Posted in Articles

லாயல்டி

லாயல்டி

காட்சி 1

( அலுவலகம் )

ஆபீசர் : ( பிரேயர் செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கிறார். கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கிறார் )

ஆபீசர் : ( போனில் கூப்பிடுகிறார் )… ராஜ்… ஒரு நிமிஷம் வாங்க.

ராஜ் : எக்ஸ்கியூஸ்மி… மே.. ஐ .. கம் இன் ?

ஆபீசர் : எஸ் பிளீஸ்… அந்த ஆடிட்டிங் விஷயம் எல்லாம் முடிஞ்சிடுச்சா ? இன்னிக்கு ரிப்போர்ட் அனுப்பணும்

ராஜ் : எஸ் மேம்.. பண்ணியாச்சு

ஆபீசர் : தேங்க்யூ… பிளீஸ் மேக் ஷுயர் இட்ஸ் டன். ஆமா… இந்த மாசம் அன்பு இல்லத்துக்கு பணம் அனுப்பலையா ?

ராஜ் : செக் பண்றேன் மேடம்.. பொதுவா அஞ்சாம் தேதியே அனுப்பிடுவோம்..

ஆபீசர் : இந்த தடவை மிஸ் பண்ணிட்டாங்க போல.. இன்னிக்கே அனுப்பிடுங்க. நம்ம பணத்தை எதிர்பார்த்து அவங்க காத்திருப்பாங்க. பிள்ளைங்களை பசியில தவிக்க விடக்கூடாது… முதல்ல அதை பண்ணுங்க.

ராஜ் : கண்டிப்பா மேம்

ஆபீசர் : ஓக்கே..

( ஆபீசர் வேலையைத் தொடர்கிறார் )

காட்சி 2

( மாலையில் அம்மாவுடன் – மகள் (ஆபீசர் ) )

மகள் : ஷப்பா… டயர்டா இருக்கும்மா… ஒரு காபி கிடைக்குமா…

அம்மா : முதல்ல போய் குளிச்சு ரெடியாயிட்டு வா..

மகள் : ஒரு காபி குடுங்க குடிச்சுட்டே போயிடறேன்… ரொம்ப சோர்வா இருக்கு..

அம்மா : ஆமா.. ஒரு டிரைவரை வெச்சுக்கோன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறே.. டெய்லி ஒரு மணி நேரம் இந்த டிராபிக்ல டிராவல் பண்ணினா டயர்ட் தான் ஆகும்…

மகள் : இல்லம்மா.. எனக்கு டெய்லி ஒன் அவர் மெதுவா வண்டி ஓட்டிட்டே ஒரு நல்ல கிறிஸ்டியன் மெசேஜ் கேக்கறது ஒரு ரிலாக்ஸ் மாதிரி ஃபீல் பண்றேன். என் டிராவல் டைம் புல்லா கடவுளோட வார்த்தையை கேக்கறது, அவரைப் பற்றிய மெசேஜ் கேக்கறதுன்னு நல்ல யூஸ்புல்லா தான் போவுது.. சோ, டிரைவர் வேண்டாம்.

அம்மா : ம்ம்.. சரி, என்னவோ எல்லாத்துக்கும் ஒரு ஆன்சர் வெச்சிருப்பே.. சரி, நான் காபி போட்டுட்டு வரேன்.. வெயிட் பண்ணு.

காட்சி 3

சில வாரங்களுக்குப் பின்

( ஒருவர் வீட்டுக்கு வருகிறார், ஒரு ஏழை )

நபர் : அம்மா… அம்மா

அம்மா : யாருப்பா.. என்ன விஷயம்

நபர் : அம்மா.. என் பேரு மாரியப்பன்… இந்த எழில்நகர் சேரிப் பகுதில இருக்கேம்மா..

அம்மா : சொல்லுப்பா….

நபர் : அம்மா.. ஒரு ஹெல்ப்…

அம்மா : ( பர்சைத் திறந்து 100 ரூபாய் கொடுக்கிறார் )

நபர் : நோ.. நோ.. வேண்டாம்ம்மா.. பணம் எல்லாம் வேண்டாம்…

அம்மா : பின்ன என்னப்பா ?

நபர் : இங்க ஏதாச்சும் வேலை கிடைக்குமாம்மா… உங்களுக்கு தோட்டம் இருக்கு, தோட்ட வேலை பண்றேன்.. வீடை கிளீன் பண்றேன்… என்ன வேலை வேணும்னாலும் பண்றேன்..

அம்மா : அப்படி ஏதும் வேலை இல்லையேப்பா…. வேற எங்கயாச்சும் கேட்டுப் பாரு

நபர் : நிறைய இடத்துல கேட்டுப்பாத்துட்டேன்… எங்கயும் கிடைக்கல. என் பொண்ணு வேற பத்தாங்கிளாஸ் படிக்கிறா.. நிறைய செலவு இருக்கு.. சமாளிக்க முடியல. ஊர்ல தொழில் இல்லாம இங்க வந்துருக்கோம்.

அம்மா : ம்ம்.. ஆங்.. உனக்கு டிரைவிங் தெரியுமா ?

நபர் : தெரியும்மா.. தெரியும்.. கொஞ்ச நாள் ஒருத்தருக்கு கார் ஓட்டியிருக்கேன்.

அம்மா : அப்போ டிரைவரா ஜாயின் பண்ணிக்கிறியா ? மாசம் பத்தாயிரம் ரூபா தரேன்…. டெய்லி காலைல என் பொண்ணை கொண்டு ஆபீஸ்ல விடணும், ஈவ்னிங் வீட்டுக்கு கூட்டிட்டு வரணும். அப்பப்போ கடைக்கெல்லாம் போணும். சின்னச் சின்ன வேலைகளெல்லாம் செஞ்சு தரணும்…

நபர் : ( மகிழ்ச்சியாக ) கண்டிப்பாம்மா… ரொம்ப நன்றிம்மா.. இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்.

அம்மா : சரிப்பா.. நல்லா ஓட்டுவேல்ல ?

நபர் : நல்லா ஓட்டுவேம்மா….

அம்மா : சரி, அப்போ நாளை காலைல வந்துடுப்பா…

நபர் : ரொம்ப நன்றிம்மா

காட்சி 4

( மகள் சாவியை டிரைவரிடம் கொடுக்கிறார் )

மகள் : வண்டியை கிளீன் பண்ணி வெளியே கொண்டு விட்டுடுப்பா…. பாத்து ஓட்டணும் சரியா…

டிரைவர் : கண்டிப்பாம்மா..

( ஆபீஸ் வாசலில் )

மகள் : பரவாயில்லை.. நல்லா தான் ஓட்டறீங்க… வெயிட் பண்ணுங்க .. என்னோட ஆபீஸ் டைம் முடிஞ்சதும் கால் பண்றேன்.. வண்டியை எடுத்துட்டு வாங்க..

டிரைவர் : சரிம்மா…

காட்சி 5

டிரைவர் : அம்மா… நீங்க கார்ல போடற மெசேஜ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்மா… ஆனா எனக்கு நிறைய விஷயம் புரியலைம்மா….

மகள் : ஓ.. நீங்களும் கவனிக்கிறீங்களா .. வெரிகுட்…. அப்போ இனிமே உங்களுக்கு புரியற மாதிரி போடறேன்.. இயேசுவைப் பற்றியும், அவரோட வாழ்க்கையைப் பற்றியும் ஆரம்பிப்போம்..

டிரைவர் : சரிம்மா.. ரொம்ப நன்றிம்மா…

மகள் : சரி நாளைல இருந்து ஆரம்பிப்போம்… என் பேகை எடுத்து உள்ளே வைங்க.. நான் தோட்டத்துக்கு போயிட்டு வரேன்.

டிரைவர் : அம்மா… என்னோட பொண்ணுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட சொல்லியிருக்காங்க… கொஞ்சம் அட்வான்ஸ் பணம் கிடைக்குமா… சம்பளத்துல புடிச்சிக்கலாம்ம்மா

மகள் : எவ்ளோ வேணும் ?

டிரைவர் : ஒரு எட்டாயிரம் ரூபாம்மா

மகள் : ம்ம்.. சரி, அம்மாகிட்டே கேட்டு வாங்கிக்கோங்க… நான் சொன்னேன்னு சொல்லுங்க

டிரைவர் : சரிம்மா

காட்சி 6

( சில வருடங்களுக்குப் பின் )

டிரைவர் : அம்மா… என்னோட பொண்ணுக்கு கல்யாணம் வெச்சிருக்கேம்மா

மகள் : வெரிகுட்ப்பா.. அதுக்குள்ள பொண்ணுக்கு கல்யாண் வயசாச்சா

டிரைவர் : நான் இங்கே வரும்போ பொண்ணு பத்தாங்கிளாஸ்மா.. அஞ்சு வருஷம் ஆயிடுச்சுல்லயா.. கல்யாண வயசு வந்துச்சு…கல்யாணம் பண்ணி குடுத்துட்டேன்னா எனக்கு ஒரு பெரிய நிம்மதி

மகள் : வெரிகுட்பா… வாழ்த்துகள்

டிரைவர் : கொஞ்சம்… பணம் தேவைப்படுதும்மா… நகை வாங்கவும், கல்யாண செலவுக்கும் கையில காசு இல்லை

மகள் : ம்ம்.. அம்மா கிட்டே கேளுப்பா… அவங்க தருவாங்க… எவ்ளோ தேவைப்படுது.

டிரைவர் : ஒரு மூணு இலட்சம் ரூபா தேவைப்படுதும்மா..

மகள் : மூணு இலட்சமா .. என்னப்பா விளையாடறியா..ஒரு பத்தாயிரமோ இருபதாயிரமோ கேப்பேன்னு பாத்தா இலட்சக்கணக்குல கேக்கறே

டிரைவர் : எனக்கு ஊர்ல வேற யாரையும் தெரியாதும்மா

மகள் : அது என் தப்புல்லயேப்பா…. கொஞ்சம் ஏதாச்சும் ஹெல்ப் பண்றேன்.. மத்ததை நீ வெளியே பாத்துக்கோ..

டிரைவர் : சரிம்மா…

காட்சி 6

( ஆபீஸ் )

மகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்

( போன் அடிக்குது )

ஆபீசர் : சொல்லுங்க ராஜ்…ஆங்.. வாஙக

ராஜ் : ரமேஷ் கன்சல்டன்சில இருந்து மூணு இலட்சம் ரூபா கேஷா குடுத்திருக்காங்க…

ஆபீசர் : ஏன்.. ஏன் கேஷா வாங்கறீங்க.. ஆன்லைன்ல டிரான்ஸ்பர் பண்ண சொல்ல வேண்டியது தானே..

ராஜ் : எப்பவும் அப்படி தான் பண்ணுவாங்க.. இந்த தடவை ஏதோ பிராப்ளம்ன்னு சொல்லி கேஷா குடுத்துட்டு போனாங்க…

ஆபீசர் : நாம கேஷ் டீல் பண்றதே இல்லை.. சரி, ஓக்கே.. என் பேக்ல வை.. நான் அதை எடுத்துட்டு மணி டிரான்ஸ்பர் பண்ணிடறேன்.

