Posted in skit

SKIT : நன்றிக்கடன் 

நன்றி மறப்பது நன்றன்று !

*

காட்சி 1

( தொழிலதிபர் ராபர்ட் போனில் )

ராபர்ட் : (போன் ) விக்கி, லாஸ்ட் மந்த் டேன் ஓவர் கொஞ்சம் கம்மியாயிருக்கே.. என்ன விஷயம் ? 

போன் : டேன் ஓவர் கம்மி ஆகல சார், நாம புது பிராஞ்ச் ஒன்னு ஓப்பன் பண்றதால 5 சி அங்கே இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம் சார், ஓவரால் டேஷ்போர்ட்ல நீங்க அதை பாக்கலாம்.

ராபர்ட் : ஓ.. ஐ சீ…. குட்… குட்… ஐ ஜஸ்ட் ஃபர்காட்…  தேங்க்யூ.. பிளீஸ் லெட் மி நோ எனி சேலஞ்சஸ் அஸ் அண்ட் வென் யூ சீ இட்..

போன் : கண்டிப்பா சார்…

( போனை வைக்கிறார் )

ஒருவர் : சார், பென்ஸ் கார் சர்வீஸ் முடியல.. ஆடி கார் எடுத்துட்டு வரவா ? ரேஞ்ச் ரோவர் எடுத்துட்டு வரவா சார் ?

ராபர்ட் : எனி திங் ஈஸ் ஃபைன்… ஜஸ்ட் எ டிரான்ஸ்போர்ட்… 

( பைபை புரட்டுகிறார் )

( லேப்டாப்பில் வேலை செய்கிறார் )

காட்சி 2

( சர்ச்சில் செபம் )

செபம் : ஆண்டவரே ஒரு நல்ல வளமான, நிம்மதியான வாழ்க்கையைக் குடுத்திருக்கீங்க. எதிரிகளே இல்லேங்கற அளவுக்கு நல்ல வளர்ச்சியை குடுத்திருக்கீங்க. உங்க அன்புக்கு எப்பவுமே நான் கடமைப்பட்டிருப்பேன். 

காட்சி 3

( அம்மா & ராபர்ட் )

ராபர்ட் : அம்மா…. ரொம்ப சந்தோசமா இருக்கும்மா.. வாழ்க்கை நிம்மதியா இருக்கு… இந்த வளர்ச்சிக்கெல்லாம் காரணமான கடவுளுக்கு தான்மா நன்றி சொல்லணும்

அம்மா : கண்டிப்பா.. அதான்… சர்ச்க்கு நிறைய குடுக்கிறியே.. அதுல எனக்கு ரொம்ப சந்தோசம்பா… 

ராபர்ட் : இன்னும் ஏதாச்சும் பண்ணணும்ம்மா.. மேபி ஒரு கிராம சபை சர்ச் பெருசா கட்டி குடுப்போம்.. நம்ம சார்பா

அம்மா : வெரி குட்பா… குப்பையில இருந்த நம்மை கடவுள் இங்கே உயர்த்தியிருக்காரு.. கண்டிப்பா அவருக்கு காலமெல்லாம் நன்றியுள்ளவங்களா இருக்கணும்

ராபர்ட் : கண்டிப்பாம்மா… 

அம்மா : அதே மாதிரி நம்மை சுற்றி இருக்கிறவங்களுக்கும் நாம நல்லது செய்யணும்ப்பா..

ராபர்ட் : நீங்க சொல்லுங்கம்மா… கண்டிப்பா செய்யலாம்..

அம்மா : ம்ம்.. குறிப்பா நாம கஷ்டத்தில இருக்கும்போ கடவுள் மாதிரி வந்து உதவி செஞ்சுட்டு காணாம போயிடுவாங்க சில பேரு.. அவங்களை நாம கண்டிப்பா ஞாபகம் வெச்சு நன்றிக்கடன் செலுத்தணும்ப்பா…அவங்களை நாம பல நேரம் கவனிக்கவே மாட்டோம்… 

ராபர்ட் : அதெப்படிம்மா ஹெல்ப் பண்ணினவங்களை கவனிக்காம இருப்போம்

அம்மா : ஸீ… இப்ப நீயே யோசிச்சு பாரு.. லாசர் உடல்நிலை சரியில்லாம இருக்காரு… சகோதரிகள் அவருக்கு ஆளனுப்பி விஷயத்தை சொல்றாங்க.. அப்புறம் இயேசு நாலு நாளைக்கு அப்புறம் வந்து அவரை உயிரோட எழுப்பறாரு..

ராபர்ட் : எஸ்… கனவுல தட்டி எழுப்பினா கூட இந்த கதையை எல்லா கிறிஸ்டியன்ஸும் சொல்லுவாங்களே… லாசரே வெளியே வா..ந்னு 

அம்மா : இதுல கவனிக்கப்படாத கதாபாத்திரம் உண்டா ?

ராபர்ட் : இல்லையேம்மா… லாசரஸ்… மார்த்தா..மரியா.. ஜீஸஸ்.. கூட்டம்.. சீடர்கள்.. நமக்கு எல்லாரையும் தெரியுமே !

அம்மா : இயேசு கிட்டே செய்தி கொண்டு போன ஆள் உனக்கு ஞாபகம் வரல பாத்தியா ? அவரு தான் லாசருக்கு உடம்பு சரியில்லேங்கற விஷயம் இயேசு வரைக்கும் போகவே காரணம். 

ராபர்ட் : ஓ.. யா… யோசிச்சதே இல்லை. 

அம்மா : நாமானுக்கு தொழுநோய் போச்சு இல்லையா ? அதுல கவனிக்கப்படாத ஆள் இருக்காங்களா ?

ராபர்ட் : ஐ நோ… அந்த சின்னப் பொண்ணை சொல்றீங்க கரெக்டா ?

அம்மா : நோ.. நோ… எலியா சொன்னதும் முடியாதுன்னு சொல்லிட்டு நாமான் போறாருல்லயா.. அப்போ வேலைக்காரங்க சொல்றாங்க, … கஷ்டமான காரியம்ன்னா செஞ்சிருப்பீங்கல்ல.. இதையும் செய்யுங்கன்னு.. அதை கேட்டு தான் நாமான் ஆற்றில இறங்குவாரு… 

ராபர்ட் : ஓ.. ஆமா..

அம்மா :  நாமான் பெரிய படைத் தலைவன்னு எல்லாரும் எல்லாரும் சைலண்டா இருந்திருந்தா ஒருவேளை நாமானுக்கு சுகமே கிடைச்சிருக்காது.. அந்த வேலைக்காரங்க தான் நாமான் வாழ்க்கைல பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவன்.. 

ராபர்ட் : எஸ்மா..உண்மை தான்

அம்மா : அப்படிப்பட்டவங்க நம்ம லைஃப்ல இருந்தா கண்டுபிடிச்சு ஹெல்ப் பண்ணணும்பா… கடவுளுக்கும், மனிதனுக்கும் நன்றியும் அன்பும் உடையவர்களா நாம இருக்கணும்.

ராபர்ட் : சரியா சொன்னீங்கம்மா… எனக்கு தெரிஞ்சு எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணியிருக்கேன்… பட்.. லெட் மி திங்க்

காட்சி 4

( ராபர்ட் யோசிக்கிறான் )

ராபர்ட் : ஒரு தடவை ஒரு ஆக்சிடண்ட் நடக்காம நம்ம டிரைவர் காப்பாத்தினாரு.. அவருக்கு ஹெல்ப் பண்ணிட்டேன்..

ஒருதடவை … ஒரு பிஸினஸ் டீலை ஒருத்தன் முடிச்சு குடுத்தான்… அவனுக்கும் நல்லது பண்ணியாச்சு

வர்க்கர்ஸ்க்கு எல்லாம் தேவையானதை குடுத்தாச்சு…

ப்ரண்ஸ்க்கும் ஹெல்ப் பண்ணியாச்சு…

ஓ..மை..காட்.. ஒரு விஷயத்தை மறந்துட்டேனே !!!!

காட்சி 5

( பிளாஷ்பேக் )

சின்ன வயதில் ராபர்ட் குப்பை தொட்டியிலிருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்துக் கொண்டிருக்கிறான். 

நபர் : என்னப்பா.. காலையிலயே பாட்டில் பொறுக்கிட்டிருக்கே..

ராபர்ட் : டெய்லி இதை வித்தா தான் சார் அஞ்சோ பத்தோ கிடைக்கும்… ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி நான் இப்படி பண்ணுவேன் சார்..

நபர் : அப்பா என்ன பண்றாருப்பா..

ராபர்ட் : அப்பாவாலை வேலை செய்ய முடியாது சார். உடம்பு சரியில்லை… .. அம்மா ஒரு கடையில சேல்ஸ் உமனா இருக்காங்க…. அங்கேயும் ஒழுங்கா சம்பளம் கிடைக்கிறதில்லை… வீட்ல ஒரு தங்கச்சி உண்டு… 

நபர் : ம்ம்..அம்மாவோட சம்பளத்தை மட்டும் வெச்சு குடும்பத்தை ஓட்டறது கஷ்டம் தான்.

ராபர்ட் : ஆமா சார், நான் படிக்கணும்ன்னா… கொஞ்சமாச்சும் காசு வேணும் சார்.. அதான் இப்படி…

நபர் : சரிப்பா.. கவலைப்படாதே… நான் ஒரு வர்க்‌ஷாப்ல உன்னை சேத்து விடறேன். நம்ம பிரண்டோட வர்க்‌ ஷாப் தான். நீ ஸ்கூல் முடிஞ்சப்புறம் அங்கே போய் வேலை செய். மாசா மாசம் சம்பளமும் கிடைக்கும், டே டைம்ல ஸ்கூலுக்கும் போலாம் சரியா… 

ராபர்ட் : ஓ..அப்படியா… ரொம்ப நன்றி சார்..

நபர் : இருக்கட்டும்பா… நானும் வர்க்‌ஷாப்ல தான் வேலை செய்றேன்… எழில் நகர் வர்க்‌ஷாப்ல… அதனால வர்க்‌ஷாப்ஸ் காண்டாக்ட் உண்டு… 

ராபர்ட் : ரொம்ப நன்றி சார்.. இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன் சார். 

நபர் : நல்ல பொறுப்பான பையம்பா நீ.. நிச்சயம் பெரிய ஆளா வருவே.. உன் பேரு என்னப்பா ? 

ராபர்ட் : ராபர்ட் சார்.

நபர் : அட.. என் பேரும் ராபர்ட் தான்… ராபர்ட் பெனடிக்ட்…. இதா இந்த காசை கைல வெச்சுக்கோ, பீஸ் கட்டவோ, டிரஸ் வாங்கவோ யூஸ் பண்ணிக்கோ…. 

ராபர்ட் :  வே..வேணாமே சார்…. சா…சார்… ரொம்ப நன்றி சார்… 

காட்சி 6

( ராபர்ட் சிந்திக்கிறான் )

ராபர்ட் : அம்மா..அம்மா… ஒரு ஆளை நாம் மறந்தே போயிட்டேன்மா….

அம்மா : எதுக்குப்பா… 

ராபர்ட் : கவனிக்கப்படாத கதாபாத்திரம்மா..

அம்மா : ஓ.. யாருப்பா அது ?

ராபர்ட் : அம்மா.. என்னை முத முதல்ல குப்பை பொறுக்கிற வேலையில இருந்து காப்பாற்றி ஒரு வர்க்‌ஷாப்ல சேத்து விட்டாரே அவரும்மா..

அம்மா : ஓ.. ஆமா.. நீ சொல்லியிருக்கே.. நானும் மறந்துட்டேன்.. நிறைய வருஷம் ஆச்சுல்ல

ராபர்ட் : அவரை எப்படியாவது கண்டுபிடிச்சு அவருக்கு ஹெல்ப் பண்ணணும்மா…

அம்மா : அவரை எப்படிப்பா கண்டுபிடிப்பே..

ராபர்ட் : அம்மா.. அந்த காலத்துல அவரு எழில் நகர் வர்க்‌ஷாப்ல வேலை செஞ்சாரும்மா…. அவரு பேரு கூட..ம்ம்.. ராபர்ட் பெனடிக்ட் மா…

அம்மா : ஓ..

ராபர்ட் : லெட் மி ஃபைண்ட் அவுட்

காட்சி 7

( ராபர்ட் அந்த வர்க்‌ஷாப்பைத் தேடுகிறான் )

ராபர்ட் ( ஒரு கடையில் ) ஐயா.. இங்கே நிறைய வர்க்‌ஷாப் இருக்கு.. இதுல ஒரு 20 வருஷத்துக்கு முன்னாடியே இருக்கிற கடை எதுன்னு தெரியுமா ?

நபர் : அப்படி ஒரே ஒரு வர்க்‌ஷாப் தான் இருக்கு தம்பி..… மூணாவது தெருவில இருக்கு… அதுவும் மூடிடுவாங்கன்னு நினைக்கிறேன்… புதிய கடைகளும், புதிய டெக்னாலஜியும் எல்லா இடத்துலயும் வந்துச்சு இல்லையா ?

ராபர்ட் : ம்ம்.. நன்றி சார்.. வரேன்.

காட்சி 8

( அந்த வர்க் ஷாப் )

ராபர்ட் : ஐயா… இந்த வர்க்‌ஷாப் தான் ரொம்ப வருஷமா இருக்கிற கடையா ?

நபர் : ஆமா.. என்ன வேணும்.. வண்டிக்கு ஏதாச்சும் பிரச்சினையா ?

