Posted in skit

SKIT : நன்றிக்கடன் 

நன்றி மறப்பது நன்றன்று !

*

காட்சி 1

( தொழிலதிபர் ராபர்ட் போனில் )

ராபர்ட் : (போன் ) விக்கி, லாஸ்ட் மந்த் டேன் ஓவர் கொஞ்சம் கம்மியாயிருக்கே.. என்ன விஷயம் ? 

போன் : டேன் ஓவர் கம்மி ஆகல சார், நாம புது பிராஞ்ச் ஒன்னு ஓப்பன் பண்றதால 5 சி அங்கே இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம் சார், ஓவரால் டேஷ்போர்ட்ல நீங்க அதை பாக்கலாம்.

ராபர்ட் : ஓ.. ஐ சீ…. குட்… குட்… ஐ ஜஸ்ட் ஃபர்காட்…  தேங்க்யூ.. பிளீஸ் லெட் மி நோ எனி சேலஞ்சஸ் அஸ் அண்ட் வென் யூ சீ இட்..

போன் : கண்டிப்பா சார்…

( போனை வைக்கிறார் )

ஒருவர் : சார், பென்ஸ் கார் சர்வீஸ் முடியல.. ஆடி கார் எடுத்துட்டு வரவா ? ரேஞ்ச் ரோவர் எடுத்துட்டு வரவா சார் ?

ராபர்ட் : எனி திங் ஈஸ் ஃபைன்… ஜஸ்ட் எ டிரான்ஸ்போர்ட்… 

( பைபை புரட்டுகிறார் )

( லேப்டாப்பில் வேலை செய்கிறார் )

காட்சி 2

( சர்ச்சில் செபம் )

செபம் : ஆண்டவரே ஒரு நல்ல வளமான, நிம்மதியான வாழ்க்கையைக் குடுத்திருக்கீங்க. எதிரிகளே இல்லேங்கற அளவுக்கு நல்ல வளர்ச்சியை குடுத்திருக்கீங்க. உங்க அன்புக்கு எப்பவுமே நான் கடமைப்பட்டிருப்பேன். 

காட்சி 3

( அம்மா & ராபர்ட் )

ராபர்ட் : அம்மா…. ரொம்ப சந்தோசமா இருக்கும்மா.. வாழ்க்கை நிம்மதியா இருக்கு… இந்த வளர்ச்சிக்கெல்லாம் காரணமான கடவுளுக்கு தான்மா நன்றி சொல்லணும்

அம்மா : கண்டிப்பா.. அதான்… சர்ச்க்கு நிறைய குடுக்கிறியே.. அதுல எனக்கு ரொம்ப சந்தோசம்பா… 

ராபர்ட் : இன்னும் ஏதாச்சும் பண்ணணும்ம்மா.. மேபி ஒரு கிராம சபை சர்ச் பெருசா கட்டி குடுப்போம்.. நம்ம சார்பா

அம்மா : வெரி குட்பா… குப்பையில இருந்த நம்மை கடவுள் இங்கே உயர்த்தியிருக்காரு.. கண்டிப்பா அவருக்கு காலமெல்லாம் நன்றியுள்ளவங்களா இருக்கணும்

ராபர்ட் : கண்டிப்பாம்மா… 

அம்மா : அதே மாதிரி நம்மை சுற்றி இருக்கிறவங்களுக்கும் நாம நல்லது செய்யணும்ப்பா..

ராபர்ட் : நீங்க சொல்லுங்கம்மா… கண்டிப்பா செய்யலாம்..

அம்மா : ம்ம்.. குறிப்பா நாம கஷ்டத்தில இருக்கும்போ கடவுள் மாதிரி வந்து உதவி செஞ்சுட்டு காணாம போயிடுவாங்க சில பேரு.. அவங்களை நாம கண்டிப்பா ஞாபகம் வெச்சு நன்றிக்கடன் செலுத்தணும்ப்பா…அவங்களை நாம பல நேரம் கவனிக்கவே மாட்டோம்… 

ராபர்ட் : அதெப்படிம்மா ஹெல்ப் பண்ணினவங்களை கவனிக்காம இருப்போம்

அம்மா : ஸீ… இப்ப நீயே யோசிச்சு பாரு.. லாசர் உடல்நிலை சரியில்லாம இருக்காரு… சகோதரிகள் அவருக்கு ஆளனுப்பி விஷயத்தை சொல்றாங்க.. அப்புறம் இயேசு நாலு நாளைக்கு அப்புறம் வந்து அவரை உயிரோட எழுப்பறாரு..

ராபர்ட் : எஸ்… கனவுல தட்டி எழுப்பினா கூட இந்த கதையை எல்லா கிறிஸ்டியன்ஸும் சொல்லுவாங்களே… லாசரே வெளியே வா..ந்னு 

அம்மா : இதுல கவனிக்கப்படாத கதாபாத்திரம் உண்டா ?

ராபர்ட் : இல்லையேம்மா… லாசரஸ்… மார்த்தா..மரியா.. ஜீஸஸ்.. கூட்டம்.. சீடர்கள்.. நமக்கு எல்லாரையும் தெரியுமே !

அம்மா : இயேசு கிட்டே செய்தி கொண்டு போன ஆள் உனக்கு ஞாபகம் வரல பாத்தியா ? அவரு தான் லாசருக்கு உடம்பு சரியில்லேங்கற விஷயம் இயேசு வரைக்கும் போகவே காரணம். 

ராபர்ட் : ஓ.. யா… யோசிச்சதே இல்லை. 

அம்மா : நாமானுக்கு தொழுநோய் போச்சு இல்லையா ? அதுல கவனிக்கப்படாத ஆள் இருக்காங்களா ?

ராபர்ட் : ஐ நோ… அந்த சின்னப் பொண்ணை சொல்றீங்க கரெக்டா ?

அம்மா : நோ.. நோ… எலியா சொன்னதும் முடியாதுன்னு சொல்லிட்டு நாமான் போறாருல்லயா.. அப்போ வேலைக்காரங்க சொல்றாங்க, … கஷ்டமான காரியம்ன்னா செஞ்சிருப்பீங்கல்ல.. இதையும் செய்யுங்கன்னு.. அதை கேட்டு தான் நாமான் ஆற்றில இறங்குவாரு… 

ராபர்ட் : ஓ.. ஆமா..

அம்மா :  நாமான் பெரிய படைத் தலைவன்னு எல்லாரும் எல்லாரும் சைலண்டா இருந்திருந்தா ஒருவேளை நாமானுக்கு சுகமே கிடைச்சிருக்காது.. அந்த வேலைக்காரங்க தான் நாமான் வாழ்க்கைல பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவன்.. 

ராபர்ட் : எஸ்மா..உண்மை தான்

அம்மா : அப்படிப்பட்டவங்க நம்ம லைஃப்ல இருந்தா கண்டுபிடிச்சு ஹெல்ப் பண்ணணும்பா… கடவுளுக்கும், மனிதனுக்கும் நன்றியும் அன்பும் உடையவர்களா நாம இருக்கணும்.

ராபர்ட் : சரியா சொன்னீங்கம்மா… எனக்கு தெரிஞ்சு எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணியிருக்கேன்… பட்.. லெட் மி திங்க்

காட்சி 4

( ராபர்ட் யோசிக்கிறான் )

ராபர்ட் : ஒரு தடவை ஒரு ஆக்சிடண்ட் நடக்காம நம்ம டிரைவர் காப்பாத்தினாரு.. அவருக்கு ஹெல்ப் பண்ணிட்டேன்..

ஒருதடவை … ஒரு பிஸினஸ் டீலை ஒருத்தன் முடிச்சு குடுத்தான்… அவனுக்கும் நல்லது பண்ணியாச்சு

வர்க்கர்ஸ்க்கு எல்லாம் தேவையானதை குடுத்தாச்சு…

ப்ரண்ஸ்க்கும் ஹெல்ப் பண்ணியாச்சு…

ஓ..மை..காட்.. ஒரு விஷயத்தை மறந்துட்டேனே !!!!

காட்சி 5

( பிளாஷ்பேக் )

சின்ன வயதில் ராபர்ட் குப்பை தொட்டியிலிருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்துக் கொண்டிருக்கிறான். 

நபர் : என்னப்பா.. காலையிலயே பாட்டில் பொறுக்கிட்டிருக்கே..

ராபர்ட் : டெய்லி இதை வித்தா தான் சார் அஞ்சோ பத்தோ கிடைக்கும்… ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி நான் இப்படி பண்ணுவேன் சார்..

நபர் : அப்பா என்ன பண்றாருப்பா..

ராபர்ட் : அப்பாவாலை வேலை செய்ய முடியாது சார். உடம்பு சரியில்லை… .. அம்மா ஒரு கடையில சேல்ஸ் உமனா இருக்காங்க…. அங்கேயும் ஒழுங்கா சம்பளம் கிடைக்கிறதில்லை… வீட்ல ஒரு தங்கச்சி உண்டு… 

நபர் : ம்ம்..அம்மாவோட சம்பளத்தை மட்டும் வெச்சு குடும்பத்தை ஓட்டறது கஷ்டம் தான்.

ராபர்ட் : ஆமா சார், நான் படிக்கணும்ன்னா… கொஞ்சமாச்சும் காசு வேணும் சார்.. அதான் இப்படி…

நபர் : சரிப்பா.. கவலைப்படாதே… நான் ஒரு வர்க்‌ஷாப்ல உன்னை சேத்து விடறேன். நம்ம பிரண்டோட வர்க்‌ ஷாப் தான். நீ ஸ்கூல் முடிஞ்சப்புறம் அங்கே போய் வேலை செய். மாசா மாசம் சம்பளமும் கிடைக்கும், டே டைம்ல ஸ்கூலுக்கும் போலாம் சரியா… 

ராபர்ட் : ஓ..அப்படியா… ரொம்ப நன்றி சார்..

நபர் : இருக்கட்டும்பா… நானும் வர்க்‌ஷாப்ல தான் வேலை செய்றேன்… எழில் நகர் வர்க்‌ஷாப்ல… அதனால வர்க்‌ஷாப்ஸ் காண்டாக்ட் உண்டு… 

ராபர்ட் : ரொம்ப நன்றி சார்.. இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன் சார். 

நபர் : நல்ல பொறுப்பான பையம்பா நீ.. நிச்சயம் பெரிய ஆளா வருவே.. உன் பேரு என்னப்பா ? 

ராபர்ட் : ராபர்ட் சார்.

நபர் : அட.. என் பேரும் ராபர்ட் தான்… ராபர்ட் பெனடிக்ட்…. இதா இந்த காசை கைல வெச்சுக்கோ, பீஸ் கட்டவோ, டிரஸ் வாங்கவோ யூஸ் பண்ணிக்கோ…. 

ராபர்ட் :  வே..வேணாமே சார்…. சா…சார்… ரொம்ப நன்றி சார்… 

காட்சி 6

( ராபர்ட் சிந்திக்கிறான் )

ராபர்ட் : அம்மா..அம்மா… ஒரு ஆளை நாம் மறந்தே போயிட்டேன்மா….

அம்மா : எதுக்குப்பா… 

ராபர்ட் : கவனிக்கப்படாத கதாபாத்திரம்மா..

அம்மா : ஓ.. யாருப்பா அது ?

ராபர்ட் : அம்மா.. என்னை முத முதல்ல குப்பை பொறுக்கிற வேலையில இருந்து காப்பாற்றி ஒரு வர்க்‌ஷாப்ல சேத்து விட்டாரே அவரும்மா..

அம்மா : ஓ.. ஆமா.. நீ சொல்லியிருக்கே.. நானும் மறந்துட்டேன்.. நிறைய வருஷம் ஆச்சுல்ல

ராபர்ட் : அவரை எப்படியாவது கண்டுபிடிச்சு அவருக்கு ஹெல்ப் பண்ணணும்மா…

அம்மா : அவரை எப்படிப்பா கண்டுபிடிப்பே..

ராபர்ட் : அம்மா.. அந்த காலத்துல அவரு எழில் நகர் வர்க்‌ஷாப்ல வேலை செஞ்சாரும்மா…. அவரு பேரு கூட..ம்ம்.. ராபர்ட் பெனடிக்ட் மா…

அம்மா : ஓ..

ராபர்ட் : லெட் மி ஃபைண்ட் அவுட்

காட்சி 7

( ராபர்ட் அந்த வர்க்‌ஷாப்பைத் தேடுகிறான் )

ராபர்ட் ( ஒரு கடையில் ) ஐயா.. இங்கே நிறைய வர்க்‌ஷாப் இருக்கு.. இதுல ஒரு 20 வருஷத்துக்கு முன்னாடியே இருக்கிற கடை எதுன்னு தெரியுமா ?

நபர் : அப்படி ஒரே ஒரு வர்க்‌ஷாப் தான் இருக்கு தம்பி..… மூணாவது தெருவில இருக்கு… அதுவும் மூடிடுவாங்கன்னு நினைக்கிறேன்… புதிய கடைகளும், புதிய டெக்னாலஜியும் எல்லா இடத்துலயும் வந்துச்சு இல்லையா ?