ராஜ் : சரிம்மா…. ( பேகில் வைக்கிறார் – கிளம்புகிறார் )

( மாலையில் மகள் பேகை எடுத்துக் கொண்டு கிளம்புகிறாள் )

காட்சி 7

( வீட்டில் காரிலிருந்து இறங்கிறாள் )

மகள் : யப்பா… என் பேகை எடுத்து உள்ளே கொண்டு வை… நான் தோட்டத்துக்கு போயிட்டு வரேன்..

டிரைவர் : சரிம்மா…

( மகள் தோட்டத்துக்கு போகிறாள், பின் வீட்டுக்கு வருகிறாள் )

மகள் : அம்மா.. ஒரு காபி பிளீஸ்

அம்மா : ( குரல் உள்ளேயிருந்து ) முதல்ல போய் குளிச்சிட்டு வா..

மகள் : ஷப்பா…. வர வழியிலயே காபி குடிச்சிட்டு வரணும் போல.

காட்சி 8

( இரவு )

மகள் பேகைப் பாக்கிறார்.. பணம் இல்லை

மகள் : அம்மா, பணத்தை எடுத்தா சொல்றதில்லையா ?

அம்மா : எந்த பணம்ம்மா ?

மகள் : என் பேக்ல இருந்து..

அம்மா : நான் எடுக்கல, என் கிட்டே தான் காசு இருக்கே.. தேவைக்கு

மகள் : அதில்லம்மா.. மூணு இலட்சம் வெச்சிருந்தேன்

அம்மா : மூணு இலட்சமா ? அங்க தான் இருக்கும்.. யாரு வரப் போறா.. நம்ம வீட்ல நாம ரெண்டு பேரும் தான் இருக்கோம்..

மகள் : நல்லா பாத்தேம்மா.. இல்லையே… எங்கயும் எடுத்து வைக்கல… ம்ம்ம்ம் பீரோலயும் பாத்துட்டேன்…

( நடந்ததை நினைத்துப் பார்க்கிறாள் )

ஆபீஸ்ல இருந்து டைரக்டா வீட்டுக்கு தானே வந்தேன்.. பேகை உள்ளே கொண்டு வெச்சேன்…

ஓ.. டிரைவர்… அவர் தானே என் பேகை எடுத்துட்டு வந்தாரு …

மகள் : அம்மா… அந்த டிரைவரை கூப்பிடுங்கம்மா….

அம்மா : டிரைவரா…, உன்னை இறக்கி விட்டுட்டு உடனே போயிட்டாரே..

மகள் : போயிட்டாரா.. என் கிட்டே சொல்லாம போக மாட்டாரே…

அம்மா : ஏதோ அவசரமா போகணும்ன்னு பதட்டப்பட்டுட்டே போனாரு.

மகள் : வழக்கத்துக்கு மாறா.. பதட்டப்பட்டுட்டே போனாரா ? அப்போ… சம்திங் ராங்

அம்மா : என்னம்மா… அவரை சந்தேகப்படறியா.. எவ்ளோ வருஷமா நம்ம கூட விசுவாசமா இருக்காரு… ஒரு அஞ்சு பைசா கூட தப்பா எடுத்ததில்லை

மகள் : அப்போ அவருக்கு பணத்துக்கு தேவை வந்திருக்காதும்மா.. இப்போ தான் அவருக்கு தேவை வருது… காலைல தான் என் கிட்டே மூணு இலட்சம் கேட்டாரு

அம்மா : மூணு இலட்சமா ! ஏன்

மகள் : அவரோட பொண்ணுக்கு கல்யாணமாம்… இப்போ பேக்ல பணத்தை பாத்ததும் சபலம் வந்திருக்கும்.. எடுத்துட்டு எஸ்கேப் ஆயிட்டாரு

அம்மா : சட்டுன்னு அப்படி ஒரு முடிவுக்கு வரவேண்டாம்மா.. எதுக்கும் நீ ஆபீஸ்ல செக் பண்ணு.

( மகள் ஆபீஸில் ராஜ்க்கு போன் பண்ணுகிறாள் )

மகள் : ராஜ்.. நீங்க காலைல எவ்ளோ பணம் குடுத்தீங்க…

ராஜ் : மூணு இலட்சம்மா.. ஏன்ம்மா கம்மியாகுதா

மகள் : நோ..நோ.. எங்கே வெச்சீங்க பணத்தை

ராஜ் : உங்க பேக்ல தாம்மா.. நீங்க தான் கூடவே இருந்தீங்களே.. உங்க முன்னாடி தானே வெச்சேன்.. ஏம்மா.. ஏதாச்சும் பிரச்சினையா ?

மகள் : நோ.. நோ நாளைக்கு சொல்றேன்.

( மகள் அம்மாவிடம் )

மகள் : அம்மா.. அவரு என் கண்ணு முன்னாடி தான் பேக்ல பணத்தை வெச்சாரு. நான் கூட தான் இருந்தேன்… நான் பேகை கார்ல வெச்சேன். அப்புறம் நேரா வீட்டுக்கு வந்தோம். பேகை அவரு வீட்ல வெச்சாரு.. இப்போ சொல்லுங்க..

அம்மா : ஒண்ணு பணத்தை நான் எடுத்திருக்கணும், எடுக்கல. உன் பணம், சோ நீ எடுக்க வேண்டிய தேவை இல்லை… அப்போ மூணாவது டிரைவர் மட்டும் தான்.

மகள் : அவர் நம்பர் குடுங்க

அம்மா : இரு நானே கூப்பிடறேன்.. ( அழைக்கிறார் ) சுவிட்ச் ஆஃப்.

அம்மா : சுவிட்ச் ஆஃப்னு வருது.

மகள் : எஸ்… அவன் தாம்ம்மா… எத்தனையோ கதை படிக்கிறோம். பல வருஷம் கூடவே இருக்கிறவங்க கழுத்தறுக்கிறது. சே… இவரும் அப்படியா…

அம்மா : அவரோட வீடு தெரியுமா ?

மகள் : எனக்கெங்கே தெரியும்.. எழில் நகர் சேரின்னு நீங்க சொன்னீங்க. அட்டையை குளிப்பாட்டி தொட்டில்ல வெச்சா அது போகுமாம் குப்பை தொட்டிக்கு.

அம்மா : ம்ம்ம்..சரி.. டென்ஷன் ஆகாதே என்ன பண்ணலாம் ?

மகள் : எனக்கு இந்த ஏரியா இன்ஸ்பெக்டரை தெரியும். என் கிளாஸ்மேட் தான். மார்ணிங் வரை பாக்கலாம்.. டிரைவர் வரலேன்னா அவர் கிட்டே சொல்றேன்..

காட்சி 9

( காலையில் )

மகள் : பாத்தீங்களா.. அவன் வரல.

( போன் பண்ணுகிறாள்.. சுவிட்ச் ஆஃப் )

இன்ஸ்பெக்டருக்கு போன் பண்ணுகிறாள்.

இன்ஸ் : ஹேய்.. என்னப்பா.. எவ்ளோ நாளாச்சு பேசி… நல்லா இருக்கியா ?

மகள் : ஹேய்… நல்லா இருக்கேன்பா.. ஒரு ஹெல்ப்…

இன்ஸ்பெக்டர் : சொல்லு, என்ன விஷயம் ?

மகள் : வீட்ல ஒரு 4 இலட்சம் களவு போச்சு, டிரைவர் எடுத்திருப்பாரோன்னு ஒரு டவுட்.

இன்ஸ்பெக்டர் : ஓ… அப்படியா… சரி, விசாரிச்சுப் பாப்போம்…. அவரு தான் எடுத்திருப்பாருன்னு தோணுதா…

மகள் : ஆமா.. அவரு தான் எடுத்திருப்பாரு.. வேற வழியில்ல… நல்லா யோசிச்சு பாத்தேன்…

இன்ஸ்பெக்டர் : சரி, அவரோட டீட்டெயில்ஸ் எல்லாம் எனக்கு வாட்சப் பண்ணு, நான் பாக்கறேன். போட்டோ இருக்கா ? இருந்தா ஒண்ணு அனுப்பு.

மகள் : ஓக்கே.. டீட்டெயில்ஸ் வாட்சப் பண்ணி விடறேன்… அவரோட போட்டோ இருக்கு.. அனுப்பறேன்.

காட்சி 10

( ஆபீஸில் )

இன்ஸ்பெக்டர் போன் பண்ணுகிறார்

இன்ஸ் : உங்க டிரைவரை புடிச்சுட்டோம்… விசாரிச்சிட்டிருக்கேன், அதை சொல்லலாம்ன்னு தான் போன் பண்ணினேன்.

மகள் : வெரிகுட்.. புடிச்சுட்டீங்களா.. வெரி குட்.. வெரி குட்… எங்கே இருந்தான்

இன்ஸ் : உங்க வீட்டுக்கு தான் வந்திருக்கான், அம்மா சொன்னாங்க அள்ளிட்டு வந்துட்டேன்

மகள் : வீட்டுக்கு வந்தாரா ?

இன்ஸ் : ஆமா.. எனக்கு எதுவுமே தெரியாது.. அம்மாக்கு எப்பவுமே துரோகம் பண்ண மாட்டேன். என் உயிரை கூட குடுப்பேன்னு திரும்ப திரும்ப சொல்றான்.

மகள் : அப்புறம் ஏன் போன் சுவிட்ச் ஆஃப் ? ஏன் சொல்லாம கொள்ளாம நேத்திக்கு ஓடினாரு ?

இன்ஸ் : வைஃப்க்கு ஒரு ஆக்சிடண்டாம்.. அதான் சீக்கிரம் கிளம்பினான் போல, விசாரிச்சேன்.. அது உண்மை தான். போன் சார்ஜ் இல்லாம ஆஃப் ஆயிடுச்சு, ஆஸ்பிடல் அலஞ்சதுல சார்ஜ் போட முடியலை சொன்னான்

மகள் : இதெல்லாம் நல்லா பிளான் பண்ணுவாங்க…

இன்ஸ் : யா..யா. நான் விசாரிக்கிறேன்.. கொஞ்சம் கழிச்சு கூப்பிடறேன்..

மகள் : ஓக்கே.. ஷுயர்…

( ராஜ் வருகிறார் )

ராஜ் : மே ஐ கம் இன்…

மகள் வாங்க.. ராஜ்.

ராஜ் : மேம்.. பணத்தை பற்றி விசாரிச்சீங்க.. என்னாச்சு மேம்.

மகள் : பணம் மிஸ்ஸிங்… சோ, டிரைவர் எடுத்திருப்பாரோன்னு ஒரு டவுட்… ஹி ஈஸ் இன் கஸ்டடி..

ராஜ் : வாட்.. மிஸ்ஸிங்கா… அது எப்படி மேம்.. எத்தனை வருஷமா உங்க கூட இருக்கான்

மகள் : யா.. யா… நீங்க பேக்ல வெச்ச பணம் பின்ன எங்க போகும் ?

