாம் கேட்டிருக்கே.. என் கிட்டே ஒரு வார்த்தை கேக்கல. இப்போ தம்பியை டிஸ்சார்ஜ் பண்றதுக்கே ரெண்டு லட்சம் ஆகும்ன்னு சொல்றாங்க.. என்ன பண்றதுன்னு நான் கையைப் பிசைஞ்சுட்டு நிக்கறேன்.

மகள் : அம்மா, பொருத்தனை விஷயத்துல ரொம்ப முரண்டு பிடிக்காதீங்க.. தம்பிக்கு சரியாயிடுச்சுல்ல.. விடுங்க.

அம்மா : ஆமா, உனக்கென்ன.. சொல்லிட்டு போயிடுவே. இப்போ நிறைவேத்தாமலும் இருக்க முடியாது, நிறைவேத்தவும் காசு இல்லை..

மகள் : அம்மா பொருத்தனை பண்ண டிலே பண்ணக் கூடாதுன்னும் ஐயா சொன்னாரு….

அம்மா : ம்ம்ம்… சரி சரி, பாப்போம்.

காட்சி 8

( அம்மா போனில் )

அம்மா : சார்.. இந்த எருசலேம் டூர் போறதுக்கு எவ்ளோ சார்ஜ் பண்றீங்க ?

நபர் : ஒரு ஆளுக்கு ஒண்ணே முக்கால் இலட்சம் ரூபா ஆகும்மா.. டென் டேஸ் டிரிப். ஆமா உங்களுக்கு என்னோட நம்பர் குடுத்தது யாரு

அம்மா : ஐயா பரிசுத்தம் தான் குடுத்தாரு..

நபர் : ஓ.. அவரா..அவரு அனுப்பற ஆட்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் உண்டும்மா… ஒண்ணரை இலட்சம் ரூபால முடிக்கலாம். எத்தனை பேரும்மா

அம்மா : ரெண்டு பேரு

நபர் : ரெண்டு பேருக்குன்னா 3 இலட்சம் ஆகும். நீங்க ஒரு இலட்சம் அட்வான்ஸ் கட்டி புக் பண்ணலாம், அடுத்த டிரிப்ல உங்களை சேத்துடுவேன். பாஸ்போர்ட் இருக்குல்ல… இல்லேன்னா அதுக்கு கொஞ்சம் செலவாகும்….

அம்மா : சரிங்க, நான் அப்புறம் போன் பண்றேன்.

நபர் : நல்லதும்மா.. சீக்கரம் சொல்லுங்கம்மா… செம டிமாண்ட்… உங்களுக்கு குடுத்திருக்கிற ஆஃபர் இன்னும் ரெண்டு நாளைக்கு தான்.

அம்மா : சரி.. சரி.. தேங்க்ஸ்…

காட்சி 9

( மகள் & அம்மா )

அம்மா : பாரு… நாம ரெண்டு பேரும் போகணும்ன்னாலே மூணு இலட்சம் ரூபா ஆவுது.. அதுக்கு முன்னாடி பாஸ்போர்ட் வாங்கணுமாம், வேற ஏதோ கொஞ்சம் செலவு இருக்குமாம்.. மொத்தம் 4 இலட்சம் ஆகும் போல

மகள் : எப்படியாவது சமாளிக்கலாம்மா..

அம்மா : ஆமா, எப்படி சமாளிப்பே… இருக்கிற நகையை எல்லாம் விக்கணும். ஊர்ல இருக்கிற நிலத்தையும் விக்கணும். அப்போ தான் இந்த பொருத்தனையை நிறைவேற்றமுடியும். ஏற்கனவே கடன்ல இருக்கோம், அதுல இது வேற….

மகள் : ஓ… அப்போ என்ன பண்ண ?

அம்மா : என்ன பண்ண ? பொருத்தனையை எப்பாடு பட்டாச்சும்C நிறைவேற்றணும்… பாப்போம்.

காட்சி 10

( எருசலேமில் சுற்றித் திரிகிறார்கள் , அம்மா & மகள் )

( இடங்கள் & கைடு ஒருவர் எல்லா இடங்களையும் காட்டுகிறார் )

மாலையில் ஒரு இடத்தில் சோர்வாக அமர்கிறார்கள்.

மகள் : என்னம்மா.. ரொம்ப சோர்வா இருக்கீங்க

அம்மா : இல்ல, தம்பி ஊர்ல தனியா இருக்கான்.. அதை நினைச்சேன்.

மகள் : ஒரு வாரம் தானே அவன் பாத்துப்பாம்ம்மா..

( அப்போது ஒருவர் வருகிறார் )

நபர் 2 : வணக்கம்மா.. எப்படி இருக்கீங்க

அம்மா : நல்லா இருக்கோம்.. உங்களை குரூப்ல பாத்தேன்.. நீங்க எப்படி இருக்கீங்க

நபர் 2 : நல்லா இருக்கேன்… ம்ம்ம்… இதான் உங்களுக்கு ஃபஸ்ட் டைமா ? ரெண்டு பேர் தான் வந்தீங்களா ?