ராபர்ட் : இல்ல.. நான் ஒருத்தரை தேடி வந்தேன்… 

நபர் : ஆளை தேடி வந்தீங்களா ? .. இங்கே இப்போ நானும் ரெண்டு பசங்களும் தான் இருக்கோம்… பெரிய அளவில வேலையும் இல்லை… 

ராபர்ட் : இங்கே.. ராபர்ட்ன்னு ஒருத்தர் வேலை பாத்தாருல்லயா ?

நபர் : ராபர்ட்டா ?

ராபர்ட் : ஆமா… ரொம்ப முன்னாடி.. முழு பேரு கூட ராபர்ட் பெனடிக்ட் ந்னு நினைக்கிறேன்..

நபர் : ஓ.. பெனடி.. ஆமா தம்பி.. ரொம்ப வருஷமா இங்க தான் வேலை பாத்தாரு…. நல்ல மனுஷன்.. எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணூவாரு… பாவம்..

ராபர்ட் : பாவமா… அவரு இப்ப எங்க இருக்காரு ?… 

நபர் : என்னப்பா இப்போ வந்து கேக்கறே… அவரு தான் பாவம் ஒரு பாழாப்போன நோய் வந்து ரொம்ப நாள் கஷ்டப்பட்டாரு.. அப்புறம்..

ராபர்ட் : அப்புறம் என்னாச்சு சார்.. காப்பாத்திட்டாங்களா ? 

நபர் : எங்கே தம்பி.. காப்பாத்தற  அளவுக்கு யாருக்கு வசதி இருக்கு… அவரும் பொண்ணு தன்யாவும் மட்டும் தான் தனியா இருந்தாங்க…. எனக்கும் அவ்ளோ வசதி இல்லப்பா…. அவரை காப்பாத்தமுடியல.. நாலு வருஷம் ஓடிப் போச்சு.

ராபர்ட் : ஐயோ… சே… ஐம் வெரி லேட்.. ஆமா, அந்த பொண்ணு இப்போ எங்கே இருக்காங்க… 

நபர் : தனியா அவங்களை பாதுகாக்க ஆள் இல்லேன்னு, அன்னை அனாதை இல்லத்துல சேத்து விட்டாங்க தம்பி.. அங்கே தான் இருப்பா… நான் எப்பவாச்சும் போய் பாத்துட்டு வருவேன். பாவம், நல்லா இருந்த குடும்பம் இப்படி ஆயிடுச்சு…

ராபர்ட் : ( சோகமாக ) ஓ.. ஜீஸஸ்… சரிங்க.. நன்றி,… நான் போய் அவரோட பொண்ணை பாக்கறேன்.. 

காட்சி 9 

( அனாதை இல்லம் )

ராபர்ட் :  ஹாய்… இங்கே தன்யான்னு ஒரு பொண்ணு இருக்காங்களா ? 

அ.இ : நீங்க யாரு சார் ?

ராபர்ட் : அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சவங்க, என் பேரு ராபர்ட். 

அ.இ : வெயிட் பண்ணுங்க சார், நான் வர சொல்றேன்… 

( சற்று நேரத்துக்குப் பின் )

( உடல் ஊனமுற்ற ஒரு பெண் வருகிறார் )

பெண் : சார்.. வணக்கம் நீங்க… 

ராபர்ட் : நீ.. நீ… ராபர்ட் பெனடிக்ட் பொண்ணா ?

பெண் : ஆமா சார்.. அப்பா இருந்தவரைக்கும் அப்பா கூட இருந்தேன்… இப்போ அப்பாவோட நினைவோட இருக்கேன்.. 

ராபர்ட் : உ. உன் கை… 

பெண் : சின்ன வயசுலயே போனது சார்… அதனால என்னால எந்த வேலைக்கும் போக முடியல.. யாரும் வேலைக்கு சேத்துக்கவும் இல்லை.. அப்படியே போகுது சார் லைஃப்.

ராபர்ட் : நான் உன் அப்பாவுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்.. நான் சின்ன வயசுல ஒண்ணுமே இல்லாம இருந்தப்போ உங்க அப்பா தான் கை குடுத்தாரு.. 

பெண் : என் அப்பாவா ? அப்பாவைப் பற்றி கேக்கவே சந்தோசமா இருக்கு…

ராபர்ட் : அதுக்கு கைமாறா நான் ஏதாவது பண்ணணும்ன்னு நினைக்கிறேன்.

பெண் : சார், நீங்க ஏதாச்சும் பண்ண நினைச்சா இந்த அனாதை இல்லத்துக்கு பண்ணுங்க. எங்களை மாதிரி ஆட்களை அன்பாவும், கனிவாகவும் வளத்தறது அவங்க தான். எனக்கு உதவின அவங்களுக்கு நன்றியுடையவளா இருக்கணும்னு நினைக்கிறேன்…

ராபர்ட் : உங்க அப்பாவை மாதிரியே உனக்கும் இளகிய மனசும்மா… அடுத்தவங்களுக்கு உதவற மனம் தான் கடவுள் இருக்கிற மனம். நான் கண்டிப்பா உதவறேன்.

பெண் : ரொம்ப நன்றி சார்… 

ராபர்ட் : அப்படியே உன்னை நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகப் போறேன்… அம்மா இருக்காங்க உன்னை நல்லா பாத்துப்பாங்க, என் கம்பெனில உனக்கு ஒரு நல்ல வேலையும் தரேன்…  

பெண் : சார்.. என்ன சொல்றீங்க… அந்த அளவுக்கு நான் தகுதி இல்லாதவ சார்…

ராபர்ட் : அப்படி இல்லம்மா… நான் உங்க அப்பாவால வளர்ந்தவன் .. அவரு இல்லேன்னா  இன்னிக்கு நான் இல்ல… இன்னிக்கு நான் வசதியா இருக்கேன்… உங்க அப்பாவுக்கு நன்றிக்கடன் செலுத்த ஒரு வாய்ப்பா இதை நினைக்கிறேன்…. அதான் உன்னை தத்தெடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்..

பெண் : தத்தா… சார், கை கூட இல்லாத பொண்ணு சார் நான்… என்னால உங்களுக்கு ஒரு சின்ன ஹெல்ப் கூட பண்ண முடியாது…. 

ராபர்ட் : நல்லது செய்யணுங்கற மனசு இருந்தா போதும், வழியை கடவுள் காட்டுவாரு. 

பெண் : நன்றி சார்… எனக்கு.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. இதுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்னே தெரியல.. கையே இல்லை.. அப்புறம் என்ன கைமாறு…

ராபர்ட் : அப்படியெல்லாம் பேசாதீங்க, கடவுள் உங்களை சிறகில வைச்சு பாதுகாப்பாரு… ஐம் ரியலி பிரவுட் ஆஃப் யுவர் ஃபாதர்… அண்ட் ,, அவர் உயிரோட இருக்கும்போ அவரை பாக்க முடியலையேன்னு தான் வருத்தமா இருக்கு… பட்… பெட்டர் லேட் தேன் நெவர்…. 

பெண் : ஆமா சார்… காட்ஸ் பிளான்… தேங்க்யூ சார். 

*

Posted in Articles

பகை

பகை

*

காட்சி 1

( நண்பர் 1 & நண்பர் 2 )

நண்பர் 1 :  நல்லபடியா காலேஜ் படிச்சு முடிஞ்சதை நினைச்சா சந்தோசமா இருக்கு

நண்பர் 2 : ஆமா, வருஷங்கள் ஓடிப் போனதே தெரியல. லைஃபே ஜாலியா போயிட்டிருந்துச்சு..

ந 1 : இனிமே தான் இந்த இண்டர்வியூ, வேலை, அலைச்சல் அது இதுன்னு எக்கச்சக்க டென்ஷன்

ந 2 : நீ எதுக்கு டென்ஷன் ஆகறே ? கடவுள் எல்லாத்தையும் பாத்துப்பாரு… இதுவரைக்கும் ஏதாச்சும் குறை வெச்சிருக்காரா என்ன ? இனிமேலும் வைக்க மாட்டாரு

ந 1 : யா.. தட்ஸ் ட்ரூ….  தேங்க்யூ டா.

ந 2 : எதுக்கு… 

ந 1 : ஸ்கூல்ல இருந்தே நீதான் என்னோட பெஸ்ட் பிரண்ட்… எல்லா விஷயத்துலயும் என் கூடவே இருப்பே… ஒரு மிகப்பெரிய மாரல் சப்போர்ட்…  பிரண்ட்ஷிப்பை ரொம்ப மதிக்கிறவ

ந 2 : என்னப்பா.. ஒரே செண்டி அடிக்கிறே.. ஏதோ விட்டுட்டு போற மாதிரி.. நாம எல்லாம் எப்பவும் நட்பா தான் இருப்போம்…. 

ந 1 : யா.. தட் ஐ நோ.. இருந்தாலும் சொல்றேன்…

ந 2 : சொன்னதெல்லாம் போதும், நான் கிளம்பறேன்… அப்பா ஊருக்கு வராரு, பிக்கப் பண்ணணும்…

ந 1 : ஓக்கே.. டேக் கேர்

காட்சி 2

( ந 1 & 2 )

ந 1 : ஹலோ…. 

ந 2 : ஹேய் சொல்லுப்பா.. எப்படி இருக்கே 

ந 1 : ஒரு ஹேப்பி நியூஸ்பா.. எனக்கு யூனிவர்சிட்டில இருந்து லெட்டர் வந்திருக்கு… 

ந 2 : லெட்டரா ? என்ன லெட்டர் ? ரிசல்ட் தான் ஏற்கனவே வந்துச்சே.. நாம தான் எல்லா பேப்பரையும் கிளியர் பண்ணிட்டோமே

ந 1 : அதில்ல.. வேற நியூஸ்…. 

ந 2 : சொல்லுப்பா அப்படி என்ன ஹேப்பி நியூஸ் 

ந 1 : எனக்கு யூனிவர்சிட்டி டாப் ரேங்க் கிடைச்சிருக்கு. அதனால யூனிவர்சிடி அவார்ட் செரிமணில கலந்துக்க சொல்லி லெட்டர் வந்திருக்கு.

ந 2 : வாவ்.. செம ஹேப்பி நீயூஸ் டா கன்கிராட்ஸ் 

( நெட்வர்க் பிரேக் ஆகிறது ந1 க்கு கேட்கவில்லை )

ந 1 : ஹேய்.. என்னடா.. சைலண்ட் ஆயிட்டே.. இவ்ளோ ஹேப்பி நியூஸ் சொல்லியிருக்கேன்.

ந 2 : ஹேய்.. ஹேப்பிடா.. அதான் சொன்னேனே.. கேக்கலையா…

ந 1 : எங்கே சொன்னே.. அமைதியாயிட்டே.. சரி சரி.. வர 18ம் தியதி பங்ஷன்.. நீ கண்டிப்பா வரே… 

ந 2 : வரேண்டா… வரேன்.. கண்டிப்பா வரேன்..நான் வராமலா…. 

ந 1 : அதானே பாத்தேன்… வரலேன்னா அப்புறம் மூஞ்சிலயே முழிக்க மாட்டேன் பாத்துக்க…

ந 2 : ஹா..ஹா… நான் வராம இருப்பேனா … நீ போனை வை… நான் இங்கே மூணாறுல இருக்கேன்.. சிக்னல் ஒழுங்கா கிடைக்கல.

( ந 1 நினைக்கிறார் )

ந 1 : என்ன.. ஒரு சுவாரஸ்யம் இல்லாம பேசறாங்களே… நமக்கு அவார்ட் கிடைச்சது அவங்களுக்கு புடிக்கலையோ…. சே…சே அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை… ம்ம்ம்

காட்சி 3

( அவார்ட் பங்ஷன் )

ந 1 : ( போன் அடிக்கிறார்.. யாரும் எடுக்கவில்லை .. மீண்டும் மீண்டும் அடிக்கிறார் )

ந 1 : சே.. பங்ஷன் ஆரம்பமாகப் போவுது..இன்னும் ஆளைக் காணோம்… சே…

ந 3 : என்னடா டென்ஷனா இருக்கே… 

ந 1 : இல்லடா.. என் பிரண்ட் ஜெனி வரணும்.. ஆளைக் காணோம் அதான் பாக்கறேன்…

ந 3 : ஜெனியா… ம்ம்ம்.. அவ வர மாதிரி தெரியல

ந 1 : என்னடா சொல்றே..

ந 3 : ஐ திங்க் ஷி ஈஸ் நாட் ஹேப்பி தேட் யூ ஆர் கெட்டிங் ஹானர்ஸ்..

ந 1 : ஹா..ஹா. ஜோக் அடிக்காதே.. அதுக்கெல்லாம் சான்சே இல்லை

ந 3 : எனக்கு அப்படி தோணுது…. அவளோட பிரண்ட்ஸ் கிட்டே பேசும்போ அவளுக்கு கிடைக்க வேண்டியது மிஸ் ஆயிடுச்சு.. செம டிஸ்ஸப்பாயிண்ட் மெண்ட்ன்னு பேசினதா கேள்விப்பட்டேன்.

ந 1 : நெஜமாவா ? நீ கேட்டியா ?

ந 3 : நான் கேக்கல, பட் அப்படி சொன்னதா கேள்விப்பட்டேன்.

( ந 1 – மறுபடியும் போன் அடிக்கிறார் கிடைக்கவில்லை ) 

ந 1 : சே… இப்படி வராம இருப்பாங்கன்னு நினைக்கவே இல்லை.. சே… நான் தான் ஏமாந்துட்டேனா ?