ராஜ் : நான் உங்க முன்னாடி தான் இந்த பேக்ல பணத்தை வெச்சேன்.. ( இன்னொரு பேகை காட்டுகிறார் ) மேம்.. பணம் பேக்லயே தானே இருக்கு

மகள் : வாட்.. இந்த பேக்லயா வெச்சீங்க

ராஜ் : எஸ் மேம்.. இதை தான் நீங்க சொல்றீங்கன்னு நினைச்சேன்.

மகள் : ஓ.. மை காட்.. நீங்க என்னோட ஹேண்ட் பேக்ல வெச்சீங்கன்னு நினைச்சேன். .திஸ் ஈஸ் மை லேப்டாப் பேக்…. ஓ.. தப்பு பண்ணிட்டேன்.

( உடனே போலீசுக்கு போன் பண்ணுகிறாள் )

மகள் : ஹேய்.. அவனை விட்டுடுப்பா… ஒரு சின்ன மிஸ்டேக் நடந்துச்சு. பணம் கிடைச்சுச்சு..

மகள் : சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்.. பிரீயா இருக்கும்போ வீட்டுக்கு வா.. ஃபேமிலியோட…

காட்சி 11

( வீட்டில் டிரைவரிடம் )

மகள் : ஐம் வெரி சாரி… மாரியப்பன்… பணம் காணோம்ன்னதும் உன்னை சந்தேகப்பட்டுட்டேன்..

டிரைவர் : பரவாயில்லம்மா… யாருன்னாலும் சந்தேகம் வரத் தான் செய்யும்.

மகள் : இல்லப்பா…. எளிய மனிதர்கள், ஏழைகள் ந்னா திருடுவாங்கங்கற ஒரு தப்பான அபிப்பிராயம் பலருக்கும் உண்டு. அது எனக்கும் வந்துச்சேன்னு நினைக்கும்போ கஷ்டமா இருக்கு

டிரைவர் : சூழ்நிலை அப்படிம்மா.. ஆனா நான் என்னிக்கு உங்க வீட்ல வேலைக்கு வந்தேனோ, அன்னிக்கே உங்க குடும்பம் என் குடும்பம் ஆயிடுச்சும்மா.. உங்க குடும்பத்துக்கு எதிரா என் சுண்டு விரலைக் கூட நீட்ட மாட்டேன்.

மகள் : யா… நான் அதை புரிஞ்சுக்காம போயிட்டேன்.

டிரைவர்.: பரவாயில்லம்மா.. நீங்க தான் எனக்கு நிறைய விஷயங்கள் கத்துக்குடுத்திருக்கீங்க. எஜமான விசுவாசம் பற்றி பைபிள் சொல்றதெல்லாம் எனக்கு மனப்பாடமே ஆயிடுச்சு. அதை நான் மறப்பேனா.

மகள் : பைபிளை உன்னை விட பல வருஷம் முன்னாடியே நான் படிக்கிறேன். பட்.. ( தலையை குலுக்குகிறாள் )

டிரைவர் : ஃபீல் பண்ணாதீங்கம்மா.. நான் அதை அப்பவே மறந்துட்டேன்… இதெல்லாம் ஒரு சின்ன விஷயம். சாவியை குடுங்க காரை தொடச்சு வெக்கிறேன்.

மகள் : நீ.. மறுபடியும் வேலைக்கு வரமாட்டியோன்னு நினைச்சேன்.

டிரைவர் : என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க… நீங்க ரூத் கதையை சொன்னீங்களேம்மா… அதுமாதிரி தான் நானும். உங்க குடும்பம் என் குடும்பம். உங்க ஆண்டவர் என் ஆண்டவர். நான் அதை மீறி போகவே மாட்டேன். கடவுள் தண்டிச்சாலும் நான் அவரை தான் சுத்தி வருவேன். நீங்க தண்டிச்சாலும் நான் உங்களை விட்டு விலக மாட்டேன்.

மகள் : ரொம்ப நன்றிப்பா…. ( பணத்தை கட்டாக அவர் கையில் கொடுக்கிறாள் )

டிரைவர் : இது.. இது .. இது என்னம்மா

மகள் : மூணு இலட்சம் இருக்குப்பா.. பொண்ணு கல்யாணத்தை நல்லா நடத்து. இது வரை என் குடும்பம் உன் குடும்பமா இருந்துச்சு, இன்னில இருந்து உன் குடும்பம் என் குடும்பம்மா..

டிரைவர் : ரொம்ப நன்றிம்மா.. இதை சீக்கிரமே நான் திருப்பி குடுத்துடறேன்ம்மா

மகள் : இல்ல.. இல்ல.. அதெல்லாம் வேண்டாம்… இது என்னோட அன்பளிப்பா இருக்கட்டும்.

பின் குரல்

விசுவாசம் என்பது பிரதிபலன் எதிர்பார்த்து தொடர்வதல்ல. சுயநல சிந்தனைகளோடு நடப்பதல்ல. வாழ்விலும், தாழ்விலும் இணைந்து பயணிப்பது. மகிழ்வின் காலத்திலும், துயரத்தின் காலத்திலும் தொடர்ந்தே நடப்பது. ரூத் தனது மாமியார் நகோமியோடு இணைந்து பயணித்தார். தனது உறவுகளை, நாட்டை, கடவுளை விட்டு விட்டு நகோமியோடு வாழ்ந்தார். இஸ்ரயேயில் கடவுளை தன் கடவுளாய்ப் பற்றிக் கொண்டார். அவரது இதயத்தின் தூய்மையும், அன்பும், கரிசனையும் இறைவனை பிரியப்படுத்தியது. நமது வாழ்க்கையும் இறைவனுக்குப் பிரியமானதாய் மாற வேண்டும். அதற்கான அர்ப்பணிப்பையும் விசுவாசத்தையும் நாம் கொண்டிருக்க வேண்டும்.

நன்றி

Posted in Articles

கடுகு விதைகள் -Good Prayer

காட்சி 1

( நபர் 1 செபிக்கிறார் )

இயேசுவே எல்லா இடங்களிலும் நடந்து நடந்து ஊழியம் செய்ய என்னால முடியல.. ஒரு சைக்கிள் குடுங்கன்னு கேட்டுட்டே இருக்கேன். எப்படியாச்சும் ஒரு சைக்கிள் குடுங்க கடவுளே…

காட்சி 2

(நபர் 2 சந்திக்கிறார் )

நபர் 1 : வாங்கம்மா.. என்ன இந்த பக்கம்.. ஐயா நல்லா இருக்காரா ? உங்க ஊழியம் எல்லாம் எப்படி போவுது

நபர் 2 : கடவுள் கிருபைல நல்லா போவுது…. உங்களுக்கு எப்படி போவுது ?

நபர் 1 : ம்ம்.. என்ன சொல்ல, நடந்து நடந்து போறது ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஒரு சைக்கிள் கிடச்சா நல்லா இருக்கும்.

நபர் 2 : ஓ.. ஓக்கே.. கடவுள் தருவாரு.. கவலைப்படாதீங்க..

காட்சி 3

( நபர் 2 )

கடவுளே.. அந்த ஊழியக்காரர் ரொம்ப கஷ்டப்படறாரு.. அவருக்கு ஒரு நல்ல சைக்கிள் குடுங்க ஆண்டவரே..

காட்சி 4

( இருவரும் சந்திக்கிறார்கள் )

நபர் 1 : ஹேய்.. ஒரு சந்தோசமான விஷயம்.. எனக்கு கடவுள் ஒரு சைக்கிள் குடுத்தாரு. ஒருத்தரு நேரடியா வீட்டுக்கே வந்து நான் பைக் வாங்கிட்டேன், எனக்கு இந்த சைக்கிள் தேவையில்லை, நீங்க நடந்து போறதைப் பாக்க கஷ்டமா இருந்துச்சுன்னு சொல்லி குடுத்தாரு.

நபர் 2 : வாவ்.. பிரைஸ் த லார்ட்

நபர் 1 : ஆமா.. பிரைஸ் த லார்ட்.. என்னோட செபத்துக்கு பதில் கிடைச்சிருக்கு. ஆமா உங்க வாழ்க்கை எப்படி போவுது

நபர் 2 : ஆங்.. அது ரொம்ப சர்ப்ரைஸ்… ஒரு நாள் ஒருத்தரோட வீட்ல போய் செபம் பண்ணினோம். நானும் என் ஹஸ்பென்டும் நடந்து வரதைப் பாத்து எங்களுக்கு ரெண்டு சைக்கிள் அவரு குடுத்தாரு. அவரு சைக்கிள் கம்பெனி வச்சிருக்காராம்.

நபர் 1 : ஓ… ரெ..ரெண்டு சைக்கிளா… ம்ம்ம்.. லக் தான்…

நபர் 2 : எல்லாம் கடவுள் கிருபை.

காட்சி 5

( சில மாதங்களுக்குப் பின் )

நபர் 1 : சைக்கிள் மிதிச்சு மலையில ஏற முடியல, ஒரு பைக் இருந்தா நல்லா இருக்கும்.. நான் பிரேயர் பண்ணிட்டே இருக்கேன்

நபர் 2 : கண்டிப்பா கடவுள் தருவாரு

காட்சி 5 ஆ

நபர் 2 : கடவுளே அந்த ஊழியருக்கு ஒரு பைக் குடுங்க.. பாவம்… அவரு சைக்கிள் ஓட்டி கஷ்டப்படறாரு

காட்சி 6

( சில வாரங்களுக்குப் பின் )

நபர் 1 & நபர் 2

நபர் 1 : ஹேய்.. விஷயம் தெரியுமா .. கடவுள் எனக்கு ஒரு பைக் குடுத்தாரு.. ஸ்கூட்டி…. செம.. காட் ஈஸ் க்ரேட். பிரைஸ் த லார்ட்

நபர் 2 : யா… கார் ஈஸ் ரியலி க்ரேட். ஒரு கதை தெரியுமா ? ஒரு நாள் நாங்க சைக்கிள்ல போயிட்டிருக்கும்போ ஒரு கார் மோதிடுச்சு… பெரிய லக்சுரி கார். நல்ல வேளை எதுவும் ஆகல. பாத்தா அவரு எங்க சர்ச் மெம்பரோட பிரண்ட்… அவரு எங்க நிலமையைப் பாத்துட்டு ரெண்டு ஸ்கூட்டி வாங்கி குடுத்தாரு..

நபர் 1 : ரெ..ரெண்டு ஸ்கூட்டியா.. செம லக்கி தான்.

நபர் 2 : யா.. பிரைஸ் த லார்ட்.

காட்சி 7

நபர் 1 : கடவுளே.. நான் உபவாசம் இருந்து, ராப்பகலா கேட்டுக் கேட்டு ஒரு விஷயம் தரீங்க.. ஆனா அவங்களுக்கு கேக்காமலேயே டபுள் டபுளா குடுக்கறீங்க…

இது நியாயமே இல்லை..

( கடவுளின் குரல் )

பக்தனே… உனக்கு சைக்கிள் வேண்டும் என அவர்கள் செபம் செய்ததால் தான் உனக்கு சைக்கிள் கொடுத்தேன். பிறருக்காக செபித்த அவர்களுடைய அன்புக்காக அவர்களுக்கும் ஆளுக்கொரு சைக்கிள் கொடுத்தேன்.