அம்மா : ஆமா, ஃபஸ்ட் டைம் தான். பையனுக்கு உடம்பு சரியில்லை, அதனால நேர்ச்சை செய்தோம்… அப்படி தான் இங்கே வந்தோம்.

நபர் 2 : நேர்ச்சையா ?

அம்மா : ஆமா… பொருத்தனை செய்தா நிறைவேற்றணும்ல…. இருந்ததையெல்லாம் வித்து தான் இதை நிறைவேற்றியிருக்கோம்…

நபர் 2 : வாட்….., எதுக்கு அப்படியெல்லாம் பொருத்தனை பண்றீங்க … எல்லாத்தையும் வித்துட்டு எருசலேம் வரணுமா ?

மகள் : எங்க பாஸ்டர் தான்… பெரிய அளவு பொருத்தனை பண்ணணும் ஏன்னா பெரிய நோய்ன்னு சொன்னாரு.

நபர் 2 : என்னம்மா காமெடி பண்றீங்க. அப்போ இதை விட பெரிய நோய்ன்னா, அமெரிக்கா போலாம்ன்னு பொருத்தனை பண்ணுவீங்களா ? அதை விட பெருசுன்னா அண்டார்டிக்காவா ? அதை விடவும் பெருசுன்னா நிலாவுக்கு போறேன்னு சொல்லுவீங்களா ? ஏன் இப்படி பண்றீங்க

மகள் : இல்ல பாஸ்டர் ஐயா தான் பொருத்தனை செஞ்சா தான் கடவுள் பதில் தருவாருன்னு சொன்னாரு… அதான் பெருசா பண்ணினேன்.. அவருக்கு ரெவலேஷன் வந்துதாம்….

நபர் 2 : எந்த பாஸ்டர்ம்மா அப்படி சொன்னாரு ? யாரு என்ன சொன்னாலும் நம்பிடறதா ? நீங்க பைபிளை படிக்க மாட்டீங்களா ? பொருத்தனை பண்ணினா தான் நோய் தீர்ப்பேன்னு கடவுள் எங்கே சொல்லியிருக்காரு ?

மகள் : அது வந்து…

நபர் 2 : பொருத்தனை பண்ணினா நிறைவேத்தாம இருக்கவும் கூடாது. எப்தா கதை தெரியுமா உங்களுக்கு. முட்டாள் தனமா ஒரு பொருத்தனை செய்ததால தன்னோட மகளையே இழந்தாரு. எதையும் யோசிக்காம பொருத்தனை பண்ணக் கூடாதும்மா…அடுத்தவங்க சொன்னாலும் அதை சரியான்னு கடவுள் தந்திருக்க ஞானத்தால சோதிச்சுப் பாக்கணும்….

மகள் : ஓ.. இல்ல அவரு எங்க ஃபேமிலி பாஸ்டர்.. எப்பவும் எங்களுக்கு நல்லது தான் சொல்லுவாரு…

நபர் 2 : என்னம்மா ஃபேமிலி டாக்டர் மாதிரி, பேமிலி பாஸ்டரெல்லாம் வெச்சிருக்கீங்க. எந்த பாஸ்டர் என்ன சொன்னாலும் பைபிளை படிச்சு அது சரியான்னு பாத்துக்கோங்க. இப்பல்லாம் டெக்னாலஜி பைபிள் ரெஃப்ரன்சையெல்லாம் ஈசியாக்கிடுச்சுல்ல.

மகள் : அது உண்மை தான் சார்…

நபர் 2 : பொருத்தனை பண்றது தப்புன்னு சொல்லல, ஆனா நிறைவேற்ற முடியறதை பண்ணணும். கடவுள் நம்ம பொருத்தனையோட வேல்யூவை பாத்து நமக்கு நல்லது செய்றவர் இல்லை. அவர் டிரேடிங் பிஸினஸ் பண்றவர் கிடையாது.

மகள் : புரியுது சார்.. தப்பு தான்…. யாரு என்ன சொன்னாலும் நம்பிடறதும், அது சரிதானான்னு பைபிளை செக் பண்ணாம இருக்கிறதும் தப்புன்னு இப்ப தான் புரியுது.

நபர் 2 : ம்ம்.. ஏதோ பணத்தோட போச்சே.. பரவாயில்லை. இனிமே கவனமா இருங்க. இயேசு அன்பானவர். நீங்க கேட்கிறதுக்கு முன்னாடியே உங்களுக்கு என்ன தேவைன்னு அவருக்குத் தெரியும். செபம் பண்ணுங்க அவர் தருவார். இங்க வந்தா தான் தருவாருன்னு நினைக்கிறது முட்டாள் தனம். அவரே சொல்லியிருக்காரு, இந்த மலையிலயோ அந்த மலையிலயோ இல்ல, கடவுளை உள்ளத்துல வழிபடும் காலம் வரும்னு. இது அந்த காலம் தான்.

மகள் : நன்றி சார்… இனிமே கவனமா இருக்கேன்.

நபர் 2 : சரி வாங்க, அடுத்த இடத்துக்கு போகணும்…. இதை கடவுள் தந்த ஒரு வாய்ப்பா நினைச்சு எல்லாத்தையும் பாருங்க. மத்ததை அப்புறம் யோசிக்கலாம்.

*