ராபர்ட் : ம்ம்.. நன்றி சார்.. வரேன்.

காட்சி 8

( அந்த வர்க் ஷாப் )

ராபர்ட் : ஐயா… இந்த வர்க்‌ஷாப் தான் ரொம்ப வருஷமா இருக்கிற கடையா ?

நபர் : ஆமா.. என்ன வேணும்.. வண்டிக்கு ஏதாச்சும் பிரச்சினையா ?

ராபர்ட் : இல்ல.. நான் ஒருத்தரை தேடி வந்தேன்… 

நபர் : ஆளை தேடி வந்தீங்களா ? .. இங்கே இப்போ நானும் ரெண்டு பசங்களும் தான் இருக்கோம்… பெரிய அளவில வேலையும் இல்லை… 

ராபர்ட் : இங்கே.. ராபர்ட்ன்னு ஒருத்தர் வேலை பாத்தாருல்லயா ?

நபர் : ராபர்ட்டா ?

ராபர்ட் : ஆமா… ரொம்ப முன்னாடி.. முழு பேரு கூட ராபர்ட் பெனடிக்ட் ந்னு நினைக்கிறேன்..

நபர் : ஓ.. பெனடி.. ஆமா தம்பி.. ரொம்ப வருஷமா இங்க தான் வேலை பாத்தாரு…. நல்ல மனுஷன்.. எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணூவாரு… பாவம்..

ராபர்ட் : பாவமா… அவரு இப்ப எங்க இருக்காரு ?… 

நபர் : என்னப்பா இப்போ வந்து கேக்கறே… அவரு தான் பாவம் ஒரு பாழாப்போன நோய் வந்து ரொம்ப நாள் கஷ்டப்பட்டாரு.. அப்புறம்..

ராபர்ட் : அப்புறம் என்னாச்சு சார்.. காப்பாத்திட்டாங்களா ? 

நபர் : எங்கே தம்பி.. காப்பாத்தற  அளவுக்கு யாருக்கு வசதி இருக்கு… அவரும் பொண்ணு தன்யாவும் மட்டும் தான் தனியா இருந்தாங்க…. எனக்கும் அவ்ளோ வசதி இல்லப்பா…. அவரை காப்பாத்தமுடியல.. நாலு வருஷம் ஓடிப் போச்சு.

ராபர்ட் : ஐயோ… சே… ஐம் வெரி லேட்.. ஆமா, அந்த பொண்ணு இப்போ எங்கே இருக்காங்க… 

நபர் : தனியா அவங்களை பாதுகாக்க ஆள் இல்லேன்னு, அன்னை அனாதை இல்லத்துல சேத்து விட்டாங்க தம்பி.. அங்கே தான் இருப்பா… நான் எப்பவாச்சும் போய் பாத்துட்டு வருவேன். பாவம், நல்லா இருந்த குடும்பம் இப்படி ஆயிடுச்சு…

ராபர்ட் : ( சோகமாக ) ஓ.. ஜீஸஸ்… சரிங்க.. நன்றி,… நான் போய் அவரோட பொண்ணை பாக்கறேன்.. 

காட்சி 9 

( அனாதை இல்லம் )

ராபர்ட் :  ஹாய்… இங்கே தன்யான்னு ஒரு பொண்ணு இருக்காங்களா ? 

அ.இ : நீங்க யாரு சார் ?

ராபர்ட் : அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சவங்க, என் பேரு ராபர்ட். 

அ.இ : வெயிட் பண்ணுங்க சார், நான் வர சொல்றேன்… 

( சற்று நேரத்துக்குப் பின் )

( உடல் ஊனமுற்ற ஒரு பெண் வருகிறார் )

பெண் : சார்.. வணக்கம் நீங்க… 

ராபர்ட் : நீ.. நீ… ராபர்ட் பெனடிக்ட் பொண்ணா ?

பெண் : ஆமா சார்.. அப்பா இருந்தவரைக்கும் அப்பா கூட இருந்தேன்… இப்போ அப்பாவோட நினைவோட இருக்கேன்.. 

ராபர்ட் : உ. உன் கை… 

பெண் : சின்ன வயசுலயே போனது சார்… அதனால என்னால எந்த வேலைக்கும் போக முடியல.. யாரும் வேலைக்கு சேத்துக்கவும் இல்லை.. அப்படியே போகுது சார் லைஃப்.

ராபர்ட் : நான் உன் அப்பாவுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்.. நான் சின்ன வயசுல ஒண்ணுமே இல்லாம இருந்தப்போ உங்க அப்பா தான் கை குடுத்தாரு.. 

பெண் : என் அப்பாவா ? அப்பாவைப் பற்றி கேக்கவே சந்தோசமா இருக்கு…

ராபர்ட் : அதுக்கு கைமாறா நான் ஏதாவது பண்ணணும்ன்னு நினைக்கிறேன்.

பெண் : சார், நீங்க ஏதாச்சும் பண்ண நினைச்சா இந்த அனாதை இல்லத்துக்கு பண்ணுங்க. எங்களை மாதிரி ஆட்களை அன்பாவும், கனிவாகவும் வளத்தறது அவங்க தான். எனக்கு உதவின அவங்களுக்கு நன்றியுடையவளா இருக்கணும்னு நினைக்கிறேன்…

ராபர்ட் : உங்க அப்பாவை மாதிரியே உனக்கும் இளகிய மனசும்மா… அடுத்தவங்களுக்கு உதவற மனம் தான் கடவுள் இருக்கிற மனம். நான் கண்டிப்பா உதவறேன்.

பெண் : ரொம்ப நன்றி சார்… 

ராபர்ட் : அப்படியே உன்னை நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகப் போறேன்… அம்மா இருக்காங்க உன்னை நல்லா பாத்துப்பாங்க, என் கம்பெனில உனக்கு ஒரு நல்ல வேலையும் தரேன்…  

பெண் : சார்.. என்ன சொல்றீங்க… அந்த அளவுக்கு நான் தகுதி இல்லாதவ சார்…

ராபர்ட் : அப்படி இல்லம்மா… நான் உங்க அப்பாவால வளர்ந்தவன் .. அவரு இல்லேன்னா  இன்னிக்கு நான் இல்ல… இன்னிக்கு நான் வசதியா இருக்கேன்… உங்க அப்பாவுக்கு நன்றிக்கடன் செலுத்த ஒரு வாய்ப்பா இதை நினைக்கிறேன்…. அதான் உன்னை தத்தெடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்..

பெண் : தத்தா… சார், கை கூட இல்லாத பொண்ணு சார் நான்… என்னால உங்களுக்கு ஒரு சின்ன ஹெல்ப் கூட பண்ண முடியாது…. 

ராபர்ட் : நல்லது செய்யணுங்கற மனசு இருந்தா போதும், வழியை கடவுள் காட்டுவாரு. 

பெண் : நன்றி சார்… எனக்கு.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. இதுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்னே தெரியல.. கையே இல்லை.. அப்புறம் என்ன கைமாறு…

ராபர்ட் : அப்படியெல்லாம் பேசாதீங்க, கடவுள் உங்களை சிறகில வைச்சு பாதுகாப்பாரு… ஐம் ரியலி பிரவுட் ஆஃப் யுவர் ஃபாதர்… அண்ட் ,, அவர் உயிரோட இருக்கும்போ அவரை பாக்க முடியலையேன்னு தான் வருத்தமா இருக்கு… பட்… பெட்டர் லேட் தேன் நெவர்…. 

பெண் : ஆமா சார்… காட்ஸ் பிளான்… தேங்க்யூ சார். 

*

Posted in Articles, Sunday School

SKIT : கருணைக் கொலை

கருணைக் கொலை

*

 ( அரசவை கூடுகிறது )

மந்திரி : மன்னரே வணக்கம். 

அரசன் : வாருங்கள் மந்திரியாரே, மாதம் மும்மாரி மழை பொழிகிறதா ?

மந்திரி : என்ன அரசரே.. அந்த டயலாக்கை இன்னும் மாத்தலையா ? கொள்ளை நோய் வந்து மக்கள் கொத்துக் கொத்தா செத்திட்டிருக்காங்க.. 

அரசன் : ஓ… ஆமா, அதை மறந்து விட்டேன். இப்போது தான் நிலமை கொஞ்சம் சீராகிவிட்டதே ? 

மந்திரி : எங்கே சரியாச்சு ? யானை புகுந்த வயல் போல ஆகிவிட்டது நமது நாடு. பொருளாதாரம் பெருத்த சேதமடைந்து விட்டது. 

அரசன் : ம்ம்.. குறுநில மன்னர்களெல்லாம் வரி கட்டி விட்டார்களா ?

மந்திரி : அரசே … எல்லோரும் குவாரண்டைனில் இருப்பதால் எந்த வருமானமும் இல்லை… யாரும் வரி கட்டவில்லை. 

அரசன் : என்ன ? யாரும் வரி கட்டவில்லையா ? அவர்கள் மீது போர் தொடுப்போம் என சொல்லுங்கள்.

மந்திரி : அரசரே.. போர்வீரர்களெல்லாம் வாள் பிடிப்பதை மறந்துவிட்டு, ஆவி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். போரெல்லாம் சில ஆண்டுகளுக்கு வாய்ப்பே இல்லை.

அரசன் : ம்ம்… சரி, கொஞ்ச நாள் பொறுத்திருப்போம். 

மந்திரி : பொறுத்திருக்க முடியாத சூழல் இருப்பதால் தான் உங்களைக் காண வந்திருக்கிறேன். 

அரசன் : என்னாச்சு ? புரியும்படி கூறுங்கள்… 

மந்திரி : மன்னரே… நமது கஜானா காலியாகிவிட்டது !

அரசன் : என்ன ? கஜானா காலியாகிவிட்டதா ? எப்படி ? எப்படி ?

மந்திரி : வருமானமே இல்லாத கஜானா, ஓட்டைப் பானையில் விழுந்த மழை போல ஒழுகித் தீர்வது இயல்பு தானே மன்னா ?

அரசன் : நீர் என்ன மந்திரியா ? தமிழ் வாழ்த்தியாரா ? இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதைச் சொல்லும்.

மந்திரி : அரசே, அரசவையைக் கூட்டி மந்திரிகள் மற்றும், அதிகாரிகளின் ஆலோசனை பெறலாம் மன்னா.. 

அரசன் : ம்ம்.. அப்போ உங்களுக்கு ஒண்ணும் தெரியாது.. சரியான மிக்சர் மந்திரி நீர்… சரி சரி, அப்படியே ஆகட்டும். விரைவில் மந்திரிசபையைக் கூட்டும்… 


காட்சி 2

( மன்னர் மந்திரி சபை )

மன்னர் : இந்த அவை எதற்காகக் கூடியிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்

மந்திரி 1 : இல்லை அரசே… ஏதேனும் விருந்து வைப்பீர்கள் என நினைக்கிறேன்

மந்திரி 2 : கொள்ளை நோய் காலத்தில் எங்களுக்கு செல்வம் தந்து மகிழ்விப்பீர் என நினைக்கிறேன்

மந்திரி 1 : இல்லையேல் .. உயர்பதவி கொடுத்து உற்சாகப்படுத்துவீர் என நினைக்கிறேன்

மந்திரி 2 : ஒருவேளை வாடிக்கையாய் ஏதேனும் கேளிக்கையோ ?

மன்னர் : கிழிஞ்சுது… உங்களுக்கெல்லாம் கஜானாவின் நிலை தெரியுமா இல்லையா ?

மந்திரி 1 : கஜா வுக்கு என்ன ஆச்சு ? அவனுக்கும் நோயா ?

மன்னர் : கஜா இல்லப்பா கஜானா ! அது காலியாய்க் கிடக்கிறது. வரவு இல்லை, செலவு ரொம்ப அதிகம்.

மந்திரி 2 : ஓ… இப்போ என்ன செய்யலாம் மன்னா ?

மன்னர் : ஆமா, அதையும் என்னிடமே கேளுங்கள் ! அதற்குத் தானே உங்களை அழைத்திருக்கிறேன்.. நீங்களே சொல்லுங்கள்.

மந்திரி 1 : மன்னரே, வருமானத்தை அதிகரிக்க வேண்டும், அது வரை செலவைக் குறைக்க வேண்டும். அதற்காக எங்கெல்லாம் அதிக செலவு வருகிறதோ அதையெல்லாம் கட் பண்ண வேண்டும்.

மந்திரி 2 : அதே போல, எங்கெல்லாம் வருமானம் வர வாய்ப்பு இருக்கிறதோ அதையெல்லாம் பெற்றுக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் உள்ளூர் வரியையாவது பெற வேண்டும்.

மன்னர் : ம்ம்.. எங்கெல்லாம் செலவு அதிகம் என நினைக்கிறீர்கள் 

மந்திரி 1 : உங்களுடைய தேவையற்ற பயணங்களை நிறுத்துவோம்.. உங்கள் அலங்காரத்துக்கு செலவிடும் பணத்தை கஜானாவில் போடுவோம்… பரிவாரங்களோடு சுற்றித் திரிவதற்கே பெரும் பணம் செலவாகிறது. 