உனக்கு பைக் வேண்டுமென்றும் அவர்கள் உருக்கமாக செபித்தார்கள். அது உன்மீது கொண்ட அன்பு. உனக்காக செபிக்கிறேன் என்று உன்னிடம் கூட அவர்கள் சொல்லவில்லை. ரகசியமாகச் செய்தார்கள். அந்த அன்பினால் தான் உனக்கு பைக் கொடுத்தேன். இத்தகைய அன்பு வைத்திருக்கும் அவர்களுக்குக் கொடுக்காமல் இருக்க முடியுமா அதனால் அவர்களுக்கும் ஒவ்வொன்று கொடுத்தேன்.

( நபர் 1 )

கடவுளே.. என்னை மன்னியுங்கள். பிறருக்காக செபிக்க வேண்டும் என்பதை புரிய வைத்தீர்கள். நான் சுயநலமாக செபித்துக் கொண்டிருந்தேன்.. என்னை மன்னியுங்கள் இயேசுவே….

பின் குறிப்பு

நமது செபங்கள் சுயநலச் சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கக் கூடாது. பிறருக்காக உண்மையான அன்பு, கரிசனை. மன உருக்கம் கொண்டு செபிக்க வேண்டும். அப்படிப்பட்ட செபங்களுக்குக் கடவுள் மகிழ்வுடன் பதிலளிக்கிறார். அப்படிப்பட்ட இறைவேண்டல்கள் செய்யும் மக்களை இறைவன் நேசத்துடன் அரவணைக்கிறார். இந்த உண்மையை உணர்வோம், தேவையில் இருக்கும் ஒவ்வொருவரையும் நம் சகோதரராய்க் கருதி அவர்களுக்காய் செபிப்போம். நன்றி

Posted in Articles

கடவுளை மறந்தவர்கள்

கடவுளை மறந்தவர்கள்

*

( பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் பேசுகிறார் )

த.ஆசிரியர் : இந்த வருஷம் நாம ஸ்கூல்ல நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கு. பேரண்ட்ஸ் கிட்டே இருந்து நிறைய கம்ளெயிண்ட்ஸ் வந்திருக்கு. அதுக்கு தக்கபடி நான் கொஞ்சம் மாற்றங்கள் செய்றேன்… அதை உங்களுக்கு அறிவிக்கவும் உங்க கருத்தைக் கேட்கவும் தான் இந்த கூட்டம்.

த.ஆ : நம்ம ஸ்கூல் கிறிஸ்டியன் ஸ்கூல் தான். ஆனா நிறைய பிற மத மக்கள் படிக்கிறாங்க. அவங்க நிறைய டொனேஷனும் தராங்க. நம்ம ஸ்கூல் பிரச்சினை இல்லாம ஓடறதுக்கு அவங்களும் ஒரு காரணம். அதனால அவங்க சொல்ற சஜஷன்களை நாம தள்ளிடவும் முடியாது.

த. ஆ: இனிமே காலைல பைபிள் வாசிச்சு செபம் பண்றது இருக்காது. அதுக்கு பதிலா பொதுவான ஒரு நல்லொழுக்கப் பாடல் பாடுவோம், பொதுவான ஒரு செபம் செய்வோம். இயேசு, பைபிள், இப்படி வெளிப்படையா எதையும் பேச வேண்டாம்.

த. ஆ : நம்ம ஸ்கூல் கேம்பஸுக்கு உள்ளே தனியா சேப்பல் வெச்சிருக்கோம், அதை இனிமே மாரல் சயின்ச் – செண்டரா மாத்துவோம். நீதிக்கதைகள் பற்றி மட்டும் பேசுவோம். அங்கே சர்வீஸ், பைபிள் ஸ்டடி, எல்லாம் வேண்டாம்.

த. ஆ : கிறிஸ்மஸ், ஈஸ்டர் க்கு நாம ஸ்கூல்ல ஃபங்ஷன் கொண்டாடறதை எல்லாம் ஸ்டாப் பண்ணுவோம். அது மற்ற மக்களை ஒதுக்கற மாதிரி இருக்கும்.

த. ஆ : உங்களுக்கு ஏதாச்சும் கருத்துகள் இருந்தா சொல்லலாம்

( ஒரு ஆசிரியை எழும்புகிறார் )

த. ஆ : சொல்லுங்க மிஸ்.

மிஸ் : நம்ம ஸ்கூல் பெயரை ஹோலி கிராஸ் ந்னு தான் வைக்கப் போறோமா ? இல்லை ரெயில்வே கிராஸ்ன்னு ஏதாச்சும் மாற்ற போறோமா சார் ?

த. ஆ : வாட் டு யூ மீன்

மிஸ் : இல்ல, ஹோலி கிராஸ் கொஞ்சம் கிறிஸ்டியன் பேரா இருக்கே.. அதையும் காமனா மாத்தறீங்களோன்னு கேட்டேன்.

த. ஆ : நீங்க நக்கலா கேக்கறீங்கன்னு நினைக்கிறேன். நேம் எல்லாம் மாத்த முடியாது. ஏன்னா எல்லா இடங்கள்ளயும் அது ரிஜிஸ்டர் ஆகியிருக்கு.

மிஸ் : சோ.. இது ‘பேரளவில’ கிறிஸ்டியன் ஸ்கூல் மற்றபடி சாதாரண ஸ்கூல்.. அப்படி தானே சார்.

த. ஆ : மிஸ்.. நீங்க இந்த சொசைட்டியோட பல்ஸை புரிச்ஞ்சுக்கணும். உலகத்துக்கு ஏற்ப நாம மாறணும். நான் இன்னிக்கு சொன்ன சேஞ்சஸ் எல்லாம் வெஸ்டன் கன்ட்றீஸ்ல எப்பவோ வந்தாச்சு.

மிஸ் : அதனால தான் அவங்க கடவுளை விட்டு தூரமா போயாச்சு சார். நம்ம ஸ்கூல்ல படிச்சா நல்ல வேல்யூஸ் கத்துப்பாங்கன்னு தான் நிறைய பேரு பிள்ளைங்கள இங்க விடறாங்க… கிட்ஸோட ஃபியூச்சர் பாதிக்கப்படக் கூடாது சார்… வி ஷுட் ஸ்டேன்ட் யுனீக்….

த. ஆ : நீங்க சின்ன வயசு… உங்களுக்கு இதெல்லாம் புரியாது…. ஒரு ஸ்கூல் நடத்தறதுல இருக்கிற கஷ்டம் மேனேஜ்மெண்டுக்கு தான் தெரியும்.

த. ஆ : டீச்சர்ஸ்.. உங்களோட சஜஷனை எல்லாம் என்னோட ஆபீஸுக்கு அனுப்புங்க, ஐ வில் டேக் வாட் ஈஸ் நெசசரி.. ஓக்கே..

காட்சி 2

( ஆசிரியை ஸ்கூல் சேப்பலில் செபிக்கிறார் )

காட்சி 2 ஆ

( ஒரு பையன் வீடியோ கேம் விளையாடுகிறான்.. மிஸ் வருகிறார் )

மிஸ் : என்னப்பா… வீடியோ கேமா.. வீட்டுக்கு போகாம இங்க உக்காந்து விளையாடிட்டிருக்கே

( மிஸ் எட்டிப் பார்க்கிறார் )

மிஸ் : ஹேய்.. இது அந்த டார்க் வெப் புளூவேல் மாதிரி கேம் இல்லையா ? இதை ஏன் விளையாடறே..

பையன் : மிஸ்.. இதெல்லாம் நல்ல விளையாட்டு தான் மேம்.

மிஸ் : இல்லப்பா.. இது ரொம்ப மோசமான விளையாட்டு. இந்த விளையாடு விளையாடி ஏற்கனவே நிறைய பேரு உயிரையே விட்டிருக்காங்க தெரியும்ல

பையன் : மிஸ்.. அதெல்லாம் முதுகெலும்பில்லாத பசங்க.. ஐம் ஸ்ட்றாங்.

மிஸ் : எல்லாம் அப்படித் தான் தெரியும்.. இதெல்லாம் ரொம்ப தப்பு. விட்டுடு பிளீஸ்…

பையன் : மிஸ்… ஆஃப்டர் ஸ்கூல் அவர்ஸ்ல நான் என்ன விளையாடறேன்.. என்ன பண்ணறேன்னு நீங்க ஏன் மிஸ் கவலைப்படறீங்க.. லீவ் மி எலோன்.. ஐ நோ. பசங்களை ரொம்ப டார்ச்சர் பண்ண கூடாதுன்னு ஸ்கூலே சொல்லுது, நீங்க ஏன் மேம்…

மிஸ் : இல்லப்பா.. இதெல்லாம் இயேசப்பாக்கு புடிக்காத விஷயம். நீ அந்த ஸ்டெல்லா பையன் தானே.. அவங்க சர்ச்ல எவ்ளோ ஈடுபாடா இருக்காங்க…

பையன் : மேம்.. மம்மி ஆல்சோ கிவ் மி மை ஸ்பேஸ்… நான் விளையாடறதை எல்லாம் கண்டுக்க மாட்டாங்க. அட்வைஸ் பண்ணுவாங்க.. தேட்ஸ் இட்…

மிஸ் : ( தனியாக ) ம்ம்ம்.. ஸ்கூல்லயும் இயேசுவை விட்டுட்டு மாறலை எடுத்தாச்சு. வீட்டிலயும் கண்டிப்பை விட்டுட்டு அட்வைஸை எடுத்தாச்சு… என்ன ஆகப் போகுதோ அடுத்த தலைமுறை.

காட்சி 3

( மிஸ் & ஸ்டெல்லா )

ஸ்டெல்லா : ஹாய் மிஸ்.. என்ன இந்தப் பக்கம் ?

மிஸ் : நான் இங்க தான் ஷாப்பிங் வருவேன்.. நீங்க எப்படி இருக்கீங்க ?

ஸ்டெல்லா : நல்லா இருக்கேன் மிஸ்… நீங்க எப்படி இருக்கீங்க ?

மிஸ் : ஐம்.. ஃபைன்.. பையன் எப்படி இருக்கான் ?

ஸ்டெல்லா : நல்லா இருக்கான்.. இப்போ பசங்களுக்கு எல்லாம் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தா போதுமே.. உலகத்தையே மறந்துடறாங்க….

மிஸ் : ம்ம்.. அதைப்பற்றி நானே உங்க கிட்டே பேசணும்ன்னு நினைச்சேன். அவன் விளையாடற விளையாட்டெல்லாம் சரியில்லை. நெட்வர்க் கேம்ஸ்… நிறைய சவால்கள் பண்ண சொல்லுவாங்க, அப்புறம் மிரட்டுவாங்க. அதை விளையாடி நிறைய பேரு சூயிசைட் பண்ணிகிட்டதா நீங்க பேப்பர்ல கூட பாத்திருப்பீங்க.

ஸ்டெல்லா : யா..யா.. பட் அவன் அப்படி இல்ல மேம்.. ஹி ஈஸ் எ ஸ்மார்ட் பாய்.. அப்படியெல்லாம் போய் விழமாட்டான். அவனை ரொம்ப கான்ஃபிடண்டா வளர்த்திருக்கோம்.