( பரிசளிப்பு விழா முடிகிறது )

காட்சி 4

ந 1 – போன் அடிக்கிறார்.. சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது.

ந 1 : சே.. ஒரு போன் கூட பண்ணல.. இனிமே பேசவே கூடாது… 

காட்சி 5

ந 2 : ( ஹாஸ்பிடலில் ) ஐயோ… அப்பாவுக்கு ஆக்சிடண்ட் ஆன பதட்டத்துல விஜயோட அவார்ட் செரிமணியையே மறந்துட்டேன்.. சே… அப்செட் ஆயிருப்பான்.. சே. போனை வேற எடுக்காம வந்துட்டேன்… 

( சிக்னல் கிடைக்கவில்லை.. போன் செய்கிறார் )

ந 2 : சே.. ஹில்ஸ் ஏரியால சிக்னலே கிடைக்க மாட்டேங்குது…. 

ந 2 : சே.. டேட்டா சுத்தம்…. என்ன பண்ண… ம்ம்ம்.. ஒரு வாய்ஸ் மெசேஜ் போடுவோம்… சிக்னல் வரும்போ கேக்கட்டும்… 

ந 2 : ஹேய்.. ஐம் வெரி சாரிடா.. என்னால உன்னோட ஃபங்க்‌ஷனுக்கு வர முடியல.. எல்லாம் நேர்ல சொல்றேன்.. சரியா… டேக் கேர். ( வாய்ஸ் மெசேஜ் விடுகிறார் ). இது டெம்பரரி நம்பர்… சேவ் பண்ணி வெச்சுக்கோ…. 

காட்சி 6

ந 1 : ( வாய்ஸ் மெசேஜ் கேட்கிறான் ) கோபமடைகிறான். ம்ம்.. பங்ஷன் முடிஞ்சு நாலு நாளைக்கு அப்புறம் பார்மாலிட்டிக்கு ஒரு மெசேஜ் போட்டிருக்கா… ஐ டோண்ட் நீட் திஸ் பிரண்ட்ஷிப்

ந 1 : ( வாய்ஸ் மெசேஜ் ) நீ ஒண்ணும் என்னை நேர்ல பாக்கவும் வேண்டாம், பேசவும் வேண்டாம். இன்னில இருந்து நீ எனக்கு மெசேஜ் பண்ணாதே, கால் பண்ணாதே… நம்ம நட்பு முறிஞ்சு நாலு நாள் ஆச்சு.. பை

( எல்லா…நம்பரையும் பிளாக் செய்கிறான் )

காட்சி 7

ந 2 – செய்தியைக் கேட்டு வருந்துகிறார் 

( போன் அடித்தால் போகவில்லை… )

காட்சி 8

ந 2 : இண்டர்வியூ அட்டண்ட் பண்ணுகிறார், செலக்ட் ஆகிறார். 

ந 2 : அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார். 

காட்சி 9

( சில வருடங்களுக்குப் பிறகு )

ந 1 : ( அந்த வாய்ஸ் மெசேஜை கேட்கிறார் ) அப்போது இன்னொரு நண்பர் வருகிறார்.

ந 4 : ஹேய்.. என்ன இந்த பக்கம்… இது ஜெனி வாய்ஸ் தானே. இப்போ என்ன பண்றாங்க ?

ந 1 : ஹேய்.. வாப்பா.. உன்னை பாக்க தான் இந்தப் பக்கம் வந்தேன்

ந 4 : ஜெனி என்ன பண்றாங்கன்னு சொல்லவே இல்லையே..

ந 1 : தெரியலடா…. நோ காண்டாக்ட்

ந 4 : என்னடா சொல்றே நம்பவே முடியல… ஐ தாட்.. ஐ ஹியர் ஹர் வாய்ஸ்..

ந 1 : யா.. தட்ஸ் ஓல்ட் மெசேஜ்… லீவ் இட்…. வர இருபத்திரண்டாம் தியதி என்னோட என்கேஜ்மெண்ட்… உன்னை ஸ்பெஷலா கூப்பிட தான் நான் வந்தேன்…. 

ந 4 :  வாவ்.. செம டா… அதுக்குள்ள கல்யாணமா ?

ந 1 : அதை போன வருஷமே கல்யாணம் பண்ணின நீ சொல்றே பாரு.. அதான் காமெடி.

ந 4 : ஹா..ஹா.. ஓக்கே ஓக்கே… ஆமா ஜெனியை கூப்பிடுவியா

ந 1 : நோ டா.. ஐதிங் உன் கல்யாணத்துல கூட அவளை நான் பாக்கல…

ந 4 : நான் அவங்களை இன்வைட் பண்ண போனேன்.. பட் அவங்க காலி பண்ணிட்டு மூணாறு போனதா சொன்னாங்க.. 

ந 1 : சரி சரி… அவ பேச்சை எடுக்காதே.. ஐ டோண்ட் வாண்ட் டு டாக் எபவுட் இட்…  நீ என்னோட என்கேஜ்மெண்டுக்கு வந்து சேரு

ந 4 : ஓக்கேப்பா

காட்சி 9 ஆ 

ந 4 : ( சிந்திக்கிறார். ) என்னாச்சு விஜய்க்கு.. அவனுக்கு ஜெனி மேல நட்பு இருக்கு, அதான் பழைய மெசேஜ் எல்லாம் கேட்டுட்டு இருக்கான்.. ஆனா ஈகோ தடுக்குது… ம்ம்ம் என்ன பண்ணலாம். 

காட்சி 9 இ

( ந 1 & 4 , காபி ஷாப்பில் )

ந 1 : என்னப்பா, ஏதோ பேசணும்ன்னு வரச் சொன்னே என்ன விஷயம். 

ந 4 : என்னோட புது பிஸினஸ் விஷயமா உன்னோட கைடன்ஸ் கொஞ்சம் வேணும்பா… 

ந 1 : என் கைடன்ஸா… நான் என்ன பிஸினஸ் புலியா ? காமெடி பண்ணாதே.. ? ( அப்போது போன் அடிக்கிறது .. மேனேஜர் ) 

ந 1 ( உள்ளுக்குள் ) பத்து நிமிஷம் சந்தோசமா இருந்திட கூடாதே.. கழுகுக்கு மூக்கில வியர்க்கிற மாதிரி இவருக்கு வியர்த்திடும். 

ந 1 : சார்.. வணக்கம் சார்.. சொல்லுங்க சார்.

மேலதிகாரி : ஹாய் விஜய் எப்படி இருக்கீங்க

ந 1 : நல்லா இருக்கேன் சார்

மே : ஒரு ஹேப்பி நியூஸ்.. உங்களை மறுபடியும் அமெரிக்கா அனுப்பறேன்..

ந 1 : சார் மறுபடியுமா.. நான் வந்து மூணு மாசம் தான் சார் ஆச்சு..

மே : யா.. என்ன பண்ண ? நீங்க போன வேலையை சூப்பரா முடிச்சிருக்கீங்க. கிளையண்ட் இம்ப்ளிமெண்டேஷனுக்கு நீங்க தான் வேணும்ன்னு அடம் புடிக்கிறாரு.. ஓக்கே சொல்லிட்டேன்

ந 1 : ஓக்கே சொல்லிட்டீங்களா ?

மே : யா… போயிட்டு வாங்க ஜாலியா ஒரு மூணு மாசம்… இருபதாம் தியதி கிளம்புங்க

ந 1 : இருபதாம் தியதியா ?.. 

மே : என்னப்பா எல்லாத்துக்கும் ஷாக் குடுக்கிறே

ந 1 : சார்.. என்னோட என்கேஜ்மெண்ட் 22 ம் தியதி பிக்ஸ் பண்ணியிருக்கோம் சார்.

மே : வாட்.. என்கேஜ்மெண்டா ? யாரைக்கேட்டு பிளான் பண்ணினீங்க

ந 1 : பொண்ணு வீட்டில கேட்டு சார்.

மே : ஹலோ.. இப்படிப்பட்ட பிளான் எல்லாம் யூ ஷுட் இன்ஃபாம் மி ஃபர்ஸ்ட்… கஸ்டமருக்கு கமிட்மெண்ட் குடுத்துட்டேன்..  யூ மஸ்ட் கோ

ந 1 : சார்.. என்ன சார் .. என்கேஜ்மெண்ட்ட்ன்னு சொல்றேன்.. டிராவல் பண்ண சொல்றீங்க

மே : என்கேஜ்மெண்ட் தானே.. மேரேஜ் இல்லையே

ந 1 : சார்… என்ன சார் பேசறீங்க… இட்ஸ் மை பிரையாரிடி.. ஐ காண்ட் டிராவல் நௌ… வேணும்ன்னா நெக்ஸ்ட் மந்த் டிராவல் பண்றேன்.

மே : ஹலோ.. இங்க நான் தான் மேனேஜர்.. உன் என்கேஜ்மெண்ட் உன் தலைவலி.. ஐ டோண்ட் கேர்.. யூ மஸ்ட் டிராவல் ஆன் 20யத்.. அவ்ளோ தான்

( போனை வைக்கிறார் )

ந 1 : ( கோபத்தில் ) என்ன நினைச்சிட்டிருக்காங்க…. அடுத்தவங்க பக்கத்துல நின்னு யோசிக்கவே மாட்டாங்களா ? ஐ காண்ட் டு திஸ்

ந 4 : கூல் டவுன் பா.. என்னாச்சு..

ந 1 : என்கேஜ்மெண்டுக்கு எல்லாம் பிளான் பண்ணிட்டேன்.. இப்போ என்னை ஆன்சைட் போக சொல்றாரு மேனேஜர்.. அடுத்தவனோட நிலமையை பத்தி யோசிக்கிறதே இல்லையா… 

ந 4 : யா… we should think from others perspective பா.. அப்போ நிறைய பிரச்சினைகள் தீரும். 

ந 1 : யா.. அறிவு கெட்டவங்க.. நான் போகமாட்டேன்.. என்ன செய்வான்னு பாப்போம். திஸ் ஈஸ் மை லைஃப், மை பிரையாரிடி.. நினைக்க நினைக்க கடுப்பா இருக்குப்பா

ந 4 : நம்மளோட நிலமையை அவன் புரிஞ்சுக்கலேன்னு உனக்கு கடியா இருக்கு இல்லையா ?

ந 1 : யா… இருக்காதா பின்னே

ந 4 : அப்போ ஜெனியோட நிலமையை நீ புரிஞ்சுக்கலேன்னு அவளுக்கு வருத்தமா இருக்காதா ?

ந 1 : ஜெனி நிலமையா ? வாட் டு யூ மீன்

ந 4 : என் மேரேஜ் இன்விடேஷன் குடுக்க போகும்போ தான் கேள்விப்பட்டேன்.. அவ அப்பாக்கு ஒரு ஆக்சிடண்ட் ஆச்சு, உடனே அவ கிளம்பி மூணாறு போயிட்டா.. அந்த பதட்டத்துல போனை வீட்டிலயே விட்டுட்டு போயிருக்கா… அதனால யாரையும் ரீச் பண்ண முடியல.. அப்புறம் குடும்பத்தோட காலி பண்ணிட்டு மூணாறுக்கே போயிட்டாங்களாம்.. ஐ திங்க், அவரு அப்பாவால இனிமே நடக்க முடியாது போல

ந 1 : வாட்.. என்ன சொல்றே.. நிஜமாவா ? 

ந 4 : யா… வெரி ஷாக்கிங்டா

ந 1 : இதெல்லாம் நீ என்கிட்டே சொல்லவே இல்லை

ந 4 : நீங்க தான் திக் பிரண்ட்ஸ் ஆச்சே, எல்லாம் உனக்கு தெரியும்ன்னு நினைச்சேன். 

ந 1 : ஓ..மை காட்… பெரிய தப்பு பண்ணிட்டேண்டா… அவ என் அவார்ட் பங்ஷனுக்கு வரலேங்கற கோபத்துல அவ நம்பரையும் பிளாக் பண்ணி பிரண்ட்ஷிப்பையும் கட் பண்ணிட்டேன்..

ந 4 : ம்ம்ம்.. உனக்கு ஆன்சைட் டிராவலை விட என்கேஜ்மெண்ட் முக்கியமா இருக்கு. அவளோட சூழல்ல அன்னிக்கு அப்பாவோட ஆக்சிடண்ட் விஷயம் தான் உன்னோட அவார்டை விட முக்கியம் இல்லையா 

ந 1 : யா. .உண்மை தாண்டா… 

ந 4 : ஸீ.. நீ இந்த சூழ்நிலையில அவளை மீட் பண்ணி ஹெல்ப் பண்ணியிருக்கணும். அப்படி தான் அவ எதிர்பார்த்திருப்பா..  

ந 1 : ட்ரூ.. ஐ ஃபீல் கில்ட்டி.. நான் கிளம்பறேன்.. அப்புறம் பேசறேன் உன் கிட்டே. 

காட்சி 11

ந 1  & ந 2

ந 1 : ஜெனி ஐம் வெரி சாரி..எவ்ளோ முட்டாள்தனமா நான் நடந்துட்டேன்…. 