மன்னர் : கடைசியில் என்னிடமேவா.. சரி சரி.. வேறென்ன ?

மந்திரி 2 : புதிய திட்டங்களை நிறுத்திவிடுவோம் மன்னா… 

மன்னர் : நீ வேற.. பழைய திட்டங்களையே கிடப்பில் போட்டாயிற்று. 

மந்திரி 1 : படை பலத்தைக் குறைத்து, படைக்காக செலவிடும் பணத்தை மக்களுக்காகச் செலவிடலாம் மன்னா

மன்னர் : எதிரி மன்னன் போரிட்டு வந்தால் என்ன செய்வது ? முழு படையை வைத்துக் கொண்டே முக்கோ முக்கென்று முக்குகிறோம்.

மந்திரி 2 : மக்களிடம் இன்னும் கொஞ்சம் வரி வாங்குவோம் மன்னா… 

மன்னர் : எழும்ப முடியாமல் கிடப்பவர்கள் மேல் பாறாங்கல்லா, என்ன ஐடியா சொல்கிறீர்கள் ? மந்திரிகளே.. நீங்கள் இன்னும் இரண்டு நாட்களில் கஜானாவை நிரப்பும் ஐடியா சொல்லவில்லையேல்.. உங்கள் தலை உங்கள் கழுத்தில் இருக்காது.

மந்திரி 1 : மன்னா ?

மன்னர் : இது அரச கட்டளை ! வாய்ப்பேச்சும், வயிறு வளர்ப்பும் தான் உங்கள் பணியா ? செய் அல்லது செத்துமடி.. இப்போ போகலாம்.


காட்சி 3

( மந்திரி 1 )

யோசிக்கிறார்.

திடீரென யோசிக்க சொன்னால் எப்படி யோசிப்பது. மூளையைப் பயன்படுத்தில் மாமாங்கம் ஆகிவிட்டதே. மன்னருக்குத் துதி பாடி காலத்தை ஓட்டலாம் என்றால் தலைக்கே ஆபத்து வந்து விட்டதே… ஐடியா என்ன ஊறுகாயா வரும் வழியில் வாங்கி வருவதற்கு.. ஐயையோ என்ன செய்வேன்.. என்ன செய்வேன்

காட்சி 4

( மந்திரி - வரும் வழியில் ஒரு முதியவர் வீட்டுத் திண்ணையில் படுத்திருக்கிறார் )

முதியவர் : யப்பா.. யாருப்பா அங்கே போறது.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கப்பா…

மந்திரி : ம்ம்..நானே தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகாதா என தவித்துக் கொண்டிருக்கிறேன்.. உமக்கு என்னய்யா ?

முதியவர் : தம்பி.. தம்பி… என்னைப் பாருப்பா.. என் தலை எழுத்து..

மந்திரி : ஐயா.. தலையைத் தவிர வேறு ஏதாவது பேசுங்கள்..

முதியவர் : தம்பி.. எனக்கு நோய் வந்ததும் என் பையன் என்னை வீட்டை விட்டு வெளியே போட்டுவிட்டான். சாப்பாடும் தருவதில்லை… இந்த கொள்ளை நோய் என்னைக் கொல்லாமல் கொல்லுதுப்பா..

மந்திரி : என்ன சொல்றீங்க… உங்க சொந்த பையனா ?

முதிவர் : பின்னே வாடகை பையனா… ரொம்ப கேள்வி கேக்காம ஒரு ஹெல்ப் பண்ணுப்பா… 

மந்திரி : நான் இந்த நாட்டின் மந்திரி தான் சொல்லுங்கள். .என்ன செய்யவேண்டும்.

முதியவர் : நீ மந்திரியோ முந்திரியோ.. எனக்கு கொஞ்சம் வாங்கி குடுக்கிறியா…

மந்திரி : என்ன வாங்கி தரணும்னு சொல்லுங்க.. அன்னம் வாங்கி வரவா ?

முதியவர் : சாப்பாடெல்லாம் வேண்டாம்.. அதை சாப்பிட்டு பல நாள் ஆச்சு.. இப்படியே நான் சாகட்டும்ன்னு என் பையன் என்னை போட்டுட்டு போயிட்டான்…. எனக்கு விஷம் மட்டும் வாங்கி குடுப்பா

மந்திரி : என்ன விஷமா ? நீர் கேட்பது விஷமத்தனமாய் இருக்கிறதே !

முதியவர் : இல்லப்பா.. கொஞ்சம் கொஞ்சமா வலியில சாகிறதுக்கு .. ஒரு விஷம் வாங்கி குடுத்தா நான் சட்டுன்னு போயிடுவேன். என்னோட வலியும் போயிடும். இது ஒரு கருணைச் செயல்ப்பா..

மந்திரி : ஐயா.. என்ன தெரிந்து தான் பேசறீங்களா ?

முதியவர் : தம்பி… என்னால இனிமே இந்த வீட்டுக்கோ நாட்டுக்கோ என்ன பயன்.. … செத்ததினொப்பமே ஜீவிச்சிரிக்கிலும்… தான் என்னோட நிலமைப்பா…

மந்திரி : அரசு தான் முதியோருக்கு பணம் தருதே..

முதியவர் : அட போப்பா.. அதெல்லாம் பையன் தான் செலவழிக்கிறான். நான் இல்லேன்னா அரசுக்கு செலவு மிச்சம் .. கஜானால கொஞ்சம் காசாவது சேரும்… 

மந்திரி : ( மனதில் ) அட… செம ஐடியா.. வயதானவங்க.. கஷ்டப்படறாங்க .. அவங்களால செலவு… அவங்க இல்லேன்னா… செலவு கம்மி… ஒருத்தன் சாகறான்.. அவன் பணம் கஜானா போவுது… ரிப்பீட்டு.. அடுத்தவன் சாகறான் அவன் பணம் கஜானா போவுது ரிப்பீட்டு.. சாகறான் பணம் வருது.. ரிப்பீட்டு.. ( சத்தமாக ) வாவ்.. செம ஐடியா…

முதியவர் : என்ன ஐடியாப்பா..

மந்திரி : கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… உங்க கஷ்டத்தை சீக்கிரம் சரி பண்ணிடறேன்

முதியவர் : தம்பி.. தம்பி.. அந்த விஷம்.. விஷம் தம்பி..


காட்சி 5

( மந்திரிகள் கூடுகிறார்கள் )

மந்திரி : நான் சொல்றதை கேளுங்க.. எனக்கு ஒரு செம ஐடியா கிடைச்சிருக்கு. நான் அதைப்பற்றி பழைய ஏடுகளைப் புரட்டியபோது இன்னும் நிறைய தகவல்கள் கிடைத்தது. அதை நாம் மன்னரிடம் சொல்ல வேண்டும். சொல்லும்போது எல்லோரும் ஒரே செய்தியைச் சொல்ல வேண்டும்… அது என்ன என்பதை இப்போது நான் சொல்கிறேன்.

( மந்திரி பேசுகிறார் ) 


காட்சி 6

( அரசவை )

மந்திரி 1 : மன்னரே.. நாங்கள் ஒரு மிகச்சிறந்த யோசனையோடு வந்திருக்கிறோம். இதை மட்டும் செய்தால் செலவு எக்கச்சக்கமாக குறையும்… கஜனா நிறையும். 

மன்னர் : ம்ம்..முதலில் சொல்லுங்கள். கஜானா நிறைகிறதா.. தலை உருள்கிறதா என பார்ப்போம்… சொல் சொல்..

மந்திரி 1 : கொஞ்சம் வித்தியாசமான யோசனை.. கோபித்துக் கொள்ளாமல் கேட்க வேண்டும்.

மன்னர் : பீடிகை போதும், விஷயத்தைச் சொல்லும்.

மந்திரி 1 : நம் நாட்டிலுள்ள ஆறு கோடி மக்களில் பத்து விழுக்காடு மக்கள் முதியோர்கள்.. அதாவது எழுபது வயது தாண்டியவர்கள். அவர்களுக்கு நாம் ஜீவனாம்சம் கொடுக்கிறோம்

மந்திரி 2 : ஆமா.. அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.. நாம் தான் பணம் கொடுக்க வேண்டும்.

மந்திரி 1 : அது தான் விஷயம். ஒண்ணும் செய்ய முடியாதவர்களுக்கு ஜீவனாம்சம் கொடுத்து என்ன பயன் ?

மந்திரி 2 : ஜீவனாம்சம் கொடுக்கலேன்னா கஷ்டப்படுவாங்க மந்திரியாரே…என்ன பிதற்றுகிறீர்.

மந்திரி 1 : அதான் கஷ்டப்படாம அவங்களை தீத்துக் கட்டலாமே ?

மன்னர் : என்ன ? கொலையா ?

மந்திரி 1 : மன்னரே.. நானும் முதலில் அப்படித் தான் பதட்டப்பட்டேன். ஆனால் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சி என்னை தெளிய வைத்தது. இது கொலையல்ல…. இது ஒரு மிகப்பெரிய உதவி. 

மன்னர் : என்ன உளறுகிறாய் ?

மந்திரி 1 : அரசே…. காய்க்கவே காய்க்காத தென்னை மரத்தை நாம வெட்றதில்லையா ? பயிருக்கு இடையே சும்மா நிக்கிற களையை நாம புடுங்கறதில்லையா ? எல்லாம் அடுத்த தலைமுறையோட நன்மைக்கு தானே 

மன்னர் : ஏதோ சொல்ல வருகிறீர்கள்.. ஆனா கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள். 

மந்திரி 1 : மன்னரே… இதொண்ணும் புதுசில்ல.. பழைய காலத்துல முதுமக்கள் தாழின்னு ஒரு விஷயம் உண்டு.. ரொம்ப வயசானவங்களை ஒரு பானையில போட்டு மூடி புதைச்சிடுவாங்க….அவங்க அங்கே ஜீவ சமாதி அடைவாங்க… 

மன்னர் : ஆனால்….. இது படுகொலை இல்லையா ?

மந்திரி 1 : இல்லை மன்னா.. இது கருணைக் கொலை… வாழ்வு அவங்களுக்கு சாபம், மரணம் அவங்களுக்கு வரம். நாம அவங்களோட சாபத்தைப் போக்கறோம். 

மன்னர் : ம்ம்… இது பண்டைக்கால கதை… இப்போதைக்கு அது ஒத்து வருமா ?

மந்திரி 2: மன்னா.. இப்போது தான் நினைவுக்கு வருகிறது.. ஜப்பானிலோ எங்கோ.. இப்படி. முதியவர்களை சுமந்து போய், கொஞ்சம் உணவுப் பொட்டலங்களோடு நடுக்காட்டிலோ, மலையிலோ விட்டு விட்டு வருவார்களாம்.. அவர்கள் அங்கே இறந்து விடுவார்களாம்… 

மன்னர் : ஒ.. அப்படியா… அப்போ இது ஆங்காங்கே நடப்பது தானா ?

மந்திரி 1 : ஹெரூலி இன மக்கள் இயலாத, மற்றும் நோயாளி முதியவர்களை விறகுகளில் போட்டு எரிப்பார்கள் மன்னா,,நமது ஏடுகளில் அதைப்பற்றிய செய்தி உண்டு. 

மந்திரி 2 : இன்யூயிட் எனும் ஒரு இன மக்க ள் முதியோர்களை ஐஸ்கட்டிகளில் படுக்க வைத்து கொன்று விடுவார்களாம் மன்னா.. அதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்… 

மந்திரி 1 : சார்டியானா இன மக்கள் வயதானவர்களை மலை உச்சியிலிருந்து தூக்கி எறிந்து விடுவார்களாம் மன்னா… அப்படி அவர்களை ஒழித்து விடுகிறார்கள்.

மந்திரி 2 : கெயோஸ் எனும் ஒரு தீவில் முதியோர்கள் தற்கொலை செய்து கொள்ள அவர்களுக்கு அரசே விஷம் கொடுக்கும்..மன்னா… 

மன்னர் : போதும்.. போதும்.. போதும்… ம்ம்ம் உலகெங்கும் மக்கள் முதியோர்களை ஒழித்துக் கட்டுவதில் மும்முரமாய் இருக்கிறார்கள் போல. 
 
மந்திரி 1 : பழைய கழிதலும், புதியன புகுதலும் வழுவல… மன்னா இது தலை சிறந்த யோசனை.. நாங்கள் தலை துறக்காதிருக்க இதை பரிசீலியுங்கள் மன்னா… 

மன்னர் : ஷப்பப்பா…. தமிழ் வாத்தியார் மாதிரி பேசாதீங்க…. சரி, நம்ம நாட்ல உள்ள முதியோர்களுக்காக எவ்ளோ பணம் செலவாகுது. 

மந்திரி 1 : சுமார் 60 இலட்சம் பொன் மாதம் தோறும் செலவாகிறது மன்னா… 

மன்னர் : ஓ… மை காட்.. வருமானமே இல்லாமல் அவ்ளோ செலவு பண்ண முடியாது.