மிஸ் : கான்ஃபிடண்டா வளர்க்கிறது நல்லது தான், அதுக்கு மேலா கடவுளுக்குப் பயந்தவனா வளர்க்கணும். அது ரொம்ப முக்கியம்.

ஸ்டெல்லா : இந்த காலத்துல கடவுள் எல்லாம் ஒரு எமோஷனல் கம்ஃபர்ட்க்காக தான் மேம்.. கேரியர், குரோத், ஸ்டடீஸ், எவ்ரிதிங் பேஸ்ட் ஆன் கான்பிடன்ஸ்.. செல்ஃப் எஸ்டீம்…. இப்படி தான் மேம்.

மிஸ் : ம்ம்ம்.. எல்லாமே மாறிப் போச்சு.. பிரம்பைக் கையாளாதவன் மகனைப் பகைக்கிறான்னு பைபிள் சொல்லுது, நாம பிள்ளைகளை திட்டறதுக்கே யோசிக்கிறோம்.

ஸ்டெல்லா : அதெல்லாம் சாலமோன் சுமார் 3000 வருஷத்துக்கு முன்னாடி சொன்னது மிஸ்… அதையே இப்பவும் ஃபாலோ பண்ண முடியுமா ? வேர்ல்ட் ஈஸ் சேஞ்சிங்… கடவுள் வேண்டாம்ன்னு சொல்லல, கடவுள் மட்டுமே வேணும்ன்னு சொல்றதும் சரியில்லேன்னு சொல்றேன்.

மிஸ் : சரி மேம்.. சொல்லணும்ன்னு தோணிச்சுது.. பிளீஸ்… டேக் கேர்.. ஹி ஈஸ் அ ஸ்மார்ட் பாய்.. நான் வரேன்.

காட்சி 3 பி

காட்சி 4

( பையன் மொபைல் விளையாடுகிறான் )

காட்சி 3 பி

*

( பையன் விருது வாங்குகிறான் )

த. ஆ : இந்த வருடம் நடந்த அறிவியல் கண்காட்சியில முதல் பரிசை வாங்கியிருக்கிறான் ஜேம்ஸ். அவனுக்கு என்னுடைய சார்பாகவும், இந்த பள்ளியின் சார்பாகவும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். யூ மேட் அஸ் ப்ரவுட்

( ஜேம்ஸ் விருது வாங்குகிறான் )

த. ஆ : மாணவர்களோட தன்னம்பிக்கையை தட்டி எழுப்பினா எவ்வளவு பெரிய உயரத்துக்கு போவாங்க என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். இன்னும் குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டாம ஆசிரியர்கள் எல்லாம் ஒரு புதிய சமூகத்தைப் படைக்க முன் வரணும்

( ஆசிரியை அமைதியாய் இருக்கிறார் )

த. ஆ : மாணவர்களெல்லாம் பழங்கால சிந்தனைகளை உதறிட்டு, புதிய ஒரு சமூக மாற்றத்துக்காக சிறகடித்துப் பறக்கணும்ன்னு வாழ்த்தறேன்.

காட்சி 5

( பையன் பதட்டத்தில் இருக்கிறான்.. மொபைலில் எதையோ செய்கிறான் )

காட்சி 6

( அம்மா & பையன் )

பையன் : அம்மா, அப்பா எங்கேம்மா ?

அம்மா : டேய்.. அப்பா போலீஸ் ஸ்டேஷன் போயிருக்காருடா

பையன் : போ..போலீஸ் ஸ்டேஷனா ? ஏன்

அம்மா : அப்பாவோட அக்கவுண்ட்ல இருந்த 5 இலட்சம் ரூபாவை யாரோ திருடிட்டாங்க. டிரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க சம் அக்கவுண்ட்க்கு.. அதான் சைபர் செல்லுக்கு கம்ப்ளையிண்ட் குடுக்க அப்பா போயிருக்காரு.

பையன் : அ..அங்க என்ன பண்ணுவாங்கம்மா

அம்மா : அவங்க ஐபி டீட்டெயில்ஸ் வெச்சு எங்க இருந்து , யாரு பணம் அனுப்பினதுன்னு கண்டுபிடிச்சு அவனை தூக்கி ஜெயில்ல போடுவாங்க.. பணம் எல்லாம் போச்சுல்ல.. ஒரே டென்ஷனா இருக்கு

பையன் : அம்மா… நான் ஒண்ணு சொன்னா.. கோச்சுக்க மாட்டீங்களே.

அம்மா : சொல்லுடா

பையன் : அ..அந்த பணத்தை அனுப்பினது நான் தாம்மா..

அம்மா : வாட்… நீயா ?

பையன் : ஆமாம்மா.. ஒரு கேம் விளையாடறேன்ல.. அதுல ஒருத்தன் வீடியோ சேட்ல வந்து நம்ம வீட்ல இருக்கிறவங்க போட்டோ எல்லாம் காட்டி எல்லாரையும் காலி பண்ணிடுவேன்… பணம் அனுப்புன்னு மிரட்டினான்.

அம்மா : மிரட்டினா.. குடுத்துடறதா ?

பையன் : நம்ம பேங்க் டீட்டெயில்ஸ், பேலன்ஸ், நம்ம போட்டோ, நம்ம எல்லா டீட்டெயில்ஸையும் அவன் திருடி வெச்சிருக்கான்மா… அப்பா ஆபீஸுக்கு போகும்போ காலி பண்ணிடுவேன்னு மிரட்டினான்…

அம்மா : ஓ.. மை காட்… இவ்ளோ முட்டாளா இருந்து பணத்தை அனுப்பிட்டியே.. உடனே எங்க கிட்டே சொல்லியிருக்கலாமே… நீ நல்ல கான்ந்பிடன்ஸ் உள்ள பையனா இருப்பேன்னு பாத்தா, இப்படி இருக்கியே…

பையன் : ஐம் சாரிம்மா…

அம்மா: இப்போ சாரி சொல்லி என்ன ப்ரயோசனம். கடவுளுக்கு பயந்த பிள்ளையா வளத்தியிருந்தா இந்த மாதிரி கேமே விளையாடி இருக்க மாட்டே.. அன்னிகே மிஸ் சொன்னாங்க, பிரம்பைக் கையாளணும்ன்னு

பையன் : அம்மா… நானும் அவங்க சொன்னதை கேக்காம போயிட்டேன்ம்மா.. கொஞ்ச நாளாவே நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன். நான் உங்க கிட்டே சொல்லியிருக்கணும்… இப்போ ரியலைஸ் பண்றேன்.

அம்மா : ஃபியர்லெஸ் ஜெனரேஷனை உருவாக்கணும்னு நினைச்சு, காட்லெஸ் ஜெனரேஷனை தான் உருவாக்கி வெச்சிருக்கோம்… ம்ம்ம்.. வாட் எ பிக் மிஸ்டேக் வி ஆர் டூயிங்…

( அம்மா போன் எடுக்கிறார் )

அம்மா : ஹலோ

அம்மா : வெயிட் பண்ணுங்க.. நம்ம பையன் தான் அனுப்பியிருக்கான்..

அம்மா : எல்லாம் டீட்டெயிலா சொல்றேன்.. குடுங்க குடுங்க…. கம்ப்ளெயிண்ட் குடுங்க. சின்ன பிள்ளைங்கள மிரட்டி எப்படியெல்லாம் பணம் பறிக்கறாங்க !

அம்மா : அவன் இங்கே தான் இருக்கான்… லேட்டா ரியலைஸ் பண்றான்.. என்ன பண்ண ?

காட்சி 7

( பையன் & மிஸ் )

பையன் : மிஸ்.. ஐம் சாரி மிஸ்.. நீங்க பல தடவை அட்வைஸ் பண்ணியும் நான் கேக்கல.. இப்போ நான் பெரிய சிக்கல்ல மாட்டிட்டேன்.

மிஸ் : அம்மா எல்லாம் சொன்னாங்க.. இப்பவாச்சும் ரியலைஸ் பன்ணினியே ! இனிமேலாச்சும் இயேசு என்ன சொல்றாரோ அதன் படி நடக்க கத்துக்கோப்பா… பைபிள் காட்டற வழியில நடந்தா நாம தேவையில்லாத பாவத்துல விழ மாட்டோம்

பையன் : ஆமா மிஸ்

மிஸ் : ஏலியோட கதை தெரியும்ல, அவன் பிள்ளைங்களை கடவுளுக்கு பயந்தவங்களா வளர்த்தாம விட்டதால கடைசில எல்லாருமே அழிஞ்சாங்க. கடவுளே தன்னோட வாக்குறுதியை பின்வாங்கி அவங்களை அழிச்சாருன்னா பாத்துக்கோ… கடவுளுக்கு எதிரா நடக்கிறது ஈஸ் எ சீரியஸ் சின்.

பையன் : இப்போ ரியலைஸ் பண்றேன் மேம்.

மிஸ் : வெரி குட்… நாம படிக்கிற இடத்துல யாரு எப்படி வேணா சட்டம் போடலாம். பட், நம்ம மனசுக்கு நாமே சட்டம் போடுவோம். “இயேசப்பா வழியில தான் நடப்பேன்னு” சரியா ?

பையன் : கண்டிப்பா மிஸ்

காட்சி ( ..)

போலீஸ் இன்ஸ்பெக்டர் அழைக்கிறார்

போலீஸ் : சார், நீங்க எங்க ஸ்டேஷன் வரை வந்துட்டு போணும்….

த. ஆ : ஸ்டேஷனா.. ஏன் என்னாச்சு ?

போலீஸ் : என்னாச்சா ? என்ன சார் ஸ்கூல் வெச்சு நடத்தறீங்க ? எல்லா சமூக விரோதிகளையும் உருவாக்கி விடுவீங்க போல

த. ஆ : சார்.. எங்க ஸ்கூலுக்குன்னு ஒரு மரியாதை, பெயர் எல்லாம் இருக்கு சார். என்னன்னு சொல்லுங்க

போலீஸ் : அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு… ஏன் இப்படி சடன்னா கெட்டுப். போச்சு… ! உங்க ஸ்டுடண்ட் ஜேம்ஸ் 5 இலட்சம் ரூபா ஏமாந்த கதை தெரியும்ல…

த. ஆ : ஆமா சார்.. அது டார்க் கேம்ஸ் ல மாட்டிகிட்டான் சார்… ஐ திங்.. உகாண்டால இருந்து ஏதோ ஒரு டீம் ஏமாத்தியிருக்கு..

போலீஸ் : அதெல்லாம் டிராக் பண்ணியாச்சு.. உகாண்டாவும் இல்ல, அனகோண்டாவும் இல்ல. எல்லாம் உங்க ஸ்கூல் சீனியர் பசங்க தான். மணியை ரிக்கவர் பண்ணி பேரண்ட்ஸ் கிட்டே கொடுத்தாச்சு.

த. ஆ : சார், என்ன சொல்றீங்க ?? என் ஸ்கூல் பசங்களா ?