ந 2 : தட்ஸ் ஓக்கே… நீ எவ்ளோ ஆர்வமா என்னை எதிர்பார்த்திருப்பே.. எவ்ளோ பெரிய ஏமாற்றமா இருந்திருக்கும்.. ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட்

ந 1 : உன்னோட கஷ்டத்தை புரிஞ்சுக்காம நடந்துட்டேன்.. சே… ஐம் நாட் ஏபிள் டு ஃபர்கிங் மைசெல்ஃப்

ந 2 : தட்ஸ் ஓக்கே… பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.. இனிமே லெட்ஸ் பி பிரண்ட்ஸ் எகெயின்..

ந 1 : கண்டிப்பா.

காட்சி 12 

ந 4 & மேனேஜர் 

ந 4 :  சார்.. ரொம்ப நன்றி.. நான் சொன்னமாதிரி போன் பண்ணி விஜய்க்கு ஒரு ஷாக் குடுத்தீங்க.. எதிர்பார்த்த மாதிரியே.. அவனும் ஜெனியும் மறுபடியும் பிரண்ஸ் ஆயிட்டாங்க…

மே : நோ பிராப்ளம்.. என்ன, உங்க பிராப்ளம் சால்வ் ஆச்சு.. நான் தான் ஏகப்பட்ட சாபத்தையும் திட்டையும் வாங்கியிருப்பேன்.

ந 4 : ஹா ஹா அப்போ போன் பண்ணி யூ எஸ் டிரிப் கேன்சல்னு சொல்லுங்க, சாபம் எல்லாம் வாழ்த்தா மாறும்

மே : யெஸ்.. வில் டூ நௌ. 

*

Posted in Articles, Christianity, WhatsApp

இயேசுவைப் போல…

இயேசுவளரவளரஞானத்திலும், உடல்வளர்ச்சியிலும்மிகுந்துகடவுளுக்கும்மனிதருக்கும்உகந்தவராய்வாழ்ந்துவந்தார்

( லூக்கா 2:52 )

*

நம்முடைய வாழ்க்கை கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையாய் அமைய வேண்டும் என்பது தான் கிறிஸ்தவப் போதனைகளின் அடிப்படை. அதற்காகத் தான் இயேசு பூமிக்கு வந்தார். ஒரு மனிதன் எப்படி இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை அவர் தனது வாழ்க்கை மூலமாக வாழ்ந்து காட்டினார். 

அவர் வளர வளர ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்தார் என்றும், கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தார் என்றும் விவிலியம் சொல்கிறது. 

நாம் வளரும் போது எப்படி வளர வேண்டும் என்பதை இந்த வசனம் நமக்கு மிகத் தெளிவாக விளக்குகிறது. 

நான்கு நிலைகளில் நாம் வளரவேண்டும். 

  1. ஞானத்தில் வளரவேண்டும்
  2. உடல் வளர்ச்சியில் வளரவேண்டும்
  3. இறைவனுக்கு உகந்தவராய் வளரவேண்டும்
  4. மனிதருக்கு உகந்தவராய் வளரவேண்டும்.

ஞானத்தில் வளர்வது எப்படி ? இறைவனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்கிறது பைபிள். உலகக் கல்வி நமக்குத் தருவது அறிவு ! இறைவன் நமக்குத் தருவது ஞானம். அறிவை நாம் வாசிப்பதன் மூலமாகக் கற்றுக் கொள்ளலாம், ஞானத்தை நாம் நேசிப்பதன் மூலமாகத் தான் கற்றுக் கொள்ள முடியும். அதுவும் இறைவனை நேசிப்பதன் மூலமாகத் தான் கற்றுக் கொள்ள முடியும்.

இந்த வாலிப வயதில் நாம் இறைவனுக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழவேண்டும். இறைவனுக்குப் பயப்படுவது என்பது என்ன ? இறைவன் மிகப்பெரிய கொடுங்கோலராய் இருக்கிறார், அவரைப் பார்த்து நாம் பயந்து நடுங்க வேண்டும் என்பதல்ல.! இந்தப் பயப்படுதல், அவருக்கு முழுமையாய்ப் பணிந்திருப்பதைப் பேசுகிறது. 

எதையும் இறைவனிடம் அற்பணிப்பதைப் பேசுகிறது. நமது ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு சமர்ப்பிப்பதைப் பேசுகிறது. எப்படி ஒரு அடிமையானவன், அனைத்தையும் தன் தலைவனுக்குப் பயந்து செய்வானோ. எப்படி நல்ல பையன் தன் தந்தைக்குப் பயந்து அனைத்தையும் செய்வானோ, அதே போல நாம் இறைவனுக்குப் பயந்து அவரது போதனைகளின் படி நடக்க வேண்டும். இறைவனை மீறினால் நமக்குக் கிடைப்பது நிலையான நரகம் என்பதைப் புரிய வேண்டும். 

சாலமோனுக்கு. ஞானம் இருந்தது, அது தான் மக்களுக்கு நீதி வழங்கும் பணியில் அவரை சிறக்க வைத்தது. இயேசுவுக்கு  ஞானம் இருந்தது, அது தான் அவரை எல்லா சூழல்களையும் சிறப்பாய் எதிர்கொள்ள வைத்தது. நாம் முதலில் தேடவேண்டியது ஞானமே, அதற்காய் இறைவனில் சரணடைவோம்.

இரண்டாவது, உடல் வளர்ச்சியில் வளரவேண்டும். ஏன் உடல் வளர்ச்சியைப் பற்றி பைபிள் பேசுகிறது ? அது ஆன்ம வளர்ச்சியைத் தானே பேசவேண்டும் என பலர் நினைக்கலாம். நமது உடல் இறைவனின் ஆலயம் என்கிறது பைபிள். உடலை வலிமையாக, நேர்த்தியாக, தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை அது பேசுவதில் வியப்பில்லை. அதே போல, பைபிள் நமக்கான வாழ்வியல் நெறி, ஆன்மிக வழிகாட்டி. அது யதார்த்தங்களின் மீதே போதனைகளை அமைக்கிறது. 

நாம் நம்முடைய இளம் வயதில் எப்படி உடலைப் பாதுகாப்பது ? உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். உடலைக் கெடுக்கும் துரித உணவுகளுக்கு விடைகொடுப்போம். வீட்டில் அன்பாகச் சமைத்துத் தரும் உணவுகளை மட்டுமே உண்போம். தேவையான உடற்பயிற்சி நமது உடலையும் மனதையும் வலுவாக்கும். எனவே சரியான உடற்பயிற்சியைச் செய்வோம். 

நமது உடலை எந்த விதமான சிற்றின்பத் தேவைகளுக்காகவும் பாவத்தில் புரட்டாமல் இருப்போம். டிஜிடல் மோகத்தில் விழும்போதோ, போதை போன்றவற்றை அணுகும் போதோ நாம் உடலை அவமானப்படுத்துகிறோம். நம் உடலை நாம் களங்கப்படுத்தும் போது, கடவுளையே அவமானப்படுத்துகிறோம்.

மூன்றாவது, கடவுளுக்கு உகந்தவராய் வாழ்தல். நமது வாழ்க்கை கடவுளுக்குப் பிரியமானதாய் இருப்பதே கிறிஸ்தவ போதனைகளின் அடிநாதம். கடவுளுக்கு உகந்தவராய் வாழ்வது எப்படி ? மிக எளிது. ஒவ்வொரு செயலை நாம் செய்யும் போதும் “இயேசு இந்த செயலை செய்வாரா ?” “இயேசு இந்தச் செயலை இப்படித் தான் செய்வாரா ? என யோசித்து செய்ய வேண்டும். எந்த ஒரு சொல்லை பேசும் போதும், இயேசு இந்த வார்த்தையைப் பேசுவாரா என யோசிக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தைச் சிந்திக்கும் போதும், இயேசு இந்த விஷயத்தை இப்படித் தான் சிந்திப்பாரா என யோசிக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழும்போது நாம் கடவுளுக்கு உகந்தவராய் வாழ்கிறோம் என்று அர்த்தம். எப்போதும் கடவுளின் புகழைப் பாடுவதோ, அவரது பெயரை உச்சரிப்பதோ, வார்த்தைகளால் இயேசுவை அறிவிப்பதோ அவருக்குப் பிரியமான வாழ்க்கையல்ல. நமது சமூக வீதியில் ஏழை எளியவர்களுக்கு உதவும் போது, தேவையில் இருப்பவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் போது, நோயாளிகளின அருகில் அமர்ந்து அவர்களின் துயரக் கதைகளை அன்புடன் கேட்கும் போது – நாம் இறைவனுக்குப் பிரியமானவராய் வாழ்கிறோம் என்று பொருள். அப்படித் தான் இயேசு வாழ்ந்தார். 

நான்காவது, மனிதருக்கு உகந்தவராய் வாழ்தல். நாம் இறைவனுக்குப் பிரியமானவராய் வாழவேண்டுமெனில் மனிதருக்கு உகந்தவராய் வாழவேண்டியது அவசியம். இயேசுவே சொல்கிறார், கண்ணில் காணும் சகோதரனை நேசிக்காமல் கண்ணில் காணாத கடவுளை நேசிக்க முடியாது என்று. இளம் வயதினராகிய நாம் முதலில் பெற்றோருக்கு முழுமையாய் கீழ்ப்படிபவர்களாய் இருக்க வேண்டும். நம்மைச் சார்ந்திருப்போருக்கு நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும். சமூகத்தின் கட்டமைப்பைச் சிதைக்காதவர்களாக இருக்க வேண்டும். எங்கும் எல்லா இடங்களிலும் மனிதர்கள் நம்மை நேசிக்கும்படி வாழவேண்டும். 

இந்த நான்கு விஷயங்களும் இருந்தால், நமது வாழ்க்கை இறைவன் விரும்பிய வாழ்க்கையாய் அமையும். இயேசுவைப் போல வாழ வேண்டுமெனில், இயேசுவைப் போல வளரவேண்டியது அவசியம். 

இயேசுவைப் போல் வளர்வோம்

இயேசுவைப் போல் வாழ்வோம்

இயேசுவோடு வாழ்வோம் 

நன்றி. 

*

Posted in Articles

குறும்படம் : சூழ்ச்சி

காட்சி 1

( கேரல் படம் வரைந்து கொண்டிருக்கிறார், அப்போது அம்மா )

அம்மா : என்ன கேரல், இவ்ளோ லேட் ஆச்சும் இன்னும் படம் வரைஞ்சிட்டு இருக்கியா  ஹ்

கேரல : சீக்கிரம் முடிச்சிடறேம்ம்மா…. வரைய ஆரம்பிச்சா டைம் போறதே தெரியல. 

அம்மா : ம்ம்.. உனக்கு மட்டும் இந்த படம் வரையற ஆர்வம் எங்க இருந்து வந்துச்சோ தெரியல..

கேரல் : அம்மா… மனுஷங்களோட ஹிஸ்டரியை எடுத்துப் பாத்தீங்கன்னா, முதல்ல அவங்க படம் மூலமா தான் கம்யூனிகேட் பண்ணினாங்க.. சோ, இது எனக்கு கற்கால ஜீன்ல இருந்து கிடைச்சதுன்னு நினைக்கிறேன்

அம்மா : ஆமா.. என்ன சொன்னாலும் ஒரு தியரி சொல்லிடுவியே

கேரல் : அம்மா, நான் விளையாட்டா சொல்லல. முன்னாடி எல்லாம் குகையில ஓவியம் வரையறது, கல்லுல ஓவியம் வரையறது இப்படி தான் மக்கள் தங்கள் வரலாற்றை பதிவு செஞ்சாங்க… 

அம்மா : ஆமா. சொல்றவங்க எல்லாம் சொல்லுவாங்க..

கேரல் : பழசை விடுங்க.. நாம சிந்திக்கிறது எல்லாமே படங்களா தான் பிரையின்ல இருக்குமாம். படமா சிந்திச்சா தான் அது மறக்காம இருக்குமாம். இதை டிசைன் திங்கிங் ந்னு சொல்றாங்க… 

அம்மா : இதெல்லாம் நீ எங்கயிருந்து படிச்சுட்டு வருவியோ… ஒண்ணு கேட்டா இன்னொன்னு சொல்லு !  

கேரல் : ஸீ.. தானியேல்ன்னு சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகம் வருது… சிங்கம், சிலை, தீ.. இதெல்லாம் தானே…. படங்களா மனசுல வருதா…  தட்ஸ் டிசைன் திங்கிங். 

அம்மா : சரி .. சரி… இதை எல்லாம் அப்புறம் பேசலாம், நீ முதல்ல வேலையை முடிச்சிட்டு தூங்கு. 

கேரல் : ஓக்கேம்மா.

அம்மா : மாத்திரை எல்லாம் சாப்பிட்டே இல்லே…. எதையும் மிஸ் பண்ணிடாதே…

கேரல் : ம்ம்.. அதெல்லாம் சாப்டேம்ம்மா… 

காட்சி 2

(  கேரல் & ரெய்னா )

ரெய்னா : ஹேய் கேரல் .. என்ன அதை முடிச்சுட்டியா ?

கேரல் : யா..யா… நைட் முடிச்சுட்டு தான் தூங்கினேன்

ரெய்னா : எப்படி வந்திருக்கு ?

கேரல் : பிரமாதமா வந்திருக்கு… நீயே பாத்து சொல்லு..

ரெய்னா : ( பார்க்கிறார் ) வாவ்.. செம சூப்பர்.. வண்டர்புல்… 

கேரல் : அவருக்கு புடிக்குமா ?

ரெய்னா : என்ன அப்படி சொல்லிட்டே.. உன் டிராயிங் எப்பவுமே அவருக்கு புடிக்கும்… வழக்கமான விலையை விட கொஞ்சம் அதிகமாவே கேட்டு பாக்கறேன்.