மந்திரி : அப்போ முதியோரை முடிச்சுடலாமா ? நிறைய பணம் சேமிக்கலாம்… அதான் மிகச் சிறப்பான யோசனை மன்னா… 

மந்திரி 2 : ஐடியா நல்லா தான் மன்னா இருக்கு.. நாட்டுக்காக முதியோர்களை பலிகொடுக்கிறது தப்பில்லை தான் இல்லையா… இது வீரத்தின் அடையாளம் தான். ஒருவகையில் இவர்களும் தியாகிகள் தான். 

மன்னர் : ம்ம்ம்.. நீங்கள் எல்லோரும் கருத்துகளை கட்சிதமாய் எடுத்து வைத்தீர்…… .. அப்படியே செய்வோம். நாம நல்ல அரசு.. அதனால அவங்க வலிக்காம சாக ஏதாச்சும் பண்ணுங்க. 

மந்திரி 1 : மன்னரே… எல்லோருக்கும் ஆளுக்கொரு தியாக உருண்டை கொடுக்கலாம்.. முதியோர்கள் கண்டிப்பா சாப்பிடணும்… கொள்ளை நோய் போயிடும்ன்னு சொல்லுவோம்.. அவங்களும் சாப்டுவாங்க.. அப்புறம் அவங்களுக்கு கொள்ளை நோயே வராது.. ஆளே போனப்புறம் நோய் என்ன நோய்.. ஹி ஹி… பிரச்சினை முடியும்..pls 

மன்னர் : ம்ம்.. அதுவும் நல்ல ஐடியா தான்… அதுக்கு என்ன பண்ணணுன்னு யோசிச்சு வந்து சொல்லுங்க.. 


காட்சி 3

( மன்னர் இரவில் தூங்குகிறார் )


( மன்னரின் மகன் பேசுகிறான் கனவில் ) 

அப்பா… வயசானவங்களை எல்லாம் காலி பண்ண போறீங்களாமே.. சூப்பர் சூப்பர்… அப்போ உங்களுக்கு இன்னும் எத்தனை வருஷம் ? 4 visha உருண்டை உங்களுக்காக எடுத்து வெச்சிருக்கேன்.. ஹா..ஹா.. உங்க எழுபதாவது பர்த்டேக்கு அதான் கிஃப்ட்… ஐம் வெயிட்டிங்… 

ஹா..ஹா

( மன்னர் திடுக்கிட்டு விழிக்கிறார் )


காட்சி 4

( மன்னரும்.. அவரது  அம்மாவும் )
 
அம்மா : என்னப்பா.. ரொம்ப யோசனையா இருக்கே ? என்னாச்சு ?

மன்னர் : அம்மா, நம்ம அரசவை கஜானா காலி. மக்களுக்கோ வேலையில்லை. ஊரெல்லாம் நோய் இன்னும் ஓஞ்ச பாடில்லை.அதனால மந்திரிகள் எல்லாம் ஒரு யோசனை சொன்னாங்க.. அதன் மூலம் நாட்டைக் காப்பாத்தலாம்… செல்வங்களை சேமிக்கலாம்.. செலவுகளை குறைக்கலாம்.. 

அம்மா : அப்படி என்னப்பா யோசனை.. 

மன்னர் : 70 வயசுக்கு மேலே மக்கள் போக விடாம பண்ணலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம். 

அம்மா : அதெப்படிப்பா முடியும்… வயசு கூடிட்டே போகும்ல 

மன்னர் : 70 ஆனதும் அவங்களை மகிழ்ச்சியா, சந்தோசமா வழியனுப்பி வைப்போம்.. சுவர்க்கத்துக்கு

அம்மா : என்ன சொல்றே ? அவங்களை கொல்ல போறியா ? .. இதெல்லாம் ஒரு யோசனையா ? ஆலோசனையா ? இது அயோக்கியத்தனம் … 

மன்னர் : என்னம்மா சொல்றீங்க ?

அம்மா : மன்னன் தன்னோட நாட்டு மக்களையே படுகொலை செய்வானா ? 

மன்னர் : படுகொலை இல்ல, கருணைக்கொலை தான்

அம்மா : ம்ம்.. அதுக்கு ஒரு ஃபேன்ஸி நேம்… ஆமா, அவங்க வந்து எங்களை கொலை செய்யுங்கள்ன்னு கேட்டாங்களா ? கருணை காட்டுங்கன்னு கெஞ்சினாங்களா ?

மன்னர் : இல்லை.. இல்ல… 

அம்மா : அப்படி கேட்டா கூட அவங்களை கொல்ற உரிமை உங்களுக்கு இல்லை. மக்களை ஆளும் உரிமை தான் உங்களோடது, அழிக்கும் உரிமை இல்லை. உயிரைக் கொடுப்பதும், எடுப்பதும் கடவுள் மட்டும் தான். நீங்க கடவுளா ?

மன்னர் : இல்லை இல்லை.. நான் கடவுள் இல்லை… நான் அப்படி சொல்லவே இல்லை.

அம்மா : உனக்கொன்னு தெரியுமா ? நீ என் வயித்தில உருவாகும்போ அரண்மனை மருத்துவச்சிங்க குழந்தை சரியா பொறக்காது கொழந்தைக்கு ஆபத்துன்னு சொன்னாங்க.. ஆனா நான் அதை கண்டுக்கல.

மன்னர் : ஓ.. 

அம்மா : அப்புறம் அஞ்சு மாசம் ஆனப்போ நீ பொறக்கிறது என் உயிருக்கே ஆபத்து.. பிரசவத்துல ஆள் காலியாகலாம்னு சொன்னாங்க… நான் கண்டுக்கல.

மன்னர் : என்னம்மா சொல்றீங்க.

அம்மா : ஆமாப்பா. அது மட்டுமா.. பொறந்தப்போ அஞ்சாவது பையனா பொறந்தியா… அஞ்சாவது பையனா பொறந்தா அப்பனை முழுங்கிடும்.. அதனால பையனை கண்காணா தூரத்துல கொண்டு போய் விட்டுடுங்கன்னு அரண்மனை சோதிடர் சொன்னாரு.. நான் அதையும் கண்டுக்கல.

மன்னர் : என்னம்மா.. நீங்க இதெல்லாம் சொன்னதே இல்லையே ?

அம்மா : இதுல சொல்ல என்ன இருக்கு ? ஒரு உயிரை நம்மால உருவாக்க முடியாது, கருவில் தோன்றும் உயிரெல்லாம் கடவுள் கரத்திலிருந்து வருவது.. அது கடைசியில் கடவுளின் கையில் தான் போகணும்.. நாமளா நடுவில வாய்க்கா வெட்டி கடத்த முடியாது.

மன்னர் : நாட்டுமக்களோட நன்மைக்காகத் தான் அப்படி ஒரு முடிவெடுத்தோம். 

அம்மா : சிலரைக் கொன்று சிலரை வாழவைப்பது எப்படி தேச நலன் ? வருமானத்தை அதிகரிக்க ஆயிரம் வழி உண்டு. செலவைக் குறைக்கவும் ஆயிரம் வழி உண்டு. இதை விட்டு விடு. இல்லேன்னா முதல்ல என்னை. கொன்னுடு

மன்னர் : என்னம்மா அபசகுனமா பேசறீங்க

அம்மா ; என்னடா அபசகுனம் ? எனக்கும் எழுபது வயசாகப் போவுது.. என்னையும் சேத்து தானே கொல்லப் போறே… இப்பவே கொன்னுடு… 

மன்னர் : அம்மா.. நான் அப்படி யோசிக்கவே இல்லை… உங்களை எப்படி… 

அம்மா : சட்டம்ன்னா எல்லாருக்கும் பொது தானே… இதெல்லாம் மஹா பாவம்ன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ..

மன்னர் : பாவமா ? அதெங்கே படிச்சீங்க ?

அம்மா : பைபிளில் படிச்சிருக்கேன். நாம் பிறக்கும் முன்னே நம்மை அறிந்தவர் கடவுள். நாம் இறந்த பின்னும் நம்மை அறிபவர் கடவுள். நம்ம சொந்த உயிரைக் கூட நாம கொல்ல முடியாது.. அது பாவம்..

மன்னர் : யூ மீன்.. தற்கொலை பாவம் ?

அம்மா : கண்டிப்பா… உங்க கிட்டே வளத்தச் சொல்லி ஒரு புறாவைக் கொடுத்தா அதை வறுத்து சாப்பிடுவீங்களா ? 

மன்னர் : நோ..நோ.. அந்த மன்னர் நான் இல்லை… அது வேற ஒருத்தன்.. நான் கவனமா வளர்த்து, திரும்ப கொடுப்பேன்

அம்மா : அப்படி தான், உயிரும் உங்க கிட்டே கடவுள் கொடுத்திருக்காரு.. நல்ல முறையில வளர்த்து பாதுகாக்கணும். அவர் வந்து எடுத்திட்டு போகும் வரை வெயிட் பண்ணணும்.

மன்னர் : ஓ.. இப்போ புரியுது.. நான் ஒரு மங்குனி மன்னரா இருந்திருக்கேன்.

அம்மா : அவசரமா முடிவெடுத்து, நிதானமா வருந்தாம இருந்தியே.. அதுவே சந்தோசம் தான்

மன்னர் : ம்ம்.. இப்போ என்ன பண்ணலாம்.

அம்மா : முதல்ல அந்த திட்டத்தை நிறுத்த சொல்லுன. மக்களோட செலவை குறைக்க வழி சொல்லு, மக்களோட வரியை இந்த காலத்துல கட் பண்ணு, சலுகைகளை கம்மி பண்ணுங்க, விவசாயத்தை ஃபோக்கஸ் பண்ணுங்க.. எவ்ளோ வழி இருக்கு…

மன்னர் : நன்றிம்மா.. என் கண்ணை தொறந்துட்டீங்க… கருணைக் கொலைங்கற பேர்ல, கருணை இல்லாம கொலை செய்ய இருந்தேன். நல்ல வேளை காப்பாத்தினீங்க.

அம்மா : காப்பாத்தினது நான் இல்லப்பா.. நம்மை உருவாக்கினவரு தான். இந்தா இந்த புக்கை உங்க அரசவையில வெச்சுக்கோங்க.. இயேசுவோட போதனைப்படி அரசாளுங்க, மக்கள் சுபிட்சமா இருப்பாங்க.. 

மன்னர : கண்டிப்பாம்மா… இதை படிச்சு பாத்து புரிஞ்சுக்கறேன்.

அம்மா : ஆங்… அதே போல, இனிமே ஐடியா சொல்லாட்டா தலையை வெட்டுவேன், வாலை வெட்டுவேன்னு பேசாம.. எல்லாருமா சேர்ந்து உக்காந்து யோசிச்சு ஐடியா கண்டுபிடிங்க சரியா ? செலவு குறையணும், வருமானம் அதிகரிக்கணும்..நல்லா யோசிங்க… தலைவர்கள்ன்னா நாட்டு மக்களுக்காக யோசிக்கணும்… 

மன்னர் : சரிம்மா… …ரொம்ப நன்றி… யாரங்கே. .. பொற்கிழி ஒன்றை அம்மாவுக்குக் கொடுங்கள் 

அம்மா :.. இப்ப தானே செலவைக் குறைக்க சொன்னேன்.. அதுக்குள்ள என்ன பொற்கிழி…பற்கிழி ந்னு… அதெல்லாம் கிழிக்க வேண்டாம்… … அதெல்லாம் நீயே வெச்சுக்கோ .. மக்களுக்காக செலவு செய் 

மன்னர் : ஹி..ஹி.. பழக்க தோஷம்…போயிட்டு வாங்க.. நன்றி


*

சேவியர் - [ ] 
Posted in Articles

எபிநேசர்

எபிநேசர்

காட்சி 1

*

சில மாதங்களுக்கு முன்

( அம்மா & பையன் )

அம்மா : தம்பி, என்னப்பா ரொம்ப டல்லா இருக்கே.

பையன் : ஒண்ணும் இல்லம்மா… லாக்டவுன் பிரச்சினை ரொம்ப சீரியசா போயிட்டிருக்கு.. ஆறு மாசமா வண்டி ஓடல. அஞ்சு டெம்போ வெச்சிருக்கோம்… ஓடிட்டிருந்தவரை நல்லா இருந்துச்சு.. இப்போ வண்டிக்கு டியூ கட்டவும் முடியல, கைல எதுவும் வரவும் மாட்டேங்குது

அம்மா : வண்டியை ஷெட்ல போட்டு ஆறுமாசம் ஆச்சுல்ல.. வண்டி ஓடினா தானே வருமானம் ஏதாச்சும் வரும் … கிரேஸ் டெம்போஸ் ந்னா எவ்ளோ பிரபலமா இருந்துச்சு…

பையன் : ஆமா பிரைவட் ஃபைனான்சிங் பண்ணியிருக்கிறதனால கழுத்தைப் பிடிக்கிறாங்க… எப்படியோ சமாளிச்சாச்சு ஆறுமாசம்.. வண்டி ஓட ஆரம்பிச்சா நல்லா இருக்கும்.

அம்மா : ஆமாப்பா.. கடவுள் பாத்துப்பாருப்பா… இவ்ளோ நாள் காப்பாத்தினவரு.. இன்னும் காப்பாத்துவாரு.