போலீஸ் : ஆமா.. உங்க ஸ்கூலுக்கு நல்ல நேம் இருக்கு. இங்கே படிச்சவங்க சமூகத்துல பெரிய பெரிய போஸ்ட்ல இருக்காங்க. அதான் நான் உங்களுக்கு தனியா போன் பண்ணி பேசிட்டிருக்கேன்.

த. ஆ : நான்.. ஸ்டேஷனுக்கு வரேன் சார்..

போலீஸ் : சரி.. சரி… ஸ்கூலோட தரத்தை குறைச்சுக்காதீங்க சார்…. இந்த மாதிரி நாலு ஸ்கூல் இருந்தா தான் சமூகத்துக்கு நல்ல மக்கள் கிடைப்பாங்க. அடுத்த தலைமுறையை நீங்க தானே உருவாக்கணும்…

த. ஆ : கண்டிப்பா சார்.. இப்போ புரியுது.

காட்சி ( … )

தலைமை ஆசிரியர் கடிதம் எழுதுகிறார்

அன்பின் ஆசிரியர்களுக்கு,

நமது பள்ளிக்கூடத்தில் சில விருப்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விட்டன. அதை நீங்கள் அறிவீர்கள். நமது பள்ளிக்கூடத்திற்கு இருந்த பெருமை சிதையவும் அது காரணமாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் காரணம் நமது பள்ளியில் நான் கொண்டு வந்த மாற்றங்கள் தான். இனிமேல் நமது பள்ளி பழையது போல இயங்கும். நமது கிறிஸ்தவ மதிப்பீடுகளின் படி தான் நிர்வாகம் இயங்கும். புதிதாக கொண்டு வந்த மாற்றங்கள் இன்று முதல் செல்லாது என அறிவிக்கிறேன்

( அந்த ஆசிரியை வாசிக்கிறார் )

( தலைமை ஆசிரியர் செபிக்கிறார் )

*

Posted in Articles

எபிநேசர்

எபிநேசர்

காட்சி 1

*

சில மாதங்களுக்கு முன்

( அம்மா & பையன் )

அம்மா : தம்பி, என்னப்பா ரொம்ப டல்லா இருக்கே.

பையன் : ஒண்ணும் இல்லம்மா… லாக்டவுன் பிரச்சினை ரொம்ப சீரியசா போயிட்டிருக்கு.. ஆறு மாசமா வண்டி ஓடல. அஞ்சு டெம்போ வெச்சிருக்கோம்… ஓடிட்டிருந்தவரை நல்லா இருந்துச்சு.. இப்போ வண்டிக்கு டியூ கட்டவும் முடியல, கைல எதுவும் வரவும் மாட்டேங்குது

அம்மா : வண்டியை ஷெட்ல போட்டு ஆறுமாசம் ஆச்சுல்ல.. வண்டி ஓடினா தானே வருமானம் ஏதாச்சும் வரும் … கிரேஸ் டெம்போஸ் ந்னா எவ்ளோ பிரபலமா இருந்துச்சு…

பையன் : ஆமா பிரைவட் ஃபைனான்சிங் பண்ணியிருக்கிறதனால கழுத்தைப் பிடிக்கிறாங்க… எப்படியோ சமாளிச்சாச்சு ஆறுமாசம்.. வண்டி ஓட ஆரம்பிச்சா நல்லா இருக்கும்.

அம்மா : ஆமாப்பா.. கடவுள் பாத்துப்பாருப்பா… இவ்ளோ நாள் காப்பாத்தினவரு.. இன்னும் காப்பாத்துவாரு.

பையன் : அதாம்மா ஒரே நம்பிக்கை.. சொல்லுங்கம்மா.. என்ன விஷயம் சும்மா தான் வந்தீங்களா ?

அம்மா : நம்ம கிராம ஊழியத்துக்கு இந்த மாசம் பணம் அனுப்பல… ரெண்டு ஊழியக்காரங்களுக்கும், நாலு மலைவாழ் பிள்ளைகளுக்கும் ஹெல்ப் பண்ணிட்டிருக்கோம்ல…

பையம் : ஓ..ஆமாம்மா… கண்டிப்பா குடுப்போம்… அனுப்பிடுங்க…

அம்மா : சரிப்பா

காட்சி 2

( அக்கா & பையன் )

தம்பி : அக்கா.. வாங்கக்கா… நல்லா இருக்கீங்களா ?

அக்கா : நல்லா இருக்கேன் தம்பி… ஒருவழியா லாக்டவுனை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணி விட்டாங்க. அதனால சென்னைக்கு வர முடிஞ்சுது…

தம்பி : ம்ம்.. பிள்ளைங்க, அத்தான் எல்லாம் நல்லா இருக்காங்களா ?

அக்கா : நல்லா இருக்காங்க … கடவுள் கிருபையால நல்லா இருக்காங்க.

தம்பி : ரொம்ப சந்தோசங்கா…ஆறுமாசத்துக்கு மேல ஆச்சு உன்னை பாத்து… அத்தானுக்கு கடை எல்லாம் எப்படி போவுது ? இந்த லாக்டவுன்ல கடையே திறந்திருக்க மாட்டாரே ?

அக்கா : உண்மையை சொல்லணும்ன்னா.. ரொம்ப கஷ்டம் தம்பி.. சாப்பாட்டுக்கே கஷ்டம் தான்… அவருக்கு கடையும் இல்ல, வேலையும் இல்ல.. அதான் உன்னை பாக்கலாம்ன்னு வந்தேன்

தம்பி : ஓ.. ஆமாக்கா.. சின்ன சின்ன கடை வெச்சிருக்கிறவங்க எல்லாம் ரொம்பவே கஷ்டப்படறாங்க… எல்லாம் சரியாயிடும்கா… கிருமியை விட கிருபை பெரியது.

அக்கா : ஆமாடாதம்பி.. கிருமியை விட கிருபை பெரியது ! எங்க எல்லாருக்குமே மைல்டா கோவிட் வேற வந்துச்சு… ஹாஸ்பிடலுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு….

தம்பி : ஏங்கா நீ போன் பண்ணல, நான் அனுப்பியிருப்பேனே… போகும்போ எவ்ளோ வேணுமோ அதை எடுத்திட்டு போ…

அக்கா : உன் கஷ்டம் என்னன்னு அம்மா என் கிட்டே சொன்னாங்க, ஆனாலும் அதை எதையுமே வெளிக்காட்டாம எவ்ளோ வேணும்ன்னாலும் எடுத்துட்டு போன்னு சொல்றே தம்பி.. இந்த அன்புல தான் நான் கடவுளை பாக்கறேன்.

தம்பி : என்னக்கா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு… கொஞ்சம் நகையெல்லாம் அடகு வெச்சோம், அப்படி இப்படி இருந்த பணமெல்லாம் டியூ கட்டி தீத்தோம்… அவ்ளோ தான்… கடவுள் தேவைக்கு குடுத்துட்டே தானே இருக்காரு…

அம்மா : உண்மை தான் தம்பி, இதுவரை காத்தவரு இனியும் காப்பாரு…

காட்சி 3

( போனில் )

பையன் : அண்ணே.. கொஞ்சம் டைம் குடுங்க… லாக்டவுன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆச்சு எப்படியாச்சும் நிமிந்துடலாம்ன்னு பாத்தா வேவ் 2 ந்னு சொல்றாங்க, மறுபடியும் பூட்டி வெச்சுட்டாங்க…

நபர் : இருக்கட்டும்பா.. எல்லாருக்கும் அதே கஷ்டம் தானே.. எந்த வண்டியும் டியூ வர மாட்டேங்குது.. நானும் ஃபைனான்ஸ் பண்ணி தானே வாழ்க்கையை ஓட்டறேன்

பையன் : அண்ணே.. ரெண்டு மாசம் தான்னே டியூ… கட்டிடறேன்.. ஒரு 2 மாசம் டைம் குடுங்க..

நபர் : சாரிப்பா… அவ்ளோ எல்லாம் தர முடியாது… ஏதாவது அரேஞ்ச் பண்ணி குடு…

பையன் : ஒரு மாசம் டைமாச்சும் குடுங்க.. நான் பாக்கறேன்..

நபர் : இல்லப்பா.. டூவீக்ஸ் ல பேலன்ஸ் கட்டிடு.. கொஞ்சமாச்சும் கட்டிடு… இல்லேன்னா வண்டியை சீஸ் பண்றதை தவிர வேற வழியில்லை.

காட்சி 4

( அம்மா & பையன் )

அம்மா : என்னப்பா இப்படி ஆச்சு… செகண்ட் வேவ் ந்னு சொல்லி மறுபடியும் பூட்டி வெச்சுட்டாங்க… என்ன பண்றது ?

பையன் : எல்லாம் கடவுள் பாத்துப்பாரும்மா… வேற ஏதாச்சும் வேலை கிடைக்குமான்னு பாக்கறேன்.. ஒண்ணும் கிடைக்கல.. லெட்ஸ் சீ

அம்மா : ம்ம்… இந்த மாசம் மிஷனரிக்கு அனுப்ப கூட காசில்லே..

பையன் : ஓ.. அம்மா அதை எப்படியாச்சும் அனுப்பணும்மா.. சும்மாவே அவங்களுக்கு மாசம் நாலாயிரத்து அஞ்ஞூறு தான் கிடைக்குதாம். இந்த காலத்துல அதுவும் கஷ்டமாயிடும்…

அம்மா : உண்மை தான்பா… ஆனாலும், எப்படி பணத்தை புரட்டறதுன்னு தான் தெரியல..

பையன் : ம்ம்.. கடவுள் தருவாரும்மா…. யோசிக்கிறேன்

காட்சி 5

( பையன் செபிக்கிறான் )

( அம்மா செபிக்கிறார் )

காட்சி 6

காலையின்

( போன் அடிக்கிறது )

( பையன் போன் எடுக்கிறான் )

மறுமுனை : சார்.. நான் அன்பு இல்லத்தில இருந்து பேசறேன். இந்த மாசம் எந்த ஒரு ஹெல்ப் மே கிடைக்கல… 50 பிள்ளைங்க இருக்காங்க.. ஒரு ரெண்டு rice bag வாங்கி குடுத்தா கூட ஹெல்ப் புல்லா இருக்கும் சார்… ஒரு 3000 ரூபா போதும் சார்…

பையன் : கூகிள் பே அனுப்புங்க, நான் ஹெல்ப் பண்றேன்

மறு முனை : ரொம்ப நன்றி சார்

( பையன் போனை வைத்துவிட்டு பார்க்கிறேன்… )

பையன் : போனை பார்க்கிறான்… சே.. ரெண்டு rice bag வாங்க கூட பேலன்ஸ் இல்லையே.. கடவுளே… பாவம் பிள்ளைங்க பட்டினி கிடப்பாங்களே… கடவுளே… இதுவரை நீங்க தான் காப்பாத்தினீங்க, இனியும் நீங்க தான் காப்பாத்தணும்

( போன் வருகிறது.. பயந்தபடி போனை எடுக்கிறான் )

பையன் : ( அக்கா.. போன் பண்றா… என்னாச்சோ தெரியலையே .. பாவம் ரொம்ப கஷ்டப்படறாங்ஜ… ) ஹலோ அக்கா…. சொல்லுங்க…

அக்கா : தம்பி.. நல்லா இருக்கியா ?