கேரல் : தேங்க்யூ ரெய்னா…. என்னோட வர்க்கை எல்லாம் நீ வித்து பணமாக்கி தரதனால வீட்ல எந்த பிரச்சினையும் இல்லாம வாழ்க்கை ஓடுது.

ரெய்னா : சே.. என்ன இப்படி சொல்லிட்டே… உன்னோட திறமைக்கு நீ அமெரிக்க யூனிவர்சிட்டில ஆர்ட் புரஃபசரா போவே பாரேன்.

கேரல் : ஹா..ஹா.. போலியோ அட்டாக்ல ஒழுங்கா நடக்கவே முடியாம கஷ்டப்படறவ நான். அதனால தான் எனக்கு வேற வேலைக்கே போக முடியல… 

ரெய்னா : எதுக்கு அதையெல்லாம் நினைக்கிறே… உன் காலுக்கு பிரச்சினைன்னாலும், உன் கலைக்கு சிறகே முளைச்சு பறக்குது. நீயும் ஒரு நாள் பறப்பே… 

கேரல் : எனக்கு அவ்வளவு எல்லாம் ஆசை இல்லை. கலையை ரசிச்சுட்டே, கடவுளை நேசிச்சுட்டே இங்கே இருந்தா போது. 

ரெய்னா : என்ன சொன்னாலும் அதுல கடவுளை கொண்டு வந்துடுவியே… 

கேரல் : அவரு இல்லேன்னா நாம இல்லையே… எல்லாம் குடுக்கிறது அவரு தானே.

ரெய்னா : ம்ம்.. யா..யா.. பட்.. பாஸ்டர் மாதிரி இனி பிரசங்கம் பண்ண ஆரம்பிக்காதே.. நான் கிளம்பறேன்…

கேரல் : ஓக்கே…. ரெய்னா 

காட்சி 3

( ரெய்னா : தனிமையில் சிந்திக்கிறார் )

ரெய்னா : ம்ம்.. இந்த பெயிண்டிங்கை விக்கறதுல இரு ஐயாயிரமாச்சும் நாம அடிக்கணும். அவ படம் வரையறதனால, நமக்கு பொழப்பு ஓடுது. அவ படம் வரையறா, நான் படம் காட்டறேன்.. ஹி..ஹி…  கவித..கவித…

காட்சி 4

( கேரல் செபிக்கிறார் )

காட்சி 5

( நபர் & ரெய்னா )

நபர் : இந்த வருஷம் சர்வதேச  ஓவியக் கண்காட்சி நம்ம ஊர்ல நடக்கப் போவுது. அதுக்கு பொறுப்பாளரா என்னை தான் போட்டிருக்காங்க. 

ரெய்னா : வாவ்.. சூப்பர் சார் ! செம நியூஸ்

நபர் : தேங்க்யூ… அதுக்கு நிறைய வேலை பண்ண வேண்டியிருக்கு… ஐ நீட் யுவர் ஹெல்ப்

ரெய்னா : சொல்லுங்க சார்.

நபர் : ஐ நோ யூ ஆர் வர்க்கிங் இன் ஏன் ஆர்ட் காலேஜ் பிஸியா இருப்பீங்க.. பட்… இந்த புரோக்ராமுக்கு நிறைய ஆட்களை கொண்டு வர வேண்டியது உங்க பொறுப்பு. 

ரெய்னா : கொண்டு வரலாம் சார்… ஒரு லிஸ்ட் போட்டு, ஐ வில் ரீச் அவுட் டு பீப்பிள்… 

நபர் : லிஸ்ட் நானே வெச்சிருக்கேன்.. அவங்களை மீட் பண்ணி வர வைக்க வேண்டியது தான் உன் வேலை. யூ நோ.. அஸ் யூஷுவல், உன் கமிஷன் உனக்கு உண்டு.

ரெய்னா : ஹா..ஹா.. பண விஷயத்துல நீங்க எப்பவுமே கரெக்ட் சார்.. அதனால தான் நானும் எப்பவும் உங்களை தேடியே வரேன்… விளக்கை சுற்றி தானே விட்டில் பறக்கும்

நபர் : ஹி..ஹி.. இதா.. இதான் அந்த லிஸ்ட்..

ரெய்னா : (பார்க்கிறார் ) .. என்ன சார்.. கேரல் பெயரெல்லாம் போட்டிருக்கீங்க…

நபர் : யா… நீ குடுக்கிற படம் எல்லாம் நல்லாவே இருக்கும்.. லெட்ஸ் கிவ் ஹர் ஏன் ஆப்பர்டூனிடி… நல்ல ஆர்ட் வெச்சா அவங்களுக்கு பெஸ்ட் ஆர்ட்டிஸ்ட் அவார்ட் கிடைக்க சான்ஸ் இருக்கு…. 

ரெய்னா : சார்.. பெரிய பெரிய ஆட்கள் கூட அவளை எதுக்கு சார்… இட் வில் நாட் ஆட் எனி வேல்யூ..

நபர் : எல்லா பெரிய ஆட்களும் சின்னவங்களா இருந்து வந்தவங்க தானே.. ஒரு சேன்ஸ் மே பி அ டர்னிங் பாயிண்ட் பார் தம்… 

ரெய்னா : (சுவாரஸ்யமில்லாமல் ) ம்ம்..ஒ..யா…அவங்களையும் வர சொல்றேன்… பட்… யூ..நோ…. அவளுக்கு நடக்க முடியாது… 

நபர் : ஓ… தட் ஐ டோட்ண்ட் நோ… நல்ல கலைஞர்களுக்கு எப்பவுமே ஏதாச்சும் ஒரு ஊனம் இருக்குது.. யூ நோ பிக்காஸோ ரைட்.. ? அவருக்கு dyslexic பிரச்சினை இருந்துது…  யூ நோ பீத்தோவான்.. இசைச்சக்கரவர்த்தி.. பட் காது கேக்காது !

ரெய்னா : ம்ம்ம்.. வெரி இண்டரஸ்டிங்

நபர் : கடவுள் எல்லாரையும் அற்புதமா காப்பாத்தறவர்… ஓக்கே.. லெட்ஸ் ஸ்டார்ட் அவர் வர்க்

ரெய்னா : ஓக்கே சார்

காட்சி 6

ரெய்னா : ( மனதில் ) சே… அவளுக்கு வந்த வாழ்வை பாருங்க…. எப்படியாவது கட் பண்ணலாம்ன்னு பாத்தா விடமாட்டேங்கறாரு… ம்ம்.. சரி சரி, நாம நம்ம கமிஷனை வாங்குவோம்

காட்சி 7

( ரெய்னா & கேரல் )

ரெய்னா : கேரல்.. ஒரு செம செம நியூஸ்…. சொன்னா நீ அப்படியே ஆச்சரியப்படுவே

கேரல் : என்ன பீடிகை ரொம்ப பலமா இருக்கு

ரெய்னா : பின்னே இருக்காதா, உனக்காக உயிரைக் குடுத்து போராடி, சண்டை போட்டு ஒரு விஷயம் பண்ணியிருக்கேன்.

கேரல் : போதும் பீடிகை விஷயத்தை சொல்லு…

ரெய்னா : இந்த வருஷம் இண்டர்நேஷனல் ஓவியக் கண்காட்சி நம்ம ஊர்ல தான் நடக்குது…

கேரல் : ஓ..வாவ்.. அங்கே போறதுக்கு டிக்கெட் வாங்கியிருக்கே.. அப்படி தானே

ரெய்னா : ஹா..ஹா… போறதுக்கு இல்ல, நீ அங்கே பார்ட்டிசிப்பேட் பண்ண போறே.. அதுக்கு பெர்மிஷன் வாங்கியிருக்கேன்

கேரல் : வாட்… என்ன சொல்றே…. 

ரெய்னா : யா… எப்டி

கேரல் : ஓ மை காட்.. ஐ காண்ட் பிலீவ். தேங்க்யூ ஜீஸஸ்.. யூ ஆர் அமேசிங்

ரெய்னா : பலரோட கைல கால்ல விழுந்து சேன்ஸ் வாங்கிட்டு வந்தது நான்.. நன்றி இயேசுவுக்கா ?

கேரல் : ஹே.. நீ என்னோட பெஸ்ட் பிரண்ட். எப்பவுமே எனக்கு நல்லது தான் நினைப்பே. உன் மூலமா தானே இயேசு இதெல்லாம் செஞ்சிருக்காரு.. உனக்கு இல்லாத நன்றியா

ரெய்னா : ஓக்கே.. ஓக்கே … ஓவர் ஆக்டிங் வேண்டாம்.. கண்காட்சிக்கு ரெடி ஆகு

கேரல் : சே..சே ஐ மீன் இட்

ரெய்னா : யா.. ஐ நோ… ஐ வாஸ் கிட்டிங்..

காட்சி 8

( ஓவியக் கண்காட்சிக்காய் தயாராகிறாள் )

அம்மா : ராத்திரி பகலா உக்காந்து எல்லாம் பண்ணிட்டிருக்கியேம்ம்மா… ரெஸ்ட் எடு.. ஹெல்த் என்ன ஆவ போவுதோ 

கேரல் : அம்மா, பெரிய பெரிய இடங்களுக்கு கடவுள் நம்மை கொண்டு போகும்போ, நாம அதுக்குத் தக்கபடி கடுமையா உழைக்கணும்மா….

அம்மா : ம்ம்ம்.. உன்னோட வளர்ச்சியை விட வேற சந்தோசம் எனக்கு என்ன இருக்கு.. ஆனாலும், ஹெல்த்தை பாத்துக்கம்மா..

கேரல் : ஷுயர்மா.. நீங்க போய் தூங்குங்க..

காட்சி 9

( கண்காட்சி நடக்கிறது 

கேரலை பலர் பாராட்டுகிறார்கள் + )

நபர் : கேரல்.. இட் வாஸ் வண்டர்புல்.. தேங்க்யூ பார் த பார்டிசிபேஷன்…

கேரல் : தேங்க்யூ சார். 

காட்சி 10 

( நபர் & ரெய்னா )

நபர் : ரெய்னா.. கேரலோட வர்க்ஸ் எல்லாமே பிரமாதமா வந்திருக்கு… சோ அவங்க பெயரையும் நாமினேட் பண்ணி அனுப்ப போறேன்.. லெட்ஸ் சீ, ரிவ்யூ கமிட்டி என்ன சொல்றாங்கன்னு… 

ரெய்னா : எதுக்கு சார்..

நபர் : பெஸ்ட் ஆர்ட்டிஸ்ட் அவார்டுக்கு தான்…. 

ரெய்னா : ஓ.. அ..அவ்ளோ நல்லா இருந்துச்சா சார்.

நபர் : ஐ.. காட் குட் ஃபீட் பேக்ஸ்… லெட்ஸ் டிரை.. உங்க பிரண்ட் வேற..

ரெய்னா : எஸ்.. எஸ்.. ஐ வில் பி எக்ஸைட்டட்… ( அவஸ்தையாய் புன்னகை )

நபர் : சூப்பர், அவங்க கிட்டே சொல்லிடுங்க… 

ரெய்னா : கண்டிப்பா சார்… 

காட்சி 11

ரெய்னா : இவளுக்கு ஒருவேளை அவார்ட் கிவார்ட் கிடைச்சா அப்புறம் நம்மளை டிப்பண்ட் பண்ணி இருக்க மாட்டா.. நம்ம வருமானம் எல்லாம் போயிடும்.. என்ன பண்ணலாம்.. ம்ம்.. சரி விட்டுப் பிடிப்போம்…

காட்சி 12 

( ரெய்னா & கேரல் ) 

ரெய்னா : கேரல்.. எகேயின் செம ஹேப்பி நியூஸ்.. உன் பேரை டாப் லிஸ்ட்ல போட்டு அவார்ட் கமிட்டிக்கு நாமிநேட் பண்ணியிருக்காங்க

கேரல் : ஓ… நம்பவே முடியல.. தேங்க்யூ ஜீஸஸ்.

ரெய்னா : யா, பத்து பேர் பெயர் கமிட்டிக்கு போயிருக்கு… ஆக்சுவலி உன் நேம் லிஸ்ட்ல வரல நான் தான் எப்படியாவது போட சொன்னேன்.

கேரல் : ஓ.. நேர்மையா வரலேன்னா வேண்டாம் ரெய்னா… கடவுளுக்கு தெரியும் எதை எப்ப தரணும்ன்னு

ரெய்னா : நோ.. நோ.. ஐ மீன்.. இது அவங்க செலக்ட் பண்றது தானே.. ஆக்சுவலி உனக்கு நிறைய குட் ஃபீட் பேக்ஸ்…

கேரல் : தேங்க்யூ..

ரெய்னா : நியாயமா தான் போயிருக்கு.. டோண்ட் வரி… உனக்கு கிடைச்சா ஐ வில் பி கேப்பி.. இட்ஸ் ஃபைவ் லேக்ஸ் கேஷ் பிரைஸ்

கேரல் : வாட்ட்… 5 இலட்சமா.. 

ரெய்னா : யா.. லெட்ஸ் சீ

கேரல் : யா.. கடவுளோட விருப்பம் எதுவோ அது நடக்கட்டும்.

காட்சி 13

ரெய்னா : ஆன்லைன் ஓட்டிங் போர்ட்டல்ல ஹேக் பண்ண சொன்னேனே.. முடிஞ்சுதா ?