பையன் : அதாம்மா ஒரே நம்பிக்கை.. சொல்லுங்கம்மா.. என்ன விஷயம் சும்மா தான் வந்தீங்களா ?

அம்மா : நம்ம கிராம ஊழியத்துக்கு இந்த மாசம் பணம் அனுப்பல… ரெண்டு ஊழியக்காரங்களுக்கும், நாலு மலைவாழ் பிள்ளைகளுக்கும் ஹெல்ப் பண்ணிட்டிருக்கோம்ல…

பையம் : ஓ..ஆமாம்மா… கண்டிப்பா குடுப்போம்… அனுப்பிடுங்க…

அம்மா : சரிப்பா

காட்சி 2

( அக்கா & பையன் )

தம்பி : அக்கா.. வாங்கக்கா… நல்லா இருக்கீங்களா ?

அக்கா : நல்லா இருக்கேன் தம்பி… ஒருவழியா லாக்டவுனை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணி விட்டாங்க. அதனால சென்னைக்கு வர முடிஞ்சுது…

தம்பி : ம்ம்.. பிள்ளைங்க, அத்தான் எல்லாம் நல்லா இருக்காங்களா ?

அக்கா : நல்லா இருக்காங்க … கடவுள் கிருபையால நல்லா இருக்காங்க.

தம்பி : ரொம்ப சந்தோசங்கா…ஆறுமாசத்துக்கு மேல ஆச்சு உன்னை பாத்து… அத்தானுக்கு கடை எல்லாம் எப்படி போவுது ? இந்த லாக்டவுன்ல கடையே திறந்திருக்க மாட்டாரே ?

அக்கா : உண்மையை சொல்லணும்ன்னா.. ரொம்ப கஷ்டம் தம்பி.. சாப்பாட்டுக்கே கஷ்டம் தான்… அவருக்கு கடையும் இல்ல, வேலையும் இல்ல.. அதான் உன்னை பாக்கலாம்ன்னு வந்தேன்

தம்பி : ஓ.. ஆமாக்கா.. சின்ன சின்ன கடை வெச்சிருக்கிறவங்க எல்லாம் ரொம்பவே கஷ்டப்படறாங்க… எல்லாம் சரியாயிடும்கா… கிருமியை விட கிருபை பெரியது.

அக்கா : ஆமாடாதம்பி.. கிருமியை விட கிருபை பெரியது ! எங்க எல்லாருக்குமே மைல்டா கோவிட் வேற வந்துச்சு… ஹாஸ்பிடலுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு….

தம்பி : ஏங்கா நீ போன் பண்ணல, நான் அனுப்பியிருப்பேனே… போகும்போ எவ்ளோ வேணுமோ அதை எடுத்திட்டு போ…

அக்கா : உன் கஷ்டம் என்னன்னு அம்மா என் கிட்டே சொன்னாங்க, ஆனாலும் அதை எதையுமே வெளிக்காட்டாம எவ்ளோ வேணும்ன்னாலும் எடுத்துட்டு போன்னு சொல்றே தம்பி.. இந்த அன்புல தான் நான் கடவுளை பாக்கறேன்.

தம்பி : என்னக்கா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு… கொஞ்சம் நகையெல்லாம் அடகு வெச்சோம், அப்படி இப்படி இருந்த பணமெல்லாம் டியூ கட்டி தீத்தோம்… அவ்ளோ தான்… கடவுள் தேவைக்கு குடுத்துட்டே தானே இருக்காரு…

அம்மா : உண்மை தான் தம்பி, இதுவரை காத்தவரு இனியும் காப்பாரு…

காட்சி 3

( போனில் )

பையன் : அண்ணே.. கொஞ்சம் டைம் குடுங்க… லாக்டவுன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆச்சு எப்படியாச்சும் நிமிந்துடலாம்ன்னு பாத்தா வேவ் 2 ந்னு சொல்றாங்க, மறுபடியும் பூட்டி வெச்சுட்டாங்க…

நபர் : இருக்கட்டும்பா.. எல்லாருக்கும் அதே கஷ்டம் தானே.. எந்த வண்டியும் டியூ வர மாட்டேங்குது.. நானும் ஃபைனான்ஸ் பண்ணி தானே வாழ்க்கையை ஓட்டறேன்

பையன் : அண்ணே.. ரெண்டு மாசம் தான்னே டியூ… கட்டிடறேன்.. ஒரு 2 மாசம் டைம் குடுங்க..

நபர் : சாரிப்பா… அவ்ளோ எல்லாம் தர முடியாது… ஏதாவது அரேஞ்ச் பண்ணி குடு…

பையன் : ஒரு மாசம் டைமாச்சும் குடுங்க.. நான் பாக்கறேன்..

நபர் : இல்லப்பா.. டூவீக்ஸ் ல பேலன்ஸ் கட்டிடு.. கொஞ்சமாச்சும் கட்டிடு… இல்லேன்னா வண்டியை சீஸ் பண்றதை தவிர வேற வழியில்லை.

காட்சி 4

( அம்மா & பையன் )

அம்மா : என்னப்பா இப்படி ஆச்சு… செகண்ட் வேவ் ந்னு சொல்லி மறுபடியும் பூட்டி வெச்சுட்டாங்க… என்ன பண்றது ?

பையன் : எல்லாம் கடவுள் பாத்துப்பாரும்மா… வேற ஏதாச்சும் வேலை கிடைக்குமான்னு பாக்கறேன்.. ஒண்ணும் கிடைக்கல.. லெட்ஸ் சீ

அம்மா : ம்ம்… இந்த மாசம் மிஷனரிக்கு அனுப்ப கூட காசில்லே..

பையன் : ஓ.. அம்மா அதை எப்படியாச்சும் அனுப்பணும்மா.. சும்மாவே அவங்களுக்கு மாசம் நாலாயிரத்து அஞ்ஞூறு தான் கிடைக்குதாம். இந்த காலத்துல அதுவும் கஷ்டமாயிடும்…

அம்மா : உண்மை தான்பா… ஆனாலும், எப்படி பணத்தை புரட்டறதுன்னு தான் தெரியல..

பையன் : ம்ம்.. கடவுள் தருவாரும்மா…. யோசிக்கிறேன்

காட்சி 5

( பையன் செபிக்கிறான் )

( அம்மா செபிக்கிறார் )

காட்சி 6

காலையின்

( போன் அடிக்கிறது )

( பையன் போன் எடுக்கிறான் )

மறுமுனை : சார்.. நான் அன்பு இல்லத்தில இருந்து பேசறேன். இந்த மாசம் எந்த ஒரு ஹெல்ப் மே கிடைக்கல… 50 பிள்ளைங்க இருக்காங்க.. ஒரு ரெண்டு rice bag வாங்கி குடுத்தா கூட ஹெல்ப் புல்லா இருக்கும் சார்… ஒரு 3000 ரூபா போதும் சார்…

பையன் : கூகிள் பே அனுப்புங்க, நான் ஹெல்ப் பண்றேன்

மறு முனை : ரொம்ப நன்றி சார்

( பையன் போனை வைத்துவிட்டு பார்க்கிறேன்… )

பையன் : போனை பார்க்கிறான்… சே.. ரெண்டு rice bag வாங்க கூட பேலன்ஸ் இல்லையே.. கடவுளே… பாவம் பிள்ளைங்க பட்டினி கிடப்பாங்களே… கடவுளே… இதுவரை நீங்க தான் காப்பாத்தினீங்க, இனியும் நீங்க தான் காப்பாத்தணும்

( போன் வருகிறது.. பயந்தபடி போனை எடுக்கிறான் )

பையன் : ( அக்கா.. போன் பண்றா… என்னாச்சோ தெரியலையே .. பாவம் ரொம்ப கஷ்டப்படறாங்ஜ… ) ஹலோ அக்கா…. சொல்லுங்க…

அக்கா : தம்பி.. நல்லா இருக்கியா ?

பையன் : நல்லா இருக்கேன் க்கா .. நீங்க எப்படி இருக்கீங்க ?

அக்கா : நல்லா இருக்கேன் தம்பி.. இக்கட்டான டைம்ல ஹெல்ப் பண்ணினே… ரொம்ப யூஸ்புல்லா இருந்துச்சு…

பையன் : அதெல்லாம் எதுக்குக்கா சொல்லிட்டு…. அத்தான் எப்படி இருக்காரு ? அவரு வேலை எப்படி போயிட்டிருக்கு ?

அக்கா : அது விஷயமா தான் நான் உனக்கு கால் பண்ணினேன்.

பையன் : சொல்லுங்கக்கா

அக்கா : கவர்மெண்ட் ஒரு ஆர்டர் போட்டிருக்காங்க, எல்லா இடத்துலயும் காய்கறி, மசாலா எல்லாம் சப்ளை பண்ணணும்ன்னு.. லாக்டவுன் முடியற வரைக்கும்….. அதுல ஒரு ஏரியா காண்ட்றாக்ட் அத்தானுக்கு கிடைச்சிருக்கு பை காட்ஸ் கிரேஸ்..

பையன் : பிரைஸ் த லார்ட் க்கா…

அக்கா : அதுக்கு நாலஞ்ச வண்டி தேவைப்படுது… உன்னோட டெம்போ எல்லாம் அவைலபிளா இருந்தா அதை வெச்சே ஆரம்பிக்கிறேன்னு அவரு சொன்னாரு. … உன் கிட்டே கேக்க சொன்னாரு…. ரெண்டு மாசம் புல்லா வண்டி ஓடின மாதிரியும் இருக்கும்… நம்ம கஷ்டம் கொஞ்சம் குறைஞ்ச மாதிரியும் இருக்கும். என்ன சொல்றே தம்பி ?

பையன் : ஓ.. பிரைஸ் த லார்ட்.. கண்டிப்பா அக்கா… கண்டிப்பா யூஸ் பண்ணுங்க… வண்டிக்கு டியூ கட்டினாலே மனம் நிம்மதி ஆயிடும். அப்புறம் நம்மை நம்பியிருக்கிற மக்களுக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ற அளவுக்கு காசு கிடைச்சா போதும்….

அக்கா : ஓ.. சூப்பர் தம்பி. அப்போ வண்டிக்கு அலைய வேண்டிய தேவை இல்லை. என்ன லாபம் வருதோ அதை நாம ஷேர் பண்ணிப்போம்.. சரிதானே

பையன் : நமக்குள்ள என்னப்பா கணக்கு வழக்கெல்லாம்…. அதெல்லாம் பாத்துக்கலாம்.. கடவுள் நம்ம ரெண்டு பேரோட கஷ்டத்தையும் தீக்க ஒரு வழி காட்டியிருக்காரு. பிரைஸ் த லார்ட்.

அக்கா : பிரைஸ் த லார்ட்…

( போனை வைக்கிறான் )

பையன் : எபினேசரே… இதுவரையும், எதுவரையும் உதவி செய்ய நீங்க இருக்கும்போ எனக்கு என்ன கவலை ! தேங்க்யூ ஜீசஸ்.. ம்ம் கட்ட வேண்டிய கடனை அடைச்சுட்டு, அந்த மிஷனரிக்கும், அன்பு இல்லத்துக்கும் பணத்தை அனுப்பிட்டு தான் மறு வேலை. தேங்க் யூ ஜீசஸ்…

*

Posted in Articles

கடவுள் பாதி, மனிதன் மீதி

கடவுள் பாதி, மனிதன் மீதி

காட்சி 1

( ஆல் இன் ஆல் செப கோபுரம் )

(செபத்துக்காக அழைப்பு வருகிறது )

போன் : ஆல் இன் ஆல் செப கோபுரமா ?

நபர் 1 : ஆமா… பிரைஸ் த லார்ட்.. சொல்லுங்க..

போன் : எனக்கு கழுத்துல ஒரு சுளுக்கு.. கொஞ்ச நாளாவே போக மாட்டேங்குது.. செபம் பண்ணுங்க பிரதர்

நபர் 1 : கண்டிப்பா.. கடவுள் கோணலானதை நேராக்குபவர். நீங்க உங்க கையை கழுத்தில வையுங்க, நான் உங்களுக்காக செபம் பண்றேன்..

போன் : சரி பிரதர்

நபர் 1 : அப்பா பிதாவே, ஒரே வார்த்தையால் நோய்களை விரட்டும் வல்லமை படைத்தவரே … ( செபம் )

நபர் 1 : பிரதர்.. உங்களுக்காக உருக்கமா செபிச்சிருக்கேன். கண்டிப்பா கர்த்தர் பதிலளிப்பார். கவலைப்படாதீங்க உங்க சுளுக்குக்கே அவரு சுளுக்கெடுப்பாரு . ( புன்னகைக்கிறான் )

போன் : ரொம்ப நன்றி பிரதர்

( இன்னொரு அழைப்பு வருகிறது )

நபர் : ஹலோ, ஆல் இன் ஆல் செபகோபுரம்… சொல்லுங்க…. கண்டிப்பா…. நாம செபிக்கலாம்…

காட்சி 2

( செப கோபுரத்தில் இன்னொரு பெண் )

நபர் 2 (பெண் ) : ஹலோ.. சொல்லுங்க சிஸ்டர்…

போன் : எனக்கு ஒரு லேன்ட் பிரச்சினை இருக்கு சிஸ்டர்… குடும்பத்துல எங்களுக்குத் தரவேண்டியதை தர மாட்டேங்கறாங்க… எனக்கு ஒரு நல்ல லாயர் கிடைக்க செபம் பண்ணுங்க‌

நபர் 2 : லாயர் கிடைக்க செபம் பண்ணணுமா ? கடவுள் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கணும்ன்னு செபம் பண்ணணுமா சிஸ்டர் ?