பையன் : நல்லா இருக்கேன் க்கா .. நீங்க எப்படி இருக்கீங்க ?

அக்கா : நல்லா இருக்கேன் தம்பி.. இக்கட்டான டைம்ல ஹெல்ப் பண்ணினே… ரொம்ப யூஸ்புல்லா இருந்துச்சு…

பையன் : அதெல்லாம் எதுக்குக்கா சொல்லிட்டு…. அத்தான் எப்படி இருக்காரு ? அவரு வேலை எப்படி போயிட்டிருக்கு ?

அக்கா : அது விஷயமா தான் நான் உனக்கு கால் பண்ணினேன்.

பையன் : சொல்லுங்கக்கா

அக்கா : கவர்மெண்ட் ஒரு ஆர்டர் போட்டிருக்காங்க, எல்லா இடத்துலயும் காய்கறி, மசாலா எல்லாம் சப்ளை பண்ணணும்ன்னு.. லாக்டவுன் முடியற வரைக்கும்….. அதுல ஒரு ஏரியா காண்ட்றாக்ட் அத்தானுக்கு கிடைச்சிருக்கு பை காட்ஸ் கிரேஸ்..

பையன் : பிரைஸ் த லார்ட் க்கா…

அக்கா : அதுக்கு நாலஞ்ச வண்டி தேவைப்படுது… உன்னோட டெம்போ எல்லாம் அவைலபிளா இருந்தா அதை வெச்சே ஆரம்பிக்கிறேன்னு அவரு சொன்னாரு. … உன் கிட்டே கேக்க சொன்னாரு…. ரெண்டு மாசம் புல்லா வண்டி ஓடின மாதிரியும் இருக்கும்… நம்ம கஷ்டம் கொஞ்சம் குறைஞ்ச மாதிரியும் இருக்கும். என்ன சொல்றே தம்பி ?

பையன் : ஓ.. பிரைஸ் த லார்ட்.. கண்டிப்பா அக்கா… கண்டிப்பா யூஸ் பண்ணுங்க… வண்டிக்கு டியூ கட்டினாலே மனம் நிம்மதி ஆயிடும். அப்புறம் நம்மை நம்பியிருக்கிற மக்களுக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ற அளவுக்கு காசு கிடைச்சா போதும்….

அக்கா : ஓ.. சூப்பர் தம்பி. அப்போ வண்டிக்கு அலைய வேண்டிய தேவை இல்லை. என்ன லாபம் வருதோ அதை நாம ஷேர் பண்ணிப்போம்.. சரிதானே

பையன் : நமக்குள்ள என்னப்பா கணக்கு வழக்கெல்லாம்…. அதெல்லாம் பாத்துக்கலாம்.. கடவுள் நம்ம ரெண்டு பேரோட கஷ்டத்தையும் தீக்க ஒரு வழி காட்டியிருக்காரு. பிரைஸ் த லார்ட்.

அக்கா : பிரைஸ் த லார்ட்…

( போனை வைக்கிறான் )

பையன் : எபினேசரே… இதுவரையும், எதுவரையும் உதவி செய்ய நீங்க இருக்கும்போ எனக்கு என்ன கவலை ! தேங்க்யூ ஜீசஸ்.. ம்ம் கட்ட வேண்டிய கடனை அடைச்சுட்டு, அந்த மிஷனரிக்கும், அன்பு இல்லத்துக்கும் பணத்தை அனுப்பிட்டு தான் மறு வேலை. தேங்க் யூ ஜீசஸ்…

*

Posted in Articles

கடவுள் பாதி, மனிதன் மீதி

கடவுள் பாதி, மனிதன் மீதி

காட்சி 1

( ஆல் இன் ஆல் செப கோபுரம் )

(செபத்துக்காக அழைப்பு வருகிறது )

போன் : ஆல் இன் ஆல் செப கோபுரமா ?

நபர் 1 : ஆமா… பிரைஸ் த லார்ட்.. சொல்லுங்க..

போன் : எனக்கு கழுத்துல ஒரு சுளுக்கு.. கொஞ்ச நாளாவே போக மாட்டேங்குது.. செபம் பண்ணுங்க பிரதர்

நபர் 1 : கண்டிப்பா.. கடவுள் கோணலானதை நேராக்குபவர். நீங்க உங்க கையை கழுத்தில வையுங்க, நான் உங்களுக்காக செபம் பண்றேன்..

போன் : சரி பிரதர்

நபர் 1 : அப்பா பிதாவே, ஒரே வார்த்தையால் நோய்களை விரட்டும் வல்லமை படைத்தவரே … ( செபம் )

நபர் 1 : பிரதர்.. உங்களுக்காக உருக்கமா செபிச்சிருக்கேன். கண்டிப்பா கர்த்தர் பதிலளிப்பார். கவலைப்படாதீங்க உங்க சுளுக்குக்கே அவரு சுளுக்கெடுப்பாரு . ( புன்னகைக்கிறான் )

போன் : ரொம்ப நன்றி பிரதர்

( இன்னொரு அழைப்பு வருகிறது )

நபர் : ஹலோ, ஆல் இன் ஆல் செபகோபுரம்… சொல்லுங்க…. கண்டிப்பா…. நாம செபிக்கலாம்…

காட்சி 2

( செப கோபுரத்தில் இன்னொரு பெண் )

நபர் 2 (பெண் ) : ஹலோ.. சொல்லுங்க சிஸ்டர்…

போன் : எனக்கு ஒரு லேன்ட் பிரச்சினை இருக்கு சிஸ்டர்… குடும்பத்துல எங்களுக்குத் தரவேண்டியதை தர மாட்டேங்கறாங்க… எனக்கு ஒரு நல்ல லாயர் கிடைக்க செபம் பண்ணுங்க‌

நபர் 2 : லாயர் கிடைக்க செபம் பண்ணணுமா ? கடவுள் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கணும்ன்னு செபம் பண்ணணுமா சிஸ்டர் ?

போன் : பிரச்சினை தீரணும்ன்னு நான் செபம் பண்ணிட்டு தான் இருக்கேன்.. ஒரு நல்ல லாயர் அமைய மாட்டேங்குது…. அமைஞ்சா மேட்டர் ஈசியா முடியும்…

நபர் 2 : கடவுள் கிட்டே பிரச்சினையை குடுத்துட்டீங்க, அப்புறம் எதுக்கு லாயர் ?

போன் : அப்படியில்லை சிஸ்டர்.. கடவுள் லாயர் மூலமா பிரச்சினையை தீக்கட்டும்ன்னு தான்

நபர் 2 : ஏன் ? கடவுள் நேரடியா தீர்க்க மாட்டாரா ? இத பாருங்க சிஸ்டர், ஒரு விஷயத்தை கடவுள் கிட்டே ஒப்படைச்சா நம்பிக்கையோட காத்திருக்கணும். லாயரை பாருங்க, ஆடிட்டரை பாருங்கன்னு எல்லாம் செபம் பண்றது சரியில்லை. சரியா

போன் : சரி சிஸ்டர்

நபர் 2 : இந்த பிரச்சினை யாருக்கும் எந்த மன வருத்தமும் இல்லாம சுமூகமா முடியணும்ன்னு செபம் பண்ணுவோம் சரியா ?

போன் : சரி சிஸ்டர்

நபர் 2 : அந்த லேன்டோட டாக்குமென்ட் மேல கையை வையுங்க, நாம செபிப்போம்.

போன் : சரி சிஸ்டர்… சாஃப்ட் காப்பி இருக்கு, அது மேல கையை வெச்சுக்கறேன்.

நபர் 2 : அன்பான இயேசுவே…. நீர் நிலத்தை பங்கிடுபவராக வரவில்லை என்பது தெரியும். ஆனாலும் ஒரு குடும்பத்தின் பிரச்சினையை தீர்ப்பதற்காக நீர் மனமிரங்க வேண்டுகிறோம் ( செபம் ) ஆமென்.

*

காட்சி 3

( நபர் 1 & நபர் 2 )

நபர் 1 : என்ன சிஸ்டர் நல்லா இருக்கீங்களா ? லைஃப் எப்படி போவுது

நபர் 2 : பை காட்ஸ் கிரேஸ் எல்லாம் நல்லா போகுது. உங்களுக்கு ?

நபர் 1 : நல்லா போவுது.. கடவுளோட சந்நிதில இருக்கிறதும், அடுத்தவங்களுக்காக செபம் பண்றதும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

நபர் 2 : ஆமா ஆமா, அதுவும் மக்கள் போன் பண்ணி அவங்களோட வேண்டுதல் நிறைவேறிச்சு ந்னு சொல்லும்போ கிடைக்கிற மன நிம்மதி ரொம்ப அதிகம்.

நபர் 1 : எஸ்.. எஸ்…

நபர் 2 : ஆமா.. என் பையனுக்கு ஒரு பொண்ணு பாக்க சொல்லியிருந்தேனே ஏதாச்சும் நல்ல பொண்ணு ?

நபர் 1 : விசாரிச்சுட்டே இருக்கேன்.. கடவுள் நல்ல ஒரு பொண்ணை கண்டு பிடிச்சு தருவாரு.

நபர் 2 : ஆமா, அவர் கிட்டே ஒப்படைச்சுட்டேன். ஒரு நல்ல கிறிஸ்தவ பொண்ணா, நல்ல குணாதிசயமா இருந்தா போதும்.

நபர் 1 : கடவுள் தருவாரு சிஸ்டர்.. டோன்ட் வரி

காட்சி 4

( போன் நபர் 1 & 2 )

நபர் 1 : சிஸ்டர்.. நல்லா இருக்கீங்களா ?

நபர் 2 : இருக்கேன் பிரதர்.. நீங்க ?

நபர் 1 : ஐம் ஃபைன்… உங்க பையனுக்கு ஒரு நல்ல வரன் கிடைச்சிருக்கு. ரொம்ப நல்ல குடும்பம். அடக்கமான பொண்ணு. நல்ல கிறிஸ்தவக் குடும்பம்..

நபர் 2 : ஓ.. பிரைஸ் த லார்ட்… பொண்ணு என்ன பண்றா பிரதர்.

நபர் 1 : பொண்ணு எப்பவுமே பிரேயர் பண்றா ?

நபர் 2 : அதில்லை பிரதர்… வேலை, ஜாப்.. என்ன ? என்ன படிச்சிருக்கா ?

நபர் 1 : பொண்ணு டிகிரி முடிச்சிட்டு, நம்மள மாதிரி ஒரு ப்ரேயர் டவர்ல முழு நேர செப ஊழியரா இருக்கா..

நபர் 2 : ஓ.. செ..செப ஊழியரா இருக்காங்களா ? அது.. வந்து

நபர் 1 : சொல்லுங்க சிஸ்டர்.

நபர் 2 : பையனுக்கு பொண்ணு ஐடி ல இருக்கணும்ன்னு ஒரு ஆசை, அட்லீஸ்ட் வேற ஏதாச்சும் நல்ல வேலைன்னா கூட பரவாயில்லை.. தப்பா நினைக்காதீங்க…

நபர் 1 ; இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு.. நாம விசாரிப்போம், நமக்கு கடவுள் ஹெல்ப் பண்ணுவார்.