நபர் 2 : இல்லை, அது இண்டர்நேஷனல் செக்யூரிடி கீயோட வருது.. 

ரெய்னா : சே… கேரலுக்கு யாரும் ஓட்டு போடாம இருக்கணும்ய்யா.. அதுக்கு என்ன பண்ணலாம்

நபர் 2 : இனிமே ஒண்ணும் பண்ண முடியாது.. இட்ஸ் டூ லேட். 

ரெய்னா ( யோசிக்கிறார் ) : ம்ம்.. யா.. ஒண்ணு பண்ணு… சோசியல் மீடியால அவ பேரை டேமேஜ் பண்ணு…. 

நபர் 2 : அப்படின்னா ?

ரெய்னா : இந்த டிராயிங்க்ஸ் எல்லாம் காப்பி, சம்படி ஈஸ் ஹெல்ப்பிங், அப்படி இப்படி கிளப்பி விடு… அது வைரல் ஆகட்டும்..

நபர் 2 : ஓ.. ஓக்கே. ஓக்கே

ரெய்னா : அப்படியே.. திறமை இல்லாதவங்களுக்கு ஹேண்டிகேப்ட் ஆனதால கன்சிடரேஷன் குடுக்கிறாங்க… ஆர்கனைஸருக்கு தெரிஞ்சவங்க…. பயஸ்ட் ந்னு ஒரு கதை கிளப்பி விடு. 

நபர் 2 : அதை பண்ணிடுவோம்… கண்டிப்பா நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க… 

ரெய்னா : ஹே..ஹே.. ஒன் மோர் திங்…. ஸ்கூல்ல படிக்கும்போ ஒரு தடவை காப்பி அடிச்சதா அவ மேல கம்ப்ளெயிண்ட் உண்டு. ஆக்சுவலி அவ காப்பி அடிக்கல, பட் அது மேட்டர் கிடையாது. சின்ன வயசிலயே இப்படிப்பட்ட ஆளு தான், இன்னும் திருந்தல ந்னு போட்டு விடு. ரெண்டையும் லிங்க் பண்ணு. எதை சொன்னாலும் நம்பறதுக்கு ஒரு வாட்சப் கூட்டமே இருக்கு… 

நபர் 2 : எல்லாம் பக்காவா பண்றேன்…டோண்ட் வரி

காட்சி 14

pl

( நபர் & ரெய்னா )

நபர் ( போனில் ) : வெரி அன்ஃபார்சுனேட்…. 

ரெய்னா : என்ன சார்

நபர் : கேரல் க்கு அவார்ட் கிடைக்கல.. ஆக்சுவலி ஷி வாஸ் ஃபர்ஸ்ட் இன் த லிஸ்ட்.. பட்.. அவங்க கேரக்டர் சரியில்லை, வர்க் மேல சந்தேகம் அப்படி இப்படி நிறைய சோசியல் மீடியா ஹைப் கிரியேட் ஆயிடுச்சு..

ரெய்னா : ஐயையோ.. அவ சோசியல் மீடியாலயே இல்லையே சார்

நபர் : யா.. சம்படி இனிஷியேட்டர்..  அவ நேம் ஸ்பாயில் ஆயிடுச்சு. 

ரெய்னா : சார், ஷி ஈஸ் இன்னசெண்ட்.. நாம புரூஃப் பண்ணலாம் சார் ( ரகசியமாய் புன்னகை )

நபர் : அதுக்கு டைம் இல்லை.. அலிகேஷன்ஸ் இருந்ததால பேனல் அவளை ரிஜக்ட் பண்ணிட்டாங்க… சோ, லெட்ஸ் டிரை நெக்ஸ்ட் டைம்

ரெய்னா : ஓ.. ஓக்கே சார்.. பேட் லக்

காட்சி 15

( ரெய்னா & கேரல் )

கேரல் : டோண்ட் வரி ரெய்னா… நான் அவார்டெல்லாம் எதிர்பார்க்கல. கண்காட்சிக்கு போக முடிஞ்சதே பெரிய விஷயம் தாம்

ரெய்னா : பட்.. நீ ஜெயிக்கணும் அவார்ட் வாங்கணும்ன்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேன்.. ம்ம்ம்… 

கேரல் : தேங்க்யூ ஃபார் யுவர் கன்சர்ன்… லெட்ஸ் ப்ரே.. காட் வில் லீட்

காட்சி 16

( கேரல் செபிக்கிறார் )

காட்சி 16 ஆ

( போன் வருகிறது )

கேரல் : ஹலோ..

போன் : ஹலோ.. ஈஸ் திஸ் ஜெனி ?

கேரல் : ஜெனி ஈஸ் மை மாம்.. அவங்க வெளியே போயிருக்காங்க.. நீங்க  ?

போன் : நான் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பேசறேன்… ஜெனி கிட்டே பேசணுமே…. 

கேரல் : சைபர் கிரைமா ? என்ன சார் விஷயம், என் கிட்டே சொல்லுங்க… நான் அவங்க பொண்ணு தான்… 

போன் : ஓ… யூ ஆர் கேரல் ?

கேரல் : எஸ் ..சார்

போன் : இல்ல.. உங்க பேரை வேணும்ன்னே யாரோ கெடுத்ததாகவும், சோசியல் மீடியால உங்களைப்பற்றி தப்பு தப்பா சொன்னதாகவும், அதனால நீங்க மன உளைச்சல்ல இருக்கிறதாகவும், அந்த புரளி கிளப்பினவங்களை கண்டுபிடிக்கணும்ன்னும் உங்க அம்மா ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்திருந்தாங்க..

கேரல் : ஓ.. அம்மா கம்ப்ளெயிண்ட் குடுத்த விஷயம் எனக்கு தெரியாதே சார்…. பட்…யாரு பண்ணினதுன்னு தெரிஞ்சுதா சார் ?

போன் : யா.. விக்டர்ன்னு ஒரு பையன் தான் இந்த கான்வர்சேஷன் எல்லாம் இனிஷியேட் பண்ணியிருக்கான். கொஞ்சம் டெக்கி போல, அதனால சோர்ஸை டிராக் பண்ண கொஞ்ச டைம் ஆச்சு.. பட்…. 

கேரல் : சொல்லுங்க சார்…

போன் : அத அவனா பண்ணல, ஒருத்தங்க அவனை பண்ண வெச்சிருக்காங்க… பணத்துக்காக…. அந்த ஆள் யாருன்னும் அவன் சொல்லிட்டான். அந்த நபரையும் நாங்க ஸ்டேஷனுக்கு வர சொல்லியிருக்கோம்.

கேரல் : யாரு சார் அது ?

போன் : அவங்க உங்களுக்கு வெரி குளோஸ் அதனால தான் ஒரு தடவை போன் பண்ணி என்ன பண்ணலாம்ன்னு கேக்கலாம்ன்னு நினைச்சேன்… ஐ நோ யுவர் மாம் வெரி வெல்… இருபது வருஷமா நாங்க பிரண்ட்ஸ்… 

கேரல் : எனக்கு குளோஸா… அப்படி யாரும் எனக்கு கெடுதல் நினைக்கிறவங்க இல்லையே சார்.

போன் : இட்ஸ் ரெய்னா 

கேரல் : வாட்… ரெய்னா வா… ஓ… மே பி மிஸ்டேக்கன் சார்

போன் : நோ நோ… இட்ஸ் கிளியர்.. நிறைய விஷயங்களை தொடர்ந்து பண்ணியிருக்காங்க.. நீங்க தான் வெள்ளந்தியா இருந்திருக்கீங்க.

கேரல் : ஓ..ம்ம்…. சார், ஒரு ரிக்வஸ்ட்…

போன் : சொல்லுங்க…

கேரல் : கேன் வி டிராப் திஸ் கேஸ் ? நான் அம்மா கிட்டே சொல்றேன்… லெட்ஸ் லீவ் திஸ் கேஸ்…. 

போன் : என்னம்மா இப்படி சொல்றீங்க… உங்களுக்கு எதிரா இருக்கிறவங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டாமா ? இதையெல்லாம் சொல்லி அவங்க வேலையை விட்டே தூக்க வைக்கிறேன்… இந்த மாதிரி கிரிமினல்ஸை விடக் கூடாதும்மா

கேரல் : தண்டனையை விட மன்னிப்பு பெரியது சார்.. நான் அம்மா கிட்டே பேசறேன்.. அம்மா உங்க கிட்டே பேசுவாங்க.

போன் : என்னவோம்மா… டேக் த ரைட் டிசிஷன்… 

காட்சி 16 இ

( கேரல் சோகமாக இருக்கிறார்…. பைபிள் படித்து செபிக்கிறார் )

காட்சி 17 : 

நபர் 3 : ஹலோ ஈஸ் திஸ் கேரல் 

கேரல் : ஆமா சார்.

நபர் 3 : நான் டேவிட் பேசறேன்… 

கேரல் : சொல்லுங்க சார்

நபர் 3 : உங்க கண்காட்சிக்கு வந்திருந்தேன். யுவர் வர்க்ஸ் ஆர் ஆசம்.. ரொம்ப பிரமாதம். நான் மிச்சிகன் யூனிவர்சிடில ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் ஹெட்… உங்க கிட்டே ஒரு விண்ணப்பம்

கேரல் : ஓ.. சூப்பர் சார். நீங்க எல்லாம் போன் பண்ணி பாராட்டறது ரொம்ப சந்தோசம் சார்.

நபர் 3 : நோ..நோ.. இட்ஸ் மை பிளஷர். நீங்க எங்க காலேஜ்க்கு ஆர்ட் லெக்சரரா வர முடியுமா ? ஸ்பெஷல் கேட்டகிரில வி கேன் ஹயர் யூ

கேரல் : சார்.. என்ன சொல்றீங்க…. என்னால.. நான்… 

நபர் 3 : உங்க அனுமதி. மட்டும் இருந்தா, ஐ வில் டேக் கேர் ஆஃப் எவ்ரிதிங்.

கேரஸ் : சார்.. என்னால நம்பவே முடியல.. ஐடோண்ட் நோ வாட் டுடு.. ஐ நீட் டைம்.. ஐ நீட் டு ப்ரே… ஆஸ்க் காட்.. ஆஸ்க் மை மதர்..  

நபர் 3 : நோ பிராப்ளம்.. அடுத்த வாரம் கால் பண்றேன் சொல்லுங்க. திஸ் ஈஸ் மை வாட்சப் நம்பர்.. பிளீஸ் பீ இன் டச்.

கேரல் : தேங்க்யூ சார்

காட்சி 18

ரெய்னா : என்ன கேரல் அவசரமா வர சொன்னே.. .என்ன மேட்டர்… 

கேரல் :  …. ஒரு. முக்கியமான விஷயம் பேச தான் வர சொன்னேன்… 

ரெய்னா : சொல்லு கேரல்.. புது டிராயிங் ரெடியா

கேரல் : அதெல்லாம் விடு… எனக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு… நானும் ஓக்கே சொல்லிட்டேன்

ரெய்னா : வாவ்.. எக்சலண்ட்.. எங்கே ? என்ன வேலை..கொஞ்சமாச்சும் சம்பளம் குடுப்பாங்களா ?

கேரல் : நீ அடிக்கடி சொல்ற மாதிரி.. அமெரிக்கால ஒரு வேலை.. ஆர்ட் லெக்சரரா வேலை…. அம்மாவையும் கூட்டிட்டு போக போறேன்… 

ரெய்னா : வா..வாட்… அ..அ..மெரிக்க….அமெர்க்கா…

கேரல் : யா.. உன் வாய் முகூர்த்தம்பா.. யூ ஆர் அமேசிங். எல்லாத்துக்கும் உன் அன்பும் ஆதரவும் ஒரு காரணம். 

ரெய்னா : ஹி..ஹி.. யா.. அம்.. ஹேப்பி.. யா..

கேரல் : ஒரு ரிவ்கஸ்ட்..

ரெய்னா : சொல்லு… இனி..என்ன ?

கேரல் : உனக்கும் அதே காலேஜ்ல ஒரு ஆப்பர்டூனிடி கேட்டிருக்கேன். நீ ஆல்ரெடி ஆர்ட் காலேஜ்ல தானே இருக்கே.. அவங்க கன்சிடர் பண்றேன்னு சொல்லியிருக்காங்க. நீ கூட இருந்தா தான் எனக்கு நிம்மதி

ரெய்னா : ( வருந்துகிறார் ) கேரல்.. ஐம் சாரி.. நீ நினைக்கிற மாதிரி நான் நல்லவ இல்ல.. ஐம் நாட் ஹானஸ்ட்… நிறைய விஷயங்கள் உனக்கு எதிரா ….

கேரல் : அதெல்லாம் விடு ரெய்னா.. ஐ நோ… சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் நேற்று பேசினாரு…. பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்…. நான் அதை அப்பவே மன்னிச்சுட்டேன். மறந்துட்டேன். 

ரெய்னா : கேரல்.. ஐ ஃபீல் கில்ட்டி.. உனக்கு எதிரா நான் எவ்ளோ பண்ணினாலும்   நீ கொஞ்சம் கூட மாறாம அப்படியே இருக்கே… ஐம் அஷேம்ட்… 

கேரல் : கடவுளோட அன்பு, தியாகத்துக்கு முன்னாடி நாம சந்திக்கிற சவால்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப சின்னது தானே ரெய்னா..