போன் : பிரச்சினை தீரணும்ன்னு நான் செபம் பண்ணிட்டு தான் இருக்கேன்.. ஒரு நல்ல லாயர் அமைய மாட்டேங்குது…. அமைஞ்சா மேட்டர் ஈசியா முடியும்…

நபர் 2 : கடவுள் கிட்டே பிரச்சினையை குடுத்துட்டீங்க, அப்புறம் எதுக்கு லாயர் ?

போன் : அப்படியில்லை சிஸ்டர்.. கடவுள் லாயர் மூலமா பிரச்சினையை தீக்கட்டும்ன்னு தான்

நபர் 2 : ஏன் ? கடவுள் நேரடியா தீர்க்க மாட்டாரா ? இத பாருங்க சிஸ்டர், ஒரு விஷயத்தை கடவுள் கிட்டே ஒப்படைச்சா நம்பிக்கையோட காத்திருக்கணும். லாயரை பாருங்க, ஆடிட்டரை பாருங்கன்னு எல்லாம் செபம் பண்றது சரியில்லை. சரியா

போன் : சரி சிஸ்டர்

நபர் 2 : இந்த பிரச்சினை யாருக்கும் எந்த மன வருத்தமும் இல்லாம சுமூகமா முடியணும்ன்னு செபம் பண்ணுவோம் சரியா ?

போன் : சரி சிஸ்டர்

நபர் 2 : அந்த லேன்டோட டாக்குமென்ட் மேல கையை வையுங்க, நாம செபிப்போம்.

போன் : சரி சிஸ்டர்… சாஃப்ட் காப்பி இருக்கு, அது மேல கையை வெச்சுக்கறேன்.

நபர் 2 : அன்பான இயேசுவே…. நீர் நிலத்தை பங்கிடுபவராக வரவில்லை என்பது தெரியும். ஆனாலும் ஒரு குடும்பத்தின் பிரச்சினையை தீர்ப்பதற்காக நீர் மனமிரங்க வேண்டுகிறோம் ( செபம் ) ஆமென்.

*

காட்சி 3

( நபர் 1 & நபர் 2 )

நபர் 1 : என்ன சிஸ்டர் நல்லா இருக்கீங்களா ? லைஃப் எப்படி போவுது

நபர் 2 : பை காட்ஸ் கிரேஸ் எல்லாம் நல்லா போகுது. உங்களுக்கு ?

நபர் 1 : நல்லா போவுது.. கடவுளோட சந்நிதில இருக்கிறதும், அடுத்தவங்களுக்காக செபம் பண்றதும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

நபர் 2 : ஆமா ஆமா, அதுவும் மக்கள் போன் பண்ணி அவங்களோட வேண்டுதல் நிறைவேறிச்சு ந்னு சொல்லும்போ கிடைக்கிற மன நிம்மதி ரொம்ப அதிகம்.

நபர் 1 : எஸ்.. எஸ்…

நபர் 2 : ஆமா.. என் பையனுக்கு ஒரு பொண்ணு பாக்க சொல்லியிருந்தேனே ஏதாச்சும் நல்ல பொண்ணு ?

நபர் 1 : விசாரிச்சுட்டே இருக்கேன்.. கடவுள் நல்ல ஒரு பொண்ணை கண்டு பிடிச்சு தருவாரு.

நபர் 2 : ஆமா, அவர் கிட்டே ஒப்படைச்சுட்டேன். ஒரு நல்ல கிறிஸ்தவ பொண்ணா, நல்ல குணாதிசயமா இருந்தா போதும்.

நபர் 1 : கடவுள் தருவாரு சிஸ்டர்.. டோன்ட் வரி

காட்சி 4

( போன் நபர் 1 & 2 )

நபர் 1 : சிஸ்டர்.. நல்லா இருக்கீங்களா ?

நபர் 2 : இருக்கேன் பிரதர்.. நீங்க ?

நபர் 1 : ஐம் ஃபைன்… உங்க பையனுக்கு ஒரு நல்ல வரன் கிடைச்சிருக்கு. ரொம்ப நல்ல குடும்பம். அடக்கமான பொண்ணு. நல்ல கிறிஸ்தவக் குடும்பம்..

நபர் 2 : ஓ.. பிரைஸ் த லார்ட்… பொண்ணு என்ன பண்றா பிரதர்.

நபர் 1 : பொண்ணு எப்பவுமே பிரேயர் பண்றா ?

நபர் 2 : அதில்லை பிரதர்… வேலை, ஜாப்.. என்ன ? என்ன படிச்சிருக்கா ?

நபர் 1 : பொண்ணு டிகிரி முடிச்சிட்டு, நம்மள மாதிரி ஒரு ப்ரேயர் டவர்ல முழு நேர செப ஊழியரா இருக்கா..

நபர் 2 : ஓ.. செ..செப ஊழியரா இருக்காங்களா ? அது.. வந்து

நபர் 1 : சொல்லுங்க சிஸ்டர்.

நபர் 2 : பையனுக்கு பொண்ணு ஐடி ல இருக்கணும்ன்னு ஒரு ஆசை, அட்லீஸ்ட் வேற ஏதாச்சும் நல்ல வேலைன்னா கூட பரவாயில்லை.. தப்பா நினைக்காதீங்க…

நபர் 1 ; இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு.. நாம விசாரிப்போம், நமக்கு கடவுள் ஹெல்ப் பண்ணுவார்.

நபர் 2 : தேங்க்யூ பிரதர்

காட்சி 4

( நபர் 1 & 2 )

நபர் 1 : ஒரு நல்ல பொண்ணு கடைசியா கிடைச்சிருக்கு சிஸ்டர். பொண்ணு ஐடி தான்… நல்ல சம்பளம். நல்ல குடும்பம்… கருப்பா இருந்தாலும் களையா இருப்பா

நபர் 2 : கருப்பா… ஓக்கே.. நிறத்துல என்ன இருக்கு இல்லையா ( அவஸ்தையாய் சிரிக்கிறார் )

நபர் 1 : ஆமா.. ஆமா

நபர் 2 : பொண்ணு பேரு

நபர் 1 : ஜாஸ்மின்

நபர் 2 : அப்பா பேரு

நபர் : ஆன்டனி

நபர் 2 : அவங்க … எந்த ஏரியா… ( தலையை சொறிகிறார் )

நபர் 1 : மதுரை பக்கம்ன்னு நினைக்கிறேன்..

நபர் 2 : அவங்க குடும்ப பேரு.. இல்லேன்னா… தாத்தா பேரு.. அப்படி ஏதாச்சும் தெரியுமா ? ஐ மீன்.. அவங்க ஜெனரேஷன்

நபர் 1 : அதெல்லாம் தெரியல… ( புரபைல் கொடுக்கிறார் ) இதுல டீட்டெயில்ஸ் இருக்கு.. பாருங்க சிஸ்டர்.

நபர் 2 : ஓக்கே.. நான் பாத்து சொல்றேன்.

காட்சி 5

( நபர் 2 போனில் )

நபர் 2 : நான் சொன்ன அட்ரஸ் விசாரிச்சீங்களா ?

நபர் 3 : பாத்தேன் பாத்தேன்… குடும்பம் எல்லாம் நல்ல குடும்பம் தான், பொண்ணும் நல்லா தான் இருக்கு…

நபர் 2 : அவங்க நம்ம ஆளுங்களா ?

நபர் 3 : அதான் பிரச்சினை.. அவங்க வேற சாதி… நம்மள விட கம்மியான சாதி…

நபர் 2 : ஓ.. அப்போ செட் ஆவாது.. விட்டுடலாம்

நபர் 3 : ஆமா ஆமா … சாதியை விட்டு சாதி மாறி கல்யாணம் பண்ணினா நாளைக்கு அவங்க பிள்ளைங்க, அடுத்த தலைமுறை எல்லாமே கஷ்டப்படும்.

நபர் 2 : ஆமா ஆமா

நபர் 3 : அடுத்த தலைமுறைன்னு இல்ல, நம்ம சாதி சனத்தோட பகையை சம்பாதிக்க வேண்டியிருக்கும்.

நபர் 2 : கண்டிப்பா… கடவுள் நம்ம சாதியிலயே ஒரு நல்ல பொண்ணை தருவாரு.. விட்டுங்க‌

நபர் 3 : அதான் நல்லது. செபம் பண்ணும்போ கிளியரா கேக்கணும், நம்ம சாதிலன்னு… புரியுதா

நபர் 2 : யா..யா.. இனி அப்படியே பண்ணுவோம்

காட்சி 6

( நபர் 1 & 2 )

நபர் 2 : ப்ரதர்.. சாரி, அந்த வரன்.. சில காரணங்களுக்காக செட் ஆகல…. சோ..

நபர் 1 : ம்ம் கேள்விப்பட்டேன்… ஐ மீன்… ஏதோ சாதி… அது இதுன்னு

நபர் 2 : நாங்க… அப்படியெல்லாம் ரொம்ப பாக்கறதில்ல… சொந்தக்காரங்க தான்…

நபர் : ம்ம்..யூதரென்றும் கிரேக்கரென்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை, கிறிஸ்துவுக்குள் எல்லோரும் ஒன்றாய் இருக்கிறோம் ‍ ந்னுபைபிள் சொல்லுது. நாம என்னடான்னா

நபர் 2 : ஹி..ஹி.. இருக்கு ப்ரதர்.. ஆனாலும்… அவங்க லைஃன்னு வரும்போ..ஃபியூச்சர்…ஹி…ஹி..

நபர் 1 : ஓக்கே… லெட்ஸ் சீ

காட்சி 7

( சில வாரங்களுக்குப் பின் )

நபர் 2 : பிரதர்.. வெரி ஹேப்பி நியூஸ்…. ஒரு நல்ல வரன் செட் ஆயிருக்கு பிரதர்… காட் ஈஸ் கிரேட். கண்டிப்பா இந்த காரியம் கர்த்தரால் தான் வந்திருக்கு

நபர் 1 : ம்ம்.. பொண்ணு யாரு சிஸ்டர் ?

நபர் 2 : நம்ம ‘நல்ல சாப்பாடு ஹோட்டல்’ ஓனரோட‌ பொண்ணு.

நபர் 1 : அது அந்த பீட்டர் ?

நபர் 2 : எஸ்..எஸ்.. அவரே தான். எல்லாருக்கும் தெரிஞ்சவரு தானே

நபர் 1 : சிஸ்டர்.. அவரு போற வழி சரியில்லையே… ஐமீன்.. அவரு சர்ச்சுக்கெல்லாம் போறதில்லை, அவரோட நடவடிக்கைகளும் சரியில்லேன்னு கேள்விப்பட்டிருக்கேன்.

நபர் 2 : நாம யாரையும் ஜட்ஜ் பண்ணக் கூடாது பிரதர். அவங்க மனைவி சர்ச் போறாங்க, அது மட்டுமில்ல, கல்யாணம் ஆனா பொண்ணு நம்ம வீட்டுக்கு தான் வரப்போறா, அவளை நாம சரியான ரூட்ல கொண்டு வந்திடலாம்.

நபர் 1 : ம்ம்… நல்ல வசதியான இடம் … அதனால காம்ப்ரமைஸா ?

நபர் 2 : காம்ப்ரமைஸ் ந்னு இல்லை, நாங்க எதுவுமே கேக்கல. அவங்களே ஒரு வீடும், காரும், நூறு பவுன் நகையும் போடறோம்ன்னு சொன்னாங்க. அவங்க பொண்ணுக்கு அவங்க குடுக்கிறாங்க.. மத்தபடி நாங்க ஒண்ணும் கேக்கல‌

நபர் 1 : இதுக்குமேல கேக்க என்ன இருக்கு ? அவரு ..சாதி யெல்லாம்..

நபர் 2 : எங்க சாதி தான்.. ஐ மீன் எங்க சாதியில ஒரு பிரிவு.. அது பரவாயில்லை. காட் ஈஸ் கிரேட்.. சரியான ஒரு இடத்தை அமைச்சு குடுத்திருக்காரு.

நபர் 1 : சிஸ்டர், அப்படி சொல்லாதீங்க. அவரு ஒரு ஸ்பிரிச்சுவல் பொண்ணை காட்டினாரு, நீங்க உங்க எதிர்பார்ப்புக்கு இல்லேன்னு ரிஜக்ட் பண்ணினீங்க. வேலைல இருக்கிற நல்ல குடும்பத்துல உள்ள ஒரு பொண்ணை காட்டினாரு அவங்க சாதி மேட்ச் ஆகலேன்னு ரிஜக்ட் பண்ணினீங்க‌

நபர் 2 : கல்யாணம்ன்னா ஆயிரம் காலத்து பயிர் பிரதர் சட்டுன்னு செட் ஆகுமா

நபர் 1 : அப்புறம் உங்களுக்கு பணம், சாதி, வேலை எல்லாமே செட் ஆகி வரும்போ, சில கிறிஸ்தவ மதிப்பீடுகளை காம்ப்ரமைஸ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணி வெக்கிறீங்க. அதை கர்த்தரால் வந்ததுன்னு அவர் தலையில போடறீங்க.