நபர் 2 : தேங்க்யூ பிரதர்

காட்சி 4

( நபர் 1 & 2 )

நபர் 1 : ஒரு நல்ல பொண்ணு கடைசியா கிடைச்சிருக்கு சிஸ்டர். பொண்ணு ஐடி தான்… நல்ல சம்பளம். நல்ல குடும்பம்… கருப்பா இருந்தாலும் களையா இருப்பா

நபர் 2 : கருப்பா… ஓக்கே.. நிறத்துல என்ன இருக்கு இல்லையா ( அவஸ்தையாய் சிரிக்கிறார் )

நபர் 1 : ஆமா.. ஆமா

நபர் 2 : பொண்ணு பேரு

நபர் 1 : ஜாஸ்மின்

நபர் 2 : அப்பா பேரு

நபர் : ஆன்டனி

நபர் 2 : அவங்க … எந்த ஏரியா… ( தலையை சொறிகிறார் )

நபர் 1 : மதுரை பக்கம்ன்னு நினைக்கிறேன்..

நபர் 2 : அவங்க குடும்ப பேரு.. இல்லேன்னா… தாத்தா பேரு.. அப்படி ஏதாச்சும் தெரியுமா ? ஐ மீன்.. அவங்க ஜெனரேஷன்

நபர் 1 : அதெல்லாம் தெரியல… ( புரபைல் கொடுக்கிறார் ) இதுல டீட்டெயில்ஸ் இருக்கு.. பாருங்க சிஸ்டர்.

நபர் 2 : ஓக்கே.. நான் பாத்து சொல்றேன்.

காட்சி 5

( நபர் 2 போனில் )

நபர் 2 : நான் சொன்ன அட்ரஸ் விசாரிச்சீங்களா ?

நபர் 3 : பாத்தேன் பாத்தேன்… குடும்பம் எல்லாம் நல்ல குடும்பம் தான், பொண்ணும் நல்லா தான் இருக்கு…

நபர் 2 : அவங்க நம்ம ஆளுங்களா ?

நபர் 3 : அதான் பிரச்சினை.. அவங்க வேற சாதி… நம்மள விட கம்மியான சாதி…

நபர் 2 : ஓ.. அப்போ செட் ஆவாது.. விட்டுடலாம்

நபர் 3 : ஆமா ஆமா … சாதியை விட்டு சாதி மாறி கல்யாணம் பண்ணினா நாளைக்கு அவங்க பிள்ளைங்க, அடுத்த தலைமுறை எல்லாமே கஷ்டப்படும்.

நபர் 2 : ஆமா ஆமா

நபர் 3 : அடுத்த தலைமுறைன்னு இல்ல, நம்ம சாதி சனத்தோட பகையை சம்பாதிக்க வேண்டியிருக்கும்.

நபர் 2 : கண்டிப்பா… கடவுள் நம்ம சாதியிலயே ஒரு நல்ல பொண்ணை தருவாரு.. விட்டுங்க‌

நபர் 3 : அதான் நல்லது. செபம் பண்ணும்போ கிளியரா கேக்கணும், நம்ம சாதிலன்னு… புரியுதா

நபர் 2 : யா..யா.. இனி அப்படியே பண்ணுவோம்

காட்சி 6

( நபர் 1 & 2 )

நபர் 2 : ப்ரதர்.. சாரி, அந்த வரன்.. சில காரணங்களுக்காக செட் ஆகல…. சோ..

நபர் 1 : ம்ம் கேள்விப்பட்டேன்… ஐ மீன்… ஏதோ சாதி… அது இதுன்னு

நபர் 2 : நாங்க… அப்படியெல்லாம் ரொம்ப பாக்கறதில்ல… சொந்தக்காரங்க தான்…

நபர் : ம்ம்..யூதரென்றும் கிரேக்கரென்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை, கிறிஸ்துவுக்குள் எல்லோரும் ஒன்றாய் இருக்கிறோம் ‍ ந்னுபைபிள் சொல்லுது. நாம என்னடான்னா

நபர் 2 : ஹி..ஹி.. இருக்கு ப்ரதர்.. ஆனாலும்… அவங்க லைஃன்னு வரும்போ..ஃபியூச்சர்…ஹி…ஹி..

நபர் 1 : ஓக்கே… லெட்ஸ் சீ

காட்சி 7

( சில வாரங்களுக்குப் பின் )

நபர் 2 : பிரதர்.. வெரி ஹேப்பி நியூஸ்…. ஒரு நல்ல வரன் செட் ஆயிருக்கு பிரதர்… காட் ஈஸ் கிரேட். கண்டிப்பா இந்த காரியம் கர்த்தரால் தான் வந்திருக்கு

நபர் 1 : ம்ம்.. பொண்ணு யாரு சிஸ்டர் ?

நபர் 2 : நம்ம ‘நல்ல சாப்பாடு ஹோட்டல்’ ஓனரோட‌ பொண்ணு.

நபர் 1 : அது அந்த பீட்டர் ?

நபர் 2 : எஸ்..எஸ்.. அவரே தான். எல்லாருக்கும் தெரிஞ்சவரு தானே

நபர் 1 : சிஸ்டர்.. அவரு போற வழி சரியில்லையே… ஐமீன்.. அவரு சர்ச்சுக்கெல்லாம் போறதில்லை, அவரோட நடவடிக்கைகளும் சரியில்லேன்னு கேள்விப்பட்டிருக்கேன்.

நபர் 2 : நாம யாரையும் ஜட்ஜ் பண்ணக் கூடாது பிரதர். அவங்க மனைவி சர்ச் போறாங்க, அது மட்டுமில்ல, கல்யாணம் ஆனா பொண்ணு நம்ம வீட்டுக்கு தான் வரப்போறா, அவளை நாம சரியான ரூட்ல கொண்டு வந்திடலாம்.

நபர் 1 : ம்ம்… நல்ல வசதியான இடம் … அதனால காம்ப்ரமைஸா ?

நபர் 2 : காம்ப்ரமைஸ் ந்னு இல்லை, நாங்க எதுவுமே கேக்கல. அவங்களே ஒரு வீடும், காரும், நூறு பவுன் நகையும் போடறோம்ன்னு சொன்னாங்க. அவங்க பொண்ணுக்கு அவங்க குடுக்கிறாங்க.. மத்தபடி நாங்க ஒண்ணும் கேக்கல‌

நபர் 1 : இதுக்குமேல கேக்க என்ன இருக்கு ? அவரு ..சாதி யெல்லாம்..

நபர் 2 : எங்க சாதி தான்.. ஐ மீன் எங்க சாதியில ஒரு பிரிவு.. அது பரவாயில்லை. காட் ஈஸ் கிரேட்.. சரியான ஒரு இடத்தை அமைச்சு குடுத்திருக்காரு.

நபர் 1 : சிஸ்டர், அப்படி சொல்லாதீங்க. அவரு ஒரு ஸ்பிரிச்சுவல் பொண்ணை காட்டினாரு, நீங்க உங்க எதிர்பார்ப்புக்கு இல்லேன்னு ரிஜக்ட் பண்ணினீங்க. வேலைல இருக்கிற நல்ல குடும்பத்துல உள்ள ஒரு பொண்ணை காட்டினாரு அவங்க சாதி மேட்ச் ஆகலேன்னு ரிஜக்ட் பண்ணினீங்க‌

நபர் 2 : கல்யாணம்ன்னா ஆயிரம் காலத்து பயிர் பிரதர் சட்டுன்னு செட் ஆகுமா

நபர் 1 : அப்புறம் உங்களுக்கு பணம், சாதி, வேலை எல்லாமே செட் ஆகி வரும்போ, சில கிறிஸ்தவ மதிப்பீடுகளை காம்ப்ரமைஸ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணி வெக்கிறீங்க. அதை கர்த்தரால் வந்ததுன்னு அவர் தலையில போடறீங்க.

நபர் 2 : என்ன சொல்ல வரீங்க ப்ரதர் ?

நபர் 1 : நமக்கு கடவுள் ஒரு சைனிங் அதாரிடி மாதிரி வேணும், மத்தபடி எல்லாத்துக்கும் உலகத்துல உள்ள ஸ்டேன்டர்ட் ஃபாலோ பண்ணுவீங்க அப்படி தானே

நபர் 2 : அ..அபப்டியில்லை…

நபர் 1 : இது எப்படி இருக்குன்னா, இஸ்ரேல் மக்களுக்கு அரசரா கடவுள் இருந்தப்போ மக்கள் என்ன சொன்னாங்க, அவரு இருக்கட்டும்.. பட் எங்களுக்கு ஒரு அரசரை ஏற்படுத்தி தாங்கன்னு… அதாவது எங்க விஷயத்தை எல்லாம் இங்க பாத்துக்கறோம், அதுல ஏதாச்சும் தேவைப்பட்டா அங்கே வரோம்ன்னு

நபர் 2 : ப்ரதர்.. அப்படியில்லை பிரதர்… நீங்க சொல்றது வேற..

நபர் 1 : எல்லாம் ஒண்ணு தான் சிஸ்டர். ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் சரியில்லை. எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. உலகையும் திருப்திப் படுத்தி கடவுளையும் திருப்திப்படுத்த முடியாது. சொல்லவேண்டியது என் கடமை, அதான் சொல்லிட்டேன். தப்பா இருந்தா, மன்னிச்சிடுங்க.

காட்சி 8

( நபர் 2 சிந்தனையில் இருக்கிறார் )

காட்சி 9

(நபர் 2 செபிக்கிறார் )

நபர் 10

( போனில் )

நபர் 2 : பிரதர், தேங்க்யூ .. நீங்க சொன்ன ஆலோசனை என்னை ரொம்பவே யோசிக்க வெச்சுது. பணத்தையும், சாதியையும் தூக்கி முன்னால வெச்சேன். கடவுளை பேக் சீட்ல போட்டேன். எவ்ளோ பெரிய தப்பு பண்ண இருந்தேன்.

நபர் 1 ( கேட்டுக்கொண்டிருக்கிறார் )

நபர் 2 : அந்த பொண்ணு ஏற்கனவே ஒரு பையன் கூட லிவிங் டுகதர் ரிலேஷன்ஷிப்ல இருந்ததாகவும் அதனால தான் அவசர அவசரமாக நிறைய வரதட்சணக் குடுத்து கல்யாணம் பண்ணி வைக்க டிரை பண்ணினதாகவும் அப்புறம் சொல்றாங்க … கடவுள் தான் காப்பாத்தினாரு

நபர் 1 : பிரைஸ் த லார்ட் !

நபர் 2 : என்னோட விருப்பப்படி நடந்தா அது கடவுள் கொடுத்ததுன்னு நினைச்சேன், ஐம் ராங். என்னோட ஆசைக்கும், அவரோட ஆசீர்வாதத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நான் இப்போ புரிஞ்சுகிட்டேன். பையனுக்கு பொண்ணு பாக்கற விஷயத்தை மறுபடியும் முதல்ல இருந்து தொடங்கறேன்.

நபர் : கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு சிஸ்டர் ! பிரைஸ் த லார்ட் சிஸ்டர்.

*