ரெய்னா : உண்மை தான்.. ஆனா, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கூப்பிட்டிருக்காரு…. கண்டிப்பா கேஸ் ஆயிடும், என்னோட வேலைக்கும் பிரச்சினை தான். இந்த நியூஸ் வெளியே வந்து ஊர்லயே பெரிய அவமானமா போயிடும்… அடுத்தவங்க லைஃபை கெடுக்கிறதுல சோசியல் மீடியா ஆயிரம் கண்ணோட காத்திட்டிருக்கு… அது மட்டுமில்லை… எஃப் ஐ ஆர் ஆயிச்சுன்னா, நான் ஃபாரின் டிராவல் பண்ணவும் முடியாது.

கேரல் : இல்ல, அப்படியெல்லாம் ஆகாது. நான் கேஸை வித்றா பண்ண சொல்லிட்டேன். அம்மாவும் இன்ஸ்பெக்டர் கிட்டே பேசியிருக்காங்க. 

ரெய்னா : ஓ… 

கேரல் : யா.. அம்மா தான், உனக்கு இங்கே அன் கம்ஃபர்டபிளா இருக்கும், எப்படியும் விஷயம் வெளியே வந்துச்சுன்னா ஃபீல் பண்ணுவே, சோ அமெரிக்கால ஒருவேலை பாருன்னு சொன்னாங்க. அதான் நானும் ரொம்ப மும்முரமா உனக்காக பேசி ஏற்பாடு பண்ணினேன். 

ரெய்னா : கேரல்… ஐ டோண்ட் நோ வாட் டு சே……. உண்மையான நட்பு என்னன்னு நீ புரூஃப் பண்ணியிருக்கே…. 

கேரல் : ரெய்னா.. பிளீஸ்… லெட்ஸ் நாட் டாக் எபவுட் எனிதிங்… யூ நோ வாட் ஈஸ் ரைட்.. காட் வில் கைட்… 

ரெய்னா : யா.. காட் ஷுட் ஹெல்ப்

கேரல் : கேன் யூ பிளீஸ் கம்… ஒரு மாற்றமாவும் இருக்கும்…. ஒரு கேரியர் எலிவேஷனாவும் இருக்கும்…. வீட்ல போய் பேசிப் பாத்து சொல்லேன்

ரெய்னா : லெட் மி ஆஸ்க் காட் பர்ஸ்ட் … வீட்ல பேசறதுக்கு முன்னாடி, வான் வீட்ல பேசணும்… அவரு கிட்டே நிறைய பேச வேண்டியிருக்கு.. நிறைய மன்னிப்பு கேக்க வேண்டியிருக்கு… கொஞ்சம் டைம் குடு… நான் சொல்றேன்

கேரல் : தேங்க்யூ.. கடவுள் என்ன சொல்றாரோ அதுபடி செய்.. ஐ வில் பி ஹேப்பி டு ஹியர் பிரம் யூ

ரெய்னா : ஷுவர்

*

Posted in Articles

நீரின்றி அமையாது பைபிள்

பைபிளை திறந்தவுடன் தெரிகின்ற முதல் நூல் ‘தொடக்க நூல்’ அதன் முதல் சில வரிகளிலேயே நீரைக் குறித்த பதிவு இருக்கிறது. அப்படியே நூலின் கடைசிப் பக்கத்தைப் புரட்டினால் அதில், ‘திருவெளிப்பாடு’ நூல் தெரியும். அங்கும் நீரைக் குறித்த பதிவைக் காணலாம். விவிலியத்தின் முதல் பக்கம் தொடங்கி, கடைசி பக்கம் வரை தண்ணீர் ஈரமாகவும், கோபமாகவும் பாய்ந்து கொண்டே இருக்கிறது. அது ஒரு குறியீடாகவும், அடையாளமாகவும், உவமையாகவும், புதுமையாகவும், அழிவாகவும், வாழ்வாகவும் பன்முகம் காட்டி விவிலியத்தின் வார்த்தைகளோடு வாழ்கிறது. 

“நீர்த்திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது” எனும் அற்புதமான கவித்துவ வசனத்தோடு தண்ணீரின் பயணம் துவங்குகிறது. தண்ணீர், கடவுள் நடமாடும் இடமாக, கடவுள் அசைந்தாடும் இடமாக மனதுக்குள் காட்சிகளை அழகுற விரிக்கிறது.  துவக்கத்திற்கும் முன்னால் தண்ணீர் இருந்தது. அது இறைவனோடு இருந்தது. என்பது அழகியலின் காட்சியமைப்பு. அது தண்ணீரின் முக்கியத்துவத்தை பளிச் என  உணர வைக்கிறது. 

அப்படியே பைபிளைப் புரட்டி, கடைசிப் பக்கத்துக்கு வந்தால் அங்கும் தண்ணீரைப் பார்க்கலாம். “தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்; விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும்” என்பதே தண்ணீர் குறித்த கடைசி விவிலிய வார்த்தை. அது முடிவுக்குப் பின்னான வாழ்வைக் குறிக்கிறது. நிலைவாழ்வு என்பது இங்கே தண்ணீரோடு ஒப்பிடப்படுகிறது.  சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், துவக்கத்துக்கு முன்பே தொடங்கி, முடிவுக்குப் பின்னும் தொடரும் ஒரு குறியீடாய் நீர் இருக்கிறது. அதாவது இருத்தலின் குறியீடு. 

விவிலிய நிகழ்வுகள் நடைபெற்ற மத்திய கிழக்கு நாடுகளெல்லாம் தண்ணீரை தங்கத்தை விட அதிகமாய் போற்றியவை. மழை பெய்தால் தான் வாழ்வு. அல்லது ஊற்று இருந்தால் தான் உயிர் எனும் சூழலே அங்கு நிலவியது. தண்ணீரின் வருகை என்பது இறைவனின் தருகை என்பதாகவே பார்க்கப்பட்டது. மிகவும் முக்கியமானதாக, மிகவும் போற்றத்தக்கதாக தண்ணீர் விவிலியத்தில் பதிவு செய்யப்பட அதுவும் ஒரு காரணம்.

மிக முக்கியமான நிகழ்வுகளிலெல்லாம் தண்ணீர் தவறாமல் இடம்பெறுவதை விவிலியத்தில் கண்டு கொள்ளலாம். “டென் கமான்ட்மென்ட்” படம் பார்த்திருப்பீர்கள். மாபெரும் விடுதலை வீரரான மோசே எகிப்திலிருந்து இஸ்ரேல் மக்களை மீட்டு வரும் நிகழ்வு அதில் இடம்பெற்றியிருக்கும். சுமார் இருபது இலட்சம் மக்கள் உற்சாகக் குரலுடன், அடிமைச் சங்கிலிகளை உடைத்து, தங்கள் பொருட்கள், கால்நடைகளுடன் எகிப்தை விட்டு வெளியேறிய மாபெரும் நிகழ்வு அது. அதில் எல்லோரைடைய கவனத்தையும் ஈர்க்கின்ற ஒரு காட்சி இரண்டாய்ப் பிளந்திருக்கும் செங்கடல் நடுவே பெருந்திரளான‌ மக்கள் நடந்து செல்வது.

மோசேயும் மக்களும் தண்ணீரைக் கடந்து செல்ல, பிந்தொடரும் எகிப்தியப் படைகள் தண்ணீருக்குள் மூழ்கிவிடுகின்றனர். அடிமைகள் விடுதலையாகின்றனர். விடுதலையாய் வாழ்ந்தவர்கள் தண்ணீருக்குள் அடங்கிவிடுகின்றனர். இங்கே, தண்ணீர், மிகப்பெரிய விடுதலையின் அடையாளமாய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அப்படியே புதிய ஏற்பாட்டில் இயேசுவின் காலத்தில் நுழைந்தால், ‘திருமுழுக்கு’ எனும் விஷயத்தைப் பார்க்கலாம். தண்ணீரில் மூழ்குவதை புதிய வாழ்வுக்குள் நுழைவதன் அடையாளமாய் திருமுழுக்கு பிரகடனப்படுத்துகிறது. செங்கடலை மக்கள் கடந்தது அடிமை வாழ்விலிருந்து பெற்ற விடுதலை. திருமுழுக்கில் மக்கள் நுழைவது பாவ வாழ்க்கையை பெறுகின்ற விடுதலை. தண்ணீர் விடுதலையின் குறியீடு. 

நோவாவின் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். குறைந்தபட்சம் நோவா ஒரு பேழையைச் செய்தார் எனும் செய்தியாவது தெரிந்திருக்கும். விஷயம் இது தான். உலகில் பாவம் நிரம்பி வழிகிறது. கடவுள் பூமியை அழிக்க முடிவெடுக்கிறார். நோவாவிடம் ஒரு பேழையைச் செய்யச் சொல்கிறார். நோவா நீண்ட நெடிய வருடங்கள் அமர்ந்து அந்த பேழையைச் செய்கிறார். உலகில் பெருமழை பெய்கிறது. நீரின் கால்களுக்குள் பூமி சமாதியாகிறது. சர்வமும் மூழ்கிப் போகின்றன. நோவாவின் பேழைக்குள், நோவாவின் குடும்பமும், ஐந்தறிவு ஜீவிகளும் காப்பாற்றப்படுகின்றனர். 

பெருமழையின் பிரவாகம் பூமியை மூடி நர்த்தனம் ஆடியது. மலைகளின் தலைகளும் நீருக்குள் தலைகவிழ்ந்தன‌. மனித இனம் அழிந்தது. தண்ணீர் ஒரு அசுரனாய் மாறி வதம் செய்த நிகழ்வாய் நோவாவின் காலத்தைய மழை  சித்தரிக்கப்படுகிறது. தண்ணீர் அழிவின் குறியீடு. 

கடவுளின் ஆவி தண்ணீரின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தது என துவங்கிய பைபிள், தண்ணீரின் முழு அதிகாரமும் கடவுளின் கையில் இருப்பதை போகிற போக்கில் பதிவு செய்து கொண்டே செல்கிறது. மோசே முலம் கடவுள் தண்ணீரை இரத்தமாக்கினார். பாறையிலிருந்து நீரூற்று பீறிட்டுக் கிளம்பச் செய்தார். கடலை எல்லைக்கோட்டில் அடக்கினார். இயேசு தண்ணீரின் மீது நடந்தார். கொந்தளித்த கடலை ஒற்றை வாக்கால் அடக்கினார். என தண்ணீரின் மீதான கடவுளின் ஆளுகையை விவிலியம் ஒரு மெல்லிய மழைத்துளிச் சரம் போல தொடுத்துக் கொண்டே செல்கிறது. மனிதன் இறை கட்டளைகளை மீறி நடக்கும்போது, இயற்கை இறைவனுக்கு கீழ்ப்படிகிறது என புரியவைக்கிறது பைபிள். தண்ணீர் இறை அதிகாரத்தின் குறியீடு. 

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு முறை பாலை நிலத்தில் மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். கடைசியில் ஒரு நீர்நிலையில் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் அது கசப்பாய் இருக்கிறது. மோசே ஒரு மரத்தின் கிளையை வெட்டி அதில் போடுகிறார். அந்த நீர் நல்ல சுவையான நீராய் மாறுகிறது. நிராகரிப்பிற்குரிய நீர், வரவேற்புக்குரியதாய் மாறியது. வறண்ட நாவில் ஈரத்தை இறக்குமதி செய்தது.  இயேசுவின் காலத்தில் கானா ஊரில் ஒரு திருமணம். அங்கே திராட்சை இரசம் தீர்ந்து விடுகிறது. உதவுங்கள் எனும் விண்ணப்பம் அம்மா மூலம் மகனுக்கு வருகிறது. மகன் இயேசு, கற்சாடிகளில் இருந்த தண்ணீரை திராட்சை இரசமாய் மாற்றுகிறார். தண்ணீர் திராட்சை இரசமாகிறது. வெளியே இருந்த தண்ணீர், பந்திக்கு முன்னேறுகிறது. தண்ணீர் புதுமைகளின் குறியீடு. 

விவிலியத்தில் ஒரு கதை உண்டு. நாமான் என்றொரு படைவீரன். அவனுக்கு உடலெல்லாம் தொழுநோய். தொழுநோயாளிகள் நிராகரிக்கப்பட்டவர்களாய் வாழ்ந்து வந்த காலகட்டம் அது. அவர்கள் ‘தீட்டு தீட்டு’ என கத்திக் கொண்டு தான் வீதிகளுக்கும் வரவேண்டும். அவர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாய் தான் வாழவேண்டும் என்பது தூய்மைச்சட்டம்.  கடைசி நம்பிக்கையாக, இறைவாக்கினர் எலிசாவிடம் வருகிறார் நாமான். எலிசா அவரிடம் யோர்தான் நதியில் மூழ்கி எழும்பச் சொல்கிறார். நாமான் நீரில் மூழ்கி எழும்புகிறார். ஆச்சரியம் நிகழ்கிறது. அவருடைய உடலில் இருந்த நோயெல்லாம் சட்டென மறைய உடல் புத்தம் புதிதாய் மாறுகிறது. மாபெரும் உருமாற்றத்தின் அடையாளமானது தண்ணீர். காலங்கள் கடக்கின்றன. இயேசுவின் காலத்தில் பார்வையிழந்த ஒருவருடைய கண்களில் சகதியைப் பூசிய இயேசு, குளத்தில் சென்று கழுவச் சொல்கிறார். கழுவிய மனிதன் பார்வை பெறுகிறார். இருந்த நோய் மறைந்தது, இல்லாத பார்வை மலர்ந்தது. தண்ணீர் மாற்றத்தின் குறியீடு. 