நபர் 2 : என்ன சொல்ல வரீங்க ப்ரதர் ?

நபர் 1 : நமக்கு கடவுள் ஒரு சைனிங் அதாரிடி மாதிரி வேணும், மத்தபடி எல்லாத்துக்கும் உலகத்துல உள்ள ஸ்டேன்டர்ட் ஃபாலோ பண்ணுவீங்க அப்படி தானே

நபர் 2 : அ..அபப்டியில்லை…

நபர் 1 : இது எப்படி இருக்குன்னா, இஸ்ரேல் மக்களுக்கு அரசரா கடவுள் இருந்தப்போ மக்கள் என்ன சொன்னாங்க, அவரு இருக்கட்டும்.. பட் எங்களுக்கு ஒரு அரசரை ஏற்படுத்தி தாங்கன்னு… அதாவது எங்க விஷயத்தை எல்லாம் இங்க பாத்துக்கறோம், அதுல ஏதாச்சும் தேவைப்பட்டா அங்கே வரோம்ன்னு

நபர் 2 : ப்ரதர்.. அப்படியில்லை பிரதர்… நீங்க சொல்றது வேற..

நபர் 1 : எல்லாம் ஒண்ணு தான் சிஸ்டர். ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் சரியில்லை. எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. உலகையும் திருப்திப் படுத்தி கடவுளையும் திருப்திப்படுத்த முடியாது. சொல்லவேண்டியது என் கடமை, அதான் சொல்லிட்டேன். தப்பா இருந்தா, மன்னிச்சிடுங்க.

காட்சி 8

( நபர் 2 சிந்தனையில் இருக்கிறார் )

காட்சி 9

(நபர் 2 செபிக்கிறார் )

நபர் 10

( போனில் )

நபர் 2 : பிரதர், தேங்க்யூ .. நீங்க சொன்ன ஆலோசனை என்னை ரொம்பவே யோசிக்க வெச்சுது. பணத்தையும், சாதியையும் தூக்கி முன்னால வெச்சேன். கடவுளை பேக் சீட்ல போட்டேன். எவ்ளோ பெரிய தப்பு பண்ண இருந்தேன்.

நபர் 1 ( கேட்டுக்கொண்டிருக்கிறார் )

நபர் 2 : அந்த பொண்ணு ஏற்கனவே ஒரு பையன் கூட லிவிங் டுகதர் ரிலேஷன்ஷிப்ல இருந்ததாகவும் அதனால தான் அவசர அவசரமாக நிறைய வரதட்சணக் குடுத்து கல்யாணம் பண்ணி வைக்க டிரை பண்ணினதாகவும் அப்புறம் சொல்றாங்க … கடவுள் தான் காப்பாத்தினாரு

நபர் 1 : பிரைஸ் த லார்ட் !

நபர் 2 : என்னோட விருப்பப்படி நடந்தா அது கடவுள் கொடுத்ததுன்னு நினைச்சேன், ஐம் ராங். என்னோட ஆசைக்கும், அவரோட ஆசீர்வாதத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நான் இப்போ புரிஞ்சுகிட்டேன். பையனுக்கு பொண்ணு பாக்கற விஷயத்தை மறுபடியும் முதல்ல இருந்து தொடங்கறேன்.

நபர் : கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு சிஸ்டர் ! பிரைஸ் த லார்ட் சிஸ்டர்.

*

Posted in Articles

தீர்ப்பு

காட்சி 1

கிராமத் தலைவர் பைபிள் வாசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெண் ஓடி வருகிறார்.

அப்போது ஒரு பெண் ஓடி வருகிறார்

( ஒரு கிராமத்துப் பெண், கிராமத் தலைவரிடம் வருகிறார் )

பெண் : ஐயா.. வணக்கமுங்க…. மன்னிக்கணும், நீங்க பைபிள் வாசிச்சிட்டிருந்தீங்க, தொந்தரவு பண்ணிட்டேன்…

கி. த : பரவாயில்லை… சொல்லும்மா, என்ன விஷயம் ? காலங்காத்தால வந்திருக்கே..

பெண் : ஐயா என்னோட வீட்டையும், சுத்தியிருக்கிற தோட்டத்தையும் அறிவழகன் ஆக்கிரமிக்க பாக்கிறாருங்க… வீட்டை காலி பண்ணிட்டு ஓடலேன்னா, ஆளையே காலி பண்ணிடுவேன்னு மிரட்டறாருங்க.

கி.த : என்னம்மா சொல்றே ? யாரு ? சோடா பாட்டில் கம்பெனி ஓனர் அறிவழகனா ?

பெண் : ஆமாங்கய்யா… நம்ம கிராமத்துக்கு வந்து நிறைய நிலம் வாங்கி அவரு பெரிய பெரிய கம்பெனியும் கட்டிட்டாருங்க.. இப்போ என் வீடும் தோட்டமும் அவரு வீட்டு பக்கத்துல இருக்கிறதனால தொரத்த பாக்கறாருங்க.

கி. த : ம்ம்… நான் பேசறேன் அவன் கிட்டே…

பெண் : ஐயா.. நாங்க பரம்பரை பரம்பரையா அங்கே இருக்கோங்க.. எங்க பரம்பரை கல்லறை எல்லாமே அங்க தான் இருக்கு. அது ஒரு நினைவிடம் மாதிரி ஐயா.. அதை நீங்க தான் காப்பாத்தி குடுக்கணும்.

கி. த : கவலைப்படாதேம்மா…. நியாயம் உன் பக்கம் இருக்கு.. நான் என்னன்னு பாக்கறேன்… நீ பதட்டப்படாதே… பிள்ளைங்க நல்லா இருக்காங்களா ?

பெண் : இருக்காங்கய்யா….

கி. த : சரி..சரி.. போயிட்டு வா..

காட்சி 2

( அறிவழகன் & கி. த )

கி. த : அறிவு.. என்னப்பா…. ஒரு ஏழை பொண்ணோட லேண்டை எடுத்துக்கப் பாக்கறியே.. நியாயமா ?

அறிவு : ஐயா.. நானே உங்க கிட்ட வந்து பேசணும்ன்னு நினைச்சேன்.. ஊர்ல பிஸினஸ் பிக்கப் ஆவுது.. நம்ம கிராம மக்கள் நிறைய பேருக்கு வேலை போட்டு குடுத்திருக்கேன். இப்போ என் வீட்டை கொஞ்சம் எக்ஸ்டண்ட் பண்றேன்.. பார்க்கிங் எல்லாம் தேவைப்படுது.. அந்த பொண்ணோட லேண்ட் இருந்தா தான் சரியா வரும்

கி.த : அது ஒரு கணவனை இழந்த பொண்ணுப்பா… அவ மூணு பிள்ளைகளோட வாழ்ந்திட்டிருக்கா…. பாவம்… காலம் காலமா எல்லோருடைய கல்லறையும் அங்க தான் இருக்கு… அது ஒரு கோயில் மாதிரிப்பா அவளுக்கு

அறிவு : என்னய்யா… கிறிஸ்டியன் நீங்க.. நீங்களே இப்படி கல்லறை, கோயில் ந்னு செண்டிமெண்ட் உடறீங்க.. பேசி முடிப்பீங்களா….அதை விட்டுட்டு

கி.த : உன் வீட்டுக்கு அந்தப்பக்கம் முத்துவோட லேண்ட் இருக்கேப்பா…. பின்னாடி கூட விக்கியோட லேண்ட் இருக்கு.. அதுல ஏதாச்சும் பாக்கலாம்ல…

அறிவு : அவங்க கிட்டே கேட்டேன்.. முடியாதுன்னு சொல்லிட்டாங்க

கி. த : அவங்க முடியாதுன்னு சொன்னதும் விட்டுட்டே.. ஏன்னா அவங்க பெரியவங்க.. செல்வாக்கு உள்ளவங்க.. இந்தப் பொண்ணு வேண்டாம்ன்னு சொன்னாலும் விடல.. ஏன்னா ஏழைங்க… இது தப்புப்பா.. ஏழைங்களை வாட்டினா, கடவுள் நம்மை வாட்டுவாரு

அறிவு : ஐயா… உங்க மேல இருக்கிற மரியாதையில தான் பேசிட்டிருக்கேன்… அந்த பொண்ணை அடிச்சு விரட்ட எனக்கு எவ்ளோ நேரம் ஆகும்.. இல்லேன்னா, அது என் லேண்ட் தான்னு சொல்லி கோர்ட்டுக்கு போக எனக்கு எவ்ளோ நேரம் ஆகும்.

கி. த : எதுக்கு இப்போ டென்ஷன் ஆவறே… சரி, அந்த பொண்ணுக்கு நீ என்ன செட்டில் மெண்ட் பண்ணலாம்ன்னு இருக்கே…

அறிவு : என்ன பெரிய செட்டில்மெண்ட்… அது கல்லறை லேண்ட்… வெலை போவாது… ஏதோ கொஞ்சம் குடுத்து அனுப்பலாம்…

கி. த : இது என்னப்பா அநீதியா இருக்கு.. பணமும் குடுக்க மாட்டே, ஆனா உன் பலத்தை காட்டி நிலத்தை புடுங்க பாப்பே… இதெப்படி நியாயம் ?

அறிவு : ஐயா…. நீங்க என் கூட சேந்துடுங்க.. லேண்டை குடுக்க சொல்லுங்க. உங்களுக்கு ஹெவியா ஒரு எமவுண்ட் செட்டில் பண்றேன்.. சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. இனி உங்க பாடு.

கி. த : திங்கக்கிழமை பஞ்சாயத்து கூட்டறேன்பா.. அதுல பாத்துக்கலாம்.

அறிவு : பஞ்சாயத்தெல்லாம் உங்க பாடு, தீர்ப்பு நம்ம பக்கம் வர மாதிரி பண்ணுங்க… அவ்ளோ தான்.

காட்சி 3

( அம்மா & கி.த )

அம்மா : என்னப்பா ? ஏதாச்சும் பிரச்சினையா ?

கி.த : ஆமாம்மா.. ஒரு ஏழை நிலத்தைக் காப்பாத்த போராடறா.. ஒரு பணக்காரன் அவனோட செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த ஏழையை அழிக்க நினைக்கிறான்

அம்மா : உலகம் கெட்டுப் போச்சுப்பா… கலியுகம்.

கி.த : கலியுகத்துல மட்டும் இல்லம்மா…. தாவீது மன்னன் கிட்டே இறைவாக்கினர் சொல்ற கதை ஞாபகம் இருக்கா ? ஏழையோட ஒற்றை ஆட்டை புடுங்கற பணக்காரனோட கதை ? அது மாதிரி தான் இருக்கு

அம்மா : கடவுள் நசுக்கப்படற ஏழையோட பக்கம் தான் எப்பவும் நிப்பாரு…

கி.த : ஆமாம்மா… அதான் நானும் யோசிக்கிறேன்.. கடவுளுக்கு பயந்து தான் எல்லாம் செஞ்சிட்டிருந்தேன்.. இனியும் அப்படி தான் இருக்கணும். மனுஷனுக்கு பயந்து எதுவும் செய்யக் கூடாது

அம்மா : ஆமாப்பா…. கிராமத்துல பிரச்சினையும் வரக்கூடாது, கடவுளுக்கு எதிராவும் நடக்கக் கூடாது. நீ ப்ரேயர் பண்ணு.. எல்லாம் சரியாகும்.

கி. த : ஆமாம்மா.. ( தலையாட்டுகிறார் )

காட்சி 4

கி. த பிரேயர்

காட்சி 5

( ஒரு போன் வருகிறது )

போன் : கிராம தலைவர் சாலமோனா ?

கி. த : ஆமாங்க நீங்க ?

போன் : நான் தான் ஏழை மக்கள் கட்சித் தலைவர் ஏகலைவன் பேசறேன்

கி. த : சொல்லுங்கய்யா….

போன் : அறிவழகன் நம்ம ஆளு.. கட்சிக்கு நல்ல நன்கொடை குடுக்கிற ஆளு.. அவருக்கு எதிரா ஏதும் வரக்கூடாது .. பாத்துக்கோங்க

கி. த : ஐயா… அந்த பொண்ணு பக்கம் தான் நியாயம்… அறிவுக்கு வேற நிலம் எடுத்துக்கலாமே.. ஏங்க ஏழை மக்கள் கட்சி தலைவர்.. ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கணும் இல்லையா ?

போன் : நியாயம் தர்மம் எல்லாம் பாக்க எனக்கு நேரமில்லப்பா…. அறிவு நம்ம ஆளு, அவன் கேக்கறதை செஞ்சு குடுங்க அவ்ளோ தான்.

கி. த : பஞ்சாயத்து வெச்சிருக்கேன் திங்கக்கிழமை…

போன் : உங்க பஞ்சாயத்து முடிவெல்லாம் இங்க சட்டத்துக்கு முன்னாடி செல்லாக்காசு தெரியும்ல

கி. த : ( தீர்க்கமாய் ) ஐயா.. எங்க கிராமம் இன்னிக்கு வரைக்கும் பஞ்சாயத்து முடிவுக்கு தான் கட்டுப்பட்டு வந்திருக்கு… மிரட்டற வேலையெல்லாம் வேண்டாம்.. எது நியாயமோ அதை பண்ணுவோம். கடவுள் கூட இருக்காரு

காட்சி 6

( கி, தலைவருக்கு மிரட்டல் போன் வருகிறது )

போன் : டேய்.. நீ தான் சாலமோனா… உன் பிள்ளைங்க சென்னைல படிக்கிறாங்களா ? சென்னைல செம டிராபிக்காமே…. வண்டி கிண்டி மோதி சாகாம பாத்துக்கப்பா…. உன் அம்மா உன் கூட தான் இருக்காங்களா ? பாவம் கிணத்துல தண்ணி எடுக்கும்போ தவறி விழாம பாத்துக்கோப்பா..

கி. த் : நீங்க யாரு.. என்ன பேசறீங்க ?

போன் : அறிவுக்கு எதிரா ஏதாச்சும் சொன்னீங்கன்னா.. எது வேணும்ன்னாலும் நடக்கலாம்… நீங்க பெரியவங்க, நாலும் அறிஞ்சவங்க.. புரிஞ்சு நடந்துப்பீங்கன்னு நினைக்கிறேன்.

கி. த : குழப்பமாய் போனை வைக்கிறார்

காட்சி 7

( பிள்ளைகளுக்கு போன் பண்ணுகிறார் )

கி. த : யப்பா.. நல்லா இருக்கீங்களா. கவனமா இருங்க.. ரோட்ல போகும்போ எல்லாம் பாத்து போங்க.

அம்மா : என்னப்பா.. ஒரே பதட்டமா இருக்கே ?

கி. த : அந்த அறிவுக்கு சாதகமா தீர்ப்பு சொல்ல சொல்லி அரசியல் தரப்பு, ரவுடி தரப்புன்னு எல்லா இடத்துல இருந்தும் பிரஷர் வருது

அம்மா : ஐயோ..

கி. த : என் பசங்களை கொன்னுடுவேன்னு மிரட்டறாங்க..

அம்மா : ஓ.. அவங்க செஞ்சாலும் செய்வாங்க… ரவுடிப் பசங்க…

கி. த : நீங்களும் கவனமா இருங்கம்மா..

அம்மா : யப்பா… சொல்றேனேன்னு தப்பா நினைக்காதே…. இந்த பிரச்சினைல மாட்டிக்காதே…. வேணும்ன்னா கோர்ட்டுக்கு போங்கன்னு சொல்லி தள்ளி விடு.. நாம தப்பான தீர்ப்பு குடுக்கவும் வேண்டாம்.. தேவையில்லாம பகையை சந்திக்கவும் வேண்டாம்.

கி. த : கோர்ட்டுக்கு போனா அந்த ஏழையை நசுக்கிடுவாங்க

அம்மா : அது அவங்க பாடுப்பா…. எனக்கு பயமா இருக்கு.

காட்சி 8

( கி. த யோசிக்கிறார்…. நாம வாழறதே பிள்ளைகளுக்காக தான்.. நம்மளை பெற்று வளர்த்து ஆளாக்கினதே அம்மா தான்.. அவங்களுக்கே ஒரு பிரச்சினைன்னா…

செபிக்கிறார்

குழப்பமாய் நடக்கிறார்

இரவு வெகு நேரம் கடக்கிறது…

( அதிகாலையில் அம்மா அவனிடம் பேசுகிறார் )

அம்மா : தம்பில்… நேற்றைக்கு பதட்டத்துல பேசிட்டேன். கடவுள் கிட்டே ப்ரேயர் பண்ணினேன்… நாம மிரட்டலுக்கெல்லாம் பயந்து அநியாயத் தீர்ப்பு குடுத்தா அது கடவுளை நிராகரிக்கிறதுக்கு சமம். கடவுளை நம்புவோம். அவரை விசுவாசிப்போம். அவர் நம்மை பாதுகாப்பாரு. கடவுள் நம்மை காப்பாற்றினாலும், காப்பாற்றாமல் போனாலும் அவரை மறுதலிக்காம இருப்போம்பா… இது பெரிய சோதனைக் காலம் தான். ஆனா கடவுள் காப்பாற்றுவார். நீ … எது நியாயமோ, எது கடவுளுக்குப் பிரியமோ, எது கடவுளைப் பயந்து எடுக்கிற முடிவோ அதையே எடுப்பா.

கி. த : ( ஒன்னும் சொல்லாமல் புன்னகைக்கிறார் )

காட்சி 9

பஞ்சாயத்து நாள்

( கிராம தலைவர், பெண், அறிவு , மக்கள் )

கி. த : பிரச்சினை உங்களுக்கே தெரியும். இந்த பொண்ணு அந்த நிலத்துல காலம் காலமா இருக்கிறா. அங்கே அவளோட சொந்தக்காரங்க, பரம்பரை கல்லறை எல்லாம் இருக்கு.

ஆனா, அறிவோட நிலைல இருந்து பாத்தா.. அந்த இடம் அவருக்கு ரொம்ப தேவை. அது இல்லேன்னா வீட்டை எக்ஸ்டண்ட் பண்ண முடியாது..

அறிவுக்கு செல்வாக்கு இருக்கு, ஆனா இந்த பொண்ணு ஏழைப் பொண்ணு. அவளுக்கு சார்பா கடவுளும், நியாயமும் மட்டும் தான் இருக்கு. சோ, இந்த நேரத்துல நான் ஒரு முடிவெடுக்கணும். நியாயத்துக்கு பக்கம் நிக்கவா ? செல்வாகுக்கு பக்கம் சாயவா ?

நான் செல்வாக்கு பக்கம் சாஞ்சா, கடவுளுக்கு பயப்படல. மனுஷனுக்கு பயப்படறேன்னு அர்த்தம்., நான் எனக்காகவோ, என் குடும்பத்துக்காகவோ, லாபத்துக்காகவோ அநியாயத்துக்கு பக்கம் சாஞ்சா கடவுளை விட்டு விலகிட்டேன்னு அர்த்தம். எதை இழந்தும் பெற தகுதி உள்ளது தான் விண்ணரசு. எனவே நியாயமான தீர்ப்பை வழங்குகிறேன்

அந்த நிலம் அந்த பெண்ணுக்கே சொந்தம். யாரும் அத்து மீறக்கூடாது என அறிவை எச்சரிக்கிறேன். அறிவுக்கு வீட்டுக்கு அந்த பக்கமெல்லாம் நிலம் இருக்கு… அதை அவரு வாங்கிக்கலாம். இதை மீறி கோர்ட், வன்முறை ந்னு இறங்கினா.. அறிவோட கம்பெனியை மூடி கிராமத்தை விட்டு அனுப்பி வைக்க இந்த கிராம மக்கள் களமிறங்க வேண்டி வரும்.

இதான் என்னோட தீர்ப்பு !

( அறிவு கோபமாய் போகிறார். )

( அந்த பெண் மகிழ்ச்சியுடன் கி. த நன்றி சொல்கிறார் )

காட்சி 10

( அறிவுக்கு கட்சி தலைவர் போன் செய்கிறார் )

போன் : அறிவு அதை விடு அறிவு… அந்த ஊரு அப்படி தான். ஏதாச்சும் பண்ணி பிஸினஸை முடக்காதே… நாம வேணும்ன்னா முத்துவோட லேண்டை கேக்கலாம்… அந்த பொண்ணுக்கோ கிராம தலைவருக்கோ ஏதும் பண்ணிடாதே.. அவங்க ஓட்டும் நமக்கு முக்கியம், அந்த கம்பெனியும் நமக்கு முக்கியம். சரியா… இதை இத்தோட விட்டுடு…

அறிவு : சரிங்கய்யா…

போன் : போய் அந்த கி.த கிட்டே ஒரு மன்னிப்பு கேளு, அந்த பொண்ணு கிட்டேயும் கேளு. அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானே.. கிராமத்தை பகைச்சுட்டு நாம கிராமத்துல வாழ முடியாது சரியா

அறிவு : சரிங்கய்யா.. அப்படியே பண்ணிடறேன்.

காட்சி 11

( பெண், கி.த வீட்டில் )

பெண் : ஐயா… ரொம்ப நன்றிங்கய்யா…. பெரிய பிரச்சினையா மாறிடும்ன்னு நினைச்சிட்டிருந்ததை சுமூகமா முடிச்சு வெச்சுட்டீங்க…

கி.த : எல்லாம் கடவுள் கிருபைம்மா.. நான் ஒண்ணும் செய்யல. இயேசு கிட்டே பிரேயர் பண்ண்னேன். அவர் தான் எல்லாம் நல்லபடியா முடிச்சு தந்தாரு. அவருக்கே நன்றி சொல்லிடும்மா.

பெண் : கண்டிப்பாய்யா… அப்படியே பாவம் அந்த அறிவு சார் ரொம்ப பீல் பண்ணின மாதிரி தெரிஞ்சுது. அதனால அவரோட வீட்டை ஒட்டியிருக்கிற கொஞ்சம் நிலத்தை நான் அவருக்கே குடுக்கலாம்ன்னு இருக்கேன்… அவர் கார் பார்க் பண்ண வசதியா இருக்கும். என் வீடும், அந்த கல்லறையெல்லாம் இருக்கிற இடத்தையும் மட்டும் நான் வெச்சுக்கறேன்.

கி. த : உனக்கு ரொம்ப நல்ல மனசும்மா… நான் அவர் கிட்டே பேசி நல்ல ஒரு ரேட் வாங்கி தரேன்

பெண் : பணம் எல்லாம் வேணாய்யா.. அவரும் நம்ம ஊர்ல ஒரு கம்பெனி தொடங்கி நிறைய பேருக்கு நல்லது தானே பண்றாரு. அவரே எடுத்துக்கட்டும்.. காசெல்லாம் வேணாம்.

கி.த : என்னம்மா இப்படி இருக்கே ? வெள்ளந்தியா இருக்கியே

பெண் : ஒரே ஊர்ல இருக்கோம். எல்லாரும் அன்பா இருக்கிறது தானே முக்கியம். அவரு தோத்து, நான் ஜெயிச்ச மாதிரி ஒரு உணர்வே நல்லா இல்ல. எல்லாரும் சந்தோசமா இருக்கணும்ய்யா..

( அப்போது அறிவு அதை கேட்டுக் கொண்டிருக்கிறார் )

கி.த : வாப்பா அறிவு.. நீ எப்ப வந்தே..

அறிவு : ஐயா.. உங்ககிட்டே மன்னிப்பு கேட்டுட்டு போலாம்ன்னு வந்தேன்.. ஒரு ஃபார்மாலிட்டிக்கு தான். ஆனா, இந்த அம்மா பேசினதை கேட்டு.. உண்மையிலேயே மனசு வருந்தறேன். இப்படிப்பட்ட ஒரு அம்மாவை கஷ்டப்படுத்த நினைச்சேனேன்னு நினைச்சா.. எனக்கே அசிங்கமா இருக்கு.. ஐம் சாரிம்மா… உங்க நிலம் உங்க கிட்டயே இருக்கட்டும்…

பெண் : இல்லய்யா.. அது பரவாயில்லை… என் பையனுக்கு எதிர்காலத்துல வீடு வைக்கலாம்ன்னு தான் அந்த இடத்தை போட்டு வெச்சேன். அவனுக்கு வேற வாங்கிக்கலாம்.

அறிவு : அவன் என்ன பண்றாம்மா ?

பெண் : அவன் டிகிரி முடிச்சிட்டு வேலை தேடிட்டிருக்கான்யா

அறிவு : அவனை நம்ம கம்பெனிக்கு வரச் சொல்லுங்கம்மா… அவனுக்கு கம்பெனில நல்ல ஒரு வேலை போட்டு குடுக்கறேன். அப்படியே அந்த லேண்டுக்கு நான் கண்டிப்பா, சந்தோசமா விலை தரேன்..நாம எல்லாருமே இனிமே ஒண்ணா இருப்போம்….

பெண் : ரொம்ப நன்றிங்கய்யா.. ஆனா அந்த லேண்டுக்கு..

கி.த : பரவாயில்லம்மா.. நீங்களும் செலவுக்கு கஷ்டப்படறீங்க.. இருக்கிறதே அந்த நிலம் மட்டும் தான். அவரு சந்தோசமா தரதை வாங்கிக்கோங்க

பெண் : சரிங்கய்யா… ரொம்ப நன்றி…

கி.த : அப்புறம் என்ன ? கிராமத்துக்கு வர இருந்த ஒரு மனக்கசப்பு கடவுள் கிருபையால தீந்திடுச்சு.. பிரைஸ் த லார்ட்

*