ஆதியில் படைப்பு நிகழ்கின்ற காலகட்டம். “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார் கடவுள். தண்ணீரிலிருந்து உயிரினங்கள் பிறந்து வருகின்றன. தண்ணீரின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார் தூய ஆவியானவர். இப்போது, அந்த தண்ணீரிலிருந்து உயிரினங்கள் தோன்றுகின்றன. தண்ணீர் உயிரின் பிறப்பிடமாகிறது. இறைமகன் இயேசு தன்னிடம் விசுவாசம் கொள்ளும் மக்களிடம் வாழ்வளிக்கும் ஊற்று புறப்படும் என்கிறார். நிறைவாழ்வின் அடையாளமாகவும், தூய ஆவியின் அடையாளமாகவும் தண்ணீர் வெளிப்படுகிறது. தண்ணீர் உயிர்களின்  தாயாகிறது. பன்னீர்க்குடம் வாழும் சிசுவைப் போல, உலக உயிர்களின் பன்னீர்க்குடமாய் நீர்நிலைகள் சித்தரிக்கப்படுகின்றன. தண்ணீர் படைப்புப் பயணத்தின் உயிர்த்துளி !

தண்ணீர் ஆறுதலின் அடையாளமாகவும் பரிமளிக்கிறது. “ஆண்டவர் என் ஆயன். அமைதியான நீர்நிலைகளுக்கு

எனை அழைத்துச் செல்வார்” என விவிலியம் சொல்வது நமக்கான ஆறுதல். அமைதியற்ற நீர்நிலைகளிலிருந்து ஆடுகள் தண்ணீர் அருந்துவதில்லை. அவற்றின் தாகம் தணிவதில்லை. தண்ணீர் ஆறுதலின் ஊற்று. நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையைப் பொழியச் செய்பவராய் கடவுள் சித்தரிக்கப்படுகிறார். அவனிக்கே தூவப்படும் ஆறுதல் அது. இறைவனில் நிலைத்திருப்பவர்கள் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரங்கள் போன்றவர்கள் என்கிறது விவிலியம். தண்ணீர் ஈரத்தின் இருப்பிடம். தண்ணீர் வளங்களின் இருப்பிடம். தண்ணீர் ஆறுதலின் பிறப்பிடம் !

யோர்தான் நதியில் யோவான் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். ‘இது மனமாற்றத்தின் அடையாளம், புதுவாழ்வின் நுழைவாயில்” என முழங்குகிறார். தண்ணீர் உற்சாகமாய் உடலோடு உரையாடிக்கொண்டே கடந்து போகிறது. அப்போது நீருக்குள் இறங்குகிறார் இயேசு. “எனக்கும் திருமுழுக்கு கொடுங்கள்” என்கிறார். தடுமாறுகிறார் யோவான். ‘நெருப்பால் திருமுழுக்கு கொடுப்பவர் நீர். நீரால் பெற என்னிடம் வருகிறீரா ?” என கேட்கிறார்.  ஆனாலும் திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது. நீர்மேல் இருந்தவர், நீருக்குள் நுழைகிறார். விண்ணகம் திறக்கிறது குரல் ஒலிக்கிறது, புறா இறங்குகிறது என காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. யோர்தானில் யார்தான் நிற்கிறார் ?! என கூட்டம் பிரமித்தது. இயேசு தனது பணிவாழ்வை அங்கே துவங்குகிறார். தண்ணீர் பணிகளின் ஆரம்பம் !

ஒரு முறை சீடர்கள் மாலை நேரம் ஒன்றில் அவரை விட்டு விட்டு தனியே படகில் சென்று விடுகின்றனர். இயேசுவோ மலைமேல் ஏறி செபிக்கச் செல்கிறார். பின்னர், நள்ளிரவில்  அவர் நீர்மேல் நடந்து படகை நோக்கிச் சென்றார். சீடர்கள், “பேய்” என பயந்து நடுங்கினார்கள்.  அஞ்சாதீர்கள்.. நான் தான் என அவர் சீடர்களிடம் கூறி அவர்களுடைய பயத்தைப் போக்கி, பிரமிப்பை வருவித்தார் இயேசு. சிறு கல்லையும் கபளீகரம் செய்து விடும் தண்ணீர் இயேசுவின் பாதங்களுக்குக் கீழே தண்ணீர் கம்பளமாய் விரிந்திருப்பதை அவர்கள் வியப்புடன் பார்த்தார்கள். தண்ணீர் இறைபணியின் துணைவன். 

ஒருமுறை, யூதரான  இயேசு சமாரியாவுக்குச் செல்கிறார். யூதர்களும் சமாரியர்களும் எலியும் பூனையும் போன்றவர்கள்.  நண்பகல் வேளையில் ஒரு கிணற்றின் அருகே அமர்ந்தார் இயேசு. அப்போது ஒரு சாமாரியப் பெண் அங்கே வருகிறார். அவரிடம் இயேசு “குடிக்க தண்ணீர் கொடு” என கேட்கிறார். அந்தப் பெண் அதிர்ச்சியடைகிறார். யூதரான நீர் சமாரியரிடம் தண்ணீர் கேட்கிறீரே என்கிறார். “இயேசுவோ, வாழ்வளிக்கும் நீரை நான் அளிப்பேன். “ என்கிறார். தண்ணீர் இரு இனங்களின் இடையே தூதுவனாய் நிற்கிறது. தண்ணீர் உறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புகிறது. தண்ணீர் இரண்டு எதிரிகளை ஈரக் கரம் கொண்டு இணைக்கிறது. தண்ணீர் உறவின் கைகுலுக்கல் !

விவிலியத்தில் ஒரு அற்புதமான கதை உண்டு. ஏழை செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் சுகமாய் உண்டு குடித்து, நண்பர்களுடன் ஜாலியாக வாழ்ந்து வந்தார். அவரது வீட்டு வாசலருகே லாசர் எனும் ஏழை ஒருவர் இருந்தார். பசியுற்று , நோய்வாய்ப்பட்டு, நாய்கள் வந்து புண்களை நக்குமளவுக்கு கவனிப்பாரின்றிக் கிடந்தார். செல்வந்தரின் வீட்டு உணவின் மிச்சத்தைக் கொண்டு பசியாற்ற விரும்பினார் அவர். காலங்கள் கடந்தன. இருவரும் இறந்தனர். செல்வந்தர் நரகத்தீயில் எறியப்பட்டார். ஏழையோ விண்ணகத்தில் அமர்ந்தார். செல்வந்தர் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

“செல்வந்தனே நீ உலகில் வாழ்ந்தபோது இனிமையாய் வாழ்ந்தாய். ஏழை லாசருக்கு நீ அன்பு செலுத்தவில்லை. இப்போது அவன் இனிமையாய் இருக்கிறான். நீ கஷ்டப்படுகிறாய்.” என அவருக்கு விண்ணகம் பதிலளிக்கிறது.  அப்போது செல்வந்தர் தனது தவறை உணர்ந்தார். ஆனால் இனிமேல் இங்கிருந்து மீட்பு இல்லை என்பது அவருக்குப் புரிந்தது. கடைசியாய் ஒரே ஒரு விண்ணப்பம் வைக்கிறார். “ஏழை லாசரின் விரல் நுனியில் ஒரு துளி தண்ணீரை அனுப்புங்கள் என் நாவு குளிரும்” என்கிறார்.  இந்த பூமியில் வாழும்போது மனிதநேயமற்றவர்களாய் வாழ்ந்தால் நாம் நரகத்தில் தான் அனுப்பப்படுவோம் எனும் செய்தியை இந்த நிகழ்ச்சி அழுத்தமாய் விளக்குகிறது. ஒரு துளி தண்ணீர் என்பது எத்தனை மேன்மையுடையதாய் இருக்கிறது என்பதை இந்தக் கதை நமக்கு புரிய வைக்கிறது. தண்ணீர் சொர்க்கத்தின் சொந்தம். 

மரணத்துக்கு முந்தைய கடைசி இரவு உணவில் இயேசு ஒரு வேலை செய்தார். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து தனது சீடர்களின் பாதங்களைக் கழுவினார். உலகத் துவக்கத்தில் தண்ணீருக்கு மேல் அசைவாடியவர்.  தண்ணீருக்கு மேல் நடந்தவர். தண்ணீருக்கு மேல் படகில் அமர்ந்து போதித்தவர். இப்போது தண்ணீரை தனது கரங்களில் எடுத்து சீடர்களின் அழுக்குப் பாதங்களைக் கழுவுகிறார். சீடர்கள் பதட்டமடைகின்றனர். இயேசுவோ, ‘நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது தான். பணிவு !’ என்கிறார். தண்ணீர் இறைவனின் விரல்கள் வழியே வழிந்து மனிதரின் பாதங்களை தூய்மையாக்குகிறது. தண்ணீர் பணிவின் குறியீடு. 

பிலாத்துவின் முன்னால் இயேசு குற்றவாளியாய் நிறுத்தப்படுகிறார். அவருக்கு சிலுவைச் சாவை தண்டனையாய்த் தரவேண்டுமென கூக்குரலிடுகிறது மதவாதம். இது பொய்க்குற்றச்சாட்டு என்பது ஆளுநர் பிலாத்துவுக்குப் புரிகிறது. ஆனாலும் அவர் இயேசுவை விடுவிக்கவில்லை. தனது பதவிக்கு ஆபத்து வருமோ ? தனது பெயர் களங்கப்படுமோ என அஞ்சுகிறார். எனவே தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என அவர் நழுவிவிடுகிறார். அதற்கு அடையாளமாய் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து தனது கைகளைக் கழுவுகிறார். நீங்களே பாத்துக் கொள்ளுங்கள் என இயேசுவை எதிரிகளிடம் கையளிக்கிறார். இங்கே கைகழுவப்பட்ட தண்ணீர், கடமையிலிருந்தும் நேர்மையிலிருந்தும் தப்பிப்பதைச் சுட்டி நிற்கிறது. தண்ணீர் தப்பித்தலின் குறியீடாகிறது.

விண்ணகத்தின் காட்சி ஒன்று விவிலியத்தின் கடைசிப் பகுதியில் வருகிறது. “வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு,நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது” என்கிறது வசனம். வாழ்வளிக்கும் நீரின் விண்ணக இருப்பை அது குறிப்பிடுகிறது. ஆதி மனிதர்களான ஆதாமும் ஏவாளும் வாழ்ந்த ஏதேன் தோட்டத்தில் வாழ்வின் மரம் இருந்தது. வளமாக்கும் நதிகள் பாய்ந்தன. மண்ணக சொர்க்கமாய் அது இருந்தது. விண்ணக தோட்டத்தில் வாழ்வளிக்கும் இறைவன் இருக்கிறார்.  வாழ்வின் நதி பாய்கிறது. அது விண்ணக மகிமையை விவரிக்கிறது. 

இப்படி விவிலியத்தின் பாதை முழுவதும் தண்ணீர் தனது காலடிச் சுவடுகளை பதித்துக் கொண்டே இருக்கிறது. சொல்லப் போனால் விவிலியத்தில் 722 இடங்களில் தண்ணீர் குறிப்பிடப்படுகிறது. இது எதேச்சையான நிகழ்வன்று. தண்ணீரின் மகத்துவத்தையும், தேவையையும், தன்மையையும் முக்கியத்துவப்படுத்தும் நிகழ்வுகளே. ஊற்றப்படும் பாத்திரத்துக்கு ஏற்ப தண்ணீர் தன்னை மாற்றிக் கொண்டே இருப்பது போல, நடக்கின்ற நிகழ்வுகளுக்கு ஏற்ப இறைவன் தண்ணீரைப் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார். உதாரணமாக, ஒரு நகரைத் தாக்க வேண்டுமெனில் நகருக்கு வருகின்ற தண்ணீரை அடைத்து விடுவது புதுமையான அம்சம். இறைவன் வழங்குகின்ற ஆசீர்வாதங்களையும் தண்ணீரோடு ஒப்பிட்டுப் பேசுவது இன்னொடு அழகியல். 

தண்ணீர்அழுக்கைக்கழுவுவதுபோல, இறைவனுடையவார்த்தைகள்பாவத்தைக்கழுவும்ஆற்றல்படைத்தவைஎனஇறைவார்த்தையோடுதண்ணீர்ஒப்பீடுசெய்யப்படுகிறது. மான்கள்நீரோடையைத்தேடிஓடுவதுபோலஎன்உள்ளம்இறைவனைத்தேடுகிறதுஎனதண்ணீர்இறைதேடலோடுஒப்பீடுசெய்யப்படுகிறதுஒருவன்தண்ணீராலும்தூயஆவியாலும்பிறந்தாலொழியவிண்ணகஅரசில்நுழையமுடியாதுஎனதண்ணீர்இறைசங்கமத்தோடுஒப்பீடுசெய்யப்படுகிறது

அதேபோல, ‘சின்னஞ்சிறியசகோதரன்ஒருவனுக்குஒருகுவளைதண்ணீர்குடிக்கக்கொடுப்பவனுக்கும்கைமாறுகிடைக்கும்எனமனிதநேயத்தைஊக்குவிக்கவும்இயேசுதண்ணீரைப்பயன்படுத்துகிறார்எல்லாவற்றுக்கும்மேலாக, இறைவனேதன்னைபொங்கிவழிந்தோடும்நீரூற்றுஎனஅழைத்துதண்ணீரைஉச்சத்தில்வைக்கிறார்

எனவேதான்சொல்கிறேன். நீரின்றிஅமையாதுபைபிள்